Advertisement

ஒரே கல்லில் மோடி வீழ்த்திய மூன்று மாங்காய்கள்!

''முனியா, இன்னிக்கு மட்டும் நீ ஆடு மேய்க்கப் போய்ட்டு வாப்பா''
''ஏம்மா அண்ணனுக்கு என்னாச்சு''
''அண்ணனுக்கு மேலுக்குச் சுகமில்லப்பா''
''சரிம்மா''
''ஆடு மேய்க்க போகும் போது பக்கத்து வயலில் முத்தழகுன்னு ஒரு பொண்ணு ஆடு மேய்ச்சிக்கிட்டு இருக்கும். அந்தப் பொண்ணு அண்ணனுக்குச் சரிப்பட்டு வருவாளான்னு பாரு. அவங்க வீட்டுல நாளைக்குச் சம்பந்தம் பேச வாராங்க''
''சரிம்மா'' ''அப்புறம் இன்னொரு விஷயம். பக்கத்து காட்டுலருந்து ஒரு நரி வந்து ஆடுகளத் திருடிக்கிட்டுப் போகுதாம். எப்படியாவது அந்த நரியப் பிடிச்சுப் போட்டுத் தள்ளிருப்பா. இல்லாங்காட்டி நம்ம ஆடு நமக்கு மிஞ்சாதுப்பா''
''சரிம்மா''
ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்திய அந்த புத்திசாலித் தாய் தான் நம் பிரதமர் நரேந்திரமோடி. ஒரே அறிவிப்பின் மூலம் ஆடு மேய்த்தாயிற்று; அண்ணனுக்குப் பெண் பார்த்தாயிற்று; ஆடுகளை கொல்ல வரும் நரியையும் அழித்தாயிற்று.
ராமாயணத்தில் ஒரு காட்சி. சுக்ரீவனுக்கு ராமனின் திறமையின் மேல் அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. இவனால் வலிமை மிகுந்த வாலியை எதிர்க்க முடியுமா? 'நரேந்திரமோடியால் நாட்டை ஆள முடியுமா' என்று நம்மில் இருக்கும் பல மேதாவி கள் சந்தேகப்பட்டார்களே. அது போலத் தான் சுக்ரீவனின் நிலையும். சுக்ரீவன் ஐயத்தைப் போக்க ராமன் ஒரே அம்பில் ஏழு மரங்களை வீழ்த்துகிறான். மோடியை சந்தேகப்பட்டவர்களின் மூக்கை உடைக்க அவர் ஏவிய ராமபாணம் தான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு. மோடி விட்ட ராமபாணம் துளைத்தெடுத்த மரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கறுப்புப்பணம் : இது ஆயிரம் ஆண்டுகளாக ஏழைகளின் வியர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டிருந்த விஷ மரம். அந்த மரத்தின் பலவீனமான இடத்தில் பலமாக ஆப்பு வைத்து விட்டார் மோடி. ஊழல் என்று இன்னொரு விஷ மரம். நேர்மையாக வாழ்பவர்களை கோமாளிகள் ஆக்கிய மோசமான மரம். கோவையில் ஒரு சாதாரண அரசு அதிகாரியின் வீட்டில் சிக்கிய பணத்தின் மதிப்பு 69 கோடி ரூபாய் என்றால், ஊழல் எந்தளவுக்கு நம் பொருளாதாரத்தில் ஊடுருவியிருக்கிறது என புரிந்து கொள்ளுங்கள்.நம் பொருளாதார அமைப்பிற்கு வெளியே மிக அதிகளவில் பணம் புழங்கிக் கொண்டிருக்கிறது. இது எந்த கணக்கெடுப்பிலும் வராது. எந்த கண்காணிப்பிலும் வராது. அதற்கு வரி விதிப்பு முதலிய கட்டுப்பாடுகள் கிடையாது.
மான்கள் ஒழுங்காக வரிசையாக மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில், மூர்க்கமான ஓநாய்களை அவிழ்த்து விட்டால் என்ன ஆகும். ஒரு கட்டத்தில் கறுப்புப் பணம் என்ற ஓநாய், வெள்ளைப்பணம் என்ற மான்களை கொன்று விடும் அபாயம் இருக்கிறது. இந்த அபாயம் ஒரு பயங்கரமான விஷ மரம். இதையும் மோடியின் அம்பு துளைத்து விட்டது. இந்த இரண்டையும் விட மோசமான நச்சு மரம் ஹவாலா. இந்த முறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறிக் கொண்டிருக்கிறது. இவை நம் பொருளாதார அமைப்பிற்குள் வராமலேயே போய்விடுகின்றன.

தீவிரவாதிகள் கள்ள நோட்டு : இவை அனைத்தையும் விட, கொடிய விஷ மரம் அண்டை நாட்டுத் தீவிரவாதிகள் அடிக்கும் கள்ள நோட்டு. இப்போது புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளில், பத்து சதவீதம் கள்ள நோட்டுகள் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். கள்ள நோட்டு அடிப்பவர்கள், நம் சட்டை பையிலிருந்து பணத்தை திருடுகிறார்கள்.
பின் அதை வைத்து கொண்டு துப்பாக்கிகளையும், குண்டு களையும் தயாரித்து அதை வைத்து கொண்டே நம்மைக் கொல்கிறார்கள். நம் சொத்துக்களையும் கொள்ளையடிக்கிறார்கள். நம் வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள்.

என்ன கொடுமை சரவணா? ஒவ்வொரு நோட்டாக எடுத்து பார்த்து, இது கள்ள நோட்டா இல்லையா என்று கண்டுபிடிப்பது, நடைமுறையில் சாத்தியமில்லை. ஒட்டுமொத்தமாக பழைய நோட்டுகளை செல்லாதவையாக்கி விட்டால், கள்ள நோட்டு அடிக்க முடியாதபடி புதிய நோட்டுகளை கொண்டு வந்து விட்டால், ஆடு மேய்த்தலும், அண்ணனுக்கு பொண்ணு பார்த்தலும், ஒரே சமயத்தில் நிகழ்வது என்பது இது தான்.

அறியாமை : யாரோ ஊழல் செய்கிறார்கள். எவனோ கருப்புப்பணம் வைத்திருக்கிறான். எங்கோ ஹவாலா நடக்கிறது. எங்கோ நாட்டின் எல்லையில் தீவிரவாதிகள் கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுகிறார்கள் என்று சொல்வது அறியாமையின் உச்சகட்டம். இந்த விஷ மரங்கள் விஷத்தை எப்படி நம்முள் செலுத்துகின்றன தெரியுமா? விலைவாசி ஏறுகிறது; கடினமாக உழைப்பவர்களின் உழைப்பு திருடப்படுகிறது. நேர்மையானவர்கள் கையில் வைத்திருக்கும் பணத்திற்கு மதிப்பில்லாமல் போய் விடுகிறது. ஒழுங்காக வாழ்பவர்கள் சொத்து வாங்கவே முடியாது என்ற நிலைமை வருகிறது. பார்த்தார் மோடி; எடுத்தார் வில்லை; விட்டார் அம்பை! பெருமதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், விஷ மரங்கள் வீழ்ந்தன என்று சொல்ல முடியாது. ஆனாலும் விஷத்தின் வீரியம் பெரும் அளவு குறைந்து விட்டது. பல இடங்களில் விஷத்தன்மை முறியடிக்கப்பட்டு விட்டது. இப்படி ஒரேயடியாக செய்யாமல், தவறு செய்தவர்கள் மேல் படிப்படியாகத் தக்க நடவடிக்கைகள் எடுத்திருக்கலாமே என்று, சிலர் குறை சொல்கிறார்கள். கருப்புப் பணம் வைத்திருப்பவர்களை 'ரெய்டு' செய்வதை விட்டு விட்டு, அடித்தட்டு மக்களை அவதிக்கு உள்ளாக்குகிறீர்களே என்று நேற்று தொலைக்காட்சியில் ஒருவர் அழுதார். ஊழல் பெருச்சாளிகளைச் சிறையில் அடைப்பதை விட்டு விட்டு, எங்களை இப்படி கொடுமைப்படுத்துகிறீர்களே என்று ஒரு குடும்பத் தலைவி அங்கலாய்த்தார்.

பல்ஸ் போலியோ : குழந்தை பிறந்தவுடன் குறிப்பிட்ட காலகட்டத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று காலம் காலமாக டாக்டர்கள் கூறிக் கொண்டுள்ளனர். இந்தியா போன்ற பெரிய நாட்டில் மக்கள் அனைவரும் இதனை சரியாக பின்பற்றுகிறார்களா என்ற கண்காணிப்பு நடைமுறையில் சாத்தியம் இல்லை. அதனால் நம்மால் போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இதே பிரச்னை சீனாவில் இருந்தது. அவர்கள் என்ன செய்தார்கள்? ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இரு நாட்களில், ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வற்புறுத்தி சொட்டு மருந்து கொடுத்து விடுவது என தீர்மானித்தார்கள். 'பல்ஸ் போலியோ' முறை உருவாகியது. இந்தியாவிலும் இப்போது இந்த முறையைதான் பின்பற்றுகிறோம். மோடியின் அறிவிப்பு 'பல்ஸ் போலியோ' முறையில் எல்லோருக்கும் சொட்டு மருந்து கொடுப்பதை போன்றது தான். சொட்டு மருந்து கசக்கத்தான் செய்யும். ஆனால் அதன் பலன் இனிக்கும். போலியோ நோயால் குழந்தைகள் ஊனமாகும் அவல நிலை வராது.
எல்லாம் சரிய்யா. கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து விட்டு இதை செஞ்சிருக்கலாமே?
டிச., 31 க்கு பிறகு 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்திருக்கலாம்.
அப்படி அறிவித்தால் அது அபத்தத்தின் சிகரமாக இருக்கும். பஸ்களில் செக்கிங் இன்ஸ்பெக்டர் முன்னறிவிப்பின்றி திடீரென ஏறினால் தான் செக்கிங்கினால் பலன் இருக்கும். 'பஸ் புறப்படும் போதே இன்று திருப்பரங்குன்றம் அருகே செக்கிங் இன்ஸ்பெக்டர் ஏறப் போகிறார்' என்று அறிவித்தால் பிறவித் திருடன் கூட, ஒன்றுக்கு இரண்டாய் பயணச்சீட்டு வாங்கிவைத்து கொண்டு அதை பெருமையுடன் காண்பிப்பான்.

மோடியும் வாஜ்பாயும் : மோடியின் புரட்சிகரமான அறிவிப்புக்கு நிகராக ஒரே ஒரு நிகழ்வுதான் நினைவில் நிழலாடுகிறது. 1998 ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தினார். உலக நாடுகள் மேலோட்டமாக அவரை கரித்து கொட்டின; உள்ளூர அவரை பாராட்டின. அதே போல மோடியும் பல மனித மொழிகளில், நாட்டின் பொருளாதார பிரச்னைகளை பற்றி கூறி பார்த்தார். கடைசியில் அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழியில் நச்சென்று கூறிவிட்டார். அதுதான் இந்த அறிவிப்பு. நரேந்திரமோடி போன்ற ஒரு பிரதமரை பெற நாம் தவம் செய்திருக்க வேண்டும். இந்த திடீர் அறிவிப்பால் எத்தனை இடைஞ்சல்? எத்தனை உளைச்சல்? எத்தனை அலைச்சல்? கொஞ்சம் திட்டமிட்டு செய்திருக்கலாம். ஆனால் இது ரகசியமாக இருக்க வேண்டும் என்பதால் சில சிரமங்களை தாங்கி கொள்ள தான் வேண்டும். நல்ல காரியங்கள் நடக்கும் போது இடையே கொஞ்சம் கஷ்டம் வரத்தான் செய்யும்.

ஒரே மகளுக்கு திருமணம் : நிச்சயிக்கிறீர்கள். மாப்பிள்ளை நல்லவர். நல்ல வேலையில் உள்ளார். வரதட்சணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி விட்டார்கள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பிலிருந்து உங்களுக்கு மூச்சு விடக்கூட நேரமில்லாமல் வேலை. நேரத்துக்கு சாப்பாடு இல்லை. போதியளவு துாக்கம் இல்லை. திருமணம் நடந்து ஒரு ஆண்டு கழித்து எதனை நினைப்பீர்கள்? அலைச்சலையா? துாக்கமின்மையையா? இல்லை. உங்கள் செல்வ மகளின் கையை பிடித்து, கம்பீரமான உங்களின் மருமகனின் கையில் கொடுத்த போது, உங்கள் கண்களின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீரையா?

69 ஆண்டுகள் கழித்து சுதந்திரமடைந்து 69 ஆண்டுகள் கழித்து இன்று தான் இந்திய பொருளாதாரம் வயதுக்கு வந்திருக்கிறது. இன்று நடப்பது பூப்புனித நீராட்டு விழா. ஆங்காங்கே சில வலிகளும் வேதனைகளும் இருக்கத்தான் செய்யும். அதை பெரிது படுத்தாதீர்கள். நாடு அடையப் போகும் நல்லதை எண்ணிப் பாருங்கள். உங்கள் மகள் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து பாருங்கள். பதறாதீர்கள். நல்லவர் சொத்துக்கு நாசம் இல்லை. நடப்பது எல்லாம் நன்மைக்கே.

வரலொட்டி ரெங்கசாமி
எழுத்தாளர், மதுரை
varalottigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • Rajamani Ramasamy - Chennai,இந்தியா

  சபாஷ்.ஆணித்தரமான கருத்து. மிக்க நன்றி .

 • Jayakumar Krishnamurthi - Secunderabad,இந்தியா

  மிக அருமை

 • Sridhar - Chennai,இந்தியா

  அருமையான கருத்து. பிரதமரின் நேர்மை துணிச்சல் பாராட்டக்கூடியது. வளர்க இந்தியா வாழ்க வையகம்

 • Karthik - Coimbatore,இந்தியா

  அடுத்த ஆப்பு ரெடியாகிவிட்டது, next countdown already started.

 • VSK - CARY,யூ.எஸ்.ஏ

  dis. 30 வரை மாற்றலாம். இதென்ன ரஜினி படமா ? முதல் நாள் முதல் ஷோ பார்க்க அலையறதுக்கு....கொஞ்ச்ம பொறுங்கப்பா

 • D MANIKANDAN - pollachi,இந்தியா

  அட, உடம்பில் இருக்கும் கசடு போகணும்னா பேதி குடித்துத்தான் ஆகணும். சிறுமத்தாப்பாத்தா முடியுமா? ௨ நாளைக்கு பால்காரனு (ரு)ம் கடன் ஊத்துவான்.வார். தேசநலனப்பருங்கப்பா? என்னமோ துப்பாக்கியெடுத்தது காஸ்மீரப்பிடிக்க போருக்கு போக சொன்னாப்புல. அப்படியே போகச்சொன்ன சூட்டோட சூட போகவும் தயார். இப்ப இன்னொரு விஷயம் என்னனா இப்ப இந்த வருஷத்தில் இருந்து இந்த வருஷம் வரை பிறந்த குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து போடலைனா பின்னாளில் அவர்களுக்கு உடல் ஊனம் அச்ச்சுன்னா அத வச்சுட்டு மாற்று திறனாளிகள் னு இடஒதிக்கீடு பின்னாடி கேக்கக்கூடாதுனும் ஒரு சட்டம் போடணும். ஏன்னா, இன்னைக்கு கவர்ன்மென்ட் பேச்சைக்கேட்டு ஒழுங்கா போலியோ சொட்டு மருந்து ஊத்தி நல்ல வளர்ந்த எம் மகன் நாளைக்கு வேலைக்கு போகும்பொழுது யாராவது எங்கம்மா எனக்கு போலியோ சொட்டு மருந்து ஊத்தலைன்னு சொல்லி காலை இழுத்துக்கொண்டு வந்து மாற்றுத்திறனாளின்னு சொல்லி எல்லா வகையிலும் இட-ஒதிக்கீடு கேட்டு போராட்டம் நடத்துக்கோடாதில்லையா, அதுக்குத்தான் இப்பவே இப்படி ஒரு சட்டம் இப்பவே போடணும். படிக்கச்சொல்லறப்போ பள்ளிக்கூடத்துக்கு போனாத்தானே படிச்சு மேல வரலாம், அதைச் செய்ய ஒரு சோம்பேறித்தனம். பின்னாடி என்னப்படிக்கவே வீட்டுல, விடுலைனு சொல்லி சலுகை கேக்கறது என்ன நியாயமோ,கவர்மெண்ட் சொல்லறத்தைக்கேளுங்கப்பா, எல்லாத்துக்கும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்ய முடியுமா? என்ன நான் சொல்லறது,நன்றி, வணக்கம்ப்பா.

 • Rsramani Ramani - chennai,இந்தியா

  சரியான நேரத்தில் சரியான கருத்தும் விளக்கமும் உள்ள கட்டுரை. மிக மிக அற்புதம். facebook , த்விட்டேர், வாட்ஸாப்ப் போன்றவற்றில் பகிரவும் வாசகர்களே. எல்லாரும் எல்லாமும் பெறவேடும். அறிவே தெய்வம். வரலொட்டி ரெங்கசாமிஎழுத்தாளர், மதுரை அவர்களே நன்றி பாராட்டுகிறான். தொடரவும், உங்கள் கட்டுரைகள்.

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  இப்படி எளிய நடையில் சொன்னாலும் ஏறாத மர மண்டைகள் இருக்கத்தான் செய்வார்கள், அதற்காக கவலை கொள்ள தேவையில்லை சில எதிர்ப்பு தொலைகாட்சி மக்கள் புலம்புவதை பேட்டி எடுத்து திரும்ப திரும்ப ஒளி பரப்பி மேலும் நிலைமையை பெரிது பண்ணி எதை சாதிக்க நினைத்தனரோ? சபாஸ் / ஜைஹிந்த் மோடிஜி ...

 • sivakumar - Madurai,இந்தியா

  வரிசையில் நிற்க வறுத்த படுகிற பலர் jio சிம் வாங்க நின்றவர்கள் தானே.இப்போ மட்டும் என் இவளோ கவலை. கருப்பு பணம் வெளிய வருதோ இல்லையோ ஒரு நல்ல முயற்சி அதை அங்கீகரியுங்கள்

 • V NATARAJAN - chennai,இந்தியா

  The black money will not come to the tem back as more than 90% of it is with the poiticians of all colours without any exceptions and government employees and they cannot deposit their ill gotten wealth in their bank accounts and face not only IT department but also criminal action under disproportionate wealth cases. Hence they have no other go to destroy it. Again we cannot say that with the development of technology counterfit notes will be curbed totally. It may be delayed. That is all.. One thing I agree that all bogus politicians and buerocrats have lost all their ill gotten wealth by overnight.

 • Thailam Govindarasu - Manama,பஹ்ரைன்

  இவ்வளவு எளியநடையில் புரியவைத்தும் சில மர மண்டைகளுக்கு புரியமாட்டேங்குதே.இந்த மரமண்டைகளுக்காக நல்லவர்களும், வல்லவர்களும் தீமைகளை எதிர்த்து போராடி போராடி அழிந்துவிட்டனர். இவர்கள் நாட்டில் பெறுகிவிட்டனர் இவர்களையும் கொஞ்சம் களையெடுக்க வேண்டும் பின்தான் ராம ராஜ்ஜியம் திரும்ப வரும்.

 • Vincent House - nagercoil,இந்தியா

  அடே மரமண்டைகளா, இந்திய பிரதமர் நம்மீது வீசியது அம்பு இல்லடா.. புண் பிடித்து போய் அழியும் நிலையிலிந்த நம் அறியாமையின் மண்டையயை: புனரமைக்கும் அறிவின் மருந்தடா

 • Emperor SR - Ooty,இந்தியா

  இனிய நடையில் அனைத்து மக்களுக்கும் புரியும்படியாக உள்ள கட்டுரை. வீணில் சில தற்காலிக துன்பங்களை நினைத்து பிதற்றி சீன் போடாமல் உண்மையை உணர்த்தி இந்த வரலாற்று சிறப்பு மிக்க முயற்சியை தெளிவாக சாமானியர்களுக்கு புரியும்படி எழுதியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.

 • mohan ramachandran - chennai,இந்தியா

  அருமை .நான் BJP யின் ஆதரவாளர் இல்லை .இருப்பினும் மோடி அரசின் நடவடிக்கை மிக்க சரி.பத்து மாதம் சுமந்து குழந்தையைப் பெற்றத் தாய் அது பிறந்ததும் அதன் அழுகை அவளுக்கு எந்த உனர்வை தருமோ அது போல இந்த சிறு சிரமத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்

 • kandhan. - chennai,இந்தியா

  அருமையான சமாதானம். இதன் விளைவு என்ன என்று போக போகத்தான் தெரியும்.பெரிய முதலாளிகளும் ,அரசியல் வாதிகளும் தங்கள் பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் மிடில் கிளாஸ் மக்களும் கீழ் தட்டு மக்களும் எப்படி பாதிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்தால் நல்லது,உங்கள் கதையில் மோடியை ராமனோடு ஒப்பிட்டு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கதை மூலம் மக்களை மூளை சலவை செய்கிறீர்கள். உண்மையில் கருப்பு பணத்தை பிடிப்பதில் அரசு இன்னுமும் தோல்வி அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேணும். ஏனென்றால் நம் நாட்டில் காட்டி கொடுக்கும் எட்டப்பன்கள் இருக்கும் வரை பாக்கிஸ்தானிகளும் ,சீனாக்காரர்களும் இதில் கொஞ்சம் வேகமாக செயல்படுவார்கள் எனவே களை எடுக்கவேண்டியது (பதுக்கல் காரார்களையும் ,பெரிய தொழில் அதிபர்களையும் ஒழுங்காக வரி கட்டாதவர்களையும் )தீவிரவாதத்தை ஆதரிக்கும் நம் மக்களைத்தான்வேணுமானால் இது அரசியலுக்கு உதவும் ஆனால் நம் மக்களுக்கு எப்படி என்று சிந்திக்க வேண்டிய விஷயம் எதிலும் மாற்றம் வந்தால் சரி ??????

 • Chitra - Chennai,இந்தியா

  அனைவருக்கும் புரியும் எளிய பொது உதாரணங்களைக் கொண்ட கட்டுரை....நன்று..

 • mohanasundaram - chennai,இந்தியா

  அருமை.

 • Priya - Chennai,இந்தியா

  அருமையான தொகுப்புரை ... சில நேரங்களில் அதிரடி தேவை தான். பிரதமர் இப்படி தான் செயல் படவேண்டும். வாழ்த்துக்கள் மோடி ஜி.

 • Senthil Rajan.D - Palladam,இந்தியா

  அருமையான கருத்துக்கள் ...

 • Sangeethag - Karaikal,இந்தியா

  ஊழல் இல்லா புதிய பாரதம் காண நமக்கு வைத்தியம் செய்த பிரதமர் மோடிஜிக்கு வந்தனம்

 • Enn karthukal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பின்னீடீ க்க போக்க

 • Enn karthukal - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்

 • ganapati sb - coimbatore,இந்தியா

  பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் ரகசியமும் வேகமும் காக்கப்படவேண்டும் புதிய ரெசெர்வ் வாங்கி கவர்னர் வந்த பின் புதுப்பணம் அச்சிடப்பட்டு ரகசியம் காக்கப்பட்டு ஒரே நாளில் வங்கிகளுக்கு அவை அளிக்கப்பட்டு வேகமும் முன்னெடுக்கப்பட்டு பழைய பணம் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது தேசபக்தி மிகுந்த தலைவரால் இது சாத்தியமாகி உள்ளது நல்லது நடக்கட்டும்

 • Kumar - Duabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மிக அருமை

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  தெளிவான கதையுடன் கூடிய கட்டுரை. கருப்பு பணம், ரூபாய் நோட்டுகளாக இல்லாமல் சொத்து வடிவிலும் இருக்கலாம், அதையும் வெளிக்கொண்டு வர, மோடிஜி அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 • balakrishnan - Mangaf,குவைத்

  சரியான உவமை , எளிமையாக நன்றாக இருந்தது

 • KARTHI - coimbatore,இந்தியா

  மதுரை, வரலொட்டி ரெங்கசாமி எழுத்தாளர் அவர்களுக்கு மிக்க நன்றி. அருமையான கட்டுரையை பதிவு செய்தீர்கள் இதனால் மக்களிடத்தில் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

 • Ruban kumar - chennai,இந்தியா

  மிக அருமையான பதிவு, தொடரட்டும், வாழ்த்துக்கள்.

 • suresh kumar - Salmiyah,குவைத்

  இதே போல் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்திற்கும் ஏதாவது ஆப்பு வைத்தால் நல்லது செய்வார்கள் என நம்புவோம்

 • Sundar Rajan - chennai,இந்தியா

  ஓங்கி அடிச்சா 130 கோடி Quintal வெயிட்டு .....பாக்கறயே நீயே பாக்கறயே

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்

 • Bala G - brisbane ,ஆஸ்திரேலியா

  மிக அருமையான கட்டுரை. நன்றி ஐயா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement