Load Image
Advertisement

படுகர் சமுதாய கூட்டம்

ஊட்டி : நாக்குபெட்டா படுகர் சமுதாய கூட்டம் வரும் 8ம் தேதி ஊட்டியில் நடக்கிறது.
நாக்குபெட்டா படுகர்குல பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:நீலகிரி மாவட்டத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்து சமுதாய மக்களின் வீடுகளுக்கு சென்று கட்டாய மதமாற்றம் செய்து, இதன் மூலமாக இந்து சமுதாய மக்களிடத்தில் பிளவை ஏற்படுத்தி மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் செயல்பட்டு வரும் நாக்குபெட்டா படுக கிறிஸ்துவ நல சங்கம், கவதமனை, ஒசபதுக்கு, தொலைகாட்சி நடனம் போன்ற அமைப்புகள் மீது நீலகிரி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க கோரியும், நாக்குபெட்டா படுக சமுதாய மக்களின் சிறப்பு கூட்டம் வரும் 10ம் தேதி காலை 10.00 மணிக்கு ஊட்டி சேரிங்கிராஸ் தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடத்தப்படுகிறது. இதில் படுக சமுதாய மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, ராமமூர்த்தி கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement