Advertisement

பள்ளியில் பாலியல் கல்வி அவசியம்: டாக்டர் நாராயணரெட்டி ஆர்வம்

பாலிய குறித்து பேச துவங்கினாலே பிரச்னைகள் எழுந்த காலத்தில் பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண தனி கிளினிக்கை துவக்கியவர், பாலியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நாராயணரெட்டி. 1982ல் அவர் கிளினிக்கை துவக்கிய காலம் தென்னிந்தியாவில் எந்த ஒரு டாக்டரும் தொட தயங்கிய துறையாக இருந்தது பாலியல் துறை. இன்று காணப்படும் பாலியல் விழிப்புணர்வுக்கு காரணகர்த்தா அவர்.

சமீபத்தில் மதுரை வந்த டாக்டர் நாராயணரெட்டி வாசகர்களுக்காக மனம் திறந்ததாவது...


* பாலியல் கல்வி தேவையா?


பாலியல் நலக் கல்வி என்பது ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசி போன்றது. ரோட்டில் செல்லும் போது விபத்தில் காயமடைய போகிறோம் என்பதற்காக காப்பீடு பாலிசி எடுப்பதில்லை. ஒரு வேளை அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தால், பாலிசி உதவியாக இருக்கும் என்பதற்காக எடுக்கிறோம். அதுபோல, குழந்தைகள் பாலியல் கல்வியை கற்றால் மட்டுமே அதன் நன்மை தீமைகளை அறிந்து கொள்வர். பாலியல் வியாதிகள் குறித்தும் முழு புரிதல் ஏற்படும். தவறான வழியில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் போது அதை தவிர்ப்பர். பள்ளிகளில் பாலியல் கல்வி சமூகத்திற்கு அவசியம்.

* குடும்ப உறவில் நிற வேறுபாடு குறித்து?

மக்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் 'சிகப்பழகு' விளம்பர தந்திரத்திற்கு அடிமையாகி விட்டனர். ஒரு மனிதனின் இயற்கையான நிறத்தை ஒரு வாரத்தில் மாற்றும் 'கிரீம்' உலகில் கிடையாது. ஆனால், இந்த 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் குறித்த விளம்பரங்களை திரும்ப திரும்ப மக்களிடம் திணித்து, அவர்களை உளவியல் ரீதியாக மாற்றி விட்டன. சிவப்பாக இருப்பது தான் அழகு என்ற தவறான கருத்தை விதைத்து விட்டன. தன் இயற்கை நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள்.

* பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா?

அரசு அங்கீகரிக்க வேண்டும்என்பது என் கருத்து. உறவிற்கு முன் முறையான மருத்துவ பரிசோதனை செய்ய கூடிய கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும். இதனால், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை தவிர்க்கலாம். தன் குடும்பங்களை விட்டு பணி நிமித்தம் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயரும் மனிதர்கள் சிவப்பு விளக்கு பகுதியை நாடும் பட்சத்தில், முறையற்ற உறவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் சமூக சீரழிவுகள் இதனால் தவிர்க்கப்படும்.

* அதிகரித்து வரும் விவாகரத்து குறித்து?

முன்பு கணவர் மட்டும் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் நிலையிருந்தது. பொருளாதார ரீதியில் கணவரை சார்ந்திருந்த மனைவி விவாகரத்தை பற்றி நினைக்கவில்லை. ஆனால், கணவனும் மனைவியும் வேலைக்கு செல்ல துவங்கி விட்ட பின் மனைவி சுயமரியாதையை எதிர்பார்க்கிறாள். அது கிடைக்காத பட்சத்தில் கணவரை பிரிய தயாராகிறாள். தாம்பத்திய உறவுகளில் ஏற்படும் விரிசல் கூட சில சமயங்களில் விவாகரத்திற்கு காரணமாக அமைகிறது. கணவன் மனைவி தினமும் சில நிமிடங்கள் குடும்ப பிரச்னைகளை விவாதித்தாலே, விவாகரத்துகளை தவிர்த்து விடலாம்.

* நவீன உணவு முறைகளால் நன்மையா?

தற்போதைய உணவு முறைகள் மட்டுமே, எல்லா நோய்களுக்கும் காரணம் என கூற முடியாது. மருத்துவ விழிப்புணர்வால் அனைத்து நோய்களும் வெளியே தெரிய வருகின்றன என்பது தான் உண்மை. அதனால் அதிக நோயாளிகள் உருவாவது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. உயர்தர வாழ்க்கை என்ற பெயரில் துரித உணவுகள், போதை பழக்கங்கள் போன்றவைகளுக்கு அடிமையானவர்கள் பல உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • RAVI SETHURAMAN - MADURAI,இந்தியா

  தனியாக தேவை இல்லை.தாய்தான் நல்ல டீச்சர்.

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  நல்ல தொட்டால் கேட்ட தொடல்னு குழந்தையா இருக்கும்போதே பல அம்மாக்கள் சொல்லித்தரதுண்டே , பருவம் அடைதலும் பற்றி சொல்லிடனும் இந்தகாலத்துலே பொண்ணுகள் 11VAYDHILEYE கூட வயசுக்கு வந்துடுதுங்க பாவம் கட்டாயம் தெரிஞ்சு இருக்கணும் என்றே பள்ளிகளிலேயும் சொல்லுறாங்க இலை பொண்ணுகள் பள்ளிலேயே கூட ஆயிடுதுங்க அப்போ வகுப்பு ஆசிரியர்களே கூட விவரமா சொல்லி பயம் வேண்டாம்னும் சொல்லுறாங்க வீட்டுக்கும் தகவல் சொல்லி ட்டு வகுப்பிலேயே வச்சும் வீட்டுக்கு அனுப்புவது ரொம்பவே காமனா இருக்கு செக்ஸ் நா என்னான்னே தெரியாத வயத்துவந்தக்குட்டிகளுக்கு திருமணம் போது தவிஸ்ஸு அழுது கலாட்டாவே செய்வாங்க . ஹாஸ்டல்லே தங்கி படிக்கும் குட்டிகள் பிரெண்ட்ஸ்க்குட பழகிய தெரிஞ்சுக்குதுங்க ,இலை மறை காய் மறைவாகவே சொல்லுவது தான் பேஸ்ட்

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  பாலியல் கல்வி வெளி நாடுகளில் 10 வயதிலேயே சொல்லித்தருகிறார்கள். அதனால் நன்மையும் உண்டு . கெடுதலும் உண்டு. நனமை பாலியல் உடல் ஆரோக்கியம், பாலியில் மனவளம் பெருகும். தீமை.. என்னவென்றால். சிலர் பிஞ்சிலேயே பழுத்து விடுவார்கள்..

 • Ambedkumar - Chennai,இந்தியா

  அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் கல்வி இருந்தபோதும், அங்கேதான் பாலியல் நோய்களும் அதிகம் உள்ளன

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  பாலியல் கல்வி கொண்டு வருவதால் மட்டுமே எதையும் தடுத்துவிட முடியாது.... குறிப்பாக, லண்டணில் பாலியல் கல்வி இருந்தும் அங்கு பாலியல் குற்றங்கள் குறைந்து விடவில்லை.... இன்னும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.... வளர்ந்த நாடுகளிலேயே இப்படி என்றால்.... இந்தியா போன்ற நாடுகளில் பாலியல் கல்வி கொண்டு வந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.... பாலியலைக் கற்பிக்கத் தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்....இப்போதே பல பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குத் தகுதியும் திறமையும் கிடையாது...அனைவருக்கும் டெட் தேர்வு வைத்தாலேயே அவர்களின் லட்சணம் தெரிந்து விடும்.... இவ்வளவு ஏன் அவர்களுக்கு தனித்தனியாக “டிக்டேஷன்” வைத்தாலேயே பெரும்பாலானோரின் தகுதி வெட்ட வெளிச்சமாகி விடும்.... இதற்காகத்தானே இவர்கள் “டெட்” தேர்வு முறையை எதிர்க்கிறார்கள்.... எல்லாம் பணம்கொடுத்தும் சட்டத்திற்குப் புறம்பாகவும் பதவிக்கு வந்தவர்கள்.... அதுமட்டுமா.... இருக்கிற ஆசிரியர்களே “வேலியே பயிரை மேய்ந்த” கதையாக 3 வயதுக் குழந்தை முதல் +2 மாணவி வரை யாரையும் விட்டு வைக்கவில்லை..... தங்களது காம இச்சைக்கு மாணவிகளைப் பயன்படுத்துவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.... இந்த லட்சணத்தில் பாலியல் கல்வியைக் கொண்டு வந்தால்..... கேட்கவே வேண்டாம்.... பெற்றோர்கள் தங்களது மகளுக்குக் “காண்டம்” வாங்கிக்கொடுத்துத்தான் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்..... பெற்றோரை விட மிகச் சிறந்த ஆசிரியர் கிடையாது... தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர் தான் பாலியல் கல்வியைச் சொல்லித்தர வேண்டும்..... மொதல்ல, இந்த ஆளு “கிளு கிளுப்பா” பொஸ்தகம் எழுதுறதை நிப்பாட்டினாலேயே போதும்.... பாதி குற்றங்கள் குறையும்... அமோக விற்பனையாம்.... பொஸ்தகம் கிடைக்க மாட்டேங்குது.... இவரு, ஷாலினி, மாத்ருபூதம்( இப்போ இல்லை ) இவங்களுக்கெல்லாம் இதே பொழப்பு.... தங்களிடம் சிகிச்சைக்கு வந்தவர்களின் கதையைச் சொல்கிறேங்கிற பேர்ல இவுங்க எழுதுறது இருக்கே..... அத்தனையும் மஞ்சள் பத்திரிக்கைக்குச் சமம்.... அந்தக் “குஷ்வந்த் சிங்”கே தேவலாம்.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement