Advertisement

சரமாரியாக அவதூறு வழக்குகள் தொடரும் தமிழக அரசுக்கு நெத்தியடி!: விமர்சனங்களை சகிக்கும்படி ஜெ.,வுக்கு நீதிபதிகள் 'அட்வைஸ்'

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட மீடியாக்கள் மீது, சரமாரியாக அவதுாறு வழக்குகளை தொடர்ந்துள்ள தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நெத்தியடி கொடுத்துள்ளது.
'பொது வாழ்க்கையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும்' என்றும், நீதிபதிகள் அறிவுரை கூறியுள்ளனர்.

தமிழக அரசு தொடர்ந்துள்ள பல்வேறு அவதுாறு வழக்குகளை எதிர்த்து, தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிவுரை அளிக்கும் வகையில் நீதிபதிகள் கூறியதாவது:

ஆரோக்கியமான ஜனநாயகம் வேண்டும்; ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முடியாது.
நீங்கள், பொது வாழ்க்கையில் இருப் பதால், சிலர் உங்களை விமர்சனம் செய்வர்; அந்த விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கொள்கை விமர் சனங்கள் அவதுாறு பேச்சுக்கள் ஆகாது. ஆனால், நீங்கள் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி, அவதுாறு வழக்குகள் தொடர்ந்துள்ளீர்கள். தேவையெனில், நீங்கள் தனிப்ட்ட முறையில் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

அரசியல் விரோதத்தை தீர்க்க, அவதுாறு சட்டத்தைபயன்படுத்தி உள்ளீர்கள். நாட்டிலே யே தமிழகத்தில் மட்டுமே, இதுபோல் அவதுாறு வழக்கு சட்டம், துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து, இது போன்ற வழக்குகள் இங்கு வரவில்லை.

உடல் நலம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு, ஓய்வு எடுப்பது குறித்து கூறியதற்கு, குடிநீர் பற்றாக்குறை மற்றும் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை என்று கூறியதற்கு எல்லாம், அவதுாறு வழக்கு தொடரப்பட்டுள் ளது.அவதுாறு வழக்கு சட்டம், தவறாக பயன் படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், அந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஜனநாயகம் ஆரோக்கிய மானதாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், மக்களின் கேலிக்கு ஆளாக நேரிடும்.

விமர்சனம், எதிர்ப்பு, சகிப்புத்தன்மை, எதிர்பார்ப்பு போன்ற அனைத்தும் அடங்கியதே
ஜனநாயகம். விமர்சனம் செய்ததற்காக, ஜனநாயகத்தின் இறக்கையைவெட்டி விடக் கூடாது. மக்களுக்காக, மக்களால், மக்களுக்கான அரசு என்பது தான் ஜனநாயகம்; அதை குலைக்க வேண்டாம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, அடுத்த மாதம், 21க்குள் பதிலளிக்கும்படி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

213 அவதுாறு வழக்குகள்:

கடந்த, 2011 மே, 16 முதல், 2016, ஜூலை, 28 வரை, தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதுாறு வழக்குகள் பட்டியல், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 70 பக்கங்கள் அடங்கிய இந்த பட்டியலில், மொத்தம், 213 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு எதிராக எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பதன் விபரம்:

தி.மு.க.,வுக்கு எதிராக, 85 வழக்குகள்; பத்திரிகைகள், மீடியாக்கள் மீது, 55 வழக்குகள்; தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீதான, 28 வழக்குகள் உட்பட, தே.மு.தி.க. மீது, 48 வழக்குகள்; பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி மீது ஐந்து; காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏழு வழக்குகள் உட்பட, மொத்தம், 213 அவதுாறு வழக்குகள் தமிழக அரசால் தொடரப்பட்டுள்ளன.
- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (143)

 • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

  அவர் கையில் மீண்டும் ஆட்சியை கொடுத்தால் அப்படிதான் ........

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  ஆன் அல்லது பெண் எப்போதுமே நான் நான் என்று சொல்லினேனே இருக்காளா அவ்ளோதான்

 • X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா

  விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களோடு இந்தப் பரிசும் உரித்தாகுக..

 • Ashok - Trichy,இந்தியா

  சகிப்புத்தன்மை இல்லாத தலைவர்கள், பணத்துக்கு வோட்டு போடும் எதையும் சகிக்கும் அல்லது கண்டும் காணாமல் செம்மறி ஆட்டு கூட்டம் போன்ற பொதுஜனம் - இதில் ஒன்றாவது மாறவேண்டும் விடிவு பிறக்க. அதுவரை எந்த நீதிமன்ற உத்தரவும் தமிழ்நாட்டு தலை எழுத்தில் மாற்றம் செய்ய முடியாது. இன்றைய தேவை மக்களிடம் மாற்றம் அதாவது நல்ல தலைவர்களை அடையாளம் காண்பது, பிறகு அவர்களிடம் நம்பிக்கை தும்பிக்கை போல் வைத்து வோட்டு போடுவது. இது மட்டுமே விடிவுக்கு ஆன வழி.

 • Kannan Krishnamurthy - Chennai,இந்தியா

  அதிமுக அரசு, தனக்கு வேண்டாதவர்கள் மீது அவதூறு மற்றும் கஞ்சா வழக்குகளும் போடும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தனது வளர்ப்பு மகன் மீதே கஞ்சா வழக்கு போட்டார் முதல்வர். கஞ்சா உபயோகிப்பவரை ஏன் தத்து எடுக்க வேண்டும்? கஞ்சா உபயோகிப்பவர் என்பது தத்து எடுக்கும்முன் தெரியாதா? மற்றும் ஒரு இளம் பெண் மீதும் கஞ்சா வழக்கு போடப்பட்டது.பின் அந்த பெண் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். ஜெயேந்திரர் மீது கொலை வழக்கு போடப்பட்டு ஜெய டிவி இல் அவர் மீது பலவிதமான அவதூறு பரப்பப்பட்டது. ஆக இந்த அரசு எல்லா விதமான முறைகளிலும் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தினாலும் வேறு வழி இல்லாமல் இவரை தேர்ந்து எடுக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் கருணாநிதி என்ற தீய சக்தி தான். எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று தமிழ்நாடு இருக்கும் நிலையில், நீதிபதிகள் அறிவுரை கூறி நேரத்தை வீண் அடிக்காமல் தீர்ப்பை வழங்க வேண்டும். குரங்கிற்கு அறிவுரை கூறி ஊசி மூஞ்சி மூடா எனக்கு கூடு கட்ட தெரியாது கட்டிய கூட்டை பிரிக்க தான் தெரியும் என்ற குருவியின்கதையை நீதிபதிகள் அறியாதவர்கள் போலும்.

 • எல்.கே.மதி - Lalgudy,இந்தியா

  அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகைகள் உள்ளிட்ட மீடியாக்கள் மீது, சரமாரியாக அவதுாறு வழக்குகளை தொடர்ந்துள்ள தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நெத்தியடி கொடுத்துள்ளது. இது நெத்தியடி இல்லை.சரியான செருப்படிதான். ஊர் மக்கள் பணத்தில் சட்டமன்றத்தைக் கூட்டி, ஜால்ராக்களை வைத்து, அம்மா போற்றி பாடவைத்து, ஆனந்தப்படும் ஒரு கட்சியின் தலைவியை தமிழகத்தில் மட்டுமே காண முடியும் கேவலம்

 • எல்.கே.மதி - Lalgudy,இந்தியா

  பொது வாழ்க்கையில் இருப்பதால், சிலர் உங்களை விமர்சனம் செய்வர். நேர்மையாக நடந்தால் ஏன் விமர்சனம் செய்யப் போகிறார்கள்? ஊரை அடித்து உலையில் போடுவதை பலர் கண்டுதானே வழக்கும் விமர்சனமும் வைக்கின்றனர்? கையில் இருக்கும் கொள்ளையடித்த பணத்தை அபராதம் கட்டிவிட்டு, சுத்த சுயம்புவாக 'மேக்-அப்'போட்டு உலகுக்குக் காட்டிவிட்டால் போதுமா? மானம் இருந்தால்தானே வெட்கப்பட? தலைக்குமேலே தண்ணீர் ஜான் போனால் என்ன/ முழம் போனால் என்ன?

 • skandh - chennai,இந்தியா

  அப்படின்னா இது தான் ஜனநாயகமாச்சே நீதிபதியை பத்தி சொன்னால் மட்டும் பொத்துக்குது.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இதெல்லாம் இருட்டுக்கட்டும் மை லார்ட் . சொத்துகுவிப்பு வழக்கில் எப்போது ஜெயாவை தூக்கி உள்ள போடுவீங்க . இல்ல குமாரசாமி மாதிரி கணக்குல தப்பு விடுவீங்களா .

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அம்மாடா, இப்போ கூட 69 வயதில் புஷ்பா சசிகலாவை பளார் என்று அறைந்த அம்மாடா. நீதிபதியெல்லாம் ஒரு ஜுஜுபி? என்னுடைய நான், எனது, என்னுடைய என்ற வார்த்தைகளின் முன்னே அறிவுரையாவது, நங், நங் என்ற குட்டாவது ஒண்ணும் செல்லுபடியாகாது?

 • murugaiyan.r. _ Pudukkottai - pudukkottai,இந்தியா

  பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும்' என்றால் இந்த Section ஐ எடுத்து விடலாம் அல்லவா . நீதிபதிகள் நீதி மட்டுமே வழங்க வேண்டும் . ஆலோசனைகள் அல்ல .

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  நீதிபதிகள் மீது அவதூறு வழக்கு தொடராமல் இருந்தால் சரி.

 • John - Chennai,இந்தியா

  இங்க உள்ள கருத்துக்களெல்லாம் படிச்சா, முதுகெலுப்பில்லாத கூன் விழுந்த அடிமை கூட்டத்திற்கு இன்னிக்கு நிச்சயம் தூக்கம் வராது..சொம்பு சேகரனுக்கு சுத்தமா வராது..

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  அரசியலில் இருந்தால் விமர்சனங்களை பொறுத்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் கௌரவக்குறைவான போச்சுகளால் அதாவது மனம் புண்படும்படிபேசினால் அவதூறு வழக்கு தனிப்பட்ட முறையில் வழக்கு பதிவு செய்யலாம். அது உரிமையாகும். அதனால்தான் அக்கால பெரியோர் மானங்கெட்டவன் ஊருக்கு பெரியவன் என்றார்களோ...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  வக்கீலுங்க போராட்டத்துக்கு அப்புறம் பொறுமை காக்கணும்னு எல்லோருக்கும் தெரியுது போல.

 • verdad - Vellore,இந்தியா

  அது சரி, சுப்ரிம் கோர்ட் தீர்ப்பு எப்ப ? நாம அமைச்சர்கள் மண்ணு சாப்பாடு சாப்பிட போக நேரமாகலியா ?

 • verdad - Vellore,இந்தியா

  கோர்ட் இப்படித்தான் வக்கணையா சொல்லும், தீர்ப்பு வரும்போது நீதிபதி வைப்பாறு ஆப்பு . நம்ம கிராமத்து பஞ்சாயித்துல குத்தம் பண்ணனவனா செமையா கண்டிச்சுட்டு, தீர்ப்பை அவனுக்கு சாதகமா குடுத்துடுவாங்க.

 • RRavichandran - Doha,கத்தார்

  இவ்வளவு கருத்து இந்த அரசுக்கு எதிர்மறையாக வருகிறது. எப்படி வெற்றி பெற்றது அ.தி.மு.க., வாக்கு அளிக்கப்பட்டதா? அல்லது பிடுங்கப்பட்டதா?.

 • Achchu - Chennai,இந்தியா

  ஏற்கனவே அனுப்பிய நோட்டீஸ் வரவில்லை என்கிறார் இரண்டாவது முறை நோடீஸ் அனுப்ப உத்தரவிடுகிறார்கள் கூல் கூல் அத்தனை கூல் உச்சநீதி மன்றம் பேஷ் பேஷ்

 • Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ

  இந்நேரம் நானா இருந்தா, பதவியை உதறி தள்ளிட்டு மானம் தான் பெரிசுன்னு நெனைச்சு போயிட்டே இருந்திருப்பேன்.

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  ஒரு நல்ல குடும்பத்தில் வளர்த்த எவருக்கும் இந்த குட்டுக்கள் கொஞ்சமாவது வெட்கத்தை கொடுத்து திருத்தும்..

 • rajan. - kerala,இந்தியா

  திருத்த முடியாத ஜென்மங்களுக்கு உபதேசம் உச்சிதம் அல்ல. தவறுக்கு அரசின் முக்கிய பதவி சுகம் அனுபவிப்பவர்கள் கடுமையான தண்டனை மூலம் தான் திருத்த பட வேண்டும். டான்சி கேஸுக்கு கோர்ட் அளித்த தீர்ப்பால இந்த ஆயாம்மா திருந்தினாகளா என்பது ஆலோசிக்க வேண்டிய விஷயம்?

 • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

  உண்மை நிலை அறியாத நீதிமன்றம். தமிழ் மக்களின் ருசி என்ன என்று அறிந்து அவர்களை கவருவதற்காகவே எல்லா தமிழக கட்சிகளும் விதூஷக மேடை பேச்சாளர்களை ஊக்கி வளர்க்கிறார்கள். கட்சிகளுக்கு ஒரு கொள்கை வேறுபாடே இல்லை. பொய்களையும் புரளிகளையும் சின்ன திரையில் தினம் தினம் பார்த்து பழகி போன தமிழ் மக்களை கூட்டங்களுக்கு ஈர்க்க அதை விட அதிகம் பேசுவதே வழி என்று நினைக்கிறார்கள். வெட்கமில்லாமல் இந்த வழியாய் பின்பற்றும் அசிங்கத்தை வேறு எப்படி நிறுத்தமுடியும் என்று நீதிபதி சொல்லட்டும். இது போன்ற வழக்குகளுக்கு தமிழ் அறியாத நீதிபதி கருத்து சொல்வது சரிதானா? கூட்டங்களின் முழு விஐடியோக்களையும் பார்த்து பின் பேசுவது சரியாகும். அரசின் செயல் பாடுகளை பற்றி தவறான கருத்துக்களை கூறுவதை அரசுதானே எதிர்க்கவேண்டும்.

 • $$$$ - $$$$,இந்தியா

  ச்சேய்...அசிங்கப்பட்டு போனோமே...

 • Tamilan - California,யூ.எஸ்.ஏ

  இந்த அம்மாவுக்கும் சொம்பு பிடிக்கும். கூன் விழுந்த முதுகெலும்பில்லாத அல்லக்கைகள் இப்போது என்ன சொல்ல போகிறார்கள். இந்த பொம்பளைக்கு என்னமோ வானத்தில் இருந்து குதித்து வந்தது போல நெனப்பு. இந்த ஆட்டம். இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம்.

 • Murali - Ariyalur,இந்தியா

  தமிழ்நாட்டில் ஊடகங்கள் சரியாக அதன் பணிகளை செய்தால் மட்டுமே மாற்றம் வரும்..இந்த அவதூறு சட்டத்திற்கு பயப்படாமல் தினமலர், விகடன், புதியதலைமுறை,பாலிமர் போன்றவைகள் கடமை ஆற்ற வேண்டும்.

 • Murali - Ariyalur,இந்தியா

  தினமலர் பத்திரிகைக்கு பாராட்டுக்கள் ,.என்னுடைய நேற்றைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள். தமிழ்நாட்டில் ஓரளவுக்கு தைரியமாக உண்மையாக செய்தி வெளியிடுவதால் தான் இன்னும் தினமலர் வாசகர்களை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது ...மற்ற ஊடகங்கள் போல் சினிமாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் உண்மையான செய்திகளை உரக்க அதன் சாயலிலே சொல்லி இருப்பதற்கு வாழ்த்துக்கள் ..

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  தமிழக அரசு இதுல காட்டுற வேகத்த எதிலேயிம் காட்றது இல்ல? ஏன்னா அவங்களுக்கு வேற எதுவும் தெரியாது.அந்த % ஐ தவிர.

 • Raja - Doha-Qatar,இந்தியா

  இந்த அம்மாவுக்கு எத்தனை தடவை குட்டு வைத்தாலும் .....அசிங்கப்படுறதே வேலையா போச்சு...தூ ....

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இது எல்லாம் சூடு சொரணை இருக்குறவங்களுக்கு மட்டும் தான்

 • srini - bgl

  All should congratulate captain Vijayakanth who relentlessly pursued this case.

 • Balaji - Khaithan,குவைத்

  இதெல்லாம் இந்தம்மாவுக்கு உரைக்குமா என்று தெரியவில்லை.... ஏனெனில் கொட்டு வாங்கியே பழக்கப்பட்டு விட்டதால் இது ஒன்றும் பெரிதாக பாதிப்பை இந்தம்மாவுக்கு ஏற்படுத்தாது....... திருந்தினால் அல்லது திருந்த முயற்சித்தால் நன்றாக இருக்கும்...... மக்களின் பணத்தை அனாவசியமாக பயன்படுத்துவதை உச்ச நீதிமன்றமும் மறைமுகமாக சுட்டிக்காட்டி விட்டது என்பதை புரிந்துகொண்ட இனி செயல்பட்டதால் நன்றாக இருக்கும்.......... செய்வீர்களா???? நீங்கள் செய்வீர்களா???????

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  அவதூறாய் பேசுபவர்களும் சட்டசபையில் இருந்தவர்கள், இருப்பவர்கள். அவர்களும் அவதூறாக பேசுவதை விடுத்து கண்டிப்புடன் பேசினால் நல்லாய் இருக்கும்.

 • இளங்கோ - chennai,இந்தியா

  தமிழக ஆளும் கட்சி வானத்திலிருந்து குதித்து விட வில்லை.... சொல்லி கொள்வது மக்களால் மக்களுக்காக என்று, ஆனால் செயல்பாட்டிலோ நான், எனது ஆட்சி எனது ஆணை என்று.... வழக்குகள் போடுவதோடு நிறுத்தி கொள்வது ஏன்? எத்தனை வழக்குகளை தொடர்ந்து நடத்தி தீர்ப்பு பெற முயற்சி எடுக்கபட்டது. திரும்ப பெறப்பட்ட வழக்குகள் எத்தனை? ஏன்?(உ-ம் நாஞ்சில் சம்பத்). அவதூறுகள் பாராட்டுகளாக மாறி விட்டனவா?

 • christ - chennai,இந்தியா

  நான், எனது,ஆணவம், திமிர், பணபலம் இவற்றின் உச்ச கட்டம் தான் இது . சில ஜென்மங்களுக்கு எத்தனை முறை கொட்டு வாங்கினாலும் புத்தி வரமாட்டேன் என்கிறது.எத்தனை முறை செருப்படி வாங்கினாலும் சொரணை வரமாட்டேன் என்கிறது .

 • Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா

  'பொது வாழ்க்கையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும்'. என்று ஆலோசனை தான் வழங்கியிருக்கிறார்களே தவிர உத்திரவிடவில்லை. இதை ஜெ.விரும்பினால் ஏற்கலாம் அல்லது நிராகரித்து விடலாம். மேலும், தலைப்புச்செய்தியாகும் அளவுக்கு இது இறுதித்தீர்ப்பும் அல்ல. இதே நீதிமன்றம்தான் ராகுல்,கெஜ்ரிவால் போன்றவர்களுக்கு எதிராக பிரதமரை விமர்சித்த அவதூறு வழக்கில் " தலைமை பொறுப்பிலுள்ளவர்களை மனம்போன போக்கில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் கண்ணியத்தை காக்க இத்தகைய சட்டங்கள் கட்டாயம் தேவை'..என்று கூறியுள்ளது . இதனால் விஜயகாந்த் உள்ளிட்டோர்களின் சந்தோசம் கொஞ்சநாள் கூட நிலைக்கப்போவதில்லை.

 • Nellai Vendhan - Tirunelveli,இந்தியா

  இதே போன்று நீதிபதிகளையும் தரப்பட்ட தீர்ப்பையும் விமர்சித்தால் உடனே கோர்ட் அவமதிப்பு என்று வழக்கு தொடர்வது ஏன் என்பதை சொன்னால் நன்றாக இருக்கும். உங்களுக்கும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டியது தானே? ஒரு முதல்வரும் பிரதமரும் சந்திப்பதை வக்கிரமாக பேசுவதையும் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்.ஆனால் உங்களின் தீர்ப்பையே இல்லை உங்களையோ பேசி விட்டால் நீதிமன்றத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் தண்டனை. உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவளுக்கென்றால் தக்காளி சட்னி.

 • அம்பை சுதர்சனன் - கொடைக்கானல் ,இந்தியா

  இது ஒருவகையான மன பாதிப்பு. வழக்குகளை சந்தித்தே பழக்கப்பட்ட ஒருவரால் தான் இப்படி மற்றவர்கள் மேல் வழக்குகள் தொடர முடியும்.

 • grg - chennai,இந்தியா

  whether the public can critize the court judgements? whether the judges will accept that?

 • எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா

  இது போன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் தனி மனித விமர்சனத்திற்கு வழி வகுக்கும். ஆனாலும் அரசு அவதூறு வழக்குகளை முறையாக செய்யாமல் கண்டபடி போட்டதன் விளைவு இந்த சவுக்கடி.. பென்சில் எடுத்துட்டான், பேனா எடுத்துட்டான், என்னை கிள்ளிட்டான் என்ற ரகம் அவர்கள் போட்ட அவதூறு வழக்குகள்..நீதிமன்றம் சொல்ற "பல தீர்ப்புகளை" மக்கள் "சகிப்பு தன்மையோடு" கேட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நீதிமன்றம் அறிய வேண்டும்.

 • Pillai Rm - nagapattinam,இந்தியா

  தமிழ் தெரிந்த நீதிபதி தான் அல்லா வழக்கையும் வெசாரிக்கோணும், அப்போதான் விளங்கும்.

 • Jana - Chennai,இந்தியா

  தம்பி சொம்பு சேகர் .. சிங்கப்பூர் ல இருந்து அம்மா என்ன செய்யதாலும் கூவுரியே.. நிச்சயமாக நீ அம்மாவின் பினாமி தான் .. கட்சி அபிமானியாக இருக்கலாம் அதுக்காக எவ்வளவு தப்பு செஞ்சாலும் ஜால்றா போடுறியா .. முடியல தம்பி நீ நல்லா வருவே

 • Kaliraja Thangamani - Chennai,இந்தியா

  தமிழக அரசியல் மேடைகளில் , தி மு க மற்றும் அ தி மு க வினர் பேசும் இழிவான பேச்சை 50 ஆண்டுகளாக , தமிழ் நாட்டு மக்கள் சகித்து கொண்டு, அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள். கழகங்களின் ஆட்சி முடியும் நாள் , தமிழர்களுக்கு நல்ல நாள்.

 • லாரல் - மதுரை,இந்தியா

  திரு.ராமன் கணேசன், மதுரை அவர்களே, அந்த அம்மா யாரும் இல்லாத எதிர்வரிசையை பார்த்து ஏன் பேசுது என்று கேட்கிறீர்கள். அந்த அம்மா நடிகையாக இருந்தவர். எதிரில் யாரும் இல்லாமல் ஆனால் இருப்பதை போல் நினைத்துக்கொண்டு வசனம் பேசி பேசியே பழக்கப்பட்டது. அதே நியாபகத்தில் தான் இங்கும் பேசுகிறது. எதிரில் யாரும் இருந்தால் பேச்சு வராது.

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  நல்லா சொல்லுங்க நீதிபதிகளே உரைக்கட்டும் மக்கள் பணத்தை இப்படி விரயம் செய்ய கூடாது.திமுகவும் ஆட்சியில் இருந்தது நீங்கள் எத்தனை விமர்சனம் செய்தீர்கள் என்னைக்காவது வழக்கு போட்டிருக்கிறார்களா? நான் நல்லதுக்கு சரி இல்ல திருந்த பாருங்கள் .

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  அதான் செவப்பு கலர்ல _________ போட்டுட்டீங்களே அதுக்கு மேல இந்த தீர்ப்புக்கு கருத்து போட யாராலயும் முடியாது.

 • Karuppu Samy - MRT,சிங்கப்பூர்

  விசயகாந்து இங்க வாங்க அரசை நோக்கியும் கொஞ்சம் துப்புங்க...நல்லா நல்லா துப்புங்க.

 • hindu desiyavathi - bangalore

  சுப்ரீம் கோர்ட் மீது அவதூறு வழக்கு போட்டுட போராங்க அம்மா

 • Hari Ariyaputhry - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆட்சியாளர்கள் நன்கு சிந்திக்க வேண்டும். சகிப்புத்தன்மை ஜெயாவிடம் சுத்தமாக இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் இன்னும் பக்குவ பட வேண்டும் அரசியலில், அரசியல் விமர்சனங்களை அரசியல் ரீதியாதான் அணுகவேண்டும். அதை விடுத்து எடுத்ததற்கு எல்லாம் அவதூறு வழக்கு என்றால் என்ன அர்த்தம், இப்போதைக்கு தமிழ் நாட்டில் ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் ஜெயா மட்டும் தான், அவர் இன்னும் இந்த மாதிரி கடுமையான செயல்களை விட்டால் இன்னும் மக்களிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்,

 • John - Chennai,இந்தியா

  தலைப்பு சவுக்கடி என்றல்லவா இருக்க வேண்டும்

 • Raman Ganesan - Madurai,இந்தியா

  பெரிய அம்மா அம்மா என்று சப்போர்ட் செய்யும் சொம்பு சேகர், பரந்தாமன் இவங்க எல்லாம் உங்க மூஞ்சில நீங்களே கரிய பூசிக்குறீங்க. உங்க அம்மா, அவங்க ஆளுக என்ன கேவலமா கனிமொழி பத்தி பேசுறாங்க. அத பத்தி ஏன் பேச வாய் வரல. திமுக தலைவர் பத்தி மனைவி, துணைவி அப்படி பேசும் போது எங்க போனீங்க. சட்டசபைல என்ன கேவலம் நடக்குது. ஒரு நடிகன் டெய்லி பாட்டு பாடுறான் அத உங்கஅம்மா ரசிச்சு ரசிச்சு சிரிக்குது வெட்கமா இல்ல. ஒரு EX டிஜிபி கபாலி வசனம் பேசுறாரு. உங்க அம்மாவின் அடிமைக்கூட்டம் டேபிள் தட்டுது. யாருமே இல்லாத எதிர் கட்சி வரிசையை பார்த்து உங்க அம்மா பேசுது. யாருமே இல்லாத டீ கடைல யாருக்கு டீ ஆத்துது. இனிமையாவது அவங்க ஆளுக பக்கம் பார்த்து பேச சொல்லுங்க

 • kdadhi - Bangkok,தாய்லாந்து

  என்ன சேகர் உன்கருத்து ennaa..?

 • senthil - chennai,இந்தியா

  ஒரு தனிப்பட்ட பெண்மணியை வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினால் என்ன தான் பண்ணுவது ......எங்கள் நியாயத்தை எங்கு தான் சொல்லுவது ......

 • Selva Raj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆணவகாரியின் அடிமைகளும் அல்லக்கைகலும் அமைதியாக இருந்தால் அனைத்து ஆட்டமும் அடங்கிவிடும்

 • suresh - omaha,யூ.எஸ்.ஏ

  தலைக் கனம் மிகக் கொண்ட ஜெயாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு குட்டு ஒத்தடம் கொடுத்தது போல இருக்கும்.வேற ஏதாவது ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தால் தேவலை.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  இந்த கேவலமான அரசியல் பொழைப்பு தேவைதானா. ஈ எறும்புக்கு உள்ள சூடு சொரணை கூட இவருக்கு கிடையாது. அண்ட வீட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையே ங்கிற மாதிரி மக்களின் வரி பணத்தை தவறாக பயன்படுத்த இது யாரு. வேணுமானால் சொந்த பணத்தில் சொந்த வக்கீல் வச்சு வாதாடட்டும். கேவலம் கேவலம் கேவலம். கேடு கெட்ட கேவலம். தமிழக மக்களின் தலைவிதி இப்படி ஒரு தல தமிழ்நாட்டுக்கு. குடிகாரப்பயல்களின் தேர்வு.

 • M.S.Jayagopal. - Salem,இந்தியா

  இவரைப்பார்த்து மற்ற மாநில முதல்வர்கள் இதுபோல் செயல்படவும் வாய்ப்பு உள்ளது.

 • mindum vasantham - madurai,இந்தியா

  விஜயகாந்த் தனது பேச்சுக்களில் ஆபாசத்தை தவிர்த்தே வருகிறார் , இவர் கொஞ்சம் தலைமை பண்பை வளர்க்க வேண்டும் , இணையத்தில் செய்தி குழு உருவாக்க வேண்டும் , மற்றும் இவர் பையனுக்கு தமிழ் இனத்தில் பெண் எடுக்கலாம் , ஏன் தலித் இனத்தில் நல்ல பெண் எடுக்கலாம் ..... சாதி என்பதே காலத்திற்கேற்ப மாறுபடுவது தானே

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  சொரக்கா வெள்ளீரிக்கா இல்லாதவங்களூக்கு எல்லாம் இது ஒரைக்கவா போகுது, இவுங்க உச்ச நீதி மன்றத்து மேலேயே அவதூறு வழக்கு போட்டாலும் போடுவாங்க .எல்லாம் பணம் காப்பாத்துங்கற நெனப்புதான் வேறென்ன?

 • Malarvannan - chennai,இந்தியா

  எத்தனை முறை நீதிமன்றத்தில் குட்டுப்பட்டாலும் ஜெயலலிதாவுக்கு உரைக்காது..ஆணவம் அகங்காரம்.... சகிப்புத்தன்மையற்ற சிந்தனை...இவற்றின் மொத்த உருவம்தான் ஜெயா.... எத்தனை வழக்குகள்..... ஜெயாவின் வெறித்தனத்துக்காக கோடிக்கணத்தில் மக்களின் வரிப்பணம் வழக்கு செலவுக்காக வீணடிக்கப்படுகிறது..நீதிமன்றத்தின் நேரமும் வீணடிக்கப்படுகிறது

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  சிறுபிள்ளைத்தனமான செய்தி இது. தலைப்பு ஒருவித எரிச்சலில் விழுந்த எழுத்துக்கள். நீங்கள் அம்மா அவர்கள் பெங்களூரு வழக்கில் சிறை சென்றபோது போட்டு ரசித்த படங்களை விடவா இவை பெரிய தலைப்பு செய்தி? சட்டத்தில் அவதூறு வழக்கு என்கிற பகுதியை நீக்க சொல்லி சூனா சாமி கேட்டதற்கு மறுத்த அதே நீதிமன்றம்தான் இப்போது அவதூறு வழக்கை பற்றி விமர்சிக்கின்றது. தமிழகத்தில் எப்படிப்பட்ட வாய் துடுக்கு பேச்சாளர்கள் இருக்கின்றார்கள் என்று புரியாமல் விமர்சித்து விட்டார் இந்த நீதிபதி. ஒரு முதல்வரின் உடல் நிலையை குறித்து எப்படி வேண்டுமானாலும் தவறாக பரப்புரை செய்யலாம் என்றால்..அதற்கு ஜனநாயம் என்பாரோ இந்த நீதிபதி? பெண் என்றால் எகத்தாளம் பேசிடலாம் என்று அனுமதிக்கின்ற காரணத்தால்தான் வாயிலே வெட்டி கொலை செய்கின்றார்கள். சமூக அந்தஸ்து என்று ஒன்று உண்டு..அதனை காக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிமை உண்டுதானே? ரோட்டில் போவோர் வருவோர் எல்லாருமே இப்படியே தவறாக எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்றால்..அப்புறம் ஏன் குன்ஹா தீர்ப்பை விம்சித்த வேலூர் மேயரை மன்னிப்பு கேட்க சொன்னீர்கள்? உங்களை விமர்சித்தால் கோபம் பொத்துக்கொண்டு வருகின்றதே நீதிபதிகளே..உங்களின் யோக்கித்தனம் உலகறிந்ததுதானே? நீதிபதிகள் ஒன்றும் தெய்வங்கள் இல்லையே..என்கிற விமர்சனம் அற்புதம் என்பதை நாடு எப்போதோ தெரிந்துகொண்டது தான். உங்களது விமர்சனத்தின் பின்னணி..என்போன்றோருக்கு கேரளா கவர்னர் பதவியை போன்று பின்னாளில் எந்த கட்சியாவது பெற்றுத்தரும் என்கிற நப்பாசைதான் காரணம் என்பதை அறிவோம் நாங்கள். மாமி வீட்டில் மாட்டுக்கறி என்று ஒரு பத்திரிகையாளர் என்கிற போர்வையில் கேவலமாக விமர்சித்தால் பொத்திக்கொண்டு போய்விடனும் என்கிறீர்களா? அதே போன்று ஒரு இஸ்லாமியரை பற்றி விமர்சித்திருந்தால்..இந்நேரம் என்னவாகியிருக்கும் நாட்டிலே..கொந்தளித்து சுனாமி எழுந்திருக்கும் அல்லவா? இது எப்படிப்பட்டது..சமூகத்தில் அமைதிக்கு பங்கம் செய்வதுதானே? இதற்கு அவதூறு வழக்கு போடாமல் கொஞ்சியிருக்க சொல்கின்றீர்களா நீதிபதிகளே.. வாருங்கள் எங்களின் தமிழக்தில் அரசியல்வாதிகளின் பொதுக்கூட்டத்திற்கு சென்று காது கொடுத்து கேளுங்கள்.. அப்போது தெரியும்..ஏன் அவதூறு வழக்கு பாய்கின்றது என்று..நீங்கள் மட்டும் தீர்ப்பை மாற்றிக்கொடுத்து பாருங்கள்..உங்கள் வீட்டு பெண்களை..இங்கே மானபங்கம் செய்வதுபோல துகிலுரித்து தொங்கவிட்டு விடுவார்கள்.. டெல்லியில் குளுகுளு அறையில் டெல்லி அரசியல்வாதிகள் போன்று நாகரீகமாக பேசுவார்கள் இந்த தமிழ்நாட்டில் என்று எதிர்பார்த்து விமர்சித்துவிட்டீர்கள்..இங்கே திமுக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை கடக்க நாய்கூட யோசிக்கும் என்பது பொதுவான கருத்து என்றால்..நீங்களே யூகித்து கொள்ளுங்கள்..பாவாடை நாடாவை அவிழ்த்து பாரு அங்கே தெரியும் தனி தமிழ்நாடு என்று சொன்னவர் முன்னாள் முதல்வர்..யாரிடம்? ஒரு காங்கிரசை சார்ந்த பெண்ணிடம்.. இதுதான் இங்கே நடக்கும் அக்கிரமுமும் அநியாயமும்.. இதுபோன்ற அவதூறு வழக்குகளை போடாமல் விட்டுவிட்டால்.. அடுத்த ஸ்டெப் மகா மோசமாக ஆகிவிடும்..துர்நாற்றம் நாட்டையே அசிங்கப்படுத்தும்.. உங்களது விமர்சனம் அப்பாவித்தனமானது..என்பதுதான் உண்மை உண்மை..

 • Paranthaman - kadappa,இந்தியா

  தி.மு.க.,வுக்கு எதிராக, 85 வழக்குகள் பத்திரிகைகள், மீடியாக்கள் மீது, 55 வழக்குகள் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீதான, 28 வழக்குகள் உட்பட, தே.மு.தி.க. மீது, 48 வழக்குகள் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி மீது ஐந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏழு வழக்குகள் உட்பட, மொத்தம், 213 அவதுாறு வழக்குகள் தமிழக அரசால் தொடரப்பட்டுள்ளன. இவ்வளவு வழக்குகளின் பின்னணி நாட்டை ஆள்பவர் ஒரு பெண் மணி என்பதால். அவர் ஒரு தனி மனிதர் என்ற அடிப்படையில் 213 அவதூறு வழக்கு களுக்கு ஆதாரமான நபர்களின் காழ்ப்புணர்ச்சிகளில் எழுந்த விமர்சனங்கள். காரணமாகும்.பொது வாழ்வில் இருக்கும் ஒருவரை அடிப்படை இன்றி கண்டபடி விமர்சிப்பதை அவர் ஏற்று கொள்ளவேண்டுமென்றால் பொது வாழ்விற்கு வந்த பின் அவர் தன மானத்தை இழந்தவராக இருக்கவேண்டும் என்று சட்டம் எதிர் பார்க்கிறதா. அவரது உடல் நலம் பணி இளைப்பாறும் ஓய்வு வயது முதிர்ச்சியால் நேரக்கூடியவை. அதை விமர்சனம் செய்வது தனி மனித உரிமைக்கு இடையூறு செய்வதாகும். குடிநீர் பிரச்சினை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்கு எழுப்பும் விமர்சனங்கள் பொதுவானவை. தனிமனித பிரச்சினைக்கும் பொது பிரச்சினைக்கும் வேறுபாடுகள் தெரியாமல் பொத்தாம் போக்காக அறிவுரை வழங்குவது மனிதாபிமானத்தை உதாசீனப்படுத்தும் செயல். தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றுவதற்கு இன்னும் போதிய கால அவகாசம் உள்ள நிலையில் அவசரமாக விமர்சனங்களை எழுப்புதல் பொறாமையால் ஏற்படுவது. 213 வழக்குகளை முடிப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். அதனை தவிர்க்க வேண்டி இப்படி ஒட்டுமொத்த தீர்ப்பை வழங்குகிறார்கள்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தொடர்ந்து ஆபாச அவதூறு பேச்சுக்களை ஆதரிப்பவர்கள் அதன் நாயகன் தீப்பொறி, இன்று கட்சியின் போதிய ஆதரவின்றி மருத்துவமனையில் திண்டாடுவதை பார்த்து திருந்துங்கள்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நீதிபதிகளே ஆபாச விரசப் பேச்சுக்களின் உச்சத்தைப் பார்க்க வேண்டுமானால் தமிழகத்துக்கு வாருங்கள். தாய்க்குலம் என்று மரியாதையுடன் ஒருபுறம் அழைத்துக்கொண்டு மறுபுறம் ஆபாசமான வார்த்தைகளில் கனிமொழி மற்றும் ஜெயலலிதாவை விமர்சிக்கும் போக்கு நன்கு புரியும். அவர்களால் தினம் வீதிக்கு வந்து எதிர்சண்டையிடமுடியாது என்ற தைரியத்தில் கன்னாபின்னாவென்று பேசினால் அவதூறு வழக்கு எனும் ஒரே ஆயுதம் கொண்டுதான் அடக்க வேண்டியுள்ளது இன்னும் சொல்லப்போனால் அவ்வாயுதம் மட்டும் இல்லையென்றால் தீப்பொறிகளும் வளர்மதிகளும் தெருவுக்குத் தெரு உருவாவார்கள். நாகரீகப் பேச்சு என்பதை இவர்கள் அண்ணா காலத்திலேயே கற்காதவர்கள். இன்னும் சொல்லப்போனால் பெரியாரே கடைபிடித்ததில்லை. அந்தக் காலத்திலேயே தனக்குப் பிடிக்காத சமூகத்தினரைக் கண்டாலே அடியுங்கள் என முதியவர் சொன்னபோது இந்த நீதிமன்றங்களோ போலீசோ எதுவும் செய்யவில்லை (ஆளும் காமராஜர் காங்கிரசை ஆதரித்ததாலோ என்னவோ?) மாயாவதி 3 சமூகத்தவரை செருப்பால் அடிக்க கட்டளையிட்டபோது தண்டிக்கப்பட்டாரா? அது கொடுத்த தைரியத்தில்தான் இன்று வரை கேவல அநாகரீக வன்முறைப் பேச்சுக்கள் இதனை கோர்ட்டுக்கள் நிறுத்தவைக்கட்டும் பிறகு எது அவதூறு என தீர்மானிக்கலாம்

 • nizamudin - trichy,இந்தியா

  என்ன? நெத்தியடி தலைப்பா? பாயப்போகிறது அவதூறு வழக்கு தினமலர் மீது ?

 • Singaravadivelan - Kumbakonam,இந்தியா

  ஆத்தா / தாத்தா அகராதிலே சகிப்பு தன்மையெல்லாம் கிடையாது. எல்லாம் நான் எனது தான். எல்லாரையும் அடக்குமுறை செய்து அடிமையாக வைத்திருப்பது தான் ஆத்தாவுக்கு பிடிக்கும்..தி மு க வும் ஒர்ஸ்ட் .

 • RAJ - chennai,இந்தியா

  Who said the TN Government headed by AIADMK is inactive. It seems that the rulers always thinking their critics, instead General Public

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  சே கின்னஸ் சாதனப்பா ...213 அவதூறு வழக்குகள்..... இதுக்கான வக்கீல் செலவு கோர்ட்டு செலவு எவ்வளவு? நம்மளோட வரிப்பணம் எல்லாம் எப்படி பாழாகிறது பார்த்தீங்களா? குடி நீர் பற்றாக்குறை, தேர்தலில் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்று விமர்சனம் செய்ததற்கு எல்லாம் வழக்கா என்று நீதிபதி கடுப்பாகி விட்டார்.கொடநாட்டில் குப்புற படுத்து கிடந்தார் என்று சொன்னதற்கு எல்லாம் வழக்கா? உண்மையில் 5 வருடம் அப்படி தானே இருந்தார்? அந்த 5 வருடத்தில் ஒரு முறை மட்டுமே சட்டமன்றத்தில் தனி ஆளாக பேசி சென்றார்...மற்றபடி விஷயம் உண்மை தானே? எங்கள் அம்மாவிற்கு அந்த படையப்பா டயலாக்கை போட்டு காட்டணும்.......

 • Anandan - chennai,இந்தியா

  இதிலேயாவது மும்முரமா செயல்பட்டு இருக்காங்கன்னு மகிழ்ச்சி அடேங்கப்பா. இதெல்லாம் திருந்துற கூட்டமா?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் இது போன்று அரசியல் ரீதியான காரணங்களுக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்தி பழிவாங்க இது போன்று தேவையற்ற வழக்குகளை போட்டு அம்மையார் வீணடித்து இருக்கிறார் என்று கணம் நீதிபதி அவர்கள் குற்றம் சாட்டியது அவமானம் தான்.....ஆனால் யாருக்கு ? யாருக்கோ....

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இப்போ தாம்பா தினமலரின் தலைப்பு கூட 'நெத்தியடியாக' வந்து இருக்கிறது.....தினமலருக்கு இது மூலம் தெம்பு வந்து இருக்கும்னு நினைக்கிறேன். நான் முன்னாடியே சொன்ன மாதிரி அம்மா தேவையற்ற அவதூறு வழக்குகளில் ஈடுபடாமல் ஒழுங்கான ஆட்சியை கொடுத்தாலே தொடர்ந்து முதல்வராக இருக்கலாம்.....ஆனால் தேவையற்ற விஷயங்களை (சசி நட்பு , டான்சி, மிடாஸ், சொத்து குவிப்பு, பொய் வழக்குகள் உட்பட)செய்து கொண்டு இருப்பதால் அவ்வப்போது வசமாக மாட்டி கொள்கிறார். தேவையில்லாமல் பக்கத்துக்கு தெருவில் இருக்கும் ஒரு பெரிய திருட்டு கூட்டம் வலுவாக இவரே வழி செய்து கொடுத்து விடுகிறார்......அவர்களும் அவ்வப்போது இடை வெளியில் வரும்போது நன்றாக திருடி கொழுத்து மலை முழுங்கி மஹா தேவன்களாகி விடுகிறார்கள்....

 • Vikky - Singapore,சிங்கப்பூர்

  "அரசியல் விரோதத்தை தீர்க்க, அவதுாறு சட்டத்தைபயன்படுத்தி உள்ளீர்கள். நாட்டிலே யே தமிழகத்தில் மட்டுமே, இதுபோல் அவதுாறு வழக்கு சட்டம், துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து, இது போன்ற வழக்குகள் இங்கு வரவில்லை. " நீதிபதியின் கையில் இருக்கும் சுத்தியல் உடைந்து போகும்,அளவுக்கு குட்டியுள்ளார், இனியாவது திருந்துவார்களா .?????

 • Rayen - Singapore,சிங்கப்பூர்

  ஆத்தா அகராதிலே சகிப்பு தன்மையெல்லாம் கிடையாது. எல்லாம் நான் எனது தான்.எல்லாரையும் அடக்குமுறை செய்து அடிமையாக வைத்திருப்பது தான் ஆத்தாவுக்கு பிடிக்கும்..

 • Vikky - Singapore,சிங்கப்பூர்

  சர்வதேச விஞ்சானிகள் குழு ஆச்சரியம், " ஒரே தலையால் எப்படி இவ்வளவு குட்டுகளை தாங்க முடிகிறது "?????

 • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

  நெத்தியடி அடித்ததில் முகம் நன்கு வீங்கிபோய்யுள்ளது.

 • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

  கொள்ளு என்றால் வாயை திறக்கும் குதிரை, கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளும் ...அது போல் ஆட்சி அமைக்கணும் என்றால் இது மாதிரியான கடிவாளங்கள் இருக்கத் தான் செய்யும்.....

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  பொத்தாம் பொதுவாக என்றில்லாமல் வழக்குகளில் ஒன்றிண்டாவாது விசாரிக்கட்டு விட்டனவா இல்லையா என்னும் கேள்வி தோன்றுகிறது.

 • Sharvintej - madurai,இந்தியா

  எத்தனை ...ருப்பு அடி வாங்குனாலும் " நான் " என்ற ஆணவத்தில் திரியும் நபருக்கு என்னவென்று சொல்வது

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அடுத்து தமிழ் தெரிந்த நீதிபதி இதை விசாரிக்க வேண்டும் என்று சீராய்வு மனு கொடுப்பார்கள்... 213 வழக்குகளுக்கும் நீதிமன்றம் சில வருடங்களுக்கு சமமான நேரத்தை வீணடித்து இருக்கும்... இது போல நாலு பேர் இருந்தால் போதும் நீதிமன்றங்களில் ஆயிரம் வழக்குகள் தேங்கி விடும்... என்னை கிள்ளினான், என்னை பென்சிலால் குத்தினான் என்று வழக்குப்போடாமல் இருக்க வேண்டும்...

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  கனம் கோட்டார்வர்களே, நீங்கள் கேட்கும் கேள்விகள் உங்களின் மதிப்பை குறைக்கும் அளவிற்கு கேட்பதாக தெரிகிறது , அவதூறு செய்கிறவன் வாய்க்கு வந்தபடி தண்ணி அடித்துவிட்டு உணருகிறான் ,பொய்களை அவிழ்த்து விடுகிறான் ,புரளியை கிளப்பி விடுகிறான் . அவனுள் செய்வது எல்லாம் சரிதான் என்று சொல்லுபவர் நீங்களும் அவதூறு பேசியவராகத்தான் இருப்பீர் என்பதில் ஐயமில்லை ,செல்லாது செல்லாது உமது தீர்ப்பு

 • s t rajan - chennai,இந்தியா

  ஜெயலலிதாவுக்கே அறிவுரையா ? அவர் யார்? "புரட்சித் தலைவி" "இதய தெய்வம்" " அம்மா" தமிழ்நாட்டில் அவரை மிஞ்சிய கடவுளே இல்லை. தனபாலைக் கேளுங்க சொல்வார். தைரியமா சுப்ரீம் கோர்ட் " அம்மா அடிமை" தனபாலுக்கு எப்படி அசெம்பிளி நடத்தணும்னு ஒரு அறிவுரை வழங்கினால் நல்லா இருக்கும்.

 • Ganesan - Bangalore,இந்தியா

  நெத்தியடி இல்லை, செருப்படி. அதுவும் பழைய அறுந்து போன செருப்பால் அடி. ஒன்றா, இரண்டா... இந்த கொள்ளைக்காரி, ஆணவக்காரி, பதவிக்கு வந்ததில் இருந்தே இப்படி அடி வாங்கி வாங்கி, சூடு சொரணை, மானம் ரோசம் எல்லாம் இல்லாம ஆச்சு.என்ன ஒரு பொழைப்பு? எவன் அப்பன் வீட்டு சொத்து? மக்கள் வரிப்பணத்தில், ஆட்டையை போடுவது மட்டுமில்லாமல், அந்த வரிப்பணத்தை செலவு செய்து, எதிர்கட்சி காரர்களின் மீது பொய் வழக்கு. அதுவும் இவளின் புகழுக்கு (???) களங்கம் ஆனதாம். தூ... அப்துல் கலாம் இறந்ததற்கு அஞ்சலி செலுத்த வக்கில்லை. சென்னை வெள்ளத்தை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றது மட்டுமில்லாமல், அந்த மக்களுக்கு ஒரு ஆறுதல் கூற கூட வக்கற்ற கபடநாடக காரி. கமலின் விருதுக்கு, ஒரு வார்த்தை வாழ்த்து சொல்ல முடியாத இந்த திமிர் பிடித்த ஆணவக்காரியின் மமதைக்கு, அடிமை ஊடகங்கள் வேண்டுமானால் கோழைபோல மண்டியிட்டு ஸலாம் போடலாம், ஆனால் சட்டம் சாட்டையை சுழற்றி, மரண அடி அடிக்கும், செருப்படி அடிக்கும். இது ஆரம்பம் தான். இன்னும் இருக்கிறது கண்டைனர் 570 கோடி ரூபாய் கொள்ளை சம்பவம். ஊழல் வழக்கில் தீர்ப்பு, நெருப்பாக வர இருக்கிறது. அப்போது விழுவது உங்க வீட்டு, எங்க வீட்டு அடி இல்லை, மரண அடி..

 • Vivek Palaniappan - paris,பிரான்ஸ்

  நீதிபதி உங்க மேல அவதுாறு வழக்கு போடப்போறாங்க இந்த அம்மா, என்ன சேகர் சரிதானே நான் சொல்லுறது

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  அமெரிக்காவிலும் இப்படித்தான், டிரம்ப் கிளிண்ட்டனை கேலி செய்வது, கிளிண்டன் டிரம்ப் ஐ கேலி செய்வதும், டிரம்ப் நிர்வாண சிலைகள் செய்வது பெரிய நகரங்களில் பொது இடங்களில் வைப்பதும், இவைகள் நமது தமிழக சட்ட சபை சண்டைகளை விட மோசம்

 • Solai selvam Periyasamy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்

  செம்ம செருப்படி.... ஹா ஹா ஹா

 • வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சட்டத்தை முன்வைத்து தீர்ப்பு சொன்னால் போதும். மற்றபடி முதலில் தாங்கள் துறையை சீர்படுத்தியபின்னர் (முடிந்தால்) அரசை அல்லது முதல்வரை விமர்சனம் செய்யுங்கள்.

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  வெறும் கண்டனம் மட்டும் போதாது... இந்த ஆணவக்காரியிடமிருந்து அவதூறு வழக்குகள் போட்டு மிரட்டியதற்கும் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்கும் சேர்த்து பல கோடி ரூபாய்கள் அபராதமாக விதித்தால் ஒரு வேளை திமிர் அடங்கலாம்.

 • v.sundaravadivelu - Tiruppur,இந்தியா

  ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் தான் எந்நேரமும் எவரையாவது விரலை நீட்டி ' டேடி அவன் என்னை அடிச்சுட்டான், மம்மி அவ என்னை பேசிக்கிட்டே இருக்கா .. அவனை அடிங்க டேடி .. மம்மி நீங்களும் அவளை ரெண்டு அடி போடுங்க ' என்று எவரையாவது குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக் கொண்டே இருக்க ஆசை கொள்ளும்.. 'சிறார்களின் குணமே அது தான்' என்கிற முடிவுக்கு வரவேண்டியது முதிர்ந்த பெற்றோரே தவிர அந்தக் குழந்தைகள் அன்று ... அவர்கள் வளர்ந்ததும் அதற்குரிய மனவளர்ச்சி பெற்று தமது சிறுபிள்ளைத் தனங்களுக்காக வெட்கிப் போகிற ஒரு பிராயம் அனைவருக்கும் வரும்.. ஆனால், ஒரு மாநிலத்தை கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக , கால் நூற்றாண்டு காலம் ஆண்டு வருகிற ஜெயலலிதா அவர்கள் .. ஒரு முதிர்ந்த தலைவி, சரமாரியாக ஆங்கிலம் பேசுகிற திறமைசாலி, இப்படி ஆரம்பப் பள்ளி குழந்தைகள் போன்று எந்நேரமும் புறஞ்சொல்லிக் கொண்டிருப்பது நாகரீகமல்ல.. எதிர் கட்சிகளையும், எதிர் கட்சித் தலைவர்களையும் சட்டமன்றத்தில் எந்நேரம் பார்த்தாலும் பரம விரோதிகள் போன்றே கருதி பேசுவதும் , முகத்தை புன்னகை இழந்து ரௌத்ரம் ததும்ப வைத்துக் கொண்டுமே உரையாடுவதைத் தான் நாமெல்லாம் காலம் காலமாகப் தரிசித்துக் கொண்டு வருகிறோம்.. யாவரையும் ஸ்நேகிதமாக பாவிக்க வேண்டிய ஒரு பெருந்தன்மை மனிதர்களுக்கு அவசியம்.. அதுவும், இத்தனை காலம் அரசியல் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஒரு தலைவிக்கு இன்னும் அந்த அவசியம் ஒருபடி அதிகம் அவசிய படுகிறது.. குறைந்த பட்சம் அன்பாக இருப்பது போன்று நடிப்பதில் கூட அவருக்கிருக்கிற சிரமம் ஆச்சர்யம் தான்.. இத்தனைக்கும் நடிப்புலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் வேறு..

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  அதிரடியாக இந்த நீதிபதிகள் மேலே அம்மா அவதூறு வழக்கு தொடரலாம். 'காஷ்மீர் beautiful காஷ்மீர்" புகழ் வண்டு முருகன் அந்த வழக்கை நடத்தலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement