Advertisement

முன்னேற்ற பாதையிலே மனச வெச்சு...

அது ஒரு சிறிய ஐரோப்பிய நாடு. ஒரு கைதிக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக இரு வீரர்கள் அழைத்து செல்கின்றனர். ஐந்து கி.மீ., நடந்து சென்று ஒரு ஒதுக்கப்புறமான இடத்தில் நீதிபதி முன் அந்த கைதியைச் சுட்டு கொன்று விடுவார்கள். அதுதான் அவர்கள் சட்டம். கூதக்காற்று கம்பளி ஆடைகளையும் மீறி ஊசியாய்க் குத்திக் கொண்டிருந்தது. சிறு துாறலாக மழை வேறு. ஆங்காங்கே நாய்கள் குரைத்து கொண்டிருந்தன. இருள் கவ்விய, தொடங்கியிருந்த முன்னிரவு நேரம். ஏற்ற இறக்கங்கள் நிறைந்த கரடு முரடான பாதை.இன்னும் சில நிமிடங்களில் சாகப் போகும் கைதி கூறினான்.
''என்ன கஷ்டம்! குளிரு தாங்க முடியல. மழை பெய்யுது. பாதை சரியில்ல. இருட்டு வேற. இதுல அஞ்சு கி.மீ., வேற நடக்கணுமா? என்ன கொடுமை ஐயா? ஒரு வண்டி ஏற்பாடு செய்ய மாட்டீங்களா?''கேட்ட ஒரு வீரனுக்கு கடுப்பு. அந்தக் கைதியின் எண் 2016.''யோவ் 2016, ஏன்யா பேசமாட்ட? நீ கொடுத்து வச்சவன்யா. நீ ஒரு வழி நடந்தாப் போதும். எங்க நிலைமையை கொஞ்சமாவது யோசித்து பாத்தியா, உன்னக் கொன்னுட்டு இதே பாதையில திரும்பி அஞ்சு கி.மீ., நடந்து வரணும். தெரியும்ல? இருட்டும் மழையும் இன்னும் ஜாஸ்தியா இருக்கும்,''மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி முடிந்த 2016ம் ஆண்டு. உடன் நடக்கும் வீரர்கள் நாம் தான். 2016 நம்மிடம் புலம்புகிறது.
''என்ன கஷ்டம்! 500, 1000 ரூபாய் நோட்டு வெத்து பேப்ராயிருச்சி. பல நுாறு ஆண்டாக இருந்த மரங்களை வர்தா புயல் புடுங்கிட்டுப் போயிருச்சி. தண்ணிக்கு கஷ்டம். கரண்ட்டுக்கு கஷ்டம். யாருக்கெல்லாம் சாவே கிடையாதுன்னுநெனச்சமோ அவரெல்லாம் செத்துட்டாங்க,''அதற்கு நாம் இப்படியா பதில் தெரிவிக்க முடியும்?''யோவ் 2016 நீ ஏன் பேச மாட்டே? நீ கொடுத்து வச்ச ஆளுய்யா. உன் காலம் முடிஞ்சிருச்சி. உன்னை கொன்னுட்டு நாங்க 2017 ம் ஆண்டோட வாழ்ந்தாகணும். அதுக்கப்பறம் 2018, 2019 கூட. வர ஆண்டுகள்ல பிரச்னை இன்னும் அதிகமாகத் தான் இருக்கப் போவுது தெரியும்ல?சாதிக்கும் முனைப்புநிலையாக இருக்கப் போகிறது என்று நாம் நினைத்து கொண்டிருந்த பல விஷயங்கள் இன்று இல்லை. அப்படியே இருந்தாலும் அவை அடையாளம் தெரியாமல் மாறி விட்டன. ஆனால் நாம் இன்னும் இருக்கிறோமே? ஆயிரம் பிரச்னைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்பு நம்மிடம் இருக்கிறதே. இது போதாதா?2016க்கு மரண தண்டனையைநிறைவேற்றி விட்டோம். இனி 2017னுடன் கைகோர்த்து கொண்டு நடப்போம். ஆண்டுகள் பிறக்கலாம். இறக்கலாம். ஆண்டுகளையும் தாண்டி நாம் வாழ்வோம். சாதிப்போம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எது முன்னேற்றம்
''முன்னேற்றப் பாதையில மனச வெச்சு முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து'' இப்படி கவிஞர் பாடியுள்ளார். சரிதான். ஆனால் எது முன்னேற்றம்?''அங்கிள் போன ஆண்டு நான் ஸ்கூலுக்கு நடந்து போனேன். இப்போ கார்ல போறேன். போன ஆண்டு பேன்ட் சட்டை மட்டும் போட்டுக் கிட்டு போனேன். இந்தாண்டு கோட், டை எல்லாம் போட்டுக் கிட்டு போறேன். படிப்புல எப்படி முன்னேறியிருக்கேன். பாத்தீங்களா?''இப்படி ஒரு பள்ளி மாணவர் கூறினால் விழுந்து விழுந்து சிரிப்போம் தானே?''பள்ளிக்கூடத்துக்கு நீ எப்படி போறேங்கறது முக்கியமில்ல, தம்பி. அங்கே போய் என்ன படிச்சேங்கறது தான் முக்கியம். நீ என்ன டிரஸ் போட்டுக் கிட்டு போறேன்னு முக்கியம் இல்லை. எவ்வளவு விஷயம் தெரிஞ்சிக்கிட்டே, பரீட்சையில் எவ்வளவு மார்க் வாங்கினங்கறது தான் முக்கியம்,'' என்று தானே அவனுக்கு அறிவுறுத்துவோம்.இந்த அறிவுறுத்தலை பெரியவர்களாகிய நாம் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறோம்?''அவன் வாழ்க்கையில முன்னேறிட்டான்யா. சைக்கிள்ல போய்க்கிட்டு இருந்தவன் இன்று கார்ல போறான்னா பாத்துக்கேயேன்,'' இப்படி பல பேரை பார்த்து ஆதங்கப்படுகிறோமே?சைக்கிளை விட்டுக் காருக்கு மாறுவதாலோ இன்னும் பெரிய 'டிவி' வாங்கி விட்டதாலோ வாழ்க்கையில் முன்னேறி விட்டதாக நினைக்காதீர்கள். இவை வசதிகள் மட்டுமே. உங்களிடம் எவ்வளவு வசதிகள் இருக்கின்றன என்பது கேள்வி இல்லை. இந்த வசதிகளை வைத்து கொண்டு நீங்கள் என்ன சாதித்தீர்கள் என்பது தான் கேள்வி.
வசதிகளை பெருக்குவது வளர்ச்சியாவசதிகளை பெருக்கி கொள்வது படிவ மாற்றம் மட்டுமே. முன்னேற்றம் இல்லை. எனக்கு தெரிந்த ஒருவர் பல ஆண்டுகளாக ஒரு சிறிய தொழிற்சாலையை நடத்திகொண்டிருந்தார். தொடர்ந்து நஷ்டம். ஒரு நாள் தன் தொழிற்சாலையை வேறு யாருக்கோ விற்று விட்டு, அங்கே இங்கே பணத்தைப் புரட்டி ஒரு பெரிய தொழிற்சாலையை வாங்கினார்.
''அன்று 500 சதுரடியில் ஐந்து பேரை வைத்து தொழில் பண்ணிக்கிட்டு இருந்தேன். இன்று பத்தாயிரம் சதுரடி தொழிற்சாலை. என்னிடம் நுாறு பேர் வேலை பார்க்கிறார்கள். அசுர வளர்ச்சி இல்ல?''நஷ்டமும் பெரிதாக வந்தது. ஒரே ஆண்டில் தொழிற்சாலையை மூடவேண்டியதாயிற்று. அவர் கூரை ஏறி கோழியே பிடிக்கவில்லையாம். வானம் ஏறி வைகுண்டம் போக பார்த்தாராம். அதுதான் பெரிதாக சறுக்கி விட்டது.
வாழ்க்கைக்கு வசதிகள் வேண்டும். ஆனால் அந்த வசதிகளுக்கு ஏற்ப வாழ்க்கையில் சாதிக்கவும் வேண்டும். ஒரு மருந்து நிறுவனத்தின் விற்பனைபிரதிநிதிக்கு சைக்கிள் கொடுத்திருக்கிறார்கள். அதில் அவர் தினமும் ஐந்து கி.மீ., பயணித்து விற்பனை செய்கிறார்.
அவருடைய செயல் திறனை பாராட்டி இரு சக்கர வாகனம் கொடுக்கிறார்கள். சைக்கிளில் தினமும் ஐந்து கி.மீ., சென்றவர், இரு சக்கர வாகனத்தில் ஐம்பது கி.மீ., போக வேண்டாமா? அப்படி போனால் தான் அந்தப் படிவ மாற்றம் முன்னேற்றமாகும். இரு சக்கர வாகனத்தை வைத்து கொண்டு, அதே துாரம் பயணித்து, அதே விற்பனையை செய்தால் அவரிடம்இருந்து அதை பிடுங்கி கொண்டு மீண்டும் சைக்கிளை தந்து விடுவர்.செய்வதை செம்மையாக செய்வோமா வாய்ப்பு கிடைக்கும் போது வசதிகளை பெருக்கி கொள்ளாமல், செய்வதை இன்னும் செம்மையாக செய்வோம் என்ற புத்தாண்டு தீர்மானத்தை எடுத்து கொள்ளுங்கள். இந்தாண்டு மட்டுமின்றி எந்த ஆண்டும் நல்ல ஆண்டாக அமையும். மிக குறைந்தபட்சமாக நம்மை தொடர்ந்து சேதம் செய்து கொண்டிருக்கும் இரு பொய்களை இனம் கண்டு அழித்து விட்டால், அதுவே பெரிய சாதனை தான். முதல் பொய், கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது எனக்கூறுவது. நம்மை விட பலம் குறைந்தவர்களிடம் நம்மை சார்ந்து இருப்பவர்களிடமும் கோபத்தை காட்ட மாட்டோம் என உறுதி ஏற்போம்.
இரண்டாவது பொய் நேரமில்லை என்பது. நேரம் என்பது யாரோ போடும் பிச்சைஅல்ல. நாமே உருவாக்கி கொள்வது தான். நமக்கு விருப்பமான விஷயங்களில் மட்டுமே செலவிடுகிறோம். பொன்னான வேலைகள் ஆயிரம் இருக்க, தினமும் நான்கு மணி நேரம் 'டிவி'யில் பொழுதை கழிக்கிறோம். இந்த இரு பெரும் பொய்களை உருவாக்கும் இருட்டை நம்மிடம் இருக்கும் ஞானம் என்ற சூரியனால் அழித்திடுவோம். பாரதி கோடிட்டு காட்டிய வாழ்க்கையை பெற்று இன்புற்று வாழலாம்.
திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, நல்லறிவு வீரம்மருவுபல் கலையின் சோதி வல்லமை யென்பவெல்லாம்வருவது ஞானத்தாலே வையகமுழுதும் எங்கள்பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு2017ம் ஆண்டு நம் அறியாமை இருளை அழிக்கவரும் அந்த ஞானபாநுவாக இருக்க வாழ்த்துக்கள்.-வரலொட்டி ரெங்கசாமிஎழுத்தாளர், மதுரைvaralottigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement