Advertisement

அரசியல் பெரியவர்கள் சமாச்சாரம் - நடிகை பாவனா

பார்க்கும் விழி பூத்திருக்கும் ரோஜா; மஞ்சள் வெயிலில் சிறகடித்து படபடக்கும் பஞ்சவர்ண கிளி; பன்னீர் புஷ்பம் துாவும் மழை மேகம். பார்ப்போர் கண்களில் 'பாவ' ரசம் ஏற்றும் பளிங்குச் சிலை; பவுர்ணமி நிலவில் வார்த்தெடுத்த தயிராடை கட்டியென, ரசிகர்களை 'கிறங்க' வைத்து உறங்க வைப்பவர் பாவனா. சென்னையில் ஷூட்டிங் 'பிசி'யிலும் நம்மிடம் பேசினார்:* சினிமா உங்களை அழைத்ததா?கேரள மாநிலம் திருச்சூர் சொந்த ஊர். தந்தை பாலசந்தர் சினிமா கேமரா மேன். பிளஸ்2 படித்தபோது, போட்டோவில் என்னைப் பார்த்து விரும்பி அழைத்தனர். நானும் ஏற்றுக் கொண்டேன்.* தற்போது நடிக்கும் படம் ?மலையாளத்தில் 'ஹனி பீ-2' பண்ணுகிறேன். இதன் ஷூட்டிங் சென்னையில் நடக்கிறது. கதை டிஸ்கஷனில் தீவிரமாக உள்ளேன். * எத்தனை படங்கள் நடித்துள்ளீர்கள்?தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல மொழிகளில் நடித்துள்ளேன்.* தமிழில் ஹிட்டான படங்கள் எது?தமிழில் தீபாவளி, வெயில், சித்திரம் பேசுதடி ஆகியவை 'ஹிட்'டாகியுள்ளன. இன்னும் சில படங்கள் 'புக்'காகியுள்ளது. பெயர் வைத்தபின்தான் அதனை சொல்ல முடியும்.* கதாநாயகிக்கு முக்கியம் நடனமா, நடிப்பா?கதாநாயகிக்கு உணர்வு பூர்வமாக நடிக்க தெரிந்து இருக்க வேண்டும். உடல் ரீதியாக நடனமாட தெரிந்து இருக்க வேண்டும்.* தற்போது சீரியஸான கதைகள் எடுபடுவதில்லையே, ஏன்?அவரவர் வாழ்க்கையில் சீரியஸான சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பொழுது போக்கு சினிமாவில், நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். கதையம்சத்தில் கனம் இன்றி எந்த படமும் ஓட வாய்ப்பில்லை.* பல மொழிகளில் நடித்த உங்களுக்கு, பிடித்த ரசிகர்கள் யார்?எனக்கு மிகவும் பிடித்தவர்கள் தமிழ் ரசிகர்கள்தான். அவர்கள்தான் சினிமா கலைஞர்களுக்கு அதிகளவு மதிப்பு கொடுப்பார்கள்.* ஆபாசமாக பல நடிகைகள் நடிப்பது குறித்து?என்னை பொறுத்தவரை ஆபாசம் பிடிக்காது. மற்றவர்களைப் பற்றி 'கமென்ட்' அடித்து காயப்படுத்த விரும்பவில்லை. நான் நடித்த பல படங்களில் நல்ல ஆடைகளை தேர்வு செய்தே நடித்துள்ளேன்.* தமிழ் கதாநாயகர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?அனைத்து கதாநாயகர்களும் எனக்கு பிடிக்கும். அஜித், சுரேஷ்கோபி, பிரிதிவிராஜ் உட்பட அனைத்து மொழி நடிகர்களும் எனக்கு பிடிக்கும். * உங்கள் ரோல் மாடல் யார்?ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்து இருக்கு. அதை அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய தாய், தந்தை யர்தான் எனது முதல் ரோல் மாடல்.* உங்கள் அழகின் ரகசியம்?நான் தினமும் உடற்பயிற்சி செய்வதுதான். ஷூட்டிங் இல்லாத நாளில் 'ஜிம்'முக்கு செல்வேன்.* பிடித்த தமிழ்ப் பாடல்?தமிழ்ப் பாடல்களில் தத்துவம், சோகம், நகைச்சுவை என ஒரு பெரிய அறிவு பொக்கிஷமே பொதிந்து இருக்கிறது. நான் ஏராளமான தமிழ் பாடல்களை சேகரித்து வைத்துள்ளேன்.* தமிழர்களிடம் உங்களுக்கு பிடித்தது ?கடின உழைப்பாளிகள், விருந்தோம்பலில் தலைசிறந்தவர்கள், மொழியை உயிராக நினைப்பவர்கள்.* அரசியலில் ஈடுபடும் ஆர்வம் உண்டா?அரசியல் எனக்கு பிடிக்காது. அது பெரியவர்கள் சமாச்சாரம்.இவரை தொடர... pranavraaj1gmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement