Advertisement

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியம்! திண்டிவனம்-செஞ்சி ரோடு படுமோசம்

திண்டிவனம்: திண்டிவனம்-செஞ்சி ரோடு சாலையை சீர் அமைப்பதில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம்(நகாய்) தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், நகராட்சி சார்பில் கோர்ட்டிற்கு சென்று தீர்வு காண முடிவு செய்துள்ளனர். திண்டிவனத்தில், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த, திண்டிவனம்-செஞ்சி ரோடு வழியாக, செஞ்சி, வேலுார், திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு தினந்தோறும் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி பஸ் ஸ்டேண்டிலிருந்து சந்தைமேடு வரையிலான சுமார் இரண்டரை கிலோ மீட்டர் சாலையை சீர் செய்யக்கோரி, நகர பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தனர். புதுச்சேரி-கிருஷ்ணகிரி சாலையிலுள்ள(என்.எச்.௬௬), திண்டிவனம்-செஞ்சி சாலையின் பரிதாப நிலை குறித்து, கடந்த ௨ம் தேதி தினமலர் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. அதில், பிரச்னைக்குரிய சாலை நகாய் கட்டுப்பாட்டில் உள்ளதால், தமிழக நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல், நகாய் அதிகாரிகளே முன் வந்து, பழுதடைந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. தினமலர் நாளிதழில் செய்தி வெளியான பிறகு, தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், திண்டிவனம்-செஞ்சி ரோடு சாலையிலுள்ள பள்ளங்களை தற்காலிகமாக ஜல்லி புவுடர் மற்றும் ஜல்லி கலவை போட்டு சீர் செய்தனர். தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கே சாலை வந்துவிட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ௩௦ம் தேதி நடந்த திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தில் பேசிய நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், '' திண்டிவனம்-செஞ்சி ரோடு சாலையை மரண சாலை என்று அறிவித்துவிட்டு, நகராட்சி சார்பில் கோர்ட்டிற்கு சென்று முறையிடுவதை தவிர வேறு வழியில்லை"" என்று தெரிவித்தார். இதுபற்றி நகர்மன்ற தலைவரிடம் கேட்ட போது, '' சாலையை சீர் செய்யக்கோரி பல முறை நகாய் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வேலையும் நடக்கவில்லை. இதனால் நகராட்சி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என்று முடிவிற்கு வந்துவிட்டோம்"" என்று தெரிவித்தார். கோர்ட்டில் 'குட்டு' திண்டிவனம்-திருவண்ணாமலை சாலை நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வந்தது. பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் சார்பில், செஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிபதி, தொடர்ந்து மூன்று நாட்கள், திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகே , பழுதடைந்த சாலை சீர் செய்யப்பட்டது. அதேபோல், திண்டிவனம் நகராட்சியும் கோர்ட்டில் வழக்கு போட்டு தீர்வு காணுவதற்குண்டான நடவடிக்கையை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (24)

 • S.Ganesan - Hosur,இந்தியா

  வேலூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பற்பல குழிகள் உள்ளன. அவற்றை சரி செய்வது இல்லை. பெயரளவில் அங்கங்கே ஒட்டு போட்ட சாலை. ஆனால் சுங்க வசூல் என்னோவோ வெகு சிறப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஓசூர்-பெங்களூரு ஆறு வழிப்பாதையில் மழை பெய்து குப்பையும், மணலும் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றது. அதை சுத்தம் செய்யாததால் இரு சக்கர வாகனங்கள் செல்லும் போது சறுக்கி விடுகிறது .தண்ணீர் தேங்குகிறது. இப்படியே விட்டால் சில நாட்களிலேயே சாலை மோசமாகிவிடும்.

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  சமீபத்துல கடலூர் போயிட்டுவந்தோம் விருத்தாசலம் டு கடலூர் சாலை கேவலமா இருந்துது இடுப்புல கடும் வழியே வந்தது

 • g.s,rajan - chennai ,இந்தியா

  தமிழகத்தில் பல தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மிக மிக மோசமான நிலையில் உள்ளது .மோசமான சாலைகளில் சாலை விபத்துக்கள் பெருகி வருவதும் உயிர் இழப்புக்கள் அதிகரித்து வருவதும் மிகவும் சோகம் .குண்டும் குழியுமான பல்லாங்குழிச் சாலைகள் சரி செய்யப் படுவது எப்போது ??முதல்வர் ஜெயலலிதா உடனடியாக கவனிப்பாரா ???அதிகாரிகளுக்கும் ,சம்பந்தப்பட்ட மந்திரிகளுக்கு சாளை பணிகளை முடுக்கி விட ஆணை இடுவாரா???

 • Indian Sandwalker - chenai,இந்தியா

  கிரேட்டர் சென்னை சாலை களை பாருங்கள்... சோழிங்கநல்லூர் மற்றும் புனித தோமஸ் மலை உள் வட்ட மற்றும் தெரு சாலை கள் ரொம்ப மோசம்..

 • A R GAFFAR - Tindivanam,இந்தியா

  நம்முடைய மத்திய மந்திரி திரு. பொன்.இராதா கிருஷ்னன் அவர்கள் தலையிட்டால் இந்த பிரச்சினையை ஒரு மணி நேரத்தில் தீர்க்க இயலும். தலையிட்டு சரி செய்வார் என நம்புகிறோம்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அமெரிக்காவில் கட்கரி இதற்கு விரைவில் ஒரு தீர்வு காணும் வகைல புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒண்ணும்போட வாய்ப்பு இருக்கு..அமெரிக்க தொழில் நுட்பம் ஒண்ணுதான் ரோடு போடறதுல இன்னும் இந்தியாவுக்குள்ள வரலை..

 • Murugan Prakasam - Nuremberg,ஜெர்மனி

  ரொம்ப சரி .. எனக்கு தெரிஞ்சி 10 வருசமா இந்த சாலை இப்படித்தான் இருக்கு. என்னத்த சொல்றது ...

 • Vimall - Rajapalayam ,இந்தியா

  மதுரை ரிங் ரோடு படு மட்டம். சென்னை - கன்யாகுமரி வரை உள்ள நான்கு வழி சாலையில் இந்த மதுரை ரிங் ரோடு (30 km ) மட்டும் இரு வழி சாலை. தென் மாவட்டங்களுக்கு இந்த வழியாக தான் போயாக வேண்டும். சாலை பெரிய பெரிய குழிகள். படு பயங்கர ட்ராபிக். ரோடு NH வசம் இருந்தும் இதை வருடங்களாக சீர் செய்யவில்லை. மதுரை - கொல்லம் NH 208 சாலையும் படு மட்டம். இதை லட்சணத்தில் மேலும் 2 லட்சம் கீ மீ NH ஆக போகுது என்று காட்காரி பேசுகிறார்.

 • குரங்கு குப்பன் - chennai,இந்தியா

  உங்கள் தொகுதி MP இடம் முறை இடுங்கள், அவர் மத்திய அரசாங்கத்திற்கு தெரிவிப்பர் நாற்றாக

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  அதுக்குத் தானே ஐயா கட்காரி அமெரிக்கா போய் வந்தாரு. அவரு இன்னும் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, இஸ்ரேல் எல்லாம் போயி பாத்துட்டு வந்தவுடன் பாருங்க. தங்க முலாம் பூசி ரோட்டைப் போடுவாங்க.. அதுவரைக்கும் திமுகவையும், காங்கிரசையும் திட்டி தீர்ப்போம் வாங்க.

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  ஜல்லி லோடுக்கு ஆத்தாவுக்கு 2,000 ஓவா கப்பம் கட்ட நஹாய் தயாராயில்லை. அந்த இழுபறியில் பல சாலைகளின் கட்டுமான முன்னேற்றம் தடைபட்டு உள்ளது.

 • தாமரை - பழநி,இந்தியா

  திண்டுக்கல் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையும் சாலைகள் பராமரிப்பில் மகா மோசம். உதாரணம் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோவை மாவட்டம் முடிந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையிலிருந்து அதாவது மடத்துக்குளம் தாண்டியதும் சாமிநாதபுரத்திலிருந்து அதாவது திண்டுக்கல் எல்லை ஆரம்பித்ததும் இந்த தேசிய நெடுஞ்சாலையின் அவலம் ஆரம்பிக்கிறது. அங்கிருந்து பழனி வரை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மகா மோசமாய் இருக்கிறது.இந்தப் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் வாகனப் போக்குவரத்து எப்போதும் இருக்கும். பழனி மலைக்கு வரும் வெளி மாநில வண்டிகள் அதிகம். குறிப்பாக கேரள பக்தர்கள் பழனி மலைக்கு அதிக அளவில் வருவார்கள்.ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து கேரளத்துக்கு செல்லும் லோடு வண்டிகள் ஆயிரக்கணக்கில் இவ்வழியாகச் செல்லும். பழனி-பாலக்காடு,திருச்சூர்,மூணாறு, உடுமலை,பொள்ளாச்சி,கோவை ஊட்டி போன்ற ஊர்களுக்கு பிரதான சாலையே இதுதான். திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?

 • Chandran Pandu - chennai,இந்தியா

  அந்த சாலை மட்டுமா படுமோசம் சென்னை பூந்தமல்லி சாலையில் இருந்து வாலாஜா வரை மிக மிக படுமோசம் .குண்டும் குழியுமா இருக்கிறது .இதற்கு சாலை வரி வசூல் வேறு .மத்திய மாநில மந்திரிகள் கண்டுகொள்வதில்லை .

 • babu - Nellai,இந்தியா

  மானங்கெட்ட அரசியல் வியாதிகள் தரும் ரூபாய்க்கு கை நீட்டினால் இப்படி தான் நம்மை கேவலமாக நடத்துவர். எத்தனை வருடங்களாக இந்த சாலை இப்படி உள்ளது என்று இந்த மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும், இருந்தும் நமக்கென்ன என்று தானே இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகின்றோம். எத்தனை தடவை மனதில் கோபம் பொங்கி வந்தாலும் அப்படியே அடங்கி ஒதுங்கி செல்கின்றோம்,ஏன் நாம் என்ன அடிமைகளா......... இந்த பகுதி அல்ல அனைத்து பகுதி ஏழை மக்களுக்கும் இப்பொழுது மனதில் ஒற்றுமை என்ற எண்ணம் போய் பணம் தான் வேண்டும் என்ற அறியாமை தோன்றி விட்டது. கிராமத்து மக்கள் அனைத்திலும் ஒற்றுமையாக இருப்பர் எத்தனை கோடி கொடுத்தாலும் அவர்களின் பாசத்திற்கு ஈடு இல்லை அன்று, ஆனால் இன்றோ பணம் பணம் தான் தேவை குணம் அல்ல என்றும், கேவலமான கொலைகளும், ஜாதி சண்டைகளும் தானே அரங்கேறி கொண்டு இருக்கின்றது நமது கிராமங்களில். படித்தவனை விட படிக்காத விவசாயி தான் அன்று பெரியவன், இன்று நிலைமை மாற்றி விட்டது. படித்தும் பொது அறிவு இல்லாத மனிதன் சுய நலம் தான் என்று இருப்பதை கோட்டை விடுகின்றான்.

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  எல்லருடையா வாகனத்தையும் பழுதாகும் இந்த சாலையால் உங்கள் வாகனம் பழுதானால் அதற்கு எதற்கு சாலை வரி? பொதுப்பணித்துறையினரின் வீடு/அலுவலகம் ஜப்தி செய்து அதன் மூலம் வரும் வருமானத்தில் இந்த சாலை செப்பனிடப்படுமா?

 • christ - chennai,இந்தியா

  ஜெயலலிதாவை அந்த ரோடு வழியா வரச்சொல்லுங்கள் ரோடு சர்வதேச தரத்துக்கு தானாக சரியாகும் .

 • Sammatti - Chennai,இந்தியா

  ஆம்...மிக மோசமான சாலை...கற்காலத்தில் இருப்பதை போன்ற உணர்வு இந்த சாலையை கடக்கும் போது ஏற்படுகிறது எனக்கு தெரிந்து கடந்த 3 ஆண்டுகளாய்...பயன்படுத்துகிறேன்....பார்க்கிறேன்... புதுச்சேரி மற்றும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு பௌர்ணமி தோறும், மேல்மலையனுர் என்னும் கிராமத்திற்கு அமாவாசை தோறும், பெண்களரூரிலிருந்து மேல்மருவத்தூர்,புதுச்சேரி, செல்ல லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சாலை இது என்பது மிக வருந்தக்கூடிய விஷயம்.....நேரிலே பல இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்வதை தினம் தினம் பார்த்திருக்கிறேன்...வெளிநாட்டில் இருந்து வந்து 2013 நொவெம்பரில் முதல் முறையாக பெண்பார்க்க சென்றபொழுது இருந்த சாலையின் அதே நிலைமை இன்றும் எனக்கு திருமணம் முடிந்து 4 முறை இந்தியா வந்து சென்றும் ஒரு பிள்ளையை பெற்றும் ஒரு முன்னேற்றமும் இல்லாமல்.....எனக்கு எழுகிற ஒரே கேள்வி மற்றும் கோபம் எங்கே எங்களது வரிப்பணம்???????... அந்த சாலையை செப்பனிடும் பணியை எங்கள் நிர்வாகத்திடம் விட்டால் அதிகபட்சம் வாரங்களிலேயே தீர்வு கண்டுவிடுவோம்.....இது தான் அந்த மரண சாலையின் யாததார்த்த நிலை.....நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் நிலைமை படு திண்டாட்டம் தான்....விளைவு பெரிய அளவில் நடந்து முடிந்த பின்பு நிவாரணம் தேடும் ஊழியர்கள் கவனம் செலுத்துவார்களா????????

 • Srinivasan Kothandaraman - Chennai,இந்தியா

  it is true

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement