Advertisement

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 43

அன்பு தோழமைகளே நலமா? இந்த வாரம் வீட்டிலிருக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பகுதி நேரம் செய்யக் கூடிய தொழில்கள் குறித்து காணப் போகின்றோம் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், பினாயில், சோப்பு பவுடர். சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல் உள்ளிட்டவற்றில் தான் பெண்கள் கவனம் செலுத்தினார்கள் . இன்றைய நிலைமையோ முற்றிலும் வேறு. பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள், பெரும் அளவில் விரிவடைந்துள்ளன.சுய தொழிலில் ஈடுபட நினைக்கும் பெண்கள் முதலில் தங்களை தயார்படுத்திக் கொள்வது மிக மிக அவசியம். நமது சமூகம் ஆணாதிக்க சமூகமாக திகழ்வதால் பல்வேறு இடர்பாடுகளை பெண்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் . அந்த இடர்பாடுகளை எல்லாம் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும்.

பணியை விடத் தேவையில்லைபணிக்கு செல்லும் பெண்கள் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு இருந்தால், அதற்காக பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என்பதில்லை மாறாக சிறிய அளவில் தொழிலை தொடங்கி அது உங்களை எங்கே எடுத்துச் செல்கிறது என்பதை கவனிக்க வேண்டும். முதலில் சிறிய அளவில் துவங்குவதால் செலவுகள் எல்லாம் குறைவாகவே ஏற்படும். ஒரு வேலை அந்த தொழில் தோல்வியில் போய் முடிந்தால் நஷ்டமும் குறைவாகவே இருக்கும்பொதுவாக நாம் தொழில் செய்ய ஆரம்பிக்கும் முன்பே நாம் தோற்று விடுவோமோ எனும் பயத்திலேயே முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது சர்வதேச விதி.'வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் தான்' என்கிறார் ஷேக்ஸ்பியர். ஒரு மடங்கு திறமை , இரு மடங்கு தேடல், மூன்று மடங்கு பொறுமை நான்கு மடங்கு உழைப்புடன் தேர்ந்தெடுக்கும் தொழிலை முறையாக பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஓரளவு அனுபவம் கிடைக்கும். அத்துடன் நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் தங்களை முழுமையாக நம்ப வேண்டும். அதற்கான துணிச்சலும், தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.பல்வேறு துறைகளில் பெண்களால் சுய தொழிலில் ஈடுபட முடியும். அத்துறைகள் பெண்களுக்கு தொழில் வாய்ப்பை வாரி வழங்குகின்றன. அவை என்ன என்பதை பார்ப்போம். பேஷன் நகைகள் தயாரித்தல், அழகுக்கலை, டிசைன் பிளவுஸ், ஏற்றுமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் உற்பத்தி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட், சுற்றுலாத்துறை, உணவு பதப்படுத்துதல், பூ அலங்காரம், வீட்டு அலங்காரம், மூலிகைகள் தயாரித்தல், கல்வி மையங்கள் நிறுவுதல், இயற்கை உரம் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான சுய தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கு இன்றைக்கு கொட்டிக் கிடக்கின்றன. இத்தொழில்களை எல்லாம் ஏராளமான பெண்கள் செய்து நிறைய வருமானம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நிறைய கல்லூரி மாணவிகள் அழகாக காகிதத்தில், களிமண்ணில், பட்டு நூலில் அழகிய நகைகளை செய்கின்றார்கள் , விற்கின்றார்கள், இது வெளிநாடுகளுக்கு நிறைய ஏற்றுமதி ஆகின்றது, ஆன்லைனில் விற்பனை ஆகின்றது இவர்கள் இத்தகையோரை தொடர்பு கொள்ளும் பொழுது நிறைய பொருட்களை விற்க வழிவகை கிடைக்கும்.

பட்டம் தேவையில்லைபெண்களுக்கு சுயதொழில் தொடங்க பட்டப்படிப்பு எல்லாம் தேவையில்லை. பட்டப்படிப்பு இருந்தால்தான் தொழில் செய்ய முடியும் என்று பல பெண்கள் தவறான கருத்தை கொண்டு இருக்கின்றனர். ஓரளவு எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. .வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்தி கொண்ட மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என்ற கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகள் படிப்பு மட்டும் சோறு போடாது , பிறரோடு பழகும் முறை , இனிமையான பேச்சு , பிறர் கருத்தைக் கேட்கும் பாங்கு அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை , குழுவில் பணியாற்றும் குணநலன் ஆகியவையும் கல்வியறிவைப் போலவே முக்கியமானவை என்பதாகும். மேலும் சுய தொழில் செய்வதற்கு தொழில் சார்ந்த அறிவும், நிர்வாக திறமையும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும்தான் அவசியமான தேவைகள்.இன்றைய உலகம் வேகமான உலகம் எல்லா துறைகளிலும் நொடிக்கு நொடி மாற்றங்கள் முன்னேற்றங்கள் போதும் என்று திருப்தியே கொள்ள முடியாத நிலை இவற்றுக்கு ஏற்றபடி அறிவையும் திறமைகளையும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் சற்றுக் கண்ணயர்ந்தால் முன்னேறாதது மட்டுமல்ல இருக்கின்ற இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதே கடினமாகி விடும்..

சுயசிந்தனை தேவைநாம் சுயமாக சிந்திக்க வேண்டும் , சிந்தித்தால் தான் சீர்திருத்தம் பெற முடியும் . இல்லை இப்படியே தான் இருப்போம் என்று மரம் போல் நின்று கொண்டிருந்தால் தீடீர் மழையும் சூறாவளியும் வந்து அழித்துக் கொண்டு போய் விடும் எனவே நாம் மரமல்ல நாம் பகுத்தறியும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பிஸினஸில் ஏதோ பிரச்னை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். 'அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்' என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னார். அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 'ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்னச் சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!'ஜென் துறவி கோபப்படவில்லை. 'இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?' என்றார்.'ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?''பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?''அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்!''உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?''நிச்சயமா' என்றார் அந்தப் பணக்கார். 'அதில் என்ன சந்தேகம்?''எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?''என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!''அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!' என்றார் ஜென் துறவி. இது நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு மட்டுமில்லை சிறிய அளவில் தொடங்கும் தொழிலுக்கு கூட இக்கதை பொருந்தும் .'சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!'- ஆ.ரோஸ்லின்aaroselinegmail.com9842073219

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    நல்ல எண்ணங்கள்.ஆனால் வழக்கம் போல தலைப்பும் கருத்தும் ஒன்றோடொன்று இணைய வில்லை.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement