Advertisement

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு

புதுடில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. இந்த குழுவில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை பரிந்துரை செய்ய தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் தெரிவிக்க உத்தரவிட்டது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் தங்களது தரப்பு நிபுணர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரியத்தை அமைக்க உத்தரவிட முடியாது. வாரியம் என்பது பரிந்துரை மட்டுமே. காவிரி மேலாண்மை வாரியத்தை தற்போது அமைக்கும் சாத்தியமில்லை. வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை பிற்பகல் 2 மணிக்கு நடக்க உள்ளது.
இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை நாளை பிற்பகல் 2 மணிக்குள் தெரிவிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (247)

  • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

    இதிலிருந்து ஒன்று மட்டுமே தெரிகின்றது ,தமிழன் யாரையும் நம்பக்கூடாது மாறாக விஞ்ஞானிகள் , சட்ட வல்லுநர்கள் ,அரசியல் புள்ளிகள் அனைவரும் ஒன்றிணைந்து நம் ஊருக்குள் நதிபாயும் போதும் ஏரி குளங்கள் ஆறுகள் அனைத்தும் ஒன்றிணைத்து தண்ணீரை கடலுக்குள் விடாமல் பயன் படுத்துவது எப்படி என்று ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் .மற்றும் டெல்டா நிலங்களை(மண்) ஆராய்ந்து அதில் மாற்று பயிர் வளருமா என்று அதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .நிலத்தடி நீரை வளப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் பல வருடங்களாக கரம்பாக/ கரடாக இருக்கும் விளை நிலங்களை அரசு தத்தெடுத்து ,விவசாய விஞ்ஞானிகளின் உதவியுடன் நுண்ணீர் பாசன முறையில் புரட்சியை எற்படுத்த வேண்டும் ,பின் கொஞ்சம் கொஞ்சமாக மக்களும் அதற்கு மாறுவார்கள் தமிழ் மண்ணும் வளரும் .

  • P. Perumal - villupuram,இந்தியா

    மதிப்பிற்குரிய மோடி அவர்களே, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தை வரும் கர்நாடக சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு வஞ்சித்து விட்டீர்களே. நீங்கள் நியாயம் தர்மம் ஆகியவற்றை நிலப்படுத்துவீர்கள் என்று தமிழ் நாடே எதிர்பார்த்தது. ஆனால் அமைதியாக இருந்து கவிழ்த்து விட்டீர்கள். நீங்களும் ஒரு அரசியல் செய்பவர்தான் என்பதை தெரியப்படுத்தி விட்டீர்கள். வாழ்க உங்கள் அரசியல், வாழ்க உங்கள் தர்மம். வாழ்க உங்கள் நியாயம்.

  • மீசநேசன் - chennai,இந்தியா

    சூடு, சொரணை, மானம், வெட்கம் இருந்தால் பி.ஜெ.பி காரனும், காங்கிரஸ் காரனும் தமிழ்நாட்டுல கட்சியை கலைக்கணும். இல்லைன்னா வோட்டு கேட்டு தமிழ் நாட்டுக்கு வரக்கூடாது. இதுல எப்ப பார்த்தாலும் திராவிட காட்சிகளை குறை சொல்றதே வேலையா போச்சு இவனுங்களுக்கு தமிழனை எதிர்ப்பது தான் தேசியம் வெட்கம் இல்லாதவனுங்க

  • Ganesh - chennai,இந்தியா

    கண்ட கருமாந்திரத்துக்கு எல்லாம் கருத்து கணிப்பு செய்யும் தினமலரே , நீ ஒரு பிஜேபி சொம்பு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாய் தமிழருக்கு துரோகம் செய்யும் கட்சிக்கு சொம்பு அடிப்பதை நிறுத்து

  • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

    இனிமேல் அகண்ட பாரதம் என்று ஏதாவது அரை டவுசர் பிஜேபி சொம்பு தமிழ் நாட்டுக்கு வந்தால் ஓட ஓட விரட்ட வேண்டும்

Advertisement