Advertisement

ஆணாதிக்கத்தை உடைக்கவே 'மனிதி' வெளியே வந்தாள் - பாடலாசிரியர் விவேக்

சிவில் இன்ஜினியரிங், சட்டம் படித்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தவர். தந்தை வேல்முருகன் வழக்கறிஞர். தாய் எஸ்.விமலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி. மனைவி சாரதா வழக்கறிஞர். 'எனக்குள் ஒருவன்' படத்தில் 'பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா...,' மென்மையான பாடல் மூலம் வெள்ளித்திரையில் கால்பதிக்கத் துவங்கியவர். '36 வயதினிலே'வில் 'வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம்...,' பாடல் வடித்து பட்டி,தொட்டியெல்லாம் ஒலிக்க வைத்தவர். 'ஒருநாள் கூத்து'வில் 'அடியே அழகே என் அழகே அடியே...,பேசாம நுாறு நுறா கூறு போடாத..., உன் சுக பார்வ உரசுது மேல, சிரிக்கிற ஓச சரிக்குது ஆள...,' பாடல் வரிகளால் கவனம் ஈர்த்தவர் இளம் பாடலாசிரியர் விவேக்,30. இதுவரை 40 படங்களில் 100 பாடல்கள்.புதிய படத்திற்கு பாடல் புனையும் வேலையிலிருந்த விவேக், நமக்காக ஒதுக்கிய நேரத்திலிருந்து...,* சட்டம், பொறியியல் படித்தவர் நீங்கள். சட்ட குடும்பத்திலிருந்து எழுத்தில் கவனம் திரும்பியது எப்படி?கவிஞர் வைரமுத்துவின் 'தண்ணீர் தேசம்' படித்ததில் இலக்கிய தாகம் ஏற்பட்டது. எனது தாய் பிறந்த நாளுக்காக கவிதை எழுதினேன். அதை பாராட்டிய வைரமுத்து, 'திறமையை வெளிப்படுத்துங்கள்,' என எனக்கு கடிதம் எழுதினார். இது எனது தமிழ் தாகத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனது 'வா கடவுள் செய்வோம்,' கவிதை தொகுப்பை வைரமுத்து வெளியிட்டார். இப்படி ஒரு விபத்தாகத்தான் எழுத்திற்குள் நுழைந்தேன்.* சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி?இசையமைப்பாளர்களிடம் வாய்ப்புத் தேடி அலைந்தேன். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதன் முதலில் 'எனக்குள் ஒருவன்' படத்தில்,'பூ அவிழும் பொழுதில்...' பாடல் எழுத வாய்ப்பளித்தார்.* 'கபாலி' படத்தில் வாய்ப்பு?மலேசியாவில் 'கபாலி' படப்பிடிப்பு நடந்த சமயம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திடீரென தொடர்பு கொண்டு,'ராக்' இசைக்காக 4 அல்லது 8 வரிகள் எழுத முடியுமா?' என்றார்.'உலகம் ஒருவனுக்கா...,' என துவங்கும் கபிலனின் பாடலில் பல்லவி முடிந்தபின், 'நாங்க எங்க பிறந்த அட உனக்கென்ன போடா, தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா...,' என்ற 'ராக்' வரிகளை 10 நிமிட நெருக்கடியில், அசை போட்டு பார்க்கிற நேரத்தில் எழுதிக் கொடுத்தேன். அப்பாடலுக்கு கபிலன், நான் உட்பட 3 பேர் உருவகம் கொடுத்துள்ளோம். மகிழ்ச்சியாக இருந்தது.* இளம் மற்றும் புதிய பாடலாசிரியர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கிறதா?சினிமாவில் கார்ப்பரேட் கம்பெனிகள் நுழைந்தபின், அதிக படங்கள் வெளிவருகின்றன. ஒரு மாதத்தில் ஐந்து படங்கள் வெளியாகின்றன என வைத்து கொள்வோம். ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் எனில், தலா ஒரு பாடலை, ஒரு பாடலாசிரியர் எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது.* 'உலகம் உனதாய் மறைவாய் மனிதி என நீண்ட காலத்திற்கு பின் புதுமைப் பெண்ணின் நம்பிக்கை குரலாக 'இறைவி' படத்தில் ஒலித்தவை. இதற்கான மெனக்கெடல், வரவேற்பு எப்படி?பெண்களுக்கு எதிராக பாலியல், பொருளாதார சுரண்டல்கள் ஒருபுறம். பெண்களுக்கு எதிராக, கண்ணிற்கு தெரியாத வன்முறை மறுபுறம். மொழியிலும் ஆணாதிக்கம். 'மனிதன்' என்ற சொல்லிற்குள் ஆண் மட்டுமே உள்ளதாக காலம்காலமாக பேசப்படுகிறது. அதை உடைக்கும் விதமாக, அதில் 'பெண்'ணும் அடங்க வேண்டும் என்ற ஆதங்கம், பெண் முன்னேற்றத்தை கருதியே 'மனிதி' வார்த்தை பிறந்தது. இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதுவும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் பெண்களிடமிருந்து.* வளரும் கவிஞர் நீங்கள் எத்தகைய தனி பாதை அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்?பாடல்களில் முடிந்தவரை தமிழையும், தேவை எனில் பிற மொழிகளையும் பயன்படுத்துகிறேன். தவறான விஷயங்களை சமூகத்திற்குள் விதைக்கக்கூடாது என்பதே எனது கொள்கை என்றார்.கருத்துக்களை பரிமாற -kavi.viviyahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement