Advertisement

என் பத்மினி ! - இயக்குனர் அருண்குமார்

'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் யதார்த்தமான கதைக்களம், 'சேதுபதி' படத்தில் அதிரடி ஆக் ஷன் களம் என தனக்கென்று தனியே ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய இயக்குனர் அருண்குமார், தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தது இங்கே:* சினிமாவுக்கு எப்படி?இன்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை. அது பிடிக்கவில்லை. அதன்பின் எதுவுமே தெரியாமல் சினிமாவுக்கு வந்தேன். வந்தபின், நிறைய கற்று கொண்டு நாளைய இயக்குனரில் பங்கேற்றேன். குறும்படத்தில் இருந்து முழு நீள படமும் இயக்கினேன்.* உங்கள் படங்களில் முக்கியத்துவம்?எல்லாரும் வந்து பார்க்கக்கூடிய ஜனரஞ்சகமான படமாக இருக்கணும். குடும்பங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.* ரொமான்ஸ் காட்சிகளில்...?கதையோடு பொருந்தணும். யாரும் முகம் சுளிக்கக் கூடாது. ரொமான்சுக்காக காட்சிகள் அமைத்தது போல் தெரிய கூடாது.* பிடித்த இயக்குநர்?இவர பிடிக்கும். அவர பிடிக்காதுன்னு சொல்ல முடியாது. எல்லாருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கு அது பிடிக்கும். ஒரு ரசிகனா ரசிப்பேன்.* விஜய் சேதுபதி பற்றி?முதல் படம் பண்ணும் போது அவர நடிகரா மட்டும் தெரியும். படப்பிடிப்பில் நண்பர்கள் ஆகிட்டோம். நல்ல நடிகர். அவர் எனக்கு ரொம்ப 'செட்'டா இருக்காரு.* உங்கள் படங்களில் காமெடிக்கு தனியா ட்ராக்?நான் இயக்கிய படங்களில் காமெடிக்கு தனியா டிராக் தேவைப்படல. கதை ஒரு டிராக்ல போகும் போது, காமெடி இன்னொரு டிராக்குல சம்பந்தமே இல்லாம வந்தா நல்லா இருக்காது. காமெடிக்காக தனியே காட்சியை சேர்த்தது போல் இருக்கும்.* சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதியோடு... ஆசை இருக்கா?இல்லாமலா. எனக்கு வாய்ப்பு கொடுக்கும் போது அவங்கள வைத்து நல்ல படம் எடுப்பேன்.* உங்கள் படத்தில் 'பஞ்ச் வசனங்கள்' இல்லையே?கதைக்கும், அதில் நடிக்கும் நடிகருக்கு தேவைப்பட்டா 'பஞ்ச்' வசனங்கள் இருக்கும்.* அடுத்த படத்தில் என்ன எதிர்ப்பார்க்கலாம்?கதை விவாதம் நடத்திட்டு இருக்கோம். ரொமான்ஸ், ஆக் ஷன், சாங், சென்டி மென்ட், காமெடின்னு எல்லாம் கலந்த ஜனரஞ்சகமான படமா இருக்கும். நடிகர்கள் இன்னும் முடிவு பண்ணல..* சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு?சினிமாவுக்கு யார் வேணாலும் வரலாம். திறமை இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்.* சினிமா மூலம் சமூகத்திற்கு?சினிமா மூலம் சமூகத்திற்கு எந்தவொரு நல்ல மெசேஜையும் சொல்ல முடியும். அதை நாம எப்படி சொல்லுறோம்கிறது தான் முக்கியம்.* சுதந்திர தினம் குறித்து?ஒவ்வொரு சுதந்திர தினமும் நமக்காக சுதந்திரம் வாங்கி தந்த தலைவர்கள நினைக்க வைக்குது. சுதந்திரம் பெற்றும் நமக்குள்ள எந்த ஒற்றுமையும் இல்லாமல், ஜாதி, மதம்னு நமக்குள்ளயே சண்டை போட்டுட்டு இருக்கோம். இது மாறணும்.* பண்ணையாரும் பத்மினியும் ஓ.கே., உங்க பத்மினி ?ஒருத்தர் இருக்காங்க. லவ் கம் அரேன்ஜ்டு மேரேஜ். ரொம்ப சீக்கிரமே கல்யாணம். அப்போ தெரியும் என் பத்மினியை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Stalin - Kovilpatti,இந்தியா

    உனக்காக பிறந்தானே எனது அழகா பாடல் அதன் காட்சி அமைப்பு அவ்வளவு ஓவியம் இரண்டு முறை திரை அரங்கு சென்று பார்த்தேன் .. நன்றி திரு. அருண்குமார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement