Advertisement

இந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை: தமிழக அரசு

சென்னை: இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், புதிய கல்வி கொள்கை குறித்து தி.மு.க., நேற்று தான் தீர்மானம் அளித்தது. இது தனது பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறினார்.
இதனையடுத்து உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.,வின் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிய கல்வி குறித்து அமைத்த குழுவில் அதிகாரிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கல்வியாளர்கள் யாரும் இல்லை. இந்த கல்வி கொள்கை மாநில அரசின் நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதிலளித்து பேசியதாவது: புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய அரசு, மாநில அரசிடம் கருத்து கேட்டுள்ளது. தமிழகத்தின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து பதில் அளிக்கப்படும். தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் எந்த வகையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது. இதற்கு எந்த வகையிலும் உதவி செய்யப்படாது. புதிய கல்வி கொள்கை வரைவின் சில உள்ளீடுகளை மட்டுமே மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதற்கு விரைவில் பதில் அனுப்பப்படும். மாநில அரசின் நலன், கல்வி,, கலாசாரம், உரிமைகள் பாதிக்காத வகையில் மத்திய அரசுக்கு பதில் அனுப்பப்படும். சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படும் எனக்கூறினார். இந்த கருத்தை தானும் ஏற்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.
இதனை வரவேற்பதாக கூறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (219)

 • M Radhakrishnan - Bangalore,இந்தியா

  வெளிநாட்டுக்காரன் சொன்னாதான் நாங்க நம்புவோம். அது வரை சமஸ்க்ரிதம் செத்த மொழிதான். என் அன்பு தமிழ் மக்களே தயவு செய்து எதை படியுங்கள் s://www.linkedin.com/pulse/nasa-scientists-hail-sanskrit-only-perfect-language-sethuraman

 • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

  1. தமிழ் ஒரு இனிமையான மொழியென்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை இது இங்கே விவாதப் பொருளுமில்லை. தமிழை வெறும் இனிமையான மொழியென்று மட்டும் குறிப்பிடுவது நம் அறியாமையின் வெளிப்பாடே. தமிழன் பிற மொழியைப் புறக்கணித்தான் என்றப் பேச்சுக்கும் இங்கேயும் இடமில்லை இதுநாள் வரைக்கும் இப்படிப் பட்ட நிலைப் பாடு நம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தன் தாய் மொழியை மறக்காமல் நேசித்து வாழவேண்டும் என் அன்புத் தமிழர்களிடம் இதுதான் கோரிக்கை. 2. அன்று 1965-ல் சென்னை மாநிலமாக இருந்த தமிழகத்தில் கட்டாய இந்தி மொழித் திணிப்பை தமிழர்கள் எதிர்த்தார்கள் பலர் உயிர் நீத்தார்கள். இன்றும் அந்த வடு தமிழர் நெஞ்சங்களிலிருந்து இன்னும் நீங்கவில்லை. தமிழ் நாட்டில் வட மொழியின் ஆக்கிரமிப்பால் தமிழர்கள் நிறைய பாதிக்கப் பட்டுள்ளார்கள் நிறையவும் இழந்துள்ளார்கள். இந்த மொழியின் ஆக்கிரமிப்பால் நம் மொழி சிதைந்ததும் உண்மை. இதை பற்றி விரிவாக பேசமுடியாது. மறை மொழி அடியார்களின் ஆய்வு நூட்களை கொஞ்சம் படித்துப் பார்த்தால் நமக்கு பல உண்மைகள் தெரிய வரும். 3. காலஞ்சென்ற குன்றக் குடி அடிகளார் காவேரி விவகாரம் தொடர்பாக முன்பு தமிழர்களிடம் ஒன்றைச் சொன்னார். - “தமிழர்களிடம் மொழிப பற்று என்றவொன்று இருந்திருந்தால் காவேரி விவகாரம் எழுந்திருக்குமா?” என்றும் கேட்டார். காவேரி ஆற்றுக்கும் மொழிப பற்றுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? அன்று பலக் காலத்திற்கு முன்பு, இன்றையத் தென் மாநிலங்களைத் தழுவிய அகன்றத் தமிழகம் இன்று பிற மொழிகளின் சிதைவால் நம் மொழியும் சிதைந்துப் போய்விட்டது. தமிழர்களும் சிதைந்து பிரிந்துப் போய் விட்டார்கள். காவேரியும் பறிப் போய்விட்டது. இதைத்தான் அடிகளாரும் மறைமுகமாகக் குறிப்பிட்டார். சுதந்திர இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப் படும் போது தமிழகம் எவ்வளவோப் பகுதிகளை இழந்தது. இது வரலாறு. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நாம் பேச வேண்டும். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கேரளாவென்ற மாநிலம் இல்லை. இன்று இருக்கின்றது. ஏனென்று சிந்தித்தால் விடைக் கிடைக்கும். நாம் சிந்திக்க வேண்டும். 4. நீங்கள் சமஸ்கிருதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். இங்கிலாந்தில் ஏற்பட்டத் தொழில் புரட்சியால் ஆங்கிலம் விஞ்ஞானத் துறையில் மிகக் குறுகியக் காலத்தில் வெகுவளர்ச்சிப் பெரும் போது, என்றோ மருத்துவம், வான சாஸ்திரம், கணிதம் இவற்றில் வளர்ச்சிக் கண்ட வடமொழி மட்டும் ஏன் இன்றைக்கும் அப்படியேயுள்ளது? உங்களை போன்றுதான் முன்பு வடமொழியில் ஆர்வமாகியிருந்தேன். வடமொழியைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப் பட்ட பல நூட்களைப் படித்தேன். ஆனால்,இன்று நம் தாய் மொழியை, தமிழை சைவமாகக் கண்டபின், சைவ சித்தாந்த உருவமாகவும் கோட்ப்பாடுகளாக கண்டபின்பு வடமொழியின் மேலிருந்த நாட்டம் என்றோப் போய் விட்டது. 5. மேலும் திருக்குறளை சைவ சித்தாந்த நூலாக போற்றிப் படியுங்கள். குறள் மெய்ஞ்ஞான நூல் குறளில் பொதிந்துள்ள பல அரிய உண்மைகள் நமக்குத் தெரிய வரும். தமிழ் படித்தால் வாழ்ந்திட முடியுமாவென்று சுயமரியாதைக் கெட்டு பலர் இன்றுக் கேட்கின்றார்கள். திருவள்ளுவரின் பதில், "அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவில்லார் என்னுடைய ரேனும் இலர்". நாமெல்லோரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அறிவு தன்னாலே வளரும்

 • Nila Sakthi - Coimbatore,இந்தியா

  தமிழக கட்சிகளின் முடிவு வரவேற்க்க வேண்டும். இந்தியா முழுவதும் எல்லோரும் ஆங்கிலம் கற்கின்றனர். அதையே அனைவரும் தொடர்பு மொழியாக பயன் படுத்தலாமே? பிற மாநிலங்களுக்கு இடம் பெயரும் தமிழர்கள் அந்த மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்கலாம். மற்ற மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்பவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் அவர்கள் மொழியை கற்கலாம். இவ்வாறு மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்பவர்கள் 5% தான். மற்ற 95% மக்கள், அவர்கள் மாநில மொழி மற்றும் ஆங்கிலம் என்று நிம்மதியாக வாழலாம். ஹிந்தி மற்ற மாநில மொழியை தள்ளி விடுகிறது. ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்குளுக்கு சலுகை தருவதாக அமைகிறது. இவர்களின் போராட்டம் மற்றும் கொள்கை மற்ற மாநிலங்களுக்கும் போய் சேர வேண்டும்.

 • Subramaniya prabu.G - (sivagangai ) Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த இரண்டு மொழிகளையும் கற்று/புரிந்து கொண்டால் தேசிய மற்றும் மற்ற மாநில கட்சிகள் உள்ளே புகுந்து விடும் என்ற பயம் இருக்கத்தானே செய்யும். அப்புறம் நாம யார்கிட்ட போய் தமிழ் ஒன்றே எங்கள் மூச்சு தமிழ் ஒன்றே எங்கள் பேச்சுன்னு அரசியல் பண்றது...

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஹாஹ் ,ஹாஹ்,ஹாஹ்,(கபாலி ஸ்டைல் )தமிழன் வாயில சமஸ்க்ரிதம் நுழையாது.ஹிந்தியும் அப்படியே.இதை நாங்க ஒத்துக்குவோமா?ஆனா ஒன்னு வயித்து பசின்னா போதும் நாங்க குவைட்த்துல போயி அரபியும் பேசுவோம் கக்கூஸும் கழுவுவோம்.எங்க கலாச்சாரத்தை என்னானு நினைசீங்க?செம்மொழி இல்ல நாங்க பேசுறோம்?(இது எப்படி இருக்கு?)

Advertisement