Advertisement

கமலின் தீவிர ரசிகை நான் - மனம் திறக்கிறார் நடிகை சஹானா

மயக்கும் மான் விழி, மின்னும் கன்னம், சொக்க வைக்கும் அழகு என இளைஞர்களின் மனதை சுண்டி இழுப்பவர் தான் நடிகை சஹானா. பல்வேறு படங்களில் முத்திரை பதித்தாலும், சமீபத்தில் திரைக்கு வந்து பட்டைய கிளப்பிய 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் பிரபலமான இவர், சூட்டிங்கில் 'பிசி'யாக இருந்தபோது 'தினமலர்' சண்டே ஸ்பெஷலுக்காக அளித்த சிறப்பு பேட்டி.* உங்களை பற்றி...சொந்த ஊர் கோவை. தற்போது சென்னையில் அம்மா பாரதியுடன் வசிக்கிறேன். அம்மா தில்ருபா இசைக் கலைஞர், ஆசிரியையாகவும் உள்ளார். வீட்டிற்கு ஒரு பெண் என்பதால் என்னை செல்லமாக வளர்த்தனர். இசை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் 7ம் வகுப்பு படிக்கும்போதே பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்றேன். * என்ன படித்துள்ளீர்கள்...சென்னை கிறிஸ்தவக்கல்லுாரியில் பி.பி.ஏ., படித்தேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், படிப்பை பாதியிலேயே கைவிட்டேன். இது எனக்கு வருத்தமளிக்கிறது. தொடர்ந்து படிக்க முயற்சி செய்து வருகிறேன். * முதல்பட வாய்ப்பு...அரூபம் எனது முதல் படம். பின்னர் சலீம் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்தேன். அப்படம் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்போது மூன்று படங்கள்கைவசம் உள்ளன. அதற்கு இன்னும் பெயர் முடிவாகவில்லை. டாக்டர் பரத்விஜய் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஆறாம் அறிவு' என்ற படத்தில் அவருடன் ஜோடியாக நடித்துள்ளேன்.விரைவில் திரைக்கு வரவுள்ளது. * யாருடன் நடிக்க ஆசை...கமல் சார் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது தீவிர ரசிகை நான். அவரின் மூன்றாம் பிறை படத்தை பலமுறை பார்த்துள்ளேன். எனக்கு 'ரோல் மாடல்' அவர் தான். அவருடன் எப்படியாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. கடவுள் கிருபை இருந்தால் நிச்சயம் அது நடக்கும்.* பிடித்த ஹீரோயின்...நடிகை ஸ்ரீதேவி. அவரை எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகாக இருப்பார். அவரைப்போன்று நடிக்க வேண்டும். அன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர்.* கிளாமராக நடிப்பீர்களா... கதாபாத்திரத்திற்கு ஏற்ப கிளாமராக நடிக்க பிடிக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிது. அதிலும் கிடைத்த வாய்ப்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது தான் ஒரு 'ஆர்டிஸ்டின்' கடமை. அந்த வழியை பின்பற்றி வருகிறேன்.* திருமணம் பற்றி யோசனை....அய்யோ. நான் இன்னும் சின்னப்பொண்ணுங்க. அதுபற்றி எந்த யோசனையும் இல்லை. நடிப்பதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அது பற்றி பிறகு யோசிப்போம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement