Advertisement

மருந்து கசப்பு தான்; முடிவில் நலமே!

சண்டை நாடாக விளங்கும், அண்டை நாட்டில் அச்சடித்த பணத்தை, நம் நாட்டில் புழக்கத்தில் விட்டு, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நினைக்கும் பயங்கரவாதிகள்; எளிய மக்களைப் பற்றி கவலைப்படாத பண முதலைகள்; கட்சியை முன்னிறுத்தி, சில அரசியல் கட்சிகள் செய்யும், நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் செயல்கள் போன்றவற்றை தடுக்கவே, புழக்கத்திலிருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார்.
'சரியான நடவடிக்கை தான்' என, ஊடகங்கள் பலவும் பாராட்டி இருக்கின்றன.
திருக்குறளின், 384வது குறள், 'அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்கள், சிறந்தவர்களாவர்' என, கூறுகிறது. அதில் இடம் பெற்றுள்ள, வீரத்துடன், எந்த அச்சமும் இல்லாமல், துணிந்து இந்த அறிவிப்பை, பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். அவர், 'உங்கள் கையில் உள்ள பணம் செல்லாது; செலவழிக்கவே முடியாது; குப்பையில் போடுங்கள்' என, சொல்லவில்லை. 'செல்லாத நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளுங்கள்' என்று தான் சொல்லியுள்ளார்.
எவ்வளவு பணம் நாட்டில் இருக்கிறது என, அரசுக்கு தெரிந்தால் தான், அதற்கு ஏற்றபடி நலத்
திட்டங்களை அமல்படுத்த முடியும். அப்போது தான், பொருட்கள் விலையும், பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அவ்வாறு இல்லை என்றால், சில நாடுகளில் நடந்தது போல, வங்கிகளை இழுத்து மூட வேண்டியது தான். நோட்டை மாற்ற, மக்கள், சில மணி நேரங்கள் வரிசையில் நிற்க வேண்டும்; இதை தவிர வேறு எந்த சிரமங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. சினிமா, கிரிக்கெட் மேட்ச் போன்ற பல காரணங்களுக்காக, இளைஞர்களும், பிறரும், அதிக நேரம் வரிசையில் நிற்பதை பார்க்கிறோம். நோட்டை மாற்ற, வரிசையில் நிற்பவர்களில், 90 சதவீதம் பேர் நடுத்தர மக்களே; கீழ்த்தட்டு மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள் வழக்கம் போல, பக்கத்து வீடு, நண்பர்கள், உறவினர்களிடம் தங்கள் பணப் பிரச்னையை சொல்லி, தீர்வு காண்கின்றனர். சில மளிகைக் கடைக்காரர்களும், நகைக்கடைக்காரர்களும் பழைய, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்கின்றனர். சில கடைகளில், 'பழைய, 500, 1,000 நோட்டுகள் வாங்கிக் கொள்ளப்படும்' என, அறிவிப்புப் பலகையே வைத்திருக்கின்றனர். மத்திய அரசின் நிதி சீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராக கூறப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, 'முன்னதாகவே அறிவித்திருக்கலாம்' என்பது. அப்படிச் செய்தால், கறுப்பு பணத்தை வைத்திருப்பவர்கள், அந்த பணத்தை வெள்ளையாக மாற்றி விடுவர் என்பதை, குற்றம் கூறுபவர்கள் மறந்து விடுகின்றனர். மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடு, இந்தியா. இங்கு, பணப் புழக்கம் அதிகம் என்பதால் தான், தெருவுக்கு தெரு, ஏ.டி.எம்.,களும், வங்கிகளும் இருக்கின்றன. அதனால் தான், குறுகிய காலத்தில், புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டின் மக்கள் தொகையில், 40 சதவீதத்துக்கு குறையாமல் இளைஞர்கள் இருக்கின்றனர். வரிசையில் நிற்பது, அவர்களுக்கு சிரமமாக இருக்காது. சில வங்கிகள், முதியோர், பெண்கள் நோட்டுகளை மாற்றுவதற்கு தனி வரிசை ஏற்படுத்தி, முன்னுரிமை கொடுத்திருக்கின்றன. எந்த வங்கியும், 'பணம் தர முடியாது' என, திருப்பி அனுப்பியதாக செய்திகள் இல்லை. ரோடு போடும் போது, அந்த வழியே நடக்க முடியாது; வண்டிகளும் போக முடியாது; சுற்றி தான் போக வேண்டும். மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்பதற்காக, 'ரோடு போட வேண்டாம்' என, யாரும் சொல்வதில்லை. இதை கருதியே, பிரதமரும், 'நாட்டு நலனில் அக்கறை வைத்து, வங்கிகளில் பணம் மாற்ற, வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்' என, சொல்லி இருக்கிறார். மருந்து கசப்பாகத் தான் இருக்கும்; ஆனால், முடிவில் உடல் நலம் தேறும். இப்போது கசப்பாக நிலைமை இருக்கிறது. மருந்து வேலை செய்து, கறுப்பு பண ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும் என, நம்புவோம்; நம்பிக்கை தான் வாழ்க்கையை வலுவாக்கும். திருக்குறளின், 466வது பாடலில், திருவள்ளுவர், 'செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும், கேடு ஏற்படும்' என, கூறியுள்ளார். திருக்குறள் படி, மோடி அரசு, செய்ய வேண்டியதை செய்திருக்கிறது.

- எல்.வி.வாசுதேவன் -
சமூக ஆர்வலர்
இ-மெயில்: lvvasudevgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • mohankumar - Trichy,இந்தியா

  நேர்மையான உண்மையான கட்டுரை . இந்த நாட்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் காங்கிரஸ் குடும்பம் ,அதே தலைமை சில வருடங்கள் தலைமை மாறினாலும் அதே காங்கிரஸ் தான் ஆட்சி நடத்தியது . இதெற்கெல்லாம் கிளைமாக்ஸ் சென்ற மன்மோகனின் பத்து வருட மோசமான ஊழல் ஆட்சி யாரையும் கண்டு கொள்ளவில்லை யார் எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம் நாங்களும் சம்பாதித்து கொள்கிறோம் கண்டு கொள்ளாதீர்கள் . மந்திரிகள் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் என மேலே இருந்து கீழே வரை ஒரு வரைமுறை இல்லை. எவ்வளவு பணம் புழக்கத்தில் உள்ளது . எவ்வளவு பணம் பதுக்கி உள்ளார்கள் , நம் கையில் உள்ள நோட்டுக்கள் உண்மையானதா போலியானதா என்று தெரிந்து கொள்ள யாருக்காவது அக்கறை இருந்ததா ? ஹவாலா,கள்ள நோட்டு,கருப்பு பணம் என புகுந்து விளையாடியது. பார்த்தது பாகிஸ்தான் இந்த திரு நாட்டில் நடக்கும் கொள்ளைகளை பார்த்து தன பங்குக்கும் எரியும் கொள்ளியில் நாமும் புடுங்குவோம் என அவனும் கள்ள நோட்டை அடித்து இங்குள்ள அவர்களின் விசுவாசி மூலம் தன்னுடைய ஆதிக்கத்தையும் நிலை நிறுத்தினார்கள் . இதெல்லாம் ஏழை நடுத்தர மக்களுக்கு எங்கு புரியும். தேர்தல் சமயங்களில் அவர்களுக்கு செலவழிக்க கையில் நிறைய பணம் கொடுத்து அவர்களை எதையும் கண்டு கொள்ளாமலும் விழிப்புணர்வு இல்லாமலும் வைத்திருந்தார்கள் . நாட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது வரும் காலம் எப்படி இருக்கும் என்ற கவலை எல்லாம் அவர்களுக்கு தோன்றாமல் நம் அரசியல் வாதிகள் அவர்களை முட்டாள்களாக்கி வைத்திருந்தார்கள் . இப்படியே இன்னமும் சில காலம் போய் கொண்டிருந்தால்பணம் ஹவாலா,கள்ள நோட்டு,கருப்பு பணம் இவைகள் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் . எந்த கட்டு பாடும் இல்லாமல் மன்மோகன் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் .எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளுங்கள் நான் இந்த பிரதமர் பதவியில் உட்கார்ந்து இருந்தால் போதும் எண்டு ஒரு குடும்பத்தின் பேராசைக்காக எப்படியும் வளைந்து கொடுத்து ஒரு மன்மோகன் போல ஒரு பதவி ஆசை பிடித்த ஒரு நபரை பார்த்து பழகிய நமக்கு முதல் முறையாக மோடியை போல ஒரு உறுதியான , ( இது வரை மத்திய அரசின் மேல் ஒரு ஊழல் குற்றம் கூற முடிந்ததா இந்த எதிர் கட்சிகளுக்கு மோடி அரசின் மேல் எந்த ஊழல் குற்றமு கூற முடியாததால் வேறு பலகாரணங்களுக்காக இந்த எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற கூட்டத்தை முடக்கியது . மோடி வரவில்லை பேசவில்லை எனகூக்குரலிட்டார்கள் மோடி பலநாட்கள் ராஜ்ய சபா லோக்சபா வந்தார் . அவர்வந்தபின்னர் வேறு காரணத்திற்காக சபையை முடக்கி எதிர்க்கட்சிகள் தங்கள் பேரை கெடுத்து கொண்டார்கள் . மோடி இந்த நோட்டு நடவடிக்கையால் அவர்கட்சியினருக்கும் அவர் மேல் கோபம் கொண்டிருப்பார்கள் அவர்கள் கையிலும் பணம் இல்லாமல் இருக்குமா பிஜேபி ஆட்கள் பலர் மாட்டவில்லையா இதெல்லாம் தெரிந்தும் தன பதவியே போலானாலும் பரவாயில்லை என்று தைரியமாக மண் மோகன் போலல்லாமல் துணிச்சலாக செய்திருக்கிறார் . கம்பி மேல் நடந்து கொண்டிருக்கிறார் . மக்கள் இன்னமும் இவரை புரிந்து கொள்ளாமல் இருப்பது நம் நாட்டின் சாப கேடு . நாம் மண் மோகன் தலைமை விரும்பிகளோ என்னவோ

 • bhaski karan - tirupur,இந்தியா

  சினிமாவுக்கு வரியில் நிற்பது என்பது 130 கோடி பெரும் நிற்பது இல்லை, யாருக்கு இஷ்டம் உண்டோ அவர்கள்தான் நிற்பார்கள். இது அனைவரையம் நிற்க வைப்பது என்பது ஏன். தூங்குவது போல் நடிப்பவர்கள் என்ன செய்ய... ஒரு நாட்டின் மொத்த பணம் rbi யிடம் கணக்கு உண்டு. அதுகூட தெரியாம அனைத்து பணம் வங்கிக்கு வந்தான் தெரியும் என்று கருத்து சொல்லி முட்டாள் செய்ய வேண்டாம்...

 • DAVIDDHAVARAJ - CHENNAI,இந்தியா

  சென்னை படு மோசம்.புயல் ஒருபக்கம்.பணம் இல்லாமல் தவிக்கும் மக்கள் ஒருபுறம் .எ>டீ>ம் திறக்கவில்லை. பாங்கில் பணமும் இல்லை.10 நாளில் முடியுமோ பற்றாக்குறை தொடருமோ தெரியவில்லை .வருடம் முடிந்தாலும் தொடரும் சோகம் .

 • murasu - madurai,இந்தியா

  கிராம கூட்டுறவு வங்கிகளை ஏன் இந்த பயன்படுத்தவில்லை , ஆக்ஸிஸ் பேங்க் போன்றவர்கள் கொள்ளை அடிப்பதற்கு இடையூறாக இருப்பார்கள் என்றா? இந்த திட்டத்தினால் ஒரு சதவீதம் கூட கருப்பு பணத்தை கொண்டுவர முடியவில்லை என்பதுதான் நடுநிலையான பொருளாதார அறிஞர்களின் கருத்து . அதற்கு ஏற்றாற்போல் இப்பொழுதே 13 லட்சம் கோடி வங்கியில் வந்துவிட்டது . வங்கியில் கருப்பு பணத்தை போடுவதற்கு கருப்புப்பண முதலைகள் ஓன்றும் இளித்த வாயர்கள் அல்ல . இந்த கட்டுரை அல்லக்கைகளுக்கு ஒரு தெம்பை ஊட்டும் . நொந்து நூல்கண்டான மக்களுக்கு வெந்த புண்ணில் வேல்

 • murasu - madurai,இந்தியா

  நம்ம மோடி ஒரு டுபாக்கூர் டாக்டர் அதனாலதான் நோயாளியை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாதவங்களுக்கு கசப்பு மருந்து தருகிறார். பலவிதத்துல பல பேர் வந்து இது நல்ல திட்டம்னு சொல்றீங்க . உண்மையிலேயே நல்ல திட்டம்னா இந்தமாதிரி கூவுறதுக்கு அவசியமே இல்லை சார் . மக்கள் மனமுவந்து ஏற்று கொள்வார்கள் . மோடிக்கே இப்போ இந்த திட்டம் எதற்கு என்று தெளிவில்லை , நாள் ஒரு அறிக்கை . கருப்பு பணத்தில் ஆரம்பித்து வண்டி இப்பொழுது டிஜிட்டல் இந்தியா ஸ்டாப்ல நிக்குது , டிரைவருக்கு இன்னும் தெரியல எவ்வளவு தூரம் போகணும், எப்படி போகணும் , ஏன் போகணும்னு , பாவம் மக்கள் வலுக்கட்டாய பயணிகளாய் அவதியுறுகிறார்கள்.

 • murasu - madurai,இந்தியா

  இப்போ மட்டும் பாகிஸ்தான் புதிய நோட்டுக்கு கள்ள நோட்டு அடிக்காதா என்ன . இந்த கசப்பு மருந்து வலுக்கட்டாயமாக மக்களுக்கு லிட்டர் லிட்டராக கொடுக்கப்பட்டுள்ளது . நோயே இல்லாதவர்களுக்கு கசப்போ இனிப்போ எந்த மருந்தும் தேவை இல்லை கட்டுரையாளரே. உங்கள் மேதாவி தனத்தை ஒதுக்கு சக மனிதன் படும் துன்பத்தை பாருங்கள் . கசப்பு மருந்தை மக்கள் உங்கள் மோடிக்கு கொடுப்பார்கள் , அது வரும்கால சர்வாதிகார ஆட்சி ஆளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அது ஓர் சாட்டை அடியாக இருக்கும்

 • S.S.JAHUFER SADIK - Jeddah,சவுதி அரேபியா

  பாதிக்கப்படுபவன் கள்ள நோட்டை அடித்தவனோ, கறுப்புப்பணம் வைத்திருப்பவனோ அல்ல கட்டுரையாளரே அவன் இலகுவாக ஏசியில் இருந்து காரியத்தை முடித்துக்கொண்டான். வங்கி அதிகாரிகளும் ஏன் ரிசர்வ் வங்கி அதிகாரியும் அவனுக்கு உதவுகிறான். பாதிக்கப்பட்டவன் அன்றாடராம் காச்சியும் நடுத்தர மக்களுமே திட்டம் நல்லதோ கெட்டதோ தகுந்த முன்னேற்பாடில்லாததால் ஒருமாதமாகியும் பாதிப்புத்தானே தவிர மெச்சக்கூடியதாக இல்லை.

 • K.Mani - Riffa,பஹ்ரைன்

  சரியான பதிவு. இவ்வளவு நாள் பணம் மாற்ற காலம் கொடுத்திருக்க கூடாது. பத்து நாளில் பணம் எல்லாவற்றயும் அக்கௌன்ட்இல் போடச்சொல்லிருக்கணும். இவ்வளவு நாள் கொடுத்தது தப்பு. இதற்குள் எல்லா திருடர்களும் கையில் னுந்த கருப்பு பணத்தை மாற்றிவிட்டார்கள்.பேங்க் மேனேஜர்களும் திருட்டு களவாணி பசங்க. இந்த நாடு கேட்டு குட்டிச்சுவர் ஆனதற்கு படிச்சவங்களே காரணம்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ஜாவேத் கானானி என்று கூகுளில் சென்று பாருங்கள். இந்திய ரூபாய் கள்ள நோட்டுகளை, பாகிஸ்தானில் 40000 கோடிக்கு அச்சடித்தவன் தற்கொலை செய்துகொண்ட செய்தியை. இதை எந்த இந்திய ஊடகங்களும் வெளியிடவே இல்லை.

 • mohanasundaram - chennai,இந்தியா

  அருமையான பதிவு. சாதாரண மக்களுக்கு எந்த பிரச்சனையு மில்லை.. ஊழல்வாதிகள் தான் புலம்புகிறார்கள். அவர்கள் ஒழியட்டும்.

 • Manian - Chennai,இந்தியா

  இதெல்லாம் உண்மை, கள்ள, கருப்பு பணக்காரங்களுக்கு மட்டும் தெரிந்தும் சுயநலத்தின் எல்லைக்கு செல்கிறார்கள்.70-80 ஓட்டை விற்பதால்தானே இந்த தேசத் துரோகிகள் வரி கொடுக்காம இருக்க கத்துகிறானுக. அவங்க கொட்டம் 90-95% சீக்கிரமே அடங்கி விடும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement