Advertisement

காட்பாடியில் ரவுடிகள் அட்டகாசம்: நிம்மதியிழந்த பொதுமக்கள்

வேலூர்: காட்பாடியில், ரவுடிகள் அட்டகாசத்தால் பொது மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலை சேர்ந்தவன் ரவுடி ஜானி, 23. இவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த ஜானியை, காட்பாடி போலீசார் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். தற்போது ஜானி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஜானியின் கூட்டாளிகளான, ரவுடிகள் சரா, சரவணன் என, பத்துக்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். ஆனால், இவர்கள் ஒவ்வொருவராக ஜாமினில் வெளியே வந்து விட்டனர். தற்போது, இவர்கள் காட்பாடியில் பதுங்கி இருந்து, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என, தினமும் மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர். பூட்டி உள்ள வீடுகள், தனியாக வீட்டில் இருப்பவர்களின் விபரங்களை சேகரித்து, கொள்ளையடித்து வருகின்றனர். இவர்களின் அட்டகாசத்தால், காட்பாடி மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். இரவு, 7:00 மணிக்கு மேல் தனியாக வெளியே செல்ல முடியவில்லை என, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, ஜானியின் கூட்டாளிகளை கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என, காட்பாடி பகுதி மக்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement