Advertisement

சுவாதி கொலையில் எனக்கு தொடர்பு இல்லை: ராம்குமார் பல்டி

சென்னை: சுவாதி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறியுள்ள ராம்குமார், ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளான்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டான். அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான். அவனை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது அவன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். அவன் பாதுகாப்பு கருதி கைதிகள் பிரிவுக்கு மாற்றப்படவில்லை எனவும், தீவிரி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ராம்குமார் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராம்குமார் தனது மனுவில், சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறியுள்ளார். விரைவில் இந்த மனு குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

ராம்குமார் வக்கீல் வக்காலத்து : ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீசாருடன் வந்த நபர்கள் தான். எங்களுக்கு வந்த அறிவுரைப்படி ராம்குமாருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் போலீசாருக்கு 2 நாள் கெடு விதித்ததால் ராம்குமாரை போலீசார் அவசரமாக கைது செய்துள்ளது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

டி.என்.ஏ., சோதனை: சுவாதியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து ராம்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துவிட்ட நிலையில், அதற்கான ஆதாரங்களை திரட்டி கோர்ட்டில் சமர்பிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன்படுத்திய அரிவாளில் படிந்திருந்த ரத்தம் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது. அதுபோல ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த ரத்தத் துளிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவை ஹைதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட அந்த ரத்தத்தை கொண்டு மரபணு சோதனை செய்யப்படும். அதில் சுவாதியை கொலை செய்தது ராம்குமார் என அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டு, உறுதிபடுத்தப்படும். இந்த வழக்கில் டி.என்.ஏ. அறிக்கையானது முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுதவிர தடயவியல் சோதனை மற்றும் சாட்சிகளையும் போலீசார் திரட்டி வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (179)

 • Vetri Vel - chennai,இந்தியா

  ஒன்னும் புரியல.. பல விவரங்கள் வெளியில் வரலைன்னு மட்டும் தெரியுது... யாரை எதை தான் நம்புவதோ.... அப்போ அந்த பெண்ணின் பேஸ் புக் ல் உள்ள அனைத்து ஆண் நண்பர்களையும் கூட்டி ஊர்வலம் நடத்தி கண்டுபுடிக்கலாமே.... கொலை செய்தது ஆம்பளையா பொம்பளையா னும் இன்னும் தெரியல போல...

 • DAYA - Tiruttani,இந்தியா

  இவன் உண்மையாகவே காதலிக்க நினைத்திருந்தால் தன் முகத்தை முதலில் கண்ணாடியில் பார்த்திருப்பான்.தன் தகுதி என்னவென்று தெரிந்திருக்கும். உடனே தன் ஊரில் உள்ள உமா ,தேவி, மீனா ,ராணி இவர்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்து இருப்பான். ஸ்வாதியை அல்ல. அப்போதும் உட்கார்ந்து யோசித்திருப்பான். தான் இன்னும் அரியர் முடிக்காததும் ,வேலையின்றி வருமானமின்றி இருக்கிறோம் என்ற உண்மை உரைத்திருக்கும். உடனே அதை தேடிப் போயிருப்பான். காதலை அல்ல. ஆனால் இவன் காமப்பசியில் அலைந்திருக்கிறான். அதுவும் தகுதிக்கு சற்றும் பொருந்தாத ஸ்வாதியோடு. உண்மை காதல் என்றால் முதல்முறை நட்புமுறையில்தான் பழகினேன் என்று காதலை ஸ்வாதி மறுத்தபோதே ஊர்போய் சேர்ந்திருப்பான். ஆனால் இவன் காமவெறியில் வெள்ளைத்தோல் மீதல்லவா ஆசை வைத்து திரிந்திருக்கிறான். இதற்காக மறுபடி மறுபடி போய் காதல் வசனம் பேசியிருக்கிறான். ஸ்வாதி திட்டிய உடன் வெறிகொண்டு கொடுரமாக வெட்டி சாய்த்துவிட்டான்.. எந்த உண்மை காதலும் துரத்தி துரத்தி போவதால் வருவதில்லை.. இயல்பான சந்திப்புகள் மூலம் தானே வருவதுதான் காதல். இத்தனை வருடம் தன் மனதில் இருந்த வெறியெல்லாம் அப்பாவி ஸ்வாதி மேல் காட்டிவிட்டான். எல்லாவற்றுக்கும் காரணம் யதார்த்தம் புரியாமல் இவன்கள் கற்பனை உலகில் கட்டும் மனக்கோட்டைகள்தான். ஸ்வாதி ,வினோதினி போன்ற ஏராளமான பெண்களின் மரணத்திற்கும் இதுவேதான் காரணம். இம்மாதிரி கற்பனை உலகில் எந்த நேரமும் சஞ்சரிப்பவர்கள் மிக ஆபத்தானவர்கள். குற்றங்கள் செய்து கொண்டே இருப்பார்கள்..இவர்களை கடுமையாக தண்டித்தே ஆகவேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும் . அடே அரக்கனே ,எக்கச்சக்கமான மனிதாபிமானிகளின் தூக்கத்தையும் ,நிம்மதியையும் கெடுத்திருக்கிறாய். உன்னை நாங்கள் தண்டிக்காமல் விடமாட்டோம். குழந்தை மாதிரி சிரிக்கும் அப்பாவி பெண் ஸ்வாதி இப்போது சொர்க்கத்தில் இருக்கிறார். காலமெல்லாம் இருப்பார். ஆனால் உன் இறப்பிற்கு பின் உன் ஆவி காரிருள் சூழ்ந்த கொடிய நரகத்தில் காலமெல்லாம் உழன்று கொண்டிருக்கும். இனி நீ இந்த உலகில் இருக்கும் வரையிலும் நரகம்தான், இறந்தபின்னும் உனக்கு நரகம்தான். எதிர்க்க திராணியற்ற அப்பாவி பெண்ணிடமாடா உன் வீரத்தை காட்டுவாய்........

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  கொலையாளி செய்தது சாஸ்த்திரங்களின் படி ப்ரம்மஹத்தி தோஷம் எனப்படும்.கண்டிப்பாக இதற்கான தண்டனை ராம்குமாருக்கும் அவனது குடும்பத்தாருக்கும் வாதாடும் வக்கீலுக்கும் உண்டு.இது பரிகாரமே செய்யமுடியாத குற்றம் ஆகும்

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராது வழக்கினை வாதாட வழக்குரைஞர்கள் யாரும் முன்வரவில்லை என்பது நினைவுக்கு வருகிறது.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  எப்போது பாதிக்கப்பட்டது பிராம்மண ஜாதியில் நடுத்தர வர்கத்தைசேர்ந்தவராகவும் ,கொலை செய்யாதவர் தாழ்த்தப்பட்ட இனத்தவராக இருக்கும்போதே தெரியும் இந்த கேஸ் எந்த வழியில் செல்லக்கூடும் என்று.ஒரு வேளை பாதிக்கப்பட்ட பெண் அழகாகவும் தாழ்த்தப்பட்ட ஜாதியினராகவும்,,குற்றம் சாட்டப்பட்டவர் அதே ஜாதியாக இருந்திருந்தாலும் சும்மா விட்டிருப்பார்களா?

 • kovaisri - Coimbatore,இந்தியா

  இவனுக்கு வக்காலத்து வாங்க வந்த வக்கீலுக்கோ இல்ல வக்கீலின் குடும்பத்தில் பெண் குழந்தை யாரும் இல்லையா என்ன

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  உண்மை எது பொய் எது ஒண்ணும் புரியல்லை.. நம்ம காதை நம்மாலே நம்ப முடியலை.. நேத்து சொன்ன சேதி எல்லாம் இன்று மாறுது.. நாளை வரும் சேதி கேட்க மனமும் தயங்குது.. உண்மை எது பொய் எது ஒண்ணும் புரியலை... பேப்பர்களை பார்ப்பதற்கே மனசும் போகலை..

 • Antoni Raj - Uthamapalayam,இந்தியா

  நல்ல வேளை, நான் வக்கீல் படிப்பு படிக்கவில்லை. படித்திருந்தால் வாழ்நாள் முழுவதும் பொய் சொல்லியே பிழைக்க வேண்டி இருந்திருக்கும்

 • Sathish - Coimbatore ,இந்தியா

  கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு வரும்.

 • T.Palani - Panruti,இந்தியா

  எந்தெந்த கருமத்தையெல்லாம் ஸ்மார்ட் போனில் படம் பிடிக்கும் நமது மக்கள் நிச்சயம் இந்த கொலையையும் படம் பிடித்திருப்பார்கள்..அவர்கள் சிறிது உதவினால் இவனது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்...please yaaraavadhu உதவுங்களேன்....

 • idian.ideamin - UP,இந்தியா

  simple குற்றவாளி இல்லை வெளியில் விட்டிருங்கள் + வக்கீல் = ஓகே வா

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  ராம்குமாருக்கு ஒரு அறிவுரை. ஜாமினில் வெளியில் வந்தால் உன் உயிருக்கு எந்த உத்திரவதமும் இல்லை என்பதால் நீ சிறையிலேயே மிக பத்திரமாக களி தின்பாயோ அல்லது ஊர்வன, பறப்பன போன்றவற்றை AC வகுப்பில் இருந்து கொண்டு அனுபவிப்பாயோ தெரியாது. உன் உயிரை காப்பாற்றிக்கொள். மக்கள் வெறியுடன் இருக்கிறார்கள்.

 • Sathesh Manickavasagam - Chennai,இந்தியா

  தமிழக மக்கள் மறுபடியும் ஆட்டு மந்தைகள் என்பதை நிரூபித்துள்ளார்கள். ராம்குமார் தான் குற்றவாளி என்று அவர் எந்த இடத்திலும் வாக்குமூலம் கொடுக்கவில்லை. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒருவரிடம் வாக்குமூலம் வாங்க யாரும் முயலவில்லை. ஆனால் செய்திகளில் வாக்குமூலம் வாங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டது. முதலில் பிலால் மாலிக் என்றார்கள் இப்போது ராம்குமார் என்கிறார்கள். முறையான ஆதாரம் எதற்கும் இல்லை. கழுத்தை அறுத்தது காவலர்கள் என்றால் உண்மையான குற்றவாளியை எப்போது காவலர்கள் பிடிப்பார்கள்.

 • suganya - tirupur,இந்தியா

  வழ வழனு இழுக்காம தூக்கு தண்டனை குடுங்க இல்லனா இரட்டிப்பு ஆயுள் தண்டனை குடுங்க .... தப்ப அவன் வாயால திருநெல்வேலி மேஜிஸ்டிரேட் கிட்ட ஒத்துக்கிட்டான். சோ தயவு செய்து தனிப்பட்ட அவன் ஒருத்தனை மட்டும் பாக்காம சமூகத்தையும் திரும்பி பாருங்க. நாளைக்கு இந்த மாதிரி இனொரு கொலை நடக்க கூடாது . கடுமையான தண்டனை குடுத்தாள் மட்டுமே நாளைக்கு இப்படி ஒரு தவறு யாரும் செய்ய மாட்டாங்க ....

 • siriyaar - avinashi,இந்தியா

  நம்மவூரு வக்கீல் காசு கொடுத்த ராவணனையே நல்லவன் என்பார்கள். நம்ம ஊரு நீதிபதி ஜாமின் கொடுப்பர் துட்டு வாங்கிட்டு , எவனும் வெளியில வந்து ரேப் பண்ணுவான், பின்னாடி உள்ளாரா போடுவாங்க, போனவாரம் ஆந்திராவில நடந்தது. டான்ஸ் பார்லயே பெண்கள் நடனமாடலாம் நீதிமான் சொல்றார். கடவுள்தான் காப்பாத்தணும் முருகா

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  எல்லா தொழில்களையுமே புனிதமாக கருதிதான் பணம் ஈட்டவேண்டும்.பின்பு எல்லோரும் கெட்டழிந்துபோனதால என்னவோ ஆசிரியர் மற்றும் மருத்துவர் தொழில்களை மாத்திரம் புனித தொழிலாக கூறுவார்கள்.ஆனால் வக்கீல் தொழிலும் அதே போலத்தான்.மஹாத்மா காந்தியால் அந்த தொழிலை நடத்த முடியாமல் போனது அவர் பொய் சொல்ல விரும்பாததுதான்.காசுக்காக அந்த புளுகு புளுகுவது அறியாமையின் முக்கிய அடையாளம்.உண்மையை வாதாடி வெளிக்கொணரவேண்டியதுவே வக்கீலின் தலையாய கடமை.இந்தக்காலத்தில் எவ்வ்லவோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.படிப்பையே கொலை காரர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். கிரிமினல்களை பாதுகாக்க சட்டங்களும் விதி முறைகளும் பின் பற்றப்படு கின்றன.ஈனத்தனமான வழிகளில் பொருள் ஈட்டுவதா பெருமை?சமுதாயம் திருந்தவில்லை என்று கூறும் போது அருவாள் எடுத்தவன் மாத்திரம் குற்றவாளி இன்றி அவனை பாதுகாப்பவனும் குற்றவாளியே.

 • Sahayam - cHENNAI,இந்தியா

  ஹலோ ஜெய் ஜெய் .... பொதுவாக நல்ல கருத்து எழுதும் நீங்கள்.. encounter பண்ணி இருக்கலாம் என கூறுவது தவறு. ஒரு வேளை நீங்கள் கூறிய யாவும் உண்மையாக இருந்தால் ??? போலீஸ் காரங்களை நம்ப முடியாது

 • mohan - kumbakonam,இந்தியா

  இந்தியாவில் கல்வி முறை சரியில்லை என்று எல்லோரும் சொல்வதுண்டு. ஆனால் வக்கீல் படிப்புக்கு அப்படி சொல்ல கூடாது என்று நினைக்கிறேன்.எந்த தவறு செய்தாலும் நம் வக்கீல்கள் வாத திறமையால் எவ்வளவு அதிக பட்ச குற்றவாளியாக இருந்தாலும் அதை உடைத்து குற்றவாளியை வெளியே கொண்டு வந்து விடுவார்கள் .அப்படியென்றால் நமது வக்கீல் படிப்பின் தரம் மிகவும் அருமை என்றுதான் பீற்றிக்கொள்ள தான் வேண்டும் .

 • DAYA - Tiruttani,இந்தியா

  நம் சமூகத்தில் ஒருவரது அந்தஸ்து என்பது அவரது தோற்றம், படிப்பு, வேலை, பொருளாதாரம், குடும்பப் பின்னணி இவை சார்ந்து அமைகிறது. ஸ்வாதி உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு ஏற்றபடி வரன் பார்த்துதான் திருமணம் செய்திருப்பார்கள். ஆண்மகன் என்ற ஒரே காரணத்திற்காக பிச்சைக்காரனுக்கும், பிளாட்பாரத்தில் வசிப்பவனுக்கும், வேலைவெட்டி இல்லாதவனுக்குமா பெண் கொடுப்பார்கள். அவர்களுக்கென்று வேறு பெண்கள் இருக்கின்றார்கள். இந்த கழிசடை அவர்களை தேடிப்போய் காதல் செய்ய வேண்டியதுதானே. இது சினிமா பார்த்து கெட்டுப் போயிருக்கிறது. செய்வதை செய்துவிட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இவன் நடிப்பைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒருவன் தன் நிலை அறியவேண்டும். யதார்த்தம் புரியவேண்டும். தன் நிலை மறந்தவன் மனிதனே அல்ல .இவன் பிறவி கிரிமினல். கல்லூரியில் படிக்கும்போதே இவன் க்ரைம் செய்திருக்க வேண்டியது. இப்போது செய்திருக்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம். இதற்கு காலம் காலமாய் பெண்களை போகப் பொருளாகவே காட்டிக் கொண்டிருக்கும் சினிமாவும் ஒரு காரணம்....

 • rama - johor,மலேஷியா

  அப்பாவி ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது அவரே உடனே விடுதலை செய்யவேண்டும் தமிழ் நாட்டில் கொலை கொள்ளை பெருக வேண்டும் இதுதான் அவரின் வழக்கறிஞரின் விருப்பம் அதற்கு தமிழ் நாட்டு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்

 • Akash - Herndon,யூ.எஸ்.ஏ

  1) Who slapped the lady days before her death. That was definitely not Ram kumar.2) Who is Surya Prakash? 3) What proof is there cops retrieved the cellphone from Ram Kumar's apartment? Why couldn't it have been from the girls body and lied? 4) What if the cops have soaked a similar shirt with girl's blood and placed it in Ram Kumar's apartment? When they took him to the hospital in an unconscious state cops might have touched the shirt with Ram Kumar's body. DNA evidence will NOT prove anything even if they find both their DNA's 5) All eye witnesses have identified the er from a distance and this is not possible to clearly implicate anyone. 6) CCTV video's cannot prove BEYOND DOUBT he is the er. 7) Due to immense pressure building the MOTIVE of the cops to nab somebody and call him a er is self evident...the easiest victim is a poor shepherd boy belonging to a backward community 8) The lawyer says the people around the police slit his throat and in fear wrongly confessed to the crime.Is there proof that it is not so?

 • Somiah M - chennai,இந்தியா

  திட்டமிட்டு செய்த எந்த கொலையாளியும் தான் செய்த கொலையை ஒத்துக் கொண்டதாக சரித்திரம் இல்லையே .

 • jagan - Chennai,இந்தியா

  DNA (ரத்த கரை சட்டை) மற்றும் ஸ்வாதியின் போன் இவனிடம் எப்பிடி வந்தது?

 • jagan - Chennai,இந்தியா

  தா.கி. மாதிரி , ஸ்வாதி தன்னை தானே வெட்டி கொண்டார் என்றும் சொல்லுங்க..... கலி காலம், what goes around will come around quickly.

 • Lakshmanan - chennai,இந்தியா

  இந்த மாதிரி கூமுட்டை வக்கீல்கல் இருப்பதால் தான் நாட்டில் லட்சக்கணக்கான கேஸ் முடியாமல் காலதாமதம் ஆகிறது.

 • Ramudu - Chennai,இந்தியா

  இவன் அந்த ஆசிரியர் தமிழ்செல்வனையும் வம்புக்கு எழுத்துட்டான்...இனிமே அவரும் கோர்ட், போலீஸ் னு அலையணும்...ஏண்டா...இன்னும் எத்தனை குடும்பத்தடா சீரழிக்க போற..?

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இதுதான் நம் நாடு. இதற்குப் பெயர்தான் ஜனநாயகம், எங்கும் எதுவும், எப்போதும்,எப்படியும் நடக்கும், எல்லாமே புதிராக இருக்கும், யாரும், எங்கும், எதையுமே கேட்க முடியாத அளவிற்கு மனித நேயம் வளர்ந்து விட்டதால் ஜனநாயகம் அதன் சுவையை அனுபவிப்பதால் வரும் விளைவுகளே, வந்தே மாதரம்

 • Snake Babu - Salem,இந்தியா

  கொலைகாரன் ராம் குமார் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும், இதில் மாற்று கருத்து இல்லை. சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது. அதை வைத்து பல குற்றவாளிகள் தப்பித்திருக்கிறார்கள். இதுவும் அதுபோல நடக்கலாம் சாத்திய கூறுகள் இருக்கிறது. இருந்தாலும் நீயாயம் பலமிழந்து இருப்பதற்கு நாமும் ஒரு விதத்தில் காரணம் தான். இங்கே நியாத்தை எதிர்பார்க்கும் நம்மில் எவ்வளவு பேர், தவறு என தெரிந்திருந்தும் மதம் இனம் மொழி ஜாதி என கண்ணோட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக, அதை சமாளிக்கும் வகையில் முடிவு எடுத்திருப்போம். இப்படி பல வழக்குகளுக்கு சப்போர்ட் செய்தத்தானால் நியாயம் என்ற வலுவிழந்து தற்போது தள்ளாடிக்கொண்டிருக்கிறது. உண்மையில் சட்டம் அப்படி இதே சட்டங்கள் முன்பும் இருந்தது. முன்பு நியாயம் பலமாக இருந்தது, தற்போது அந்த வலிமை இல்லை. பணம் அதிகாரம் பல காரணங்கள் இருந்தாலும் நாமும் நம்முடைய இந்த சார்பு நிலை யும் ஒரு காரணம் நன்றி வாழ்க வளமுடன்.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இனி இது போன்ற நாடகங்கள் ஆரம்பமாகி விடும். எல்லாவகையிலும் இந்த வழக்கை நீர்த்து போக செய்யும் முயற்சிகளை தொடங்கி விடுவார்கள். வழக்கை இழுத்தடிப்பார்கள். அரசு முதல் கோர்ட் வரை எல்லாமே மக்கள் ஞாபகம் வைத்திருக்கும் வரைதான் வேகம் காட்டுவார்கள். அதற்குள் புதிய சுவாதி மாதிரி விஷயம் மாட்டி விடும். மக்களும் இதை மறந்து மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள். மக்கள் மறந்தவுடன், இந்த கொலைகார நாய் விடுதலை ஆகிவிடும். இதற்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி முதல் யுவராஜ் (கோகுலராஜ்) வரை நிறைய உதாரணங்கள் உள்ளன. இது நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள். இதுதான் இந்திய ஜனநாயகம். சுவாதி குடும்பத்தார் வாழ்நாள் முழுதும் மகளை நினைத்து வருத்தப்பட போவதுதான் மிச்சம். நாமெல்லாம் இதற்கு என்ன செய்யப்போகிறோம். நம் வீட்டில் இது போன்று நடந்தாலும் இப்படித்தான் இருக்கப்போகிறோமா? நெஞ்சு பொறுக்குதில்லையே என்றான் பாரதி. இப்போது நெஞ்சு பொறுக்கமட்டுமில்லை. வலிக்கிறது.

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  570 கோடி கண்டைனர் செய்திகள் போல இதுவும் முன்னுக்கு பின் முரணான செய்திகளாகவே வருது. சினிமா, சீரியல் பாத்து சமுதாயம் சீரழிஞ்சி போச்சி. அதேபோல சட்ட திட்டங்களும் சீரழிஞ்சி போச்சி. நீதி ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எனவே சீரியல், சினிமா போலவே ஸ்வாதியின் ஆவி வந்து பழி வாங்கினாதான் உண்டு. தினம் தினம் இதுபோன்ற செய்திகளே கொத்து கொத்தாக வருகிறது. வெளியில போயிட்டு முழுசா திரும்பி வருவதற்க்கு எந்த கியாரண்டியம் இல்லன்னு ஆயிடிச்சு. மனித தன்மை மனசாட்சியை அழித்து, பணசாட்சியுடன் வாழ துவங்கிவிட்டது.

 • Mohamed Malick - Dubai,இந்தியா

  ஆமாம் அப்ப்டியே கொலைகாரன் தாழ்த்தப்பபட்ட இனத்தவர் என்பதால் தாழ்த்த பட்டோருக்கு ஜெயில் தண்டனையில் இருந்து 99% தண்டனை விலக்கு தருமாறு கேட்டு கொள்கிறேன்

 • sulaiman - nellai,இந்தியா

  நானும் என்னடா இந்த வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பு உடனே வந்துவிடுமா என்று சந்தேகம் வந்தது. அப்படியே ஆகி விட்டது.நாளை இவன் ஒரு அப்பாவி (அடப்பாவி) என்று மானங்கெட்ட சமூக ஆர்வலர்கள் இவனுக்கு ஆதரவு தந்து அந்த பெண் தவறாக பேசியதால் தான் அவன் கொலையாளியாக மாறினான் எனவே குற்றம் அந்த பெண் மீதுதான் என்று சட்டம் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்ற்கு ஒன்றுமில்லை.

 • Raja Ramanathan - Gurgaon,இந்தியா

  வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இந்த கேசில் ஆஜர் ஆகிறார் போலும். மனசாட்சி இல்லாத மனிதர் கிருஷ்ணமூர்த்தி ஒரு நிமிடம் ஸ்வாதியையும் அவர் குடும்பத்தினரையும் நினைத்து பாருங்கள்.

 • sathiyamoorthy - Jubail,சவுதி அரேபியா

  டியர் லாயர் தயவு செய்து நீங்க ஒதிங்கிடுங்க பிலீஸ் .எனக்கு 11 நாலா தூக்கமே வரல .இவன் செத்தாதான் எனக்கு துக்கம் வரும் .பாவம் அந்த பொண்ணு

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  ஸ்வாதி ஓடும் ரயில் முன்னே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்....தலித் ஓட்டு...கேஸை இழுத்து மூடு.......

 • karunchilai - vallam,இந்தியா

  எதிர்பார்த்த திசையில் காய்கள் நகர்கின்றன. அடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்பார்கள்.

 • JAIRAJ - CHENNAI,இந்தியா

  "உண்மைதான். நான் இப்பொழுது சொல்வதெல்லாம் உண்மைதான். போலீசுடன் கூடவந்த ஒருவர்தான் என்கழுத்தை அறுத்தார். அவர் அறுக்கும்வரை நான் காட்டிக் கொண்டிருந்தேன். அந்த வீடியோ களிப்பில் ஓடுவதும், நடப்பதும், கருப்பு முதுக்குப் பை வைத்துக் கொண்டு நடப்பதும், மோட்டார் பைக் ஓட்டுவதும் நானல்ல. என்னைப்போல் உருவம் கொண்ட வேறொருவர். நான் அந்த மேன்க்ஷனில் தங்கி இருந்தேன். அது உண்மைதான். பலவிதத்திலும் உழைத்து என் நிலையை உயர்திக் கொள்ளவே நான் இரவு பகல் பாராமல் வேலை செய்தேன். ஸ்வாதி எப்படி இருப்பாள் என்றே எனக்குத் தெரியாது. திரைப்படம் இயக்குவதில் ஆசைப்பட்ட நான், நான் அமைத்த கதைக்கு லொகேஷன் தேட என் ஊருக்கு வந்த பொழுது என்னை கொலைகாரன் என்று கருதி பிடித்து கழுத்தையும் அறுத்து விட்டார்கள். வறுமையில் வாடும் நான், நேர்மையாளன் என்பதால் பல லட்சம் கடன் தருவதற்கு ஆட்கள் உண்டு. அவர்கள், இதை என் இயக்கும் திறமை மற்றும் கதைக்காக கொடுப்பார்கள். அதை வைத்து ஒரு நல்ல வக்கீலை வைத்து வாதாடி ஜெயிப்பேன்." என்று சொல்லுமாறு, வாதாடிகள் சொல்லிக் கொடுப்பார்கள். இவனுக்காக செய்யப்படும் ஆரம்ப அலங்காரங்களுக்கே லகரத்தை கறப்பார்களே. கண்ணு நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு. கொடுமையாக வெட்டி கொன்ற உனக்கு இறைவன் கணக்குப்படி கடுமையான தண்டனை உண்டு. ஸ்வாதியின் குடும்பத்தினர் வேதனையும், ஸ்வாதியின் ஆத்மாவும், பொதுமக்களின் கையாலாகாத பொருமலும் உன்னை சும்மாவிடாது. உனக்கு மிக மோசமான தண்டனை காத்திருக்கிறது.

 • Robert - London,யுனைடெட் கிங்டம்

  அப்போ சீக்கிரமா வெளிய விட்டிருங்க....தீர்ப்பை மக்கள் எழுதிடுவாங்க

 • Ramkumar - கோவில்பட்டி,இந்தியா

  அட இந்தியால இதெல்லாம் சகஜமப்பா, எங்களுக்கு வந்த அறிவுரைப்படி (?) ஜாமீன் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று அவனுடைய வக்கில் கூறுகிறார். நாளை போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை கூட செய்யப்படலாம்.

 • என் மேல கை வெச்சா காலி - manama,பஹ்ரைன்

  இந்த நாய்க்கு சப்போர்ட் பண்ற அந்த பரதேசி வக்கீலோட பொண்ணுக்கு இந்த சம்பவம் வந்தாதான். இந்த வக்கீல் நாய்கள் எல்லாம் திருந்துவானுங்க.

 • sundar1570 - kumbakonam,சவுதி அரேபியா

  கொலை நடக்கவில்லை. ஸ்வாதி என்ற பெண்ணும் இறக்கவில்லை. ஒரு சம்பவமும் நடக்கவில்லை. சம்பவம் நடந்திருந்தால் மக்கள் பிடித்திருப்பார்கள். ஆக அனைத்தும் கற்பனையே. கருப்பு = இருட்டு = பொய்=நடைமுறை வாழ்க்கையில் பெரும்பான்மையானவர்களால் அங்கீகரிக்கப்படாதவைகள். கண்ணை கட்டிக்கொண்டு, கருப்பு சட்டை போட்டுக்கொண்டு, உண்மை என நம்ப வைக்க சொல்லப்படும் கருத்துக்கள் (இந்தியாவில் நல்ல தீர்ப்பு என்பது பகல் கனவு தான்) இனியும் என்ன தாமதம், அவனை விட்டு விடுங்கள். இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்குமா? பெண்களே தயவு செய்து, வீட்டிற்குள் முடங்குங்கள். பெண்ணை பெற்ற தந்தையர்கள் எல்லாரும் ஒன்று கூடி, ஜனாதிபதி அவர்களை சந்தித்து தமிழகத்திற்கு, 24 மணி நேரமும், போர் பகுதி போல, ராணுவ பாதுகாப்பு கேட்டு விண்ணப்பியுங்கள். இனியாவது பெண்ணை பெற்றவர்கள், பெண்கள் அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணியுங்கள். தமிழகத்தில் சட்டம் மரக்க்கடையிலும், ஒழுங்கு எறும்புளிடமும் தான் உள்ளது. அவனை விட்டுவிடுங்கள். மறப்போம்.மன்னிப்போம்.

 • Subramaniam Ramesh - madurai,இந்தியா

  நாளை இந்த வழக்கு வரும் போது ஜட்ஜு கேப்பார், கொலையை பார்த்த சாட்சிகள் யாராவதும் இருக்கிறார்களா? அதற்கு போலீஸ் இல்லை அய்யா, கொலையாளியே கொலையை ஒப்புக்கொண்டுள்ளான், உடனே ஜுட்ஜ் கேப்பார் கொலையாளியிடம், அதற்கு கொலையாளி இல்லை அய்யா போலீஸ்காரர்கள் என்னை அடித்து துன்புறுத்தினார்கள் வேறு வழியில்லாமல் பொய் சொல்லி ஒப்புக்கொண்டேன், உடனே ஜட்ஜ் உண்மை குற்றவாளியை கண்டுபுடிக்க இந்த கோர்ட் உத்தரவு இடுகிறது, சாட்சிகள் இல்லாத காரணத்தினால் சந்தேகித்தத்தின் அடிப்படையில் எந்த விதமான சாட்சிகளும் இல்லாத காரணத்தினால் கொலையாளி என சந்தேகிக்கப் படும் திருவாளர் தெய்வத்திரு உயர்திரு திரு ராம் குமார் அவர்களை இந்த கோர்ட்டு விடுதலை செய்கிறது, தவறான நபரை கைது செய்து அவரை துன்புறுத்திய காவல் துறையினை இந்த கோர்ட்டு வன்மையாக கண்டிக்கின்றது..

 • Subramaniam Ramesh - madurai,இந்தியா

  நாவரசு ஞாபகம் இருக்கிறதா. கொலைகாரனே கொலையா ஒத்துக்கொண்டாலும் நமது ஜட்ஜ் அய்யாவும் நமது வைக்கோல் மாமாவும் சடடத்தில் இருக்கும் ஓட்டை போல் உள்ள குகையை நன்றாக பயன்படுத்தி அவன் ஒரு உத்தம புத்திரன், மற்றவர்களெல்லாம் கோமாளிகள், இதே நிலை நாள் அந்த ஜட்ஜுக்கும் வரும், அப்பொழுது அதிகாரம் வேலை செய்யும், சாடசிகள் உருவாக்கப்படுவார்கள், முதல்வர் அம்மா ஒரு பெண்ணுக்கு இந்த நிலைமை நாளை என்ன நடுக்கும், தயவு செய்து அந்த என்கவுண்டர் பயன்படுத்துங்கள், தயவு செய்து ஒரு தாய் உள்ளம் போல அந்த ஸ்வாதிக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  யாருப்பா டிராபிக் ராமசாமில இருந்து இந்த கேஸ் வரைக்கும் எல்லா இடத்திலும் இருக்கிற வக்கீல்.. பொளந்து கட்டறாரே... என்னமோ சுப்ரீம் கோர்ட்டு வக்கீலாம்..

 • Venguswamy Gopalakrishnan - chennai,இந்தியா

  SATTAM ELLARUKKUM ONDRU THAN....12 VARUDATTHIRKUMUN ORU ARASIAL THALAIVAR SONNADHAGA NINAIVU....

 • Sampath Kumar - chennai,இந்தியா

  எங்களுக்கு வந்த அறிவுரை படி ???? யாரு உங்களுக்கு அறிவுரை கொடுத்தா வக்கீல் சார் ???????? இதில் ஏதோ உள்குத்து இருக்கு போல

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்த பல்டி எதிர்பாத்ததுதான்..... கோர்ட்ல கேச FILE பண்றவர போலீஸ் இந்த பத்திரிக்கை & டீவிக்கெல்லாம் அதிக தகவலை தராமே அடக்கி வாசிச்சுருக்கணும். இப்பம் இந்த வக்கீல்லாம் என்னமா திரிக்கிறாய்ங்க.. Water tight ஆ இருக்க வேண்டிய இந்த கேசு தெச திரும்ப எல்லா சான்சும் இருக்கு

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  விட்டா, நான் ராம் குமார் இல்ல .. நான் பேசுறது கூட தமிழ் இல்ல னு சொல்லும் இந்த பக்கி .. இவனை சென்னைக்கு கூட்டிட்டு வரும்போதே ஆம்புலன்ஸ் ல வச்சு என்கவுன்டர்ல போட்டுருக்கணும்

 • ganapati sb - coimbatore,இந்தியா

  இவனுக்கு ஜாமின் வழங்காமல் விசாரணை நடத்தி பின் வக்கீல் சொல்லிக்கொடுத்த பொய் சொல்லியிருந்தால் அவனது வக்கீலுக்கு சேர்த்து தண்டனை வழங்கவேண்டும் இவன் சொல்வது விசாரணையில் உண்மையென்றால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்

 • சத்தியநாராயணன் (சத்தி) - Bangalore,இந்தியா

  ஜெயலலிதா தப்பிக்க ஒரு பெரிய ஓட்டை கிடைத்தது போல இவனும் தப்பிக்க ஓட்டை கிடைக்காமலா போய்விடும் ?

 • S. MURALIDHARAN - CHENNAI,இந்தியா

  குடும்பம், தாய், மனைவி, அக்காள், தங்கை, மகள், மருமகள், மனசாட்சி - இந்த லிஸ்டில் எதுவுமே கிருஷ்ணமூர்த்தி என்னும் இந்த சட்ட மேதைக்கு இல்லையா?

 • KRISH PANCH - CHENNAI,இந்தியா

  முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஷயமாக உள்ளது. இவனுக்கு பணத்திற்காக துணைபோகும் வக்கிலும் கண்டிக்கத்தக்கவர்.

 • gurumoorthy - trichy,இந்தியா

  இந்த கிருஷ்ணமூர்த்திகு வேற வேலையே இல்லையா... யார் இவன் முந்திரிக்கொட்டை இப்படித்தான் சுப்ரீம் கோர்ட்டில் மூக்கை நுழைத்தான்.. ராம்குமார் இவன்கிட்ட வந்து நான் செய்யலை என்று சொன்னானா. கொலை குற்றவாளிகளின் கூட்டாளிகளாக வக்கீல்கள் செயல்படுகிறார்கள் அவன் அவன் குடும்பத்தில் சாவு வந்தாதான் அதை பற்றிய அருமை therium

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இந்த வழக்கை எடுத்து நடத்த, வழக்கறிஜர் க்ரிஷ்ணமூர்த்திக்கு எப்படி மனசாட்சி இடம் கொடுத்ததோ தெரியவில்லை. இவர் உழைப்பில் இனி மழைதான்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதற்கு மட்டும் பொங்கி என்ன பயன். எல்லா குற்றவாளிகளும் இப்படி தான் இருக்கிறார்கள். காரை ஏற்றி கூலி தொழிலாளியை கொன்ற பெண், தன் தம்பியுடன் வசதியாக சிரித்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் இப்பத்து முகநூலில் வந்திருக்கிறது. ஊடகங்கள் அவளின் படத்தை கூட பிரசுரிப்பதாக இல்லை. இன்னும் சில நாட்களில் அவள் சுதந்திர பறவை. வக்கீல் மட்டுமே அந்த வழக்கை 20 வருடங்கள் ஓட்டுவார்.

 • sam - Bangalore,இந்தியா

  சல்மான் கான்க்கு ஒரு சட்டம், ராம் குமார்க்கு ஒரு சட்டமா ... Both are criminals .. see the difference.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "பாருங்க மக்களே ஒருதலை காதலாம்" என்று ஒரு புகைப்படத்தை WhatsApp மூலம் பகிர்ந்துள்ளார் - ஸ்வாதியும், திருவாளர் இராம்குமாரும் மூஞ்சோடு மூஞ்சு உரசுவது போல ஒரு படத்துடன். திசை திருப்ப தொழில் நுணுக்கம் உதவுகிறதா அல்லது உண்மையிலேயே இவன் குற்றவாளி இல்லையா?

 • $$$$ - $$$$,இந்தியா

  டேய்..பன்னாடை..அடுத்து ஒன் வக்கீல் இப்படி சொல்லி குடுத்தாலும் குடுப்பான்...."சுவாதி தான் என் கழுத்தில கத்தி வச்சி கீறி விட்டிட்டு அதை வச்சே அவளும் தற்கொலை பண்ணிகிட்டாள்.." அப்படீன்னு....

 • manivannan - chennai,இந்தியா

  பாவம் அவன் ரெண்டு தங்கைகளுக்கு கல்யாணத்துக்கு ஆட்டை ஓட்டி மாட்டை ஓட்டி அப்பா சேத்து வெச்சிருக்கிற நகை நட்டு எல்லாம் பூண்டோடு வக்கீலுக்கு போக போகிறது.. இது தேவையாடா, உன் குடும்பத்துக்கு? நீ ஸ்வாதியை பழி வாங்கற தா நினச்சு உன் குடும்பத்தை தான் தண்டிச்சிருக்கே.. அவள் திட்டினா.அதுக்கு நீயும் அடிச்சுட்டே அதோட விட்டிருக்கலாம் இல்லே...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  எதிர்பார்த்த பல்டிதான்....அதிர்ச்சியடைய இவன் என்ன அரிச்சந்தரனா?.... கொலையே செய்யறவன் போய் சொல்ல மாட்டானா?..

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த நாயிடமிருந்து இன்னும் எத்தனை எத்தனை அதிர்ச்சிகளை கேட்க போகிறோம் என்று பாருங்கள். ஊடகங்கள் இந்த நாய்க்கு உடனே தண்டனை கொடுக்க கூடாது. மாறாக விசாரணை நன்றாக நடத்தப்பட வேண்டும் என்றே கூவும் பாருங்கள். ஏனென்றால் இந்த கொலை வழக்கு ஒரு இரு மாதங்களில் முடிந்து விட்டால், பட்டிமன்றம், சொறிமன்றம் என்று அறுப்பதற்கு இதை விட வேறு செய்தி வராது என்பதால் இந்த துர்பாக்கிய பெண் ஸ்வாதியின் கொலையை தினமும் மானபங்கப்படுத்தி கொண்டே இருக்கும். 'தமிழன்டா'.

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நான் அவன் இல்லை - பாகம் 3

 • Nagarajan S - Chennai,இந்தியா

  நேற்று நீதிபதிகள் போலீசை எவ்வளவு கேள்விகள் கேட்டார்கள் ? காசுக்காக சோரம் போகும் வழக்குரைஞர்கள் இருக்கும் வரை நீதியாவது நேர்மையாவது? கொலையாளிகளை காப்பாற்ற இந்த வழக்குரைஞர்கள் ஏன்தான் முயலுகிறார்களோ ? இவர்களால் தமிழ் நாட்டிற்கே தலைகுனிவு. அவமானம் ஒரு வேளை ஆட்சியாளர்களுக்கும் போலீஸ் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த எதிர்க்கட்சிகளின் அல்லது "ஜாதி" கட்சிகளின் சதியாக இருக்குமோ? பாவம் குற்றவாளிகளை கண்டுபிடித்தோமா, கேஸை முடித்தோமா என்றில்லாமல் போஸாருக்கு மேலும் மேலும் குடைச்சல், தலைவலி தீராத பிரச்னைகள் தான் வருகிறது

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  இந்தியா ல பல கொள்ளை கொலை கற்பழிப்பு செய்தவன் எல்லாம் வெளிய சுத்திட்டு இருக்கான். தன் மானத்திற்காக கொலை செய்தவனை மட்டும் உடனே சுட்டு கொள்ள வேண்டும் என்று கருத்து எழுதும் மூடர்கள் பலர். போலீசார் நினைத்தால் உங்களையும் இதே போல் நாடகம் ஆடி உள்ளே தள்ள முடியும். ஆடு மேய்ப்பவன் தானே என்று போலீசார் ஈஸியாக கேஸை முடிக்க நினைத்திருப்பார்கள். போலீசார் காட்டும் ஆதாரங்கள் எல்லாம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. அதே சட்டையையும் கை பேசியையும் உங்கள் வீட்டில் கொண்டு வைத்து விட்டு உங்களையும் குற்றவாளி ஆக்குவது போலீசாருக்கு கை வந்த கலை என்பது உலகறிந்த உண்மை .

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஸ்வாதி தானே இறந்து விட்டார். இல்லை இல்லை அப்படி ஒருவர் உலகில் பிறக்கவே இல்லை. அதுவும் இல்லை நான் ராம் குமார் இல்லை. அதுவும் பலிக்க வில்லை என்றால் யாகவா முனிவர் மாதிரி ஆண் இறந்தே 3 கோடி வருடங்கள் ஆகிறது என்று கூறுங்கள். எல்லாம் உதயகுமார் மரணத்திற்குப் பிறகு கண்டு பிடிக்கப் பட்ட வார்த்தை பிரயோகங்கள். வழக்கறிஞர்கள் தங்களுக்கென்று ஒரு நீதிமுறை வைத்திருக்கிறார்கள் போலும். தங்களுடைய க்ளையண்ட்டை எப்படியாவது தப்பு விக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு சாதகமாகவே பேச வேண்டும் என்று. என்று அவர்கள் உண்மைக்கு குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதற்கு அக்கறை காட்டு கிரார்களோ அன்று தான் குற்றங்கள் மறையும்.

 • Mohandhas - singapore,சிங்கப்பூர்

  சிங்கப்பூர்ல வக்கீல் குற்றவாளிக்கு ஆதரவாக பொய்சொன்னால் சிறை மற்றும் வக்கீல் லைசன்ஸ் பிடுங்க படும்.. நம்ம நாட்டுல என்ன வேணா செய்யலாம்..

 • Natarajan Pitchiah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ராம்குமார் இருந்த ரூமை யாருக்கும் வாடகைக்கு கொடுக்க வேண்டாம் .சீக்கிரம் வந்து விடுவான்

 • Venkatesh - Tirunelveli ,இந்தியா

  மனசாட்சியோடு யோசிச்சு வாதாடுங்க. பணத்துக்காக கேடுகெட்ட செயலில் ஈடுபட்ட இந்த கேஸ் ல வாதாடுறதுக்கு வேற ஏதாவது பண்ணலாம்.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  எதனடிப்படையில் இவனை காப்பாற்ற துடிக்கிறார்கள் என்பது அவர்களின் பின்னணியை விசாரித்தால் போதும்.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  சட்டம் ஒரு கழுதை. அது அது மேய்ப்பவனுக்கு பின்னால் போனாலும் ஸரியப்படுவதற்கில்லை.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இந்தியாவின் சட்டம், அதை வெளிச்சம் போடும் வக்கீல்கள், குற்றம் நிரூபிக்க சாட்சிகள், வாய்தா,பணம் என்று நீளும். 18 வ்ருடம் கூட இழுக்கும்.அப்புறம் குன்காவும் தீர்ப்பு வழங்குவார் குமாரசாமியும் தீர்ப்பு வழங்குவார். ராம்குமார் சிறையையில் சொகுசு வாழ்க்கை. ராம்குமாருக்கு அப்புறம் நெடுநாள் உள்ளுக்குள் இருந்து விட்டார் அதனால் விடுதலை என்பார்கள். ராஜிவ் குற்றவாளிகள் போல விடுவிக்க போராடுவார்கள். ஐயோ பெண் இனமே. பெண் இனமே. பிறப்பிலிருந்து இறப்புவரை தினம் தொடரும் கொலை. வெளங்கிரும் தேசம் இப்படி போனால் .

 • மாவீரன் ஜம்புலிங்கம் - chennai,இந்தியா

  தொண்ணூறுகளின் துவக்கத்தில் வந்த முரளி படங்களில் கூட இவ்வளவு எதேச்சையாய் காதல் ஏற்படாது. ஸ்வாதி, ராம் பேஸ்புக்குல பிரன்ட் ஆனார்களாம். திருநெல்வேலி கருப்பன் கிட்ட அட்ரஸ் குடுத்து மெட்ராஸ் வரச்சொன்னாராம் அல்லது ரோட்டுல பார்த்தவன் கிட்ட போன் நம்பர் குடுத்தராம். காதல் மோதல் ஆச்சாம், கொலையில முடிந்ததாம். என்ன கதை ஐயா இது.அந்த பெண் நல்ல குடும்பத்து பெண். உண்மையான குற்றவாளிய புடிச்சி தண்டனை வாங்கி குடுங்க.

 • jay - toronto,கனடா

  திமுக கட்சிக்கு சரியானவர்

 • jay - toronto,கனடா

  இனி அடுத்தது ,, தான் ஒரு சிறுபான்மை மதத்தவர் என்பார் ,,, தாழ்த்த பட்டவர் என்பார் ,,,

 • madan - chennai

  சூப்பர் அப்பு.. நல்லாப் பண்றீங்கமா

 • murumaha - madurai,இந்தியா

  ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. ராம்குமார் கழுத்தை அறுத்தது போலீசாருடன் வந்த நபர்கள் தான். சரியாக அறுத்து இருக்க வேண்டும். காசை வாங்கி கொண்டு இவனுக்கு வாதாடும் யாராக இருந்தாலும், அவர்கள் குடும்பத்தில் கொலை நடந்ததாக நினைத்து வாதாட கூடாது..............அப்படி வாதாடினால் இறைவன் வைப்பான் ஆப்பு.......

 • saranya - Chennai,இந்தியா

  கொலைகாரனுக்கு உதவுபவார்கள் நல்ல பெண்களுக்கு உதவ மாட்டார்கள்

 • shiva - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  யப்பா முடியல என்ன சொல்றது....

 • jojojo - chennai,இந்தியா

  வக்கீல் கிருஷ்ணமூர்த்திக்கு தெரியுமோ இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு இன்னும் ஒரு சுலபமான தொழில் இருக்கு என்பது?

 • sidharthan - chennai,இந்தியா

  ஒரு நாட்டின் பிரதம மந்திரியை கொன்றவர்களுக்கே இன்னும் தண்டனை கிடைத்தபாடில்லை. தமிழனென்று சொல்லடா தலை குனிந்து நில்லடா. ராம்குமாரை சிறையில் அடைத்து மூன்று வேளை உணவளித்து அங்குள்ள கிரிமினல்களுடன் பழகவிட்டு ஒரு முழு கிரிமினலாக மாற்றி வெளியே கொண்டு வரட்டும்.பின் மந்திரியாகும் வாய்ப்புமுண்டு. அவன் பின்னாலிருந்து இயக்கியவர்களை போலீஸ் கண்டுகொள்ளவில்லையே.

 • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

  வக்கீல்கள் நீதிக்காக போராடிய காலங்கள் எல்லாம் காற்றோடு போய்விட்டது.... இப்போது வெறும் 'நிதி'க்காக மட்டுமே போராடுகிறார்கள் என்பது இதிலிருந்து உண்மை எனது தெரிகிறது. அய்யா கிருஷ்ணமூர்த்தி வேண்டாம்... சுவாதியின் ஆத்மா உங்களை சும்மா விடாது...

 • pavi dubai - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்னோட சந்தேகம் அவன் தற்கொலை நாடகம் ஆடியதே அந்த வீணா போன வக்கீல் சொல்லி தான் னு தோணுது ....

 • RGK - Dharapuram,இந்தியா

  சில சமயங்களில் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் சட்டம் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  முழு பூசணிக்காயினை சோற்றில் மறைக்க வாய்ப்புண்டு.நம்பிக்கையுடன் ஒரு வழக்கறிஞர் இவர் சார்பில் வழக்கு நடத்ததயாராக இருக்கும் நிலையில் காவல் துறையின் குற்றப்பத்திரிகையில் ஓட்டைகள் இருப்பது தெளிவு.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  காவல்துறை செய்யும் வேலைகளை ஊடகம் செய்கின்றது என்று நீதிபதி சொன்னாரே..... குற்றப்பத்திரிக்கையே இன்னும் தாக்கல் செய்யவில்லை. அதற்கு முன் வரும் வதந்திகள் நம்ப வேண்டாம்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  ஸ்வாதி தானாகவே தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதுதான் ராம்குர்மர் சொல்லும் சாத்தியமான உண்மை.

 • hari - CHENNAI,இந்தியா

  தமிழ் நாட்டு காவல் துறையையே அவமானப்படுத்தி விட்டார்கள். உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தொடர்புடைய அனைவருக்கும், வாதாடிய வக்கீலுக்கும் சேர்த்து தண்டனை வழங்க வேண்டும்.

 • ayub - albeida,லிபியா

  பேசாம ராம்குமார் இன்னொசென்ட் அவருக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி அவருக்கு 10,000 ரூபாவும் ஒரு pulser bike ( 150 சிc ) கொடுத்து மரியாதையா வெளியில் விட்டிருங்கள். கொலை செய்தவன் நான் தான் என்று சொல்லியும் ஒன்னும் செய்ய முடியாத சட்டம் நமக்கு தேவையா .( கொலைகாரனுக்கு மரியாதை கொடுக்கும் கேவலம் நம் ஊரில் தான். அதனால் தான் நான் அவர் என்று போட்டுள்ளேன். இல்லையினா என்னைய தூக்கி உள்ளே வச்சிருவாள் )

 • ravi - chennai,இந்தியா

  சிறை கைதியை கைதியை போல நடத்தாமல் என்னவோ மாப்பிளையை போல நடத்தினால் தில்லுமுள்ளு பண்ணுவான் தான் - சிங்கப்பூர் விருந்து கொடுத்தால் - உண்மை கதறி அடித்துக்கொண்டு வரும் - அந்த வக்கீல் இதற்கு முன்னே சினிமா கதை எழுதியவரா??

 • hari - CHENNAI,இந்தியா

  காந்தி தேசமே காவல் இல்லையா. நீதி மன்றமே நியாயமில்லையா.

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  எதிர்பார்த்த ஒன்றுதான்.

 • சரவணன் - திருப்பூர்

  வக்கீல் கிருஷ்ணமூர்த்தி சார் அவர்களே....உங்கள் ஒரு பெண்ணிற்கோ..அல்லது உங்கள் உறவினர் யாராவது பெண்ணிற்கோ இப்படி ஒரு நிலை வந்தாலும் பணத்திற்காக வாதாடி குற்றவாளியை காப்பாற்றி விட வேண்டும்.

 • manivannan - chennai,இந்தியா

  இது என்னடா புதுக்கதை விடறே? டேய், உனக்கும் ஒருத்தர் வக்காலத்து வரார் பார் அவரை சொல்லணும் .. என்னடா நீங்க அன்னிக்கு சூரியன் உதிக்கவேயில்லை ன்னு கூட சொல்லுவீங்களாடா. அப்போ வாழை தார் அறுத்து ப்ராக்டிஸ் பண்ணினேன்னு சொன்னது? ஐந்து தடவை காதல் சொன்னேன்னு சொன்னது, அடிச்சேன் அவ எதிர்ப்பு காட்டவில்லை ன்னு சொன்னது, எல்லாமே பொய்யாடா ? டே நாங்க முட்டாளா நீ முட்டாளாடா? சரி முடிவை ஒன்னு சொல்றேன் கேட்டுக்க எதுவானாலும் , நீ கடவுளை ஏமாற்ற முடியாது.. பாத்துக்க...

 • apj - chennai,இந்தியா

  இந்த வழக்கின் பின்னணியில் பெரிய புள்ளிகள் உள்ளன என தெளிவாகி விட்டது.

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  அறிவுரைப்படி ஜாமின் தாக்கல் செய்தனரா ?? அப்படி அது என்ன அறிவுரை ?? யார் கொடுத்தது ?? ஏன் கொடுத்தனர் ?? அப்படியானால், இவன் கொடுத்த வாக்குமூலம் என்னவாயிற்று ?? வாக்குமூலம் வாங்கிய மாஜிஸ்திரேட் போலியா ?? இவன் ஆடு மேய்ப்பவன். இவனுக்கு ஜாமீன் மற்றும் சட்டம் பற்றி என்ன தெரியும் ?? பின்னர் இவன் ஜாமீன் கோருவதாக கூறுவது எப்படி ?? கொலை செய்யவில்லை என்றால் ஏன் போலீசை கண்டு நள்ளிரவில் ஓட வேண்டும் ?? தங்கும் விடுதியை விட்டு ஏன் ஓட வேண்டும் ?? போலீஸ் இவன் வீட்டில் இருந்து ஸ்வாதியின் செல்போன் கைப்பற்றியது எப்படி ?? இவன் கொலை செய்த அன்று கேமராவில் காட்டிய அதே சட்டையை, ரத்தக்கறை படிந்த நிலையில் அவன் வீட்டில் கைப்பற்றியது எப்படி ? இவன் தற்கொலைக்கு மீண்டும் முயலக்கூடும் என்பதால், கழிவறையில் கூட பலத்த பாதுகாப்பு கொடுப்பதாக சொல்கின்றனர். அப்படியானால், ஜாமினில் வெளியே வந்து தற்கொலை செய்துகொண்டால், அதற்கு யார் பொறுப்பு ?? இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தான், இதுபோன்ற குற்றங்களுக்கு எதிர்காலத்தில் தண்டனையை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வாதிடுவர். அப்படிஇருக்கையில், ஜாமீனில் வெளிவந்து, தற்கொலை செய்துகொண்டால், வழக்கு நிலைமை என்னவாகும் ?? கேவலம், பணத்திற்காக, மனசாட்சியை விற்று அந்த வக்கீல் இவனுக்கு ஜாமின் கேட்பது வெக்கமாக இல்லையா ?? ஒருவேளை, இவர் மகளுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், இவர் குற்றவாளியை மன்னிப்பாரா ?? இந்த குற்றவாளியை தப்பிக்கவைத்து, அவன் செய்தது சரி என்று கூறுகிறாரா ?? அல்லது நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்று மறைமுகமாக சொல்கிறாரா ?? அல்லது, பெண்களுக்கு எதிராக இதெல்லாம் தவறில்லை என்று சட்டத்தில் பதிவு செய்ய துடிக்கறாரா ?? சாமானிய மனிதனின் கேள்வி ஒன்றை கேட்கிறேன், மன்னிக்கவும். இந்த வக்கீலின் மகளுக்கு இந்த நிலைமை வந்தால், அப்போது தான் இவர் வழக்கின் விபரீதத்தை உணர்வாரா ? இவர் தனது மகள், சகோதரி மற்றும் மனைவியின் முகத்தில் எப்படி விழிக்கிறார் ? அவர்களுக்கும், ஒருவேளை மனசாட்சி என்பது இல்லையோ ?? பணத்திற்க்காக அவர்களும் விலை போவாரோ ??

 • $$$$ - $$$$,இந்தியா

  சரி ..சரி..நல்லது தான்....நீ இதோட போவாம...ஒன்னோட அப்பன் ஆத்தாளை ...தெருவுக்கு கொண்டு வந்து விடாம போக மாட்டே போல இருக்கே...? ஒனக்கு வாதாடும் வக்கீல் என்ன சும்மா வா வாதாடுவான்..? ஒன் அப்பா கிட்ட எவ்வளவு இருக்கோ..அது பூரா இந்த கேசு செலவுக்கு போயிடும்... ஒன் தங்கச்சிங்க தான் பாவம்...என்ன செய்ய..ஒன்னை மாதிரி கொலைகாரன் கூட பிறப்பதுவும் பாவம் தான்..

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  குற்றவாளி ராம்குமாரின் வீட்டை TV யில் காண்பித்தார்கள்.. அவனது வீட்டின் சுவரில் தளபதி என்று கருப்பு சிவப்பு வண்ணத்தில் எழுதி, ஏணி சின்னம் வரையப்பட்டிருந்தது.... இதனை இட்டுக்கட்டி நான் கூறவில்லை... உண்மை நிகழ்வு... ஆனால் தளபதி, கருப்பு சிவப்பு வண்ணம், உடன் ஏணி சின்னம் எதுக்கு? ...அது தான் புரியவில்லை.. யாராவது விளக்கினால் நலம்..

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  நான் நேற்றே கருத்து எழுதினேன்...இந்த ராம்குமாரின் வக்கீல் இப்படி தான் கேட்பார் என்று...இன்னும் கீழே கண்ட கேட்பார் பாருங்கள் குறுக்கு விசாரணைகளில் ..1. ராம்குமார் கழுத்து அறுபட்டபோது, அதனை யார் போட்டோ எடுத்தார்கள்,..? எதுக்கு எடுத்தார்கள்.. இந்த கேள்விக்கு போலீஸ் திணறும்.. 2. அவன் முட்டி கால் போட்டு கழுத்து அறுக்கும்போது, அருகில் நின்றால் தான் படம் பிடிக்க முடியும்..அருகில் நின்று படம் பிடித்த போலீசாரால், அவனது தற்கொலை முயற்சியை தடுத்திருக்க முடியாதா?.. ஆக தற்கொலைக்கு தூண்டியது போலீஸ், ஆதலால், ராம் குமார் மீது தப்பில்லை என்று சொல்வார்கள்.. 3. CCTV இல்லாத ரயில் நிலையத்தில் எப்படி, அவன் தான் கொன்றான் என்று உறுதி செய்வீர்கள்?.. 4. இரத்த கரை சட்டையை பறிமுதல் செய்தோம் என்று சொல்கிறீர்களே, இரத்த கரை படிந்த சட்டையோடு அவனால் மேன்சனுக்குள் எப்படி நுழைந்திருக்க முடியும்?.. அப்படி அவன் சென்றால், வழியில் யாரும் பார்த்திருக்க மாட்டார்களா?... அல்லது மேன்ஷனில் தான் யாரும் பார்த்திருக்க மாட்டார்களா?. 5. வழியில் சட்டையை அவன் மாற்றியிருந்தால், எங்கு மாற்றினான்?.. அதற்கு ஆதாரம் என்ன?.. 6. அப்படியே அந்த சட்டையை கொண்டு சென்றால் கூட, அவன் அதனை எரிக்காமலா வைத்திருந்திருப்பான்?.. 7. ஆக கொலை பண்ணியது வேறு யாரோ?.. இவன் அருகில் இருந்து ஒருவேளை காப்பாற்றியிருப்பான்.. அவனுக்கும் கொலைக்கும் சம்மந்தமே இல்லை.. மூன்றாவது நபர் தான் கொலை பண்ணியிருக்க கூடும்... காவல்துறை அதனை கண்டுபிடிக்க தவறி விட்டது.. இப்படியெல்லாம் வாதாடுவார்கள்.. எழுதி வைத்து கொள்ளுங்கள்.. இப்படியெல்லாம் வாதாட தான் போகிறார்கள்..அதனால் தான் இந்த கேஸை காவல்துறை, என்கவுன்டர் மூலம் அன்று இரவே முடித்திருக்க வேண்டும்.. மக்களுக்கு கொலையாளி மீது இருந்த கோபத்தை பயன்படுத்த காவல்துறை தவறி விட்டது... இனி இந்த கேஸ் நிச்சயம் ஜாதி ரீதியிலான அரசியலாக்கப்படும்... இது கசப்பான உண்மை...

 • SIVA BALAJI - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இதற்கு ஜாதியை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் தான் காரணம் ......

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  \\\\ சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். //// தேவாங்கு - ன்னு திட்டுனா ... அதனால கொன்னேன் - ன்னு சொன்ன பய இப்போ இப்படிச் சொல்றான் வக்கீல் மூலமா ..... அடுத்ததா போலீசு மிரட்டி வாக்குமூலம் வாங்குச்சு - ன்னு சொல்லுவான் .... கொலைக்குத் தொடர்பில்லை - ன்னா இந்த நாய் ஏன் ஓடணும் ???? ஏன் தற்கொலை முயற்சியில் இறங்கணும் ( போலீசார் தற்கொலை முயற்சியை வீடியோ எடுத்துள்ளதாகத் தகவல் ) ???? போலீஸ் கிட்ட தைரியமா சொல்லியிருக்கலாமே ????

 • manivannan - chennai,இந்தியா

  இவன் தற்கொலைக்கெல்லாம் முயற்சிக்க மாட்டான். அதான் நல்ல வக்கீல் கிடைச்சுட்டாரே.. இப்போ ஒரு புதுக்கதை, வக்கீல் சொல்லி கொடுத்தது சொல்றான். டேய் நீ எப்படியாவது சட்டத்தின் ஓட்டைகளாலே தப்பிச்சாலும் ப்ரம்ம ஹத்தி தோஷம் உன்னை விடாது, பார்

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இந்தவக்கீல் தான் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட் போனபோது அவருடன் இருந்தார்..பெங்களூரு கோர்ட்டிலும் குமாரசாமி தீர்ப்புக்கு முன் முரண்பட்ட செய்திகளை கோர்ட்டுக்கு வெளியே பேசிக்கொண்டிருந்ததை ஊடகங்கள் வாயிலாக பார்த்து இருக்கிறோம்..நேற்று கூட மாஜிஸ்திரேட் வந்து வாக்குமூலம் வாங்கிய போது வெளீல இருந்து ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தார்..யார் இவருக்கு instruction கொடுத்து இங்கு குற்றம் சாட்டப்ப பட்டவருக்காக ஜாமீன் மனு இப்படி தாக்கல் செய்கிறாரோ?அதையும் காவல்துறை கண்காணிக்க வேண்டும்..

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  மும்பை தாக்குதல் நடத்திய கசாப் என்ற பாகிஸ்தானிய நாய் கூட நண்பர்களோடு சினிமா பார்க்க மும்பை வந்ததாக சொன்னது..கடைசியில் தூக்கில் தொங்கியது.. அதுபோல செய்ய தமிழக அரசு உஜ்வல் நிகம் என்ற அதே வழக்கறிஞரை நியமிக்கலாம்..

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  How does he know that the girl had been assaulted three days before she was ed?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இராம்குமார் ஒரு பயித்தியக்காரன். அவனை வெளியே விட்டு பயித்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பதே நல்லது, தண்டனை கொடுப்பது தவறு என்று சொல்ல பலர் கிளம்பப்போகிறார்கள்....

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அப்படி போடு அரிவாளை. கொலையான பெண்ணை எனக்கு தெரியவே தெரியாது என்று ஒட்டுமொத்தமாக மறுத்திருக்க வேண்டியதுதானே. போலீஸ் அறிக்கையில் , இவர் 3 மாத காலமாக அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்துள்ளார் என்று கூறியுள்ளனர். அப்படி இருக்கையில் சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினார்களா? வேலை இல்லாமல் 3 மாதமாக அவர் செலவுக்கு என்ன செய்தார்? அந்த மான்ஷனில் மற்றொருவருடன் அறையை பகிர்ந்துகொண்டுள்ளாரே அந்த மற்றொருவர் யார். கொலைக்கு உபயோக படுத்த பட்ட ஆயுதம் தென்காசி பகுதியில்மட்டுமே கிடைக்கும் என்றால் அந்த ஆயுதத்தை இவர் அங்கிருந்து எப்போது தன்னுடன் கொண்டுவந்தார். பல தடவை தன் விருப்பத்தை ஸ்வாதியிடம் கூறியும் அவர் அந்த விஷயத்தை தன் வீட்டாரிடம் ஏன் பகிர்ந்துகொள்ளவில்லை. ஒரு தடவை இந்த முயற்சியில் ஸ்வாதியிடம் அடி வாங்கியதாக கூறியுள்ளாரே, அந்த சம்பவம் ஏன் மற்றவர்களால் நிரூபிக்கப்படவில்லை. கொலையாளி என்று கூறப்படுவரும், வீடியோவில் வரும் கொலையாளியும் உருவ ஒற்றுமை வெவ்வேறாக உள்ளதாக கூறப்படுகிறதே அது என்ன ? இது போன்ற விளக்கங்களை காவல் துறையினர் வழக்காடு மன்றத்தில் சந்திக்க வேண்டுமே. நடக்குமா? நிரூபிப்பார்களா? இல்லை இந்த வழக்கும் ஊத்தி மூட படுமா? இல்லை வெறும் கண் துடைப்பா?

 • Partha - Trichy

  அப்படியா அந்த வக்கீல தூக்கி உள்ள போடுங்க மோதல்ல

 • அஞ்சாசிங்கம் மருதுபாண்டி - இராமநாதபுரம்,இந்தியா

  தமிழகமே உற்று நோக்கிய கொலை வழக்கு சுவாதி கொலை வழக்கு . இதில் குற்றவாளி ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கினால் , அது மிகப்பெரிய தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் . ராம்குமாருக்கு எதிரான சாட்சிகள் , ஆதாரங்கள் ஆகியவற்றை போலீசார் திறம்பட சேகரித்து வலுப்படுத்த வேண்டும் . ராம்குமார் தற்கொலை முயற்சி செய்தது உண்மை என்பதை போலீசார் நிரூபிக்க வேண்டும் . கேரளத்தில் , சௌமியா என்ற பெண்ணை கொன்ற கோவிந்தசாமி என்ற நபருக்கு விரைவாக வழக்கு நடத்தி தூக்கு தண்டனை வழங்கி விட்டார்கள் . ஆனால், பிராடு தமிழர்கள் இவனுக்கு கூட ஜாமீன் வாங்கி விடுவார்கள் போல உள்ளது . தமிழர்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்று பிறர் உணர வேண்டும் . ஏற்கனவே , தமிழர்கள் என்றால் "பிராடுகள்" என்று இந்தியா முழுவதும் ஒரு தகவல் பரவி விட்டது . அந்த கருத்தை மாற்ற கடினமாக வேலை செய்ய வேண்டி உள்ளது . இவனுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்க கூடாது . கொலைக்கு பிறகு பல பெண்கள் தெரிவித்த கருத்து "நாங்கள் கல்வி, வேலைக்கு வெளியே செல்லும்போது யாராவது இளைஞர்கள் பேக் மாட்டிக்கொண்டு பின்னால் வந்தாலே பயமாக இருக்கிறது ." என்று சொன்னார்கள் . இந்த வழக்கு சுவாதி என்ற ஒரு பெண்ணுடைய கொலை வழக்கு மட்டுமல்ல . ஒட்டுமொத்த தமிழக பெண்களின் பாதுகாப்பு குறித்த விடயம் . எனவே , இந்த வழக்கில் கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் . இவனுக்கு , கடுமையான தண்டனை கிடைத்தால் தான் மக்களுக்கு காவல்துறை , நீதித்துறை மீது நம்பிக்கை வரும் .

 • Shanu - Mumbai,இந்தியா

  நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட அரசியல் சட்டத்தை நினைத்து விட்டால். கடைசியில் இந்த கேசில் நிரபராதி என்று ஆகி விடுமோ. பொதுமக்கள் போராடி இவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்,

 • velmurugan - chennai

  போங்கடா நீங்களும் உங்க சட்டமும்

 • அஞ்சாசிங்கம் மருதுபாண்டி - இராமநாதபுரம்,இந்தியா

  தமிழகமே உற்று நோக்கிய கொலை வழக்கு சுவாதி கொலை வழக்கு . இதில் குற்றவாளி ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கினால் , அது மிகப்பெரிய தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் . ராம்குமாருக்கு எதிரான சாட்சிகள் , ஆதாரங்கள் ஆகியவற்றை போலீசார் திறம்பட சேகரித்து வலுப்படுத்த வேண்டும் . ராம்குமார் தற்கொலை முயற்சி செய்தது உண்மை என்பதை போலீசார் நிரூபிக்க வேண்டும் . கேரளத்தில் , சௌமியா என்ற பெண்ணை கொன்ற கோவிந்தசாமி என்ற நபருக்கு விரைவாக வழக்கு நடத்தி தூக்கு தண்டனை வழங்கி விட்டார்கள் . ஆனால், பிராடு தமிழர்கள் இவனுக்கு கூட ஜாமீன் வாங்கி விடுவார்கள் போல உள்ளது . தமிழர்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்று பிறர் உணர வேண்டும் . ஏற்கனவே , தமிழர்கள் என்றால் "பிராடுகள்" என்று இந்தியா முழுவதும் ஒரு தகவல் பரவி விட்டது . அந்த கருத்தை மாற்ற கடினமாக வேலை செய்ய வேண்டி உள்ளது . இவனுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்க கூடாது . கொலைக்கு பிறகு பல பெண்கள் தெரிவித்த கருத்து "நாங்கள் கல்வி, வேலைக்கு வெளியே செல்லும்போது யாராவது இளைஞர்கள் பேக் மாட்டிக்கொண்டு பின்னால் வந்தாலே பயமாக இருக்கிறது ." என்று சொன்னார்கள் . இந்த வழக்கு சுவாதி என்ற ஒரு பெண்ணுடைய கொலை வழக்கு மட்டுமல்ல . ஒட்டுமொத்த தமிழக பெண்களின் பாதுகாப்பு குறித்த விடயம் . எனவே , இந்த வழக்கில் கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் . இவனுக்கு , கடுமையான தண்டனை கிடைத்தால் தான் மக்களுக்கு காவல்துறை , நீதித்துறை மீது நம்பிக்கை வரும் .

 • JAIRAJ - CHENNAI,இந்தியா

  முதலில் நான் இந்த வழக்கில் தொடர்பில்லாதவன் போலவே சடங்காக ஒன்று சொல்கிறேன். அதற்கு அந்த நீதிபதி என்ன சொல்கிறார் என்று பார்க்கிறேன்............அதன்பிறகு ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். என்று இருட்டின் தொடர்புள்ளவர்கள் முடிவு செய்து வந்த கதை தான் இது. இவன் தனக்காக செய்தாலும் அல்லது வேறு யாருக்காகவேனும் பணத்திற்காக செய்திருந்தாலும் இவன் தண்டிக்கப் படவேண்டியவனே................ இவனுக்கு ஜாமீன் கொடுத்து தப்பிக்கவைத்தால் அது கேவலமாகிவிடும். ஆக வசதியான இடம் ஒன்று இதில் சம்பந்த பட்டிருப்பது தெரிகிறது. " உனக்கு தைரியமிருந்தால செய் ..........இல்லையென்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்............." என்று நட்பு வட்டாரம் சொன்னதாக செய்தி வந்ததே................காவலர்களின் கைகள் கட்டப்பட்டால், அவர்கள் உழைப்பு வீண்தான்..........

 • Stavdn - Tirunelveli,இந்தியா

  அடப்பாவிகளா..... ஸ்வாதி கொலைக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொல்லச் சொல்லிட்டாங்களா? இது எதிர் பார்த்ததுதான். அப்போ விசாரணையின்போது பேசியது யார்? டப்பிங் ஆர்டிஸ்ட்டா?

 • p.kumar - COIMBATORE,இந்தியா

  ராம்குமார் தனது மனுவில், சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறியுள்ளார் அப்படி என்றால் இதை காலையில் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் கொடுக்கும் போதே சொல்லியிருக்கலாமே ஏன் சொல்ல வில்லை முன்னுக்கு பின்னாக கூறுவது சந்தேகத்தை வரவழைக்கிறது ,

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  வக்கீல்கள் காசுக்கும் ஜாதிக்கும், இனி நிறைய கதைகளை சொல்வார்கள். அதற்கென்றே ஒரு கூட்டம் கோர்ட் வாசலில் காத்துக்கிடக்கிறது. கட்சி மற்றும் ஜாதி அமைப்புகளும் வக்கீல் வைத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஞாயம் தர்மம் எதையும் பார்க்காதவர்கள். இவர்கள் தேவை பணம் பணம் பணம் ஒன்றுதான். நிதி மன்றமும் போலீஸ் அமைப்பும் சரியான நிதியை நிலை நாட்ட வேண்டும். இல்லையென்றால் மக்கள் இரு அமைப்பின் மீது ஒட்டு மொத்த நம்பிக்கை இழப்பார்கள்.

 • Prabu - KL,மலேஷியா

  இந்த வக்கீல் publicity கு பன்றார்

 • ராம் - Bangalore,இந்தியா

  சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் குத்துவிளக்குன்னு சும்மாவா சொன்னாங்க. நடத்துங்கடா...

 • Raj - Kathmandu,நேபாளம்

  இந்த பிக்காளி எல்லாம் பாத்த உடனே சுட்டு இருந்தா 50 ரூபாய் ஓட போயிருக்கும்........ இப்படி இட்லி, பாயா, எல்லாம் சாப்பிட்டா இப்படிதா நாடகம் ஆடுவான்

 • Prabu - KL,மலேஷியா

  என்னடா சொல்றிங்க ......

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஜனநாயகத்தை என்னே என்று புகழ்வது? கண்ணால் காண்பதும் போய், காதால் கேட்பதும் போய் தீர விசாரிப்பது அதைவிட பொய் என்று விளங்க வைத்த ஜனநாயகம் வாழ்க, வந்தே மாதரம்

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  ஒண்ணுமே புரியல, கழுத்து வெட்டப்பட்டு இருக்கும்போது தான் கொலை செய்தது என்றான், இப்போ அப்படியே கதையை மாற்றிவிட்டான். இவனுக்கு இந்த புத்தியை, ஐடியாவை சொன்னவன் யார் என்று கேட்டு அவனை உதைக்கணும். இனி இந்த கேஸ் முடிந்த மாதிரிதான், போலீஸ் கும் பெப்பே, எங்களுக்கும் பெப்பே, அப்பனுக்கும் பெப்பே.

 • Karthikeyan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவனுக்கும் ஆதரவா சில பேர் களம் இறங்கி இருக்கிறாங்களே, ஒரு பெண்ணை கொடூரமா வெட்டி கொன்றுவிட்டு இப்படி நாடகம் ஆட நம் நாட்டில் மட்டும்தான் முடியும். இதற்கு முக்கிய காரணம் மீடியா காரர்கள்தான் , போட்டி போட்டுகொண்டு அவன் படத்தையும் , போலியான பேட்டியையும் வெளியிட்டதன் விளைவு தான் இவனை போன்றவர்களுக்கு ஆதரவாக வருபவர்களுக்கு சாதகமாகிறது .ஆனாலும் உனக்கு ஆயுசு முழுக்க ஜெயில் வாழ்க்கைதண்டா ....... அதில் எந்த மாற்றமும் இல்லை

 • Pillai Rm - nagapattinam,இந்தியா

  ஒடனே கெடிக்காது மூணு மாசம் ஆவும்

 • $$$$ - $$$$,இந்தியா

  தினமலர்...இந்த கொலை காரனுக்கு வாதாடும் அந்த அறிவுஜீவி வக்கீலின் புகைப்படத்தை வெளியிடும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்..எல்லா மக்களும் பார்க்கட்டும்...பார்த்து தெரிந்து கொள்ளட்டும் நாம் எந்த மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் என்று...

 • $$$$ - $$$$,இந்தியா

  இங்கு இந்த பன்னாடைக்கு எதிராக கருத்து பதியும் நண்பர்கள் அனைவரும் ஸ்வாதியின் குலமல்ல...இது ஒரு மனித பண்பின் வெளிப்பாடு..."ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதியார் சொன்னது ஜாதியின் பெரியாரால் நடக்கும் அடக்கு முறையன்று அவமானங்களை களையவே ...ஆனால் அறிவியல் பூர்வமாக ஜாதிகள் இருக்கின்றன..இருந்து கொண்டு தான் இருக்கும்....ஜாதி என்பது ஒருவனுடைய ஜீன் ல பதிக்கப்பட்டிருக்கிறது....அதற்கு தகுந்தவாறு தான் ஒவ்வொரு மனிதனுடைய செயலும் அமைகிறது...புத்தி என்பதும் அவ்வாறே....என் அனுபவத்தில் நான் இதை பல முறை கண்டிருக்கிறேன்...... பலர் இதற்கு மாற்று கருத்து கொண்டிருக்கலாம்...நாம் எவ்வளவு தான் படித்திருந்தாலும்...எவ்வ்ளவு அனுபவம் கிடைத்தாலும்.... "இக்கட்டான" (மீண்டும் படியுங்கள்..."இக்கட்டான") ஒரு தருணத்தில் மனிதனின் புத்தியை செயல்படுத்துவது அவனுடைய ஜீன் ல இருக்கும் அந்த பதிப்பே.....அதைத்தான் நீங்களும் நானும் ஜாதி என்கிறோம்.......

 • Sami - Tirupur,இந்தியா

  Well done Mr.கிருஷ்ணமூர்த்தி. As per law, the person who induces to commit crime has be to punished hardly. Anyhow people have been already diverted to another case. So, except both families, no one is going to worry for this case.

 • vengadeshprabhu.k - coimbatore,இந்தியா

  நமது சட்டத்தை வைத்து ஒரு ஆணியையும் புடுங்க முடியாது

 • Srinivasan Desikan - chennai,இந்தியா

  உடனடியாக காவல்து​றையினர் ராம்குமார் பிடிபடும்​போது எடுக்கப்பட்ட அ​னைத்து வீடி​யோ மற்றும் பல ​வெளிப​டையாக ​தெரிவிக்கககூடிய ஆதாரங்க​ளை மக்களுக்கு ​வெளிபடுத்த​வேண்டும். அப்​பேர்துதான் இவர்க​ளை ​​போன்றவர்களுக்கு தண்ட​ணை கி​டைக்கும். இல்லாவிட்டால் நிச்சயம் இந்த வழக்கில் ம​றைந்த சுவாதிக்கு நியாயம் கி​டைக்காது.

 • Ramani T S - chennai,இந்தியா

  கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா? அப்படிக் கொடுத்தால் இந்த கேஸ் திசை மாறுவதற்கு வாய்ப்பளிக்க பட்டதாகவே கருத இடமுண்டு.

 • The Patriot - Chennai,இந்தியா

  இவன் ஜாமீனில் வெளியே வந்தால் இவனுக்குதான் பாதிப்பு அதிகம். சனியனை உள்ளேயே வைத்து நெய்ய புடைக்க வேண்டும்.

 • $$$$ - $$$$,இந்தியா

  உனக்கும் ஒரு வக்கீல் கிடைச்சுட்டானா? ....அதுவும் அந்த பொண்ணு ரத்தம் கூட காய்ஞ்சிருக்காது..ஒனக்கு அதுக்குள்ள ஜாமீனா? ......விளங்கிரும்...

 • $$$$ - $$$$,இந்தியா

  கடல்லயே இல்லையாம்....

 • SSP - Ramnad,இந்தியா

  யார் அவனுக்கு ஜாமீன் மனு தாக்கல் பண்ணுனது?

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  ஏன் பேசாம விடுதலை செஞ்சுடவேண்டியதுதான...இன்னும் நாலு பேர போடுவான்ல. என்ன சட்டம் இது? இவன்தான் கொலை குற்றவாளினு தெரிஞ்சும் கோர்ட் கேஸ்னு ஏன் இந்த இழுத்தடிப்பு...?

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  ஜாமீன் கொடுங்க... திரும்பவும் ஜாலியா சுத்துவான்... மூளையில் பல கிரிமினல் வேலைகள் உதிக்கும்... ஜாதி ரீதியாக பின்னாளில் பச்சாதாபம் தேடுவான்... சில அமைப்புகள் ஆதரவு அளிக்க கூடும்... அவனது தாய் மீடியாக்களிடம் பேட்டி கொடுப்பார்... அறியாமல் செய்துவிட்டார் மகன் என்று போது மன்னிப்பு கேட்பார்...அப்போதைய அரசு கருணை உள்ளதோடு இதனை அணுகும்.. அப்போது நமக்கும் யோசிக்கும் திறன் மழுங்கி இருக்கும்... வயதும் நமக்கும் இன்னும் ஒரு 20 தாண்டியிருக்கும்.. அப்போதைய கோர்ட்டும் , கேசும், மீடியாக்களும் , மட்டும் பரபர என்று FRESH ஆக இருக்கும்.... நாம தான் மழுங்கி போயிருப்போம்... அதற்கு அச்சாரம் தான் ஜாமீன்....ஜாமீன் கொடுக்கப்பட்டால் இதெல்லாம் கண்டிப்பாக நடக்கும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தற்கொலைக்கு முயன்றவர்கள் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்க வாய்ப்புண்டு என்பதால் ஜாமீன் ஜா கருவாடெல்லாம் சாத்தியமில்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement