Advertisement

'தல' கூட நடிக்க ஆசை - மனம் திறக்கிறார் நடிகை ரக்ஷிதா

சின்னத்திரையில் வர்ண ஜாலம் காட்டி ரசிகர்களை தன் வசமாக்கியவர். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களை தனது காந்தக் கண்களால் கட்டிப்போட்டவர் நடிகை ரக் ஷிதா. கள்ளம் இல்லா வெள்ளை மனம் கொண்ட கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். வானத்து மின்னலாய் வர்ண ஜாலம் காட்டிய ரக் ஷிதாவின் மனம் திறந்த வார்த்தைகள்.* பிறந்தது..வளர்ந்தது..படித்தது..பெங்களூருவில் பிறந்தேன். வீட்டிற்கு ஒரே பெண். பள்ளி படிப்பு, கல்லுாரி படிப்பு எல்லாம் சொந்த ஊரில் தான். மாஸ் கம்யூனிகேசன் படித்துள்ளேன்.* நடிப்பதற்கு வந்தது எப்படி?படித்து முடித்தபின் பெங்களூருவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினேன். எனது நிகழ்ச்சிகளை பார்த்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பத்து தொடர்களில் நடித்துள்ளேன். தமிழில் உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.* தமிழ் சரளமாக பேசுவதன் ரகசியம்?அடிப்படையில் எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சென்னையில் வந்த பின், 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் நடித்த பின் தமிழ் மீது அதிக காதல் ஏற்பட்டது. அதனால், முறையாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவம் பிரிவோம் சந்திப்போம், இளவரசி, மசாலா குடும்பம், தற்போது மிகப்பெரிய வெற்றி தந்த சரவணன் மீனாட்சி தொடர் எல்லா மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. * எந்த நடிகருடன் நடிக்க ஆசை?தல(அஜித்) கூட நடிக்க ஆசை. இந்த நீண்ட நாள் கனவு நிறைவேற வேண்டும். கமல் சார் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.* பிடித்த நடிகைநயன்தாராவை ரொம்ப பிடிக்கும். எந்த விஷயத்திலும் அவர் தைரியமாக செயல்படுவார். அடுத்து நடிகை அனுஷ்காவை பிடிக்கும்.* காதல் பற்றிய கருத்து...பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது, தினேஷ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். காதலுக்கு நம்பிக்கை அவசியம். அது இருந்தால் அந்த காதல் நிச்சயம் வெற்றி பெறும்.* நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது அவசியமா?நிச்சயமாக கவர்ச்சி தேவையில்லை. அந்த காலத்து திரைப்படங்களில் கவர்ச்சி இல்லையே. அந்த படங்கள் வெற்றி பெறவில்லையா. 20 ஆண்டுகளுக்கு முன் நான் பிறந்திருந்தால் சரோஜாதேவி இடத்தை பிடித்திருப்பேன். * எதிர்கால திட்டம்? பிடித்த நாடுபொதுவாக ஊர் சுற்ற பிடிக்கும். மொரிஷியஸ் ரொம்ப பிடிக்கும். ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டில் ஒரு குளிர்ச்சியான கிராமத்தில் மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே தனியாக ஒரு பெரிய வீட்டை கட்டி, சுற்றிலும் இயற்கை விவசாய தோட்டம் அமைத்து வாழ ஆசை.* தமிழ் ரசிகர்கள் எப்படிஎன்னவென்று சொல்வேன். எனக்கு தமிழ்நாட்டு மருமகள் என்று பட்டம் கொடுத்தவர்கள். தமிழ் ரசிகர்களைப் போல வேறு யாரும் இருக்க முடியாது.* ரோல் மாடல் ரம்யா கிருஷ்ணன் தான் எனது ரோல் மாடல். அவரைப்போல அம்மன் வேடத்தில் யாரும் நடிக்க முடியாது. அவரைப் போல் அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும், என்பது நீண்ட நாள் ஆசை.* அடுத்த சினிமா பிரவேசம் எப்போதுஇயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு என்ற படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அவரது படத்தில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சரவணன் மீனாட்சி தொடரை பார்த்து விட்டு இந்த கேரக்டரில் நீ தான் நடிக்க வேண்டும், என்றார். அவரே என்னிடம் கதையை சொன்னார். அவரது படத்தில் நடிக்க ஆசை. சினிமா வாய்ப்புகள் வருகிறது. தொடரில் பிசியாக இருப்பதால் முடியவில்லை. திறமையான, நடிப்பிற்கு சவாலான ஒரு கதை உள்ள படத்தில் நடிக்க விரும்புகிறேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

    ரொம்ப அவசியமான செய்தி. இந்த பொம்பிளையை பற்றி வாசகர்கள் இவ்வளவு அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன. ரொம்ப ஓவராக இருக்கிறது. அடக்கி வாசிக்கலாமே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement