Advertisement

மத போதகர் மீது பாலியல் புகார்:அளித்த இளம்பெண் தற்கொலை

திருநெல்வேலி: நெல்லையில், மத போதகர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
துாத்துக்குடி மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்தவன் ஜோசுவா இமானுவேல் ராஜ், 35, கிறிஸ்தவ மத போதகரான இவன், நெல்லை மாவட்டத்தில் பல இளம்பெண்களிடம், வேலை வாங்கி தருவதாக வும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.இதில், ஏமாந்த கோவிந்தராஜ் மகள் அனுசுயா, 25, உட்பட பாதிக்கப்பட்ட பெண்கள், அவன் மீது தாழையூத்து போலீசில் புகார் செய்தனர். போலீசார், ஜோசுவா இமானுவேல்ராஜை கைது செய்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, பாப்பான்குளம் அருகே, திருநெல்வேலியிலிருந்து மதுரை சென்ற ரயிலில் விழுந்து, அனுசுயா தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார்விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

Advertisement