Advertisement

சுவாதி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை

சென்னை: சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக. என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஏராளமான தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 1 ம் தேதி சுவாதியை கொலை செய்ததாக கூறி ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்த போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் தந்தை பேட்டி: இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் அளித்த பேட்டியில், " என்னுடைய மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. அவன் கொலையாளி அல்ல. அவன் உயிரோடிருந்தால் உண்மை எப்படியாவது வெளியில் வந்துவிடும் என்று பயந்து போலீசார் திட்டமிட்டு என் மகனை கொலை செய்துள்ளனர் " என்றார்.சிறைத்துறை விளக்கம்
ராம்குமாரின் தற்கொலை தொடர்பாக சிறைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ராம்குமார் மாலை 4.45 மணிக்கு தற்கொலைக்கு முயன்றார். சிறை சமையல் அறையில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்துள்ளார். மின் வயரை உடலிலும் செலுத்தியுள்ளார். இதை அறிந்ததும், ராம்குமாருக்கு சிறையில் முதலுதவி அளிக்கப்பட்டது. ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.

நாளை பிரேத பரிசோதனை:
உயிரிழந்த ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நாளை பிரேத பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன்
சம்பவம் தொடர்பாக ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் கூறுகையில் " ராம்குமாரை நேற்று நான் சிறைக்கு சென்று பார்த்தேன். அவன் நலமாக தான் இருந்தான். எந்தவித மன அழுத்தத்திலும் அவன் இல்லை. சிறை அதிகாரி விஜயகுமார் இருந்தவரை ராம்குமார் பாதுகாப்பாக தான் இருந்தான். அவர் இன்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ராம்குமார் இறப்பில் மர்மம் உள்ளது. அவன் உடலை பார்க்க போலீசார் அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் தீர்வு கிடைக்க சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன்" என்றார்.Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (178)

 • Paranthaman - kadappa,இந்தியா

  யாரையோ காப்பாற்ற இவனை குற்றவாளியாக்கி விட்டார்கள் என்று இங்கே பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊரில் இருப்பவர்கள் எல்லோரையும் விட்டு விட்டு போலீசார் அவனை மட்டும் பிடித்தது ஏன் எனபதை எவரும் சிந்திக்கவில்லை. அவனே, தான் தான் ஸ்வாதியை கொன்றதாக போலீசில் வாக்கு மூலம் கொடுத்து கையெழுத்தும் போட்டுள்ளான். அவன் கொலை செய்யவில்லை என்றால் கொலை நடந்த அன்று எதற்காக தான் தங்கியிருந்த ரூமை விட்டு சொந்த ஊருக்கு ஒடினான். கொலை அவன் செய்யவில்லை என்றால் அந்த ரூமிலேயே தங்கி இருக்கவேண்டியது தானே. சூளை மேடு தெருவில் அவன் பின்னால் தொங்கிய பேக்குடன் ஒரமாக நடந்து வரும்போது அவன் சட்டை காலரின் பின்பக்கம் தூக்கி விடப்பட்டு முதுகிற்குள் செருகி உள்ளது தெரியாதபடி மறைத்து அசைந்து அசைந்து நடந்து வருவதை பல வீட்டு கேமராக்கள் காட்டியதை பல தொலைக்காட்சிகளில் திருப்பி திருப்பி காட்டப்பட்டன. அவன் ரயில் நிலையத்திலிருந்து வேகமாக ஓடுவதையும் அந்த கேமராக்கள் காட்டின. அவன் நடையையும் முக சாயலையும் பின் பக்க முதுகையும் உற்று நோக்கியவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும்.

 • RK Riyas Ahamed Khan. - Delhi,இந்தியா

  ராமநாதபுரம் சிறையில் கைதிகள் தான் சமைக்கிறார்கள். அதுபோல் இவனும் சமையல் கட்டுக்கு சமைக்க சென்றிருப்பான். ஆதலால் இது கொலை அல்ல..தற்கொலைதான் .

 • Priya - cbe,இந்தியா

  இதில் ஏதோ உண்மை இருக்கு அதனாலதான் அவனை கொன்னுருக்காங்க ....

 • g.s,rajan - chennai ,இந்தியா

  Chapter closed.

 • Karuthu kirukkan - Chennai,இந்தியா

  சந்தேகத்தின் பெயரில் கைது செய்து , விசாரணை மேற்கொண்டு (கண்களால் காண்பது பொய், தீர வீசரிப்பதே மெய்) , சுதந்திரமான நீதி துறையின் தீர்ப்பு வரும் வரை ...ஒருவர் குற்றவாளி அல்ல...குற்றம் சாட்டப்பட்டவர் என்றே கூறவேண்டும் ..இது தான் சட்டம் சொல்கிறது. இந்த செய்தியின் தலைப்பிலும் கூறப்பட்டு உள்ளது ... அதை விடுத்தது இங்கு கருத்து கூறும் நண்பர்கள்...தீர்ப்பு வரும் முன்னரே ..ஒரு மனிதனை , கொடூரன் , கொலைகாரன், பைத்தியக்காரன், சைக்கோ ..என்று பேயை வைப்பது,, தமிழகத்தில் மட்டுமே ...இது அவர்களின் அறிவின்மைக்கு சான்று ..குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும்,கர்ம விதிகளின் படி தண்டிக்கப்படுவர்..எத்தனையோ கைதிகள் சிறையில் இருக்கும் போது ..இவருக்கு மட்டும் எப்படி சிறையில் உள்ள சமையல் அறையில் மின்சாரம் வயர் எட்டிய உயரத்தில் வைத்தனர் இறப்பில் மர்மம்..சி பி ஐ..விசாரணை செய்தால் ..உண்மைக்கு வெளிச்சம் ..

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  இந்த மரணத்தை மேற்கொள் காட்டி புழல் சிறை கைதிகள் தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லை என்று கட்டுமரம் இப்போதே பாட்டாவையோ ட்ராபிக்கையோ கூப்பிட்டு அப்ளிகேஷன் போடும்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  அறைகுறையா இஞ்சினீரிங் படிச்சா இப்படித்தான்...எப்போதும் புத்தி கோணல் வழியிலேயே வேலை செய்யும் ..குறுக்கு வழியையே நாடும்...படிப்பை தவிர மற்ற எல்லா வேலைகளிலும் தேர்ந்து இருக்க தன்னை இவ்வழிகளிலேயே தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள முயற்சித்துக்கொண்டே இருந்தது தெரிகிறது...ராம்குமாருடைய தகப்பன் அளித்த பிசிறற்ற பேட்டியும் தீர்ப்பு வராத நிலையில் அவர் மகனுக்கு அளிக்கும் சப்போர்ட்டும் இதை உறுதிப்படுத்துவதுபோல் உள்ளது ...

 • Ramkumar Valmikanathan - Chandler,இந்தியா

  பாத்திங்களா.. நத்தம் ( நாத்தம் ) அடிச்ச 300 கோடி பத்தி இப்போ எல்லாரும் மறந்துட்டோம். இன்னும் கொஞ்ச நாளைக்கு இதை பத்தி பேசுவோம்.. கட்டுமரம் ஐயோ பார்ப்பனிய பயங்கரவாதம்-ங்கும். அதுக்கும் சப்போர்ட் பண்ணி சில பன்னாடைங்க கமெண்ட் போடும். அப்புறம் தீபாவளி வந்துரும்.... அப்போ எல்லாத்தையும் மறந்துருவோம்.

 • Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்

  நீதிபதிகள் சொல்லும் தீர்ப்பே உண்மையாக இல்லாத பட்சத்தில் ராம்குமார் வழக்கில் ஊடகங்களும் பொதுமக்களும் ஆளுக்கொரு தீர்ப்பை எழுது தள்ளி விட்டனர்.உண்மையான குற்றவாளியை மோசமான குற்றவாளிகள் தான் இந்த வழக்கில் கண்மூடித்தனமாக கமெண்ட் போட்டவர்கள். ஸ்வாதி ராம்குமார் இருவரின் மரணமும் யாரோ யாரையோ திருப்திப்படுத்த நடந்துவிட்டது. நாமும் ஒன்றை ஒன்று முடிச்சு போட்டு நம் ஆத்திரத்தையும் ஆதங்கதியும் நியாயப்படுத்திவிட்டு கடந்து செல்கிறோம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இராம்குமார் தற்கொலை செய்யப்பட்டு இருக்கிறார்...

 • CJS - cbe,இந்தியா

  அனைத்துமே மர்மம் தான்.

 • Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்

  தற்கொலை இல்லைனு நெனக்கிறேன். எப்படி இருந்தாலும் தர்மம் வென்று விட்டது.. எத்தனை தனி படைகள் அமைத்து உயிரை கொடுத்து போலீசார் தங்கள் கடமையை செய்தனர். ஆனால் சாதி அரசியலுக்காக ஓட்டுக்காக சிலர் இவனை காப்பாற்ற முயன்றார்கள்.. அவனை காப்பாற்ற ஸ்வாதியின் நடத்தையை குறை கூறினர், அவள் நண்பர் பிலால் செய்தான் என்று ஒரு கூட்டமும், ஸ்வாதி தேசதுரோகி என்று ஒரு கூட்டமும் வதந்தி பரப்பியது. இந்த தற்கொலை காவேரி பிரச்சனையை திசை திருப்பினாலும் நீதியை நிலை நாட்டி இருக்கிறது. என் மகளை இப்படி செய்து விட்டாயே என்று கண்ணீர் விட்ட ஸ்வாதியின் தந்தைக்கு கிடைத்த நீதி..

 • ச.சேதுராமன்மின்னல்கொடி - குவைத்(பர்வானியா),குவைத்

  சுவாதி கொலையில் உண்மையான குற்றவாளி யார் என்று ராம்குமார் கூறிவிடுவான் என்றே சதி செய்து கொலைவிட்டனர்

 • Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஒரு வழியா கேச முடிச்சு யாராரையோ காப்பாத்திட்டாங்க. வாழ்க ஜனநாயகம் - வேற ஒன்னும் சொல்ல முடியாது. ஆனால் ஹிந்துக்களே உங்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால், ஸ்வாதிக்கு நடந்தது தொடரும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தமிழக நல்லாட்சியில் பெண்ணொருத்தி தனியா வேலைக்குப்போக முடியல . கைதி நீதிவிசாரணைக்கு முன் நிற்கமுடியல. காவல்துறையும் சிறைத்துறையும் சேர்த்து ஒருத்தனை கைதிகிறாங்க . மின்சாரகம்பிய கடிச்சிபுட்டங்கிறாங்க, தெருவுளநடந்தாகும் சாவுதான் . சிறைக்குள்ள இருந்தாலும் சாவுதான். அரசுமருத்துவமனை போனாலும் சாவுதான். நல்லா ஆளுறாங்கய்யா .

 • S. MURALIDHARAN - CHENNAI,இந்தியா

  இந்தக் கொலைகாரன் காதலை அந்தப் பெண் சுவாதி ஒருவழியாக ஏற்றுக்கொண்டு, அவனையும் ஒரு வழி பண்ணி தன்னிடம் அழைத்துக்கொண்டாளோ சில குற்றங்களுக்கு சட்டத்தின் வழியில் சென்று முடிவு காண முடியாது எனப் பார்த்திருக்கிறோம் அந்த வகையில் இன்னொன்று

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  சமூக வலை தளங்களில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி எடுக்கின்றார்கள் என்று ஒரு மாதகாலமாகவே செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. ஏற்கனவே கைதின் போதே தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் தரப்பில் சொன்னார்கள், அப்படி இருக்கும்போது ஏன் சரியான பாதுகாப்பு வழங்கவில்லை? இதில் யாரையோ காப்பாற்ற இந்த கேஷை முடிக்கப்பட்டுள்ளதா? பல சந்தேக வினாக்கள் எழுந்துக்கொண்டிருக்கின்றது.

 • VOICE - CHENNAI,இந்தியா

  இவன் உணமையான கொலையாளி இருப்பின் செத்தது தவறு இல்லை, அப்படி இல்லாத பட்சத்தில் போலீஸ் அதிக அதிகாரம் கொடுப்பது நீதி மன்றத்தால் செய்ய முடியாததை கூட இவர்கள் செய்யலாம் என்ற நிலை தான் காணமுடிகிறது. FIR பதிவதை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நீக்கிவிட்டு பாதிக்கப்பட்டோர் வாய்ஸ் ரெகார்டிங் மூலம் Fir சட்டம் படித்தவர்களை கொண்டு Customer care சென்டர் பதிவது நல்லது. Fir பதிவில் தான் குற்றவாளிகள் தப்பிப்பதும் குற்றம் இல்லாதவர்களை கூட பொய் கேஸ் மாறும் நிலமையும் உள்ளது. எது எப்படி இருப்பினும் உணமையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். நிரபராதி என்று தெரிந்தே தண்டிக்கப்பட்டால் அவர்களுக்கும் குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை கொடுக்கப்படவேண்டும்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "குத்தமே தண்டனை" - இவுனுக்கு பக்காவா பொருந்துது.... (ஜட்ஜுக்கு வேல மிச்சம்).

 • sivaram - singapore,சிங்கப்பூர்

  தர்மம் வென்றது சாதிய சாக்கடைகளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டு உள்ளது. இனியாவது இந்த திராவிட மட்டைகள் இந்த சாதியத்தை விடுமா என்று பார்ப்போம். அநியாயமாக இறந்து போன சுவாதி கொலைக்கு நீதியாகவே இதனை பார்க்க வேண்டும். அதன் பிறகும் பல பெண்கள் சுவாதி போல இருந்து உள்ளார்கள் அவர்களுக்கும் இதே ரீதியில் இந்த காவல் துறை நீதியை வழங்க வேண்டும்.

 • ram - chennai

  நத்தம் வி வனாத் ஊழல் வழக்கை மறக்க நடத்தப்பட்டது

 • sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ

  சூப்பர் நியூஸ்......ஆண்டவன் இருக்கிறான் என்று மக்களை நம்ப வைத்த நிகழ்வு.

 • Sekar - MM Nagar

  யாரைக் காப்பாற்ற இவன் பலி கொடுக்கப்பட்டான்? இதை நீதிமன்றம் வெளிக்கொண்டுவர வேண்டும். சிறை அதிகாரி Vijayakumar மாற்றப்பட்ட அன்றே ஒயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டானாம். அப்போ ராம்குமார் கதையை முடிக்க இவர் ஒத்துழைக்காததால் மாற்றப்பட்டாரா என்ற சந்தேகம் வருகிறது. ஆக இந்த வழக்கு வழக்கம்போல் ஊத்தி மூடப்படும். அரசு அங்கீகாரம் பெற்ற சீருடை ரவுடிகள் கூலிப்படையாக மாறிவருவது தெரிகிறது. எது நடக்கவேண்டும் என்று நினைத்தார்களோ அது நல்லபடி முடிந்தது. சுபம்.

 • RK Riyas Ahamed Khan. - Delhi,இந்தியா

  இவன் அப்பவே செத்திருக்க வேண்டும் .

 • kuppuswamykesavan - chennai,இந்தியா

  வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலைப்பாடுதான் நம் இந்தியாவின் சிறப்பு. இங்கு எதையும் உணர்ச்சிக்கு இடமளிக்காமல் அறிவுபூர்வமாக சிந்தனை செய்தால் எந்த பிரச்சினைக்கும் விடை கிடைக்கும்.

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  கர்நாடக தமிழர்கள் பற்றி எரிந்து கொண்டு இருந்ததை வேடிக்கை பார்த்த அரசு , மக்களின் கவனத்தை திருப்பி செய்த மிகப்பெரும் வன்முறை நாடகம் தான் இது

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தமிழகத்தில் இப்போது காவல்துறை சிறைத்துறை இரண்டும் சேர்ந்து குற்றவாளி யார் என்று தீர்மானிக்கிறார்கள் . தண்டனையும் கொடுக்கிறார்கள் . நல்ல ஒத்துழைப்பு . நீதி சாகிறது . கூட கூட்டுச்சதி சேர்ந்து சிறைக்குள் ஒருகைதி வாயில் மின்சாரம் பாச்சுகிறது . மனிதர்கள் அவர்கள் உரிமைகள் எல்லாம் 1000 ஆண்டுக்கு பின்செல்கிறது . பெண்ணொருத்தி பகலில் நடமாடமுடியவில்லை . கைதியொருவன் நீதிமும் விசாரிக்கமுடியவில்லை .

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  எங்க தலீவரு ஆட்சிதான் சரி ..... லைவ் வயரைக் கடிச்சு மென்னு துப்பினாலும் உயிரோட இருக்கலாம் ....

 • Rajesh.A - Coimbatore

  Real Vesaranai movie...

 • navin - salem

  இதெல்லாம் பார்க்கும் போது இந்த பாவம் புன்னியம் எல்லாம் ஒன்றுமே இல்லை.....

 • ரவி - Texas,யூ.எஸ்.ஏ

  தன்னை விட தாழ்ந்தவனிடம் பேசாதே, பழகாதே என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். சுவாதி கொலைக்குப் பிறகு எல்லோரும் இதை புரிந்துகொண்டால் சரி.

 • Devar - Mannargudi,இந்தியா

  டேய் . இது என்ன நாடா இல்லை ரௌடிகளின் ராஜ்யமா ??? குற்றம் சாட்டப்பட்டவர் ஏழை என்றால் இதுதான் நீதி. இதுவே சல்மான்கான் இருந்தால் 1 மணி நேரத்தில் ஜாமின் . கொடுமையடா சாமி. அரசியலில் அமைச்சர்கள் கொள்ளையடிக்கிறானுகள் . அவனுகளும் தண்டனை பெறுவதில்லை . பணக்காரனுங்கள் செய்யும் கொலைகளை மூடி மறைத்து கொஞ்ச நாளுக்கு பிறகு அவர்களை தலைவராக்கி விடுகிறார்கள் . என்ன கொடுமையா ??? இந்த மாதிரி நடக்கிறபோது cctv என்ன பதிவு என விளக்க வேண்டும் .

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  ராம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளான் சிறையில் இந்த அரசுக்கு நேர்ந்த தீராத பழி இந்த சிறை மரணம் இந்த அரசு எதை பற்றியும் கவலை படாது. மோடி ஜெட்லீ வெங்கையா நாயுடு பொன் ராதாகிருஷ்ணன் ராஜ்நாத் சிங் போன்ற பிஜேபியின் ஆதரவு உள்ளவரை இந்த அரசை சிபிஐ கூட ஒன்றும் செய்ய முடியாது.

 • Sathiamoorthi Ku - bangalore,இந்தியா

  வாயில் கடிக்கும்போது கரண்ட் இல்லையா? உடம்பில் வைக்கும்போது கரண்ட் வந்துருச்சு.......ஏன்னா உடான்சு உடறாங்கப்பா.......

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  உண்மையும் மர்மங்களும் சேர்ந்து கொல்லப்பட்டு விட்டது..

 • ராம்கிராஜா - trichy

  ஒரு அப்பாவிய திட்டம் போட்டு தீத்துகட்டியாச்சி...அதுவும் ஒயரை வாயால கடிச்சானாம் அப்பரம் உடல்மேல போட்டு விலையாடினானாம்...இத எந்த பொரம்போக்காவது வீடியோ எடுத்திருப்பானே..இவன் தற்கொலைதான் செஞ்சிகிட்டான் என்று.... எந்த தர்ம நீதிபடியும் குற்றம் செய்யரது எவனா இருந்தாலும் அவன் குடும்பமும் வம்சமும் நிரமூலமாகி நாசமாகி போவதுமட்டும் சத்ததியம்..அது மாறாது..ராம்குமார் ஆத்மா சாந்தியடையட்டும்.." ஓம் நமசிவாய நமஹ"

 • S.S.JAHUFER SADIK - Jeddah,சவுதி அரேபியா

  கேஸை முடித்து விட்டார்கள் பலே

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  ,சுவாதி கொலைகாரனின் தற்கொலை எதிர்பாராத முடிவு . இது வரையில் ராம்குமாரை குற்றமற்றவராக /சமூக போராளியாக சித்தரிக்க முயற்சித்தனர் ஜாதிய கட்சிகளும் ,திக திராவிட இயக்க போர்வாள்களும் . .தமிழக டிவி விவாதங்களில் இதை கண்கூடாக பார்க்க முடிந்தது .ராம்குமாரின் சகோதரிகளுக்கு அரசாங்கம் கருணை அடிப்படையில் வேலை தரவேண்டும்/வீடு தரவேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டன . இதன் நுண் காரண /காரணிகள் சமூக கட்டமைப்புகளில் ஆழமாய் புதைந்துள்ளது.இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் .அது பற்றிய சிறு தொகுப்பு . அடங்க மறு அத்து மீறு - இது ஒரு தமிழக ஜாதிய தலைவர் நடத்தும் கட்சியின் LOGO வசனம். அது மட்டும் அல்ல எந்த ஜாதி தலைவர் படம் என்றாலும் ,அவரின் பின்புலமாக அந்த போஸ்டரில் இரு சிங்கங்கள் அல்லது இரு புலிகள் அல்லது இரு சிறுத்தை புலிகள் இருக்கும் - சிறு வயதில் ஆம் என்னுடைய சிறு வயதில் இந்த போஸ்டர்களை பார்க்கும் போது இந்த காட்டு விலங்குகளையெல்லாம் இந்த தலைவர்கள் ,அடிமை பெண் படத்தில் எப்படி புரட்சி தலைவர் எம்ஜிஆர் சிங்கத்துடன் வீரமாக சண்டையிட்டு அதனை ஜெயிப்பாரோ, அதை போன்று இந்த தலைவர்களும் கொடிய காட்டு விலங்குகளை சண்டையிட்டு ,ஜெயித்து இப்போது அதனை வீட்டில் வளர்ப்பு - செல்ல பிராணிகளாக வைத்துள்ளனர் என பல முறை நினைத்து வியப்பதுண்டு - காந்தி என்றால் ராட்டை ,நேரு என்றால் வெண்புறா,காமராஜர் என்றால் பள்ளிக்கு செல்லும் இரு குழந்தைகள் என்று பார்த்து வளர்ந்தது ஒரு சமுதாயம்.ஆனால் ராம்குமார் போன்ற இளைஞர்கள் ,இத்தகைய ஜாதிய தலைவர்களின் வன்முறை பேச்சை கேட்டபடி தான் வளர்கிறார்கள் .உங்களுக்கு தெரியுமா ? தென் தமிழகத்தில் எந்த பஸ்களிலும் ஜாதிய தலைவர்கள் பாட்டுக்களை பயணிகள் செல்போனில் போடக்கூடாது என தடை உள்ளது .இந்த தலைவர்கள் அவர்களின் ஜாதி மக்களின் வளமான வாழ்விற்கு உதவுகிறார்களோ இல்லையோ அந்த ஜாதி இளைஞர்களிடம் ஒரு அடக்கு முறை எதிர்க்கும் புரட்சியாளன் என்ற உளக்கிளர்வை புரியாத வயதில் விதைக்கிறார்கள் அதன் அறுவடை தான் அன்று ஒன்றும் அறியாத மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை இன்று ராம்குமார் தற்கொலை - இன்று வரை சுவாதி கொலையை கண்டிக்காத /ஒரு குறிப்பிட்ட உயர் ஜாதியை மற்றும் ஹிந்து மதத்தை மட்டும் தாக்கியே வளர்ந்த திக திராவிட இயக்கங்கள் இனி தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரை சமூக போராளி /சமூக நீதிக்கு போராடியவர் என உயர்த்தி பிடிக்காமல்/சித்தரித்து பேசாமல் நாகாக்க வேண்டும். சுவாதி கொலையை கொலையாக பார்க்க வேண்டும் - ஜாதியுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது என வீண் விதண்டாவாதம் செய்த திக திராவிட இயக்கங்கள் தருமபுரி இளவரசன் மற்றும் உடுமலை பேட்டை சங்கர் செத்தபோது மட்டும் தலித் செத்தான் தலித் செத்தான் என்று கூறின அவைகள் இப்போது இரட்டை வேடம் போடுகின்றன . .இது தான் மிக மிக அருவெறுப்பான /கேவலமான திராவிட வாதம் .ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் மலிவான ,இழிவான மற்றும் கேவலமான அரசியல் இயக்கங்கள் மற்றும் திக திராவிட இயக்க போர்வாள்கள் எனும் மனித பதர்கள் இனி ராம்குமார் தற்கொலை சம்பவத்தை ஒடுக்க பட்ட மக்களின் வாழ்வுரிமை போராட்டங்களோடு ஒப்பிட்டு /இணைத்து பேசக்கூடாது. ராம்குமாரின் தற்கொலையை மையப்படுத்தி திக திராவிட இயக்கங்கள் மீண்டும் சுவாதி சார்ந்த ஜாதியினர் மீது பழைய பாணியில் பூணூல் அறுப்பு , குடுமி அறுப்பு என்று கிளம்பிவிடக்கூடாது .மனித நேயம் தழைக்க வேண்டிய நேரம் இது .ஆம் மனித நேயம் தழைக்க வேண்டிய நேரம் இது

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  இப்போது ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்தும் இந்த வக்கீல்கள் மற்றும் இன்ன பிற சா... “தீ” யக் கட்சியினர் எல்லோரும் அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட போது எங்கே ஓடி ஒளிந்தார்கள்....??? அந்தப் பெண் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, அவர் நடத்தை கெட்டவர் என்றெல்லாம் சித்தரித்தார்கள்.... ஏன்.... எதற்காக.....??? எல்லாம் வெறும் சா தீ அரசியலுக்காகத் தான்..... இதைச் செய்த ராம்குமார் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்பதாலேயே.... இத்தனை ஆர்ப்பாட்டங்களும்.... அமளி துமளிகளும்.... இதையே ஒரு உயர் சாதியைச் சேர்ந்த ஒருவன் தாழ்த்தப்பட்ட வகுப்பையோ அல்லது மைனாரிட்டி எனப்படும் கிறிஸ்துவ, முஸ்லிம் வகுப்பையோ சேர்ந்த ஒரு பெண்ணுக்கோ இப்படி நேர்ந்திருந்தால்..... அத்தனை அமைப்புகளும் அவனுக்காக வக்காலத்து வாங்குவார்களா என்ன....???? பார்ப்பானைக் கொல்லு... என ஆர்ப்பாட்டங்களும்.... கண்டணங்களும் அதிக அளவில் நடந்திருக்கும்.... இதிலிருந்து தெரிவது என்னவெனில்.... இப்படிப்பட்ட கேடுகெட்ட.... அரசியலைத் தான் இப்போது உள்ள கட்சியினர்.... சா “தீ” யக் கட்சியினர் நடத்திவருகின்றனர்..... இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.... ராம்குமாருக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் அனைவரது குடும்பத்திலும் உள்ள பெண்களுக்கு சுவதிக்கு நேர்ந்தது போன்ற கொடுமை நடந்தால் என்ன செய்வார்கள்...??? தனக்கு வந்தால் ரத்தம்.... அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா....??? இறைவா.... இப்படிப்பட்ட தரம் கெட்ட, கேடு கெட்ட அரசியல் வியாதி களிடமிருந்தும், சா “தீ” ய அமைப்புகளிடமிருந்தும் நாட்டையும் நாடு மக்களையும் காப்பாற்று....

 • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

  இது ஒரு கொலையாகத்தான் இருக்கமுடியும். சுவாதி தரப்பினர் எங்கே சி.பி.ஐ விசாரணைக்கு இந்த வழக்கு சென்று உண்மைகள் வெளிவருமா என்ற பயத்தில் ஏதேனும் செய்திருப்பார்களோ என சந்தேகம் உள்ளது.ஏன் அவர்களை பற்றி இங்கு கருத்து தெரிவித்தவர்கள் பெரும்பாலோர் ஒன்றும் கூறவில்லை.ஏன் அவர்கள் அமைதி காக்கவேண்டும்.பணமும் அரசியல் செல்வாக்கும் பாதாளம் வரை பாய்ந்து உள்ளது என்றே ராம்குமாரின் மறைவு சொல்கிறது.அவன்தான் கொலை குற்றவாளி என்றால் ஜனநாயக நாட்டில் வழக்கை நேர்மையாக நடத்தி தூக்கு தண்டனை வழங்கி இருக்கலாமே ......................படித்த நீங்கள் சிந்திக்கவேண்டும்.இதிலோ ஏதோ உண்மைமறைந்து உள்ளதோ .............படைத்தவனுக்கே வெளிச்சம் ...........

 • Suki - chennai,இந்தியா

  கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு - பழமொழி - வாய்ல வெட்டியனுக்கு வாயாலதான் சாவு - புதுமொழி - அந்த பெண்ணின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்

 • நிலா - மதுரை,இந்தியா

  சட்டம் ஒரு இருட்டறை யாருக்கே வேண்டி இவன் பலிகடா ஆக்கப்பட்டான்

 • rathnakumar - thirunelveli tisaiyanvilai,இந்தியா

  அரசு கவணிக்க வேண்டும்

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  இது தற்கொலை அல்ல இந்த மரணத்துக்கு பின் ஏகப்பட்ட மர்மங்கள் உள்ளது ,அது வெளிப்படபோகும் நாள் வெகு தொலைவில் இல்லை ,அப்போது சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் .

 • rathnakumar - thirunelveli tisaiyanvilai,இந்தியா

  நீதி நிலகை்கட்டும்

 • Kailash - Chennai,இந்தியா

  ராம்குமார் கைது செய்யப்பட்ட 2 மாதங்களில் என்ன விஷயம் வெளியே வந்துள்ளது? கொலை செய்துவிட்டார் என்று போலீஸ்தான் சொல்லியது. போலீஸ் சாட்சிகள் விஷயங்களில் அதீதமாக நடந்து கொண்டனர். சுவாதி நண்பர் மாலிக்கை விசாரணைக்கு சென்ற பொது வாயை மூடி தர தர என்று இழுத்து சென்றனர், இது வரை எந்த விஷயம் வெளியே வரவில்லை. லேப்டாப் மொபைல் போன்ற எந்த விஷயம் வெளியே வரவில்லை. பல பத்திரிக்கைகள் வித விதமாக சொல்லியது. காவல் துறை ஒரு மறுப்போ எதுமே சொல்லவில்லை. பல்வேறு குழப்பங்கள் உள்ளன இந்த நிலையில் ஒரேடியாக விஷயத்தை மூடி விட்டனர். போலீசார் பல வழக்குகளில் கடும் குழப்பத்தில் உள்ளனர், ராமஜெயம் வழக்கு, சேலம் ரயில் கொள்ளை, மதன் விவகாரம் போன்றவை அனைத்து வழக்குகளும் cc camera வையும் cellphone வைத்துதான் தேடுகின்றனர், இந்த இரண்டும் இல்லை என்றால் வேறு யாராவது சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து யாரையாவது உள்ளே தள்ளி விடுகின்றனர். பெரிய வழக்காக இருந்தால் என்கவுண்டர் செய்து விடுகின்றனர். இவர்கள் லைசென்ஸ் பெற்ற ரௌடிகள். போலீஸ் துறை ஈரல் கெட்டுவிட்டது என்று கருணாநிதி முன்பு கூறினார், இப்போது இதயம், மூளை போன்றவையும் கெட்டுவிட்டது.

 • Vairam - Chengalpattu

  There is Some Huge Problem hidden behind this case.Police are trying to Hide it even more.Ramkumar was accidentally or Incidentally bought into scene of crime.Tortoured psychologically and atlast died.Only God knows the reality.Still to The Police of Tamilnadu this is a black mark and Madam Jayalalitha Should again become very strict as she was during 2001-06.

 • raja - sivagangai

  அவர் தவறு செய்தாரோ இல்லையோ ஆனால் அவர் தவறு செய்திருந்தால் இத்தண்டனை சரியானதே. அவர் தவறு செய்யவில்லையென்றால் அவரின் ஆத்மா சாந்தியடைய அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  அநியாயம்.... அக்கிரமம்... ஒரு தாழ்த்தப்பட்ட மாணவருக்கு நேர்ந்த கொடூரம்.... இதைத் தட்டிக் கேட்க இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப் பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராட முன் வர வேண்டும்.... அப்போது தான் நியாயம் கிடைக்கும்.... தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்று தான் அரசுகள் பல சலுகைகளை வழங்குகிறது... இந்தச் சலுகைகள் போதாது.... பள்ளி, கல்லூரி... உயர் கல்வி, மருத்துவம், இன்ஜியரிங் போன்ற துறைகளில் இலவசமாகக் கொடுத்தால் மட்டும் போதுமா....??? அவர்கள் முன்னேறுவதற்காக வேலைவாய்ப்பிலும் 100% இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதுமா....??? ப்ரமோஷனிலும் இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதுமா....??? அவர்கள் திருமணம் செய்து கொண்டு முன்னேற வேண்டாமா.....??? ஆகவே, தாழ்த்தப்பட்ட, தலித் சமூகத்தினரைச் சார்ந்த இளைஞர் மற்றும் இளைஞிகள் அனைவரும் திருமணம் செய்துகொண்டு முன்னேற வேண்டுமெனில், அவர்களுக்குக் காதலிக்கவும், திருமணம் செய்துகொள்ளவும் மற்றும் கொலை செய்யவும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.... தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்சாதிப் பெண்களைப் பார்த்தால் “ஆசை” வருகிறது.... அவர்களிடம் காதலைச் சொன்னால் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.... இது மிகவும் அநியாயம்.... இது தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் தடையாக இருக்கிறது.... எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் காதலை ஏற்க மறுக்கும் உயர்சாதி ஆண் மற்றும் பெண்களைக் கைது செய்து அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.... அதற்கேற்ற வகையில் சட்டங்களை இயற்ற வேண்டும்.... அப்படித் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் உயர்சாதியினரைக் கொல்லும் உரிமையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.... அவர்கள் கொலை செய்வதற்கும் 69% இட ஒதுக்கீடு வழங்கி மத்திய, மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டும்.... அது வரையிலும் நாங்கள் (வைகோ, திருமா, சீமான், கருணா இன்னும் பல சா “தீ” ய அமைப்புகள்) இன்னும் ஓய மாட்டோம்.....

 • Selva SMS - Salem

  தயவுசெய்து தியாகியாக்கி விடாதீர்கள்.... Photo ஆதாரம் வெளிவந்தும் அவனை அப்பாவி என்று கூறுவது ஏற்புடையதல்ல... சட்டம் விரைவாக இல்லை என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது..

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  யாரா இருந்தாலும் கொலை பழி பாவம் சும்மா விடாது?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  கொலை குற்றவாளிக்கு சிறை சமையல் அறையில என்ன வேலை?ஆத்தா எல்லாம் ஒனக்கே வெளிச்சம்?

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இது திட்டமிட்டு செய்யபட்ட கொலை இதற்கு சிறை அதிகாரிகளே பொறுப்பு?

 • VeerarupanNadar - Bangaluru,இந்தியா

  தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை ..............

 • பாரதி - chennai

  அம்மாவின் ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்..

 • Np Ramkumar - Madurai,இந்தியா

  சமுகத்திற்கு இச்சம்பவம் சரியான பாடமாக இருக்க வேண்டும்... ஒருதலைகாதலர்களே இந்நிலைமைதான் உங்களுக்கும்... பார்த்து திருந்துங்கள்... வேற வேல வெட்டிய பாருங்கள்......

 • Nalam Virumbi - Chennai,இந்தியா

  சுவாதி கொலையும் சரி, இந்த உயிரிழப்பும் சரி வருந்தாது தக்கதே. இனிமேலாவது இளைஞர்கள் தங்களது வாழ்விலும் படிப்பிலும் கவனம் செலுத்துவதற்கு இது ஒரு பாடமாக அமையட்டும். ஒரு தலைக் காதல், தருதலைக் காதல் இவைகள் வேண்டாம்.

 • Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா

  ஒரு கொலை குற்றவாளியை இவ்வளவு அலட்சியமாகவா கையாள்வார்கள்? எங்கயோ இடிக்கிறது. சிறையில் தற்கொலைக்கு இவ்வளவு வசதிகள் உள்ளதா? அப்படியானால் மனசாட்சியுள்ள எல்லா கைதிகளும் அல்லவா தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். கடவுளுக்கே வெளிச்சம்.

 • Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ

  மின்சாரம் தாக்கியும் வாய் பகுதி, அடி படாமல், வீக்கம் இல்லாமல் இருக்கிறது எப்படி ? ஆனால் கழுத்து பகுதியில் மட்டும் கட்டு போடப்பட்டுள்ளதே ஏன் ?

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  தொலைக்காட்சியில் போலீஸ் காரர்கள் அடக்கி வாசிப்பதை பார்த்தால் இவைகள்தான் போட்டு தள்ளியிருப்பார்கள் போல் தெரிகிறது.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  இந்த புல்லுருவி இருக்கும்போதும் பிரச்சனை..... செத்தபோதும் பிரச்சனை...... பாவம் போலீசார்.

 • Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா

  ராம்குமார் அவர்களின் எதிர் பாரத மரணம் , அவரின் பெற்றோர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் . வழக்கம் போல் சுயநலவாதி கும்பல் இந்த தற்கொலையை அரசியல் ஆக்க முயற்சிக்கும் ஊடகங்கள் இந்த செய்தியின் மூலம் ஆதாயம் தேடும் . திரு ராம்குமார் அவர்களை ஒரு பெரிய தியாகி போல் சித்தரிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்படும்

 • aravind - chennai,இந்தியா

  வாரம் சில தற்கொலைகள், வாரம் சில தாக்குதல்கள், வாரம் சில கலவரங்கள், இந்தியா நல்ல ஜனநாயக நாடாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றது. முக்கியமாக தொலைக்காட்சிகளுக்கும் & பத்திரிக்கையாளர்களுக்கும்தான் தான் நல்ல வேலை. மக்களுக்கு அதை பார்க்கும் படிப்பதும் தான் வேலை? இதை வைத்து பேசி அரசியல் செய்யும் அரசியல் வாதிகள், இந்தியா நான்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  தற்கொலையா ???

 • Murugesan Tenkasi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்னதான் நடக்குது தமிழ்நாட்டில் ,,ராம்குமாரை பிடித்த அன்றே போலீஸ் உயரதிகாரிகள் அவன் மட்டும்தான் இந்த சுவாதி கொலையை செய்துள்ளான்,என்று அழுத்தமாக கூறினார்கள், அவனை பிடித்த அன்றே எவ்விதமான மேல்விசாரணையின்றி,எப்படி கூறமுடியும்??,போலீஸ்காரர்கள் தான் அவனது கழுத்தை அறுத்ததாகவும் கூறப்படுகிறது..எதையோ மறைக்க மர்மமரணம் தற்கொலை என்று சுருக்கிவிட்டனர்...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அவன் உயிருடன் இருந்து ஒன்று அவன் திருந்திய வாழ்க்கை வாழப்போவதில்லை, நல்லவேளை நீதிமன்றம் நமது வசவுகளிலிருந்து தப்பித்தது, ஏனென்றால் எப்படியும் தவறான தீர்ப்பு தான் சொல்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நீதிமன்றம் இந்த மாதிரி கேஸ்களில் எக்குத்தப்பானா தீர்ப்புக்களை கொடுக்கின்றது-கேரளா வழக்கு சிறந்த உதாரணம்.

 • Muthunarayanan Gopinath - Pondichéri,இந்தியா

  ஒழிந்தான் சைக்கோ கொள்ளைக்காரன் .

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  மனசாட்சியை யாரும் ஏமாற்றவே முடியாதுங்க. மனாட்சியே கொன்று விட்டது வக்கீல்களுக்கு வாத வேலைக்கும் நீதிபதி சிந்தனைக்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுவிட்டது. உண்மை ஒருபோதும் தோற்றது கிடையாது.

 • சாமி - மதுரை,இந்தியா

  நம்பிட்டோம்

 • YesJay - Chennai,இந்தியா

  ஒரு சில ஜாதி இயக்கங்கள் இதை கொலை என்றும் இவனை நிரபராதி என்றும் கூறுவார்கள். நீதிமன்றம் விசாரணையை துரிதப்படுத்தி இந்நேரம் தீர்ப்பு வழங்கி இருந்தால் இவனை தியாகி ஆக்கி இருக்க மாட்டார்கள்.

 • Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ

  சுவாதி, ராம்குமார் இருவரது வாழ்வும் அற்பமாக முடிந்துவிட்டது. இனிமேலாவது, கல்வி ஒழுக்கத்தையும், மனித மாண்பயும் போதிக்கட்டும். அரசு சாராயம் விற்பதை விட்டு விட்டு, பொதுமக்களுக்கு கல்வியை போதிக்கட்டும். ராம்குமார் குற்றவாளியா, நிராதிபதியா என்பதை அவரை படைத்த கடவுளிடம் விட்டுவிடுவோம். இனியொரு கொலை நடக்காவண்ணம் அரசும், தனிமனிதரும் பார்த்துக்கொள்ளுவோம்.

 • VELAN S - Chennai,இந்தியா

  என்னை பொறுத்த அளவில் இது மாதிரி கேசுகளை ஒரே நாளில் முடிக்கலாம் , நேரே நீதிபதியிடம் கொலையாளியை கொண்டு செல்ல வேண்டும், அங்கே தகுந்த ஆதாரம் இருக்கும்போது , நீதிபதி அவனை விசாரிக்க வேண்டும் , நீ கொலை செய்தாயா இல்லையா , கொலையாளி ஆமா , நான்தான் கொலை செய்தேன் என்று சொன்ன வுடன் , முடிந்தால் அங்கேயே தீர்ப்பை எழுதி , உடனே தூக்கில் போட்டு வேலையை முடிக்க வேண்டும் , 5 அல்லது 6 மணி நேரத்தில் முடிய வேண்டிய வேலையை வருட கணக்கில் சிறையில் வைத்து பிரியாணி போட்டு , கொண்டு செல்லும் இந்திய சட்ட விதி முறைகளை நான் ரொம்ப கீழ்த்தரமாக மதிக்கிறேன் . என்று இந்திய சட்ட விதி முறைகள் திருந்துமோ. பதவியிலுள்ள அரசியல்வாதிகளிடத்தில் இதை எடுத்து சென்று , ஜட்ஜமண்ட் வேகமாக கிடைக்க தீர்வு காண வேண்டும் . பார்ப்போம் .

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  இந்த சாவுக்கு சிறை துறை பொறுப்பேற்குமா?

 • chails ahamad - doha,கத்தார்

  பலரும் பல விதமான கருத்துகளை பகிருவதற்கு இடம் கொடுத்தது போலாகி விட்டது குற்றவாளியாக கருதப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துக் கொண்டது, சிறைச்சாலைக்குள் கைதியாக இருப்பவர் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவில் அங்கு உள்ள கண்காணிப்பில் கவனக்குறைவாய் சிறை காவலர்கள் இருப்பது பெரிதும் கவலைக்குரிய விடயமாகும் ,

 • Pa. Senthilkumar - Ramanathapuram

  காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 • raj tbm - telok blangah,சிங்கப்பூர்

  yivar thandikkappattirukka vum eppadiyum tirappe sari

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  Pavam intha payan, vithi ivanai mattum allamal avan kudumbathaiyum

 • Madhavan Parthasarathy - Chennai,இந்தியா

  ஸ்வாதியின் ஆவி தூங்க விடவில்லை -

 • Pannadai Pandian - wuxi,சீனா

  சோகமான செய்தியாய் இருந்தாலும் அவர் செய்த குற்றத்துக்கு அவரே தண்டனை கொடுத்துள்ளார். இதுக்கு பேருதான் நமக்கு நாமே திட்டம். நீதிபதிகள் சொதப்பி இருப்பர்.

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  இனி காவிரி பிரச்சனை பற்றி யாரும் பேசமாட்டார்கள்..ஒன்றை மறக்கடிக்க இன்னொன்று உருவாக்கப்படுகிறது. எல்லாவற்றிலும் அரசியல்...சூழ்ச்சி.

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  இது ஒரு பச்சையான படுகொலை. இந்த வழக்கு திசை திரும்பி உண்மை குற்றவாளிகளான சுவாதியின் அப்பா, சித்த்தப்பாவை நோக்கி திரும்புவதை தவிர்க்க, ஒரு அப்பாவி உயிர் பலி கொடுக்கப்பட்டுள்ளது.

 • பாரதி - dubai

  இந்த..கொன்னுட்டாய்ங்கல..

 • Dinakaran - Lahore,பாகிஸ்தான்

  எந்த அப்பன்தான் தன் பிள்ளை கொலையாளி என்று சொல்லுவான்.

 • Rajesh Rajan - bangalore,இந்தியா

  அடக்கடவுளே இவனை இனிமே கடவுளா ஆக்கிடுவாங்களே............ நாசமாப்போச்சு......

 • Anand Rao.v - Chennai,இந்தியா

  தற்கொலை செய்து கொண்டார் ஏன்? சனியன் செத்தான் என்பதில் மகிழ்ச்சியே.

 • அறிவாளி - நெல்சன் ,கனடா

  இவன் ஒரு அப்பாவி. வழக்கை மூடுவதற்காக ஏவல் துறையை கையில் வைத்திருப்பவர்களின் சதி.

 • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

  பாவம் இவனுடைய பெற்றோர் .... ஒரு பைத்தியத்தை பெற்றெடுத்துவிட்டோம் என்று நினைத்து நினைத்து அவர்கள் மனம் குமுறுவார்கள் ...

 • Ramesh Kumar - coimbatore,இந்தியா

  முழு உண்மையும் வெளிவராமலே அமுக்கப்பட்டு விட்டது....நிச்சயமாய் இதை ராம் குமார் தவிர மேலும் சிலரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.....

 • Veerasekar - Tokyo,ஜப்பான்

  ராம் குமார் தற்கொலை எல்லா மக்களுக்கும் நற்செய்தி. கொலை குற்றவாளிக்கு அரசாங்க செலவில் பாதுகாப்பு, உணவு போன்றவை ஏற்புடையது அல்ல. கொலை செய்பவர்களை கைது செய்து உணவு கொடுக்காமல் கொல்லவேண்டும். அப்பொழுது தான் பாதிக்கபட்டவர்கள் சிறிதளவாவது ஆறுதல் அடைய முடியும்.

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  கேஸை இழுத்து மூட வசதியா போச்சு....

 • Vikky - Singapore,சிங்கப்பூர்

  RIP

 • Jana - Chennai,இந்தியா

  ஹிஹி ..கேஸை முடிக்கணும்ல ..சிறையில் என்ன 2000V கரண்ட் ஆ ஓடுது

 • Kailash - Chennai,இந்தியா

  //சுவாதியை கொன்ற கொடூரன்// நீதி மன்றம் சொல்லிவிட்டதா போலீஸ் தானே சொல்லியது, அதற்குள்ள நீங்கள் சொல்லிவிட்டிர்களே ? பல விஷயம் வெளியே வரவில்லை போலீஸ் பல விஷயத்தை வெளியே விடவில்லை. RTI மூலம் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் இல்லை, இந்த முடிவு வரும் என்று முன்பே நினைத்தேன் நீதி மன்றம் சென்றால் பல கேள்விகளுக்கு போலீஸால் பதில் கூற முடியாது, ஆதலால் chapter ரை க்ளோஸ் செய்துவிடுவார்கள் என்று தான் நினைத்தேன். லைசென்ஸ் பெற்ற ரௌடிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த நாட்டில் சட்டமாவது புடலங்காவது. இனி ஒருவரும் தனக்கு என்ன நியாயம் என்று தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டும்.

 • senthil - narikudi,இந்தியா

  உண்மையில் இவன்தான் கொலையாளி என்றால், இவன் சாக வேண்டியவன் தான்.

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  சில வழக்குகள் இப்படித்தான் கையாளவேண்டும் என்பதுதான் உலக நியதி. அதனைத்தான் தமிழக போலீஸ் செய்துள்ளார்கள். இனி சாதியை தூக்கிக்கொண்டு அரசியல் செய்ய சிலர் கிளம்பிவிடுவார்கள். கோர்ட்டில் எப்படி வேண்டுமானாலும் தப்பிக்க முயற்சிக்க கூடும். இது போலீசாரின் திறமையின்மை என்று சொல்வோர் சிறுபிள்ளைகள்தான். என்கவுன்ட்டர் என்று எதிர்பார்த்த நிலையை சற்றே மாற்றி தன்கவுன்ட்டர் செய்யவைத்துவிட்டார்கள்..எப்படியோ இது ஒரு புதுமாதிரிதான் என்பதில் ஐயமே கிடையாது. இனி குற்றம் செய்ய எண்ணுபவர்களுக்கு எச்சரிக்கை..பினாமிகளுக்கு எப்படி தற்கொலை செய்ய வைக்கின்றார்களோ..அதனை போன்றுதான் இந்த குற்றவாளிக்கு கையாண்டுவிட்டார்கள்..இது சாதி கட்சியினரின் புலம்பலாக இருக்க கூடும்..நமக்கு அப்படி ஓர் எண்ணம் எழவே ...ழாது..நமது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிப்போம்..சுவாதிக்கு...அவரது ஆன்மா சற்றே இளைப்பாறக்கூடும்..ஸ்காட்லாந்த்து போலீசுக்கு மேலாக..நமது தமிழக போலீசார்..

 • Hari Ariyaputhry - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க நீதி மன்றம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும், ஏன் என்றால் அவர் நீதி மன்ற காவலில் தான் இருந்தார். இந்த மரணத்துக்கு நீதி மன்றம் என்ன பதில் சொல்ல போகிறது. எங்கே போகிறது நாம நாடு? அதிகாரம் உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அப்புறம் எங்களை மாதிரி எளியோருக்கு தான் இந்த சட்டமும் சாபமும்

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  தான் காதலித்தவள் தன்னை காதலிக்கவில்லை என்பதற்காக ஒரு பெண்ணை வெறித்தனமாக வெட்டிக் கொன்றவன். இவன் ஒரு தனிமைல் வைத்திருந்தது தவறு,i விரும்பி. ஒரு வெறி பிடித்த சைக்கோ. இவனை தனிமை சிறையில் வைத்திருந்தது மிகப்பெரிய தவறு, தான் சேய்த தவறினால் தான் விரும்பிய பெண்ணையும் இழந்து, தானும் தனிமைப்படுத்தகப்பட்டு, தண்டனையை எதிர்நோக்கும் நிலையில் ஒரு வெறி பிடித்தவன் போல தற்கொலைக்கான எந்த ஒரு ஆயுதமும் இல்லாத நிலையில் மின்சார வயரைக்கடித்து தற்கொலை செய்துகொண்டது இவனை ஒரு தீவிர சைக்கோ என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால் இவரது வக்கீல் மற்றும் பொழுது போகாதவர்கள் அரசியல் செய்ய நினைப்பார்கள்.

 • JOY - Chennai,இந்தியா

  கொன்னுட்டு தற்கொலையாம்பா , அதுவும் கொடூரனாம் , இவன் தான் ஸ்வாதியை கொலை செய்யவே இல்லைனு ஊரூகே தெரியுமே ..யாரை காப்பாத்த இந்த அப்பாவியை பலிக்காடாகினிங்க

 • Kumar - Chennai,இந்தியா

  அடக்கம் பண்ணியாச்சுது. சாப்டர் க்ளோஸ்.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இது முழுக்க உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை?

 • தமிழன் - சென்னை,இந்தியா

  பல உண்மைகள் குழி தோண்டி மறைக்கப்பட்டு விட்டன. பாவம்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அப்பாடா...., ஒரு வழியா ஒழிஞ்சான். ஒலகத்துல வாழ தகுதி இல்லாதவன் இவன். இந்தோ, இப்ப குருமா இவுனுக்கு மறுபடியும் வக்காலத்து வாங்க ஆரமிச்சிட்டான்....

 • Srinivasan Radhakrishnan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த ஒரு நிகழ்வு இயற்க்கையா அல்லது செயற்கையா என்பது பற்றி அதிகம் பேசப்படும். ஆனால் இது ஒரு மாதத்திற்கு முன்பே நடந்திருந்தால் இந்த அளவிற்கு அநாகரிகமான விவாதம் நடந்திருக்காது.

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். இனி பெண்கள் விஷயத்தில் வாலாட்டும் கயவர்களுக்கு இது ஒரு மறைமுக எச்சரிக்கையா ???

 • Adhiyaman Pv - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இப்படி ஒரு செய்தி வரும் என்று எதிர்பார்த்தது தான்....அவன் தற்கொலைதான் செய்து கொண்டான் என்பதை நாம் நம்புகிறோமோ இல்லையோ, கோர்ட் நம்பும். அது தானே வேண்டும்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  police ramkumarai kondruvittathu.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அவன் மின்சாரக் கம்பியை கடிக்கும் அளவு ஒயரிங் வெளியே உள்ளதா?

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  தானே கழுத்தறுத்துக்கொண்டு தானே கம்பியை கடிச்சி செத்துப்போன ராம்குமார் இப்படிப்பட்ட ஒரு கொலைகாரனை(??) எங்காவது கேள்விப்பட்டதுண்டா

 • Shanu - Mumbai,இந்தியா

  இவன் பாக்கிஸ்தான் பார்டரில் தீவிரவாதியிடம் சண்டையிட வைத்து செத்து இருக்க வேண்டும்

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  இன்று மின்சார கம்பியை கடித்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது சரி இதற்கு தானே காவல்துறை ஆசைப்பட்டது

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கழுத்தை யார் வெட்டினார்கள் என்று வீடியோ காட்டினால் ஒருவேளை நம்பலாம்.. இப்பொழுது கூட தற்கொலை செய்ய வசதியாக மின்கம்பி எப்படி வைத்து இருப்பார்கள்?

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  சாகட்டுன்னு விடுங்க சார்..... நாட்டுல 1008 பிரச்சனை இருக்கு இதுல இது போன்ற லூசுங்க வேற கடுப்பேத்திக்கிட்டு.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. இந்த செய்தி தேவையா ????? செத்து ஒழிந்தால் நல்லது தானே >>>>> ஒரு கழிசடை ஒழிந்தது என்று எல்லோரும் சந்தோசம் அடைவார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement