Advertisement

சசிகலா புஷ்பா விவகாரம்: அ.தி.மு.க.,வுக்கு இது புதுசு!

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா உத்தரவு தான் வேதவாக்கு. அதை மீறும் தைரியம் யாருக்கும் இல்லை. அமைச்சர்கள் உட்பட எத்தனையோ பேர், அவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சந்தடி இல்லாமல், பதவி விலகிய வரலாறு உண்டு.
அப்படிப்பட்ட கட்சியில், அவரது உத்தரவை மதிக்காமல், அவருக்கு எதிராகவே, கட்சியில் இருந்து கொண்டே கொடி துாக்கிய முதல் சம்பவம், சசிகலா புஷ்பா விவகாரமாகத் தான் இருக்கும் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.இதுகுறித்து அவர்கள்
கூறியதாவது:கிட்டத்தட்ட, 15 ஆண்டுகள் முதல்வராக இருந்து விட்டார் ஜெயலலிதா. அவர், ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வின் பொதுச் செயலரான பின், அவரதுஅதிருப்திக்கு ஆளாகி, பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்; பலர் கண்டிக்கப்பட்டுள்ளனர். சிலர் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டதும் உண்டு.
ஆனால், அவர்களில் யாருமே ஜெயலலிதாவை, சசிகலா புஷ்பா எதிர்த்த அளவுக்கு எதிர்த்ததில்லை. கட்சியை விட்டு வெளியேறிய பின், எதிர்த்தவர்கள் இருக்கின்றனர். கட்சியில் நீடிக்கும் ஒருவர், ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை என்றால், எந்தப்பொறுப்பில் இருந்தாலும், ராஜினாமா செய்து விட்டு அமைதியாகி விடுவது தான் வாடிக்கை.
தன் பதவியை காப்பாற்றவும், அரசியல் சுயநலத்துக்காகவும், ஜெயலலிதா எதிர்ப்பு நிலைப்பாட்டை, சசிகலா புஷ்பா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், அந்த தைரியம், இதற்கு முன் யாருக்கும் வந்ததில்லை என்பது தான், ஆளும் கட்சியினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அ.தி.மு.க.,வில் செல்வாக்கு இன்றி ஓரங்கட்டப்பட்டவர்களும், கட்சியை விட்டு வெளியேறி அரசியல் துறவறம் பூண்டவர்களும், சசிகலா புஷ்பாவை பாராட்டும் தகவல் வெளியாகி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (179)

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கொத்தடிமைகளாக இருக்க விரும்பினால், எசமாட்டியின் சொல்லை கேட்கத்தானே வேண்டும்.

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  நடத்துறது அடிமைக் கோமாளிகளின் கேவலமான ஆட்டம். மையப்படுத்தப்பட்ட ஊழல் கொள்ளைக்கு கூடாரம். அதுக்கு பேரு கடைசி, தலைமை.. இந்தம்மாவை பத்தி கூவும் புத்திசாலிகளுக்கு.. இதுவும், இதை போல டெல்லிக்கு 40 ம், தமிழ்நாட்டில் இன்னும் நூற்றுக்கணக்கில் "தேர்ந்தெடுத்து" கொள்ளைக் கூட்டத்தை நடத்தும் கோமளவல்லியைப் பற்றியும் கூறுங்கள். தனது கைப்பட ஒவ்வொரு அடிமையையும் தேர்ந்தெடுத்து அனுப்பிய புத்திசிகாமணி இந்த தலைவி தானே? இந்த பிரச்சினையில் ஆயாம்மா சட்டப்படி ஒரு கூந்தலும் பிடுங்க முடியாது. ஆயாம்மா எப்பவும் செயறது போல கஞ்சா வைத்து வேண்டுமானால் பிடிக்கலாம், இல்லை பின்னால் லாரியை விட்டு மோதி கொல்லலாம், வாக்கிங் போகும் போது கொல்லலாம், ஆசிட் ஊத்தி கொல்லப் பார்க்கலாம். வீட்டிலே இருக்கிறவர்களை கடத்தி வழிக்கு கொண்டு வர பார்க்கலாம்.. பேயாட்டம் ஆடினாலும், என்ன செஞ்சாலும் இப்போ சசிகலா புஷ்பாவுக்கு என்ன நடந்தாலும் ஆயாம்மா தான் அதற்கு காரணம் என்று உலகுக்குத் தெரியும்.

 • S Sam - Kuala Lumpur

  இந்த "அம்மா" நிற்கவோ நடக்கவோ முடியாத நிலையில் இவர் அறைந்தாரா அல்லது உட்கார்ந்து கொண்டே ரூலரால் அடித்தாரா என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. அடி வாங்கிய அம்மா விமான நிலையத்தில் மானத்தை வாங்கியது மட்டுமின்றி, பாராளு மன்றத்திலும் மறு ஒலிபரப்பு செய்து......சே.....

 • zakir hassan - doha,கத்தார்

  சோவியத் யூனியன் சுக்கு நூறான மாதிரி அம்மையார் திமுக விரைவில் பல பிரிவுகளாகி விடும் சசிகலா புஷ்பா தொடங்கியுள்ளார் படிப்படியாக பலரும் பொங்கி எழுந்து பிரித்து விடுவார் அம்மையார் நிரந்தரமாக கொடநாட்டில் ஓய்வெடுப்பார்கள்

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  ஜெயலலிதா அவர்கள் ஒரு தேர்ந்த முதிர் அறிவு பெற்ற சிறந்த அரசியல்வாதி. அவர் அறைந்தார் என்று சொல்வது முற்றிலும் பொய். மேலும் யாரிடமோ கைக்கூலி பெற்று கொண்டு ஜெயலலிதாவிற்கு அவப் பெயர் ஏற்படுத்துவதுதான் புஷ்பாவின் நோக்கமாகும். இவருடைய கூற்றை கலைஞர் அவர்களே ஏற்று கொள்ள மாட்டார்.

Advertisement