Advertisement

இலக்கிய பெண்களும் இன்றைய பெண்களும்

'காலங்களில் அவள் வசந்தம்கலைகளிலே அவள் ஓவியம்மாதங்களில் அவள் மார்கழிமலர்களிலே அவள் மல்லிகை'இப்படி 'அவள்' என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுவது பெண்ணைத் தான்.வீட்டைத் துாய்மையாக வைத்து, வாயில் முற்றத்தில் கோலம் இட்டு, நிலையில் மாவிலைத் தோரணம் கட்டி, நிலையின் நடுவே குங்குமம் தடவி, நடையில் விளக்கு ஏற்றி வைப்பதும், சாமி படங்களுக்கு மலர்மாலை சூட்டுவதும் மங்கலம் என்று பொதுவாகச் சொல்வர்.ஆனால் வள்ளுவர் சொல்லும் மங்கலம் வேறு.
'மங்கலம் என்ப மனைசாட்சி மற்று அதன்நல்கலம் நன்மக்கட் பேறு'
- என்ற குறளில் மங்கலம் என்று கூறுவது பெண்ணைத்தான். இன்னும் சிறப்பாக சொல்லப் போனால் பண்பும், பரிவும், பாங்கு கொண்ட சிறந்த மனைவியையே அவர் மங்கலம் என்று சொல்கிறார்.
பெண்களின் உயரிய வடிவங்கள் : பண்டைய காலத்தில் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை வடிவங்களாக வாழ்ந்து பண்டைத் தமிழ் மரபைப் போற்றியும், காத்தும் வந்திருக்கின்றார்கள். குடும்ப வாழ்வாம் இல்லற நெறியை சிரம் மேற்கொண்டு பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரளவு இன்றே'
இந்த வரிகள் ஒரு பெண் தன் தலைவன் மீது கொண்டுள்ள அளவில்லா அன்பையும், நட்பையும் காட்டுகிறது. இங்கு பெண் அன்பின் வடிவம்.
'தேன் மயங்குபாலினும் இனியஅவர்நாட்டு உவலைக் கூவற்கீழமானுண்டு எஞ்சிய கலுழி நீரே'
என்ற வரிகள் உயிர்களுக்கு அறம் செய்ய வேண்டும் என்று ஒரு பெண் உணர்ந்து கொண்டதைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் புகுந்த வீட்டு மாண்பை போற்றும் வகையில் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை காட்டுகிறது. இங்கு பெண் நல்லறத்தின் வடிவம்.
விருந்தினர் உபசரிப்பு :
விருந்து எதிர் கொள்ளவும் பொய்ச்சூள் அங்சவும் அரும் பெறற் புதல்வனை முயங்கக் காணவும்ஆங்கவித்து ஒழியும் என் புலவி
(கலித்தொகை 75) என்ற வரிகள் கணவரோடு தேரில் வரும் விருந்தினரை தலைவி எதிர்கொள்வதாக காட்டப்படுகிறது. விருந்தினர்களை உபசரிப்பதை தன் கடமையாகக் கொண்டிருப்பதால் இங்குப் பெண் பண்பாட்டின் மகுடம்.
சிறுவர்ப் பயந்த செம்மலலோர் எனப்பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்வாயே ஆகுதல் வாய்த்தனம் (அகம் )
என்ற வரிகள் நன்மக்கட் பேறு பெற்றதன் மாண்பைக் பெற்றதாக தலைவி மனநிறைவு கொள்வதை காட்டுகிறது. இங்கு பெண் மக்களோடு மகிழ்ந்து மனையறம் காக்கும் இல்லநெறியின் வடிவம். இவற்றைப் போல் இன்னும் பல உயரிய வடிவங்களாக பெண்கள் வாழ்ந்து காட்டிஇருக்கிறார்கள்.
பெண் வாழ்க்கை ஒரு தவம் : இப்போதும் இன்றைய பெண்களுக்குள் இந்த வடிவங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். பெண்களை சுற்றியிருப்போர் வாய்ப்புகளை வழங்கினால் வடிவங்கள் வெளித் தோன்றும். சமுதாயத்தில், குடும்பத்தில் எழும் பிரச்னைகள், பெண்களை வளரவிடாமல் தடுத்துக் கொண்டே இருக்கின்றன.
'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்சால மிகுத்துப் பெயின்'
- என்று வள்ளுவர் கூறுகிறார். மயில் தோகை லேசானது தானே, மென்மையானது தானே என்று ஏற்றிக் கொண்டே போனால், அச்சாணி முறிந்து வண்டியும் சாய்ந்து கீழே விழுந்துவிடும். பிரச்னையும் சிறிது தானே என்று பெண்மைக் குணம் படைத்த பெண்ணின் மீது பிரச்னைகளை ஏற்றிக் கொண்டே போனால் எவ்வளவு தான் இன்றைய பெண்கள் தாங்குவாள்.
சாதுமிரண்டால்...
இன்பம் மட்டும் கணவன் - மனைவிக்கு உரியதல்ல. துன்பமும் கணவன் - மனைவிக்கு உரியது என்று எண்ணிக்கொண்டு குடும்பத்தை வழிநடத்தினால் மலை போன்ற துன்பமும் பெண்ணுக்குப் பனி போல விலகும்.
'இன்ப துன்பம் எது வந்தாலும்எனக்கு நீங்கள் உலகம்'
- என்று கண்ணதாசன் பாடுவது போல் இன்றைய பெண்கள் கணவரை மதிக்கத் தொடங்கிவிட்டால் வருகின்ற துன்பம் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்.எப்போதும் கணவன் - குடும்பம் நல்வாழ்வு என்ற ஒரே நினைப்பு தான் பெண்ணுக்கு. இது அவள் வாழ்க்கையை ஞானிகள் செய்யும் தவத்திற்கு சமமாக செய்து விடும். அவள் சாதாரணப் பெண்ணாக இருக்கலாம். அவளுடைய ஆற்றல் பெரிது. குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் போயிருக்கலாம். அவள் உயிரில் ஏறியிருக்கும் சக்தி பெரியது. அது அவளுக்கே தெரியாது.'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பார்கள். ஏதேனும் ஒரு நெருக்கடி தோன்றி அடக்கமாக உள்ள அவள் உணர்ச்சி, எழுச்சி பெறுமானால் அவள் எண்ணியது நடக்கும். இது இன்றைய பெண்களின் உணர்வுக் கோட்பாடு.
சம்சாரம் என்பது வீணை : இன்றைய பெண்கள், அனுபவங்களை பாடங்களாக்கிப் படித்துக் கொண்டே வந்தால், ஒரு சமுதாயத்தையே தன் அறிவால் புரட்டிப் போடுகின்ற சக்தியை பெறுவாள் என்பது நிச்சயம்.
சம்சாரம் என்பது வீணைசந்தோஷம் என்பது ராகம்சலனங்கள் அதில் இல்லைமணம் குணம் ஒன்றான முல்லை.
வாழ்க்கை என்ற இசையின் ஆதார சுருதி. அடிநாதம் பெண்கள் தாம். அந்த பெண்ணை மயங்க வைப்பது மட்டுமல்லாமல் மணக்க வைப்பதும் ஆண்களின் கடமை. பெண்களுக்கு வரும் சோதனைகளை சாதனைகளாக்குவது பிள்ளைகளின் கடமை. இப்படி ஒவ்வொருவருக்கும் இன்றைய பெண்களுக்கு உறுதுணையாக இருந்தால், ஒவ்வொரு இன்றைய பெண்ணும் இலக்கியப் பெண் தான்.
- முனைவர் அங்கயற்கண்ணிமதுரை98941 40630

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  இலக்கிய பெண்களை படித்து வேண்டுமென்றால் சந்தோச படலாம்இக்கால இன்டர்நெட் பெண்கள் குடும்பம் நடத்தி சந்தோசப் பட முடியாது இன்று விவாகம் நாளை விவாகரத்து ஆண் பாவம் வேறென்னத்த சொல்ல...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  பென்ணுக்கு என்று சில கடமைகள், ஆணுக்கு என்று சில கடமைகள் அது பயிர், பட்சி, பசு, மனித குலம் வரை ஒன்றே இதில் நீ தாழ்த்தி, நான் உயர்வு என்று ஒருபோதும் இல்லை, இதை ஒவ்வொருவர் தாங்களே உருவாக்கிக்கொள்வது. பகவத் கீதை 6ஆம் பகுதியில் கூறியுள்ளது” 6.5 One should save oneself by oneself one should not lower oneself. For oneself is verily one's own friend oneself is verily one's own enemy. சமூக ஆர்வலர்கள், மேலிடத்து பெண்கள், மிகவும் படித்த பெண்கள், மிக பணக்கார வீட்டு பெண்கள் இவர்களால் தான் இந்த பெண் என்றால் கேவலமாக நடத்தப்படுகின்றாள் என்ற ஒரு மாயை உருவாகியிருக்கின்றது. ஒரு வீட்டில் பெண்ணோ ஆணோ ஒருவர் தான் தலைவர் அல்லது தலைவியாக இருக்கமுடியும், அப்பொழுது தான் இல்லறம் ஒரு வழியில் சீராக நடக்கும் இல்லையென்றால் குடை சாய்ந்த வண்டி தான் இல்லற வாழ்க்கை.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  இல்லாள் என்றால் இல்லத்தை ஆள்பவள் எனப்பொருள். பெண்களின் சக்தி அளப்பரியது. அந்த சக்தியை டிவி போன்ற ஊடகத்தின் அல்லது அலுவலக அரைவேக்காடு நண்பர்களின் தவறான வழி காட்டுதல்களால் அறியாதவர்கள் அதை மீண்டும் பெற நமது ஒரே ஒரு பண்டைக்கால நாகரிகத்தை மட்டும் கடை பிடித்தால் போதும். சூட்சுமமாக அதுவே பெண்களுக்கும் அவரை சார்ந்துள்ள குடும்பத்தாருக்கும் அனைத்து சுபிட்சங்களையும் வாரி வழங்கும். அது என்னவென்றால் நெற்றியின் மத்தியில் குங்குமமோ அல்லது கைம்பெண்களாக இருந்தால் சந்தானமோ திருநீரோ அணிந்தால் போதும் எல்லா துயரங்களும் தானாய் நீங்கும் என சித்தர்கள் கூறியுள்ளார்கள். புருவ மத்தியில் இடும் திலகம் ஆரோக்கியத்தையும் நெற்றி நடுவில் வைக்கும் திலகம் நல்ல உறவுகளையும் நெற்றி உச்சியில் வைக்கும் உச்சித்திலகம் நல்ல பொருளாதார வளத்தையும் நல்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆகவே பெண்கள் உறவுகள் மேம்பட நெற்றியின் நடுவில் பொட்டிட்டுக்கொண்டாள் போதும் அவர்களின் அனைத்து உறவும் நட்பும் அவர்களுக்கு நற்காப்பையும் நல்வாழ்க்கையையும் அளிக்கும்.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இன்றய பெண்கள் ??? டிஜிட்டல் சிட்டுகள் அதனால் ஆபத்து அதிகம் சிலிக்கான் சேயும் அற்புதம் அது ஆக ஆண் அட்ரஸ் இல்லாமல் போவான்

 • Sharbudeen Mohamed Kassim - Kuala lumpur,மலேஷியா

  'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல.' அவ்வை மூதாட்டியின் சொல் தான் இது. பெண்கள் தமிழர் பண்பாட்டின் ஆரம்ப காலம் தொட்டு அனைத்து வகையிலும் சிறந்து விளங்கியதை போலவே, தற்போதய கலாச்சார மாற்றங்களிலும் தங்களை சிறந்தவர்களாக மெருகேற்றி உள்ளார்கள். ஆண் ஆதிக்கத்தில் அடிமைகளாக கடந்த நூற்றாண்டு வரை சிக்கியிருந்த பெண்ணினம், இந்த நூற்றாண்டை தத்தமது பொற்காலமாக பரிணமிக்க செய்துள்ளார்கள். பெண் முன்னேற்றம் விரும்பாத சிலர் ஏதாவது குறைகள் சொல்லிக்கொண்டு காலத்தை வீணடிக்காமல், 'ஒற்றுமையே வெற்றிக்கு வழி' என உணர்ந்து ஆக்ககரமாக செயலாற்றுதல் நலம்.

 • A. Sivakumar. - Chennai,இந்தியா

  சங்க காலமும் சரி, எங்க காலமும் சரி, பெண்களுக்கு நியாயமா இல்லை. ஆணைச் சாராமல், ஒரு பெண் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ நேரும் காலம் மட்டுமே பெண்களுக்கு நியாயமான காலம். நான் உட்பட எந்த ஆணும் தான் சார்ந்திருக்கும் பெண்களுக்கு அல்லது தன்னைச் சார்ந்திருக்கும் பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தைத் தரமாட்டான். ஆணின் துணையின்றி வாழ்தல் அல்லது தன்னை மட்டுமே நேசித்து வாழ்தல் போன்ற துணிச்சலான முடிவுகளுக்கு இன்றைய கல்வி முறையும், சமுதாய அமைப்பும் கடும் எதிர்விளைவுகளேயே பரிசளிக்கும். பெண்கள் தைரியமாகவும், எதையும் எதிர்கொள்ளும் மனநிலையிலும் வளர்வதே நல்லது. பிரபஞ்சனின் பெண்மை வெல்க எனும் கருத்தாக்கம் நவீன பெண் சுதந்திரத்துக்கு மிகப் பெரும் ஆதரவு மற்றும் வழிகாட்டி.

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  அன்புள்ள அங்கையற்கண்ணி நல்ல பதிப்பு மோளே , அன்று பெண்கள் நிலை வேறு இன்று வேறு ,அன்று பெண்களுக்கு திருமணமே 9vayathukkulle முடிச்சுடுவா , கல்வி அறிவும் இல்லே உதாரணம் என் பாட்டிகள் (தாய் வழி அண்ட் தந்தைவழி i ) இருவருமே அத்தை பொண்ணு மாமன் மகள் என்று உறவுமுறை (அன்று ஊர் விட்டு ஊர் குக்குட பொண்ணு எடுக்கவும் மாட்டா கொடுக்கவும் மாட்டா ) என் அம்மா தான் முதல் பொண்ணு 10th படிச்சவர் அவா வமிசத்துலே இறுதிவரை (95vayathuvarai இருந்தார்) தினம் ஹிந்து பேப்பர் தினமலர் தினமணி படிப்பார் , உலகம் நன்னா தெரியும் ஆனால் என் இரு பாட்டிகளும் பள்ளிக்குஉடமே போகலே அப்பா பாட்டிக்கு காய் எழுத்துப்போட தெரியும் தாய் வழி பாட்டி நாங்கள் படிக்கும் போதே எங்களுடன் உக்காந்து எங்கள் புக்ஸ் கவனிஸ்சு படிக்கும் திறன் வளத்துண்டார் தினமணி கல்கி விழுகடன் கலைமகள் அமுதசுரபி என்று வீட்டுலே வாங்கும் எல்லா புக்ஸ் படிச்சுடுவார் .நாங்க இவரை சுயம்பு என்றுதான் சொல்லுவோம் தன பெயரையே எழுதி தனக்குவரும் மணியார்டர் பணம் வாங்கிப்பார் . என் அப்பா பாட்டி கடைசிவரை கைநாட்டுதான் , அது அவருக்கு ரொம்பவே குறையேதான் , என் அக்கா பொண்ணு MAle தங்கப்பதக்கம் வாங்கினதுலே அவ்ளோ பெருமை அவருக்கு , தன பேரன் பேத்திகள் எல்லாம் பட்டதாரிகள் என்று ஏகப்பெருமை என் அம்மாவுக்கும் அப்படியே தந்து வாரிசுகள் எல்லாம் கல்வியே சிறந்து இருப்பதில் , இப்போது எங்கள் ஜெனரேஷன் லே எங்கள் வாரிசுகள் நெறைய படிச்சுண்டுருக்கா என் பேரன் டபுள் டிக்ரீ , பேத்திகள் பள்ளிலே படிக்கிறாங்க இவாளோ விளையாட்டில் நீச்சல் போட்டிகள் என்று கலக்குதுங்க எங்களுக்கு கிடைக்காதவைகள் எல்லாம் அடுத்த ஜெனரேஷன் க்கு கிடைக்குதே என்று வெறி ஹேப்பி , நான் பரதம் தர்றேன் சங்கித்தான் தர்றேன் என் அக்காக்களெல்லாம் சங்கீதம் கற்றோம் மேடை எறபெர்மிஷன் இல்லே நான் என்று இல்லே எங்கள் காலம் அப்படி விரிவடையலேயே . எல்லாம் ரசிக்கத்தெரியுதே என்று ஹேப்பி யா இருக்கோம்ம் .வெளியே போக விடமாட்டாங்க பல எங்கள் வயதுள்ளவா ஆபிஸ் லே வேலைபோயி சம்பாதிச்சாங்க நாங்கள் வரவுக்குள் முட்டிமோதுண்டு குடும்பத்தை மேலுக்கு க்கொண்டுவந்தோம் எங்கள் காலம் வரை நாங்க பாவாடை தாவணி அடுத்து புடவை என்று தான் அறிந்தோம் , இப்போது பொண்ணுகள் ட்ரெஸ் விஷயத்துல சல்வார் கமீஸ் லெந்து ஜீன்ஸ் டாப்ஸ் முழுசுகர்ட் அரை ஸ்கர்ட் என்று போடுதுங்க நாம் சொன்னாலும் பாட்டி டோன்ட் இன்டெரபியர்னு சொல்லிடுத்துங்க அடுத்தவீட்டு அம்பியோட 10vayadhuvarai ஆடினோம் இன்று பாண்டு நொண்டி என்று பத்துக்கு பிறகு நம்மளை தீர்மானமேடைலேதான் மத்தவா பார்த்தாங்க , அது oருகாலம் ஆனால் கல்விக்கு ஏறாற்போல பொண்ணுகள் ஜொலிக்கு போயிடுறாங்க என்பதும் உண்மை , அடிமட்ட முனியம்மாவின் பொன்னும் 8m கிளாஸ் முடிஸ்ஸு மேலுக்கு படிக்கமுடியலேன்னா எங்கியாச்சும் பெக்ட்ரி லே வேலைக்கு போயிடுறாங்க , பப்லிக் ட்ரென்ஸ்போர்ட்லயே தான்(bus) லே போயிவரங்க சம்பாதிக்குறாங்க தன தம்பி தங்கைகளை படிக்கவைக்கிறாங்க வேலைக்கு போற பொண்ணுன்னா தான் எல்லா மட்டத்துலேயும் ஈஸியா திருமணம் நடக்குது , படிப்பும் குறைவு வேலையும் இல்லே என்றால் சந்தையில் நோ நீட் என்று நிலை , ஆத்துலே அடுக்களையே இருக்கணும்னாலே கூட அவள் ஒரு டிக்ரீ ஹோல்டேரா இருக்கவேண்டும் என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பு , பல பெண்கள் நெறைய படிச்சும் கிச்சேன் லேதானே இருக்காங்க , இதுலே பெரிய கொடுமை படிக்காத வீட்டுக்கு மருமகளாகி போகும் மருமகள் கேட்கும் வார்த்தைகள் இருக்கே ஆஹா சூப்பர் , படிச்சாலும் படிக்காட்டியும் மருமகள் என்பவள் ஒரு கேவலமான பொருள் மருமகளை கொண்டாடும் மாமியாரை மருமகள் கேவலமா நடத்துறாங்க , எழுதினால் நெறைய ஆயிரம் பக்கங்களுக்கு எழுதின்னே போகலாம் அவ்ளோ இருக்கு நன்மையையும் கொடுமையும் , வள்ளுவன் வாழ்ந்தகாலம் வேறு இன்று நாம் வாழும் காலம் வேறு , அன்று இவ்ளோ காமுகன் கள் இ ல்லே என்று எண்ணுகிறேன் , எத்தனைவிதமான பெண்களை நாசம் செய்றானுக . நம்பர் 1 சினிமா . அன்று சினிமா லே ஹீரோயின்களை டீசெண்டா காமிச்சாங்க இன்று full ட்ரெஸ் லே இருப்பான் ஹீரோ ஆனால் ஹீரோயின் அரைகுறை அம்மணமா அசிங்கமா இருக்கணும் ஆபாசம் , இதைவிட கொடுமை என்னான்னா இந்த ஹியரோயின்களை காபி அடிஸ்சு +2mudichchu காலேஜ் லே நுழைந்ததுமே பொண்ணுக செஞ்ஜுக்கறது தலைமுடியை வெட்டுண்டு ஆபாசமா டிரஸ் மாட்டிப்பதுலே தான் ஆரம்பம் இவளுக எல்லாம்கா ட்டிண்டுபோவாங்க பாக்குறவங்க எல்லாம் கண்களை இருக்கமுடின்னு போணும்ன்னுவாக எப்படி இருக்கு ,நாகரிக்கம் இன்று எப்படி இருக்கு என்று .........................கேக்கமுடியுமா

 • Singai Vendan - Singapore,சிங்கப்பூர்

  இன்றைய பெண்களுக்கு...நீங்கள் சொல்லுவதற்க்கெல்லாம் நேரம் இல்லை...அதுங்களுக்கு கழுதைகளுக்கு கார் வாங்கணும்...வீடு வாங்கணும்...நகை நட்டு...மெனி கியூர்...பெடி கியூர்...பவுண்டேசன் இதுக்கே அதுங்களுக்கு நேரம் சரியா இருக்கு...20 வருஷம் வளர்த்த பையன 20 நிமிசத்துல லூசாக்கிறாளுக...இதுக கிட்ட போய் புகுந்த வீடும் அதன் மாண்பும் ன்னு பேசுனா நம்மதாங்க லூசு... இத்தனை வருசமா படுச்சு பட்டம் வாங்கி படாத பாடு பட்டு ஒரு நிலைக்கு வந்த மனுசனா ஒரே நிமிசத்துல நிலை குலைய வைச்சுறாளுகளே...என்னை கேட்டால் இதுங்களுக்கு கொஞ்சம் ஐ கியு கொஞ்சம் கம்மி...சொல் புத்தியும் கிடையாது...சுய புத்தியும் கிடையாது...தானும் கெட்டு தன்னை சார்ந்தவர்களையும் கெடுப்பதுதான் இதுங்க வேலையே...இதுங்கள மேய்க்கிற நேரத்துல...நாலு மாடு வாங்கி மேய்ச்சா கூட புண்ணியமா போகும்...நானும் பாக்குறேன் இந்த கல்யாணம் பண்ணி ஒரு பய கூட சந்தோசமா இருந்தது இல்ல...அந்த காலத்துல கணவன் குறிப்பறிந்து மனைவி நடக்கணுமாம்...இப்ப கழுத வாய தொறந்து பசிக்குதுன்னு கேட்டா கூட கிடைக்க மாட்டுது...கழுதக வாய தொறந்தா வங்காளம் வரை பேசுறாளுங்க...கொஞ்சம் கூட தன்மானமும் இல்ல மனிதாபிமானமும் இல்ல...புருஷன பாத்தா பணம் காக்கிற மரம் மாதிரி தெரியுமோ என்னவோ...அதே அவுங்க அப்பா அம்மா வீட்டுல மட்டும் கப் சிப்...இங்க வந்தா கழுத வானரகம் மாதிரி...என்ன நரகமோ??? என் நண்பன் சொன்னான் கழுத செருப்பை கழட்டி கூட அடிச்சு பாத்துட்டேன் திருந்த மாற்றாடா மட்சின்னு... கருமம்டா...சாமி???

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement