இ - மெயில்: spkarunagmail.com
காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு), சென்னை.
இதற்கெல்லாம் காரணம், ஜாதி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தான். அவர்கள் இருப்பதால் தான், பல அதிகாரிகள் துணிந்து தவறு செய்கின்றனர் அல்லது சோம்பேறிகளாக இருக்கின்றனர் அல்லது தம்மை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற மமதையில் இருக்கின்றனர். அரசு பதவி என்றால், எப்படியோ உள்ளே வந்துவிட்டால் போதும், பின்னர் யாரும் கடைசிவரை அசைக்க முடியாது என்ற நிலையான பதவி என்ற காரணம் தான், இவர்களுக்கு இந்த துணிவை தருகிறது. வேலை நிரந்தரம் மற்றும் ஜாதி / துறை வாரியான சங்கங்கள் இருந்தால், அந்த நிறுவனம் உருப்பட்டாற்போல் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த, ஊரறிந்த ரகசியம். இந்த அழகில், தனியார் துறையிலும் ஜாதி வாரியான மற்றும் நிரந்தர வேலை கொடுக்க சொல்லி, ஒரு கூட்டம் உசுப்பேற்றுகிறது. அப்படி நடந்தால் என்ன ஆகும் ?? இதுபோன்று பின் கதவு மூலம் நுழைபவர்கள், ஜாதி சங்கம் ஆரம்பிப்பர். வேலை செய்ய சொன்னால், என் ஜாதி பெயரை சொல்லி திட்டினார் என்று சொல்லி வழக்கு போடுவர். வழக்கிலிருந்து விடுவிக்க, இவ்வளவு தொகை என்று பேரம் பேச, இவர்கள் ஜாதி சங்கங்கள் போட்டி போடும். எப்போதும், ஏதாவது பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கு பயந்துகொண்டு, இவர்களை சும்மா உட்க்காரவைத்து தாண்ட சம்பளம் மற்றும் சலுகைகள் கொடுக்கவேண்டும். மேற்கொண்டு படிக்க மாட்டார்கள் / திறமையை வளர்க்க மாட்டார்கள். நிர்வாகத்தில் காலத்திற்கேற்ற மாற்றம் கொண்டுவரவே முடியாது. விளைவு ?? விரைவில் அந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டி வரும். அல்லது அதன் நிறுவனர் இவர்களுக்கு வேலை கொடுத்த பாவத்திற்காக, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக சொல்லி, அவரை சிறை உள்ளே தள்ளி விடுவர். ஒரு நிறுவனித்திருக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் போதும், மற்ற நிறுவனங்கள் எல்லாம் பயந்து, வெளிநாட்டிற்கு ஓடி விடும். விளைவு ?? இந்தியா சோமாலியா போல் வறுமை நாடாக மாறிவிடும். எப்போது ஒருவர் தன் திறமையை மட்டுமே நம்பி வேலை பெறுகிறாரோ, அப்போது தான் அவர் திறமை மதிக்கப்படும், தொழில் முன்னேறும், நாடு வளம் பெறும். திறமை என்பது ஒருவரின் தன்னம்பிக்கை மற்றும் செயலில் தான் உள்ளது, ஜாதியில் இல்லை. இதை ஜாதி கட்சிகள் புரிந்துகொண்டு, அவரவர் ஜாதியின் இளைஜர்களின் கல்வி மற்றும் செயல்திறனை மேம்படுத்தி, அவர்களை உலகளாவிய போட்டிக்கு தயார்படுத்த வேண்டும். ஜாதி பெயரை சொன்னால், அது அவமானபடுத்தியதாக எவ்வாறு சட்டத்தின் மூலம் சிறை உள்ளே தள்ள முடியுமோ, அதே ஜாதிப்பெயரை சொல்லி வசதிப்படைத்தவர் சலுகைகேட்பது, அதைவிட அவமானமாக உணரவேண்டும். ஜாதி என்பது, ஒரு இனத்தின் அடையாளமே தவிர, திறமைக்கான அடையாளம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சரி, இந்தியாவில் ஜாதி சான்றிதழ் முறையை ஒழித்து, வருமான சான்றிதழ் மட்டுமே செயல்படுத்தி, அவர்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே சலுகை என்று ஏன் கொண்டு வர கூடாது ?? இதனால், உங்கள் ஜாதியை குறிப்பிட்டு யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாதே ?? ஜாதி ஒழிந்தே போகுமே ஜாதி வோட்டு அரசியல் வேண்டும் என்றால், இந்த அவமானத்தை நீங்களே சுயநலத்திற்காக விரும்புகிறீர்கள் என்று தானே பொருள் ?? காலம் மாறிவிட்டது. ஜாதி தலைவர்களே கொஞ்சம் யோசிங்களேன். உங்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளை தொடர்ந்து, சுயமரியாதையுடன் வாழ வழி செய்யுங்களேன்.
மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் / இருக்கக்கடமைப்பட்டவர்கள்தான் உண்மையான அரசு ஊழியர்கள். ஆளும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களும் தங்கள் விருப்பமான கட்சிக்கு விசுவாசமாக இருந்துகொண்டு அரசுக்கு எதிராக செயல் படுபவர்களுக்கும் அரசு ஊழியர்கள் என்ற தகுதி இல்லாதவர்கள்தான். துரதிருஷ்டவசமாக இப்போதெல்லாம் நேர்மையற்ற அதிகாரிகளின் கீழ் நேர்மையற்ற அலுவலர்கள் வேலை பார்க்கும் நிலைதான் உள்ளது. எல்லா குளறுபடிகளும் இதுவே காரணம். நான் பணி புரிந்த கடைசி ஐந்து ஆண்டுகளில் சீக்கிரம் பனி நிறைவு வராதா என்று எண்ணிக்கொண்டே வேலை பார்த்தேன். எல்லா அதிகாரிகளும் வேலை தெரியாமலும் கீழே உள்ளவனின் கஷ்ட நஷ்டங்கள் தெரியாமலும் இரண்டு கால்களையும் பிணைத்து விட்டு ஓடு ஓடு என்று சாட்டையால் விளாசத் தெரிந்தவர்களாகவும் மட்டுமே இருந்தனர். ஒரு சிறந்த ஊழியக்காரனால்தான் சிறந்த மேய்ப்பனாக இருக்க முடியும் என்ற வாக்கை அறியாதவர்கள் பாவம். போதாக்குறைக்கு ஒரு ஆட்டை ஒன்பது பேர் மேய்க்கும் நிலை நிர்வாகத்தை சீர் குலைத்துவிட்டது. கீழ் நிலை அலுவலர்கள் இதை எப்படி செய்வது என்று தடுமாறும்பொது மேல் நிலை அதிகாரிகள் வழிகாட்டும் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். நிலைமை அப்படி இல்லை. நீதானே செய்யவேண்டியவன் நீயே செய்துமுடி. என்னை என் கேட்கிறாய். நான் செய்யவேண்டுமானால் நீ எதற்கு என்று கேட்கும் உயர் அதிகாரிகள்தான் முக்காலே மூன்று வீசம் உள்ளனர். பாவம் அவர்களை சொல்லி குற்றமில்லை அவர்களுக்கு அதிகாரி என்பதால் அதிகாரம் மட்டுமே தெரியும். வேலை துரிதமாகவும் மக்களுக்கு போய்ச் சேரும் வகையிலும் செய்யக்கூடிய தகுதியோ திறமையோ சற்றேனும் கிடையாது. ஒரே ஒரு உதாரணம் சொல்ல விழைகிறேன். சாதாரண வெள்ளத்தை பெரும் வெள்ளமாக படம் காட்டி பல மாவட்ட அதிகாரிகளையும் வரவழைத்து மாலை ஆறு மணி முதல் இரவு பதினோரு மணி வரை கூட்டம் நடத்திவிட்டு யோசித்து வையுங்கள் காலையில் பார்க்கிறேன் என்று கூட்டத்தை முடித்துவிட்டுப் போய்விட்டார் ஒரு மேதாவி அதிகாரி. கூட்டத்தின் விவாதப் பொருள் ஒன்றும் இந்திய பாக்கிஸ்தான் பேச்சு வார்த்தை அல்ல. வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரிசி மண்ணை துணி வழங்குவதற்காக டோக்கன் எப்படி அச்சடிப்பது என்பது பற்றி மட்டும்தான். திறமையோ நேர்மையோ இல்லாத அதிகாரிகளால் கீழ் நிலை அதிகாரிகளும் அலுவலர்களும் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு நாட்டுக்கு சீர்கேடு என்பதுதான் வேதனை அளிக்கும் நிலைமை.