Advertisement

நம்பர் 1, 2 வேண்டாம்... - நடிகர் இனிகோ பிரபாகர்

எந்தவித சினிமா பின்னணி இல்லாமல், சின்ன கேரக்டர்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து வரிசையாக படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் இனிகோ பிரபாகர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி ...
* திருநெல்வேலி பையன் 'சென்னை 28' ல் எப்படி ? நண்பர் வெங்கட்பிரபு மூலமாக சென்னை 28 ல் ராக்கர்ஸ் டீம் கேப்டனாக வாய்ப்பு கிடைத்தது. சென்னை 28 பார்ட் 1 எப்படி சிக்ஸர் அடித்ததோ, அதுபோல் சென்னை 28 பார்ட் 2 வும் சக்ஸஸ் ஆகும். இந்த படத்துல எந்த ஹீரோவையும் டம்மி ஆக்காமல் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெங்கட் பிரபு எடுத்துள்ளார். அதான் வெட்கட் பிரபு ஸ்பேஷல். * 'தல' பிடிக்க காரணம்...எனது சினிமா அறிமுகமே அஜித் சாருடன் தான். அவர் நடித்த 'ஜி' படத்தில் அவருடைய நண்பர்களாக நான், வெங்கட்பிரபு , நிதின் சத்யா நடித்திருந்தோம். அறிமுக நடிகர் எனப் பார்க்காமல் என்னுடன் தோள் மேல் கை போட்டு சகஜமாக பழகினார். எல்லாரும் நல்ல வர வேண்டும் என நினைப்பவர். அதுதான் 'தல' யை எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு.* நடித்த படங்கள் ஜி , சென்னை 28 , சரோஜா, பூ என நடித்தாலும் அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக அறிமுகமானேன். அதில் பகுத்தறிவு பேசும் கேரக்டரில் நடித்தேன். அதன்பின் 'ரம்மி' படத்தில் நடித்தேன். * மென்மையான கேரக்டர் நடிப்பு பற்றி...இதுவரை அமைந்த கேரக்டர்கள் அப்படி அமைந்து விட்டது. இடையில் சுந்தரபாண்டியன் படத்தில் மட்டும் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தேன். ஆனால் என் நடிப்பில் அடுத்து வெளிவரும் படங்களான பிச்சுவா கத்தி, வீரையன் இரண்டும் இந்த பேரை கண்டிப்பாக மாற்றும்.* பிச்சுவா கத்தி, வீரையன் ...'பிச்சுவா கத்தி' கலகலப்பான காமெடி கலந்த ஆக் ஷன் படம். 'வீரையன்' 1989 ல் தஞ்சாவூரில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். செம ரகளையான கேரக்டர் வீரையன். தாடி, கைலி என லுக்கை மாற்றி உள்ளேன். இந்த படத்திற்கு பின் சாதுவாக பார்த்த என்னை, இனி பட்டையை கிளப்பும் ஹீரோவாக பார்க்கலாம்.* பிடித்த நடிகை ?நயன்தாரா. சம்பளம் வாங்காம கூட அவங்க படத்துல நடிப்பேன். மிகவும் திறமையான, அழகான நடிகை. அதான் அவங்களை எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு.* சினிமாவில் உங்கள் இலக்கு..சினிமாவில் நம்பர் 1, நம்பர் 2 என்ற இடங்களில் எனக்கு உடன்பாடில்லை. இனிகோ படத்தை நம்பி பார்க்கலாம் என மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்தால் போதும். அதான் என் இலக்கு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement