Advertisement

இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெ., கையெழுத்திட்டாரா: கருணாநிதி சந்தேகம்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வகித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூடுதலாக ஒப்படைக்கப்படுவதாக கவர்னர் மாளிகை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விஷயங்களை குறிப்பிட்டு திமுக தலைவர் கருணாநிதி சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் : தமிழக ஆளுநர் அவர்கள் நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், முதல் அமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளும், இந்திய அரசியல் சாசனத்தின் 166 (3) ம் ஷரத்தின்படி நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்குஆளுநர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்றும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சரே தலைமை வகிப்பாரென்றும், இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் எக்காரணம் கொண்டும் தேக்க நிலையில் இருந்திட அனுமதிக்காமல் தொடர்ந்து அரசு இயங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.

கடந்த 19 நாட்களாக, முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் நீண்ட நாட்கள் மருத்துவ மனையிலேயே இருந்திட வேண்டும் என்ற நிலையில், அவரது உடல் நிலை பற்றி அரசுத் தரப்பில் எந்த விதமான அதிகாரப் பூர்வமான அறிக்கைகளும் இதுவரை வராத நிலையில், பல்வேறு வதந்திகள் உலவிட நேரிட்ட பிறகு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் "அப்பல்லோ" மருத்துவ மனை சென்ற போது, சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சரை நேரில் பார்க்கவோ நலம் விசாரிக்கவோ வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இச்சூழ்நிலையில், நேற்று தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்பது வியப்பைத் தருகிறது. ஏனென்றால் முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி சிலரிடையே எழுந்துள்ளது.

மேலும், அ.தி.மு.க. வின் சார்பில் மாநிலங்களவையில் அண்மைக் காலம் வரை உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே முதல் அமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி யிருக்கிறார். பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டிற்கு எந்தவிதமான பதிலும் அரசின் சார்பாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
எப்படியிருந்த போதிலும், தாமதமாகவேனும், முதலமைச்சரின் இலாகாக்களை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இனி கவனிப்பார் என்று ஆளுநர் செய்துள்ள அறிவிப்பு நிர்வாக வசதிக்கான ஏற்பாடு என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, பொறுப்பு ஆளுநர், புதிய ஏற்பாட்டிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்பு, அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் இந்தக் குறுகிய இடைவெளியில் முழுமையாகப் பரிசீலித்திருப்பாரா என்று எழுந்துள்ள அய்யப்பாட்டினை அறவே புறக்கணித்து விட முடியாது.
இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (185)

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  கேக்குறவன் கேனையன் என்றால் கேழ்வரகில் நெய் வழியுமல்லவா? அதை தான் சொல்கிறார்கள் அதிமுக கொள்ளையர்கள்.

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  கையெழுத்து தனது கையெழுத்து இல்லைன்னு சொல்ல ஆயாம்மா வர மாட்டாங்க என்கிற தைரியமும்.. அப்படியே வந்தால் கூட கேள்வியை கருணாநிதி எழுப்பியிருப்பதால் கையெழுத்து தனது தான் என்று சொல்லி விடுவார் என்ற தைரியமும் இருக்கும் கூட்டத்திடம் இந்த கேள்வியை எழுப்பி எந்த பயனும் இல்லை. என்ன, அந்தம்மா அப்படியே வந்துட்டாலும், இந்த கேப்பில் அடித்த கொள்ளையெல்லாம் பிதுக்கி பிடுங்கிக்குவார் என்ற பயம் மட்டும் இருக்கும் பன்னீருக்கு.. 45% சசிகலாவுக்கு கொடுத்து சமாளித்துக் கொள்வார்.

 • Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்

  என் தந்தையார் சிறு வயது முதலே MGR விசுவாசி. அவர் அறிஞர் அண்ணா காலத்தில் இந்த கபடதாரியின் நய வஞ்சகமே அவரை அவ்வளவு சீக்கிரம் கொன்றது என்று சொல்வார்...ஒரு முறை பொது கூட்டம் ஒன்றில் இந்த கருணாநிதி அண்ணா அவர்களுடன் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய இந்த கட்டுமரம் தனக்கு பின் அண்ணா அவர்கள் உரை ஆற்றுவார் என்று சொல்லி அவரை எழுப்பி விட்டது... அப்போதுதான் அண்ணா அவர்களுக்கு தொண்டையில் புற்று நோய் அறுவை சிகிச்சை செய்திருந்தனர்.. மேலும் அவர் பொது கூட்டங்களில் உரை ஆற்ற கூடாது என்றும் மீறினால் சிகிச்சை பலன் அளிக்காது என்றும் சொல்லி இருந்தனர். அதனை தெரிந்து கொண்டே இந்த கட்டுமரம் அவரை பேசுமாறு அழைத்தது. அண்ணா அவர்களும் இதனை தட்ட முடியாமல் பேசினார்... அதன் பின்புதான் அவர் நோய் வாய் பட்டு இறந்தார் என்று கூறினார்.. அப்போதே இந்த கட்டுமரம் நாவலர் மற்றும் சம்பத் போன்றோரை ஓரம் கட்டி தன் குள்ளநரித்தனத்தால் தான் கட்சியை குறுக்கு வழியில் கைப்பற்றியது..

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  எனக்கொரு சந்தேகம், உங்களுடைய கைதான் சிறப்பாகவும் விரைவாகவும் செயல்பட முடியாதே, அப்புறம் எப்படி இவ்வளவு பெரிய அறிக்கையை டிவிட்டரில் தட்டச்சு செய்து இவ்வளவு விரைவாக பதிவிட முடிந்தது. இங்கு என்னால் கருத்துச்சொல்ல (35வயது) நான்கைந்து வரிகள் டைப் செய்வதற்கே நாக்கு தள்ளிவிடுகிறது. ஆனால் நீங்கள் உங்கள் கையை உயர்த்தி மெல்ல கீபோர்டு அருகே கொண்டு சென்று தேவையான எழுத்தை மெல்ல கண்டுபிடித்து அதை சரியாக அமுக்கி மீண்டும் நிமிர்ந்து பார்த்து ஸ்கிரீனில் அவ்வெழுத்து பதிந்ததை சரிபார்த்து பின் மீண்டு கையை உயர்த்தி........ இப்படி டைப் செய்ய இந்த அறிக்கைக்கு ஒரு வார காலம் தேவைப்படும். முதுமையில் ஏற்படும் இயல்பான மறதி காரணமாக உங்கள் அறிக்கைகள் பிறரால் எழுதப்படுவதாகவும், இவையெல்லாம் உங்கள் சிந்தனையல்ல என்றும் வேறு யாரோ ஒருவரின் சிந்தனை என்றும் சிலரிடையே சந்தேகம் எழுந்துள்ளதே.

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  நீங்க என்னதான் புழம்பினாலும் உங்களுக்கு அரசிடம் இருந்தோ, அண்ணா தி மு கா விடமிருந்தோ எந்த பதிலும் கிடைக்காது. அம்மா இதுவரை உங்களை மதித்து எந்த பதிலும் கொடுத்ததில்லை. பண்ணீரும் உங்களுக்கு பதில் சொல்ல வாய் திறக்க மாட்டார். பெருசுகள் புலம்பல் என்றும் ஓயாது

 • Baskar - Paris,பிரான்ஸ்

  அய்யா பெரிசு, உன் சொந்த கிராமம் திருக்குவளையில் உள்ள ஒரு கோவிலில் மரகத லிங்கம் காணவில்லையாம். உங்களுக்கு தெரியுமா.

 • KKsamy - Jurong,சிங்கப்பூர்

  ஒருத்தனுக்கும் புரியல அந்த கேள்விக்கு அர்த்தம். உண்மையிலே அவரு அத கேட்டிருக்க கூடாது, அதிமுக எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று விட்டிருக்க வேண்டும். அவரு கேட்டதோடு அர்த்தம் அறிவுரை அம்மாகிட்டருந்து வந்ததா இல்ல சின்னம்மா கிட்டேருந்து வந்ததா அப்டிங்கறது தான்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  நிலைமையை பொறுத்து விரல் ரேகையும் சட்டப்படி அனுமதிக்கப்படும்...

 • periasamy - Doha,கத்தார்

  சிந்திக்கும் திறன் உள்ள அனைவருக்கும் கலைஞருக்குள்ள சந்தேகம் உள்ளது மூளை சலவை செய்யப்பட்ட அடிமைகளுக்கு இருக்க நியாமில்லை தான்

 • amalan - thanjavur,டிஜிபௌசி

  பொறுப்பு முதல்வரை நியமிக்க சொல்லி நச்சரித்தீர்கள். நியமித்தாகி விட்டது. கை எழுத்து போட்டால் என்ன, போடாட்டி என்ன? உங்களுக்கு ஏன் சொறிச்சல்? சரியான வயித்தெரிச்சல் பிடிச்ச ஆளு. எதை செய்தாலும் அவர்களை குறை சொல்வதே உங்களுக்கு வேலையாய் போய்ச்சு. பன்னீர் செல்வம் முதல்வராவதில் ஒங்களுக்கு என்ன அப்படி ஒரு சொறிச்சல்? சரியான நயவஞ்சகர் இந்த பெரியவர்.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  மஞ்ச துண்டு மறுபடியும் தான் சகுனி என்பதை நிரூபித்து விட்டார் . சரியான ஞான சூனியம் இந்த மஞ்ச துண்டு .

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  1984 ல எம் ஜி ஆர் உடல் நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது, ஒரு ஆளு, என் கிட்ட ஆட்சியை கொடுங்க, எம் ஜி ஆர் திரும்பி வந்ததும் அப்படியே திருப்பி கொடுத்துடறேன்னு கூவுனாரு. அப்போ அந்த ஆளுகிட்ட எம் ஜி ஆர் கையெழுத்து போட்டு கொடுக்கறேன்னு சொல்லி இருந்தாரா? தலைவா பதில் சொல்லுங்க.

 • Vinod K - London,யுனைடெட் கிங்டம்

  கேள்வி ஞாயமானது.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சந்தேகமே உன் இன்னொரு பெயர்தான் கருணாநிதியோ? இவர் மட்டும் தன் மகள் கனிமொழியை "தனக்குப் பிறக்கவில்லை, ஆனால் என் மனைவிக்கு பிறந்தவர்" என்று சொல்வாராம், அழகிரியை தன் "மகன் இல்லை" என்று சொல்வாராம், பின்னர் அனைத்தையும் மாற்றி பேசுவாராம். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் மின் இதழில் "தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருக்குவளை என்ற ஊரில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த மரகத லிங்கம் திருடுபோனது" என்ற செய்தி வந்துள்ளது. தமிழக மக்கள் அனைவரும் "இந்த திருட்டில் ஏன் அந்த ஊரில் பிறந்தவர் ஈடு பட்டு இருக்கக்கூடாது?" என்று கேட்கிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர் ஆன "சிவ" பக்தை அம்மையாரை தூண்டிவிடுவதே கருணாநிதியும், ஸ்டாலினும் தான் என்று அகில உலகமும் அறியுமே.

 • Ramakrishnan - NYC,யூ.எஸ்.ஏ

  மஞ்சள் துண்டை நம்பி மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பூசை நேரத்தில் கரடி புகுந்தது போல இந்த கவர்னர் நுழைந்து குட்டையை குழப்புகிறாரே?

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  இந்த தமிழகத்துக்கு வந்த சோதனை...

 • rramjee - chennai,இந்தியா

  நாற்காலியில் அவரை அமர்த்தி கையில் ஒரு பேனாவை கொடுங்கள். தாத்தா அறிக்கை விடாது இருப்பாரா பார்ப்போம்.

 • Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா

  மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது

 • Vijayaraghavan Tirumalairajan - chennai,இந்தியா

  God only knows and take care who to win.

 • samkey - tanjore,இந்தியா

  உங்களுக்கு ஏன் இந்த வக்ர புத்தி? இதற்குத் தான் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறீரா? கடந்த காலத்தை நாங்கள் மறந்து விடவில்லை. 40 ஆண்டுகால நண்பர் என MGR அவர்களை கூறினீர்கள், அப்படிப்பட்ட நண்பர் உடல் நலமில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது அவர் இறந்துவிட்டதாக நீங்கள் பொய் பேசி அப்போதைய அமைச்சர் ஹண்டே பொய் பேசுவதாக " அண்ட புளுகு ஆகாய புளுகு இதைவிட பெரியது ஹண்டே புளுகு" என அடுக்கு மொழி பேசினீர்கள் கடைசியில் என்ன நடந்தது MGR படுத்துக்கொண்டே ஜெயித்து நலமாக திரும்பி வந்து மீண்டும் முதலமைச்சர் பொறுப்பை எடுத்துக்கொண்டார். இதனை நீங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது மக்களை கேனயன்கள் என நினைத்து விட்டீர்களா? நல்ல தமிழ் இலக்கியவாதியான உங்களுக்கு ஏன் இந்த கெட்ட புத்தி? குடும்ப பாசம் பதவி மோகம் எப்பாடு பட்டாவது அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் என்ற வெறி இவைகளை ஒதுக்கி விட்டு சிறிது சிந்தித்து பாருங்கள் எஞ்சிய காலத்தையாவது மனித நேயத்துடன் வாழ முற்படுங்கள்.

 • Somiah M - chennai,இந்தியா

  தான் திருடி பிறரை நம்பாள் .. இதற்கு வேறு எங்கும் உதாரணம் தேடி அலைய வேண்டாம் போல் தெரிகிறது .

 • Siva Kumar - chennai,இந்தியா

  வயசான காலத்திலே அண்ணா, ஈவேரா என்று சொல்லி, காலத்தை பாஸ் பண்றத விட்டு எதுக்கு அய்யா உங்களுக்கு இந்த வேண்டாத தலைவலி?

 • ஹிந்து தேசியவாதி - Bangalore,இந்தியா

  யார் கேட்கிறார்கள் என்பதை ஒரு கணம் புறம்வைத்து விட்டு, என்ன கேட்கிறார்கள் என்று நடுநிலையாக யோசித்து பார்த்தால், சந்தேகத்தின் கருவில் ஒரு நியாயம் இருப்பதை அறவே புறக்கணித்து விட முடியாது.

 • Jayadev - CHENNAI,இந்தியா

  ஜனங்கள் எல்லோரும் முட்டாள்கள் என நினைத்து இப்படி கூப்பாடு போடுகிறார். சட்டத்தில் முதலமைச்சர் இல்லாத போது கவர்னர் முழு பொறுப்பு ஏற்கவும் வழி உள்ளது

 • Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா

  நீங்க ஏன் கவலைப்படுறீங்க. கவலைய விடுங்க. இந்த வேலையை தம்பி துரையும் எடப்பாடியும் மற்ற கட்சிக்காரர்களும் பார்த்துக் கொள்வார்கள். அதற்காகத்தான் கவர்னர்ஜி இந்த உத்தரவை போட்டுள்ளார். இது ஜே சொன்னதை அல்லது மண்டபத்துல(ஆஸ்பத்திரில) வேறுயாரும் சொன்னதா என்று போட்டு உடைத்து விடுவார்கள். பன்னீருக்கு மட்டுமே பட்டா எழுதிக்கொடுக்க இது என்ன பொறம்போக்கு நிலமா?

 • Tamilnesan - Muscat,ஓமன்

  தமிழக மக்கள் கூட வியந்து போகிறார்கள்........திருட்டு ரயிலில் வந்த தாங்கள் எப்படி உலக மஹா பணக்காரங்க லிஸ்டில் சேர முடிந்தது என்று.......

 • Ghazali Haniff - dammam,சவுதி அரேபியா

  உடம்பெல்லாம் விஷம் கடைசி காலத்திலாவது நல்லது செய்யலாமே

 • Balaji - Khaithan,குவைத்

  அப்படியென்றால் இவர் வேற எதையோ எதிர்பார்த்தது நடக்கவில்லை என்று இவரின் பொருமலிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது..... இவர் எப்போதுதான் திருந்தப்போகிறாரோ தெரியவில்லை........ ஒருவரை குற்றம் சொல்லவேண்டுமானால் நேரடியாக சொல்ல இவருக்கு தெரியாது போல...... எதை சொன்னாலும் அவர் சொன்னார் இவர் சொன்னார், பத்திரிகைகளில் வந்தது என்று யாரையாவது மேற்கொள் காட்டியே பழக்கமாகிவிட்டதா இல்லை நேரடியாக சொல்வதற்கு பயமா என்று தெரியவில்லை..........

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல் நான்கும் //இழுக்க இயன்றது அறம்(பொறாமை.ஆசை,கோபம்,கடுஞ்சொல் ஆகிய நான்கையும் நீக்கிவிட்டு செய்கின்ற எல்லாக்காரியங்களும் அறங்களே ஆகும். நமது மூத்த தலைவர் எந்த வகை என்பதை வாசகர் கவனத்திற்கு

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  தமிழகத்தின் மற்ற கட்சித்தலைமைகள் திருப்தி அடைந்துள்ளன.உமக்கு மட்டும் ஏன் எப்பொழுதும் பொறாமை?

 • ganapathy - khartoum,சூடான்

  எம்ஜிஆர் உடல் நிலை இல்லாத பொது, தற்காலிக முதல்வராய் நான் இருக்கிறேன்...அவர் வந்தவுடன் அவர் காலடியில் நான் முதல்வர் பதவியை சமர்ப்பிக்கிறேன் என்று கெஞ்சிய மனிதர் இந்த மு.க. காலில் விழும் அமைச்சர்களைவிட கேவலமான நிலையை இவர் எடுத்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்....இந்த செய்தியை முன்னர் அறிந்தவர்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்க.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  10 கோடிக்கு மேல் கொள்ளையடித்த அரசியல் வாதிகளுக்கு மரண தண்டனை என்ற சட்டம் இருந்தால் ,இவர் எல்லாம் சினிமா கதை வசனத்தோடு நின்று இருப்பார்.

 • Nellai Vendhan - Tirunelveli,இந்தியா

  முன்பு எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த பொழுது வெட்கமேயில்லாமல் எனக்கு பதவியை தாருங்கள், அவர் வந்ததும் அவரிடமே திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று பிச்சை எடுத்த இந்த தீயசக்தி அப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்திடாதா என்ற நப்பாசையால் நரி வாயில் எச்சில் ஊற காத்திருப்பதை போல காத்திருக்கிறது. உங்க மேல் எவருக்கும் பெரிய மரியாதை கிடையாது ஆனாலும் உங்க வயசு என்று ஒன்று இருக்கிறதே அதற்கேனும் கொடுக்கும் சிலர் இது போன்ற அறிக்கையை கண்டால் கொடுக்க மாட்டார்கள்

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  அண்ணா இறக்கும் தருவாயில் கருணாவை பார்த்து,"அன்புதம்பீ தமிழகத்தை பார்த்துக்கொள் ,சென்று வருகிறேன்" என்று சொல்லி ஒப்படைத்தாரா? அன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் நடந்த அரசியல் தகிடுதத்தங்கள் அன்றிலிருந்து இன்று வரை பார்த்துவரும் பெரியவர்களுக்கு நன்றாக தெரியும். இன்றைய இளைய தலைமுறைக்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம்.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  இன்று பன்னீர் செல்வத்தை பல விதத்தில் குறை காண்பவர் ,1970 ல் முதல்வரான பொது கருணாநிதிக்கு 44 வயது.மெத்த படிப்பும் ஒன்றும் கிடையாது அவர் 5 முறை முதல்வராக தமிழகத்தை ஆளவில்லையா?

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல,கல்வி கேள்வி நிறைந்து மேலான நிலைமையில் உள்ளவர்கள் ஆனாலும் பயனற்றையவையையே திருப்பி திருப்பி பேசுபவரை மனிதர் endraa சொல்லமுடியும்.மனிதப்பதற் என்றுதான் சொல்ல முடியும். இதையே வள்ளுவ பெருந்தகை "பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்//மக்கட் பத்தடி எனல்" =குறள்196 ல் கூறியிருக்கிறார் வாழும் வள்ளுவர் மறந்தது ஏனோ.?

 • Brahamanapalle murthy - Bangalore,இந்தியா

  முதலில் ஒரு மாற்று அமைச்சர் வேண்டும் என்றார். பிறகு அதிலும் ஒரு குற்றம் கண்டுபிடிப்பர். எப்படிவயது ஆட்சியை பிடிக்கு முடியுமா என்று அலைகிறார். 1984 கூட இப்படி கூத்து அடித்தார். மாறவே மாட்டார். மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  வதந்தி பரப்புறவர்களை உள்ள தூக்கி போடுவதாக சொல்றாய்ங்க. காமராஜர் காலத்திலிருந்து 60 ஆண்டுகளாக ஏதாவது வதந்தி பரப்பிக்கிட்டிருக்குற இந்தாள வெளியே விட்டு வைத்திருக்காய்ங்க.

 • jay - toronto,கனடா

  நாளைக்கு இதே கத்தி கலைஞருக்கு வந்தால் ,, திமுகாவை யார் தலைமை தாங்குவது

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  1957 முதல் ஆட்சியில் இருந்து பதவி, பதவி, தலைமைப் பதவி என்றே வாழ்ந்த ஒரு மகான், எது எப்படியோ இல்லையில் இன்றைய அரசியல் கட்சிகள் இவரிடம் பாடம் படிக்கவேண்டும், வந்தே மாதரம்

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  கட்டுமரத்தோட தவிப்பு புரியுது.. திருவிளையாடல் தருமி நெனப்பு வருது.. எனக்கில்லை எனக்கில்லை வரமாட்டான் நம்பாதே.. ஏன் நம்பனும்? ஐய்யயோ இப்படி தனியா பொலம்புர அளவுக்கு வந்துட்டனே.. எனக்கில்லை எனக்கில்லை மெரினா பீச்சுல இறுதியா செட்டில் ஆக எனக்கு யோகம் இல்ல... எனக்கில்லை எனக்கில்லை வரமாட்டான் நம்பாதே.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  அ.தி.மு.க. வின் சார்பில் மாநிலங்களவையில் அண்மைக் காலம் வரை உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே முதல் அமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி வருகிறார் என்பது உண்மை. ஆனால், அவரை பின்புறத்தில் இருந்து ஆட்டி வைக்கும் அந்த தலைவர் யார் என்பதை நீங்கள் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? .அதுபோவட்டும், அந்த அம்மணி, டில்லி விமான நிலையத்தில் உங்க கட்சி எம்பி ஒருத்தருக்கு பளார் பளார் கொடுத்ததும் வக்கீல்கள் பிணியை கலந்து ஆலோசிச்சு சட்டப்படி திட்டப்படி நடவடிக்கை எடுப்போம்ன்னு சொன்னீங்களே, இன்னும் வக்கீல்கள் பிணியை ஆலோசிக்கலையா?

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  கட்டுமரம் , பல்வேறு வதந்திகள் உலாவிட செய்வது உமது கட்சிக்காரர்கள்தான் , எரியும் நெருப்பில் இனமும் எண்ணை ஊற்ற பார்க்கும் உமது வேலைகள் எல்லாம் பலிக்காது கட்டுமரம் ,

 • Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்

  இணைவியோட பொண்ணுக்கு அப்புடியே அப்பன் புத்தி அடுத்தவங்களோட பிரச்னையை தன்னோட சுயநலத்துக்காக use பண்ற வித்தை... அத புரிஞ்சுக்காம இந்த புய்ப்பா ஆட்டம் போடுது..

 • nawshadmn - akkaraipattu,இலங்கை

  பன்னீர் செல்வம் நன்றாக ஆட்சி செய்யுங்கள்

 • murumaha - madurai,இந்தியா

  அறிக்கைவிட்டு பயன் இல்லை. அப்போலோ மருத்துவமனை அனுபவத்தை உங்களுக்கு கூடிய சிக்கிரம் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். மருத்துவமனை அனுபவம் தனக்கு வந்தால் தான் தெரியும் வழியும் நோவும்.............

 • sankar - trichy,இந்தியா

  அம்மாவால் எழுந்திருக்க முடியவில்லை பேசுகிறார் என்ற நிலையில் பன்னீரா எடப்பாடியா என்ற நிலையில் பன்னீர் என்று சொல்லி இருக்கலாம். கண் மட்டும் திறந்திருந்தால் பன்னீர் எடப்பாடி என்று ரெண்டு பெயர் எழுதி அவரை தலை அசைக்க சொல்லி இருக்கலாம் . இல்லை சசி இளவரசி குரூப்ஸ் பன்னீர் என்று முடிவு செய்திருக்கலாம் . அம்மாவின் அமைச்சரவையில் பன்னீர் தானே நிதி அமைச்சர் . அவர் வருவது தானே முறை . இந்தம்மா எப்படி இலாகா இல்லாத முதலமைச்சர் ஆகலாம் என்பது தான் கட்டுமரத்தின் வருத்தம் . உங்க கட்டம் சரி இல்லை தாத்தா

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சரியான கேள்வி, ஆனால் உண்மையான பதிலளிக்க தான் யாரும் இல்லை, எல்லா பதில்களும் வெறும் விதண்டாவாத பதில்களாகத் தான் இருக்கும்.

 • Thamilan - Chennai,இந்தியா

  நான் மிகவும் வரவேற்கிறேன். கேள்வி கேட்க மு க அவர்களுக்கு முழு தகுதியும் உள்ளது.

 • paarppanap paradesi - karur,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)

  தற்காலிகமாக நிர்வாகம் தன்னிடம் வந்துவிடாதா என்ற ஏக்கம் அப்பட்டமாக தெரிகிறது. பன்னீர் செல்வத்துக்கு பதில் மு. க. நிர்வாகத்தை கவனிப்பார் என்று தகவல் வந்திருந்தால் கேள்வியே இல்லாமல் கேபினட் கூட்டத்துக்கு தலைமை வகித்திருப்பார்..

 • T.G.Prasanna - Chennai,இந்தியா

  காவல்துறைக்கு - முதல்வருக்கு கையெழுத்து போடும் அளவு கூட சுயநினைவு இல்லை என்று வதந்தியை பரப்ப முயற்சி செய்கிறார். வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை தாராளமாக மேற்கொள்ளலாம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எனக்கும் அதே சந்தேகம் தான். யாரை கேட்பது என்று தான் தெரியவில்லை.

 • Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ

  அப்பாடா இன்னிக்கு பாட்டு படியாச்சு. இனி நாளைக்கு என்ன கிடைக்கபோவுதோ அதா வச்சு நாளைக்கு ரெண்டு வசவு ரெடி பண்ணனும். தூக்கம் வேற வந்துதொலைக்கமாட்டேங்குது. Hmmm

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  பழ கம்பெனி மூலம் பெற்ற ரூ 200 கோடிக்கு சம்மந்தப்பட்டவர்கள்தான் கையெழுத்து போட்டார்களா?

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  விட்டால் நாற்காலியில் போய் உட்கார்ந்து வேலை செய்ய ஆரம்பித்து விடுவார் போலிருக்கிறது. சந்தேகம்,சந்தேகம் எதிலும்,எப்போதும்.

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசி...சத்தியத்தை கடைப்பிடித்து....நேர்மைக்கும் நியாயத்துக்கு முதல் இடம் கொடுத்து....மக்கள் பணத்தை நெருப்பு போல் பாவித்த சத்யா சீலர் ..அண்ணல் மகாத்மாவின் மறுவடிவம் ....உத்தமபுத்திரன் ...ஒழுக்கத்தின் எடுத்துக்காட்டு சொல்லிவிட்டார் ....ஆகவே அம்மா கை எழுத்து போட்டிருக்க வாய்ப்பில்லை...தமிழக ஆளுநர் பொய் சொல்கிறார்....தமிழக அமைச்சர்கள் பொய் சொல்லுகிறார்கள்....இந்திய ஜனாதிபதியும் ....பிரதமரும் பொய் சொல்லுகிறார்கள்....இந்த தியாக சீலர் சொல்லிவிட்டதால் உடனே எல்லாவற்றையும் மாற்றுங்கள்....இந்த உண்மையின் அவதாரம் திருக்குவளை தீயசக்தியை உடனடியாக தமிழக முதல்வர் ஆக்குங்கள்....அட படுபாவி மனுஷா....உன் வாழ்க்கையில் எப்பவாது என்றைக்காவது உண்மை பேசி இருக்கிறீரா? இன்றைக்கு கூசாமல் ஒரு டுபாக்கூர் அறிக்கை விட்டு உமது கோணல் புத்தியை காட்டுகிறீரே? உம்மைத்தான் பிட்டத்தில் உதைத்து கூட்டி பெருக்கி மூலையில் தள்ளி முக்காடு போட்டு உட்காரவைத்துள்ளார்களே....இன்னும் ஏனய்யா மக்களின் பிராணனை வாங்குகிறீர்? சிவனே என்று இரும்....சீக்கிரமே "பதவி" கிடைக்கும் ...அதுவரை அலையாதீர்....நீர் பார்க்கவேண்டிய கொடுமைகள் இன்னும் இருப்பதால்தான் உமக்கு இவ்வளவு ஆயுளை ஆண்டவன் கொடுத்து இருக்கிறான்....இரும்....அவசரப்படாதீரும்

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  அது அதிமுக கட்சி கட்டுக்கோப்பான கட்சி... அந்த கட்சி இரண்டாம் முறையை தொடர்ந்து இரு முறை ஆட்சிக்கு வர மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள் அந்த கட்சியில் யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தால் உமக்கு என்ன ? ஒரு முறை ஒரு ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் சென்று போலியாக படுத்து பாரும் வெளியே வரும்போது திமுக எத்தனை துண்டுகளாக காட்சி தரும் என...

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  தனக்கு முன்பே, அம்மா அவர்களுக்கு ஏதாவது ஆகாதா என்ற எதிர்பாப்பும் ஆதங்கமும் இவருக்கு.

 • karthi - MADURAI,இந்தியா

  ஐயா அறிக்கையை படித்தாலே போர் அடிக்கிறது.........................

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  பெருசு அவங்க கையெழுத்து போடவில்லை, கைநாட்டு போட்டாங்க, தமிழக கவர்னர் பக்கத்தில் இருந்து சாட்சி கையெழுத்து போட்டார்.போதுமா விளக்கம்.

 • Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  1 ) திருநாவுக்கரசரே இன்று மட்டும் அல்ல ,1984 லிலும் ,உங்களின் இந்த கேள்விக்கு பதில் சொல்லி உள்ளார் . 2 ) 1984 ல் , தமிழக ஆளுநர்,உங்களின் இந்த கேள்விக்கு பதில் சொன்னார். எம் ஜி ஆர் ,அன்றைய முதல்வரின் வாய்மொழி கோரிக்கை ,எழுத்து மூலமாக வைக்கப்பட்டதற்கு சமம். டிராபிக் யை கோர்ட் போக சொல்லுங்கள். 1984 லிலும்,கோர்ட் , பதில் கூறியது . 3 ) மண் மோகன் இருதய அறுவை சீகிச்சை செய்த போது,ஏன் கேள்வி கேட்க வில்லை.

 • B.SATHISH KUMAR - vellore,இந்தியா

  ஐயா மக்களுக்கு உங்கள் மேல் எவ்வளவு சந்தேகங்கள் இருக்கிறது என தெரியுமா, முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை பாருங்கள் பிறகு அடுத்தவர் பற்றி பேசலாம்

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  சட்டசபையை கூட்ட சொல்லுங்கள்.. நீங்களும் செல்ல வாய்ப்பு வந்துள்ளது.. அங்கே போய் கையெழுத்து விவகாரங்ளை பேசி முடிவெடுக்கலாம்.. ஆளுநர் மீது ஒரு வழக்கை தேவையென்றால் தொடுக்கலாம்

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  கருணாநிதி இதை கூட கேட்கவில்லை என்றால் எப்படி, தான் இருக்கிறேன் என்ற சுயவிளம்பரம் தான் ஒரே நோக்கம் - எதோ கேட்டு விட்டு போகட்டும். தமிழ் நாடு அரசும், இந்திய அரசும் செல்வி ஜெ ஜெயலலிதாவிற்கு இவ்வளவு செய்கிறதே அதே செல்வி ஜெ ஜெ வின் அரசியல்,மக்கள் ஆதரவு, தனிமனித பெருமை மாண்புக்கு கிடைத்த வெற்றி தீயசக்தி மக்கள் விரோத தமிழ் விரோத அரசியல் தீவிரவாதி மு. கருணாநிதி என்ன சொன்னாலும் இனி உங்கள் தங்கம் செல்வி ஜெ . ஜெயலலிதா - தான் தமிழ் மக்களின் ஒரே தலைவி என்றுமே அது தான் - மு. கருணாநிதியின் எந்த பேச்சும் இனி எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ வை பாதிக்காது எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ இனி கண்ணசைத்தாலே போதும் அதுவே சொல், கட்டளை, சட்டம் சாசனம் பார்த்தியா மு. கருணாநிதி இது தான் ஒரு மக்கள் ஆதரவில் அரசியல் ஆட்சி செய்யும் தலைவியின் மிக பெரிய சாதனை கையெழுத்து என்ன கை அசைவே போதும் சார் மு. கருணாநிதி ஆட்சி , நிர்வாகம் நடப்பதை பார்த்து மு. கருணாநிதிக்கு வாயிலும், வயதிலும் எறிச்சல் அவ்வளவு தான்

 • rama - johor,மலேஷியா

  தமிழர்களுக்கு நீங்க செய்த துரோகம் காவிரி முதல் இலங்கை வரை செய்த துரோகங்களுக்கு முதல பதில் கூறுங்க

 • R Thanga Maharaja - tuticorin,இந்தியா

  என்னடா நரி இன்னும் ஊளையிடலையேனு பார்த்தேன்.

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  அதெல்லாம் சின்னம்மாவின் ஆசைப்படிதானே ? பன்னீரும் சின்னம்மாவின் ஆளுதான்

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  முன்பு அண்ணா பெரியார் நாவலர் என்று மேற்கோள் காட்டும் மஞ்சள் துண்டு கேவலம் சசிகலா புஷ்பாவை மேற்கோள் காட்டி அறிக்கை விட இந்த கலி காலம் தலைவரை ஆக்கி விட்டதே, ஒரு வகையில் கடவுள் இவரை பழி வாங்குகிறாரோ .

 • C Suresh - Charlotte,இந்தியா

  மக்கள் சசிகலா புஷ்பாவை பொருட்படுத்த வில்லை என்றாலும், இவர் எவ்வளவு ஞாபகம் வைத்து இருக்கிறார்

 • Siva Shanmugam - Salem,இந்தியா

  முதல் அமைச்சர் தனது இலாக்காகளை, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி சிலரிடையே எழுந்துள்ளது. உங்களுக்கு இதில் சநதேகம் இல்லையா. ஒன்று செய்யுங்கள் தங்களது தொல்லைக்காட்சியில் நீங்கள் உண்மை நிலமையை (முதல்வர் இருக்கிற அல்லது இல்லையா) என்று அந்த சிலருக்கு தெரிய படுத்தவும்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  தா கிருட்டிணன் கொலை வழக்கு ...... தினகரன் பத்திரிக்கை எரிப்பு .......இருஊழியர்கள் எரித்து கொலை ..... மாணவன் உதயகுமார் ... ரயிலே வராத தண்டவளத்தில் தலை..இலங்கையில் போர் 10 நிமிடம் உண்ணாவிரதம் ஆஆஆ ராசாவின் நண்பர் சித்திக்பாய் மரணம் கனிமொழி நீரா ராடியா தயாநிதி சன் டிவி கலைஞர் டிவி 200 கோடி பணமாற்றம் 2G மண்ணாங்கட்டி இன்னும் என்னமோ தீராத சந்தேகம் எழுந்துள்ள அய்யப்பாட்டினை அறவே புறக்கணித்து விட முடியாது.

 • PANDIAN - Uthamapalayam,இந்தியா

  just miss தலைவர் எப்படியாவது நாற்காலியில உட்காரனும்ணு பார்த்தார் அதுக்குள்ள மாற்று ஏற்பாடு பன்னிட்டாங்களே ம் அவருக்கு கிடைச்சது அவ்வளவுதான்

 • shan - jammu and kashmir,இந்தியா

  திருட்டு புத்தி போகாது

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  முதல்வரது உடல் நிலை பற்றி அரசுத் தரப்பில் எந்த விதமான அதிகாரப் பூர்வமான அறிக்கைகளும் இதுவரை வராத நிலையில் என்று கூறுவது வடிகட்டிய பொய், ஆளுநர் சந்திப்புக்கு பின் அவர் வெளியிட்ட அறிக்கை அதிகாரப்பூர்வமானது இல்லையா?. அதில் முதல்வர் உடல்நிலை சரியில்லை என்பதையும் உடல் நிலை தெரிவருகிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தாரே. முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்றுமட்டும்தான் கூறியிருக்கிறார்கள் என்று வருத்தப்படும் நீங்கள், அதைத்தவிர வேறெதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, அதை விரிவாக கேட்டு நீர் வைத்தியம் பார்க்கப்போகிறீரா?. அரசு அதிகாரப்பூர்வமாக முதல்வருக்கு உடல் நிலை சரியில்லை என அறிவித்துவிட்டது. என்ன நோய்,எந்த மருத்துவர்,மருந்தின் பெயர் போன்றவற்றையெல்லாம் நாம் கேட்பது சரியல்ல?. ஒரு எய்ட்ஸ் நோயாளிக்குக்கூட தன்னுடைய நோயை யாரிடமும் கூறாமல் இருப்பதற்கான உரிமையுள்ளது எனும் நிலையில், மாநில முதல்வரான அவருக்கு அதுவும் பெண் முதல்வர் எனும்போது தன்னுடைய உடல்நலக்குறையை வெளியிட பல்வேறு தயக்கங்கள் மற்றும் வேதனைகள் இருக்கலாம், அதை அவர் விரும்பி வெளியிட்டால் கேட்டுக்கொள்ளலாமே தவிர, சொல்லித்தான் ஆகவேண்டும் என்று அவருடைய உரிமையில் யாரும் தலையிட முடியாது. முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என எப்போதோ அரசு அறிவித்துவிட்டது.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  எதிர்க்கட்சி தலைவர் வரவேகிறார் இவர் எதிர்க்கிறார் ? ஆமாம் நீங்கள் யார் ? உமக்கு திமுகவில் என்ன பொறுப்பு ?

 • Raman Ganesan - Madurai,இந்தியா

  கண்ணா உங்க அம்முக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  நீரா ராடியா மற்றும் திஹார் ராணி கனிமொழி பேசிய டேப்பை கேட்டிர்களோ? அதில் உம்மை பற்றி வரும் போது உமது மகள் கனிமொழி உங்களுக்கு காது கண்ணு கேட்காது,பார்க்காது என சொன்னது யாரு? இப்படி தினமும் அறிக்கை விடுவது நீங்கள் தான? என எங்களுக்கும் சந்தேகம்

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  புலம்பும்ம்ம் புலம்போ புலம்போ என புலம்பும்... இது தான் உங்களின் விதி.... சம்போ சிவசம்போ... முதல்வர் பதவி இனி உங்களுக்கு இல்லைங்கோ....

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  ஐயோ வடை போச்சே... இடைகால முதல்வர் என தேவை இல்லாமல் வாய் விட்டு பிரச்சனை செய்து அதில் குளிர் காய நினைத்தது மஞ்ச துண்டு .அதற்கும் ஆப்பு அடித்து விட்டார் ஆளுநர் .... எப்டிபுடிடி டிடி ...........

 • sickularist sickular - sikim,பூடான்

  கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க ஆசை கட்டுமரத்துக்கு

 • Subrahmaniyan - Lansing,யூ.எஸ்.ஏ

  அப்போ தலைவிகிட்ட எல்லா தொடர்பையும் கேட்டு தெரிஞ்சு கிட்ட பிறகு இத கேக்குறீங்களா நீங்க? நாகரிகமா விமர்சனம் செய்ய இயலாவிட்டால் விடுங்க பாஸ்

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  தமிழக நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்த நீங்கள், இலாகா மாற்றம் செய்ததும், இவ்வளவு சீக்கிரம் ஒப்புதல் வழங்கிய ஆளுநர் அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் பரிசீலித்திருப்பாரா? என கேள்வியெழுப்பியிருப்பது கிறுக்குத்தனமாக இல்லையா ?. ஒரு ஆளுநரால் இவ்வளவு சீக்கிரம் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து முடிவெடுக்கமுடியாது என கூறும் நீங்கள் ஆளுநரை உடனடி நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்தியது ஏன்?.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  கருணாவே கருப்பு கண்ணாடியில் இருந்து நீங்கள் எதை பார்த்தாலும்... அது கருப்பா தான் தெரியும் உங்களின் எண்ணத்தை போல...

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இவ்வளவு வக்கணையா பேசுகிறவர், 2G கேசில், மட்டும், தனது மனைவியின் உடல்நிலை காரணம் காட்டி, தப்பிப்பதேன்?... முதல்வர் உடல்நிலையை பற்றி வதந்தி கிளப்பிய 52 பேரை கைது பண்ணியதாக செய்திகள் வருகின்றன.... அவர்கள் பாவம் வெறும் அம்புகளாக கூட இருக்கக்கூடும்..... எய்தவன் வழக்கம்போல தப்பித்து விடுவான்....

 • Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா

  கலைஞர் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம், என்னைப்போன்ற பலருக்கும் இருக்கின்றது

 • Raj - bangalore,இந்தியா

  90 வயதிலும் பதவி பித்து பிடித்து அலையும் உங்களுக்கு எல்லாம் குற்றமாகவே தெரியும்.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்படும் குற்றச்சாட்டூ என்பதற்கெல்லாம் அரசு பதிலளிக்கத்தேவையில்லை. இதற்கு பதில் தேவை எனில் அரசிடம் முறையாக விண்ணப்பித்து இக்கேள்விக்கான பதிலை பெற்றுக்கொள்ளலாம்.

 • siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நியாம்தானே நீங்கள் எழுப்பி இருக்கும் சந்தேகம்? முதல்வரின் அறிவுரைப்படி எனில் எவ்வாறு நேரிலா,, தொலைபேசி வாயிலாகவா, எழுத்து பூர்வமாகவா...ஏன் ஒரு வெளிப்படை தன்மை இல்லை அரசின் செயல்பாடுகளில்.? இன்று வரும் அமித்ஷா மற்றும் ஜெட்லீயாவது முதல்வரை சந்திப்பார்களா...? அனுமதி தரப்படுமா...? பொறுத்திருந்து பார்ப்போம்....?

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  நேற்றே கருது வெளியிட்டு இருந்தேன் ,,,,கருணாநிதி அறிக்கை நாளை வரும் என்று ...வந்து விட்டது ....இந்த ஆளுக்கு அப்படி என்னதான் வேணும் ...ஆரம்பத்தில் நிர்வாகம் சரியாக நடக்க மாற்று ஏற்பாடு வேணும் என்றார் ..மாற்று ஏற்பாடு கவர்னர் மூலம் முடிந்து விட்டது ...இப்ப அம்மா கையெழுத்து இட்டாரா என்று புதிய பிரச்சினையா கிளப்பி இருக்கார் .இவருடைய கேள்விக்கெல்லாம் பதில் கொடுத்து கொண்டே இருக்க முடியாது ..இவரின் நோக்கம் வேறு .எப்படியும் சுடலையோ நீங்களோ முதல் அமைச்சர் ஆக சட்டத்திலும் இடம் இல்லை ..அதற்க்கு தேவையான பலமும் இல்லை .இன்னும் 5 வருசத்துக்கு புலம்பி கொண்டு இருக்காமல் உடல் நலத்தை பார்த்துக்கங்க ...எப்படியும் அம்மாவின் ஆட்சிதான் நடக்கும் ..ஆட்சியை நிர்வகிக்க அண்ணா திமுகவில் நிறைய பேர் இருக்கிறார்கள் .

 • gmk1959 - chennai,இந்தியா

  ந பா அவர்கள் ஒரு கதையில் காலம் சிலரை கட்டாயபடுத்தி நல்லவனாக மாற செய்கிறது என்று சொல்வார் ஆனால் வயதாகியும் இங்கிதம் தெரியாமல் முட்டாள்தனமான கேள்விகளை கேட்டு தன வயதுக்கு கிடைக்கும் மரியாதையும் கொல்கிறார்

 • M.S.Badrinarayanan - bangalore,இந்தியா

  சந்தேகம் ஒரு சிலரிடையே ஏற்பட்டுள்ளது . இவருக்கு சந்தேகம் இல்லையே. இதே மாதிரி அறிக்கை பட்டும் படாமலும் விடத்தான் இந்த தலைவருக்கு தெரியும் .... தமிழகத்தின் தலை எழுத்து. தெய்வம் நின்னு கொல்லும்

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  முதல் அமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டிய சசிகலா புஷ்பாவிற்கு இந்த இலாகா மாற்றத்திற்கும் என்ன சம்மந்தம்?

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  The most undesirable political leader in indian history

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்பது வியப்பைத் தருகிறது என்றால், அறிவுரை வழங்கும் அளவிற்கு முதல்வர் சுய நினைவுடன் இல்லை என்று வதந்தியை கிளப்ப முயற்சிக்கிறீரா?.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  சிலரிடையே சந்தேகம் எழுந்துள்ளது எனில், யார் அந்த சிலர்?. உங்களுக்கு சந்தேகம் என்றால் நான் சந்தேகப்படுகிறேன் என கூற வேண்டியது தானே.

 • Arbhas Khan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கே கே க்கு, இதிலெல்லாம் புத்தி நல்ல வேலை செய்யும்.. ஆனா காவேரி ஒப்பந்தம் செய்யணும்னா வேலை செய்யாது.

 • Kanna - Chennai,இந்தியா

  நீ யாரு, எப்பேர்ப்பட்ட டூபாக்கூர்ன்னு இந்த உலகத்துக்கே தெரியும்.... இன்னும் 1967 ன்னு நெனப்புலயே இப்படி வெட்டியா அறிக்கை விடுறாயே பெருசு

 • Balaji - Bangalore,இந்தியா

  அப்படி போடு.

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  அறிவுரை வழங்குவதெற்கெல்லாம் எதற்கு கையெழுத்து?.

 • Kanna - Chennai,இந்தியா

  பெருசு, அவுங்க கட்சியில யாரு வந்து யாருக்கு என்ன இலாக்கா குடுத்தா உனக்கென்ன...நீ என்ன கேட்ட கொஞ்ச நாள் முன்னாடி, அரசு செயல்பாடுகளை கவனிக்க ஆட்களை நியமனம் செய்யுன்னு தானே கேட்ட, அதான் போட்டாச்ச்சே இன்னும் என்னத்த பினாத்துர

 • skandh - chennai,இந்தியா

  கருணாநிதி உலக மகா அறிவாளி இவர்களை அமெரிக்கா அனுப்பினாலும் குறுக்கு வழியில் எப்படி அடிக்கலாம்னு பண்ணும் யோசனை செய்வார் அ.தி.மு.க.,வினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 • rajan. - kerala,இந்தியா

  சபாஸ் தல வசமா மத்தவங்களுக்கு பன்னீர் பொறுப்பு விசயம் ஜெ. கையெழுத்து போலியா என ஒரு புஸுபம் மணத்தை பரப்பி உடுற பாரு இதுதான் உன் அரசியல் கொளுத்தி போடுற வேலை என்பது. நீ படா கில்லி தல உட்கார்ந்த இடத்தில் இருந்து என்னமா விட்டு ஆட்டுற பாரு இது தான் நீ பெரிய வித்தைகாரன் என்பது ?

 • Kanna - Chennai,இந்தியா

  தலைவரே, ராசாத்தி அம்மாளுக்கு நீரா ராடியாவுக்கும் என்ன சம்மந்தம்? சொல்லுங்க தலைவரே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement