Advertisement

தினமும் நாட்டியம் ஆடுங்கள்!

மனிதனுக்கு இயக்கம் உயிரினும் மேலானதாகும். இயக்கம் இல்லா மனிதன் தாவரம் போல் தான். உடல் இயங்குவதற்குக் தசைகளும், எலும்புகளும், மூட்டுகளும் தேவை.மன இயக்கத்திற்கு மூளை தேவை,

உடல் இயங்குவதற்கும், மனம் இயங்குவதற்கும் உதவும் கலை, நாட்டியக்கலை ஆகும். கலாசாரம் மற்றும் மொழி வேறுபாடு உடைய இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் உள்ளன. நாட்டியக் கலையிலும் பல்வேறு வகைகள் உள்ளன.

உதாரணமாக பரத நாட்டியம், குச்சிபுடி, கதகளி மற்றும் கதக் போன்ற நாட்டியங்கள் நம்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன. மேலைநாடுகளில் பேலக் டான்ஸ், பால் டான்ஸ், ரூம்பா டான்ஸ் நடைமுறையில் இருக்கின்றன.

நாட்டியம் என்றால் அலங்காரம் மட்டும் என்று எண்ணத் தேவையில்லை. உடல் ஆரோக்கியத்திற்கு நாட்டியக்கலை பேருதவி அளிக்கிறது.உடலை இயக்க... நமது உடம்பில் 640 தசைகள்
இருக்கின்றன. 206 எலும்புகள் இருக்கின்றன. இந்த தசையையும் எலும்பையும் சேர்த்து நம்மால் இயக்க முடிகிறது. நடப்பதற்கு, ஓடுவதற்கு, எந்த ஒரு செயலாயினும் தசைகளையும் எலும்பு
களையும் பொறுத்துதான் உள்ளது.

நாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும் தசைகளை பலப்படுத்துவதுடன் தசைகள் இறுக்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.உதாரணமாக, நாட்டியத்தின் முக்கிய அசைவு கண் அசைவு.
கண் அசைவு ஆறு தசைகளில் ஏற்படுகிறது. நாட்டியத்தின் போது மிகவும் வேகமாகவும், மெதுவாகவும் மேலும் கீழும் அசையும் போது இந்த தசைகள் வலுப்பெறுகின்றன. இதனால் கண்நோய்கள் வராமல் பாதுகாக்கப்படுகிறது.

கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலி, சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் காணப்படுகிறது. சில நேரங்களில் இதய வலியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் கையை தலைக்கு மேல் துாக்கி செய்யும் வேலைகள் எதையும் செய்வதில்லை. முக்கியமாக பெண்கள் தோள்பட்டை தசைவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

தோள்பட்டையை சுற்றி முக்கியமான எட்டு தசைகள் இயக்கத்திற்கு தேவை. இந்த தசைகளின் இறுக்க தன்மையினால் அதிக வலி ஏற்படும். அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலம் இலகுவான தசை இறுக்கத்தை எந்த விதமான மருந்துகள் இல்லாமல் குணப்படுத்தலாம்.

கொழுப்பை குறைக்கும் முழங்கை மற்றும் மணிக்கட்டு மூட்டுகள் அன்றாட வேலைகளுக்கும், எழுதுவது, படிப்பதும், சமைப்பது போன்ற பணிகளுக்கும் பயன்படுகிறது. நாட்டியத்தின் மூலம் இந்த மூட்டுகளில் உள்ள தசைகளின் ஆற்றலை அதிகப்படுத்தலாம்.

குனிந்து மற்றும் நிமிர்ந்து ஆடும் நாட்டியம், வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்கி தொப்பை ஏற்படாமல் பாதுகாக்கும். வயிற்றில் உள்ள தொப்பையில் தான் எல்.டி.எல்., மற்றும் டிரைகிளிசரைட்ஸ் எனப்படும் தீய கொழுப்பு உள்ளன. எனவே தொப்பையைக் குறைப்பதன் மூலம், தீய கொழுப்பை குறைக்க முடியும்.

கால்களினால் நாட்டியம் ஆடும் போது, இடுப்பு சதை மற்றும் முழங்கால் தசைகள், கால் பாதத்தில் உள்ள தசைகள் மிகவும் வலுவாக மாறி விடுகின்றன. எனவே இடுப்பு வலி மற்றும் மூட்டு தேய்மானம், கால் வலி மற்றும் கால் எரிச்சல் வராமல் பாதுகாக்கப்படுகிறது.
டிரட்மில் பயிற்சி, நீச்சல் பயிற்சியை விட மிகச்சிறந்த உடற்பயிற்சி நாட்டியம். தினமும்
நாட்டியம் ஆடும் போது, இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும், நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையும் அதிகரிக்கிறது.

நன்மைகள்
1. தசைகளில் வலுவைக் கூட்டுகிறது
2. தசைகள் சுருங்கி விரியும் தன்மையைக் கூட்டுகிறது.
3. உடம்பில் உள்ள மூட்டுகளின் மடக்கும் தன்மை வளையும் தன்மையைக் அதிகரிக்கிறது.
4. எடை குறைய வழி வகுக்கிறது.
5. மனக்கவலையைப் போக்குகிறது.
6. மனதில் குதுாகல நிலையை உண்டாக்குகிறது.
7. சிறு மூளையின் வேலைத்திறனைக் கூட்டுகிறது.

தினமும் நீச்சல் பயிற்சியில் உள்ளவர்களை விட, நாட்டிய பயிற்சி செய்பவர்களே தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக, அண்மையில் பிரிட்டனில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டியப் பயிற்சிக்கு ஆண், பெண் என்ற பேதம் இல்லை. இந்த நாட்டியம் தான் ஆட வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை.உங்களுக்கு விருப்பமான நாட்டியத்தை, 30 நிமிடங்கள் ஆடுவதன் மூலம் பல வியாதிகள் வராமல் தடுக்கலாம்.

அர்ஜென்டினாவில் 'டாங்கோ டான்ஸ்' ஆடுவதால், பார்கின்சன் நோயால் ஏற்படும் சதை இறுக்க தன்மை குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில், மறதிநோய்க்கு அங்குள்ள 'உட்டா டான்ஸ்' தீர்வாக உள்ளது.

முதலீடு தேவை இல்லை :கதைகளில் சிவபெருமான் நாட்டியம் ஆடுவதைப் பற்றி படித்திருக்கிறோம். நாட்டிய கலை உங்களை நீங்களே சந்தோஷப்படுத்தவும், மற்றவர்களை மகிழ்ச்சியாக்கவும் பயன்படுகிறது. உடம்பில் உள்ள அனைத்து தசைகளையும், பாகங்களையும், பயன்
படுத்தும் மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். டிரெட்மில், ஜிம் போன்றவற்றில் பயிற்சிகளுக்கு முதலீடு தேவைப்படும். ஆனால் நாட்டியத்திற்கு எந்த முதலீடும் தேவையில்லை.

ஒரு மணி நேர நாட்டியத்தின் மூலம், 500 கலோரியை செலவழிக்கலாம். இது நீச்சல் பயிற்சியை விட அதிகம். மாரடைப்பு, சர்க்கரை வியாதிகளுக்கு மனஅழுத்தமே காரணம். மனஅழுத்தத்தை சரி செய்ய, எத்தனையோ வழிகள் உள்ளன. மாத்திரைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் பயனுள்ளதாக அமைகின்றன. இருந்தாலும் நாட்டியம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மிகச்சிறந்த மனஅழுத்த நிவாரணி ஆகும்.

மனம் வலுவாகும்

நாட்டியத்தினால் உடல் மட்டும் அல்ல, மனதும் வலுவாக மாறுகிறது.

1. தினமும் அரைமணி நேரம் நாட்டியப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
2. நேர்த்தியாக, அழகாக ஆட வேண்டும் என்று அவசியமில்லை.
3. இறுக்கமான ஆடைகளை அணியாமல் தளர்வான ஆடைகளை அணியலாம்.
4. வீட்டில் தனியாக இருக்கும் போது பாட்டு, இசை கேட்டுக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் ஆடலாம்.
5. உங்களுக்கு பிடித்தமான நடனத்தையே ஆடலாம்.
6. குழந்தைகளுடன் சேர்ந்து ஆடினால், அவர்களும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்வோடும் இருப்பார்கள்.

கலைகளில் சிறந்த கலை நாட்டியக்கலையே எனப் பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் பாடியது சாலப்பொருத்தமாகும். எனவே நாட்டியக் கலையை கற்போம்; போற்றுவோம்! நமது நாட்டை நோயற்ற நாடாக மாற்றுவோம்.

-டாக்டர் ஜெ.சங்குமணி
சர்க்கரை நோய் நிபுணர்
மதுரை. sangudryahoo.co.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • abu lukmaan - trichy,இந்தியா

    பெண்கள் இப்படி ஆடி பயிற்சி எடுத்தால் எதிர் காலத்தில் இந்த பெண்களுக்கு வர போகும் கணவர்கள் ஆடி போய் விடுவார்கள் .

  • abu lukmaan - trichy,இந்தியா

    அப்ப யோகா வேண்டாமா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement