Advertisement

கனவுகளின் கைப்பற்றுவோம்- 36

அன்பு தோழமைகளே நலமா, நமக்கு கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை பயனுள்ளவகையில் வாழ்ந்திடவே பலருக்கும் விருப்பம்... ஆனால், எப்படி வாழ்வது என்பது தான் பலருக்குபெரிய கேள்விக்குறியாக உள்ளது...ஆனால் எளிதான வழி என்ன தெரியுமா? நாம் வேறுயாராகவும் இருக்க முயலாமல் நாமாகவே நம் சொந்த இயல்பிலேயே இருக்க முயல்வது தான்வீரமும் விவேகமும் ஆகும். தனித்துவமாக சிந்தித்து துணிவுடன் செயல்பட்டால் தான்வெற்றிவாய்ப்பு நம் கதவை தட்டும். இவ்வாறு நாம் சிந்தித்து செயல்படுகையில் நாம்எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் முக்கியமான சில விசயங்களை குறித்து இன்றுகாணப்போகின்றோம்.


நாம் ஒரு செயலில் ஈடுபடும் பொழுது நாம் சந்திக்கின்ற இன்பத்தை இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளும் நாம் துன்பம் ஏற்படுகையில் துவண்டு போகின்றோம்... துன்பங்கள்நமக்கு தீமை விளைவித்தாலும் அவற்றால் சில நன்மைகள் இல்லாமலும் இல்லை...துன்பம் என்னும் சமவெளியில் தான் இறைவன் தன பிள்ளைகளுக்குபயிற்சியளிக்கின்றார். இறைவன் எவரை அதிகமாக நேசிக்கின்றாரோ அவர்களுக்கேஇத்தகைய பயிற்சிகளை அதிகம் கொடுக்கின்றார்...இதில் எவ்வளவு நன்மை இருக்குதெரியுமா தோழமைகளே இந்த துன்பங்களின் வாயிலாக தான் நாம் அறிவுபெறுகின்றோம் , ஆற்றல் அடைகின்றோம் , வீரம் வந்தடைகிறது , ஒழுக்கம்பெறுகின்றோம்...


தீயானது சுயத்தை உருகவும், களிமண்ணை இருகவும் வைப்பது போன்று துன்பத்தால்சிலர் தங்களை கவலை நோய்க்கு இரையாக்கி கொள்கின்றனர். ஆனால் மற்றும்சிலரோ வண்ணம் பெறுகின்றார்கள் .இதன் காரணமாக அவர்கள் தங்களின் கவலைப்பிரச்சனையை நெஞ்சுரத்துடனும் , உணர்ச்சி வசப்படாமலும் அணுகுகின்றனர் . இதனால் அதற்கு ஒரு முடிவும் காண்கின்றனர்...


முதலில் நாம் நம்முடைய பிரச்சனை என்னவென்பதை அறிய வேண்டும் . நாம் எதைபற்றி கவலைப்படுகின்றோம் என்பதையும் திட்டவட்டமாக உணர வேண்டும் . ஏனெனில்எவ்வித காரணமின்றி மனச் சோர்வடைவதும் கவலைப்படுவதும் இயல்பாக இருந்துவருகின்றது . எனவே காரணமில்லா காரணத்தால் நாம் நம்மையே துன்புறுத்திக்கொள்கின்றோம்...


வின்சென்ட் சர்ச்சில் கூறுகின்றார். நீ ஏதோ இனம் தெரியாக் கவலையினால் மூழ்கிஅஃது என்னவென்று கூட அறியாதிருக்கும் நிலையில் நீ செய்ய வேண்டிய மேலான வழி


நமக்கு கவலையளிக்கும் அல்லது காரணங்களையும் ஒரு தாளில் எழுதுவது தான்அவ்விதம் நாம் எழுதி விட்டால் நாம் அக்கவலையை பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டவர்களாவோம் என்கின்றார்..ஆம் என் அன்பான தோழமைகளே அவர் அப்படிகூறுவதற்கு காரணம் இருக்கின்றது ..நாம் எழுதும் காரணங்கள் பெரும்பாலும் போலிக்காரணங்களாகவும் இரண்டொரு தினங்களில் மறைந்து போகும் காரணங்களாகவும்இருக்கும் என்பதேயாகும் ..


அதன் பின் எஞ்சியிருக்கும் உண்மைக் காரணத்தை வைத்துக் கொண்டு அதைதீர்ப்பதற்கான வழிகள் என்னவென்பதை ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டும். அவ்விதம்ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ந்த பின் வரும் முடிவை உடனே செயல்படுத்த வேண்டும். ஆனால் அவ்விதம் முடிவுக்கு வந்த பின் அதைப்பற்றி இரண்டொரு தடவை யோசிக்ககூடாது , துணிச்சலுடன் அதனை செயலாற்றுவதில் ஈடுபட வேண்டும்..அவ்விதம்செய்யாது சலன புத்தியுடன் இருப்போமாயின் கவலைப் பிரச்சனையை தீர்க்க போய்வீணான கவலையை விலைக்கு வாங்கி கொண்டவர்களாவோம் . ஏனென்றால்எப்பிரச்னையை பற்றியும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கப்பால் ஆராய்வது குழப்பத்தையும்கவலையையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை..ஆகவே நாம் நம்மை வலுவாய்பற்றி பிடித்துக் கொள்வோம் , தயக்கம் காட்டினால் அது நம்மை கவலைப் படுகுழியில்தள்ளிவிடும் .ஒரு வழி திறந்திருந்தால் அதில் நம் காலடிகளை வைத்து எச்சரிக்கையுடன்முன்னேறுவோம்...தடைகள் வரும் அதனை கண்டு நின்று விடாது அடுத்த அடி எடுத்துவைக்க வேண்டும் இல்லையென்றால் பயம் நம்மை பற்றிக் கொள்ளும்...


வாழ்க்கையையோடு விளையாட கற்றுக் கொண்டாலொழிய மகிழ்ச்சிகரமானவாழ்க்கை வாழ இயலாது. அதே நேரம் விளையாட்டு வினையாகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் .துணிவை சோதித்து பார்ப்பது தான் வாழ்க்கை. வாழ்க்கைபாதையானது ஒரே கும்பலும் கூட்டமுமாகவும் இருக்கின்றது அதிலே தான் நம்முடையவாழ்க்கை வண்டியை செலுத்திக் கொண்டு செல்ல வேண்டும். கும்பல் நமக்குதானாகவே வழிவிடும் என்று நினைக்க வேண்டாம் கும்பலைக் கண்டு பின்வாங்காதுசளைக்காமல் துணிவுடன் நாம் எடுத்து வைக்கும் நம் வேகத்தை பார்த்து நமக்குவழிவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று நமக்கு வழிவிடும்...


அன்பு தோழமைகளே நம்மால் ஒரு செயலை சமாளிக்க இயலாவிட்டால் அதனைஅதுவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டும். நம் ஆற்றலுக்கு அப்பால்காரியங்கள் நடக்கும் பொழுது கவலைப்படாமல் அமைதியாக இருந்துவிட்டாலேபோதும் ..சென்றவற்றை பற்றி சிந்தித்து சிந்தித்து நாம் ஏன் நம்முடைய கண்ணீரை சிந்தவேண்டும்..தோல்வியில் தானே மகிழ்ச்சியின் வித்து அடங்கியுள்ளது


விமர்சனங்களை எதிர்கொள்ள கடந்து செல்ல பழகிக் கொள்ள வேண்டும்..


சின்னஞ்சிறு தவறுகளையெல்லாம் இமாலய தவறுகள் என்று எண்ணிக் கொண்டுதங்களை தாங்களே வருத்திக் கொள்ளும் மனிதர்கள் பிறர் தங்களை பற்றி கூறும்குறைபாடுகளை கேட்டு உள்ளம் வருந்துகின்றனர்..


அன்பான தோழமைகளே நாம் எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகஇருக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பிறரின் அதிருப்தியையும் . குறைபாடுகளையும் பெறுவோம் காரணம் பொறாமை தான்...நாம் ஒரு எளியமனிதர்களாக இருந்தால் நாம் ஒருவர் உலகில் இருக்கின்றோம் என்பது கூட பலருக்குதெரியாது...ஆனால் நமது புகழ் வெளியில் பரவ பரவ நம்மை அடித்து வீழ்த்த முனைந்துநிற்பார்கள்..


பிறர் நம்மை குறை கூறுவதற்கு காரணம் என்ன யோசித்து பார்த்தால் நாம் வளவாழ்வு, பெருவாழ்வு வாழ்வது தான்..அது தான் நாம் அவர்களுக்கு செய்த தவறாகும் ..ஆதலால்நம்மை யாராவது குறை கூறினால் சந்தோசப்பட்டுக் கொள்வோம் ..காரணம் நாம்செய்த செயல்கள் அவர்களின் கவனத்தை ஈர்த்து விட்டன...நாம் அவர்களின் மதிப்பைபெற்றுவிட்டோம் என்பது தான்.எனவே அநியாயமான தூற்றுதல் மறைமுகமானபோற்றுதலாகும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது ..


நாம் பக்குவப்பட நமக்கு நிறைய பயிற்சிகள் தேவை..நாம் வாழும் இச்சமூகத்தைஅகக்கண் கொண்டு பார்க்க வேண்டும்..நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும்சீர்தூக்கி பார்க்க வேண்டும்..அந்த நிகழ்வுகளில் உள்ளே, வெளியேயும் தன்னை நிறுத்திஅந்நிகழ்வில் தனக்கான தொடர்பை, நிலைப்பாட்டை தன பங்களிப்பை பகுத்தாய்ந்துதெளிய வேண்டும்..இத்தகைய புரிதலிலேயே வாழ்வதற்கான அர்த்தம் புலப்படும்..வாழ்வின் இலட்சியம் வடிவமைக்கப்படும் இலட்சியத்தை அடைவதற்கான திட்டங்களும், விடாமுயற்சிகளும் நம் பாதையை வலுப்படுத்தும்..ஏற்படும் குறுக்கீடுகளைஎதிர்கொள்வதற்கான துணிவு நம்முள் வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுக்கும் ..


இந்த அரிய உண்மைகளை உணர்ந்து அதன்படி செயல்பட்டு வாழ்வுக்கு அர்த்தம்கொடுக்க முனைவோம்.


அன்புடன் ரோஸ்லின்


aaroselinegmail.com


Ph: 9842073219

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • அமராவதிபுதூர் பிரேம்நாத், இத்தாலி. - Milan,இத்தாலி

    அன்புத் தோழியின் அருமையான கட்டுரை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துகள் தோழி... அன்புடன் அமராவதிபுதூர் பிரேம்நாத், இத்தாலி.

  • A. Sivakumar. - Chennai,இந்தியா

    சூப்பர்

  • Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா

    அருமை சகோதரி.நாள் வாஸ்த்துக்கள்.நண்பேர்கள் டினே நாள் வாஸ்த்துக்கள். கோட் ப்ளேசஸ் யு ன் ஆல்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement