Advertisement

கண்டதை சொல்கிறேன் - எடிட்டர் லெனின்

மறைந்த இயக்குனர் பீம்சிங் மகன் எடிட்டர் லெனின் தென்னிந்தியாவின் முன்னணி எடிட்டர்களில் முதலிடத்தில் இருப்பவர். இவரும் எடிட்டர் வி.டி.விஜயனும் இணைந்து பல வெற்றிப்படங்களில் பணியாற்றியுள்ளனர். தீவிர சமூக சிந்தனையாளரான இவர் பல மாறுபட்ட படங்களை இயக்கியுள்ளார். எளிதில் பழக கூடியவர். 30 மணி நேர படத்தை மூன்று மணி நேரமாக எடிட்டிங் செய்து தருவதில் வல்லவர். இவர் இயக்கிய 'நாக்-அவுட்' குறும்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. காதலன் படத்துக்காக சிறந்த எடிட்டிங் விருதை வி.டி.விஜயனுடன் சேர்ந்து வாங்கினார். கடைசியாக 2001-ல் இவர் இயக்கிய 'ஊருக்கு நுாறு பேர்' படம் தேசியவிருது வாங்கியது. 15 ஆண்டுக்கு பிறகு தற்போது முற்றிலும் புதுமுகங்களை வைத்து, பறை இசை கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் 'கண்டதை சொல்கிறேன்'. அவரிடம் ஒரு நேர்காணல்.* பறை இசை குறித்து...'பறை இசை' ஒரு சமூகத்துக்கு மட்டும் உரியது என கூறப்படுகிறது. பறை என்றால் சொல்லுதல். பழங்கால குடிகளான தமிழ் சமூகத்தின் ஆரம்ப கால தொழில் வேட்டையாடுதல். வேட்டையாடிய மிருகங்களின் தோல்களில் வித்தியாசமான ஒலி எழும்புவதை பார்த்து, அதை இசைக் கருவியாக தயாரித்தனர். ஆரம்பத்தில் மிருகங்களை விரட்ட, சங்கேத ஒலி எழுப்ப பறையை பயன்படுத்தினர். புறநானுாற்று பாடலில், பறை இசை வாசித்து திருமணம் முடித்ததாக கூறப்படுகிறது. மங்கல கருவியாகவே ஒரு காலத்தில் பறை இசை கருவி பயன்பட்டுள்ளது. அடித்து கொண்டே ஆடும் ஒரு கருவி பறை மட்டுமே..* 'கண்டதை சொல்கிறேன்'?நான் கண்டதை சொல்கிறேன் என்பது தான் இதன் அர்த்தம். எட்டு ஆண்டாக இந்த திரைக்கதையை மாற்றி மாற்றி எழுதி, 2014-ல் நவம்பரில் இந்த படத்தை ஆரம்பித்து டிசம்பரில் சென்சாருக்கு சென்றது.*நடிகர்கள் குறித்து?இதில் நடித்துள்ள ஆனந்த், ஜானகி, ஆடலரசு, கர்ணா உட்பட எல்லோரும் பறை இசை கலைஞர்கள். பி.எச்டி. முடித்தவர்கள், வக்கீலாக இருப்பவர்கள். பாடல் எழுதியவர் இளம்பிறை என்ற பெண் கவிஞர். ஜானகி டில்லியில் உள்ள 'நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில்' மூன்றாண்டு இசையை முறைப்படி படித்து வந்தவர். அவருக்கு 23 வயது தான். 19 வயது உடையவருக்கு தாயாக நடித்துள்ளார். * எடிட்டிங் நீங்கள் பண்ணவில்லையே?என்னுடன் இருந்த மாருதி இந்த படத்தை எடிட் செய்கிறார். நான் எடுத்ததை நான் எடிட் செய்யம்போது சில காட்சிகளை வைக்க ஆசைப் படுவேன். அதனால் வேறு ஒருவரை எடிட் செய்ய வைத்தேன். * மறுபடியும் விருதுக்கான படமா?அப்படி சொல்ல முடியாது. கமர்ஷியலாகவும் இந்த படத்தை 'பாஸ்ட்' மூவிங்கில் எடுத்துள்ளேன். லைவ் சவுண்ட் தான். தேசிய விருது, இந்தியன் பனோரமாவுக்கும் சென்றது. தேர்வாகவில்லை. இருந்தாலும் அனுப்பினோம். இந்த படத்தை கல்லுாரி, பள்ளி மாணவர்களிடம் எடுத்து செல்வதற்கான முயற்சி மேற் கொண்டு வருகிறேன். தெரியாத விஷயத்தை சொல்லும்போது மக்கள் ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. * 17 நாளில் படத்தை எப்படி முடித்தீர்கள்?திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவளம் என்ற கிராமத்தை சுற்றி தான் ஷூட்டிங் செய்யப்பட்டது. ஒரே ஒரு இடத்தில் தங்கி, ஒரே காரை பயன்படுத்தி படப்பிடிப்பை முடித்தோம். 17 நாளில் படம் முடித்து 10 நாளில் பேக்ரவுண்ட் மியூசிக் முடித்து, தேசிய விருதுக்கு அனுப்பினேன். கேமராமேன் ஆசிஷ், என்னுடன் ஆவணப் படம் எடுக்க உறுதுணையாக இருப்பவர். இசை ரஜி. * தற்போதைய சினிமா உலகம் எப்படி இருக்கிறது?நாங்கள் 15 ஆண்டுக்கு முன்பு சிந்தித்ததை தான் தற்போது சிந்திக்கின்றனர். இப்போது சிந்திப்பதை எதிர் வரும் 15 ஆண்டு கழித்து சிந்திப்பார்கள். பெரிய மாற்றம் இல்லை. * அடுத்தது?பழநியில் குதிரை வண்டி ஓட்டு பவர்களின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம் எடுத்து வருகிறேன். ஏழு முதல் எட்டு மணி நேரம் இந்த படம் ஓடும். பிப்ரவரி,மார்ச்சில் இதற்கான வெளியீடு, மதுரை அல்லது திருநெல்வேலியில் இருக்கும். பாரம்பரிய இசை குறித்து நான் கண்டதை சொல்லி விட்டேன். அடுத்து கண்டதை சொல்லுகிறேன் பார்ட் 2- கூட வரலாம், என்றார்.இவரை பாராட்ட: filmmakerleninyahoo.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement