Advertisement

வரி பணம், கறுப்பு பணம், செல்லாத நோட்டு!

நம் நாட்டில் நடைபெறும் ஆட்சி, ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் பணநாயக ஆட்சி தான். இந்த பணநாயக ஆட்சியில், 'கார்ப்பரேட்டுகள்' எனப்படும், பெரும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பெரு வணிகர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பல முறைகேடுகளில் ஈடுபட்டு, இத்தகையோர் சேர்த்து வைத்திருக்கும் கோடிக் கணக்கான கறுப்புப் பணம், நாட்டின் பொருளாதாரத்திற்கு சவாலாக, தனித்த பொருளாதார சக்தியாக விளங்குகிறது. இதனால், ஜனநாயகத்தின் காவலர்களாக இருந்து வரும் சாமானியர்கள், மக்கள் தொகையில், 60 சதவீதம் இருக்கும் போதிலும், தங்கள் அடிப்படை உரிமைகளையும், சலுகைகளையும் பெற முடியாமல், அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்; இது, தேசிய அவமானம்.இப்பண நாயகத்திற்கு தீனி போடுவது கறுப்புப் பணம். அது, இரு விதங்களில், தன் கைவரிசையை காட்டுகிறது. பெரிய தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் கையிலிருக்கும் அது, பங்குச்சந்தை முதலீடுகளாகவும், வெளிநாட்டு சொத்துகளாகவும் மாறுகிறது. தேர்தல் நேரங்களில் அது, வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.மற்றொரு விதத்தில், லஞ்சம், ஊழல் மூலம் சம்பாதிக்கப்படும் பணம், கறுப்புப் பணமாக மாறி, வீடுகள், மனைகள், நகைகள், ரொக்கம் என, பல வடிவங்களில் சொத்துகளாக மாற்றப்படுகின்றன.இந்த கறுப்புப் பணம், இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது... சந்தேகமே இல்லாமல், பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி பணத்திலிருந்து தான் கிடைத்துள்ளது. பொதுமக்கள் கொடுக்கும் வரிப்பணம், பல வழிகளில் சுரண்டப்படுகிறது. வளர்ச்சி மற்றும் சமூகநல திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து, 70 சதவீதத்தை, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஒப்பந்ததாரர்கள் பங்கு போட்டு கொள்கின்றனர். மீதமுள்ள, 30 சதவீத பணம் தான், திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.பெரும் தொழிலதிபர்கள், வங்கிகளில் கடனாக பெறும் கோடிக் கணக்கான பணத்தை திருப்பிச் செலுத்தாமலும், வரி ஏய்ப்பு செய்தும், பல ஆயிரம் கோடி ரூபாயை, கறுப்புப் பணமாக சேர்த்து வைத்துள்ளனர்.ஆக, மொத்தத்தில், இந்த சீர்கேடுகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தனி மனித வாழ்க்கை தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேலையில்லாத திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை நிரந்தரமாகி விட்டன. இந்த சீர்கேடுகளை போக்க, கறுப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதை காலத்தே செய்யாவிட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக குறைந்து விடும்.அவ்வாறு ஏற்பட்டால், பழைய படி, பணக்கார நாடுகளிலிருந்தும், உலக வங்கியிடமிருந்தும் பல லட்சம் கோடிகளை, நம் நாடு கடனாக பெற வேண்டிய கேவலம் உண்டாகும். உணவுப் பொருட்களை கூட, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.இதை கருத்தில் கொண்டு தான், பிரதமர் மோடி, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அதிரடியாக அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் நோக்கம், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதும், கள்ளப் பணத்தை ஒழிப்பதுமே ஆகும். நோக்கம், மிக சரியானது தான்; அதில் குறை காண்பதற்கு எதுவுமில்லை. ஆனால், அந்த நோக்கத்தை செயல்படுத்திய விதம் தான், பொதுமக்களுக்கு சிரமங்களை கொடுத்து விட்டது. தக்க முன்னேற்பாடுகளுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ காரணம், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், போதிய அளவில் சில்லரை ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் மற்றும் வங்கிகளின், ஏ.டி.எம்., இயந்திரங்களில் வைக்க தவறியது தான்; இது, தவிர்க்கப்பட்டிருக்கலாம். மத்தியில், பா.ஜ., அரசு பதவி ஏற்ற உடனேயே, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொணர, சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடவடிக்கையில் இறங்கியது. அதற்கு, ஒருசில நாடுகள் சரி வர மத்திய அரசுடன் ஒத்துழைக்காத காரணத்தால், முழு அளவில் வெற்றி பெற முடியவில்லை.இந்நிலையில் தான், மத்திய அரசு, உள்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கறுப்புப் பணத்தை கைப்பற்றவும், கள்ளப் பணத்தை ஒழிப்பதிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. அதனால், பொதுமக்களுக்கு சில கஷ்டங்களும், அசவுகரியங்களும் ஏற்படவே செய்யும். நாட்டு நலன் கருதி, பொதுமக்கள் அவற்றை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும். அதே சமயம், அசவுகரியங்கள் ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்காதவாறு, அரசும் பார்த்துக் கொள்ள வேண்டும்.தொடரட்டும் கறுப்புப் பண வேட்டை!
ஜி.கிருஷ்ணசாமி- கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)எழுத்தாளர், சிந்தனையாளர் -இ - மெயில்: krishna_samy2010yahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • தாமரை - பழநி,இந்தியா

  பலப்பல அறிவாளிகள் இந்தக் கருப்புப்பண ஒழிப்பால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது சாமானிய மக்கள்தான் என்று நூற்றுக்கணக்கான ஆதாரங்களைக் காட்டிக்காட்டி சொல்கிறார்கள். அதில் ஒருசில உண்மைகளும் இருக்கலாம். இல்லையென்று சொல்லவில்லை. அப்படியானால் ஊழல்,லஞ்சம்,கறுப்புப்பணம்,கள்ள நோட்டு , இரண்டாவது அரசாங்கம் இவற்றை இப்படியே விட்டு விடலாமா? ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் கருப்புப்பண முதலைகள் கொழுத்துக்கொண்டே இருக்கட்டுமென்கிறார்களா?

 • ramaraj - tirupur

  மனியன் அவர்கள் சொல்வது செயல்படாமல் இருந்தது கருப்பு பணத்தால் தான். இனி படிப்படியாக நடைமுறைக்கு வரும்.ஆனால் மீண்டும் மோடி ஆட்சி வந்தால்.நான் எந்த கட்சி சார்ந்தவனும் அல்ல

 • T.KANDASWAMI - POLLACHI,இந்தியா

  இந்த கட்டுரையாளரின் கருத்து சரியானது. சிந்திக்கும் மக்கள் அனைவரும் ஒத்து கொள்ளக்கூடியது. உண்மையும் அதுதான். நல்ல செய்திகளை சொல்லும் தினமலருக்கு வாழ்த்துக்கள்

 • Balagan Krishnan - bettystown,அயர்லாந்து

  ஈஸ்ட் இந்தியா கம்பெனி வியாபாரிகளாக வந்து பின் அரசியலை பிடித்தார்கள். நம் அரசியல்வாதிகள் அரசியலை பிடித்த பின் வியாபாரிகளாக மாறிவிட்டனர்.அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

 • Manian - Chennai,இந்தியா

  இந்தியா என்பது பலதரப்பட்ட சிறு சிறு மொழி, கலாசாரம் போன்றவற்றால் இணைக்கப்பட்ட ஐக்கிய மாகாண இந்தியா. எனவே சிறு சிறு மேல் நாடுகளைப் போல் மாறவே முடியாது. சுதந்திரத்திற்கு பாடு பட்ட தலைவர்களில் சிலராவது சுயநலமில்லாத வருங்காலத் தலைவர்களை கண்டு, அவர்களிடம் மெதுவாக பொருப்புக்களை ஒப்படைக்கவில்லை.60-70 மக்கள் விவசாயிகளாகவும், படிப்பறிவில்லாத,மந்திரத்தில் மாங்காய் விழும் என்பதை நம்பும் அப்பாவிகளாக இருந்தார்கள்.அவர்களுக்கு சரியான வழி காட்ட தலைவர்கள் அப்போதில்லை. தங்களுக்கு வயசாகி விட்டது என்பதை அறிவுப்பூரர்வமாக சிந்திக்ஆத தலைவர்கள்(அரசியல்வாதிகள்), உணர்ச்சி வசத்தால் எல்லோலருக்கும் ஓட்டுறிமை அளித்தார்கள். இங்கிலாந்தின் மரபுகள் நமக்கு சரிப்படாது என்று புரிந்து கொள்ளவில்லை. தமது கல்விமுறை ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக உழைக்கும் குமாஸ்தா வேலைக்காக ஏற்படுப்தப்பட்டது என்பதை தங்கள் ஆங்கில கல்வி மூலம் உணரமுடியவில்லை.மெஜாரிட்டி மக்கள்தான் அரசியல்வாதிகளாக வேண்டும், தகுதியே முக்கியம் என்பதை யாரும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை.மொழிவாரி மாகாணப்பிரிவு என்ற கேன்சரும் பரவியது. ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தற்போதும் அமெரிக்காவில் கூட இல்லையே.பின்வழி, லஞ்சம் மூலம் பணக்காரரான எவரும் பிறக்கு ஆதாயமில்லாமல் ஏன் உதவி செய்வார்கள்? வட்டிக்குதான் முதலீடு செய்வது உலகம் பூரா உள்ள நிதர்சனம். இந்கட்டுரை ஆசிரியரை குறை சொல்ல இதை எழுதவில்லை. முன் நடந்த தவறுகளின் பலனை முழுவதுவும் நீக்க முடியாவிட்டாலும் என்ன செய்யலாம் என்பதை காண்போம்.(1) சிறந்த அமெரிக்கா,சிங்கப்பூர்,பின்லாந்து நாடுகளில் உள்ள மாதிரி நம் கல்வியை மாற்ற ஆரம்பிக்க வேண்டும்.(2) மணமாண உடனே எல்லா கிராமப்பு ஏழைப் பெண்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து,ஆரோக்கிய குறைபாடுகளை கண்டு அவற்றை நீக்க மருத்துவ வசதி செய்ய வேண்டும். பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமே இதை செய்ய வேண்டும். ஏழைகள் வீட்டுக் குழந்தைகள் மூளை வளர்சி இல்லாமல் இருப்பதை குறைக்க முடியும்.அதனால் பின்னால் அவர்கள் கல்வி வளர்ச்சியில் பதிப்பிருக்காது என்று ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. (3) பாலர் கல்வி கிடைக்கும் குழந்தைகளே கல்வியில் முன்னேருகிறார்கள். அதனாலேயேதான் கல்வி அறிவுள்ள நடுத்தர மக்களின் குழந்தைகள் கல்வியில்,வாழ்க்கையில் முன்னேருகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.ஆரோக்கியமான, கல்வி அறிவு பெற்று பணி மூப்படைந்தவர்கள் இந்தக் குழந்தைகளுக்கு தன்னா்ர்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தொண்டு செய்தால் மட்டுமே காஸ்டாப் லிவிங்கு ஓய்வூதியம் கிடைக்கும் என்று சட்டம் இயற்றலாம். இதை எல்லாம் இந்த கட்டுறையாளர் ஜி.கிருஷ்ணசாமி- கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)எழுத்தாளர், சிந்தனையாளர் திரு மோடிக்கு தெரிவிக்கலாமே. ஒரு வேளை பத்மஸ்ரீ விருதும் கிடைக்கலாம், 10-20 வருஷங்களில் நாடும் மாறலாம். நான் எந்தவித அரசியல் தொடர்பு இல்லாத பாமரன்.

 • Balagan Krishnan - bettystown,அயர்லாந்து

  இந்தியா சுதந்திரம், அமெரிக்கா புரட்சி ,பிரெச் புரட்சி,ரஷ்ஷிய புரட்சி போல் அல்லாமல் தியாகம் செய்து கிடைத்த சுதந்திரம். அதுவரை நன்றாக செயல்பட்டு வந்த அரசியல் பயணம், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் இருக்கும் வரை தேசிய உனர்வோடு தொடர்ந்தது. ஆனால் அதற்கு பின் பிராந்திய உணர்வு தலை எடுக்க ஆரம்பித்து அடிப்படை தேசிய உணர்வு அரசியல் ஞானம் இல்லாதவர்களிடம் மக்களிடம் ஜனநாயகத்திற்கு தேவையான விவேகமும் இல்லத்தினால் சுயநல வாதிகள் மக்கள் நலன் சிந்திக்காத அரசியல் தலைவர்களிடம் நாடு போய்விட்டதே இதற்கு காரணம்..இங்கே அரசியல் சாசனம் இயற்றும் பொது ஐயா ராஜாஜி அவர்கள் adult franchise (வயது வந்தோர் அனைவர்க்கும் ஓட்டளிக்கும் உரிமை இப்பொது வேண்டாம் ) என்று கூறியதை நினைவு படுத்த விரும்புகிறேன்.அவர் ஓட்டளிப்பவருக்கு தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்று நன் கேள்விப்பட்டுள்ளேன்.சுதந்திரத்திற்கு முன் patta holders were elegible to vote Democracy will only be success if people were matured just like western countries .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement