Advertisement

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெ., உடல்நிலை சீராக உள்ளது

சென்னை: மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் தற்போது நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூச்சுத்திணறல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு 10: 30 மணி அளவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தற்போது முதல்வர் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் வருவதை அறிந்து அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தலைமையிலான குழு காத்திருந்தது. எமர்ஜென்சி பிரிவில் சேர்க்கப்பட்ட முதல்வருக்கு இதயநோய் நிபுணர் டாக்டர். ஒய்.வி.சி ரெட்டி மற்றும் டாக்டர் சத்யமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா, MCCA பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமாக இருக்கிறார். தற்போது ஜெயலலிதா உடல்நலம் சீராக உள்ளது. இயற்கையாக சுவாசித்து வருகிறார். MCCA பிரிவில் 2வது தளத்தில் படுக்கை எண் 2008 ல் முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் அருகில் சசிகலா மட்டும் இருக்கிறார்.
தகவல் பரவியதையடுத்து அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத் துவங்கியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் அவர் வீடு திரும்புவது குறித்து மருத்துவர்கள் முடிவு செய்வர்.
தலைவர்கள் கருத்து : தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரகுமாரும் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா அவர்கள் பூரண நலம் பெற அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மாற்றம் : முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் அப்பல்லோ மருத்துவமனை முன் குவிந்து வருகின்றனர். இதனால் நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை க்ரீம்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு : உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இன்று சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெறுவதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (144)

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  சுப்ரீம் கோர்ட்டில் ஆயாம்மா கொள்ளை வழக்குக்கு தீர்ப்பு என்று எந்த செய்தியும் வரல்லியே.. அப்புறம் என்ன விஷயம்?

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  கர்நாடகாவில் சட்டசபையில் காவிரி நீர் தரமுடியாதுன்னு தீர்மானம் போட்டதுக்கும் ஜெயலலிதா டிஹைட்ரேஷன் ஆனதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  மக்களின் பிரார்த்தனைகளும் செய்த தர்மங்களும், எல்லாம் வல்ல இறைவனின் திருவருளும் ஒன்று சேர்ந்து நீண்ட ஆயுளையும் மனவலிமையுடன் உடல்வலிமையையும் கொடுத்தருளும்

 • senthil - tamil nadu,இந்தியா

  இது எல்லாம் ட்ராமா

 • rajanmuthiah - Nagercoil,இந்தியா

  நல்ல சுகத்துடன் நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிராத்திதிக்கிறோம்

 • Guna - Chennai,இந்தியா

  நல்ல நடிகை

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Long live ammaa with the blessings of the Lord

 • thirumalai - Madurai,இந்தியா

  அம்மா நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகள் சிரிக்க. உங்கள் தோழியும் எல்லாம் வல்ல இறைவன் இருக்கும் வரை உங்களை யாரும் தமிழக மக்களிடம் இருத்து பிரிக்க முடியாது.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  நலம் பெற வாழ்த்துக்கள்.

 • Raj - bangalore,இந்தியா

  விரைவில் குணமடைந்து தமிழகத்திற்கு மேலும் தொண்டாற்ற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் .. ஆனால் தயவுசெய்து கொடநாட்டுக்கு சென்று ஓய்வெடுங்கள்..

 • kumar - chennai,இந்தியா

  அரசு மருத்துவமனையில் ஏன் சிகிச்சை எடுத்துக்கொள்ள கூடாது? அரசு மருத்துவமனையை முதல்வரே மதிக்கவில்லை எனில், கட்சியில் உள்ளவர்களும் மதிக்க மாட்டார்கள். சாதாரண மக்களுக்கு மட்டும் தான் அரசு மருத்துவமனையா? என்ன கொடுமை சார் இது :)

 • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

  விரைவில் குணமடைந்து தமிழகத்திற்கு மேலும் தொண்டாற்ற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

 • venkat Iyer - nagai,இந்தியா

  மருத்துவமனையில் உள்ள கூட்டத்தினை பார்த்து நானும் வியந்து நிற்கின்றேன். ஒரு சிலர், அங்கே வெளியில் பல்வேறு பெரிய ஆட்கள் கூட,சாதாரணமாக நிற்கின்றார்கள்.பல உயர் மருத்துவர்கள் வீட்டிற்கே போகாமல் தங்கி உள்ளார்கள்.டூட்டி மருத்துவர்கள் அனைவரும் தொடர்ந்து அங்கேயே மருத்துவம் மற்றவர்களுக்கு பார்த்து வருகின்றார்கள்.கருணாநிதி மருத்துவ மனையில் இருந்த போது ,இந்த அளவு கூட்டம் வந்தது இல்லை என்று ஒரு உயர் மருத்துவர் கூறுகின்றார்.தனக்கு உடல்நிலை பாதிப்பு குறித்த மருத்துவ விஷயங்களை அம்மா நன்கு அறிந்து வைத்து உள்ளார் என்பதை ஒரு மருத்துவர் மற்றவர்களுக்கு தெரிவித்து உள்ளதாக கூறுகின்றார்.ஹைப்பர் டென்ஷன் ,தவறான செய்திகள் கேட்டு கோபம் வருவதனால் உணர்சசி வசப்படக்கூடாது என்று மருத்துவர் கூறிய காரணத்தினால், பலரை சந்திக்கவில்லை என்பதும் பலரும் வந்து போவதை அவர் டீவியில் பார்த்து வருவதால் அனைத்து அரசியல் பிரமுகர்களும் வருவதாக ஒரு சிலர் கூறுகின்றன. உள்ளாடசி தேர்தல் வருவதால் ,ஜெயா டிவி கேமரா முன் பலர் வேண்டுமென்றே பலர் உணர்சசி பொங்க பேசுகின்றார்கள்.அது எந்த அளவு உண்மை என்பதை கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால்,முன்னாள் அமைசர் வளர்மதி உணர்சசி பொங்க அழுது கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது.என்னால் வெளியே வர முடியாமல் இப்போதுதான் வெளியே வந்து சேர்ந்தேன். அம்மாவை ஒருவர் கூட பார்க்க முடியாது என்பது தற்போதைய நிலையாக நானும் உணர்ந்தேன்.மக்களின் செல்வாக்கு ,அம்மாவிற்கு நல்ல குணம் அடைந்து வெளிவந்து விடுவார் என்று நம்புகின்றேன்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இனி ஓடி ஆடி வேலை செய்யமுடியாது. பதவியை வேறு தகுதியானவரிடம் கொடுத்து விட்டு. ஓய்வு எடுக்க வேண்டியது தான். ஆலோசனை சொன்னால் போதும்.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  நலமுடன் சீக்கிரத்தில் வீடு திரும்ப வாழ்த்துக்கள்

 • Gurusamy Vaithiyanathan - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்

  விரைவில் குணமடைந்து தமிழகத்திற்கு மேலும் தொண்டாற்ற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெயலலிதா நலம், சுகம், கடவுள் கவசம் பெற்று வாழ்ந்து சிறக்க வாழ்த்துக்கள் நலம் உங்களை நீங்காது மேடம் தமிழ் நாடு மக்களின் நலன் பேணும் உங்களுக்கு என்றும் சுகம், நலம், பலம் ஆற்றல் எல்லாம் இந்த மண்ணும் அந்த விண்ணும் உறுதியாகவைத்துள்ளது எழுந்து வா எங்கள் தங்க தலைவி, அழிந்து போகும் தமிழ் மண்ணில் பகைகள் எல்லாம் உன் அரசின் சொல்லில், கட்டளையில், சட்டத்தில், சாசனத்தில் எழுந்து வா எங்கள் தங்கம் அண்ணாதுரை, எம். ஜி.ஆர், பெரியார், காமராஜ் உங்களை சுற்றி சுகம் கவசம் வைத்துள்ளார்கள்

 • BMohan - Bangalore,இந்தியா

  I was shaken seeing this news on TV. For the metro ing ceremony, CM looked tired. She couldnt even stand. Seeing that on TV, that is what I felt. I could see CM has gained lot of love from people. Being a CM, there will always be criticism. But gaining this much prayer and wishes, CM has really marked a place in people's heart.

 • Bakthavathsalam Vathsalam - Chennai,இந்தியா

  இன்றைய தேதியில் தமிழகத்தை ஒருங்கிணைத்து முன்னோடி மாநிலமாக திகழச் செய்யும் தகுதி செல்வி. ஜெ. ஜெயலலிதாவுக்கு மாத்திரம் உண்டு. குணமாக இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்

 • manivannan - chennai,இந்தியா

  அமைதியாக அரசு நடத்தும் , இரக்க குணம் கொண்ட ஜெயா லலிதா எதற்கும் பயப்படாத ,நிதானம் உள்ளவர். நலம் பெற்று நிச்சயமாக , சுகமடைந்து வருவார். ஆண்டவரே ஜெயா லலிதாவிற்கு தேவன் தாமே பரி பூரண சுகம் அருளும்படியாக வேண்டுகிறேன். ஆமென்

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  முதல்வர் அம்மா அவர்களே உங்களுக்கு தமிழக மக்களின் வேண்டுதல் என்றைக்கும் உண்டு நீங்கள் பூரண குணம் பெற்று இந்த தமிழகத்தை நல்ல வழி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் தீயசக்திகளை தமிழகத்தில் இருந்து அடியோடு விரட்ட வேண்டும்

 • Paranthaman - kadappa,இந்தியா

  புரட்சி தலைவி அம்மா விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உச்ச சுக்கிரன் கேந்திரமடைந்து தன் சொந்த வீட்டில் இருப்பது மாளவிய யோகம். அவரது ஆயுள் 100 க்கு மேல் தாண்டியும் அவரை திடகாத்திரமுடன் வாழவைக்கும். சீதள உடம்புக்காரர். ஜுரம் தலைவலி என சில்லறை நோய்கள் வந்து போகும். ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து எதிர் கட்சி கொடுத்து வரும் தொல்லையால் சற்று அமைதி இழந்துள்ளார். அவ்வளவே. பதினோராம் வீட்டதிபதி மூன்றாம் வீட்டில் இருப்பதால் சர்வ சக்தி இறையருள் பெற்றவர். இவரை எதிர்ப்பவர்கள் வேறோடு அழிவர். மாற்றுக் கட்சியினரின் மந்திர மாந்திரீகங்கள் எதுவும் அவரிடம் பலிக்காது.

 • manivannan - chennai,இந்தியா

  அவர் நம் முதன் மந்திரி . அவர் நலமடைய பிரார்த்திப்பதும், விரும்புவதும் ஒரு நாகரிக மான , மனித தன்மையான செயல். அதை விட்டு இந்த இடத்தில் பக்கம் பக்கமாக புத்திமதிகளும் சொற்பொழிவுகளும் எதற்கு? ஜெயலலிதா பூரண குணமடைய மனப்பூர்வமாக இறைவனை வேண்டுகிறேன்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  100 வருடம் வாழ வாழ்த்துகிறேன் ...இதை 100 ஆவது கமெண்ட் ஆக போடவும்...

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  காணொளி காட்சி மூலம் நேற்று அதானி குழும சூரிய மின்சார திட்டத்தை தொடங்கி வைக்கும் காட்சிகளில் முதல்வர் மிகவும் தளர்வுடனே இருப்பதாகப் பட்டது...இப்போது, இந்த செய்தி...ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்....கட்சிப் பணிகளை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு, வாக்களித்த மக்களுக்காக முதல்வர் பதவியை மட்டும் கவனிப்பது நல்லது.....

 • Senthil Rajan.D - Palladam,இந்தியா

  முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுகிறேன் ...

 • nimmi - Dindigul,இந்தியா

  நலம் பெற்று வரட்டும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நலம் பெற பிரார்த்தனைகள்...

 • Prakash JP - Chennai,இந்தியா

  உண்மையிலேயே ஜெயா அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால், விரைவில் நலமடைய விருப்பங்கள்... ஆனாலும், ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்டதற்கு வெறும் காய்ச்சல் , நீர்ப்போக்கு தான் காரணம் என்பதை ஏற்க முடிவில்லை... தனக்கு 17 வகையான நோய்கள் உள்ளது என கோர்டில் குறிப்பிட்டு ஜாமின் பெற்றவர், இதுவரை பல ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதியே ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 17 நோய்களுக்கும் போயஸ் தோட்டத்திலும், கொடநாட்டிலும் சிகிச்சை பெற வசதிகள் உள்ளன. டயாலிஸஸ் செய்துக் கொள்ள, உயர் சிகிச்சை அளிக்க போயஸ் இல்லத்திலேயே அதி நவீன வசதிகள் உள்ளது.. இந்நிலையில், சாதாரண காய்ச்சலுக்கும், நீர்ப்போக்குக்கும் சிகிச்சை அளிக்க போயஸ் பங்களாவில் வசதி இல்லாமல் அப்பல்லோவில் அனுமதி என்பது தான் நம்பமுடியவில்லை..... பலர் சொல்லவது போல, நெருங்கும் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தள்ளி வைக்கவோ, அல்லது வேறு வகையான தீர்ப்பை பெறவோ நடைபெறும் சம்பவங்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

 • சிந்திக்கும் வடிவேலு - Bangalore,இந்தியா

  விரைவில் குணமடைந்து மக்கள் பணி ஆற்ற கடவுளை பிரார்த்திக்கிறேன்.

 • kaliuga varadhan - chennai ,இந்தியா

  தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு ஜெயலலிதா அவர்கள் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

 • kurinjikilan - Madurai,இந்தியா

  விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்..

 • Jagatheeswaran Dhandapani - Coimbatore,இந்தியா

  தமிழக முதல்வர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இருந்தால் அவர் மீது இன்னும் மரியாதையை கூடி இருக்கும்.

 • 23m Pulikesi - Chennai,இந்தியா

  ஒருவர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலம் பெற வேண்டும் என்ற கருத்துக்களுக்கு குறைந்தது 10 க்கு மேற்பட்ட single stars தரப்பட்டுள்ளது. இது சரியா? இது மனித மனங்களிலுள்ள வன்மத்தையே காட்டுகிறது.நலம் பெற கருத்து சொல்ல வேண்டாம் குறைந்தபட்சம் இந்தமாதிரியான வன்மத்தை வெளிப்படுத்தாமல் இருக்கலாமே.மனிதநேயம் செத்துக்கொண்டுஇருக்கிறது.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இறைவன் அருளால் நலம் பெறுவார்

 • sekar - Chennai,இந்தியா

  அரசு சிறையில் இறந்த ராம்குமார், அரசு மருத்துவர் தான் பரிசோதிக்க வேண்டும் என்று சொன்னவர் , இவர் மட்டும் எப்படி தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டும் , அரசு ஊழியர் அரசு மருத்துவமனையில் தான் சிகிக்சை பண்ண வேண்டும் சட்டம் கொண்டுவந்தால் , எல்லா அரசு மருத்துவமனையும் நன்றாக இருக்கும் .

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  Wishing you a speedy recovery... பணிவான வணக்கங்கள்

 • raj - chennai,இந்தியா

  அம்மா விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

 • JOKER - chennai,இந்தியா

  தமிழக மக்களின் பிரார்த்தனை அம்மா அவர்கள் விரைவில் பூரண நலத்துடன் வருவார்

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  அம்மாஜி நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ...சீக்கிரம் நலம் பெற்று வீடு திரும்பி பணி தொடர இறைவன் அருள் புரிவார்

 • Chandrasekaran Padmanathan - mahe,செசேல்ஸ்

  தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் விரைந்து நலம் பெற இறை அருள் நிறைய வாழ்த்துக்கள்

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  நிக்கிற முகர கட்டைகளை எல்லாம் பாத்தா அவ்வளவு நல்லவனுக மாதிரி தெரியலையே

 • Srinivasan Rengasamy - dindigul,இந்தியா

  நல்ல மனுஷி ,சிவனருளால் பூரண குணமாகி விரைவில் பண்ணிக்கு திருப்பி வரவேண்டும்

 • செந்தில் - சென்னை,இந்தியா

  தங்கமே சீக்கிரம் மீண்டு வாருங்கள்.

 • praba karan - sINGAPORE,சிங்கப்பூர்

  ஜனநாயக நாடு என்றால் ஏன் இவருக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும். இவரை அரசு மருத்துவமனையில் அல்லவா சேர்த்து இருக்க வேண்டும். முதலமைச்சர் ஒரு சாதாரண மனிதர் என்பதை கூட மக்களும், ஊடகங்களும் மறந்துவிட்டது போல தெரிகிறது. இந்தியா ஜனநாயக நாடா என்பது உண்மையான கேள்வி. முதல்வருக்காக மற்ற நோயாளிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அதிலும் இந்த கட்சி தொண்டர்கள், போலீஸ் பாதுகாப்பு போன்ற பல விஷயங்கள் என்னை போன்ற சாமானியனை பதைப்புக்கும் பரபரப்புக்கும் உள்ளாக்கும். வி ஐ பி கலாச்சாரம் முற்றிலும் ஒடுக்கப்பட்ட வேண்டும். வாசகர்களே உங்களுக்கு ஒருவன் அவன் செய்த தவறுகளால் பிடிக்கவில்லை என்றால் அவனின் அவனை போன்ற எதிரிக்கு தயவு செய்து சப்போர்ட் செய்யாதீர்கள். தவறு அவன் செய்தாலும், அல்லது அவன் எதிரி செய்தாலும், இந்த மாதிரி ஆட்களை விட்டு விட்டு நல்ல மனிதர்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள். உங்களுடைய பிடித்தம், ரசிகத்தனம், அவனின் முகத்துதியை தயவு செய்து ஆதரிக்காதீர்கள். இது கண்டிப்பாக நம் குழந்தைகளையும் கடுமையாக பாதிக்கும். ஜெயலலிதா எதிரிகள் கருணாநிதிக்கும், கருணாநிதி எதிரிகள் ஜெயலலிதாக்கும், இந்துத்துவ எதிரிகள் பெரியாருக்கும், பெரியார் எதிரிகள் இந்துத்துவத்துக்கும் சப்போர்ட் பண்ணாதீர்கள். நியாயமாக தர்மமாக இருக்க நாம் முயற்சி பண்ணலாம்.

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட கூடிய ஒரே தலைமை ...அவருக்கு ஏதும் ஆகாது...

 • Kailash - Chennai,இந்தியா

  1008 வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலைகளில் உங்களை விட வேறு சிறந்த தலைவர் இல்லை. விரைவில் குணம் பெற்று வாருங்கள். கடவுள் அருள், மக்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  நலமுடன் இருக்க வேண்டுகிறேன் .

 • Ram Mohan Thangasamy - Chennai,இந்தியா

  அம்மா நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் .... நீவிர் வாழ்க பல்லாண்டு. நன்றி வணக்கம்.

 • Ramani Krishnaswami - Chennai,இந்தியா

  Wishing the C M a speedy recovery from illness

 • sekar - Chennai,இந்தியா

  ஒரு முதல்வரை அரசு மருத்துவமனையில் தான் சிகிக்சை அளிக்கவேண்டும் தவிர , அதில் தான் எல்லா உதவியும் இருகும் . இவர் தனியார் மருத்துவ மனதில் சேர்ந்து, அரசு மருத்துவர்களை மதிப்பது இல்லை என்று தோன்றுகிறது .

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இதனால் அறியப்படுவது தமிழகத்தில் அரசு மருத்துவமனை , அரசுகாவல்துறை இன்னும் அரசுநடத்தும் எல்லா சேவையும் தனியார்த்தேவைக்கு நிகரல்ல, தனியார்சேவை வசதி உள்ளோருக்கு அரசுசேவை இல்லாதோருக்கு அப்புறம் ராம்குமார் போன்ற சிறையில்செத்து, மருத்துவப்பரிசோதனைக்கு காத்திருக்கும் பிணம்களுக்கும்தான் . அதான் பிணப்பரிசோதனைக்குகூட அரசுமருத்துவர் வேண்டாம் என்று வழக்கு நடக்குது . மருத்துவமனையிலிருந்து திரும்பிவந்து ஜெயா கவனத்தில்கொண்டு அரசுசேவைகளை தரப்படுத்துவார் , தனியார்சேவைகளை ஆதரிப்பார் என்றுநம்புவோம் .

 • p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா

  முதல்வர் விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும்,

 • குரங்கு குப்பன் - chennai,இந்தியா

  சென்னையில் அரசு மருத்துமனை இல்லையா ?. மோடி ஜி அரசு மருத்துவமனைக்கு தான் சென்றார் அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது

 • partha - chennai,இந்தியா

  சீக்கிரம் நலம் பெற்று வீடு திரும்பி பணி தொடர கடவுள் அருள்வார்

 • Jayaraman M V Jayaraman - Noida,இந்தியா

  இன்றைய தேதியில் தமிழகத்தை ஒருங்கிணைத்து முன்னோடி மாநிலமாக திகழச் செய்யும் தகுதி செல்வி. ஜெ. ஜெயலலிதாவுக்கு மாத்திரம் உண்டு. குணமாக இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திப்போம்...

 • krishna M.Shanmugam - Rameswaram

  நலமுடன் இருக்க பகவானை வேண்டுவோம்

 • Gopi Sumu - pondy,இந்தியா

  நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  இவர் ஒரு சுகர் பேஷண்ட் , நெறைய தண்ணீர் குடிக்கணும் டயட் கட்டாயம் பாலோ பண்ணியே ஆகணும் , நெறைய நடக்கணும் , உடற்பயிற்சசியும் அவசியம் தமிழ்நாட்டுலே இப்போ நெறைய பிவேர் இருக்கு மழையும் பெய்யுது அவர்கல் ரொம்பவே கவனமா இருக்கவேண்டும் ,

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கர்நாடக பிரச்சனையிலிருந்து நழுவுவதற்கு ஓர் காரணமோ? இல்லையேல் , கர்நாடகர்கள் திட்டியதால் வருத்தமோ?

 • venkat Iyer - nagai,இந்தியா

  அம்மா என்ற வார்த்தையை சொல்ல வைத்துவிட்டாய் .விடுவோமா எங்கள் பாசத்தினை.கண்ணீர் ,என்னை அறியாமல் தாரை தரையாக வருகின்றது.உனக்கு மோசமான உடல் நிலையில் நீங்கள் அவதி படுவது ,நாங்கள் அனைவரும் அறிந்ததே.இதில் ஜூரமும் உங்களை வாட்டி வதைக்கின்றதே.இது தெரியாமல், அம்மா வாய் முடி மெளனமாக இருக்கின்றார் என்று சொல்லும் பன்னாடைகளுக்கு ஈவு இரக்கமே கிடையாதா?மற்றவர்கள் உங்களை மக்கள் சேவையில் தவறாக செய்கின்றார் என்று கூறும் போது துணிந்து கேட்கின்றேன். ஏனெனில், நீ எனது அம்மா அல்லவா?.இன்று உமக்கு உடல்நிலை சரியில்லாத போது ,மருத்துவ மனைக்கே வந்து வெளியில் அழுகின்றேன்.ஏனெனில் எனக்கு அம்மா அல்லவா?அந்த அம்மா என்ற வார்த்தை உணர்வுகளை தூண்டி அழ வைக்கின்றது. கோடானு கோடானு மக்களுக்கு தலைவனை மிஞ்சிய ,எங்கள் குடும்ப உறவாக 'அம்மா வாக இருக்கின்றாய்.நீங்கள் நாளையே வீடு திரும்புவீர்கள்.உங்களுக்காக ,நான் ஆயிரத்து எட்டு முறை காயத்ரி ஜெபம் செய்து உள்ளேன்.நான் வணங்கும் கடவுள் உங்களை ஆரோக்கியமுடன் வீட்டிற்கு அனுப்புவான்.வாழ்க வளமுடன்

 • ilamaran - vellore,இந்தியா

  மீண்டும் வரவிருக்கும் 5 ஆண்டுகளின் முதல்வர் நீங்கள்தான் உங்களுக்கு ஏதும் நேராது

 • Kannan - Oorudaiyaappatti,இந்தியா

  தமிழகத்தின் தங்க தலைவி, அம்மா, அவர்கள் நலம் பெற்று நல்லாட்சி தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  உடல் நலம் காக்கவும் நாட்டு நலனுக்காகவும் பதவி விலகி அடுத்த தலைமுறைக்கு வழி விடுங்கள், ஜெயா கருணா அடிவருடிகள் இல்லாத தமிழகமே உருவாக உதவுங்கள்

 • Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்

  திமுகவின் மேலிடம் அப்போல்லோ மருத்துவ மனையில் பெரிய தலைகளை பிடித்து நிமிடத்துக்கு நிமிடம் அம்மாவின் உடல் நிலை பற்றி அறிக்கைகள் கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள் என்பது உறுதி என்பது போல, அவர் பரி பூரண குணம் அடைந்து தமிழ் மக்களை வழி நடத்துவார் என்பதும் உறுதி.

 • Ram - ottawa,கனடா

  ஒரு அரசு அதிகாரி ஏன் அப்போல்லோ போகவேண்டும், நம்ம அரசு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாம். இதை பார்த்தால் அரசியல்வாதிகளுக்கே அரசு டாக்டர்கள் மீது நம்பிக்கையில்லாததை காட்டுகிறது , சாதாரண மக்கள் சென்று கஷ்டப்படட்டும்.

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  இன்றைய அரசியல் சூழலில் தமிழகத்தின் ஒரே நம்பிக்கை அம்மா பூரண குணம் பெற்று தமிழகத்தை தொடர்ந்து வழி நடத்தி செல்ல வேண்டும்.

 • JOE TARANTULA - Chennai,இந்தியா

  CM அவர்கள் உடல் நலம் பெற ஆண்டவன் அருளட்டும். சென்னையில் அப்பல்லோவில் அட்மிட் செய்வதினால் பார்ட்டி ஆட்கள் மற்றும் மந்திரி எம்பீ எம்மெல்லே இவர்கள் அங்கு சென்று மற்ற நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர் மற்றும் நோயாளிகளுக்கு துணையாக வந்திருப்போருக்கு அசௌகரியங்கள் செய்வார்கள் என்பது திண்ணம். இதை காவல் துறைதான் சமாளிக்க வேண்டி வரும்.

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  அம்மா நீங்கள் நீடுழி வாழ வேண்டும் .ஹிந்து துவேஷி என தன்னை பெருமை படுத்தி சொல்லும் கருணாநிதியின் கைகளில் தமிழகம் சீரழிய கூடாது. ஹிந்துக்களின் ஒட்டு வேண்டும் ஆனால் ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ் நாளில் வாழ்த்துக்கள் சொல்லாதவர் - ஹிந்துக்களை திருடன் என்றவர் கருணாநிதி - ஹிந்து மதத்தின் சம்பிரதாயங்களையும் /சாஸ்திரங்களையும் அரச சர்ப்ப விஷமாக கருதுபவர் கருணாநிதி - ஆதலால் தான் நெற்றியில் குங்குமம் ,மற்றும் திருநீறு பூசி சட்ட சபை வந்த அவரது M.L.A வை சட்ட சபை வரக்கூடாது என ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்தவர் கருணாநிதி. ஹிந்து கடவுள் அயோத்தி ராமன் எந்த டுடோரியல் காலேஜ் சென்று படித்தவன் என ஒருமையில் ஏசியவர் .அத்தகைய ஹிந்து விரோதி மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து குறைந்தது 50 வருடங்களேனும் தமிழக முதல்வராக ஆட்சி செய்ய வேண்டும் .

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ....

 • குரங்கு குப்பன் - chennai,இந்தியா

  மறுபடியும் பன்னீருக்கு அதிர்ஷ்டம்

 • Thirugnanam Karuppanan - chennai,இந்தியா

  முதல்வர் அம்மா அவர்கள் பூரணகுணம் பெற்று வீடு திரும்பி, நீடுழி வாழ ஆண்டவனை வேண்டுகின்றேன்

 • Thiru - Melbourne ,ஆஸ்திரேலியா

  பெயரில் செல்வத்தை வைத்திருப்பவர்,சசியின் மைண்ட் வாய்ஸை உணர முடிகிறது.

 • jayapal - ariyalure,இந்தியா

  அம்மா நல்ம்பெற இறைவன் வேண்டுகிறேன்

 • Vikky - Singapore,சிங்கப்பூர்

  கலைஞரை, தள்ளுவண்டி , குடுகுடுப்பைக்காரன் , வித்தை காட்டுபவர் , மஞ்சத்துண்டு , என்றெல்லாம் கிண்டல் செய்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் , முதுமை என்பது எல்லோருக்கும் ஒருநாள் வரும் ....

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  தமிழக நலன் காக்க இறைவன் அருளோடு மக்களின் ஆசியோடு அன்பு தொண்டர்களின் பிரார்த்தனையில் மீண்டும் நலமோடு வீடு திரும்புவார் அம்மா அவர்கள்..எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றென்றும் அம்மா அவர்களுக்கு உண்டு. நீடு வாழ்வார் பல்லாண்டு..

 • Rajesh - Chennai,இந்தியா

  உடல் சுகவீனத்தால் அல்லல் படுபவர்களை, நமது பண்பாட்டின் படி யாரும் தயவு செய்து கேலி, கிண்டல் செய்ய வேண்டாம். முதல்வர் நலம் பெற பிரார்த்திப்போம்.

 • GURUMANI - pollachi

  நலம் பெற இறைவனை பிறாத்திகிறேன்

 • Velvendhan - Jurong ,சிங்கப்பூர்

  Wishing யு good health soon you service இந்த Tamil Nadu

 • Baskar - Paris,பிரான்ஸ்

  நலம் பெற ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம்.வாழ்க நலமுடன்.

 • naankabali - kovai,இந்தியா

  இந்த செய்தியை கேட்டு இப்பவே ஒரு குள்ள நரி நாக்கை தொங்க போட்டிருக்கும்.

 • naankabali - kovai,இந்தியா

  நலம் பெற பிரார்த்தனைகள்.

 • Kalyanasundaram Kupuswamy - Chennai,இந்தியா

  விரைவில் நலமடைந்து மக்களுக்கு நல்லாட்சி தொடர ஆண்டவனை பிரார்த்திப்போம் .

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  அம்மாவின் சுகவீனம் கருணாநிதிக்கும் தி மு காவுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் .இப்பவேய் யாரை அண்ணா தி மு க வில் இருந்து விலைக்கு வாங்கி ஆட்சி அமெய்க்கலாம் என்று நித்திரை கொள்ளாமல் கணக்கு போடுவார் .யாருக்கு மந்திரிப் பதவி ,யாரை வெளியேற்றவேண்டும்,இன்னும் எப்படி தமிழ்நாட்டை சுரண்டலாம் என்றும் கணக்கு போடுவார்கள் இந்த ஊழல்வாதிகள் .ஆனால் அம்மா நல்ல சுகதேவியாக வீடு திரும்புவார் .அப்ப கருணாநிதியின் திட்டங்கள் எல்லாம் பொடியாகிப் போகும்.அம்மாவின் சுகமாக வர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாயாக .

 • mnathumitha - CA,யூ.எஸ்.ஏ

  அம்மா நீங்களே எங்களுக்கு கதி உங்களால்தான் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றன நீங்கள் நலமோடு வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும் தமிழர்களை வாழ்விக்க நீங்கள் நூறாண்டு நூறாண்டு நூறாயிரம் கோடி ஆண்டு வாழ வேண்டும்

 • Parthasarathy - Chennai,இந்தியா

  நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

 • periasamy - Doha,கத்தார்

  முதல்வர் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  விரைவில் குணம் பெற்று வரவேண்டும்

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  காய்ச்சல் என்று அறிக்கையில் இருக்கின்றது, மூச்சு திணறல் என்று செய்தி சொல்கிறது. எது உண்மை? நாலடி தொடர்ந்து நடக்க முடியாத அவர் தேர்தலில் நின்று இருக்க கூடாது. (கருணாநிதியும்தான்). ஆட்சி சசியின் கைக்கு சென்றால், தமிழர்கள் நன்றாக வேதனை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

 • Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  நலம் பெற பிராத்தனைகள்.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  நலம் பெறட்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement