Advertisement

அஜித்தோடு நடிக்க ஆசை : சொல்கிறார் நடிகை சபீதாராய்

ஐந்து வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் ஜொலித்து வருகிறார் நடிகை சபீதா ராய். முகத்தில் எப்போதும் புன் சிரிப்பு, கண்போரை கவர்ந்திழுக்கும் உருவத்திற்கு சொந்தக்காரரான அவர் படப்பிடிப்பின் நடுவே 'தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அளித்த பேட்டி...* சொந்த ஊர் ... கோவை மாவட்டம் பொள்ளாச்சி. எம்.ஏ., பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் முடித்துள்ளேன்.* நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி...தாயார் பிரேமா, மேடை நாடக கலைஞர். அவர் நிகழ்ச்சிக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது என்னை உடன் அழைத்துச் சென்று, நாடகத்தில் குழந்தை வேடத்தில் நடிக்கவும் வைத்தார். அது முதலே எனக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.* வெள்ளித்திரையில் நுழைந்தது எப்போது... ஐந்து வயதில் நடிகை விஜயசாந்தி போலீஸ் அதிகாரியாக நடித்த 'விடிவெள்ளி' என்ற சினிமாவில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக'என்ட்ரீ'ஆனேன். ஒரு பிரச்னையில் என்னை அவர் காப்பாற்றுவது போல காட்சி இடம் பெற்றிருந்தது.* சின்னத்திரையில் எப்போது வாய்ப்பு கிடைத்தது...2007 ல் பிளஸ் 2 முடித்தவுடன் ஊமை விழிகள் பட இயக்குனர் ஆபாவாணன் தயாரிப்பில், அரவிந்த் இயக்கத்தில் திருமகள் 'டிவி' சீரியலில் முதன் முதலாக குறத்தி வேடத்தில் நடித்தேன். அதன்பின் கோலங்கள், அத்தி பூக்கள், தாமரை, இளவரசி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். தற்போது பிரபல இயக்குனர் அழகரின்'காக்க காக்க' சீரியலில் 'வீராயி' என்ற 100 வயது வில்லியாக தீயசக்தி கேரக்டரிலும், இளமை கேரக்டரிலும் நடித்துள்ளேன். குறும்படங்கள் என்னை சின்னத்திரைக்கு அழைத்து வந்தன.* வெள்ளித்திரை வாய்ப்புகள் அதிகம் வருகிறதா... சமீபத்தில் ஹீரோவாக கேசவன், ஹீரோயினாக ஷாக்சி அகர்வால் நடித்து வெளியான 'ககக போ'என்ற படம்தான் எனக்கு 'ரீ என்ட்ரீ'. அதில் முக்கிய காமெடி ரோலில் நடித்துள்ளேன். வினய் ஹீரோ, சரத்குமார் மகள் வரலட்சுமி ஹீரோயினாக நடிக்க உள்ள 'அம்மாயி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளேன். சங்கர் ஜி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. நல்ல பட வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துள்ளேன். * ஹீரோயினாக நடிப்பது எப்போது...சிறந்த கதையம்சம் உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆசை. வித்யாசமான படங்களைத் தரும் இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்க விரும்புகிறேன். * உங்கள் ரோல் மாடல் யார்... நிச்சயமாக... மனோரமா தான். அவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை. அவரைப்போல சினிமாவில் நகைச்சுவையாகவும், சீரியல்களில் வில்லி கேரடக்டரிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். * உங்களைக் கவர்ந்த ஹீரோயின் யார்...நயன்தாரா. சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் மீண்டும் நடித்து பெயரெடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை அவர் சாதித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.* சீரியல்கள் சமுதாயத்தை சீரழிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே...எத்தனையோ 'டிவி' சீரியல்கள் கூட்டுக்குடும்பம், பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வலியுறுத்துகின்றன. ஆனால் அதுபற்றி எல்லாம் பலரும் கூறுவது இல்லை. எதிலும் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.* உங்களுக்கு பிடித்தது சினிமாவா... சீரியலா...இரண்டுமே இரு கண்கள். * எதிர்கால லட்சியம் என்ன...முரட்டுக்காளை, ராணுவ வீரர், மூவேந்தர், ஜாமின்கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தாயார் போல திரைத்துறையிலும், சின்னத்திரையிலும் முத்திரை பதிக்க வேண்டும் என உறுதிகொண்டு, அதற்காக பயணிக்கிறேன். நடிகர் அஜித்தின் தீவிர ரசிகை நான். அவரோடு இணைந்து நடிக்க விரும்புகிறேன்.தொடர்புக்கு...sabbitaroi25gmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement