Advertisement

'சுவாதி கொலையாளி நான் இல்லை!' : ஜாமின் கேட்டு ராம்குமார் மனு

சென்னை: மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, ராம்குமார், ஜாமின் கோரி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.மனுவில் கூறியுள்ளதாவது: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ஜூன், 24ல், மர்ம நபர் ஒருவன், சுவாதியை தாக்கியுள்ளான். இச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படை யில் போலீசார், ஜூலை, 1ல் என்னை கைது செய்தனர். கைது செய்த போது, நுங்கம்பாக்கம் போலீசாருடன் வந்த சிலர், நான் தற் கொலைக்கு முயற்சித்தது போல, என்னை பிளேடால் தாக்கினர்.
நான் அப்பாவி : மாஜிஸ்திரேட், என்னை நீதிமன்ற காவலில் வைக்க, ஜூலை, 4ல் உத்தரவு பிறப்பித்தார். தற்போது, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள் ளேன். சுவாதி கொல்லப்படுவதற்கு, இரு வாரங் களுக்கு முன், ஒருவன், அவரை தாக்கியதாக, நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். உண்மை குற்றவாளியை பாதுகாக்க, அப்பாவியான என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். எந்த விதத்திலும் இந்த குற்றச்சம்பவத்தில் நான் சம்பந்தப்படவில்லை. எனக்கு எதிராக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு : நான் தப்பிச் செல்ல மாட்டேன்; சாட்சியை கலைக்க மாட்டேன். விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். இந்தநீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட தயாராக இருக்கிறேன். எனவே, எனக்கு ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரவில் கைது செய்தது ஏன்? : ராம்குமார் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்த பின், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டி: முகநுாலில் பலருடன் சுவாதி தொடர்பில் இருந்துள்ளார். ராம்குமார் அப்பாவி. கைது செய்யச் சென்ற போலீசார் தான், கழுத்தை அறுக்கச் செய்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன், ரயில் நிலையத்தில் சுவாதியை ஒருவன் அடித்திருக்கிறான். அதை விசாரிக்காமல், அவசர அவசரமாக, சம்பந்தமில்லாமல், ராம்குமாரை கைது செய்து உள்ளனர். ராம்குமாரை பார்க்க வழக்கறிஞர்களுக்கு அனுமதியளிக்கவில்லை. ஆடு மேய்க்கும் போது,ராம்குமாரை கைது செய்திருக்கலாமே. இரவில் ஏன் கைது செய்ய வேண்டும். இந்த கொலையை அவன் செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
புழல் சிறையில் அடைப்பு : மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் அடைக்கப்பட் டான். ராம்குமாருக்கு, இரண்டு நாட்களாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. அவனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வரு வதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். நேற்று அவனை பரிசோதித்த மருத்துவர்கள், 'எழுந்து நடக்கிறான்; அவனது உடல் நிலை இயல்பு நிலைக்கு திருப்பி விட்டது. கழுத்து தோல் பகுதியில் மட்டுமே லேசான காயம் உள்ளது. வேறு ஏதும் உபாதைகள் இல்லை' என, போலீசாரிடம் சான்று அளித்தனர்.

இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாலை, 5:15 மணிக்கு, புழல் சிறைக்கு கொண்டு செல் லப்பட்ட அவனை, சிறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பின், சிறையில் உள்ள வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளான்; போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராம்குமாரின் கழுத்தில் போடப்பட்டுள்ள, 18 தையல்கள் பிரிக்கப்பட்டதும், அவனை, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (208)

 • Venkata Ramanan - Chennai,இந்தியா

  போலிஸ் ராம்குமாரை பிடிக்கச்சென்றபோது ஏன் காமெராவை உபயோகித்து இருக்கக்கூடாது? இப்போதெல்லாம் பேனாவில் கூட காமெராவை வைக்கும்போது சாட்சிக்கு விடீயோ காமெராவை போலீஸ் உபயோகிக்க வேண்டும்.

 • S.S .Krishnan - chennai,இந்தியா

  பணம் கிடைக்கிறது என்று எப்படி வேண்டுமானாலும் நடக்க கூடாது. இவருக்கு குடும்பம் இல்லையா? அவங்களுக்கு இப்படி நடந்தால் இவர் வாதாடுவாரா?

 • madayan - Anaheim,யூ.எஸ்.ஏ

  இந்த பையன் பலி கடா வாக இருக்கலாம். இந்த கருத்தையும் சேர்த்து வந்துள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு பெரிய கதையே எழுதலாம். இதற்கு அனாவசிய விளம்பரம் மிகவும் அதிகமாக உள்ளது

 • Arulmanian - Chennai,இந்தியா

  கொலை குற்றம்சாட்டப்பட்டவர்:: சொன்னா நம்புங்கா நான் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் கிடையாது. கோரஸ்:: இல்லை, இவனை கல்லெறிந்து கொன்றே ஆகவேண்டும்.

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  ஒரு பெரிய பங்களா முன் 50 ,60 அடியாட்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த பிரமுகர் ஹம்மர் காரில் வந்தார். 'தலைவா இன்னிக்கு மட்டும் சென்னையில் ஆறு கொலைகள் , ஏழு தங்க சங்கிலி பறிப்புகள், எட்டு கற்பழிப்புகள், 9 இடங்களில் கொள்ளைகள் என்று நம்ம ஆளுங்க அமர்க்களப்படுத்திட்டாங்க தலைவா " நாளை நம்ம ஊடகங்கள், நாளிதழ்கள், எல்லாம் ஆளும்கட்சியை செமையா தாக்கி எழுதவும் ஏற்பாடு செஞ்சாச்சு ' இந்த ஆட்சியில சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று 'சமூக ஆர்வலர்களையும் பேச ஏற்பாடு செஞ்சுட்டேங்க என்றான் ஒருவன். அப்போது 4 லாரிகளில் நடுத்தர வயதுடைய ஆண்கள் ,பெண்கள் ,சில கிழவிகள், என்று வந்து சேர்ந்தனர். .தலைவா இவங்கெல்லாம் சம்பவம் நடந்த இடங்களுக்கு பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி போராட ஏற்பாடு பண்ணியிருக்கோம். .இந்த டாஸ்மாக் கடையிலதான் கொலைகாரன் கொலை செய்யும் முன்னால் குடிச்சுட்டு அப்புறமா கொலையா செஞ்சான் , அதேமாதிரி தங்க சங்கிலிய பறிக்கறதுக்கு முன்னால் இந்த டாஸ்மாக் கடையில்தான் திருடன் சரக்கு அடிச்சான் ன்னும் சொல்லி இவுங்க அந்த கடையெல்லாம் மூடணும்னு போராடுவாங்க. .பாருங்க இன்னும் ரெண்டு மாசத்துல சென்னையை கலக்கிப்பிடுவோம் ' என்றான் . இந்த செய்தி நம்ம தினப்புளுகன் நிருபர் தான் உயிரை பணயம் வைத்து சேகரித்தது.

Advertisement