Advertisement

'குத்துப்பாட்டுக்கு ஆடுறதுன்னா ஓ.கே.,' : அலிஷா சோப்ரா

மின்னல் கீற்றை பின்னலாய் போட்டு பிரமிக்க வைக்கும் அல்லி. புன்னகையை அள்ளி வீசி 'உருக்கு' நரம்பையும் முறுக்கேற்றும் வாசனை மல்லி. ஆயிரம் செம்பருத்தியை அரைத்து தேய்த்த முகம். வெண்ணெய்யால் உருக்கிய வெள்ளிச் சிலை. வெள்ளரியை பிளந்தது போல கள்ளமில்லா அரிசிப்பல் சிரிப்பு. கண்களால் குளிரூட்டும் 'குல்பி' ஐஸ் போல திரையுலகில் வலம் வருபவர் அலிஷா சோப்ரா. தமிழில் 'என்னமா கதை விடுறானுங்க', கன்னடத்தில்
'ரோமியோ ஜூலியட் மஜ்னு', தெலுங்கில் சில படங்கள் மற்றும் விளம்பரம், மாடலிங் என பறந்து பறந்து நடிக்கிறார். 'பிசி ஷெட்யூல்' க்கு இடையிலும் 'தினமலர்' வாசகர்களுக்காக மனம் திறந்தார்.
* உங்களை பற்றி...
சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ். பின்பு ஒடிசா வந்தோம். சென்னையில் ஒருபல்கலையில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன். அப்பா ஆசிரியர். கேரளாவில் நகைக்கடை விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். அழகி போட்டிகளுக்கு நடுவராகவும், போட்டியில் பங்கேற்று பரிசும் வாங்கியிருக்கேன். 2014ல் சென்னையில் 'மிஸ் இந்தியா' வாக தேர்வானேன். தற்போது, அப்பா ஆசைப்படி, நான் நடிக்க வேண்டும் என்பதற்காக நிறைய முயற்சிக்கிறேன்,
அவ்வளவுதாங்க...
* முதன் முதலில் கேமரா அனுபவம் எப்படி?
கேமரா எனக்கு புதுசு கெடையாது... அதனால கூச்சங்கிறதே இல்லாம நடிச்சேன்.
* சென்னையில் படித்தேன் என்கிறீர்கள். தமிழை கொஞ்சி... கொஞ்சி பேசுறீங்களே...
இது கொஞ்சும் தமிழ் இல்லீங்க. கொஞ்சந்தான் தமிழே வருது. என்ன செய்ய... தமிழ் அருமையான மொழி. பேசும்போது நாடி, நரம்பெல்லாம் வேலை செய்யுது. நாக்கை நல்லா சுழற்றிப் பேசணுங்கிறதால அதுக்கு நல்ல பயிற்சியும் கெடைக்குது. இந்தி, தெலுங்குன்னா அப்டியில்லை. அண்ணா, தம்பி, அக்கா, அம்மா, அப்பான்னு நல்லாவே(?) பேசுவேன்.
* முன்னணி நடிகர்களில் யாரோடு நடிக்க ஆசை?
எல்லோருமே தெறமையோடுதான் இருக்காங்க. இருந்தாலும் விக்ரம், சூர்யா எதார்த்த நடிப்புகளில் பட்டைய கௌப்புறாங்க. அவங்களோடு நடிக்க ஆசையா இருக்கு. வாய்ப்பு கெடைச்சா
எல்லாரோடும் நடிக்க ஆசைதான்.
* எந்த மாதிரி கதையை எதிர்பார்க்குறீங்க...
எல்லா கேரக்டரிலும் முத்திரை பதிக்கணுங்கிறது என்னோட விருப்பம். எனது நடிப்பில் ரசிகர்கள் 'சேட்டிஸ்பேக் ஷன்' ஆகணும். அதுவரை எவ்வளவு தெறமை காட்டணுமோ அவ்ளோ காட்டுவேன். சிலருக்கு சென்டிமென்ட்... சிலருக்கு நகைச்சுவை... பிடிக்கும். நடிகை அனுஷ்கா நடித்த 'அருந்ததி' மாதிரி பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் நடிப்பை ரெம்ப எதிர்பார்க்கிறேன். அதுமாதிரி கதையை தேடுகிறேன்.
* கவர்ச்சியை ரசிப்பவர்கள் ஆண்களா, பெண்களா?
கவர்ச்சிங்கிறது கண்களை பொறுத்து மாறுபடும். ஆடை, நகைகளில் உள்ள கவர்ச்சியை பெண்கள் ரசிக்கிறாங்க. உடை மற்றும் உடல் கவர்ச்சியை ஆண்கள் ரசிக்கிறாங்க. ஒரு விஷயத்தை கவர்ச்சியுடன் கலந்து கொடுக்கும் போது ரசிகர்களுக்கு சுவையா இருக்கும்.
* உங்களுக்கு பிடித்த ஆடை சேலை... சுடிதார்... மிடி...?
எனக்கு தமிழ்ப் பெண்கள் மாதிரி சேலை கட்டுறதுனா ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
* சினிமா, இளைஞர்களை அதிகம் ஈர்க்க காரணம்...
தியேட்டர்கள்ல படம் பார்க்க 17 முதல் 30 வயதிற்குள் இருக்கும் இளைஞர்களே அதிகமா வர்றாங்க... இவங்க படம் பார்க்கும்போது போர் அடிக்காமல், கலகலப்பா, 'கிளு... கிளு'ப்பா இருக்கணும். பலர் பொழுது போக்குக்காக சினிமாவுக்கு வர்றாங்க. அவங்களுக்கு புதுமையான கதைகளுடன் நடித்தால் தான் பிடிக்கும்.
* உங்களுக்கு பிடித்த நடனம்...
பல நடனங்கள முறைப்படி கத்துக்கிட்டேன். இருந்தாலும் குத்துப்பாட்டுக்கு ஆடுறதுன்னா ரெம்பவே இஷ்டம். சூர்யா ஆடுவது போல 'ஏக்..தோ...தீன்... கத்துக்கடி...' 'தங்கமாரி... உதாரி...
புட்டுக்கிட்டா... நீ காலி' மாதிரியான பாடலுக்கு ஆட ஆசை.
இவரை alishadash82gmail.com ல் தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement