Advertisement

பழிக்குப்பழி: யூரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி: பாக்., பகுதிக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் யூரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் நுழைந்து, பயங்கரவாதிகள் முகாம்களை, இந்திய ராணுவம் அதிரடியாக அழித்தது.

தாக்குதலைத் தொடர்ந்து, பதற்றம் நிலவுவ தால், எல்லை மாநிலங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப, சம்பந்தப் பட்ட மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாம் மீது, 18ல், பாகிஸ்தான் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில், 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்; இது, நாடு முழுவ தும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

'பாக்., பயங்கரவாதிகளை தாக்குங்கள்' என, பிரதமர் பச்சைக்கொடி காட்டினார்.மேலும், பாகிஸ் தானை தனிமைப்படுத்தும் வகையில்,
பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் நடக்க உள்ள, 'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுக ளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை, புறக்கணிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் நேற்று, எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள், 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' எனப்படும், அதிரடி தாக்குதல் நடத்தி, அழிக்கப்பட்டன; இதில், பயங்கரவாதிகளும், அவர்களுடன் இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

நேற்று அதிகாலை, 12:30 முதல், 4:30 மணி வரை இந்த தாக்குதல் நடந்தது. இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டத் தில் உடனடியாக நேற்று விவாதிக்கப்பட்டது.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,வெளியுறவு அமைச் சர் சுஷ்மா சுவராஜ், ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோச கர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், ராணுவத் தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக், ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல், ரன்பீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குவிகிறது பாராட்டு: நீண்ட காலமாக, பாகிஸ்தானின் அத்து மீறல் கள் நடந்து வந்தபோதும், முதல்முறை யாக, அதன் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி யுள்ள ராணுவத்துக்கும், பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும், போன் மூலமா கவும், சமூக வலைதளங்களி லும் பாராட்டுகள் குவிகின்றன. எல்லையில் பதற்றம் உருவாகி உள்ளதால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, 10 கி.மீ., சுற்றளவில் உள்ள மக்களை வெளி யேற்றும்படி, ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (139)

 • tm sundaram. - bhavani,erode.

  சகோதரர்களே உங்கள் தேசப்பற்றை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் எல்லா வற்றுக்கும் முன்னே வந்து கருத்து எழுதும் பலரை இங்கே கானோம். அது ஏன் என்பது மட்டுமே எங்களின் ஐயம். வேறொன்றும் இல்லை...Jai hindu

 • Suresh Sampath - MD,யூ.எஸ்.ஏ

  A reminder that Surgical Strike hasn't been done for the first time. Only difference is that UPA/Congress didn't hype the issue. Indian army conducted at least two surgical strikes between 2007 and 2013 and they were reported too. But unlike this time around, Manmohan Singh did not stay awake or even if he did, he chose not to leak the information to favourable media outlets to seek cheap publicity or felt the need to prove any other point. Dr Singh also did not employ any Twitter army to build a narrative to project an imaginary image so that this could help him extract the much-needed electoral mileage in the forthcoming elections. Here are the detail on previous surgical strikes conducted by Indian army under Manmohan Singh regime. The following two were reported by media while on other occasions the military strategy of that time simply may not have allowed the army to announce the measures. 2007: Titled as “Surgical Strikes: Indian army's new method to deal with sub-conventional operations” India Today journalist Sandeep Unnithan wrote in January 2014, “Surgical strikes is how the army hopes to fight low-intensity conflicts or 'sub-conventional operations' (SCO) in the new doctrine unveiled by Army Chief General J.J. Singh. It faces its acid test in the recent massacre of over 50 people in Assam by the ULFA. The army has rushed in 3,000 soldiers, but it will certainly not use fighter aircraft to pop smart bombs into insurgent homes or call for artillery strikes on militant hideouts, like other armies in South Asia, because the SCO doctrine says civilians' hearts and minds-and not dead terrorists- are at the centre of the entire operation.” In the same piece, Unnithan went on to describe how a surgical strike by Indian army in November 2006 had helped the troops to eliminate terrorists with considerably less damage to its soldiers. January 2014 Addressing the annual Army Day press conference, the then Indian army chief Gen Bikram Singh admitted killing of 10 Pakistani soldiers in a surgical strike. Gen Singh warned Pakistan that India would respond in equal measure if Pakistan violated any rules. He rejected the perception that the Indian military had not retaliated against the beheading of its soldiers by Pakistani troops last year. He had said, “Let me assure you that action has been taken…If I can invite the attention to the Geo TV report on December 23 which talked of their one officer and nine jawans being killed with 12-13 being wounded. This has happened due to firing of your soldiers on ground.”

 • krishnan - New York,யூ.எஸ்.ஏ

  Jay hind

 • Kamalakannan Paramasivam - Chennai,இந்தியா

  '' சிறு பாம்பு என்றாலும் பெரும் தடி கொண்டு அடி'' என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் எப்பவோ செயல்பட்டிருக்க வேண்டும்.

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  மவனே.... எங்ககிட்டயேவா.....?

 • RAMASWAMY S - CHENNAI,இந்தியா

  CONGRATES CONGRATES TO INDIAN ARMY

 • Selvaraj - Nagercoil,இந்தியா

  மீண்டும் மீண்டும் (இரண்டு நாட்களாக) வாசித்து மகிழ்ச்சியும், பெருமையும் அடையும் அளவுக்கு சிறந்த காரியம்... நல்ல ராணுவத்தை நல்ல முறையில் உற்சாகப்படுத்தவேண்டும். பல நாட்கள் நினைத்ததுண்டு.... முக்கியமான நிகழ்ச்சிகளில் (சென்னை மெட்ரோ திறப்பு, மேம்பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு) இவற்றில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக, நடிகர், நடிகர் நடிகைகளுக்கு பதிலாக - ஏன் ஒரு நல்ல (ஓய்வு பெற்ற/ போரில் காயம் பட்ட) ராணுவ அதிகாரியை அழைக்க கூடாது ? இப்படி செய்தால் ஒரு நல்ல கவுரவமாக இருக்கும் - அந்த வேலைக்கு செல்வாக்கும் பெருகும். நாட்டுக்காக உயிரை அடமானம் வைக்கும் வேலையை சிறப்பாக கௌரவிக்க வேண்டும். அட்லீஸ்ட் government ஸ்கூல் சுதந்திர தினத்துக்காகவாவது அழைக்கலாமே....

 • HARIHARAN - salem TN

  super india.. .but be alert....

 • loving nation - Covai - TN ,இந்தியா

  உயிர்கள் பலியாவது தவிர்க்கப்பட வேண்டும் அது எந்த நாட்டு ராணுவ வீரர்கள் அல்லது பொதுமக்களாக இருந்தாலும் இதில் ஆளும் அரசுகள் தத் தமது பொறுப்போடு நடந்து சண்டை சச்சரவு இல்லாத உலகம் முன் எடுத்து செல்லவேண்டும்

 • Siva - Chennai,இந்தியா

  இதை ஏன் வெளியே சொன்னார்கள் என்று நானும் முதலில் நினைத்தேன். அந்த பாக் பிரதமர் "இப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை" என்று சொல்லிய பின்பு தான் ஓரளவு புரிந்தது. நாம் தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் அறியும், உலக உளவாளி அமெரிக்காவும் பற்றும் பெரிய பிஸ்தா நாடுகளும் அவர்களாகவே தெரிந்திருப்பார்கள். (அவர்கள் உளவு செயற்கைகோள் இதை நிச்சயம் செய்யும்). பாகிஸ்தான் அழுது புலம்பி, வெளிநாடுகள் நம்நாட்டிற்கு அறிவுரை என்று உளறல் எதுவும் செய்யும் முன்னர், நாம் அதை வெளியுலகத்திற்கு 12 மணிக்கு சொன்னோம். (காலை 8 மணிக்கே பாகிஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ் , இங்கிலாந்து, ரஷியா நாடுகளுக்கு செய்தி சொல்லியாகி விட்டது) அனுதாப அலையில் கரை சேரலாம் என்று எண்ணிய பாகிஸ்தான் இதை எதிர்பார்க்கவில்லை. தாக்குதல் நடந்தது என்று சொன்னால், உள்ளூரில் பிரச்சனை ஏற்படும். அதனால் "தாக்குதலே நடக்கவில்லை" என்று மறுப்பு வெளியிட்டனர்.

 • ulaganathan - chennai,இந்தியா

  முதலில் நாம் நம்முடைய இந்திய சிப்பாய்களுக்கு நம் ஆதரவையும் வாழ்த்துக்களையும் சொல்வோம். என் அருமை இந்திய வீரர்களே 100 கோடி இந்தியர்களின்(j.p.prakash போன்ற 30 கோடி துரோகிகளை கழித்து விட்டு மீதமுள்ள 100 கோடி இந்தியர்கள் உங்களை உங்கள் வீரத்தை எப்போதும் பாராட்டுவோம். நாங்கள் நிம்மதியை தூங்க உங்கள் தூக்கத்தை விட்டு காவல் காக்கும் எனதருமை சகோதரர்களே உங்களின் வீரம் எப்போதும் மறக்கடிக்கப்படக் கூடாது. நாம் இப்போது தான் விழித்து கொண்டு இருக்கிறோம். ஆனால் j.P.prakash போன்ற அதிமேதாவிகளும் காங்கிரஸ் என்ற இந்தியாவை காட்டி கொடுத்த கூட்டமும் 50 ஆண்டுகளுக்கு மேல் என்ன புடுங்கி கொண்டு இருந்தார்கள் .எத்தனை தாக்குதல்கள். எல்லாவற்றுக்கும் பிரகாஷ் போன்றவர்கள் என்ன செய்தார்கள் இதுவரை? பார்லிமென்ட் தாக்குதல், மும்பை தாக்குதல் மன்மோகன் சிங் கூட்டமும் இத்தாலிய சோனியா கூட்டமும் இவர்களை பின்பற்றும் பிரகாஷ் போன்றவர்களின் என்ன செய்தார்கள். எல்லாவற்றுக்கும் பயம். என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்காவை கேட்டுக்கொண்டு என்ன புடுங்கினார்கள். இது எல்லாவற்றையும் விட தன்னுயிர் தந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இந்த ஓட்டு பொருக்கி அரசியல் வாதிகளை காத்த வீரர்கள் அந்த மானம் கெட்ட பிரகாஷ் கூட்டத்தை காரி துப்பி அவர்களின் கையாலாகாத தனத்தை காரி உமிழ்ந்து அவர்களின் பதக்கத்தை திருப்பி தந்த போதும் தூங்கியது யார் mr. prakas? கார்கில், சக்தி 98 , இப்ப சர்ஜிக்கல் நடவடிக்கை எல்லாம் யார் ஆட்சியில். எதற்கெடுத்தாலும் காவி கூட்டம் என்று பேசும் நீங்கள் செய்தது என்ன? இப்ப ரிலையன்ஸ் ஆட்சி என்றல் முன்னாள் நடந்தது யார் ஆட்சி? குவாத்ரோச்சி, சோனியா, ராஜிவ், ராஜா சுக்ராம் போன்ற கொள்ளையர்களின் ஆட்சி தானே? அவர்களும் மிட்டல்களுக்கும் வாடியாக்களுக்கும் வதோராக்களுக்கும் மட்டும் நடந்த ஆட்சியை? Mr.Prakash. dont think you are the only man in india know the history.

 • ponnalagu exserviceman - madurai,இந்தியா

  எனது சக ராணுவ வீரர்களின் உன்னதமான வெற்றி வாழ்க வாழ்க வாழ்த்துகள் jaihind

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இந்தியர்கள் : ராணுவ படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் நன்றியுடன். முஸ்லிம் பாகிஸ்தான் அடித்தால் அவர்களுக்கே அதை திருப்பிகொடுத்து விடுங்கள். முஸ்லிம்கள் : மௌனம். மனதுக்குள் “இது காவி பயங்கரவாதம்” காங்கிரஸ் : பப்பு பாராட்டு இப்பொழுது, பிறகு சொல்லப்போவது “பல ஆயிரம் கிராம மக்கள் எல்லையோரத்தில் பி.ஜெ.பி யின் இந்த தவறான நடவடிக்கையினால் தவிக்கின்றனர், இதை மோடி கண்டு கொள்ளவேயில்லை”

 • G.RAJENDIRAN - tamilnadu,இந்தியா

  super, jai hind

 • rajanmuthiah - Nagercoil,இந்தியா

  காவல் தெய்வங்களை வாழ்த்தி வணங்குகிறோம்

 • Ajith Dindigul - Dindigul,இந்தியா

  சூப்பர். ஆனா நாம ரிஸ்க் எடுக்குறோம்னு நினைக்கிறேன்

 • karthikeyan - karur,இந்தியா

  நமது ராணுவத்திற்கு பாராட்டுக்கள். மகிழ்ச்சி ...................

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  வீரதீர இந்திய ராணுவத்துக்கு சல்யூட்... வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்... இந்திய எனது நாடு.. ராணுவ வீரன் இந்தியாவின் நிஜ கதாநாயகன்...

 • rajkumar - chennai,இந்தியா

  இந்திய ராணுவ வீரர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல் வாழ்த்துகள். வாழ்க ராணுவ வீரர்கள் வளர்க அவர்களின் ராணுவ சேவை

 • rajkumar - chennai,இந்தியா

  இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது இதய பூர்வமான பாராட்டுக்கள் , வளர்க உங்களது ராணுவ சேவை வாழ்த்துகள்

 • selva - madurai,இந்தியா

  அந்த ஏரியா பாகிஸ்தான் ஏரியா இல்லை , அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இந்தியா பகுதி .

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  முதலில் பிரதமர் மோடி அவர்களுக்கு பாராட்டுக்கள்... அடுத்து நமது ராணுவ வீரர்களுக்கு..வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...மிக தாமதமான முடிவு இது... இதை முதலிலே நமது பிரதமர் தயவுதாட்சியம்... பாராமல் கையாண்டு இருக்காலாம்....மற்றும் இங்கே கருத்து கூறுபவர்கள்,. முஸ்லீம் ஹிந்து என ஏன் பகுபடுத்துகிறீர்கள்..? இதில் மதம் எங்கேயிருந்து வந்தது..? தமிழ்கத்தில் மற்றும்.. வேறு எந்த மாநிலத்திலும் யாரும் எந்த இந்தியனும் அண்டை தீவிரவாதி நாடு பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டான் ஒரு வேளை... நமது காஸ்மீரில் ஆதரவு இருக்கலாம் ஆனால் இங்கே இல்லை இதை தமிழகத்து சகோதரர்கள் புரிந்து கொள்ளணும்.. நான் முஸ்லீம்.. இது எனது நாடு நான் இந்தியன் மற்ற இந்தியன் எனது சகோதரன்.. இதை நான் பெருமையுடன் கூறுவேன்... சொல்ல நிறைய இருக்கு...

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  செயல் புயல் மோடிஜி க்கு ஜைஹிந்த் ...

 • Prakash JP - Chennai,இந்தியா

  வட இந்திய மீடியாக்கள் மற்றும் அதில் காட்டப்படும் பிஜேபியினரின் கொண்டாட்டங்களை பார்க்கும்போது பாகிஸ்தானுடனான இந்த மோதல் இந்தியாவுக்காகவா, அல்லது பிஜேபிக்காகவா என சந்தேகம் வருகிறது.. உபி போன்ற வட மாநிலங்களில் தேர்தல் வேறு நெருங்கிகிறது.. அதோடு அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு தளவாட தொழிலில் பல புதிய ஒப்பந்தங்களை செய்திருக்கிறது

 • Prakash JP - Chennai,இந்தியா

  சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் - சைலன்ட் மோட் .. இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - சைலன்ட் மோட்.. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்..- என்னது ஊடுருவலா.. எடுறா பீரங்கிய.. சுடுடா துப்பாக்கிய.. அது என்னமோ தெரியல பாகிஸ்தான்னா மட்டும் தேசபக்தி பொங்குது.. அதுவே சீனா இலங்கைன்னா மட்டும் டோஸ் குறையுது..

 • Prakash JP - Chennai,இந்தியா

  பாகிஸ்தானுடனான LoCயை தாண்டி, இந்திய ராணுவ நடவடிக்கை என்பது ஏதோ இப்போது தான் முதன்முறை நடந்தது என்பதை போல சிலர் பரப்புகிறார்கள்.. ஒரு நாள் செய்தியை மட்டும் படிக்கும் அறிவாளிகூட்டமும் அதை அப்படியே நம்புகிறார்கள்.. ஆனால், உண்மை... இதுபோன்ற தாக்குதல்கள் இதற்குமுன் பலமுறை நடத்தப்பட்டுள்ளது... ஒரே வித்தியாசம், மோடி & பிஜேபியை போல அவற்றை விளம்பரப்படுத்தி ராணுவத்தை கொண்டு தேசபக்தி வியாபாரத்தை முன்பிருந்தவர்கள் செய்யவில்லை...

 • Somaiah Ramakrishnan - Bangalore,இந்தியா

  நம் வீரர்களுக்கு பாராட்டுக்கள். நாம் அனைவரும் அவர்கள் பக்கம் இருக்கிறோம் என்பதை நினைவூட்ட வேண்டும். இவர்கள் தியாகத்தை அரசியல்வாதிகள் பங்கு போட்டு கொள்ளட்டும். நம்ம வாழ்த்தும் அன்பும் உதவியும் ராணுவத்துக்கே.

 • M.Sindhu - TIRUNELVELI DIST,இந்தியா

  அவனுகளுக்கு இனி தான் ஆரம்பம்

 • M.Sindhu - TIRUNELVELI DIST,இந்தியா

  சூப்பர்

 • Gunasekar - hyderabad,இந்தியா

  -/ தேசப்பற்றில் இஸ்லாமிய சகோதரர்கள் எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல../- மறத்தமிழன் - Madurai,இந்தியா Super சகோதரரே.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  முஸ்லிம்கள் யாரும் பாராட்டவில்லை என கவலைப்படுபவர்கள் அதுவே நிதர்சன உண்மை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எங்கு சென்றாலும் எந்த தேசமாக இருந்தாலும் எவ்வளவு சமமாக வசதியாக நடத்தினாலும் அந்தந்த தேசிய நீரோட்டத்தில் சேருவது மிக சிலரே. உயிருக்கு பயந்து வரும் பல ஆயிரம் போர் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து இலவச வீடு, அகதி சம்பளம், கல்வி கொடுக்கும் ஸ்விஸ் அரசை, ஸ்விஸ் சட்டங்கள், ஸ்விஸ் கலாச்சாரத்தை எதிர்த்து அதே அகதிகள் ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையில் வீதிகளில் போராட கூடி விடுவார்கள். ஐரோப்பியர்கள் புரிந்து கொள்ள தொடங்கி விட்டனர், இதை இந்திய மக்களும் விரைவில் புரிந்து கொள்வர்.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  பழிக்கு பழி, புலிக்கு புலி, நானும் ரவுடியாக்கும் கேட்டேளா... :)

 • Shanu - Mumbai,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியில் சவ்வு போல் இழுத்தடிப்பதை, பிஜேபி தடாலென போட்டு அடித்து விட்டது. நமது வீரத்தை காட்டினால் தான் எதிரிகள் ஓடுவார்கள். குரங்கை பார்த்து நாம் பயந்தால், அதற்க்கு,, "தான் ஒரு அரசர்" என்று தோன்றும், திருப்பி ஒரு முழி முழித்தால், பயந்து ஓடி விடும். நாம் நாடு எப்போதும் விழித்திருக்க வேண்டும். பாகிஸ்தான், பழிக்கு பழி வாங்கும். சில மாதங்கள் கழித்து பல குண்டு வெடிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் தோல்வி என்பதை ஒத்துக்கொள்ளாது. மற்றொரு நேரத்தில் தன் கோழைத்தனமான வீரத்தின் மூலம், குண்டு வைக்க சாத்தியம் உள்ளது.

 • vadivel - chennai,இந்தியா

  சத்யா சென்னை இந்தியன் is வெரி குட்

 • Ganesh - chennai,இந்தியா

  Thanks a lot for our forces for risking their lives for us. All that we can do it to contribute financially and praise your effort by words. Our army is very capable of destroying the direct enemies who are in Pak, but what to do with those black foxes. And our politicians (i don't want to quote names here) support those anti social elements? How to deal with them. We need to weed off these black foxes before we shoot pak terrorists. Terrorists in a way deserve appreciation as they don't fear for their lives and fight for some motive, but these anti Indian scoundrels within India eat Indian food, get stipend from our tax money and scream "Pak Zindhabad". Those people should be shot before we shoot a terrorist.

 • Shanu - Mumbai,இந்தியா

  இப்படி பாகிஸ்தானை இந்தியா தாக்கும் போது, முஸ்லீம் இந்தியர்களின் மனநிலை உண்மையில் என்னவாக இருக்கும்??? இதற்க்கு முஸ்லிம்கள் பதிலளித்தால் நல்லாயிருக்கும்.

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  நாலு சாத்து சாத்தினால் தான், பாகிஸ்தான்காரன் அடங்குவான். சரியான முடிவு மற்றும் நடவடிக்கை. வாழ்த்துக்கள். நமது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்த போரில் ஈடுபட்ட வீரர்களையும், நமது இந்திய ராணுவத்தையும் மற்றும் அனைத்து வீரர்களையும் வணங்குகிறேன்.

 • 23m Pulikesi - Chennai,இந்தியா

  சபாஷ் சரியான அடி. இதை தான் நான் சென்றவாரம் சொன்னேன்.உள்ள புகுந்து எல்லா தீவிரவாத முகாம்களையும் தாக்குங்கள் என்று.இதற்க்கு பிறகும் பாக் திருந்தவில்லையென்றால், 2017 ஆகஸ்ட் 14 ல் சுதந்திரதினம் கொண்டாட பாக்கிஸ்தான் இருக்காது.

 • Arul Ananthan - Chennai,இந்தியா

  பயங்கர வாதத்தை வளர்க்கும் பாக்கிஸ்தான் -க்கு இது சரியான சவுக்கடி.... பொறுமைக்கும் எல்லை உண்டு ... வாழ்க பாரதம்....

 • P. Kannan - coimbatore,இந்தியா

  பாகிஸ்தானில் இருந்து வருகின்ற ராணுவத்தையோ அல்லது தீவிரவாதிகளையோ எளிதாக சமாளித்து விடலாம் நமது ராணுவத்தால் ஆனால் இந்தியாவில் இருந்து கொண்டு இந்திய பணத்தையும் இந்திய உணவையும் உபயோகித்து பாகிஸ்தானுக்கு ஜே போடும் கூட்டத்தை கண்டு பிடித்து அளிப்பதுதான் மிக பெரிய வேலை ஜெய் ஹிந்து.

 • Saravanakumar - AL Khore,கத்தார்

  வாழ்த்துக்கள் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும்..... தீவிரவாதிகளையும் அடியோடு ஒழித்து அமைதியான இந்தியா உருவாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...........

 • vnatarajan - chennai,இந்தியா

  தன்னுயிரை துச்சமாக நினைத்து சர்ஜிக்கல் ஸ்டரைக்கு மூலம் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவப்படையின் வீரதீரத்தை நினைத்து ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட்டு அவர்களுக்கும் அவர்களுடைய தாய் தந்தையர்களுக்கும் தலை வணங்குகின்றோம் அடுத்த அடி பி ஓ கே நம் வசம் வரவேண்டும் என்று அவர்களை வாழ்த்துகிறோம்

 • mohan - kumbakonam,இந்தியா

  இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களே ,வாருங்கள் .நமது இந்திய ராணுவத்தை மனந்திறந்து வாழ்த்துங்கள் .

 • Prabaharan - nagercoil,இந்தியா

  இந்திய ராணுவத்திற்கு ஒரு சல்யூட் . நம் கெளரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலர் இங்கிருந்து கருத்து எழுதுகிறார்கள் . அவர்களையும் கவனிக்க வேண்டும்

 • R.C.Bhaskar - CHENNAI,இந்தியா

  வாழ்த்துக்கள் எங்களை பாதுகாக்கும் ராணுவத்துக்கு...........

 • Rose Veenus - Koradacheri,இந்தியா

  ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ செய்தி என்று ஒரு தலைப்பில் தினமும் செய்திகளை தினமலர் வெளியிடவேண்டுகிறேன்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த தாக்குதல் மிகவும் நுட்பமாக கனகச்சிதமாக முடிக்கப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதல் பற்றி கடைசி நேரம் வரை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இந்திய ராணுவத்தில் இருக்கும் ஒரு சில கறுப்பு ஆடுகள் வழியாக இந்த தகவல் கசிந்து விட்டிருந்தால் எதிரி சுதாரித்து நமது இந்திய ராணுவத்தினரின் உயிர்கள் ஆபத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும். ஆக மிக கச்சிதமாக இந்த தாக்குதல் நடந்து, 8 பயங்கரவாத முகாம்கள் அழித்தொழித்திருப்பது தான் இதன் மிகப்பெரும் வெற்றி. ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் தருணம் இது. இஸ்ரேல் பாணியில் நடந்திருக்கிறது.

 • Krish - Trivandrum,இந்தியா

  அதிகமான இஸ்லாம் சகோதர்கள் இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு ஆதரவும் மற்றும் கருத்துக்களும் தெரிவிக்க வேண்டும்...........

 • Anand D - chennai,இந்தியா

  V salute the jawans who are in the forefront and saving our nation

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  இந்திய ராணுவத்துக்கு என் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் ...அனைவரும் இதை பாராட்ட வேண்டும் .நாம் வம்பு சண்டைக்கு போக மாட்டோம் ..வந்த சண்டையையும் விட மாட்டோம் .வாழ்க நம் இந்தியா .

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  ஒரு முஸ்லீம் அன்பர்கள் கூட நமது ராணுவ நடவடிக்கைக்கு வாழ்த்து சொல்லவில்லை. மனதை நெருடுகிறது மற்றும் முஸ்லீம் அன்பர்களிடம் (குறிப்பாக இந்திய முஸ்லிம்களிடம்) பழகுவதற்கு அச்சமாகவும் இருக்கின்றது. இவர்கள் நம்மிடம் பேசும்போது உள்ளொன்று வைத்து உதட்டளவில் பழகுகின்றார்களோ என்ற வேதனையும் இருக்கின்றது. யாராவது உண்மையான இந்தியாவை நேசிக்கின்ற (மதத்திற்கு அப்பாற்பட்டு) முஸ்லீம் அன்பர்கள் இதற்க்கு பதில் கூறுங்கள்.

 • RAGAVAN PARAMASIVAM - MADURAI,இந்தியா

  ஜெயஹிந்த் , வந்தே மாதரம் ......

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  இந்தியாடா . அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இது ஒரு சாதாரண தாக்குதல் தான், இதை யூரி ராணுவ முகாம் தாக்குதல் முடிந்தவுடனே கூட நடத்தி இருக்கலாம், இதை யாரும் கேட்க முடியாது, நம்முடைய தற்காப்பு தாக்குதல் என்ற அளவில் மட்டுமே இதை உலக நாடுகள் பார்க்கும், மேலும் நாம் தாக்குதல் நடத்தியது காஷ்மீர் மாநிலத்துக்குள் தான், பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து நாம் தாக்குதல் தொடுக்கவில்லை, இது போன்ற நேரத்தில் நாம் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் மிகவும் அமைதியாகவே வேலைகளை செய்யவேண்டும்

 • heyram - bangalore,இந்தியா

  தக்க பதிலடி.பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  வாழ்த்துக்கள் எங்களை பாதுகாக்கும் குல தெய்வங்களே .... ...எதிரியை அடிப்பது ..கொண்டாடுவதற்கல்ல ..எனவே அமைதிகாத்து அடுத்த இலக்கை அடையுங்கள் ...தீவிரவாத நாய்களை கூண்டோடு அழியுங்கள்..உங்களுக்காக எனது வேண்டுதல்களை தொடர்கிறேன் ..

 • Nagarajan S - Chennai,இந்தியா

  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய விமானப்படையினர் நடத்திய "சர்ஜிகல் அட்டாக்".. இதுதான். குறி வைத்து குறிப்பிட்ட இலக்கை மட்டும் ராணுவத்தைக் கொண்டு தாக்குவது. அதுதான் சர்ஜிகல் அட்டாக் என்பதற்கான சுருக்கமான விளக்கம். பெரிய அளவிலான தாக்குதலாக இது இருக்காகது. மாறாக குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறி வைத்து அந்த இடத்தில் உள்ள இலக்குகளுக்கு மட்டும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல் இது.மற்றபடி பொதுமக்களுக்கோ, பெரிய அளவிலான இடங்களுக்கோ சேதம் ஏற்படாத வகையில் இந்தத் தாக்குதல் அமையும். இது திட்டமிட்ட திடீர் தாக்குதலாக இருக்கும். எதிரியை நிலை குலைய வைக்கும் வகையில் இருக்கும். இஸ்ரேல் இதுபோன் சர்ஜிகல் தாக்குதல்களில் கில்லாடி. 2003ம் ஆண்டு ஈராக்கில் நடந்த போரின்போது அமெரிக்கப் படையினர் இதுபோன்ற தாக்குதல்களைத்தான் நடத்தினர். .

 • ARUN - coimbatore,இந்தியா

  ராணுவ மரியாதை என்பது இறந்த ராணுவ வீரனின் உடல் மீது வைக்கப்படும் மலர் வளையமாக இருக்க கூடாது. உயிரோடு இருக்கும் போது அவன் கழுத்தில் அனுவிக்கப்படும் மாலையாக இருக்க வேண்டும்.அந்த காரியத்தை தான் மத்திய அரசு செய்துள்ளது.இந்த மரியாதையை 17 வருடங்களுக்கு பிறகு மத்திய அரசு வழங்கியிருப்பது பெருமைப்படக்கூடிய விஷயம்.இவ்வளவு கஷ்டப்பட்டு நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு ,நாமும் உள்நாட்டுக்குள் ,நல்ல இந்தியனாக இருந்து மரியாதை செலுத்துவோமாக.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பழிக்கு பாலி என்று சொல்வதை விட பதிலடி கொடுத்து நமது உரிமையை காக்க தொடங்கியிருக்கிறோம் என்று சொல்லலாம். நாட்டின் மீதான எந்தவிதமான தாக்குதலையும் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்போம். ஜெய் ஜவான், ஜெய் கிஷான்.

 • Deiva Prakash - Coimbatore,இந்தியா

  சபாஷ் இந்திய ராணுவமே தலை வண்ங்குகிரோம் அரசியல் தலைமையும் முப்படை தலைமையும் ஒரு செய்ய்தியை கொடுத்துள்ளன. அதை நம் அண்டை நாடு புரிந்துகொண்டால் எல்லோருக்கும் (அவர்களையும் சேர்த்துதான்) நலம். தீவிரவாதத்தை ஒரு கொள்கையாக வைத்திருப்பது அவர்களுக்கே ஆபத்தானது. அதை அவர்கள் புரியவேண்டும். ஏட்டிக்கு போட்டி என்று எதிர் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்குத்தான் ஆபத்து. மோடியின் இந்த அணுகுமுறையை பாராட்டவேண்டும்

 • Selvaraj - Nagercoil,இந்தியா

  மிகவும் அருமையான செயல். இந்த நல்ல நாளில் வேற்றுமைகளை களைந்து, இந்தியர்களாக ஒன்று பட்டு ஒரே குரலாய் நம் ராணுவ வீரர்களையும் (uri இல் இறந்தவர்களையும் சேர்த்து) பாராட்டுவோம். உயிரை நாட்டுக்காக அடமானம் வைப்பது போற்றப்பட வேண்டியது.

 • ILANTHAI S RAMASAMI - chennai,இந்தியா

  இராணுவம் போற்றி போற்றி 'யூரி'யில் தாக்கிச் சென்ற உலுத்தரை முறியடிக்கப் பாரிதைப் பேசும் வண்ணம் பயங்கர வாதிக் கூடம் நேரிலே சென்ற ழித்த நெறிமிகும் இராணுவத்தின் வீரத்தை என்ன சொல்ல ? விவேகத்தை என்ன சொல்ல? அடித்தனர் என்று நாமும் அடங்கியே போய்வி டாமல் எடுத்தனர் முடிவை, வேகம் இயங்கினர், , எதிரிக் கூட்டைப் பிடித்தனர், பயங்க ரத்தைப் பிளந்தனர், மானக் காக்க இடித்தனர், பார தத்தின் இராணுவம் போற்றி போற்றி மோடி எடுத்த முடிவால் பெருமிதம் கூடிற்று, வீரக் குணம். இலந்தை 29-9-2016

 • Madavan Srinivas - chennai,இந்தியா

  இந்திய ராணுவத்திற்கு பாராட்டுக்கள் ....இந்த ஆபரேஷனில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் ...மோடி அவர்களுக்கு பாராட்டுக்கள் .....மேலும் வெற்றி பெற்று தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் அடியோடு ஒழித்து அமைதியான இந்தியா உருவாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

 • VEERA RAJESH - MANNARGUDI,இந்தியா

  வாழ்த்துக்கள்....நண்பா இந்தியன்........

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  புதுமை பாரதம் .... புத்துயிர் பெற்ற பாரதம் .... வலிமை பாரதம் ..... வண்செயல் ஒடுக்கும் பாரதம் .... வாழ்க பாரதம் .....

 • Haja Maideen - Kuwait,குவைத்

  இப்போதாவாது பாகிஸ்தானுக்கு தெரிந்திருக்கும் இந்தியண்டா சும்மா இல்லன்னு வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள் .

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் ராணுவ வீரர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் இந்த சர்ஜிக்கல் ஆபரேஷன் வெற்றிகரமாக முடித்ததற்கு.

 • Ray - Chennai,இந்தியா

  LOC யை நீக்கி சர்வதேச எல்லைவரை திரும்ப கையகப்படுத்தும் வரை நாம் கொண்டாட ஏதுமில்லை

 • krishnamoorthy narayanan - SRIRANGAM. TRICHY,இந்தியா

  எல்லோருக்கும் நல்ல வாழ்த்துக்களை சிரம் தாழ்த்தி சமர்ப்பிக்கின்றேன் . கிருஷ்ணமூர்த்தி நாராயணன்

 • Kavi radha - chennai,இந்தியா

  இந்தியன் டா

 • Gnanam - Nagercoil,இந்தியா

  பாக்கிஸ்தான் எல்லைக்குள் நாம் இன்னும் புகவில்லை. நமது எல்லைப்புற தீவிரவாத முகாம்களைத்தான் நமது வீரர்கள் அழித்துவருகிறார்கள். தேவைப்பட்டால் பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் அவர்களின் வீர சாகசங்களை காட்டுவார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். - ஞானம்

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  நேற்று நாள் முழுவதும் இந்தியா அப்படி தாக்கவில்லைனு பேட்டி கொடுத்துக்கிட்டு இருந்த பாகிஸ்தான் காரனுங்க, நேற்று நள்ளிரவில் திடீர்னு என்ன சொல்றாங்கன்னா நாங்க தாக்குதலில் ஈடுபட்ட ஒரு இந்திய வீரரை பிடித்து வைத்துள்ளோம்...அதுவும் அவர்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்யவில்லை....சாதாரண எல்லைப்புற தாக்குதல் தான் என்று திடீரென்று சொல்கிறார்கள்...அது போக இந்திய வீரர்களின் உடல்கள் சிதறி கிடப்பதாகவும் ஆனால் இந்திய ராணுவம் அவற்றை எடுத்து செல்லவில்லை என்றும் புது கதை சொல்கிறது......இவனுங்க யாரை புடிச்சு வச்சு இருக்கானுங்கனு தெரியல..ஒருவேளை ஆடு மேய்ச்சவனையா இல்லை பாகிஸ்தான் சிறையில் இருந்த ஆளை கொண்டு வந்து இதான் இந்திய ராணுவம்னு சொல்றானுங்களான்னு தெரியல.....

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  இதுமட்டுமல்ல நமது ராணுவத்தின் வீரத்தின் வெளிப்பாடு என்பது சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு போரில் சிக்கி தவித்த இந்தியர்களை அட்டகாசமாக அந்த நாட்டின் உள்ளே புகுந்து பாதுகாப்பாக கொண்டுவந்ததை உலக நாடுகளே பாராட்டின..பல நாடுகள் அந்த சிரியா நாட்டுக்குள் உள்ளே போகவே பயந்த நிலையில் நமது ராணுவத்தின் உதவியை நாடியதை இந்த நேரத்தில் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். பாராட்டும் அதே நேரத்தில் உளவுத்துறையின் செயல்பாட்டினை குற்றம் சொல்லியே தீரவேண்டும்..அவர்களின் செயல்பாடுகளில் குறைகள் இருந்ததாலேயே நாம் 20 வீரர்களை பலிகொடுக்க நேர்ந்தது..வரும் முன்னர் காக்கும் செயல்களில் கவனம் செலுத்த அரசாங்கம் இன்னமும் முயற்சி செய்திட வேண்டும். பழி வாங்குதலை விட நமது ராணுவ வீரர்களை பாதுகாக்க உளவுத்துறையினர் செயல்பாட்டினை உறுதி செய்திட வேண்டும். நமது வீரர்களை காட்டிலும் உலகில் எந்த ராணுவமும் சிறந்ததாக சொல்ல முடியாது என்பதறகு இன்னுமோர் சான்று இது. பாராட்டுக்கள்..இந்திய திருநாடே உங்களை வாழ்த்துகின்றது..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பல இஸ்லாமிய நாடுகள் கொடுக்கும் நண்கொடையை (நன்கொடையை என்று சொல்வதை விட இஸ்லாமை வளர்க்க கொடுக்கும் விலை என்று சொல்லலாம்) வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை (வஹாபி?) ஊக்கம் கொடுத்து வளர்த்து வந்துள்ளது.. அவர்கள் நாடு முழுவதும் பரவியுள்ளார்கள். அவர்களுக்கான பயிற்சி முகாம்கள் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் பல இருக்கின்றன... இவர்கள் ISIS போன்ற பல சர்வதேச தீவிரவாதக்குழுக்களுடன் ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி கொடுக்க முழு நேரத்தயும் செலவு செய்கிறார்கள்... முழு பலத்தையும் உபயோகித்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை பிடித்தால் ஒருவேளை தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு... வேண்டுமென்றால் சர்வதேச படைகளை (பிரான்ஸ் மற்றும் பயங்கரவாதத்தின் கோரமுகத்தை பார்த்த நாடுகள்) இந்தியாவில் இயங்க அனுமதித்து இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஸ்வீட் எடு.... கொண்டாடு.....

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  இருதய கோளாறுடன் வரும் பாகிஸ்தானிய குழந்தைகளுக்கும் இருதயமே இல்லாமல் வரும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கும் இவ்விடம் சிறந்த முறையில் சர்ஜரி செய்யப்படும்.

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  நமது ராணுவத்திற்கு பெரும் பாராட்டுக்கள்... அவர்கள் எப்போதுமே திறமையானவர்கள்தான்... சரியான அரசியல் தலைமையில் அவர்கள் சாதனை படைப்பார்கள்.... அமைதிக்கு நாம் எதிரிகள் அல்ல... ஆனால் நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கு நாம் தலை வணங்கும் கோழைகள் அல்ல..

 • Chidam - Chennai,இந்தியா

  இந்தியன் என்பதில் பெருமை அடைகிறேன்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  தயிரியமாக எல்லைதாண்டி முகாம்களை அழித்ததை பாராட்ட வேண்டும். இஸ்ரயேல் நாட்டு பாணியில் இது போலவே ஒவ்வொரு முறையும் பதிலடி தர வேண்டும்.

 • Chidam - Chennai,இந்தியா

  ஹாய்

 • R.Subramanian - Chennai,இந்தியா

  இந்தியா ராணுவத்தில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் என் உடன் பிறந்த சகோதர்களாகவே நான் பார்க்கிறேன், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திவிட்டு அனைவரும் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

 • Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்

  நல்லதொரு தொடக்கம். சென்ற ஆட்சியின் போது நம் வீரர்களை சிறை பிடித்து சித்ரவதை செய்து கொன்ற போதே செய்திருக்க வேண்டும்.

 • jay - toronto,கனடா

  உரியில் உயிர் இழந்த ராணுவத்துக்கு இது சமர்ப்பணம்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  போர் கொண்டாடப்பட வேண்டிய விஷயமன்று. இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தான் சாதாரண எல்லை துப்பாக்கி சூடு என்று புறந்தள்ளி உள்ளது. இதை அந்த நாட்டு மக்களே, முதலில் நம்ப மாட்டார்கள். அவர்களின் இயலாமையை காட்டி கொள்ளாமல் இருப்பதற்காக அவர்கள் இப்படி கூறி உள்ளார்கள். ஆனாலும், இதை இந்தியாவின் மீடியாக்களும் ராணுவமும் கொண்டாடவேண்டிய விஷயமன்று. அப்படி செய்வது, எதிரியை மேலும் சினம் கொள்ள செய்யும். வெறுப்பை இன்னும் வளர்க்கும். பாகிஸ்தான் ஒன்றும் இலங்கை போன்று சின்ன நாடும் அல்ல. அவர்களால் நம்மை ஜெயிக்க முடியாவிட்டாலும், நமக்கு பெரிய நஷ்டத்தை கொண்டு வர இயலும். போர்க்கால நிலவரம், இந்தியாவின் ஏழு சதவீத வளர்ச்சியை தடுத்து விடும். புர்ஹான் வாணியின் கொலையை கொண்டாடியதன் விளைவு தான், காஷ்மீரின் கலவரம். இப்போது, இந்த தாக்குதலை கொண்டாடினால், பாகிஸ்தானின் அடுத்த தாக்குதலுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். எந்த நாட்டாலும் 24 மணி நேரமும் விழிப்பாக இருக்க முடியாது. சமாதானமாக போவதே, புத்திசாலித்தனம். மீண்டும் மீண்டும் நான் தெரிவிப்பது, பாகிஸ்தான் இழப்பதற்கு ஒன்றுமில்லை. வளர்ந்து வரும் நமக்கு தான், பெரிய இழப்பு. பாகிஸ்தானால், சென்னை, பெங்களூரை தாக்க கூடிய சக்தி உள்ளது. எல்லைக்கு அப்பால், இதுபோன்ற தாக்குதலை, இந்தியா நடத்துவது நல்லது தான். ஆனால் கொண்டாடுவது தான், மிக பெரிய தவறு.

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  நமது பிரதமருக்குத்தான் முதலில் வாழ்த்துக்களை சொல்லவேண்டும் , அவர்தான் மிகவும் தைரியமாக ராணுவத்திற்கு அனுமதிவழங்கினார் ,அதன்படி நமது ராணுவ காப்டென்கள் மற்றும் வீரர்கள் மிகவும் துல்லியமாகவும் தைரியமாகவும் எதிரியின் பக்கத்திற்கு சென்று சுர்ஜிக்கல் ஆப்பரேஷன்ஸ் &தாக்குதல்களை செய்துள்ளவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் அண்ட் வாழ்த்துக்கள் ,இந்திய மக்கள் அனைவரும் இந்த நடவடிக்கைகளை வரவேற்கிறோம்

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  இதே போல முன்பு பர்மாவில் புகுந்து தீவிரவாதிகளை கொன்றதற்கு, அப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை. அது மோடி அரசின் நாடகம் என்று கூறிய அதே வாய்கள், தற்பொழுது பாகிஸ்தானில் தீவிரவாதிகளை கொன்றதையும் நாடகம் என்று தான் கூறப்போகிறார்கள். அவர்கள் வாய் கிழிய பேசலாம். அதை யாரும் கண்டுகொள்ள தேவையில்லை. அதே போல, ஏமனில் ஹவுதி தீவிரவாதிகளை கொல்கிறோம் என்று கூறி, சவுதிக்கு ஆதரவாக சண்டைபோட்டுக்கொண்டிருக்கும் அடிமை பாகிஸ்தானிகளுக்காக, சுமார் ஐந்து பில்லியன் டாலர்களை கொடுத்த சவுதி, இப்பொழுது இறந்த அடிமை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் பணம் கொடுக்கப்போகிறது. அரபு பணம் இருக்கும் வரை, இத்தகைய தீவிரவாதத்தை ஒழிக்கமுடியாது. இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காமல், தற்பொழுது சீனாவும் சேர்ந்துகொண்டு விட்டது. எந்த அளவிற்கு இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி, எண்ணெய்க்கு பதிலாக மின்சாரம் போன்ற மாற்றுவழி வாகனங்களையும் எரிசக்தியையும் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு இந்தியர்களுக்கு நல்லது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement