Advertisement

பழைய பணம், புது பணத்தை துரத்தி விடும்!

புரட்சிக்கு பிறகும், போருக்கு பிறகும் சரியான சீர்த்திருத்தம் அமைய வேண்டும். இல்லையென்றால், புரட்சியும், போரும் நாட்டை சீர்குலைத்து விடும். 1,000 - 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது புரட்சியா, இல்லை போரா என, தெரியவில்லை. ஏனெனில், இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய, கடந்து செல்ல வேண்டிய பாதை இன்னும் உள்ளது. பல நாடுகள் தங்களின் பண மதிப்பை செல்லாது என அறிவித்து, பின் அதை, 'தோல்வி' என, ஒப்புக் கொண்டுள்ளன. காரணம், சரியான திட்டமிடுதல் இல்லாததே. இந்திய பொருளாதாரம், காந்திஜி கண்ட கிராமப் பொருளாதாரம். 'கிராமங்கள் தான் இந்தியாவின் இதயம்' என்றார் அவர். கிராமங்கள் நிறைந்த நாட்டில், ரொக்கமில்லாத பரிவர்த்தனையை முற்றிலும் ஏற்படுத்த முடியாது.• பால் மாட்டை வைத்திருக்கும் விவசாயி, தன் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, அரை லிட்டர், 1 லிட்டர் என, பால் விற்று, அதில் வரும் வருமானத்தில் வாழ வேண்டியுள்ளது• நான்கு தென்னை மரங்கள் வைத்துள்ள விவசாயி, அதில் வரும், 10 அல்லது 20 தேங்காய்களை விற்பனை செய்து, வாழ வேண்டியுள்ளது• ரோட்டோரத்தில் வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் காலணி தைப்பவர், துணி சலவை செய்து, தேய்த்து தருபவர்கள், பூ வியாபாரம் செய்வோர் போன்றோர், ரொக்கமற்ற பரிவர்த்தனையை செய்ய முடியாது• காலையில் எழுந்தவுடன், சூடாக டீ அல்லது காபி குடிக்க, பால் வேண்டும். கால் லிட்டர், பால், 100 கிராம் சர்க்கரை, இரண்டு டீத்துாள் பாக்கெட் என, கொஞ்சமாக கடையில் வாங்குவோர் பலர். அதன் மொத்த மதிப்பு, 30 ரூபாயை கூட தாண்டாது• சமையலுக்கு தேவைப்படும் கீரை, புதினா, மல்லித்தழை, வாழைத்தண்டு போன்றவற்றை, 5, 10 என, சில்லரையாக காசு கொடுத்து தான் வாங்க வேண்டிஉள்ளது• சிறிது துார பேருந்து கட்டணம், ரயில் கட்டணம், ஆட்டோ கட்டணத்திற்கு சில்லரை பணம் கொடுத்து தான் பயணிக்க வேண்டும்• தினமும், 500 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு கூலித் தொழிலாளி, தன் வீட்டிற்கு பால், அரிசி, சமையல் பொருட்கள், கொசுவர்த்தி சுருள் என, தனித்தனியாக பல கடைகளில் சிறிதளவு பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. இங்கே, ரொக்கமில்லா பரிவர்த்தனை சிறிதும் சாத்தியமில்லை• அரிசி வியாபாரி, ஒன்றிரண்டு கிலோவாகத் தான் பெரும்பாலும் அரிசியை விற்பனை செய்வார்.எனவே, கிராமத்தினர், நடுத்தர மக்களை பாதிக்காத வண்ணம், குறைந்த மதிப்புள்ள பணத்தை அதிக அளவு அச்சடித்து, அதிக மதிப்புள்ள பணத்தை குறைந்த அளவு அச்சடிக்க வேண்டும். மேலும், ரொக்கமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்க வேண்டும். உதாரணமாக,• விமானத்தில் பயணம் செய்வோர், பணம் படைத்தவர்கள் தான். அவர்கள், வங்கி கணக்கு கட்டாயம் வைத்திருப்பர். எனவே, விமான பயணச் சீட்டிற்கு, டெபிட், கிரடிட் கார்டு, இன்டர்நெட் வங்கி சேவைகளை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்• இரு சக்கர வாகனம் தவிர்த்து, பிற வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் போட, வங்கி அட்டைகளையே பயன்படுத்த வேண்டும்• நட்சத்திர விடுதிகளில் ரொக்க பரிவர்த்தனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்• ரூபாய், 500க்கு மேல் கட்டணம் வாங்கும் விடுதிகளில் ரொக்கப் பணம் ஒழிக்கப்பட வேண்டும்• டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்ற பெரிய அங்காடிகள், கடைகளில் ரொக்கப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொள்ளக் கூடாது• பள்ளிக் கட்டணம், கல்லுாரி கட்டணம், நன்கொடைகள், பயிற்சி கல்லுாரிகள் கட்டணம், பள்ளி மற்றும் கல்லுாரி விடுதி கட்டணம் போன்றவைகளில் ரொக்கப் பரிவர்த்தனையை ஒழிக்க வேண்டும் • மருத்துவமனைகளில், 1,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வரும் போது, ரொக்கமாக செலுத்தாமல், வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்த வேண்டும்• தங்கம் வாங்கவும், விற்பனை செய்யவும், ரொக்கப் பரிவர்த்தனை தடை செய்யப்பட வேண்டும்• நகைகள் அடகு வைக்கும் போது, 5,000 ரூபாய்க்கு மேல் அடகு வைத்தால், அங்கு ரொக்கப் பரிவர்த்தனையை ஒழித்து, காசோலை அல்லது இன்டர்நெட் வங்கி மூலம் சேவை நடைபெற வேண்டும்.இதையெல்லாம் செய்தால், மத்திய அரசின், ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரிப்பு திட்டம் வெற்றி பெறும்.மேலும், பணப் புழக்கம் சீராகும் போது, மீண்டும், 2,000 ரூபாய் கறுப்பு பணமாக பதுக்கத் துவங்கி விடுவர். முன்பு, 100 தாள்கள் உள்ள, 1,000 ரூபாய் கட்டைப் பதுக்கினால், ஒரு லட்சம் ரூபாய் தான் பதுக்க முடியும். இப்போது, நுாறு தாள்கள் கொண்ட, 2,000 ரூபாய் கட்டைப் பதுக்கினால், இரண்டு லட்சம் ரூபாயை பதுக்க முடியும். 2,000 ரூபாய், கறுப்புப் பணப் பதுக்கலுக்குத் தான் உதவும். எனவே, 2,000 ரூபாய் நோட்டை ஒழித்து விட்டு, புதிதாக, 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த வேண்டும். இன்னும் மூன்று ஆண்டுகளில், 2,000 ரூபாய் நோட்டை ஒழித்து விட வேண்டும். பொருளாதார மேதை, கீரிம்ஸ் கூற்றுப்படி, 'பழைய பணம், புது பணத்தை புழக்கத்தில் இருந்து துரத்தி விடும்!' இதன் படி, மீண்டும் மக்கள், 2,000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டை பதுக்கத் துவங்கி விடுவர். எனவே, 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் அதிக அளவில் வெளியிடப்பட வேண்டும்.ரூபாய், 1,000 மற்றும், 500 ரூபாய் செல்லாது என, அறிவித்தது, திருடனுக்கு தேள் கொட்டிய நிலையை பலருக்கு ஏற்படுத்தி விட்டது. எனினும், தப்பிக்கும் வழியைத் தேடிக் கொண்டு இருக்கின்றனர்.ஐநுாறு மற்றும் 1,000 ரூபாய் ஒழிப்பு என்பது, பாத்திரத்தில் உள்ள திரவம் கொதிப்பதை நிறுத்த, தண்ணீரை தெளிப்பர். தண்ணீர் தற்காலிகமாகத் தான் கொதிப்பை அடக்கும். ஆனால், மீண்டும் பாத்திரத்தில் உள்ள திரவம், கொதிக்க துவங்கி விடும். எனவே, பாத்திரம் கொதிப்பதை நிறுத்த, அடுப்பு எரிவதை நிறுத்த வேண்டும். எனவே, கறுப்பு பணம் பதுக்கும் முதலைகளின் இடத்தை கண்டறிந்து, ரொக்கமில்லா பரிவர்த்தனையை உடனே அமல்படுத்த வேண்டும். அதே சமயத்தில், விளிம்பு நிலை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்காமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் இறுதிக்குள், 14 லட்சம் கோடி, பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்டு விடும். அதே அளவுக்கு, 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் புதிய நோட்டுகளை புழக்கத்தில் விட வேண்டும்.ஏழு லட்சம் கோடி மதிப்புள்ள, 500 ரூபாய் வேண்டுமெனில், 1,400 கோடி நோட்டுகளை அச்சடிக்க வேண்டும். ஏழு லட்சம் கோடி மதிப்புள்ள, 1,000 ரூபாய் வேண்டுமெனில், 350 கோடி மதிப்புள்ள நோட்டுகளை அச்சடிக்க வேண்டும்.மாதத்திற்கு, 250 கோடி ரூபாய் மதிப்பிற்கு நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. பணம் அச்சடிக்கும் பணி அக்டோபர் மாதத்திலேயே துவங்கி விட்டதால், நிலைமை சீரடைய இன்னும் நான்கு மாதங்கள் ஆகும்.புரட்சியின் போதும், போரின் போதும், அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டு விட்டது. இனி, போர்க்கால நடவடிக்கை போல, போதுமான அளவு பணப்புழக்கத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.ஐநுாறு மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டது, 'நல்லது நடக்கும்' என்ற நம்பிக்கையில் தான். நல்லது நடக்கும் என, நாமும் நம்புவோம்.
- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்
இ - மெயில்: asussusigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • murasu - madurai,இந்தியா

    நல்ல கட்டுரை. சாமானியர்களின் பிரச்சினையை துல்லியமாக கூறினீர்கள் . 14 லட்சம் வங்கியில் வந்துவிட்டால் கருப்பு பணமே இல்லையே . இது வெறும் நோட்டு மாற்றும் நடவடிக்கை தானே. இப்பொழுதே 13 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக்கு வந்து விட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனை ஓரளவுக்குத்தான் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் . அதிகஅளவு கருப்பு பணம் ஓவர் இன்வாய்ஸ் , அண்டர் இன்வாய்ஸ் மூலம் ஏற்றுமதி இயக்குமதி களில் நடக்கிறது , இவை அனைத்தும் காலம் காலமாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் நடப்பது தான். கல்வியையும் , மருத்துவத்தையும் அரசுடைமையாக ஆக்க வேண்டியது தானே. தனியார்மயம் , சலுகைகள் ஊழலின் ஊற்று கண்கள் . கருப்பு பண ஊற்றை அடைக்காமல் நோட்டுகளை எத்தனை முறை மாற்றினாலும் உண்மை பயன் கிடைக்காது . அரசியல் லாபம் கிடைக்கும் . போர் நடத்தினேன் என்று. இந்த அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது .விளம்பர மோக அரசியல் நடத்தும் மோடியிடம் எந்த நன்மையான திட்டத்தையும் எதிர்பார்க்க முடியாது . இன்னும் கொஞ்ச நேரத்தில் தேச பக்தி கூட்டம் வந்துவிடும் பூமிக்கும் வானத்துக்கும் குதிக்கும் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாத ஒரு தான்தோன்றித்தனமான திட்டம் இது . இந்தியா பொருளாதாரத்தை , சிதைத்து அது கார்போரேட்டுக்கு மட்டும் என மாற்றவே இது உதவும்

  • murasu - madurai,இந்தியா

    நல்ல கட்டுரை. சாமானியர்களின் பிரச்சினையை துல்லியமாக கூறினீர்கள். 14 லட்சம் வங்கியில் வந்துவிட்டால் கருப்பு பணமே இல்லையே. இது வெறும் நோட்டு மாற்றும் நடவடிக்கை தானே. இப்பொழுதே 13 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக்கு வந்து விட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனை ஓரளவுக்குத்தான் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும். அதிகஅளவு கருப்பு பணம் ஓவர் இன்வாய்ஸ் , அண்டர் இன்வாய்ஸ் மூலம் ஏற்றுமதி இயக்குமதிகளில் நடக்கிறது, இவை அனைத்தும் காலம் காலமாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் நடப்பது தான்.கல்வியையும், மருத்துவத்தையும் அரசுடைமையாக ஆக்க வேண்டியது தானே. தனியார்மயம் , சலுகைகள் ஊழலின் ஊற்று கண்கள் . கருப்பு பண ஊற்றை அடைக்காமல் நோட்டுகளை எத்தனை முறை மாற்றினாலும் உண்மை பயன் கிடைக்காது . அரசியல் லாபம் கிடைக்கும் . போர் நடத்தினேன் என்று. இந்த அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது .விளம்பர மோக அரசியல் நடத்தும் மோடியிடம் எந்த நன்மையான திட்டத்தையும் எதிர்பார்க்க முடியாது . இன்னும் கொஞ்ச நேரத்தில் தேச பக்தி கூட்டம் வந்துவிடும் பூமிக்கும் வானத்துக்கும் குதிக்கும்

  • murasu - madurai,இந்தியா

    நல்ல கட்டுரை. சாமானியர்களின் பிரச்சினையை துல்லியமாக கூறினீர்கள். 14 லட்சம் வங்கியில் வந்துவிட்டால் கருப்பு பணமே இல்லையே. இது வெறும் நோட்டு மாற்றும் நடவடிக்கை தானே. இப்பொழுதே 13 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக்கு வந்து விட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனை ஓரளவுக்குத்தான் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் . அதிகஅளவு கருப்பு பணம் ஓவர் இன்வாய்ஸ் , அண்டர் இன்வாய்ஸ் மூலம் ஏற்றுமதி இயக்குமதி களில் நடக்கிறது , இவை அனைத்தும் காலம் காலமாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் நடப்பது தான். கல்வியையும் , மருத்துவத்தையும் அரசுடைமையாக ஆக்க வேண்டியது தானே. தனியார்மயம் , சலுகைகள் ஊழலின் ஊற்று கண்கள் . கருப்பு பண ஊற்றை அடைக்காமல் நோட்டுகளை எத்தனை முறை மாற்றினாலும் உண்மை பயன் கிடைக்காது . அரசியல் லாபம் கிடைக்கும் . போர் நடத்தினேன் என்று. இந்த அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது .விளம்பர மோக அரசியல் நடத்தும் மோடியிடம் எந்த நன்மையான திட்டத்தையும் எதிர்பார்க்க முடியாது . இன்னும் கொஞ்ச நேரத்தில் தேச பக்தி கூட்டம் வந்துவிடும் பூமிக்கும் வானத்துக்கும் குதிக்கும் . நன்றி ஆசிரியரே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement