Advertisement

குடிநீரில் கழிவுநீர் கலப்பால் மர்ம காய்ச்சல்: கலெக்டரிடம் புகார்

திருவண்ணாமலை: குடிநீரோடு கழிவு நீர் கலந்து வருவதால் மர்ம காய்ச்சல் வருவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை அருகே, சு.நல்லூர் கிராமத்தில், 2,000 பேர் வசித்து வருகின்றனர். பஞ்., தலைவராக ஏழுமலை உள்ளார். இந்நிலையில் அந்த கிராம காலனி பகுதியில், கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்படாததால், குடிநீரோடு கழிவு நீர் கலந்து வருகிறது. மேலும், கழிவு நீர் தெருக்களில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு அடிக்கடி அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், திடீரென நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், கலெக்டர் பழனியை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement