Advertisement

வெற்றியை தருவது திறமையா, அதிர்ஷ்டமா... போட்டுடைத்தார் இயக்குனர் குகன்

கேமராமேனாக சினிமாத்துறையில் கால்பதித்து இன்று இயக்குனராக தடம்பதித்தவர் எஸ்.பி.எஸ்.குகன். சிவகங்கை மாவட்டம் வசந்தம்பட்டியை சொந்த ஊராக கொண்ட இவர் ,பட்டம் பயின்ற பின் சினிமாவில் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற லட்சிய கனவோடு நுழைந்தவர். சாதனையாளர்களை மட்டுமே உலகம் புகழ்பாடும் என்பதில் சினிமா துறையிலும் மெய் மாறாத உண்மை. இதை மூச்சுக்கு முந்நுாறு முறை உணர்ந்து யாரும் படைக்காத சாதனையை குகன் செய்ய முனைந்தார். அதில் வெற்றியும் கண்டார். முதல் முறையாக 5 டி ஸ்டில் கேமராவில் முழுநீள திரைப்படத்தை எடுத்து முடித்தார். இந்த உழைப்புக்கு ஏற்றார் போல் லிம்கா சாதனை பட்டியலில் இடம் பெற்று விருதும் தேடி வந்தது. இயக்குனராக, ஒளிப்பதிவாளராக தனக்குள் பன்முக திறன் கொண்ட எஸ் .பி. எஸ்., குகன், 'தினமலர் ' என்றவுடன் மகிழ்ச்சியுடன் , மதுரை தமிழில் வெளிப்படையாய் ஒலித்த குரல் இதோ...* தற்போது இயக்கும் படம் மதுரை- ஆண்டிபட்டி பாகம் 2 ற்கு இயக்குனராக பணியாற்றி உள்ளேன். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. முதல் பாகத்தில் தழுவிய கதை அல்ல. துடிப்பான இளைஞர்கள் திரைப்படம் எடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்பது வாழ்க்கையில் லட்சியமாக கொண்டு, இதற்காக என்னென்ன போராட்டம் செய்கிறார்கள். எதிர்கொள்ளும் தடைகள், தியாகங்கள், இதனுடன் மெல்லிய காதல். இவை அனைத்தும் சுவாரசியமாக படமாக்கி இருக்கிறோம்.* மறக்க முடியாத அனுபவம் கொடைக்கானலில் யாரும் செல்ல முடியாத மலை உச்சிற்கு டூயட் பாட்டு எடுக்க சென்றோம். சிறிய பாதை. நடந்து மட்டுமே செல்ல முடியும். கரணம் தப்பினால் மரணம் என்ற வழியில் பயணித்தோம். சக ஊழியர்கள், நடிகர், நடிகைகள் அச்சத்துடன் பயணித்தனர். கீழே இறங்கி விடலாம் என்ற யோசனை எனக்கும் இருந்தது. ஆனால் விடவில்லை. இந்த அனுபவம் மெய் சிலிர்க்க வைத்தது. தற்போது இந்த பாடலின் ஒளிப்பதிவு அருமையாக வந்துள்ளது. பாராட்டும் குவிகிறது. உழைப்பிற்கேற்ற வெற்றி கிடைத்தது.* சினிமாவில் வெற்றி. திறமையா.. அதிர்ஷ்டமா... பன்மடங்கு திறமைசாலிகள் ஊக்குவிப்பு இல்லையெனில் வெற்றி பொய்த்துவிடும். இதுவே மெய். என் டீம் போட்டோ கிராபர்கள், வீடியோகிராபர்கள், நண்பர்களின் உழைப்பே வெற்றியை தேடி தந்துள்ளது. * உங்களை பற்றி.. 5 டி கேமராவில் ஒளிப்பதிவாளராக கதிர்வேல் காக்க, இயக்குனராக தேனி முதல் ஆண்டிபட்டி பாகம் 1, 2, முயல் போன்ற திரை படங்களில் பணியாற்றி உள்ளேன். கேமராமேனாக தொழிலுக்கு வந்த நான் தற்போது ஒளிப்பதிவாளர், இயக்குனராக ஆகி இருக்கிறேன். அனைத்தும் என் உழைப்புக்கு கடவுள் கொடுத்த வரம்.* இன்டர்நெட்டில் வரும் படங்கள் பற்றி...தற்போது தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் 'மைன்ட்செட்'டில் யாரும் இல்லை. இன்டர்நெட்டில் படத்தை பார்க்கவே விரும்புகின்றனர். ஆனால் நல்ல கதையம்சம் கொண்ட படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடுகிறது. மக்கள் மனநிலையை கணித்து எடுக்கும் படங்கள் வெற்றி பெறுகிறது. * டி.டி.எச்., சி.டி., இன்டர்நெட்டில் படம் வெளியிடுவீர்களா?டிரண்டிற்கு ஏற்றார் போல் நாம் மாறிக் கொள்ள வேண்டும். திருட்டு தனமாக இன்டர் நெட்டில் படத்தை வெளியிடுவதை விட, உரிய தயாரிப்பாளரை படத்தை நெட்டில் ரிலீஸ் செய்யும் காலம் வரும். இதனால் தியேட்டர் கிடைக்காமல் திரைக்கு வராத படங்கள் ரிலீசாக வாய்ப்பு உள்ளது. நல்ல படங்கள் வெளியாகவும் வாய்ப்பு உண்டு. * சினிமாவை பற்றி கூறுங்களேன்ஜாலியாக படம் எடுத்தோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல், கமர்ஷியல், காமெடி என எந்த படங்களாக இருந்தாலும் அதில் பாஸிடிவ் விஷயம் இருக்க வேண்டும். நான் ஒளிப்பதிவு, இயக்கம் செய்த படங்களில் சமுதாய கருத்துகள் இல்லாமல் இருந்ததில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement