Advertisement

இயல்பாகவே நான் ஹோம்லி... சிலிர்க்கிறார் சின்னத்திரை வினித்தா

சின்னத்திரையில் கால்பதித்துபெரியத்திரையில் நுழைந்து சினிமாத்துறையில் வெற்றி பெற்றவர் பலர். இந்த வரிசையில் சந்தானம், சிவகார்த்திகேயனுக்கு முன்னோடியாக இருக்கிறார் வினித்தா. வேலுார் மாவட்டம் ஆற்காடை சேர்ந்த இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சினிமாக்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக வலம் வருகிறார். இது போதாது...நான் மேலே வருவேன்... சின்னத்திரையில் கலக்குவேன், ராதிகா மேடம் போல் வளருவேன் என விடாப்பிடியாக நேரமின்றி நடித்து வரும் இவர், பிசியான நேரத்திலும் 'தினமலர் சண்டே ஸ்பெஷல்' என்றதும்,தனி ஆர்வத்துடன் கூறிய பளிச் பதில்கள்...
* சின்னத்திரை , பெரியத்திரை வித்தியாசம் ...இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. சின்னத்திரையில் முகபாவனைகள் முக்கியம். நடிப்பில் சிறிய கவனம் சிதறினாலும் காட்டிக்கொடுத்துவிடும். மாட்டிக்கொள்வோம். பெரியத் திரையில் நடிப்பதும் கஷ்டம் தான். அடுத்தடுத்த சீன் வருவதற்குள் எப்படி நடிக்க வேண்டும் என தயாராகி கொள்ளவேண்டும். நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கும். கிடைக்கும் நேரத்தில் கதைக்குள் ஒன்றி நடித்தால் மட்டுமே சீன் நன்றாக அமையும்.
* நடிப்பு அனுபவம் ....2003 ல் அண்ணாமலையில் ராதிகா மேடத்துடன் குழந்தை நட்சத்திரமாக ஒரு சீனில் வந்து செல்வேன். அப்போது எனக்கு வயது 8. அன்றில் இருந்தே ராதிகா மேடம் போல் சின்னத்திரையில் கலக்க வேண்டும் என்பது எனது எண்ணம். இதை நிறைவேற்றவே அதிகம் கவனம் செலுத்துகிறேன். இதற்காக பெரியத்திரையில் வாய்ப்புகள் இல்லை என்றில்லை. இதுவரை 40க்கு மேற்பட்ட படங்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளேன். 5 படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். பெயர் செல்லும்படி படங்கள் அமையாவிட்டாலும். கேரக்டர் ஆர்டிஸ்டில் என்னை மேல் இடத்திற்கு கொண்டு சென்றது.
* நீங்கள் நடித்த படங்கள் ...பார்த்திபன் நடித்து இயக்கிய கண்ணாடி பூக்கள், லீ, மாயக்கண்ணாடி. ஜூன் ஆர், மாசிலாமணி, மதயானைக் கூட்டம், மஞ்சப்பை, ஆறாவதுசினம், பதினாறு என சொல்லி கொண்டே போகலாம். ஹலோ நான் பேய் பேசுகிறேன் படத்தில் காமெடி ரோல் எனக்கு பெயர் வாங்கித்தந்தது. விஜய் சாருடன் கத்தி, தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற படங்களிலும் நடித்துஉள்ளேன். சின்னத்திரையில் தற்போது பெம்மலாட்டம், கேளடி கண்மணியில் நடித்து வருகிறேன்.
* மறக்க முடியாத அனுபவம் ...'கத்தி'யில் விஜய் சாருடன் ஒரு சின்ன ரோல் செய்தேன். அவருடன் நடித்ததே பெரிய அனுபவம். இயக்குனர் சமுத்திரக்கனி என்னை எப்போதும் குட்டிம்மா... குட்டிம்மா...என செல்லமாக அழைப்பார். ஆறாவது சினம் படத்தில் லீட்ரோல் செய்தேன். படத்தை பார்த்தால் நீங்களே... எப்படி இப்படி என கேட்பீர்கள். இப்படத்தை பார்த்து சமுத்திரகனி சார், குட்டிம்மா நல்லா பண்ற... என பாராட்டினார்.
* சினிமாவில் நுழைந்தது ...நான் சிறுகுழந்தையாக இருக்கும் போது, ஒரு மேக்கப்மென் நீ பெரிய ஆர்டிஸ்டா வருவ என கூறிச் சென்றார். முதலில் அவர் வாயில் சர்க்கரையை போடனும், அவர் வார்த்தை மெய்ப்பிக்கும் விதமாக என் வாழ்க்கை மாறி போனது. இதற்கெல்லாம் ஊக்கம் தந்தவர் எனது பாட்டி மகாலட்சுமி. சென்னை நெசபாக்கத்தில் தங்கியிருந்து சினிமா வாய்ப்பு தேடிய போது, உணவில்லாமல் தவித்தோம். என் கையை இழுத்து பிடித்து ஒவ்வொரு ஸ்டுடியோவாக வாய்புக்காக ஏறி இறங்கினார். அவரது முயற்சியில் தான் தற்போது நடிகையாகி உள்ளேன்.
* கிளாமராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால்...கண்டிப்பாக நடிக்க மாட்டேன். என்னை பார்த்தாலே ஹோம்லி கேரக்டருக்கு மட்டுமே சூட்டாவதாக பலர் கூறுகின்றனர். இதையும் தாண்டி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றால் கிளாமராக நடிப்பேன். நான் இயல்பாகவே ஹோம்லி தானுங்க.
* உங்களது பிடித்த ஊர்தேனி ஆண்டிபட்டி, மதுரை, மூணாறு. இவ்விடங்களில் பல நாட்கள் சூட்டிங் சென்று உள்ளேன். இயற்கை கொஞ்சும் அழகில் மெய்சிலிர்க்கும் அனுபவம் உண்டு.
* அடுத்த லட்சியம்...எனக்கு என்ன லட்சியம் இருக்க போகுது. சினிமாவில் சாதிக்கனும், ஸ்டார் நடிகையாக வராவிட்டாலும் சரண்யா பொன்வண்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன் போல் பெயர் வாங்கிய பெண்ணாக வருவேன். இதில் சந்தேகம் வேண்டாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement