Advertisement

நான் சின்ன சிம்ரன் - தாரைதப்பட்டை நடிகை ஆனந்தி

துள்ளல் ஆட்டம் போடும் அழகுப் புயல் ... கண்களால் கவிதை பாடும் கவிக்குயில் ...சின்னத்திரையில் சிறகடிச்சு பறந்து , வெள்ளித்திரையில் தாரைதப்பட்டை கிழிய வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் நடன மயில் நடிகை 'ஆனந்தி' 'தினமலர் சண்டே ஸ்பெஷல்' பகுதிக்காக நம்மிடம் உதிர்த்த முத்துக்கள் இதோ...

* பிறந்தது...வளர்ந்தது...படித்தது...?
நான் கோயம்புத்துார் பொண்ணு. எம்.எஸ்சி., (ஐ.டி.,) முடித்துள்ளேன்.

* நடிப்பு வாய்ப்பு எப்படி?
'கனா காணும் காலங்கள்' சீரியலுக்காக கோயம்புத்துாரில் நடந்த ஆடிசனில் கலந்து கொண்டேன். முதல் முயற்சியே வெற்றிகரமாக அமைந்தது. ஆனால் வீட்டில் அப்பாவிடம் அடி கிடைத்தது. அம்மாவின் ஆதரவுடன் அந்த சீரியலில் நடித்தும் அது வெளியாகவில்லை. பின் அதே டீமுடன் 'கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' என்ற சீரியலில் பள்ளி மாணவியாக தெய்வானை என்ற கேரக்டரில் நடித்தேன். பின் மானாட மயிலாட டான்ஸ் ஷோ, ஜோடி சீசனில் டைட்டில் வின்னர் என டான்சில் சின்னத்திரையில் பட்டையை கிளப்பினேன்.

* சினிமாவில் வந்தது ?
சிம்பு நடித்த 'வாலு' தான் முதல்படம். அதன்பின் ஆர்யா நடித்த 'மீகாமன்' படத்தில் ஹன்சிகா தோழியாக படம் முழுவதும் வருவேன். டிச. 9ல் ரிலீஸான 'பறந்து செல்ல வா' படத்தில் நாசர் மகன் லுத்புதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், நான், நரேலே கெங் என்ற ஜப்பான் பொண்ணும் நண்பர்களா நடித்திருக்கிறோம். சிங்கப்பூரில் தான் படப்பிடிப்பு நடந்தது. இது நண்பர்களை பற்றிய கதை. கண்டிப்பா தியேட்டரில் போய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

* 'தாரை தப்பட்டை' வாய்ப்பு?
சினிமா பின்புலம் இல்லாத எனக்கு நடிகை சங்கீதா ஒரு வழிகாட்டியாக இருக்காங்க. அவங்க மூலமாக தான் இயக்குனர் பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் பாலாவும் 'டிவி'யில் என்னுடைய டான்ஸ் பெர்பாமன்ஸை பார்த்து உள்ளார். என்னுடைய டான்ஸ்தான் பாலா பட வாய்ப்பை வாங்கி தந்தது.

* 'பாலா' விடம் அடி வாங்கிய அனுபவம்
எதுக்கு அடி வாங்கணும். அவர் எதிர்பார்க்கும் நடிப்பை நாம கொடுத்துட்டா பிரச்னை இல்லை. 30 டேக் வரை கூட அவர் பொறுமையா இருப்பார். சில நேரங்களில் அதை வெளிப்படுத்தாத நடிகர்கள் அடி வாங்கலாம். நான் தப்பிச்சுட்டேன்பா... (சிரிக்கிறார்).

* சினிமாவில் ரோல்மாடல் ?
எப்பவுமே சிம்ரன் தான். சின்ன சிம்ரன் என என்னை செல்லமாக அழைப்பார்கள். அதற்கு காரணம் என்னோட இடுப்பு. இடுப்பழகி சிம்ரன் ரசிகையான எனக்கு இதை விட என்ன பெருமை வேண்டும். என்னோட நலம் விரும்பி அவங்க. சினிமாவிலும், நடனத்திலும் நான் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் நல்ல பிரண்ட்.

* எதிர்பாராத பாராட்டு?
'தாரை தப்பட்டை' படம் பார்த்த பின் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா போன் பண்ணி பாராட்டினார். அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட். அவருடைய பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாது. அதுபோல் சிம்ரன், சங்கீதா மேடமும் பாராட்டினாங்க.

* கனவில் அடிக்கடி வருவது?
'ஈட்டி' அதர்வா தான். இப்போதைக்கு தமிழ்நாட்டுல இருக்கிற பொண்ணுங்க கனவில் அவர்தான் அதிகமாக வருவாருன்னு நினைக்கிறேன். அவர் கூட நடிக்க ஆர்வமாக இருக்கேன்.

* சினிமாவில் உங்க இலக்கு?
ஹீரோயினாக மட்டும் நடிப்பு என்றில்லை, வித்தியாசமான படங்களை தேர்வு செய்து, பேர் சொல்லும் கேரக்டர்களில் நடிக்க வேண்டும். சீரியலிலும் நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நடிக்க தயாராகவே இருக்கிறேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • adithyan - chennai,இந்தியா

    இப்போது எல்லாமே சின்னத்தனமாகத்தான் போகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement