Advertisement

மும்பை 'மூன்' - ஆஷ்னா சவேரி

இளைஞர்களின் ஐம்புலன்களில் இறங்கிய வேற்றுகிரக விண்கலம். சுற்றும் செவ்வாய்க்கு சவால் விடும் உன் செவ்வாய் சிவப்பு, நீ விஞ்ஞானிகளின் விழிகளுக்குள் விழாத கவர்ச்சி விஞ்ஞானம், வானம் வீசி எறியும் விண்கல்லை வீழ்த்தும் மின்னும் உன் கண்கள், உன் மைக்ரோ இடையின் மைனஸ் இடைவெளியில் தென்றல் போகும் சவாரி! துள்ளி வந்து தமிழ் சினிமாவில் அள்ளி தெறித்த காவேரி... சூப்பர் மூனை முழுசாய் முழுங்கிய 'மும்பை மூன்'... நடிகை ஆஷ்னா சவேரி நமக்காக பேசிய 'ஷார்ட் அன் ஸ்வீட்' பேட்டி..* மீன் குழம்பும் மண் பானையும்?பிரபு, ஹீரோ காளிதாஸ்... ஒரு குடும்பம் மாதிரி பழகினாங்க. இந்தப் படத்துல கமல்ஹாசன் 'கெஸ்ட் ரோலில்' நடிச்சது ரொம்ப பெரிய விஷயம். ஆனால், அவர் கூட நடிக்கும் காட்சிகள், எனக்கு இல்லாதது சின்ன வருத்தம்.* சந்தானம் - ஆஷ்னா?ரொம்ப நல்ல நடிகர், நடிப்புல அவர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. இவர் கூட நடிச்ச 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித் தான்' ஆச்சர்ய அனுபவங்களை தந்தது.* தமிழ் கொஞ்சம், கொஞ்சம்...முன்பெல்லாம் யாராவது தமிழில் பேசினா புரிஞ்சுகிட்டு நான் இங்லீஷ்ல பேசுவேன். இப்போ கொஞ்சம், கொஞ்சம் தமிழ் பேசுறேன்...* மாடலிங் என்னாச்சு?நிறைய 'கமர்ஷியல் மாடலிங்' பண்ணியாச்சு, உலகம் முழுக்க ஒரு ரவுண்ட் அடிச்சாச்சு, இப்போ எனக்கு நடிப்பு தான் முக்கியம், அதனால என் கவனம் எல்லாம் சினிமா மேல தான் இருக்கு.* நடிக்க விரும்பும் கேரக்டர்கள் ?முக்கியமா ஹீரோயின் சப்ஜெக்ட்டா இருக்கணும், அப்போ தான் அதிகமா நடிக்குறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். 'மாயா' படத்துல நயன்தாரா கேரக்டர் மாதிரி, ஒரு படத்துக்காக காத்திருக்கேன்.* காமெடி பிடிக்குமா?என்ன இப்படி கேட்டுடீங்க... எப்பவுமே காமெடி படங்கள் தான் பார்ப்பேன். தியேட்டருக்குள்ள போகும் போது எவ்வளவு 'டென்ஷனா' போனாலும், வெளிய வரும் போது சிரிச்சுக்கிட்டே வருவேன்.* பிடிச்ச காமெடியன்ஸ்...'ஆல் டைம் பேவரட் ' வடிவேலு, அவரோட 'பாடி லாங்வேஜ்' ரொம்ப பிடிக்கும், அப்புறம் சூரி.* ஹீரோயின்?அர்ப்பணிப்பு, நேர்மை, கடின உழைப்பு, பணிவு... போன்ற குணநலன்கள் கண்டிப்பா இருக்கணும். இந்த விஷயத்துல எனக்கு ரோல் மாடல் ரஜினி, இவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணுங்குறது என் கனவு.* ரிலாக்ஸ் டைமிங்...ரிலாக்சா இருக்க டைம் கிடைக்கிறதே இல்லை, அப்படி கிடைக்கும் போதெல்லாம் டான்ஸ், படிப்பு, சாப்பாடு, தியானம்.* நெக்ஸ்ட்...செம திரில்லர் படமா ரெடியாகும் 'நாகேஷ் திரையரங்கம்', அப்புறம் 'பிரம்மா.காம்'.* ரசிகர்களுக்கு...எனக்கு தமிழ் ரசிகர்களின் 'சப்போர்ட்' எப்பவுமே வேணும், அதை தொடர்ந்து கொடுத்துகிட்டே இருங்க...www.facebook.com/ashnazaveri

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement