Advertisement

சமஸ்கிருதத்தை எதிர்த்து கிளர்ச்சி: கருணாநிதி எச்சரிக்கை

சென்னை: ''இந்தியை எதிர்த்து, கிளம்பிய கிளர்ச்சியை போல, சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி, தமிழகத்தில் உருவாகுவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா இல்ல திருமண விழாவில், கருணாநிதி பேசியதாவது:மீண்டும் தமிழகத்தில், சமஸ்கிருதம் தலைதுாக்குமா, வடமொழி நம் மீது
படையெடுக்குமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
துாய தமிழ் மொழிக்கு தான் செல்வாக்கு, துாயத் தமிழ் மொழி தான் நம் வாழ்க்கையிலேஇருக்க வேண்டும். வடமொழி, ஆளுங்கட்சி மூலமாக அல்லது ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு, ஆசியோடு நுழைவதற்கு இடம், நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, வடமொழியை திணிக்க விரும்புகிற மக்கள், தங்களை பாதுகாத்து கொள்ள, தங்களுடைய மொழியைப் பரப்ப விரும்புகின்ற, இந்த அநியாயத்தை இப்போதே நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால், வடமொழியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து, ஒரு பெரும் கிளர்ச்சி, எப்படி கட்டாய இந்தியை எதிர்த்து, தமிழகத்தில் உருவாயிற்றோ, அதைப் போல வடமொழி சமஸ்கிருதத்தை எதிர்த்து, ஒரு கிளர்ச்சி, தமிழகத்தில் உருவாவதற்கு யாரும் காரணமாகி விடக்கூடாது.
தமிழகத்தில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும், அதை ஓட, ஓட விரட்டுவோம் என்ற அந்த உறுதியை, இந்த மண விழாவிலே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (287)

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  கருணா நிதி என்பது தமிழ் சொல் அல்ல

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தார் காணப்படும்.. என்பதை வந்தேறிகள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தி இருப்பது தெளிவாகிவிட்டது..

 • Kalyan Sudharsanam - madurai,இந்தியா

  முதலில் மஞ்சள் துண்டை நீக்கட்டும் பெயரை அருள் செல்வம் என்று மாற்றட்டும் ஸ்டாலின் பெயருக்கு தமிழ் பெயர் வைக்கட்டும் தயாளு பெயரை அருளாழி என்றும் ராஜாத்தி பெயரை அரசனி அரசி என்று மாற்றட்டும். இதே போல் அழகு மலை விடியல் செல்வம் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் பெயரை தமிழ் படுத்தட்டும் பின்னல் சமஸ்க்ரிதம் ஓட ஓட விரட்டுவோம். எங்கள் பிள்ளைகள் பேரன்கள் அங்கிலம் ஹிந்தி படிப்பார்கள் யாரும் கேட்ககூடாது. ஆனால் தமிழர்கள் தமிழ் மட்டும் படித்து அடிமை சந்தையில் வீழட்டும். தமிழ் மாணவர்களே நமது தமிழ் ஈழ மக்கள் மடிவதை வேடிக்கை பார்த்த உண்ணா விரத டிராமா செய்த தலைவர் சொல்வதை கேட்டு இன்னும் கேவலப்படதீர்கள். இவர்கள் திராவிடர்களை முன்னேற்ற பாடுபட்டார்கள் முல்லை பெரியார் (கேரளாவுக்க) காவிரி (கர்நாடகவுக்கு) விட்டுக்கொடுத்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் தண்ணீர் கிடைப்பதை தடுப்பார்கள். ஏனென்றால் இது திராவிட முன்னேற்ற கழகம் ஆனால் தமிழ் முன்னேற்ற கழகம் இல்லை இன்னுமா தமிழர்கள் இவர்களை நம்புகிறீர்கள்

 • Kandaswamy - Coimbatore,இந்தியா

  தலீவரே, நீங்க N V N சோமு வின் மகனுக்கு M P சீட்டு கொடுக்காமல் தயாநிதி மாறனுக்கு சீட்டு கொடுக்கும் போதே தெரியும், நீங்க ஊருக்குதான் உபதேசம் செய்வீங்கன்னு. காரணம் மாறனுக்கு ஹிந்தி தெரியும் சோமுவின் மகனுக்கு தெரியாது. அவருக்காக சௌகார்பேட்டைல ஹிந்தில அடிச்ச போஸ்டர் இன்னும் இருக்கு தலீவரே. என்னா தலீவரே உங்களுக்கு தேவைனா நாங்க போராட்டம் செய்யணும் இல்லன விட்டுடனும். நீங்க பேசறதெல்லாம் பார்த்தா அமைதிப்படைல சத்தியராஜ் பேசற மாதிரியே இருக்கு. "வாழ்கன்னு சொல்லக்கூடாது", "யாரும் இன்ஸ்பெக்டர கட்டைல அடிச்சிறாதீங்க", "யாரும் இன்ஸ்பெக்டர் மேல பெட்ரோல் ஊத்தக்கூடாது" போன்ற வசனங்கள் தான் நினைவுக்கு வருகிறது..

 • Kandaswamy - Coimbatore,இந்தியா

  தமிழ் என்று மார்தட்டிக்கொள்வோரே உங்கள் கவனத்திற்கு, நம் தமிழ் மாதங்கள் 12ன் பெயரும் சமஸ்கிருதத்தில் இருந்துதான் எடுக்கப்பெற்றது. இரண்டு மொழிகளுக்கும் மூலமே கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். இரு மொழிகளும் இரு கண்கள். நம் நாட்டிலிருந்து திருடப்பெற்ற தமிழ், சம்ஸ்கிருத வேதங்களில் இருந்துதான் இன்று ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் உயிர் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றது. நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்ததை விட்டு மேற்கத்திய கலாச்சாரத்திற்கு தாவிக்கொண்டிருக்கின்றோம். கவலை இல்லை, என் தேச மொழிகள் பூமெராங் போன்றது. அதை இகழ்ந்தோரே நாளை போற்றுவர். அந்த நாள் தொலைவில் இல்லை....

 • Pillai - Lagos,நைஜீரியா

  மொழியை கனிமொழியாக்கி மேலும் அதை காசுமொழியாகினார் இந்த கருணா.... தன் குடும்பத்தை லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக்கினார் ..... தமிழனே இந்தமுறை ஏமாந்துவிடதே, விட்டால் தமிழினமே காணாமல்போகும் என்பதை மறந்துவிடாதே.. நமக்கு எந்த மொழியும் பகையில்லை நீ விரும்பும் மற்றும் பயன்படும் எந்த மொழியையும் கற்று இந்த உலகத்தை வென்றிடுவாயாக...... ஒரு தமிழனாய் ....

 • Kandaswamy - Coimbatore,இந்தியா

  அட நம்ம தலீவரே சொல்லிட்டாருப்பா ஓட ஓட விரட்டிடுங்கப்பா நம்ம தலீவரை.....

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  மோடியின் நல்லாட்சியைக் கண்டு மனம் வெதும்பும் இந்த இத்தாலிய அடிமை ...,அலைக் கற்றை கூட்டுக் களவாணி.... மைய அரசின் மேல் புழுதி வாரித் தூற்ற எந்த முகாந்திரமும் இல்லாததால் இது போன்ற பிதற்றல் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் ...

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  குறளுக்கும் ,தொல்காப்பியதிர்க்கும் தப்பு தப்பாய் உரை எழுதி 'பொருட்குற்றம் 'செய்த கோயபல்சின் முக மூடியைக் கிழிக்கும் காலம் வந்து விட்டதென சங்கே முழங்கு .....

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழை இத்தனை காலம் இவர் தான் காப்பாற்றினாரா ,,,,,,??இல்லை ஆழ்வார்களும் ,நாயன்மார்களும் காத்தனரா ....?

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  "முதலில் இந்த போலி தமிழ் காவலர் தனது தொலைகாட்சி நிகழ்சிகளில் தமிழை கொத்து பரோட்டா போடாமல் பார்த்துக் kollatum ..."

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இன்று முதல் தமிழகத்தில் சைனீஸ் ,நார்த் இந்தியன் புட் சாப்பிடக் கூடாது ....இட்டிலி மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்வாரா ...

 • Krishnan - Chennai,இந்தியா

  இவரின் பேச்சு வெளிமாநிலங்களில் இருக்கும் மற்றும் பணியாற்றும் தமிழர்களுக்கு பிரச்சனையை கிளப்புவது போல் உள்ளது. தயவுசெய்து இவரின் இத்தகைய பேச்சுகளை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம்

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  இன்றைக்கு தமிழகத்தில் மழலைகளுக்கு வைக்கப் படும் பெயர்களில் தொண்ணூறு விழுக்காடு வடமொழிப் பெயர்களே ...மீதி பத்து விழுக்காடு தெய்வத் திரு நாமங்களே ..." மக்கள் மனமறிந்து பேசாத தலைவன் புறக்கணிக்கப் படுவான் .....

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  தோற்றுப் போன கிழட்டு நரி ஒன்று ஊளை இடுகிறது....

 • Anandh Palani - toronto,கனடா

  உங்களை தான் ஓட ஓட விரட்டனும். எங்களுடைய முன்னேற்றத்தை தடுத்த துரோஹி. ஹிந்தி படித்திருந்தால் நல்ல கவர்மென்ட் உத்தியோகம் கிடைத்திருக்கும்.

 • ramaswamy - PUDUCHERRY ,இந்தியா

  உள்ளூர் கோயில்களில் உள்ள சமஸ்கிருதத்தை எதிர்த்து கிளர்ச்சி பண்ணுங்க அப்புறம் வெளியில இருக்கிற சமஸ்கிருதத்தை எதிர்த்து கிளர்ச்சி பன்னலாம்.

 • Hindustani - Sugar land,TX,யூ.எஸ்.ஏ

  கருணாநிதி என்ன தமிழ் பெயரா? தயாளு என்ன தமிழ் பெயரா? ஸ்டாலின் என்ன தமிழ் பெயரா? பெரிசு பையன் பேர எப்படி சமஸ்க்ருதம் இல்லாம எழுதுமாம்? எவ்வள்ளவு வாட்டி கழுவி ஊத்தினாலும் சொரணை இல்லாத ஒன்னு தமிழ் நாட்டுல இருக்குன அது ? கருணா மட்டும் தான்?

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  தி மு க வின் உடன்பிறப்பு பொங்கி எழும். ரயில் ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும், பேருந்திற்கு தீ வைக்கும், பொது சொத்துக்களை சூறை ஆடும். இதனை செவ்வனே செய்யும் தொண்டன் திமுகவின் அடுத்த கட்டத்திற்கு பதவி வுயர்வு பெறுவான். கலைஞர் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் சொத்து இன்னும் பல நூறு மடங்கு அதிகரித்து தமிழுக்கு சேவை செய்வர். அதற்காக மற்ற மொழி பேசும் பெண்களை (நான் குஷ்பு பற்றி சொல்வதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) களம் இறக்குவார். விழித்து கொண்டோரெல்லாம் பிழைத்து கொண்டார் என்பதிற்கு இணங்க தமிழனே விழித்துக்கொள். பிழைத்துக்கொள். ஹிந்தி சமஸ்கிருதம் மட்டுமல்ல ஜெர்மனி, ரஷ்யன், பிரெஞ்சு சைனீஸ் போன்ற வேறு நாட்டு மொழிகளையும் கற்று உலகை தமிழன் ஆள வேண்டும்.

 • Sreenivas Jeyaraman - Madurai,இந்தியா

  காலம் தன் கடமையை செய்யும் .... மொழி தானே எழுந்து நிற்கும் .... வாழ்க இவ்வையகம் .... sreenivas.j

 • Chandrasekaran Balasubramaniam - ERODE,இந்தியா

  கட்டுமரமே, இன்னும் தமிழக மக்களை, மொழியை காரணம் காட்டி அரசியல் செய்யாதிருக்கவும். நன்றி.

 • pandian.J - Tirunelveli,இந்தியா

  அட போங்க ஜி ....

 • M.Rajkumar - chennai/ abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஐயா பெரியவரே உங்கள் பெயரே சமஸ்கிருதத்துல தானே இருக்கு ... தமிழ் பற்று இருந்தால் 80 வருடங்களுக்கு முன்னேயே "கருணையின் செல்வம்" என்று உங்கள் பெயரை மாற்றி இருக்கனும்.. சரி இப்போவும் ஒன்னும் லேட் ஆகலை முதலில் உங்கள் பேரை தமிழ் பெயராக்குங்கள் அப்புறம் பார்க்கலாம்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஜெயகாந்தன் கூறியுள்ளார். சமஸ்க்ரிதத்தை இகழ்ந்து தமிழே சிறந்தது என்று ஒருவன் கூறுவது" நாய் தன்னைத்தானே நக்கிக்கொடுப்பது போல " என்று.

 • Rajaraman Pulikesy - Madurai,இந்தியா

  தக்ஷினாமூர்த்தி ஏன் இன்னமும் 50 வருசத்துக்கு முன்னாடியே இருக்காரு? சமஸ்கிருதம் திணிக்கப்பட்டா பிராந்திய மொழிகள் அழிஞ்ஜிருமா? திணிக்கப்படலேன்னா பிராந்திய மொழிகள் சுபிக்ஷமா வாழ்ந்திடுமா?

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஏங்க எல்லோரும் எங்கள் தானைத்தளைவரை வெரட்டி வெரட்டி அடிக்க வர்றிங்க. அவரு பொழப்பு நடத்த வேணாமா? கட்சி நடத்துறதுனா சும்மாவா, இப்படி எதினாச்சிக்கும் பெனாத்திக்கிட்டு இருந்தாத்தான் அல்லைக்கைங்க கூட நிப்பாய்ங்க, இல்லைனா அவனவன் இது அவ்வளவுதான் தேறாதுன்னு வேறு வேலை பார்க்க போடுவான்.

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  ஊளையிடும் ஓநாய்களை கண்டுகொள்ளாமல் தமிழும், ஆங்கிலமும், ஹிந்தியும், சமஸ்கிருதமும் படியுங்கள் மக்களே. (அப்போதுதான் ஹிந்தி படித்த தயாநிதி போல மத்திய அமைச்சராகலாம்)

 • Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா

  எந்த ஒரு மொழி அல்லது ஒரு படிப்பை கற்க யாரும் தடை சொல்ல வேடியது இல்லை. கல்வி அறிவை வளர்க்க உதவ வேண்டும். யாருக்கு எது விருப்பமோ, அது நல்லதாக இருந்தால் அதை கற்க யாருடைய அனுமதியும் இல்லாமல் கற்க வழி வேண்டும். எதுவும் மக்கள் விரும்பாவிட்டால் தோல்வி தான். நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள். மக்களை வோட்டு வங்கியாக மட்டும் நடத்தி பழகி விட்டவர்கள் நாடு முன்னேற வழி விட மாட்டார்கள். இது தமிழ் நாட்டின் சபை கேடு. இவர்கள் சபிக்க பட்டவர்கள்.

 • dravida Aryan - thanjavur,இந்தியா

  ஸூரியனை பாத்து நாய் குலைக்குது. குலைச்சு துரதலாமுனு நினைக்குது.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  இது 1960-கள் அல்ல, முதலில் அதை நினைவில் கொள்க.உங்கள் பேரன் பெயர் என்ன?, அவர்கள் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயர் என்ன? முதலில் உங்கள் வீட்டில் பெயரை மாற்றி விட்டு தெருவுக்கு வாருங்கள்.போராட்டமாம், போராட்டம், இந்த பருப்பு எல்லாம் இனிமேல் இங்கே வேகாது.

 • narayanan iyer - chennai,இந்தியா

  எழுந்து நிக்கவே வழியில்லை இது ஓட ஓட விரட்டுமாம் .முதலில் உங்க குடும்பத்திலிருக்கும் நபர்களை ஹிந்தியை படிக்க வேண்டாம் என்று சொல்ல உமக்கு தகுதி இருக்கா?தயவு செய்து கதை ஏதாவது எழுதிக்கொண்டு ராமசாமி ராமசாமி என்று சொல்லிக்கொண்டு உட்காருங்கள் .போதும் உமது தோல்வி பிலாக்கணம் .இவரின் வாரிசுகள் தலைநகரில் என்ன தமிழில்தான் பேசி காரியம் சாதிக்கிறார்களா? எல்லா அயோக்கியனும் கொண்ட ஒரு இயக்கம் திமுக . கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஒரு முறையில்லாத வாழ்க்கை வாழ்ந்து வரும் இவரை இவர் சொல்லும் வார்த்தைகளை ஏற்க்க முடியவில்லை முதலில் தமிழை நம் வாரிசுகளுக்கு வல்லினம் மெல்லினம் இடையினம் சரியாக சொல்லிகொடுத்திருக்கோமா ?

 • மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்

  இந்த கருணாநிதியால் ஹிந்தி கற்கும் வாய்ப்பை இழந்தவன் நான். என்னை போல் பலரும் பாதிக்கபட்டுள்ளார்கள்.... சென்னையை தாண்டினால் ஹிந்தி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுபவர்கள் பலர்... ஹிந்தி தெரிந்தால் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு எளிதாக இருக்கும்... தமிழ் மொழியை வளர்க்க வேண்டியதுதான், அதற்காக வேற்று மொழி துவேஷம் என்பது தேவை இல்லாத ஒன்று.... தாய்மொழி என்பது உயிர் போன்றது. இதை யாராலும் மறுக்க முடியாது..அதே சமயம் பிற மொழி கற்பது என்பது தனி மனித விருப்பம்...இந்த திருக்குவளை தன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கற்பதை தடுக்க முடியுமா...

 • Prakash JP - Chennai,இந்தியா

  1930க்கள் துவங்கி, ஹிந்தி திணிப்பை கடுமையாய் எதிர்த்து வரும் திராவிட இயக்கத்துக்கு நன்றி... உயிர் தியாகம் செய்த மொழி போர் மற்றவர்களுக்கும், தலைமையேற்று நடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார், மூவலூர் ராமாமிருதம், டாக்டர். தர்மாம்பாள் போன்ற எண்ணற்ற தலைவர்களுக்கும். 1936 ஆம் ஆண்டில் நடந்த முதல் ஹிந்தி எதிர்ப்பு போரில் தனது பதின்ம வயதிலேயே களம் கண்ட கலைஞர், இரண்டாம் ஹிந்தி எதிர்ப்பு போரில் தலைமையேற்ற எண்ணற்ற மாணவ தலைவர்களுக்கும் நன்றிகள் பல... தமிழர்கள், வேறெந்த இந்தியர்களைவிட, பெற்ற பலன்களும், அடைந்த வளர்ச்சியும் அதிகம்... இன்று பல நாடுகளில் பல துறைகளில் தமிழர்கள் சிறந்து விளங்குவதற்கு, அதிக அளவில் இருப்பதற்கும், ஹிந்தியை புறக்கணித்தது ஒரு முக்கிய காரணம்... ஹிந்தி மொழி இல்லாமலேயே தமிழகம், ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கிறது... முதலிடத்தில் இருக்கிறது... ஹிந்தி மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறன.... ஹிந்தியை தாய் மொழியாகவே கொண்டிருப்புவர்கள், நூறு ரூபாய் தின சம்பளத்துக்கு, அலை அலையாய், சொந்த மாநிலம் விட்டு மாநிலம் வந்து, இங்கே தமிழ்நாட்டில் வேலை செய்துகொண்டு இருகிறார்கள்....

 • Prakash JP - Chennai,இந்தியா

  ஹிந்தி திணிப்பின் விளைவுகளும், ஏற்படுத்திய அழிவுகளும்...... ஹிந்தி புறக்கணிப்பால் தமிழர்கள் அடைந்த பலன்களும்.. இங்கே உள்ள ஒரு சில படித்த அதி மேதாவிகள், ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி, அதை எல்லோரும் ஆதரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்... அவர்களுக்கு ஒரு மொழின் ஆதிக்கம் எத்தகைய விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பது புரியவில்லை.. பார்க்கபோனால், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் படி, தேசிய மொழி என்று எதுவும் கிடையாது.. ஹிந்தியின் ஆதிக்கத்தால், வீச்சால், திணிப்பால் எத்தனை மொழிகள், கலாச்சாரங்கள் அழியும் நிலையில் உள்ளன என்பது இவர்களுக்கு தெரியாது... ஹிந்தியால் வடக்கு, மத்திய இந்தியாவில் பேசப்பட்ட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பாதிக்கப்பட்டு, முக்கியத்துவம் இழந்து, அழியும் நிலையை நோக்கி செல்கின்றன. ராஷ்ட்டிர பாஷா ஹிந்தியால் கொல்லப்பட்ட “இந்தி” மொழிகள் பல... இவற்றில் இந்தி விட பல நூற்றூண்டுகால இலக்கிய பாரம்பரியம் உடைய பல மொழிகளும் அடங்கும். அவதி, போஜ்புரி, பிரஜ் பாஷா, ஹரியான்வி, மாகதி, மைதிலி, பஹாரி, சாத்ரி, ராஜஸ்தானி, சட்டிஸ்கரி என பல மொழிகளினிடத்தை இந்தி அபகரித்துக்கொண்டது. முகலாயர் காலத்தில் இந்துஸ்தானி என்று கூறப்பட்ட, தில்லியிலும் அதன் அருகிலும் பேசப்பட்ட கடிபோலி மொழியே, இந்தியாவும் உருதுவாகவும் பிறகு அவதாரம் எடுத்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால், கடிபோலி+சமஸ்கிருதம் = இந்தி, கடிபோலி+அரபு+பாரசீகம் = உருது. இம்மொழிகள் அனைத்தும் இந்தியின் கிளைமொழிகள் என்று ஏமாற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கம் செய்து, இம்மொழிகளை பேசும் மக்களை எல்லாம் சேர்த்து "ஹிந்தி மொழி" பேசும் மக்கள் 40% சதம் என்று கதைவிட்டுகொண்டிருக்கிறது, ராஷ்ட்ர பாஷா இந்திக்கு இலக்கிய வளம் வாய்ந்த பிஹாரின் மைதிலி கிளைமொழி அல்ல. மும்பையின் பாலிவுட் இந்திக்கு போஜ்புரி கிளைமொழியும் அல்ல. அதனால்தான் போஜ்புரி சினிமா என்று தனியே இருக்கிறது.. உண்மையில் ஹிந்தி தாய்மொழியாய் கொண்டவர்கள் 20% சதம் இருக்கலாம்... ஒரு மொழியினை அழிக்கும்போது, அந்த மொழி பேசும் மக்களின், வரலாற்றை, தலைமுறைகளை, அனுபவங்களை, பண்பாட்டினை, கலாசாரத்தினை, வாழ்வின் புரிதலை, மண்ணின் ஆழத்தை, சமூகத்தின் தொடர்ச்சியை எல்லாம் சேர்ந்து அழிகின்றது... ஒரு இனத்தை அழிகவேண்டுமானால், அவர்களின் மொழியை அழிக்கவேண்டும் என்பது சர்வாதிகாரிகளின் திட்டம். அதே போல, தமிழ், தெலுங்கை சினிமாக்களை போன்று, அதிகம் பேசப்படும் பஞ்சாபி, பெங்காலி, மராட்ட, குஜராத்தி மொழி சினிமாக்கள் பெரியளவில் வணிகரீதியில் வளராததற்கு ஹிந்தி மொழி திணிப்புக்கள் முக்கிய காரணம்.. பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் ஹிந்தி சினிமாக்களுடன் உள்ளூர் மொழி சினிமாக்கள் போட்டியிடமுடியவில்லை... சிறுக சிறுக, கன்னட, தெலுங்கு சினிமாக்கள் இந்த நிலையை அடையலாம்... ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால், மராட்டா, குஜராத், ராஜஸ்தான், ஒரிசான்னு, வங்காளம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம்மா அவங்களோட சுயத்த இழந்து வருகிறார்கள்... இந்தியை புறக்கணிக்கித்ததால், தமிழ்நாடு தனி தன்மையுடன், சுயத்தை இழக்காமல் இருக்கிறது.... பிறந்ததில் இருந்து தாலாட்டு முதற்கொண்டு எல்லாவற்றையும் இந்தியிலேயே கேட்டு வளரும் ஒரு குழந்தையுடன், இந்தியை ஒரு பாடமாக மட்டும் பள்ளியில் படிக்கும் நம் குழந்தைகள் எப்படி போட்டி போட முடியும்? இந்தி தேசியமொழி ஆக்கப்பட்டு அரசு தேர்வுகள் அனைத்தும் இந்தியில் தான் என்றால், இந்தி தாய்மொழியாய் இல்லாதவர்களின் நிலை என்னவாகும்???

 • Prakash JP - Chennai,இந்தியா

  //ஹிந்தி படிக்காததால் வேலைவாய்ப்புகளை இழந்து விட்டோம்// இப்பவும் ஒன்னும் குறைஞ்சி போயிடல... போய் ஹிந்தி படிச்சிட்டு வாங்க, நாங்க உங்களுக்கு வேலை தரோம்... என்ன வேலை தருவிங்க ???? இப்போ இந்திகாரங்க தமிழ் நாட்டுல செய்ற அதே வேலைங்க தான்... மில்லு வேல, கட்டட வேல, பிரிட்ஜ் மெட்ரோ வேல.. குறிப்பு : இந்த வேலைகள் மீதோ, தொழிலாளர்கள் மீதோ தவறான எண்ணம் இல்லை.. ஏதோ ஹிந்தி படிக்காததால் வேலைவாய்ப்புகளே இல்லை என்று வெத்தாய் பொங்குபவர்களுக்காக இந்த பதில்...

 • Prakash JP - Chennai,இந்தியா

  //ஹிந்தி சமஸ்கிருதம் படித்தால் வேலை கிடைக்கும்// என்ன வேலை?? வட நாட்டில் பானிபூரி விக்கிற வேலையா??? இங்கிலீஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிச்சதால நீ இப்போ ஏசி ரூம்ல சொகுசா உக்காந்துக்குனு வெள்ளையும் சொள்ளையும்மா பொட்டி தட்டின்னு இருக்க..... ஹிந்தி தெரிஞ்சவுங்க நூறு ரூபாய் தின சம்பளத்துக்கு, அலை அலையாய், சொந்த மாநிலம் விட்டு மாநிலம் வந்து, இங்கே தமிழ்நாட்டில் வேலை செஞ்சின்னு இருக்காங்க... ஹிந்தியை தாய் மொழியாகவே கொண்டிருப்பவர்கள், நூறு ரூபாய் தின சம்பளத்துக்கு, அலை அலையாய், சொந்த மாநிலம் விட்டு மாநிலம் வந்து, இங்கே தமிழ்நாட்டில் வேலை செய்துகொண்டு இருகிறார்கள்.... இந்த அழகில், இந்தி படித்தால் வேலை என்று யாரிடம் கதைவிடுகிறார்கள்.... ஹிந்தி மொழி இல்லாமலேயே தமிழகம், ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கிறது... முதலிடத்தில் இருக்கிறது... ஹிந்தி மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறன.... தமிழகத்தை பொறுத்தவரை, வட இந்தியாவிற்கு பிழைப்புக்காக போவோர் ஒரு சதவிதத்துக்கும் குறைவே. மேலும், வட இந்தியாவை சேர்ந்தோரே, அங்கே பிழைக்க வழி இல்லாமல், தமிழகம், பெங்களூரு போன்ற தென் மாநிலங்களை நோக்கி படை எடுக்கிறார்கள். ஹிந்தி படிச்சதால, மராட்டா, குஜராத், ராஜஸ்தான், ஒரிசான்னு எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம்மா அவங்களோட சுயத்த இழந்து வராங்க... இந்தியை புறக்கணிக்கித்ததால, தமிழ் நாடு தனி தன்மையுடன், சுயத்தை இழக்காமல் இருக்கிறது.... வேலைக்கு அரபு நாடுகள், மலேசிய போன்ற நாடுகளுக்கு செல்பவர்கள் எல்லாம் அரபு, மலேயா மொழிகளை படித்துவிட்டா செல்கிறார்கள்?? அதே போல, இங்கே வந்து கோடிகணக்காய் சம்பாதிக்கும் வட நாட்டு சேட்டுக்கள் எல்லாம், தமிழ் படித்துவிட்டா வருகிறார்கள்??? கிடையாது....

 • Prakash JP - Chennai,இந்தியா

  தமிழ் & தமிழின எதிரிகளை அடையாளம் காண மிக சாதாரண வழி :- (தமிழ் தேசிய தொண்டர்கள், தமிழன போராளிகள் கவனிக்கவும்.....) தமிழை "குறைந்தபட்சம் ஒரு படமாகவாவது" படியுங்கள் என்றால் எதிர்ப்பும்...... அதே நேரத்தில், ஹிந்தியையோ, எந்த பலனும் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தையோ, "கட்டாயம் பாடமாக" படிக்க ஆதரவும் தெரிவிப்பவர்கள் தான் உண்மையான தமிழின எதிரிகள்......

 • narayanan iyer - chennai,இந்தியா

  எழுந்து நிக்கவே வழியில்லை. இது ஓட ஓட விரட்டுமாம் .முதலில் உங்க குடும்பத்திலிருக்கும் நபர்களை ஹிந்தியை படிக்க வேண்டாம் என்று சொல்ல உமக்கு தகுதி இருக்கா? தயவு செய்து கதை ஏதாவது எழுதிக்கொண்டு ராமசாமி ராமசாமி என்று சொல்லிக்கொண்டு உட்காருங்கள்.போதும் உமது தோல்வி பிலாக்கணம் .

 • Shan - Chennai

  நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டை இணைக்க நாம் ஒரு அந்நிய மொழியை(ஆங்கிலம்) பயன்படுத்துவதை விட நம் நாட்டின் பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் இந்தியை தேசிய மொழியாக கற்பதில் என்ன தவறு?தமிழன் என்றாலே மற்ற மாநிலத்தவர் இழக்காரமாக பார்ப்பதே இவர் போன்ற சுயநலவாதிகளால் தான். நாம் வடமொழிக் கற்றால் தேசிய அரசியல் கட்சிகள் இங்கே காலூன்றி விடுமோ என்ற பயமே இப்படி முட்டாள்தனமான உளறல்களுக்கு மூலப்பொருள்.

 • Venkateswaran Murugandi - Chennai,இந்தியா

  தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கே தமிழக அரசுப் பணியில் வேலை என்று சட்டம் அன்றே இயற்றியிருந்தால் இப்பொழுது கவலை இல்லாமல் இருந்திருக்கலாமே.

 • Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா

  அது சரி அய்யா ' தமிழ் ' அதுவும் 'தனி தமிழ் ' தமிழ் நாட்டில் எங்கு உள்ளது ??? உங்கள் வீட்டு பிள்ளைகள் பெயர்கள் தமிழா ??? அல்லது ' நடந்த தேர்தலில் ' நீங்கள் தயாநிதி மாறனுடன் ஒன்றாவகே இருந்தீர்கள் ,.எல்லா மீட்டிங்குகள் போதும். அவர்டைய நிருவனகளில் 'தமிழ் உள்ளதா ??/

 • Nallan - Chennai,இந்தியா

  தி மு க விற்கு இப்பொழுது கிடைத்த வெற்றியை வைத்து தப்புக் கணக்கு போடுகின்றார். இது வந்து இவருக்கு திரிசங்கு சொர்க்கம் மாதிரி . இது ஓர் " சித்திரவதை ". இதைத்தான் இவர் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார், அணையப் போற விளக்கு நல்ல பிரகாசமா எரியுமாம்.

 • Nallan - Chennai,இந்தியா

  ஒருத்தரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை கண்டுக்காமல் விடுவதுதான் மிகச் சிறந்த தண்டனை. Ignore பண்ணிப்பாருங்கள் வாசகர்களே.

 • vidhuran - chennai,இந்தியா

  இவர இனிமேல் கல்யாணத்திற்கு கூப்பிடாதங்கப்பா.. போனோமா மணமக்களை வாழ்த்தினோமா என்றில்லாமல் சும்மா... அவனவன் டைனிங் ஹாலை பாத்துகிட்டு உக்காந்து இருக்கறப்போ இவரு சமஸ்க்ரிதத்தை ஓட ஓட விரட்டுவோம் அப்படி இப்படி ன்னு உதார் விட்டுண்டு இருக்கார். பசி காதை அடைக்குட்துய்யா

 • vidhuran - chennai,இந்தியா

  வேற வேலை இல்லை இவருக்கு. இப்போ இவர் போராடி போராடி, டீக்கடையில் கூட சாய் என்று சொன்னால் தான் டி கூட கிடைக்கிறது.எல்லா வட மாநிலங்களில் இருந்தும் எல்லா ஓட்டல் களிலும், டீக்கடைகளிலும், வேலைக்கு வந்து விட்டார்கள். தமிழனுக்கு டீக்கடை வேலைக்கு கூட போட்டி வந்து விட்டது. சும்மா......... அதை படிக்க மாட்டேன் இதை படிக்க மாட்டேன் என்று எல்லாரையும் உசுப்பேத்தி விட்டே உடம்பை புண்ணாக்கி விடுவார். பொழைக்கற வழிய பாப்பாங்களா இவருகூட இன்னொரு வேலை இல்லா பொலிடிஷியன்(VIP ) வைகோ வேறு போங்க போங்க ஆவற வேலையை பாருங்க

 • Venkat - madurai,இந்தியா

  இங்கு இதுவரை யாரும் சொல்லாத முக்கிய தகவல் இன்று பல்வேறு துறைகளிலும் உயிர் மூச்சாக இருக்கும் கணினிக்கு மிகவும் ஏற்ற மொழி சமஸ்க்ருதேமே. யாராவது முயற்சி செய்து சமஸ்க்ருதத்தில் ஒரு OS தயார் செய்தால் அது உலகம் முழுவதும் கோலோச்சும்

 • Ramudu - Chennai,இந்தியா

  சமஸ்கிருதம் நம் நாட்டின் சொத்து...இந்தியா முழுவதும் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க மோடி ஜி முன் வரவேண்டும்..இது மாதிரி அலப்பறை களெல்லாம் கண்டு கொள்ளாமல் ...ஒவ்வொருத்தனும் ஜாதி பாகுபாடின்றி பயில வேண்டும்..

 • Tamilnesan - Muscat,ஓமன்

  எவ்வளோ அடிச்சாலும் தாங்குறானே இவன் நல்லவனா ...கெட்டவனா...

 • SHANMUGASUNDARAM - Chennai

  தமிழ்தாய் வாழ்த்தில் எத்தனை சம்ஸ்க்ருத சொல் இருக்கிறது. முதலில் கருணாநிதி அதையாவது படிக்கட்டும். தமிழும் சம்ஸ்க்ருதமும் இரு கண்கள். தோற்றவனுக்கு பித்தம் அதிகமாகி உளறு தன்மை வந்து விட்டது. போக போக என்ன ஆகுமோ.

 • nanbaenda - chennai,இந்தியா

  எப்படியாவது, ஏதாவது பேசி தமிழ் நாட்டை கொழுந்துவிட்டு எரிய செய்ய வேண்டும். அதில் குளிர் காய வேண்டும் என்கிற நப்பாசை. காலத்திற்கு ஏற்றாற்போல் தளபதி இவர் வாயை அடக்கினால் நல்ல பெயர் எடுக்கலாம்.

 • Ootai Vaayan - Kovai,இந்தியா

  உண்ணாவிரதம் இருந்து, ரயில் தண்டவாளத்தில் தலை கொடுத்து, கட்டுமரமாக மிதப்பாரோ?

 • rajen.tnl - tirunelveli,இந்தியா

  உங்க பேரென்ன ? கருணாநிதி .... இது தமிழா ? வட மொழியா ? வட மொழிங்க உங்க இரண்டாவது மனைவி பேரு என்ன ? தயாளு அம்மாள்... அது தமிழ் பெயரா அல்லது வட மொழியா? வட மொழிங்க உங்க பிள்ளை பேரு என்ன ? ஸ்டாலின் இது என்ன மொழி ? லெனின்ட்ட தாங்க கேக்கணும் உங்க பேரன்கள் பேரு என்ன? உதய நிதி, ஆதித்ய அரவிந்தன்... இது தமிழா? இல்லீங்க வட மொழிங்க உங்க குடும்பத்திலேயே இவ்வளவு சம்ஸ்க்ருதப் பெயர்கள் இருக்கிறதே ... எடுக்கும் சவுக்கை முதலில் உங்க குடும்பத்தில் இருந்து தான் ஆரம்பிக்கணும் போலவே...

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  இவரது பேச்சு நேரத்திற்கு நேரம் மாறும். .இதே பிஜேபி நாளை இவரை டில்லிக்கு அழைத்து இவருக்கும், இவர் குடும்பத்திற்கும் அமைச்சர் பதவி கொடுத்தால் இந்த 'இந்தி எதிர்ப்பு ' சமஸ்க்ருதம் எதிர்ப்பு' எல்லாம் காணாமல் போய்விடும். இவர்கள் குடும்பத்தை சிபிஐ விசாரித்தால் 'சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்ததா ? என்று கேட்பார். அதே சமயம் ஒரு டி.எஸ்பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று அறிக்கை விடுவார். 'சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொள்ளவில்லை 'கொலை செய்யப்பட்டார்' என்று பிரபாகரன் என்ற வாலிபர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அது பற்றி பல பத்திரிகைகள் ,ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .ஒரு மார்வாடி நிதி நிறுவனர் கொலை செய்யப்பட்டதற்கும், 570 கோடி கண்டைனர் பணம் ரிசர்வ் வங்கி தனது என்று கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தபின்னும் சிபிஐ விசாரணை கேட்கும் இவர் 'ஏன் சாதிக் பாட்ஷா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரவில்லை ? 2ஜி பணம் முழுவதும் ஸ்டாலின் வசம் உள்ளது என்று சாதிக்வை பாட்ஷா சிபிஐயிடம் வாக்குமூலம் தந்துள்ளதாக வைகோ ஒரு அப்பிடவிட்டை (வாக்குமூலத்தை )காட்டுகிறாரே. ஏன் அதை எதிர்த்து அறிக்கை விடவில்லை ? சாமர்த்தியமாக ஸ்டாலினை அம்மாவிடம் சரணடைய செய்து தனக்கும் ஸ்டாலினுக்கும் ஏதோ பிணக்கு என்பது போல் நாடகம் நடத்தி அதன் மூலம் தன்னை தற்காத்துக்கொள்ளும் நரித்தனம் கொண்டவர். 2ஜி வழக்கை தூசு தட்டி எழுப்பினால் உடனே ,கச்சத்தீவு ,காவிரி மேலாண்மை வாரியம், இலங்கை தமிழர் நலன், சமஸ்க்ருதம் இந்தி எதிர்ப்பு என்று தமிழக மக்களை ஏமாற்றி காரியம் சாதிக்க இனி முடியாது.

 • baskaran - Chennai,இந்தியா

  மு.க.அவர்களே, இது வரை தமிழ் தமிழ் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது போதாதா? இன்னும் எத்தனை காலம் ஏமாற்ற போகிறீர்கள்? பாவம் தமிழன். அவனை அவன் வழியிலேயே விட்டு விடுங்கள். சமஸ்க்ருதம் படிக்கிறான் அல்லது கிடக்கிறான்.அதனால் உமக்கு என்ன? கடைசி காலத்தில் வாயை மூடி கொண்டு இரும்.

 • VENKAT - Chennai,இந்தியா

  தாத்தாவோட மொழி எதிர்ப்பு அரசியல் இனிமேலும் வேகாது.... மக்களே தயவு செய்து "மொழி அரசியலை" ஆதரிக்காதீர்கள்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  நாய்க்கு அப்பப்ப எலும்பு துண்டு போட வேண்டும். இல்லாவிட்டால் போகிற வருகிறவர்களை கடிக்க வரும். சரி அத உடுங்க. எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு அப்பப்ப பெணாத்துறதுக்கு ஆளும்கட்சி ஏதாவது விஷயம் கொடுக்கணும், இல்லாவிட்டால் ஆட்சியில் லஞ்சம், ஊழல், கமிஷன், அதிகாரதுஷ்பிரயோகம் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள்.

 • sundaravall - coiambature,இந்தியா

  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமஸ்கிருதம் குறித்த கருத்து பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது. கருணாநிதி எனும் தற்போதைய பெயர்,தயாளு,துர்கா,தயாநிதி, கலாநிதி, உதயநிதி,கனிமொழியின் மகன் ஆதித்யா,உதயசூரியன்,ஜெமினி டிவி, உதயா டிவி,கிரண் டிவி, இந்தப் பெயர்கள் அனைத்தும் சமஸ்க்ருதப் பெயர்களே. உண்மை நிலவரம் இப்படி இருக்க கருணாநிதி அவர்கள் சமஸ்க்ருதம் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.களத்தில்,நிஜத்தில் தோற்ற சித்தாந்த கோழைகளின் புலம்பலாகவே தெரிகிறது.

 • A.S.Subramanian - Sankaran Kovil,இந்தியா

  மணி திருவனந்தபுரம் தமிழ் சமஸ்க்ரிதம் இரண்டும் இந்தியாவின் சொத்துகள். இரண்டு கண்களில் எந்த கண் வேண்டும் வேண்டாம் என்பது விதண்டா வாதம். இரண்டு கண்கள் உள்ளவர்களுக்கு பார்வை நன்றாக இருக்கும். தமிழும் திருக்குறளும் வடநாட்டவர்கள் படிக்கட்டும். சமஸ்க்ரிதமும் ஆன்மீகமும் தென்னாட்டவர்கள் படிக்கட்டும். உத்தரபிரதேசத்தில் உள்ள விஜய் போன்றவர்கள் தமிழை படிக்க வடநாட்டவர்களுக்கு வாய்ப்பு வேண்டும் என முயற்சிக்கட்டும். நாமும் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். சமஸ்க்ரிதம் படிக்கக் கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்வோம்.

 • Raja - chennai,இந்தியா

  கருணாநிதிக்கு படிப்பறிவு இல்லை என்பது தான் இங்கு உணர படவேண்டிய ஒன்று. படித்தவர்களுக்கு தான் படிப்பின் அருமை தெரியும். காமராஜர் விதிவிலக்கு. அவர் தான் படிக்கவில்லையே என்ற ஏக்கத்துடன், இந்த நிலை மற்ற மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு இந்த நிலை வர கூடாது என்று எண்ணி பள்ளிகள் பல திறந்தார். இந்த படிப்பறிவு இல்லா கருணாநிதி, பள்ளிகள் இருந்தால் என்ன, நாம் பள்ளிகளை திறந்து வைத்துக்கொண்டே செயல் படாமல் முடக்குவோம் என்ற எண்ணத்துடன் தான் பள்ளியில், கல்லூரிகளில் அரசியலை புகுத்தி மாணவர்களை பல தலைமுறைகளை சீரழித்து விட்டார். ஏழை பாழைகள் படித்து முன்னேறி விட்டால் தானும் குடும்பமும் பிழைக்க முடியாது என்ற குறுக்கு புத்தி காரணமாக ஹிந்தியும், சமஸ்கிருதமும் வேண்டாம் என்கிறார். மொழி என்பது அறிவை தரக்கூடியது. இரண்டு மொழி தெரிந்தவன் இரண்டு மனிதர்களுக்கு சமம் ஆகிறான். இந்த வயதில் "சவுக்கை தூக்கு" என்று கீழ்த்தரமாக ரவுடி தனமாக பேசுவது வெட்கப்பட வேண்டிய செயல்.

 • Raju raju - Tirupur,இந்தியா

  நாளுக்கு நாள் கருணா நிதியின் பேச்சுகள் எல்லை மீறிப் போய்க் கொண்டு இருக்கிறது. வயதிற்கேற்ற புத்தி இல்லை.முதலமைச்சர் பதவி கிடைப்பது கானல் நீராகி விட்ட விரக்தி. நாங்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதை சொல்ல இவர் யார்? சபாஷ் சரியான வேட்டை கிடைத்து விட்டது கிழவருக்கு, சொல்லவா வேண்டும். அமைதியை தேடி செல்ல வேண்டியது தானே. தமிழன் உம்மை நினைக்கும் அளவிற்கு நீர் நடக்க வேண்டும்.

 • Ramamurthy Natarajan - Chennai,இந்தியா

  சமஸ்க்ரிதம் கலை, இலக்கியம், வானசாஸ்திரம், மருத்துவம் , அரசியல் மற்றும் எல்லாவற்றையும் கொண்ட மொழி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விரும்பி கற்பிக்கபடுகிறது. சமஸ்க்ரிதத்தில் உள்ள விஷயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதுடன் அவற்றிக்கான காப்புரிமையும் பெற முயற்சிக்கிறாக்கள். .இந்த நிலையில் அதை குறுகிய அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பது சுயநலமே தவிர வெரொன்றுமில்லை.தனது கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்போது இத்தகைய உணர்ச்சியை தூண்டுவது கலைஞருக்கு கலைவந்த கலை. இந்தமுறை மக்கள் எமாற மாட்டார்கள்.

 • mv murugan - coimbatore,இந்தியா

  இனிமேல் கருணாநிதியின் (கட்சியின்) மது தொழிற்சாலையிலிருந்து பாண்டிச்சேரிக்கு சரக்குகள் சப்ளை செய்யப்படும் ' என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்:

 • jaihindo - SG,சிங்கப்பூர்

  எப்போது தான் இந்த மஞ்ச துண்டில் இருந்து தமிழ் நாட்டுக்கு விடுதலை கிடைக்குமோ ? இவர்களுக்கு அந்நியமொழி, அரபி, உருது, hebrew வேண்டும் . ஆனால், இந்தியாவில் தோன்றிய சமஸ்க்ரிதம் வேண்டாம் .. நல்லா இருக்கே கதை ..

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இப்படியே பேசிக்கிட்டு இருங்க...மக்கள் உங்களை ஓட ஓட விரட்டுவார்கள்.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  அவர் என்ன செய்வார் பாவம்.தள்ளாத வயதிற்கே உரிய குறைகள் இருக்க கூடும். அவர் சொன்னதே அவருக்கு மறந்து விடுகிறது. சென்ற தேர்தலுக்கு முந்திய தேர்தலிலேயே அதுதான் தனக்கு கடைசி தேர்தல் என்றார். ஆனால்,ஆசை யாரை விட்டது. மீண்டும் முதல்வர் ஆவோம் என்ற நப்பாசையில் மீண்டும் மீண்டும் தேர்தலில் நின்றார்,வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் துரதிருஷ்டம் அவர் கட்சி தி(ருக்குவளை) மு.க(ருணாநிதி)கட்சி வெற்றிபெறவில்லை. எதிர்கட்சி தலைவராக போக வேண்டும் என்றால் சட்ட சபையில் பல இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டும்.ஆகவே சந்தர்ப சூழ்நிலைகளின் நிர்பந்தம் காரணமாக ஸ்டாலினை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.அவருக்கு பொழுது போகவேண்டுமே."IDLE MIND IS DEVIL"S PARADISE " நிறைய பொழுது கைவசம் உள்ளது .அவரும் என்ன செய்வார் பாவம்.தானும் இருக்கிறேன் என்பதை மக்களுக்கு உணர்த்த எதாவது அவருக்கு தோன்றியதை எழுதுகிறார்.நாமும் தினமலர் படிப்பதால் இவர் எழுதுவதையும் படிக்கவேண்டி உள்ளது ( இதுவும் ஒரு வகையான திணிப்பு ) நாமும் படிக்காமல் விட்டுவிட்டால் நமக்கும் பிரச்சினையே இல்லை.

 • இளங்கோ - chennai,இந்தியா

  சமஸ்க்ருதம் என்றாலே இவருக்கு உடனே பிராமண எதிர்ப்பு தான் நினைவுக்கு வரும். அக்ரஹாரத்தை எதிர்ப்பதில் காட்டிய தீவிரத்தை இவர்கள் தாழ்த்தப்பட்டோர் சேரிகளை புனரமைத்து முன்னேற்றுவதில் காட்டவேயில்லை. இரு தரப்பினரும் இந்து மதத்தின் அங்கங்களே. இவர் பிராமணர்களை எதிர்ப்பதும் தாழ்த்த பட்டவர்களை ஒப்புக்கு ஆதரிப்பதும் சமூக நல்லிணக்கத்தை விரும்புவது போல் காட்டிக்கொள்ள மட்டுமே. மொத்தத்தில் இந்த திராவிட இயக்கங்களின் கொள்கை இந்து மதத்தை பலவீன படுத்துவதே.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம். ஒரு ஏரிக்கும் வேலை செய்யும்.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  தற்போதிலிருந்து தமிழுக்கு உண்மையான சேவை செய்ய ஆரம்பியுங்கள் .இன்னொரு மொழிக்கு ஊறுவிளைவிக்க சதி செய்வதை விடுத்து அரசியல் கலப்பில்லாத,பண ஆதாயமில்லாத இலக்கிய சேவை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

 • RP Iyer - Bengaluru,இந்தியா

  நீங்கள் முதலில் உங்கள் பெயரை தமிழ்படுத்துங்கள்

 • manikandan s - COIMBATORE ,இந்தியா

  ஒரு மொழியை கற்றுகொள்வது தவறு இல்லை. கட்டாயமாக படிக்க வேண்டும் என்பது தான் தவறு. எதுவேண்டும் எது வேண்டாம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் தமிழ் மூலம் அனைத்து மாநிலமும் போக முடியாது இங்கிலீஷ் அல்லது ஹிந்தி இருக்க வேண்டும் தமிழ் மூலம் ஒரு தேர்வு எழுத முடியாது

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  அதுதான் இளைய பாப்பான்கள் நாட்டை விட்டே ஓடிவிட்டான்களே . அந்த கிழத்துக்கு இது மிகப்பெரிய வெற்றி .தமிழை தமிழ் என்று சரியாக உச்சரிக்க தெரியாத தமிழன் தான் இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறான் அவன் திமுக வாக இருக்கட்டும் அதிமுக வாக அல்லது இளங்கோவனின் காணாமல் போன காங்கிரெஸ்காரனாக இருக்கட்டும் தமிள் வாள்க என்று தான் அவர்கள் வாயில் வரும் . ஏன் இந்த முத்தமிழை வித்தவர் தமிழர் என்று கூறிக்கொள்பவர்களுக்கு சரியான உச்சரிப்பை கற்றுகொடுக்க வேண்டியதுதானே . 1967 ம் ஆண்டு முதல் நமது மக்கள் வடிகட்டிய முட்டாள்கள் ஆக்கப்பட்டார்கள் . இதற்கு மூல காரணம் திமுக தான் . நம் மக்கள் தமிழையாவது ஒழுங்காக படித்தார்களா , அதுவும் இல்லை . இந்த பெரியாரும் திமுகவும் பார்ப்பனனை தமிழ் நாட்டில் இருந்து விரட்டினார்கள் . இந்த பார்ப்பனனை தவிர மீதி அத்தனை பேரும் கைநாட்டு .பார்ப்பனன் நன்கு படித்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று நன்கு சம்பாதிக்கிறான் . அதுவும் இந்த கிழத்துக்கு எரிச்சல் . இனி ஒரு பார்ப்பானும் தமிழ்நாட்டுக்கு திரும்ப மாட்டான் .

 • ethir vinai - Seoul ,தென் கொரியா

  பார்ப்பனர்களை எதிர்ப்பதாக நினைத்து, தமிழனை சமஸ்கிருதம் படிக்க விடாமல் செய்வது கேடுகெட்ட சதி

 • Arbhas Khan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தலிவா தமிழ் நாட்டில் எங்கள் உருது மொழியை ஆட்சி மொழி ஆக்குங்கள் .. ஒரே கல்லில் 2 மாங்காய்.. பார்பணனும் இந்து மதமும் ஒழியும்.. இரண்டாவது இஸ்லாம் ஓங்கி வளரும்.. இன்ஷா அல்லா..

 • ravi - chennai,இந்தியா

  அந்த மரியா தான் மாதவனாகவும் கோவிந்த் ஆகவும் வலம் வருகிறார் - வாங்கின கூலிக்கு நல்லா கூவுகிறார்

 • ravi - chennai,இந்தியா

  ஓடவிடுவோம் என்பதெல்லாம் ரௌடிதனமான பேச்சு - எவ்வளவு ரௌடித்தனம் முள்ளமாரித்தனம் அவர் ரத்தத்தில் ஊறி இருக்கிறது என்பதற்கு இது உதாரணம் - சித்ரகுப்தா கொஞ்சம் காப்பாத்துடா - ஜெய் ஹிந்த்

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  சமீபத்தில் twitter இல் migrationsaku என்ற தலைப்பு அதிகம் விவாதிக்க பட்டது.. இதற்க்கு கர்நாடகாவில் வேலை பார்க்கும் அனைவரும் அறிவார்கள் என்ன அர்த்தம் என்று.. எங்க ஊருக்கு வெளியுர்காரங்க வந்தது போதும் என்று புலம்பி தள்ளி இருந்தார்கள், அவர்கள் இப்போது ஹிந்தியை தமிழர்களை விட அதிகம் எதிர்க்கிறார்கள்.. namma metro திட்டத்தில் கூட ஏன் ஹிந்தியை கொண்டு வந்தீர்கள் என்று எதிர்க்கிறார்கள், அந்த அளவிற்கு ஹிந்தியால் படாத பாடு பாடுவிட்டனர் கர்நாடகாவினர். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், இங்கே நம்மவர்களும் பின் விளைவை அறியாமல் ஹிந்தி தவறில்லை என்கிறார்கள். ஆமா ஹிந்தி தவறில்லை தான், அதை நான் விரும்பி படித்தால், ஆனால் என்னை கட்டாயபடுத்தி படிக்க சொல்வதை எப்படி ஏற்பது? ஹிந்தியை ஏன் எதிர்த்தார்கள் 1965இல்? ஏன் என்றால் Language act என்று கொண்டுவந்து கட்டாயம் ஆகினார்கள், அதற்காக.... என்ன தவறு? எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஹிந்தியை கட்டாயம் படிக்க சொல்ல நீங்கள் யார்? ஹிந்தியை விரும்பினால் படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் யார் போராட போகிறார்கள்?

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  கிளர்ச்சி செய்ய தூண்டுகிறாரா? ஹிந்தி எதிர்ப்பு மூலம் அந்நாளைய மாணவர்களை தூண்டிவிட்டு ஆட்சியில் அமர்ந்து 1968 முதல் சுமார் 48 ஆண்டுகளில் பெரும் சொத்து மக்கள், மருமகன், மருமகள், பேரன், கொள்ளுப்பேரன் பேத்தி,கொள்ளு பேத்தி என்று அனைவருக்கும் சேர்த்து வைத்து சொகுசாக வாழ்கை வாழ்ந்து கொண்டு பொழுது போகாத போது எல்லோரையும் திட்டிக்கொண்டும், தூண்டிக்கொண்டும் இருப்பவர் சொல்வதைக்கேட்டு பின்னே ஓடிவர எந்த முட்டாளும் தயாராக இல்லை.

 • $$$$ - $$$$,இந்தியா

  தாத்தா...இது ரெம்ப ஓவர்....

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  நான் ஜெ ஆதரவாளன் என்றாலும், இந்த பிரச்சினையில், திரு கருணாநிதியை நான் ஆதரிக்கிறேன்... முன்பு இப்படி தான் இந்தி மொழியை திணித்து காங்கிரஸ் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வியது.... காமராசரே, காங்கிரசின் கொள்கைகளால் தோற்கடிக்கபட்டார்...அதுபோல சமஸ்கிருதத்தை திணித்து, தமிழகத்தில் ஏற்கனவே கோமாவில் இருக்கும், பாஜக, தமிழகத்தில் சுவடே இல்லாமல் அழிய போகிறது.... தமிழகத்தை மற்ற மாநிலங்களை போல எடைபோட்டால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் தீண்டத்தகாத கட்சிகளாக மாறும்... இது உறுதி.... தமிழ் எமது சுவாசம்... ஆங்கிலம் எமது உணவு.... வேலை வாய்ப்புக்கு ஆங்கிலம் போதும்... இரண்டும் இருக்க எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜுகள் இந்தியும், சமஸ்கிருதமும்?...

 • Bharathi - bangalore,இந்தியா

  இந்த விசயத்தில் கருணாநிதியின் நிலைப்பாடு சரி என்றே தோன்றுகிறது. டெல்லி தெருக்களில் பெயர் பலகை ஹிந்தி, இங்கிலீஷ், உருது என இருந்தது. ஏற்கனவே முன்று மொழிகளில் இருந்த பெயர் பலகையில் நாலாவதாக தற்போது சமஸ்க்ருதம் நுழைக்கப்பட்டு இருக்கிறது. மொழியின் அருமையை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நம்மை விட அருமையாக உணர்ந்துள்ளார்கள். ஒரு இனத்தையோ அல்லது மொழியையோ போர் முலம் அழிக்கலாம். இன கலப்பு முலம் அழிக்கலாம் அல்லது திணிப்பு மூலம் அழிக்கலாம். இங்கு நடப்பது என்ன? நமக்கு அடிமை புத்தி. முதலில் தமிழை முழுவதுமாக கற்று கொண்டு, பிறகு, மத்திய ஆசியா மொழிக்கு வரவேற்பு தரலாம். தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல. உலகின் தொன்மையான நாகரிகத்தின் அடையாளம். இலக்கிய வளம் நிறைந்தது. சமஸ்க்ரிததைவிட செழுமை வாய்ந்தது. அதை முதலில் ஒழுங்காக படிப்போம். காப்போம். தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில், நமது பாட்டன் கட்டிய கோவில்களில் கூட தமிழில்லை. முதலில் தமிழை காப்போம். அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்வோம், பிறகு, சமஸ்க்ரிதம் கற்க்கலாம். சமஸ்க்ரிததிற்கு கொடி பிடிபவர்களுக்கு ஒரு கேள்வி. வேதம் சமஸ்க்ரிதத்தில் உள்ளது. அதை உங்களுக்கு சொல்லி தருவார்களா? மாட்டார்கள்...இதையெல்லாம் தெரிந்து கொள்ளலாமல் கருணாநிதி ஏதோ எதிரி போல சித்தரிக்காதீர் தமிழர்களே.இந்த ஒரு விசயத்தில் அவரின் நிலைப்பாடு சரியானதே

 • ravi - chennai,இந்தியா

  கிழவரே - நீங்கள் இப்போ ஓவர் டைம்லதான் இருக்கீங்க - கண்ணா பின்னா நு பேசாதீங்க - மக்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டு மாறன் சகோதர கொள்ளையர்கள் எப்படி ஹிந்தி கற்றுக்கொண்டார்கள் - மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள் - எதை கற்றுக்கொள்வது எதை போற்றுவது என்பதை கோல்மால்புரம் நிர்ணயிக்க வேண்டாம் - கொள்ளை அடித்த பல லட்ச கோடிகளை மக்களுக்கு திருப்பி தாருங்கள் - அது தான் உங்களுக்கு இருக்கும் கடமை - அதை விட்டுவிட்டு மக்களை தூண்டிவிடும் வேலைகளை செய்யாதீர்கள் - மக்களை மூடர்களாக்காதீர்கள் - நீங்கள் யார் - தமிழின துரோகிக்கு இங்கு என்ன வேலை - என்னவோ வயசானவராச்சேநு மக்கள் மதிக்கிறார்கள் - கொஞ்சம் வாயை மூடும் - எங்களுக்கு வேலை இருக்கிறது - நீங்கள் எந்த அறிவுரையும் சொல்ல தேவையில்லை - நீங்கள் அவ்வளவு பெரிய அப்பா டக்கரும் இல்லை - வெறுப்பா இருக்கு - முடிந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு யோசனை இருந்தால் சொல்லுங்கள் - உங்கள் ஆட்களை ஊழல் லஞ்சம் இல்லாம ஆட்சி செய்ய சொல்லுங்க - திமுக வந்ததில் இருந்து சைதாபேட்டையில் குறிப்பாக சின்னமலையில் பாதுக்காப்பே இல்லை - சிக்னல் இல்லை - எங்கு பார்த்தாலும் உங்கள் ஆட்கள் தான் உலாவுகிறார்கள் - அவர்களுக்கு நல்லதை சொல்லி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யசொல்லுங்கள் - இல்ல என்றால் மா சு அவர்களுக்கு என்ன வேலை - ஜெய் ஹிந்த்

 • Prakash - Chennai,இந்தியா

  கிழவா முதலில் உங்களுடைய குடும்ப தொல்லைகாட்சிகளில் தமிழை கொலை செய்வதை நிறுத்தும் வழியை பாரும். வடமொழி, ஆரியம், திராவிடம் என்று வெறுப்பு அரசியலை வளர்க்கும் குள்ளநரி தந்திரத்தை இந்த வயதிலாவது விட்டு ஒழித்தால் என்ன கேடு? போய் சேரும் வயதில் புண்ணியமாவது கிடைக்கும்.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  உண்மையை சொல்லிறவா? இவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் பிராமணர் அல்லாத தமிழர் எல்லோரும் திறன் இல்லாதவர்கள் அவர்களால் வேற்று மொழியை கற்க முடியாது என்று. inferioroty காம்ப்ளெக்ஸ் யை இவரே வளர்த்து இவர் யாரை தமிழன் என்று நினைக்கிறாரோ அவர்களெல்லாம் பின் தங்கி விடுவார்கள் என்று நினைத்து இப்படி கூவுகிறார்.தமிழனை இவ்வாறு சிறுமைப்படுத்தும் முகவை நாட்டை விட்டு நாம்தான் ஓட 0ட விரட்ட வேண்டும். செய்வார்களா தமிழர்கள்?

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  சில காவி டவுசர்கள் சமஸ்கிருதத்தை எதிர்ப்பது அம்பேத்கரை இழிவுபடுத்துவது போல் என்று சொல்கிறார்கள், அவர்கள் அறிவார்களா அம்பேத்கர் நடு ரோட்டில் சாதி பாகுபாடு முக்கியம் என சொல்லும் manusmirti யை கிழித்து போட்டதை? ஆனால் காவிகளின் சித்தாந்த குரு என்று வர்ணிக்கப்படும் Golwalkar சாதி பாகுபாட்டை போதிக்கும் Manusmirti மிக அவசியம் என்று வாதிட்டவர் என்பதையும் அறிவார்களா? இவர்கள் அம்பேத்கர் பற்றி சொல்வது நகைப்புக்கு உரியது..

 • spr - chennai,இந்தியா

  இந்தியிலும் ஆங்கிலத்திலும் கனிமொழிக்குள்ள திறமை ஸ்டாலினுக்கு இல்லாத காரணத்தால் அவர் ஒரு மாநில முதல்வராகக் கூட வாய்ப்பில்லை என எண்ணிய இந்த சுயனலவாதியை ஒரு நிமிடம் மறந்து விடுங்கள் அண்மையில் மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவ ஏற்ற பொழுது கூட இவர் செய்ய மறந்த ஒரு செயலை வாடா மாநிலத்து அன்பர் செய்திருக்கிறார் அவரே உண்மையில் தமிழன் இவரே கேட்டுக் கொண்டபடி இவருக்கு தமிழக மக்கள் ஓய்வு கொடுக்க மறந்துவிட்டார்கள் ஆண்டவனாவது ஒய்வு கொடுத்தால் இது போல உளறாதிருப்பார் இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக, பாராளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில், வட மாநில எம்.பி. ஒருவர் திருவள்ளுவரின் ஆசி வேண்டிய அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. மழைக்காலக் கூட்டத்தொடருக்காகப் பாராளுமன்றம் (21.07.15) தொடங்கிய போது, (SYT:Students & Youth for Thiruvalluvar) "திருவள்ளுவர் மாணவர், இளைஞர் அமைப்பின்" தேசிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு தருண் விஜய் திருவள்ளுவர் திருஉருவப் படத்தையும், "தமிழ்த் தாயின் ஆசீர்வாதத்தையும், திருவள்ளுவரின் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன் வாழ்க தமிழ், வளர்க தமிழ்" என்ற வாசகங்களையும் கையில் ஏந்திப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். இது குறித்துக் கூறிய அவர், "திருக்குறளும், வள்ளுவரின் நெறிமுறைகளும் பாராளுமன்றம் செவ்வனே நடைபெற உதவட்டும் என பிரார்த்திக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் குறள் வழி நடந்தால் நாட்டின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் இம்மன்றத்தில் சுமுகமாகத் தீர்வு காணப்படும். தமிழன்னையும், திருவள்ளுவரும் அதற்கு துணை புரிய வேண்டுகிறேன்", என்றார். உத்தர்கண்ட் மாநிலத்தில் பிறந்த, தமிழ்ப் பின்புலம் ஏதுமற்ற வட இந்தியர்தான் திரு. தருண்விஜய் அவர்கள். மாநிலங்களவை (இராஜ்யசபா) உறுப்பினரான இவரிடத்தில் தமிழார்வம் மிகுந்து காணப்படுகிறது. திருக்குறளின்மீதும் பிற தமிழிலக்கியங்கள் மீதும் அளவுகடந்த ஈடுபாடுடையவராய்த் தெரிகின்றார். மாநிலங்களவையில், நம் தமிழகக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களெல்லாம் தமிழ்மொழிபற்றி ஏதும் வாய்திறவாமலும், அப்படித் தவறி வாய்திறந்தாலும் பட்லர் ஆங்கிலத்தில் 'அம்மா' புகழ் மட்டுமே பாடுவது என்று இருக்கும்வேளையில், இந்த மனிதர் மிகத் துணிச்சலாகத் திருக்குறளின் சிறப்பை அங்கே முழங்குகிறார் தமிழை இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். இவருடைய தமிழார்வத்தை அறிந்த தமிழக மக்களும், இலக்கியவாதிகளும், திமுக முதலிய அரசியல் கட்சிக்காரர்களும் இவரைப் பாராட்டத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில்கூட இவர் தமிழின் பெருமை பற்றிப் பேசிச் சென்றிருக்கிறார் வள்ளுவத்தின் பெருமை பரப்பும் 'SYT' தேசியத் தலைவர் திரு. தருண் விஜய் அவர்களைப் பாராட்டுவோம்

 • kumar - chennai,இந்தியா

  கடவுள் இவருக்கு ஒரு தண்டனை கொடுத்து விட்டார். எழுந்து நடக்கவே முடியவில்லை. இன்னும் ஏன் பாவங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்

 • Karthi - Fahaheel,குவைத்

  நான் எந்த மொழி கற்க வேண்டும். கற்க கூடாது என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை அய்யா கட்டுமரம். கேரளால பாருங்க எல்லாரும் ஹிந்தி கத்துக்கிறான். நம்ம தலைவர் தமிழை தவற வேற மொழி கத்துக்க கூடாதுன்னு சொல்லுறார் ஆனால் அவங்க பேரன் ஹிந்தி ல பாராளுமன்றம் ல பேசுறார். ஆக மொத்தம் ஏழைகள் நாங்கள் முன்னேறிட கூடாது அதானே தலைவா உங்க என்னம்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  உதயசூரியன் எனும் வடமொழிப் பெயர் சின்னத்துக்கு வாக்கு கேட்டபோது அது சம்ஸ்க்ருத சொல்லாகத் தெரியவில்லையா? அதனைத் தமிழ்ப் படுத்தி எழுஞாயிறு சின்னம் என்று ஓட்டுக் கேட்பதுதானே? ( எழுஞாயிறுக்கு ஓட்டுன்னு கேட்டா ஏதோ எருமைய கேக்கறாருன்னு நெனச்சு அம்போன்னு விட்டுடுவாங்கன்னு பயமோ என்னவோ?)

 • Vaal Payyan - Chennai,இந்தியா

  சமஸ்க்ரிதம் ஒரு கணினி மொழி .... பைனரி எனப்படும் கணினி மொழி சமஸ்க்ரித மொழி கற்றால் எளிதாய் புரியும் என்று அமெரிக்காவில் சமஸ்க்ரிதம் படிக்கிறார்கள் ... நாசா வில் சமஸ்க்ரிதம் படிக்க சொல்லுகிறார்கள் ... இவர் பேச்சை கேட்டு ஏற்கனவே ஹிந்தியை படிக்காமல் குண்டு சட்டியில் குதிரை ஒட்டி கொண்டு இருக்கிறோம் ஆனால் இவர் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆங்கிலம் , ஹிந்தி படித்தார்கள் ... தமிழ்நாட்டையே வளர விடாமல் செய்த கூட்டம் இது ....

 • Bairava Subramanian - Chennai,இந்தியா

  ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் செய்து தமிழ் நாட்டை குட்டிசுவர் ஆக்கியது போதாதா? .

 • Jaya Ram - madurai,இந்தியா

  இவருக்கு பொழுது போகவேண்டும் அதற்காக கட்சிகாரர்களை தூண்டிவிட்டு நானும் தலைவர் இருக்கிறேன் என்பதை அவ்வப்போது காண்பிக்க வேண்டும் இல்லையென்றால் ஸ்டாலினை தலைவராக்கி விடுவார்கள் என்ற பயம் தான் காரணம் இல்லியா தலிவா ?

 • sudarsan - chennai,இந்தியா

  ஸ்டாலின் சார் உங்க அப்பாவை கொஞ்சம் சும்மா இருக்க சொல்லுங்களேன் ப்ளீஸ்.

 • kumaran - madurai,இந்தியா

  உங்க குடும்பத்தில உள்ள யாருக்கும் ஹிந்தி தெரியாது என்று உறுதி கூறுங்கள் இனிமேல் எந்த காரியத்திற்கும் தமிழ்நாட்டை விட்டு எந்த காரியத்திற்காகவும் இந்தியாவிலோ வேறு எங்கும் செல்லமாட்டோம் என்று உறுதி கூறினால் மட்டுமே உங்க பேச்சுக்கு காது கொடுத்து கேப்போம் தல எங்களுக்கு நெறைய வேல இருக்கு உங்களுக்கு வேற வேலையே இல்லையா?

 • Bharatha Dhasan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  ஓட ஓட விரட்டப்பட வேண்டியது தமிழின் பெயரால் பிழைப்பு நடத்தி உலக கோடீஸ்வர குடும்பங்களில் ஒன்றாக உள்ள, ஆதரவளித்த மக்களையே ஒட்டுண்ணி போல் இருந்து அவர்கள் ரத்தத்தை உறிஞ்சி குடித்து வெட்கமில்லாமல் பதவி மட்டுமே இலக்காக வைத்து அரசியல் என்ற பெயரில் தனது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொண்டு திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் தான்.

 • Kumar - Kuwait City,குவைத்

  இவரு பதவிக்காக, தன் அல்லது தன் குடும்பத்தின் சுயநலனுக்காக எந்த கீழ்த்தரமான வேலையும் செய்ய தயங்க மாட்டார், மொழி, ஜாதி வெறியை தூண்டி இவர் செய்யும் அரசியலையும், இவரையும் புறக்கணிப்போம்.

 • சூத்திரன் - Madurai,இந்தியா

  காவி டவுசர்கள் சொல்கிறார்கள் தமிழில் பெரும்பாலான வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்று, சமஸ்கிருதம் இந்திய மொழியே அல்ல முதலில் அது இந்தியாவில் பதிவிட படுவதற்கு பல ஆண்டுகள் முன்பே சிரியாவை ஆண்ட Mitanni சாம்ராஜிய மன்னர்கள் பதிவிட்டு விட்டனர் என்பது உலகறிந்த உண்மை, சமஸ்கிருதத்தை இந்திய மொழி என்றால் வெளி நாட்டவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள். முதலில் ஒரு மொழியின் தொன்மை அதன் எழுத்துக்களால் நிர்ணயிக்கபடுவது இல்லை, ஆப்பிரிக்காவில் பல பழங்குடி இனத்தவர்கள் பேசும் மொழிக்கு எழுத்துக்களே கிடையாது, அதனால் அவற்றை விட ஆங்கிலம் பழமையான மொழி ஆகிவிடுமா? ஒரு மொழியின் தொன்மை அதன் archaic sound in words இருந்து கணிக்க படுகிறது, இந்திய தமிழர்கள் பேசும் தமிழை விட இலங்கை தமிழர்கள் பேசும் தமிழில் archaic sounds அதிகம், இந்த சத்தத்தை வைத்து தான் தமிழ் பழமையான மொழியாக இருக்கலாம் என்று சர்வதேச வல்லுனர்கள் எண்ணுகிறார்கள். இதை மறைத்து காவி டவுசர்கள் சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது போல கதை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் cameroon நாட்டில் உள்ள Mofu பழங்குடிகள் பேசும் மொழியில் அதிக தமிழ் வார்த்தைகளே காண முடியும். இணைய தளத்தை பயன்படுத்தி யாரும் அவர்கள் பேசும் மொழியை கேட்டு உண்மையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 • Vithi - Chennai,இந்தியா

  ஆம் துாயத் தமிழ் மொழி தான் நம் வாழ்க்கையிலே இருக்கவேண்டும் எப்படி என் மகனுக்கு ஸ்டாலின் என்று தூய தமிழில் பெயர் வைத்தேனோ, எங்கள் குடும்ப தொலைகாட்சிக்கு சன் டிவி என்று தூய தமிழில் பெயர் வைத்தேனோ, வாழ்நாள் உழைப்பை எல்லாம் கொட்டி ஜெட் ஏர் வேஸ் ஐ விலைக்கு வாங்கி தூய தமிழில் பெயர் மாற்றி வைத்தேனோ அதை போல். தமிழுக்காக இவ்வளவு உழைத்தும் சிலர் என்னை ஏசுகிறார்கள், ஹிந்தி எதிர்ப்பில் என்னோடு துணை நின்ற அறிஞர் பெருமக்கள் இப்போது காணோமே, இன்றைய மக்கள் பிற மொழி ஆதிக்கத்தால் சீரழிந்து விட்டார்கள்.

 • Pandian - Nellai,இந்தியா

  Generally Tamil people are very smart in work and more intelligent. In fact, tamilian are more intelligent than others in Inida. One good thing for tamilian are they are smarter in mathematic compare with other state people. these many good thing, many tamilian cant shine in India because not knowing Hindi. If you know Hindi you can use the complete opportunities available in India. Also leaning many languages is Asset for a person. So try to learn as much as languages It will really help you.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  வேறு யாருக்காவது இந்த எம் எல் ஏ பதவியைக் கொடுத்திருந்தால் அவராவது நாட்டிற்கு ஏதாவது நன்மை செய்யலாம், சட்டசபைக்கு செல்லாமல் சும்மாக இருப்பதால் வந்த வினைதான் இத்தனைக்கும் காரணம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி " தனிமையில் இருந்தால் இப்படிதான் மூளை இயங்குமாம்" சட்டத்தை கையில் எடுத்து கண்டவரை எல்லாம் வெட்டியது அந்த காலம், வெட்ட வருமுன்னே கைது செய்யப்படப்போவது இந்த காலம், அவனவன் ஒரு வேளை சோற்றிற்கு அல்லோலப்பட்டு வாழ்க்கையை எப்படி நடத்துவது , இது போன்று பேசுபவர்கள் வாழ்வதற்கு வரி கட்டுவதிலேயே காலம் போய்க்கொண்டு இருக்கும்போது எதற்கு மீண்டும் இந்த வன்முறைக் கலாசாரம், நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கேட்கலாமே, வந்தே மாதரம்

 • Arsath Ali - Malaysia,மலேஷியா

  ஹிந்தி மொழி நம்முடைய தேசிய மொழி. தமிழ் மொழி நம்முடைய தாய் மொழி. இரண்டையும் கட்டாய கற்க வேண்டிய மொழியாக கொண்டு வரப்பட வேண்டும். சமஸ்க்ரிதம் ஹிந்துக்களின் வேத மொழி. அதை விருப்ப பாடமாக கொண்டு வருவதில் தவறில்லை.அதை ஹிந்துக்கள் அனைவரும் கற்க வேண்டும்.மற்ற மதத்தினர் கற்க வேண்டிய அவசியம் இல்லை. திணிப்பு கூடாது. இந்தியாவில் எங்காவது பேச்சு வழக்கில் உள்ளதா என்றால் இல்லை..

 • venkatasubramani - Cincinnati,யூ.எஸ்.ஏ

  சமஸ்கிருதமும் தமிழும் - நம் கருத்து - (இது முற்றிலும் என் சொந்த கருத்து. இதை படித்தவுடன், நான் தமிழை குறை கூறுகிறேன், ஆரியன் திராவிடன் என்று பாட நினைப்பவர்கள், தங்கள் சுவற்றில் பாடுங்கள்). பார்ப்பனர்களை எதிர்பதாக நினைத்து, தமிழனை சமஸ்கிருதம் படிக்க விடாமல் செய்வது கேடுகெட்ட சதி. எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. சமஸ்கிருதத்தை கற்காமல் இருப்பதால் நாம் இழந்தது என்ன என்று பார்ப்போமா. முதலில் மொழி என்பது இரு மனிதர்களுக்கிடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு கருவி மட்டுமே.. அதற்கு மேல் அதனை பெரிதாக பேசுவது கற்பனையே. தமிழ் மொழியில் வெளிவந்த மிக பழமையான புத்தகம் "தொல்காப்பியம்". இது அறிவியல் தொடர்பாக பேசவில்லை. அடுத்து நானறிந்த பழமையான தமிழ் புத்தகம், "திருக்குறள்". இது மனித வாழ்விற்கு தேவையான அறிவுரைகளை சொல்கிறது. அது தவிர வரும், அகநானூறு, புறநானூறு போன்றவை இறையை புகழ்வதும், ஆளும் அரசனை, தலைவனை புகழ்வதுமாக இருக்கிறது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களாக கருதப்படும் சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை மற்றும் சிலப்பதிகாரம் ஆகியவை அக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு அல்லது கற்பனையாக புனையபெற்றவை. இதில், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழர்களாலேயே இயற்றப்பட்டது. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன. இதனை வைத்து பார்க்கும்போது, அக்காலத்தில் அறிவியல் தொடர்பான புத்தகங்கள் இயற்றப்பட்டனவா இல்லையா என்பது கேள்விக்குறி. சமஸ்கிருதத்தை பற்றி பார்ப்போமா.. சமஸ்கிருத்திலும் பல இலக்கியங்கள் இருக்கலாம். ஆனால் தற்காலத்திலும் பயன்படத்தக்க பல கண்டுபிடிப்புகளை அந்த காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் சில வற்றை இங்கே பார்ப்போம். பைதொகிராஸ் தியரி - உலகமே பயன்படுத்தும் "பைதொகிராஸ் தியரியின்" மூலம் இந்தியாதான் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும். இந்தியாவில் வாழ்ந்த பவ்தாயனா என்பவர் 2800 வருடங்களுக்கு எழுதிய "பவ்தாயனா சல்பசுத்ரா" என்கிற கணக்கியல் புத்தகத்தில் இதை பற்றி விவரமாக குறிப்பிடுகிறார். உலகின் மிக பழமையான கணக்கியல் புத்தகம் இதுதான். பூமியின் வயது 5ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட மனுஸ்மிரிதி எனும் இந்துமத புத்தகத்தில் பூமியின் வயது பற்றிய குறிப்பு இருக்கிறது. பூமியின் வயதை, இந்து மத படைப்பு கடவுள் பிரம்மாவின் வாழ்க்கையை கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். அதன்படி, நாம் வாழும் இந்த பூமியின் வயது 430 கோடி வருடங்கள். நவீன அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்படும் வரை, பூமியின் வயதை 10 கோடி வருடங்கள் என்று ஐரோப்பியர்கள் எண்ணி வந்தார்கள். ஆனால் பிறகு பலவகை அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு பூமியின் வயது 454 கோடி வருடங்கள் என்று சொல்கிறார்கள். புவி ஈர்ப்பு புவி ஈர்ப்பை கண்டுபிடித்தது நியூட்டன் என்று நவீன அறிவியல் சொன்னாலும், இந்தியர்களின் வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே புவி ஈர்ப்பு பற்றியும், சூரியனை சுற்றி வரும் பூமி மற்றும் இதர கிரகங்கள் பற்றியும் சொல்ல பட்டிருக்கிறது. பூஜ்ஜியம நாம் இன்று பயன்படுத்தும் எண்களான 1 முதல் 9 வரை அரேபியர்கள் பயன்படுத்தியது என்று சொல்லபட்டாலும் இந்தியாவில்தான் அது உதயமானது என்று நம்பபடுகிறது. அதுமட்டுமல்லாது, பூஜ்ஜியம் எனும் எண்ணை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்ததும் இந்தியர்கள்தான். ரோமர்களின் கணக்கியலில் பூஜ்ஜியம் இல்லை. அதனால், அவர்கள் பல கணக்குகளில் தடுமாறினார்கள். ஆர்யாபட்டா எனும் இந்திய அறிஞர்தான் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தார். அது மட்டுமல்லாது, சதுரம், முவ்வகம் போன்ற 10 பரிணாமங்களை உலகுக்கு அளித்ததும் அவர்தான் என்று சொல்லபடுகிறது. இன்று உலகில் பயன்படுத்தும் இந்த 10 கணக்கியல் பரிணாமங்களின் பிறப்பிடம் இந்தியா. இது போல இன்னும் பல பல கண்டுபிடிப்புகளை இந்தியர்கள் அக்காலத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதில் முக்கியமானது "ரிக் வேதம்". சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது 10,600 பாடல்களை கொண்டது. இந்த வேதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அருமையை மேலைநாட்டவர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த ரிக் வேதத்தில்தான், சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம், சூரியனை சுற்றும் கிரகங்கள் என்று பல அரிய தகவல்கள் சொல்லபட்டிருக்கின்றன. அணுசக்தியை நவீன உலகம் கண்டுபிடுத்தது 18ம் நூற்றாண்டின் இறுதி / 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான். ருதர்போர்ட் என்பவர்தான் இதனை கண்டுபிடித்தார். முதலில் அதற்கு ப்ரோடான் என்று பெயரிட்டார். பின்னர் வந்த விஞ்ஞானி சம்ஸ் சாட்விக் என்பவர், அணுவுக்குள் இன்னொன்றும் இருப்பதாக சொல்லி அதற்கு நியுட்ரான் என்று பெயரிட்டார். கிறிஸ்து பிறப்பதற்கு 3200 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்ததாக சொல்லப்படும் பாகவத புராணத்தில், அணுவை பற்றியும் அதனை பிரித்தால் இரண்டு பிரிவாக பிரிப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதுவே அணு மற்றும் பரமனு என்று அழைக்க பட்டுள்ளது. முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடந்த ஏழு வருடங்களுக்கு பிறகு, விஞ்ஞானியும், சிந்தநியாலருமான ராபர்ட் ஆப்பன்ஹீம் என்பவர் ஒரு கருத்தரங்கில் பேசும்போது அணு ஆயுத சோதனை பற்றிய ஒரு கேள்விக்கு இப்படி சொல்கிறார். இதுதான் அணு ஆயுத வெடிப்பில் முதன் முறையா என்பது கேள்வி. அதற்கு ராபர்ட் கூறிய பதில், "ஆமாம், நவீன காலத்தில்". காரணம், அவர் சமஸ்கிருதத்தில் வெளிவந்த புத்தகங்களை ஆராய்ச்சி செய்தவர். பகவத் கிதாவில், ஒரு சுலோகத்தில் சொல்லப்பட்டதன் அர்த்தத்தை இங்கே பார்ப்போம். "ஆயிரம் சூரியன்கள் வானில் வெடிக்கும்போது வெளிப்படும் சக்தியானது எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்குமோ, அத்தகைய ஒரு அழிவை நான் தருவேன், அப்போது உலகம் அழியும்" என்று சொல்ல பட்டிருக்கிறது. இது போல இன்னும் பல பல தகவல்கள் சமஸ்கிருதத்தில் வெளிவந்த புத்தகங்களில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது. ஆனால், அத்தகைய அறிவு களஞ்சியத்தை, பார்ப்பனர்களை எதிர்ப்பதற்காக மட்டுமே, தமிழர்கள் அறிந்து கொள்ளகூடாது என்று சொல்வது எத்தகைய மனநிலை. தமிழனுக்கு மிக சீரிய சிந்தனை வளம் இருக்கிறது. அதனூடே, இத்தகைய அறிவு களஞ்சியங்களை கற்றறிந்து கொண்டால், இன்னும் பல ஆச்சரியங்களை தமிழன் வெளிக்கொணர முடியும். சுயநல கூட்டத்திடம் மாட்டி கொண்டு, முன்னேற முடியாமல் தவிக்கிறான் தமிழன்.

 • manivannan - chennai,இந்தியா

  முக்கியகாரணம் என்ன வென்றால் இவர் அப்பிப்ராயத்தில் சமஸ்கிரிதம் பாப்பானுடைய மொழி... அதான் ... எந்த விதத்திலும் பார்ப்பனன் மேலே வந்து விடக்கூடாது தமிழ் நாட்டிலிருந்தே விரட்டப்பட்டுள்ள பார்பனன் மொழி என்கிற பெயரில் மறுபடி தலை எடுத்து விட்டால்... அதான் அது ஒன்றுதான்...

 • K.Sugavanam - Salem,இந்தியா

  விளம்பரம்...அவ்வளவே...வேறொன்றும் இல்லை ..

 • manivannan - chennai,இந்தியா

  நம் BP ai எகிற வைப்பதே இவர் வேலை யாக போய்விட்டது. அவரவருக்கு வேண்டிய மொழியை படித்து விட்டு போகிறார்கள். இவர் ஹிந்தி யை எதிர்த்து தமிழ் நாட்டுக்கு செய்த கேடு போதும் போதும். அதுலே அதை மறக்க நாம் முயற்சி கிற வேளையில் என்னமோ காரியமாக நினைப்பூட்டுகிரார். . வெளிநாடுகளில் தமிழரை பார்த்து மற்ற எல்லாரும் உங்க நாட்டு மொழியை பேசும்பொழுது உங்களால் மட்டும் (என்னால் அல்ல நான் பேசுவேன்) ஏன் ஹிந்தி பேசமுடியவில்லை என்று கேட்கிறார்கள். ஒண்ணா ரெண்டா இவர் தமிழ் நாட்டுக்கு செய்த கேடுகள்... அதுலே இதுவும் ஒன்னு. இப்போவாவது பேசாமல் இருக்க கூடாதா... சமஸ்கிரிதம் மிகவும் அழகிய மொழி. ஷா , ஹ, ஜ கஷ போன்ற எழுத்து க்களை சரியாக உச்சரிக்க முடியாதவர் கள் தான் அதை எதிர்ப்பார்கள்...

 • S.Govindarajan. - chennai ,இந்தியா

  நாளுக்கு நாள் கருணா நிதியின் பேச்சுகள் எல்லை மீறிப் போய்க் கொண்டு இருக்கிறது. வயதிற்கேற்ற புத்தி இல்லை.முதலமைச்சர் பதவி கிடைப்பது கானல் நீராகி விட்ட விரக்தி. நாங்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதை சொல்ல இவர் யார்?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  நான் கழுவி ஊற்றிய கருத்துக்கள் எதுவுமே பிரசுரம் ஆகவில்லை. அப்படியென்றால் எந்த அளவுக்கு கழுவி ஊத்தி இருப்பேன் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

 • Vijay - Coimbatore,இந்தியா

  //தமிழை தவிர எந்த மொழியையும் அனுமதிக்க மாட்டோம்: கருணாநிதி//, அப்போ கனிமொழியை ஓட ஓட விரட்டி விட்டுறலாமா? தமிழ்நாட்டு மாணவர்களை (மக்களை) வளரவிடாமல் தடுத்து நிறுத்திய பெரும் பங்கு உமக்கு உண்டு. உன்போன்ற ஆட்களால் நாம் இன்னும் பல சுந்தர்பிச்சை களை இழந்துகொண்டிருக்கிறோம். அந்நிய மண்ணில் (பிற மாநிலங்களில் கூட) தமிழனை மொழி தெரியாத பிரச்சனையால், மூலையில் தேங்கி உட்காரவைத்த பெருமை உன்னையே சேரும். அப்போவே தார் டப்பாவை உன்னுடைய கிளர்ச்சியாளர்கள் மூஞ்சியில் பூசி விட்டிருந்தால் தமிழ்நாடு என்னைக்கோ தப்பித்து இருக்கும். இக்கால இளைஞர்கள் உன்னுடைய நயவஞ்சக பேச்சை கேட்க தயாராக இல்லை. பேசாம தார் டப்பாவை உன் குடும்பத்தார் அனைவர் கழுத்திலும் மாட்டி விட்டு டான்ஸ் ஆட சொல்லும். மானாட மயிலாட நிகழ்ச்சிக்காவது உபயோகமா இருக்கும்.

 • Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா

  'எவர் எதை படிக்க வேண்டும் படிக்க வேண்டாம் என்பதை அவரவர் முடிவுக்கே விட்டு விடுங்கள்', தவறில்லை. ஆனால் இந்த மூடர்கள் கூட்டம் புரிந்துக்கொள்ள தவறியது எதுவென்றால்,'கட்டாயப் படுத்தித் திணிப்பதைத்தான்'. படிப்பென்பது சுதந்திரமாக இருக்கவேண்டும். சில நுறு வருடத்திற்கு முன்னாள் தோன்றிய இந்தி, ஒரு 2 அல்லது 3 மாநில மக்களின் தாய் மொழியாக மட்டுமே இருக்கும் இந்த இந்தியை இந்தியாவின் ஒரே பெரிய தேசிய மொழியாக்கி தமிழைத் தேயவிடுவதுதான் தமிழனின் பரந்த அறிவாற்றலின் மனப்பாங்கோ? சற்றேனும் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்க்களய்யா. யார் தடுத்தார் நம் தலைநகரில் இயங்கிவரும் சேன்ஸ்கிரிட் கல்லூரியை? அதில் சென்று படிப்பதை தடுத்தால் தவறுதான், ஆனால் பள்ளிகளில் திணித்து தமிழ்மொழியை தள்ளி அழிக்கும் வேலைக்கு இடமளிக்கலாமா?

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  வடமொழியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து, ஒரு பெரும் கிளர்ச்சி, எப்படி கட்டாய இந்தியை எதிர்த்து, தமிழகத்தில் உருவாயிற்றோ, அதைப் போல வடமொழி சமஸ்கிருதத்தை எதிர்த்து, ஒரு கிளர்ச்சி, தமிழகத்தில் உருவாவதற்கு யாரும் காரணமாகி விடக்கூடாது" 90 வயது ஆனாலும் இன்னமும் போராட்ட குணம் மாறாமல் அதே இளமையாய் இருக்கும் இவருக்கு பாராட்டுக்கள். ஒன்றே ஒன்று இந்த வடமொழி பார்ப்பன மொழி அல்ல , அமர சிம்மன் என்ற ஜைன மத மன்னாரால் உருவாக்கப்பாட்டது, ஜைன மதத்தினரின் மொழியாகும், அந்த நிகண்டிர்க்குப் பெயரே "அமர கோசம்" எனவே நீங்கள் உங்கள் சைக்கிள் செயின், சோடாபாட்டில், பட்டா கத்தி,. இந்த கலாசாரத்தை யார் மீது காட்டப்போகிறீர்கள்., ? தற்போது பார்ப்பனர்களின் குடும்பம் மிக மிக பெரிதாகி பல ஜாதிகளில் கலப்பு திருமணம் செய்து கொண்டு விட்டதால் முன்புபோல் நீங்கள் செயல்பட்டால் மற்ற ஜாதி எல்லா மதத்தினரும் உங்களுக்கு எதிராக செயல்பட நேரிடும், எனவே நீங்கள் இரயில், பேருந்து இவைகளை மட்டுமே கொளுத்த முடியும், மக்களுக்கு சேவை செய்ய நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க ஒரு கட்சியின் தலைவர் அதுவும் 90 வயதுக்கு மேல் ஆகிறது, நாடு விஞ்ஞான வளர்ச்சி பெற்று எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது, அதுவும் ஒரு நல்ல காரியம் நடைபெறும் ஒரு திருமணத்தில் இதுபோன்று பேசுவது ,எவ்வளவு நாகரீகமான பேச்சு. இதேபோன்று ஒவ்வொருவரும் பேச ஆரம்பித்தால் நாடு தாங்காது, மொத்தத்தில் நாடு அமைதியாக இருந்தால் அரசியல் கட்சிகள் இருப்பதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்து வன்முறையில் ஈடுபட்டது , செயல்பட்டது எல்லாம், அந்த காலம், தற்போது காலம் மாறிவிட்டது, இன்றைக்கு எல்லோருமே சிறைக்கு செல்லத் தயாராக இருக்கிறார்கள், சாவுக்கும் துணிந்தவர்களாகி விட்டதால், எந்த அளவிற்கு இந்த வன்முறை அரசியல் தாக்கு பிய்க்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம், இவருடன் பக்கவாத்தியம் வாசிக்க மற்றொரு இயக்கமும் கூட்டு சேரும் அப்போதுதான் இருக்கு வளர்ச்சி. சட்டம் தன கடமையை மிகக் கடுமையாக செய்தால்தான் இனி இந்த நாடு உறுப்புடும். நீதிமன்றங்கள் தன்னிச்சையாக செயல்பட்டு இதை முளையிலேயே தடுக்காவிட்டால் நாடு தாங்காது, இது ஏதோ குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான கருத்து அல்ல, தீவிரவாத போக்கிற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள் , வந்தே மாதரம்

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  சமஸ்க்ரததால் தமிழுக்கு ஆபத்து இல்லை. விரும்பிய மொழிகளை யாரும் படிக்கலாம். அலுவலக ரீதியால் இந்தி திணிப்பினால் ஆபத்து வரலாம். கட்டாயப்படுத்தினால் மட்டுமே எதிர்க்க வேண்டும். இந்த ஆள், சும்மா இருந்தால் மூலையில் போட்டு விடுவார்கள் என்று எதாவது புர்டா விட்டுக்கொண்டிருக்கிறார். இவருக்கு இந்துக்களை எதிர்க்க வேண்டும். இந்துக்கள் சாதுவானவர்கள், மடையர்கள் எது வேண்டுமானாலும் ஏற்றுகொள்வார்கள் என்ற நினைப்பில் சொல்கிறார். இந்துக்கள் சாஸ்திரம் பல சமஸ்க்ரிதத்தில் இருப்பதால் வெறுப்பை உமிழ்கிறார். இவர் மட்டும் அந்நிய மொழியான உருது, அரபி போன்றவைகளை எதிர்த்து பார்க்கட்டும், நடக்கிற சங்கதியே வேறே. காங்கிரஸ் காரனும் இந்த ஆளும் சேர்ந்து ஆட்சி செய்யும் போதும் இதே நிலைமை தான் இருந்தது. அப்போது பதவி சுகத்துக்காக சும்மா இருந்தார். தமிழ் வளர்ச்சிக்காக ஒரு மண்ணாங்கட்டியும் செய்யவில்லை. தமிழ் கலாச்சாரத்தை தமது தொலைக்காட்சிகள் மூலம் நாசம் செய்ததது தான் மிச்சம். தமிழை வைத்து நன்றாக வியாபாரம் செய்தார். கல்யாணத்தில பெருசுங்களை கூப்பிடுவது அவர்கள் ஆசி நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதகாகத்தான். இந்த மாதிரி அரசியல்வாதிகளை கூப்பிட்டு தகாத எதிர்மறை வாசகங்களை கேட்டால் மண வாழ்க்கை சிறக்குமா?.

 • Vaidhyanathan Sankar - chennai,இந்தியா

  senior kanhaiya kumar

 • SRIVIRAJA - SRVILLIPUTTUR,இந்தியா

  93 வயதுக்காறரு இப்பிடி தினம்தினம் கத்தினா உடம்புக்கு ஏதாவது ஆயிரபோவோது அவரை வாயை மூடச்சொல்லுங்க

 • R.Srinivasan - Theni,இந்தியா

  நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்குமாம்.....பெருசு உளறுகிறது.. தமிழ்தான் வாழ வேண்டுமென்றால் இதுவரை அதற்காக இவர் என்ன செய்து கிழித்து விட்டார்?.....தனது வாரிசுகளின் வாரிசுகள் இந்தி படிப்பது இவருக்குத் தெரியாதா?.....உன் மொழி பெரியதென்றால் அதை உலக நாடுகளின் மக்கள் அனைவரும் பேசும்படி .....ஏற்றுக் கொள்ளும்படி செயலில் இறங்க வேண்டும்.. அதை விடுத்து.....தார் பூசுகிறேன் என்ற பெயரில் தன் முகத்தில் கரியைப் பூசிக்கொள்ள வேண்டாம்.

 • உன்னை போல் ஒருவன் - Chennai,இந்தியா

  தி மு க ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் வந்தேறி மொழியான உருது அறிமுக படுத்தப்படும்னு ஸ்டாலின் சொன்னாரே அதுக்கு என்ன பதில் ? எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர் ?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று முழங்கிய 420 தத்தா உங்க கண்மணிகள் தமிழை தமில் என்று குதறும்போது எப்படி சும்மா விட்டீர்கள்? திமுக மாநாடுகளில் தமிழ் என்று சரியாக உச்ச்சரிப்பவர்களுக்கே அனுமதி என்று அறிவிக்கட்டும் வழக்கம்போல குவாட்டர் கோழி பிரியாணி கொடுப்பதாக அறிவித்தாலும் காலி மைதானம்தான் இருக்கும். வேறு எந்த மொழிக்ரகாரானாவது தமது மொழியின் பெயரை இப்படி கேவலப்படுதுவானா? தமிழில் முனைவர் பட்டம் வாங்கிய பல தெண்ட சோற்றுக் கழுதைகள்கூட தமில் என்றுதான் உச்சரிக்குது. இப்படி மானம் கெட்டத் தமிழன் வேற்று மொழியை விரட்டுவானாம். தமிழை சரியாகப் பேச எழுத வழியைக் காணோம்

 • Ambika. K - bangalore,இந்தியா

  தேர்தல் முடிவு வந்து 50 நாட்களில் 50 புலம்பல் இன்னம் 1800 நாட்கள் இந்த ஆட்சிதான் அவ்வளவு பொலம்பலுக்கு தலைவர் எங்கு போவார் இப்பவே கண்ணை கட்டுதே

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  கண்ணன் அவர்களே இந்த கலைஞரின் கருத்தியல் எல்லாம் பதவியில் இருக்கும்போது வெளிபடாது. 10 வருடம் மத்திய ஆட்சியில் பங்கு அப்போது இந்த கருத்தியல் நீரா ராடிய போன்றவர்களோடு பேரம் பேச போனதா.? நாமும் ஹிந்தி படித்து இருந்தால் மேலும் நன்றாக வளர்ந்து இருப்போம். இப்போது ஆந்திர, கர்நாடகா மற்றும் கேரளா மக்கள் எந்த விதத்தில் ஹிந்தி படித்தால் குறைந்து போய்விட்டார்கள்..? பெரும் கிளர்சியாம் நீங்கள் இந்த கிளர்ச்சியில் வந்து கலந்து கொள்வீர்களா..? இந்த ஆள் பதவியில் இல்லாததால் இந்த மாதிரி பேசிக்கொண்டு உள்ளார். அது சரி இந்த பூங்கோதை ஒரு போலீஸ் அதிகாரியை மிரட்டி அது ஊர் பூரா பரவி பதவி போனவர் தானே..?

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  கருணாநிதி தினமும் புலம்புவதால் அவருக்கு திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது அதனால் தான் இந்த பதிவு - கே.வி.எஸ்., என அழைக்கப்படும், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின், ஆளுனர்கள் குழும (போர்டு ஆப் கவர்னர்ஸ்) கூட்டம், நவம்பர் மாதம் 27ம் தேதி,2014 நடைபெற்றது. அப்போது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மனி மொழி ( ஜெர்மன் நாடு ஐரோப்பாவில் உள்ளது ) போதிப்பதை கைவிடுவது என்றும், அதற்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.வேண்டுமானால், ஜெர்மன் மொழியை, மாணவர்கள் கூடுதல் பாடமாக கற்றுக் கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவால், நாடு முழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருத மொழி கற்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமஸ்கிருதம் 3வது மொழியாக தான் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது இதை எதிர்க்கும் கருணாநிதிக்கு 10 கேள்விகள் - 1) அந்நிய மொழி - ஜெர்மன் மொழி படிக்க ஆதரவு தெரிவிக்கும் இவர் இந்திய மொழியான சமஸ்கிருதத்தை எதிர்ப்பதேன் ? 2) கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஹிந்தி, ஆங்கிலம் ஏற்கனவே கற்றுகொடுக்கபடுகிறது. இப்போது பிரச்சனை மூன்றாவது மொழியை பற்றி சமஸ்க்ருதமா? அல்லது ஜெர்மனா? என்பது தான் இதில் மொழி திணிப்பு எங்கிருந்து வருகிறது ? 3) ஒரு பேச்சுக்கு இப்போது CBSE பள்ளிகளில் சமஸ்க்ருதம் மொழியை கட்டாயமாக வைத்து விட்டால் கருணாநிதி அவர்களே உங்கள் வீட்டு பிள்ளைகளை தமிழ் மீடியம் பள்ளியில் சேர்ப்பீர்களா? அதுவும் அரசு பள்ளியில் ? 4) ஹிந்து துவேசம் என் சுவாசம் என வாழும் கருணாநிதி ஹிந்துக்களை திருடன் என கூறி ஏளனம் செய்தவர் ஒரு வேளை சமஸ்கிருதம் திருடர்களின் மொழி என முடிவு கட்டி விட்டாரோ ? 5) திமுக உறுப்பினர்களின் மகன்கள் /மகள்கள் மற்றும் பேரன் பேத்திகள் யாவருமே ஆம் ஒருவர் கூட இப்போது 2016 இல் ஹிந்தி மொழி படிக்கவில்லை என்று கருணாநிதி உறுதியாக கூறமுடியுமா ? ஏனென்றால் இவர் ஹிந்தி திணிப்பை எதிர்த்ததால் தமிழ் நாட்டில் இப்போது ஹிந்தி இல்லை என்றாகி விட்டதா ? 6) கருணாநிதியின் மனசாட்சி என அழைக்கப்பட்ட முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறனுக்கு ஹிந்தி நன்றாக தெரியும் என்பது கருணாநிதிக்கு தெரியுமா ? தெரியாதா ? 7) ஹிந்தி மொழி போராட்ட தியாகிகளுக்கு தாங்கள் வழங்கும் பென்ஷன் பணம் போன்று சம்ஸ்கிருத போராட்ட தியாகிகளாக மாற துடிக்கும் திமுக கழக உளுந்தம்பருப்புகளுக்கு sorry உடன்பிறப்புகளுக்கு வழங்கப்படுமா ? 8) ஹிந்தி திணிப்பு என்று கூறி மாணவர் போராட்டங்கள் மூலம் ஆட்சிக்கு வந்த போது கருணாநிதி அவர்களே உங்கள் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு ? இன்றைய 2016 இல் சொத்து மதிப்பு எவ்வளவு ? - 2 G ஊழலையும் சேர்த்து தான் 9)இப்போது சம்ஸ்கிருத எதிர்ப்பு மூலம் சுருட்ட விரும்பும் தொகை தோராயமாக எவ்வளவு ? - அதனை கணக்கிட பணம் எண்ணும் machinekal எத்தனை தேவைப்படும் உங்களுக்கு ? 10 ) கடைசியாக கருணாநிதி அவர்களே ஹிந்து கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று சொல்லும் நீங்களே தரும் ,- உங்கள் கைவண்ணத்தில் மிளிரும் கலைஞர் தொலைக்காட்சியின் ராமானுஜர் தொடரில் வரும் ராமானுஜருக்கு சமஸ்கிருதம் தெரியுமா ? தெரியாதா ? பதில் தெரிந்தால் கூறவும்

 • siva - Chennai,இந்தியா

  மற்ற மொழிகளை எப்படி விரட்ட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் நீங்களும் உங்க குடும்பமும் ஓடுங்கள் முதலில்

 • siriyaar - avinashi,இந்தியா

  This time should not use chappel use something else.

 • Ram - ottawa,கனடா

  முதலில் இந்த கெழடை ஓட ஓட விரட்டுவோம் .

 • rajan. - kerala,இந்தியா

  மஞ்சதுண்ட தலைல சுத்தி ஹிந்தி போராட்டம் ஆடி முடிச்ச தலை இப்போ வடிவேலு பாணில வேஷ்டிய தலைல சுத்தி போராடுமோ

 • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

  திமுக வில் குடும்ப அரசியலை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நடத்துவோமா என்று திமுக காரர்கள், தலைவர் போல் யோசிக்க ஆரம்பித்தால் ,பின் இவர் ஓட வேண்டியதுதான்.

 • Damu - Coimbatore

  தமிழ் நாட்டில் உள்ள மக்கள் யாவரும் இதுதான் செய்யவேண்டும் இதை செய்யக்கூடாது என்று சொல்வதற்கு இவர் யார் தமிழ் நாட்டை இவர் ஏக போக குத்தகைக்கு எடுத்துள்ளாரா அவரவற்கு அல்லது பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் எதைப் படுத்தால் நல்லது என்று நம்புகிறார்களோ அதை அவர்கள் செய்ய உரிமை இருக்கிறது இவர்கள் தமிழை வைத்து அதிகாரத்திற்கு வந்து கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்கள் மீண்டும் அதையே கையில் எடுத்து தமிழ் நாட்டை ஏமாற்றி பதவியை அடைய நினைக்கிறார்கள் இவர்களுடைய பேச்சுகளுக்கு மயங்க இன்று மக்கள் தயாராக இல்லை

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தமிழ் பேசும் புதுச்சேரியில் அந்நிய மொழி பிரஞ்சை வளர்க்க இவருடைய கூட்டணி அரசு அரசு உதவலாம் அருணாச்சல் பிரதேஷ் நாகாலந்து மாநிலங்களில் ஆட்சி மொழியாக நம்மை அடக்கியாண்ட அந்நிய மொழியான ஆங்கிலம் இருக்கலாம் அந்நிய மொழியான அரபியில் தோன்றிய உருது 5 மாநிலங்களில் ஆட்சி மொழியாக இருப்பதில் தவறில்லை ஆனால் இந்திய மொழிகளனைத்திலும் இரண்டறக் கலந்திருக்கும் சமஸ்க்ருதத்தை விரட்டுவாராம் இங்கு இடமில்லையாம் ஏன் உருதுவை விரட்டுவேன் ஆங்கிலத்தை விரட்டுவேன் என்று போராடட்டுமே இன்றுவரை தமிழை இங்கு முழுமையான ஆட்சி மொழியாக கொண்டு வரும் திராணியில்லாதவர் வெத்து உதார் விடுகிறார்

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எல்லோரும் அறிக தேசிய மொழிகளாக இந்தியா அரசமைப்பு சட்டம் 8 ஆவது பிரிவில் ( Schedule ) சொல்லப்பட்டுள்ள மொழிகளில் சம்ஸ்க்ருதமும் உண்டு அதனை எதிர்த்துப்போராடுவேன் அதனை உள்ளேவிடமாட்டேன் அடித்துத் துரத்துவேன் என்பது அண்ணல் அம்பேத்கார் போன்றவர்கள் வடிவமைத்த அந்த அரசியல் சட்டத்தையே மீறி கேவலப் படுத்துவதாகும் இது தண்டிக்கத்தக்க குற்றம் இன்றும் உத்தராகன்ட் மாநிலத்தில்(திருக்குறள் காவலர் தருண் விஜையத் தந்த மாநிலம்) அதிகாரபூர்வ ஆட்சி மொழிகளில் சம்ஸ்க்ருதமும் ஒன்று நமது மாநில ஆட்சி மொழியான தமிழை அடித்து விரட்டுவோம் என்று அம்மாநில மக்கள் சொன்னால் சும்மா இருப்போமா? இவர் பேசுவதையெல்லாம் பொறுத்துக்கொண்டு மத்திய அரசு வாளாவிருப்பது தவறு உடனே தேசதுரோக வழக்கு போடவேண்டும்

 • lingasamy sarma - Toronto,கனடா

  இன்னும் ஒரு மொழியை நாம் கற்றுக்கொள்வதில் என்ன தவறுள்ளது? வேற்று நாட்டு மொழியான ஆங்கிலம் கற்பதில் தமிழர்களுக்கும் கலைஞர் குடும்ப்பத்தர் உட்பட அனைவருக்கும் இருக்கும் ஆர்வத்தை இவர் என் எதிர்க்கவில்லை? ஒப்பிடுகையில் சமஸ்க்ருதம் ஒரு இந்திய மொழிளியல்லவோ? தேவையற்ற இந்த அரசியல் வேண்டாமே சமஸ்க்ருதம் ஒன்றும் திணிக்கப்படவில்லை. அதை எதிர்பதால் தமிழ் மேலதிகமாக வளர்ந்த்துவிடுமா? முதலில் ஆங்கில மோகத்தை தடுக்க உங்கள் கோஷங்களை,போராட்டங்களை நடாத்துங்களேன்

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  எப்படி தலைவரே அதை ஓட விடுவோம்? நம்ப கனிமொழி தயாநிதி மற்றும் எல்லா பெற பசங்களும் ஹிந்தி படிச்சு ஹிந்தியை ஓடவிட்ட மாதிரி ஆதித்யா தலைமையில் மற்ற எல்லா பேர பசங்கங்களையும் சமஸ்கிருதம் படிக்க விடுவோம்..........சமஸ்கிருதத்தை ஓட விட்டுடுவோம் என்ன? அப்போ தானே மகாராஷ்டிரா சேட்டுகிட்ட 200 கோடி கடன் வாங்க முடியும்?

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  வெட்டி ஆபிசரே, கண்ணனாரே உருது/அராபி என்ன தமிழக மொழியா, எதுக்காக உருது பள்ளிகள்?

 • K.N.Sridharan - Bangalore,இந்தியா

  வேலை இல்லாத அரசியல் வியாதி. என்ன பண்ணுவது .முதல் அமைச்சர் ஆகிவிடுவோம் என்று எதிர் பார்த்தார் . தனக்கு ஒரு மொழி தான் தெரியும் என்றால் வேறு யாருக்கும் இன்னொரு மொழி தெரியக்கூடாது. யார் எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் முடிவு செய்வார்கள். நடக்கவே முடியாதவர் ஓட ஓட விரட்டுவதா?

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  கருணாநிதி ஆதித்யா தயாநிதி கலாநிதி துர்கா இதெல்லாம் சுத்த தமிழ் பெயரா என்று யாராவது சொல்லுங்களேன்

 • kuppusamy - chennai,இந்தியா

  ஒரு மொழியை கற்றுகொள்வது தவறு இல்லை. கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதுதான் தவறு. எதுவேண்டும் எது வேண்டாம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் அரசியல்வாதிகள் அல்ல

 • Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்

  துாய தமிழ் மொழிக்கு தான் செல்வாக்கு, துாயத் தமிழ் மொழி தான் நம் வாழ்க்கையிலே இருக்க வேண்டும்.தூய தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் சென்னை சேரி தமிழ்,திருநெல்வேலி தமிழ்,டிஜிட்டல் தமிழ் ,சிங்கள தமிழ்,மலேசிய தமிழ்,இன்றைய சினிமா தமிழ், பாலிவூட் தமிழ் இவை தூய தமிழா? எனக்கு 1960 இல் தமிழை தமிழ் ஆசிரியர்கள் கற்பித்த தமிழையும் எழுத்துகளையும் மாற்றிய தி க தமிழ் தூய தமிழா? சம்ச்க்ரித மொழியில் இலக்கியங்களும் விஞ்ஞான பூர்ர்ணமான தகவல்களும் உள்ளது.அந்த மொழி புழக்கத்தில் இல்லை. நம் நாட்டில் புழக்கத்தில் இல்லாததால் அந்த மொழியிலுள்ள தகவல்கள் மண்ணாய் போகலாம். மனிதன் தன் உழைப்பினால் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு அறிய வைப்பதே மொழி . இதனால் எந்த மொழியையும் வளர்ப்பதை தடுப்பவன் முதலில் மொழி என்றால் என்னவென்று அறியாமல் அதை வைத்து அரசியல் பண்ணுபவன்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  ஒ....சொல்வது கருனாநிதியல்லவா....கட்டாயம் எதிர்த்துத்தான் ஆக வேண்டும். சமஸ்க்ருதம் இப்போது இல்லையா....? வழிபாடுகளிலும், நல்லது கெட்டதுகளிலும் முழங்கும் சமஸ்கிருத சுலோகங்களை, அதை கற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் வேத பாடசாலைகளை கருணாநிதி எதிர்க்கவில்லை என்பதை வசதியாக மறந்து விடுவோம். அரசு பணத்தில் நடக்கும் பள்ளிகளில் தேவையோ, இல்லையோ, பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை கருணாநிதி எதிர்த்தால் ஒன்று கூடுவோம் . அவருக்கு எதிராக வசைமாரி பொழிவோம்.

 • Siva Kumar - chennai,இந்தியா

  அய்யா முதலில் சென்னைவாசிகளை ஒழுங்காக நல்ல தமிழில் பேச சொல்லுங்கள். உங்கள் ஆட்சியில் நீங்கள் தமிழுக்கு என்ன மரியாதையை கொடுத்தீர்கள் என்று எல்லோரும் அறிவர்.

 • arun.subramaniyam - LA, Cali,இந்தியா

  தமிழை உருவாக்கியதே கருணாநிதி தான் என சொல்லாமல் இருந்தால் சரி ஸ்டாலின் என்ற சொல்லில் முதல் எழுத்து என்ன மொழியில் இருந்து வந்தது ??

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  கலைஞரை எதிர்க்கிறார்கள் என்று கூறுவது சரியல்ல.எடிர்க்கத்தக்க அளவு அவர் சக்தி கொண்டவரல்ல.அவர் மூலையில் உட்காரவைக்கப்பட்டு எத்தனையோ காலமாயிற்று.இது அவரது கடைசி கால புலம்பலே.

 • K.R.Ramakrishnan - Chennai

  கைகளில் தார் டின் பிரசை எடுத்து கொண்டு களவாணி கழகத்தினர் கிளம்பி விட்டனர் பழைய கால நினைப்பில் கிழடு உளறுகிறது

 • T.V. Natarajan - Seattle,யூ.எஸ்.ஏ

  ஆமாம், தமிழ் மக்கள் விரட்ட போகிறது ஏதோ உண்மைதான், அனால் அது உங்களைத்தான். துண்டு துணிய காணும்ன்னு விட்டு ஒடபோகிறது நீங்களும், ஒங்கள் குடும்பமும்தான். ரெண்டு election லே தோதாச்சு. இப்படி பேசியே ஊரை ஏமாத்திட்டு இவ்வளவு காலம் தள்ளிடிங்கே. இனிமே ஒங்கள நம்ப யாரும் தயாராக இல்லை.

 • Seetharaman Jeganathan - Melborne,ஆஸ்திரேலியா

  எவர் எதை படிக்க வேண்டும் படிக்க வேண்டாம் என்பதை அவரவர் முடிவுக்கே விட்டு விடுங்கள். 21 ஆம் நூற்றாண்டில் மக்கள் எவரையும் இன்னும் மாக்களாக என்ன வேண்டாம். சமஸ்க்ரிதம் தெரிந்தால் ஒருவர் நான்கு வேதங்களையும் அறிந்து கொள்ள முடியும் மற்றும் அதில் சொல்லப்பட்டுள்ள ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்த்த நுட்பங்களை அறிய முடியும். உதாரணமாக அண்டசராசரம் எப்படி உருவானது என்பதை ரிக் வேதத்தில் சொல்ல பட்டுள்ளது. அதை இந்திய மற்றும் மேலை நாட்டு மற்றும் அறிவியலாளர்கள் விஞ்ஞானத்துடன் தொடர்பு படுத்தி மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர். சமஸ்க்ரிதம் மற்றும் ஹிந்தி மொழிகழை இவ்வளவு எதிர்க்கும் நீங்கள் ஏன் உர்து மற்றும் பார்சிய மொழிகளை எதிர்பதில்லை. உங்களது வீணாய் போன அரசியலுக்காக இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை முட்டாள்களாக்க முயல்வீர்கள். தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து படித்து பிழைபதர்க்கு வழியன்றி வட மாநிலத்திற்கு சென்று நான் பணி புரிய வேண்டியதானது, அங்கு மொழி அறியாமல் நான் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஒரு முறை பஞ்சாப் மாகாணத்தில் பணி நிமிர்த்தமாக சென்ற பொது ஒரு சர்தார் என்னிடம் ஹிந்தியில் ஏதோ வினவ நானோ எனக்கும் தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் பதில் கூறினேன் அந்த சர்தார் என்னிடம் கேட்ட கேள்வி என் நெஞ்சை உலுக்கியது. இந்திய நாட்டில் பிறந்த உனக்கு நாட்டின் ராஜாங்க மொழி தெரியவில்லை நீ வெட்கப்பட வேண்டும் மற்றும் நீ ஒரு ஹிந்டுச்டனியா என சந்தேகம் வருகிறது என்று கேட்டார். வீர பாண்டிய கட்ட பொம்மனும் கப்பலோட்டிய தமிழனும் வாழ்ந்து மறைந்த அன்னைக்கு ஒப்பான தாய் தமிழ் நாட்டில் பிறந்து வளர்த்தான் எனக்கு அவரிடம் முறையாக நம் பெருமைகளையும் நம் முன்னோர்கள் இந்திய நாட்டிற்க்க செய்த தியாகங்களையும் அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்ல தெரியாமல் வெட்கி தலை குனிந்து நின்றேன். மக்கள் ஹிந்தி மற்றும் சமஸ்க்ரிதம் படித்தால் என்ன துன்பம் வந்து விட போகிறது தங்களுக்கும் தங்கள் கட்சியினருக்கும் ? பாரத பிரதமர் இந்திய சுதந்திர தினத்தன்று என்ன உரை நிகழ்த்துகிறார் என்று தமிழ்நாட்டு பாமர மக்களுக்கு தெரிய வேண்டாம் என இன்னும் எதன்னை ஆண்டுகள் தான் தடுப்பீர்கள் அய்யா ? நீங்கள் பணம் படைத்தவர்கள் மொழி பெயர்ப்பாளர்கள் கொண்டு மத்தியில் நடக்கும் ஆட்சி பற்றி அறிந்து கொள்வீர்கள் அனால் நாங்கள் என்ன பண்ணுவது ? ஒவ்வரும் மொழியும் நாட்டின் சொத்து அதை கற்றுக்கொள்ள ஒவ்வரு குடிமகனுக்கும் உரிமை உண்டு தயவுகூர்ந்து வாழ்ந்து முடித்த தாங்கள் இளம் சமுதாயத்தினரை மீண்டும் ஒரு முறை படு பாதாளத்தில் வீழ்த்ததீர்கள். வாழ்க பாரதம். வழர்க தமிழ் நாடு.

 • Ratan K - Chennai,இந்தியா

  "துாய தமிழ் மொழிக்கு தான் செல்வாக்கு, துாயத் தமிழ் மொழி தான் நம் வாழ்க்கையிலேஇருக்க வேண்டும்" - உங்கள் பேரப்பிள்ளைகள் எல்லாம் தூயதமிழில் தான் படிக்கிறார்களா, படம் எடுக்கிறார்களா.. உங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் தமிழில்தான் நடக்கிறதா.. அயோக்கியர்கள்..

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க நினைக்கும் உங்களையும் உங்களது குடும்பத்தினரையும் முதலில் தமிழ்நாட்டைவிட்டு விரட்டவேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பங்கள்

 • Raman - Lemuria,இந்தியா

  தமிழ் மொழியை வைத்து நீங்கள் சம்பாதித்ததை பார்த்து மற்றவர்களும் ட்ரை பண்ணுறாங்க ஐயா

 • Govind - Delhi,இந்தியா

  இறுதியாக நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்கிறேன் .. தமிழ் நாடு மட்டும் இந்தி ஆளுமைக்கும் கட்டாயத்திற்கும் எதிராக போராடாமல் இருந்தால் இங்கே வடக்கே இருப்பவர்கள் ஆங்கிலத்தை என்றோ விரட்டி அடித்து மொத்த இந்தியாவும் இந்தி மொழிகொள்கை கொண்டு வந்திருப்பார்கள். அதன் மூலம் இன்று நாம் பெருமையாக் சொல்லி கொள்கிறோமே என் பிள்ளை அமெரிக்காவில் இருக்கான் என் பொண்ணு அமெரிக்காவில் படிக்கிறாள் .. இவை யாவும் கானல் நீராக போயிருக்கும். உடனே சமஸ்க்ருதத்தை ஆட்சி மொழி ஆக்கி இருந்தால் இன்று வல்லரசாக ஆகிற இருக்கும் என்று முட்டாள் தனமாக உலருபவர்களிடம் நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை ..இல்லாத ஊருக்கு வழி கண்டுபிடிப்பது முட்டாள்தனம். மேலும் சீன, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு மொழியை கொண்டவை .. நான் சீனாவில் பணியாற்றி இருக்கிறேன் அங்கு பேசப்படும் சீன மொழியின் இரு பெரும் பிரிவுகளான மாண்டரினும் கண்டோநீசும் 50 முதல் 60 சதவிகிதம் ஒற்றுமை உடையது என்பதை அறிந்து கொண்டேன். அதனால் மாண்டரீன் மொழியே ஏற்று கொள்ளபட்டுளது. இது எப்படி இந்தியாவிற்கு பொருந்தும் ? மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வாதிடலாம் என்று இருக்கிறது .. அதாவது உப யிலும் பீகாரிலும் நீ ஆங்கிலம் பேசு என்றால் கட்டையால் அடித்து துரத்துவார்கள் .. அதனால் அவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு மாற்றிகொண்டது .. அனால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்களின் நிலையை நினைத்து பாருங்கள் ... அதற்கு சொல்லப்படும் காரணம் நீதிபதிக்கு தமிழ் தெரியாமல் போகம் அதனால் ... வேடிக்கை வழக்கை சந்திப்பவர்கள் இந்தி பேசுபவர் என்றால் ஒரு சட்டம் பேசாதவர் என்றால் ஒரு சட்டம் இது தான் நியாயமா ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இராமானுஜர் சீரியல் மூலமாக சமஸ்கிருதத்தை ஓட ஓட விரட்டுகிறார்.... இவரது பேச்சுக்கும் செயலுக்கும் சிறிதும் சம்பந்தம் கிடையாது...

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  ஐரோப்பிய நாட்டு பெண்மணி ஒருத்தர் என்ன அழகாக ருத்ரம் சொல்கிறார் என்பதை எல்லாம் நம்ம ஊரு அநியாயவாதி தெரிஞ்சி வச்சிக்க மாட்டார் போல......

 • John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்

  இப்ப சமஸ்கிருதத்தை ஓட ஓடதுரத்த வேண்டுமாம் .மொழிப் பிரச்சினையை கை எடுத்தது தனது குடும்ப அரசியலின் வங்கி வற்றிவிட்டது .இவரின் பொய் பிரசாரம் இனிமேல் தமிழ்நாட்டிலும் உலக அரங்கிலும் அவியாது .இவர் தமிழினத்துக்கு செய்த அநியாயங்கள் பல .

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இதே சிறுபான்மையினருக்கு ஒன்று என்றால் தலை "ரே பன்" கிளாஸ் போட்டுக்கிட்டு வந்து அவிங்களுக்கு அப்படியே சப்போர்ட் பண்ணும்...இந்து என்றாலே இந்த ஆளுக்கு இளப்பம் தான்...

 • Govind - Delhi,இந்தியா

  "உள்ளம் கவர் கள்வன்" என்று சம்பந்த பெருமானால் பாடப்பட்ட சிவன் மீது மட்டில்லா ஈடுபாடு கொண்டவன் நான். சிவ பெருமானை புகழ்ந்து பாடப்பட்டுள்ள சமஸ்க்ருத பாடல்களையும் நான் கேட்டு இருக்கிறேன். ஆனால் நேற்று இங்கு கருத்து கூறிய ஒருவர் கட்டு கட்டாக பொய்களை அவிழ்த்து விட்டார் ... சமஸ்க்ருதத்தினால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட்டை செலுத்தியதாகவும் அப்துல் கலாம் எவுகனை கண்டுபிடித்ததே சமஸ்க்ருத்தத்தை வைத்துதான் என்று சொல்லி தன்னால் அதற்கு சாட்சியங்கள் அளிக்க முடியும் என்றும் கூறி இருப்பதை பார்க்கும் போது எப்படிப்பட்ட பொய்களையாவது சொல்லி மக்களை ஏமாற்றவேண்டும் என்கிற என்னமாய் மேலோங்கி இருக்கிறது என்பது தெளிவு ... முதலில் ராக்கெட் பறப்பது என்பது ஏதோ வெடி பொருளை நிரப்பி விடுவார்கள் அப்புறம் திரி வைத்தி பற்ற வைத்தால் அது அடுர்த்த கிரகத்திற்கு சென்று விடும் என்று நினைக்கும் அப்பாவிகளால் தான் அது மாதிரி பொய் பேச முடியும்.. Propulsion tems , Aviation, Cryogenics, control tems, deep space communication tems என்று ஆயிரகணக்கான தொழில்நுட்பங்கள் இருக்கிறது ..உணமை இவ்வாறு இருக்கையில் சமக்ருதத்தை பற்றி உயர்வாக கூறுகிறேன் என்று இவ்வளவு மோசமான ஒரு பொய்யை சொல்லவேண்டிய அவசியம் என்ன ? மேலும் ஏவுகணை தொழில்நுட்பம் 10,000 வருட்த்திக்கு முன்னாள் இந்தியாவில் இருந்தது. அதனால் நாக அஸ்த்திரம் , பிரம்ம அஸ்த்திரம் தான் இன்றையா ஏவுகணை என்று யாரவது சொன்னால் அவர்களை அறியாமையை நினைத்து கவலைதான் படவேண்டும். ஏவுகணை என்பது குறித்து அனைத்து மதங்களிலும் இருக்கிறது.. கடவுளை எதிர்த்தால் வானத்திலிருந்து எரிகற்கள் விழும் என்று எல்லா மதங்களும் மனிதனை மிரட்டி உருட்டி வைத்து இருக்கின்றன. அதானால் இவை ஏவுகணை ஆகிவிடும்மா ? ஏவுகணை தொழில்நுட்பத்தில் என்ன வென்று தெரியாமல் சும்மா வாய் சவடால் அடிக்காதீர்கள்.

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  செம்மொழி அந்தஸ்தால் தமிழுக்கு என்ன லாபம் விளைந்தது என நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு சொல்ல வக்கில்லை...வந்துட்டாரு வாய் கிழிய பேசறதுக்கு ...

 • Aravind Kumar - Boston,யூ.எஸ்.ஏ

  இங்கே மது விலக்கு மது விலக்கு என்று ஒப்பாரி வைத்து கூப்பாடு போடுவது...ஆனால் புதுச்சேரியில் கள்ள தோணி கெஜா congress காரன் னுடன் கூட்டணி சேர்ந்து மது விற்பனைக்கு துணை போவது...என்னங்கடா உங்க நியாயம்...திருட்டு கூட்டம் ...

 • Nagercoil Suresh - India,இந்தியா

  திருமண விழாவில் சமஸ்கிரதத்தை நுழைய விட்டதே தவறு, திருமண விழாவில் முதலில் எதை பேசவேண்டும் எதை பேசக்கூடாது என்று கூறி அழைப்பை கொடுத்திருக்க வேண்டும்..வெள்ளைகாரர்கள் ஆங்கிலத்தை கொண்டு வரவில்லை என்றால் ஆடு மாடு வளர்பதிலும், தென்னை, பனை ஏறுவதிலும் போட்டி போட்டுக்கொண்டு காலத்தை கடத்த வேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டிருப்பார்கள்..எதிர்கட்சி தலைவரை அமைதியாக இருக்கச்சொல்லிவிட்டு மக்களை உசுப்பேத்தி பார்கிறார்...

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இப்போல்லாம் உன்னிய ஓட ஓட விட்டு விரட்டிடுவாங்க... கம்முன்னு இருக்கறது தான் நல்லது...

 • Govind - Delhi,இந்தியா

  மேலும் நேற்று இங்கு கருத்துக்களை பதிவு செய்தவர்கள் யாவரும் ஏதோ மு க அவர்கள் இவர்களை இந்தி படிக்க விடாமல் தடுத்து விட்டதாகவும் ஆதனால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறாமல் தவிப்பதாகவும் கருத்து கூறியது நகைப்புக்கு உரியது மட்டுமின்றி கோமாளித்தனமானது. முதலில் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் இது வரை இந்தி சொல்லி தருவதற்கு எதிர்ப்பு கிடையாது. அதனால் நீங்கள் படிக்காமல் போனதிற்கு காரணம் கண்டுபிடிகாதீர்கள். நான் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இங்கு தமிழே கட்டாயம் கிடையாது .. நீங்கள் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் உங்களை யாரும் தொந்திரவு செய்ததில்லை.. உதாரணத்திற்க்கு தருமபுரியில் உள்ள தெலுங்கு சமுதாயத்தினர் மு க 2010 இல் தமிழ் தாய் வாழ்த்து பாடவேண்டும் என்கிற அரசாணைக்கு எதிராக போராடியதை தமிழர்கள் மறந்து விட்டனரா ? தருமபுரிய பிரித்து ஆந்திராவோடு சேர்க்க வேண்டும் என்று அவர்கள் போராடியதை தினமலர் செய்தியாக வெளியிட்டது .. நீங்கள் சொல்லும் எத்தனை மாநிலங்களில் இது மாதிரி நடக்க சாத்தியம் ? அப்போது மு க அமைதியாகவே இருந்தார் .. அம்மாவும் அமைதியாகவே இருந்தார்கள் .. இது நாள் வரை தமிழ நாட்டில் தமிழ் கட்டாயம் கிடையாது.. மு க வும் அம்மாவும் தமிழை காட்டாயம் ஆக்காமல் தவிர்ப்பது ஏன் ? ஆக நீங்கள் சொல்லும் அளவுக்கு யாரும் இங்கு தமிழ் வெறியர்கள் கிடையாது .. அதனால் சமஸ்க்ருதத்தை படி இல்லையேல் நீ ஒரு தமிழ் வெறியன் என்று முத்திரை குத்தாதீர்கள்

 • Baskar - Paris,பிரான்ஸ்

  தாத்தா உன் பேரபுள்ளைகள் இந்தி படிக்கலாம் மற்றவர்கள் படிக்க கூடாதா.இந்திக்கு என்று ஒரு போராட்டத்தை அறிவித்து நாட்டை குட்டி சுவராக்கினாய்.இப்போது சமஸ்கிருதம் படிக்க கூடாது என்று போராட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாய்.இந்த ஆள் நாட்டை துண்டாட நினைக்கிறார்.எப்படியாவது தமிழகத்தில் ஒரு குழப்பத்தை உண்டு பண்ண முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.உன் எண்ணம் பலிக்காது.

 • Govind - Delhi,இந்தியா

  காங்கிரஸ் க்கு மாற்று பிஜேபி என்று நினைத்து வரும் வேளையில், அவர்களோட செயல்கள் மிகுந்த ஏமாற்றத்தை தருகின்றன. மு க வின் வார்த்தைகள் கடுமையாக இருந்தாலும் அவர் சொல்லும் வார்த்தையில் உண்மை இல்லாமல் இல்லை.. முதலில் மத்திய அரசின் திட்டம் என்னவென்று கவனியுங்கள் ... தற்பொழுது தமிழ், ஆங்கிலம் மற்றும் விருப்பபட்டோர் ஹிந்தி என்ற அளவில் இருக்கிறது. இதை மாற்றி அமைக்க தான் இந்த வடமொழி பிரியர்கள் மிக மெனகேடுகிரார்கள். அவர்களை பொருத்தவரை மெல்ல மெல்ல இடித்தால் அம்மியும் நகரும் என்பது தான் நோக்கம்..வட மொழியை பற்றி இல்லாத பொல்லாத பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் இந்தி பேசாத மாநிலத்தவரிடம் .. உங்களுக்கு தான் உங்கள் மொழி பேச தெரியுமே அதில் படித்து உங்களுக்கு வேலை ஒன்றும் கிடைக்க போவதில்லை மாறாக இந்தியையும் சமஸ்க்ரிதத்தையும் கற்று கொள்ளுங்கள் .. அதை கற்று கொண்டால்அறிவியல் துறையில் நீங்கள் நோபல் பரிசை வாங்கலாம் என்று பொய்யுரை உரைத்து ஏமாற்றபடுகிறார்கள் .. இல்லை இல்லை ... இதனால் தமிழுக்கு எதுவும் பங்கம் இல்லை என்று சொல்பவர்கள் கனத்திற்கு மைய அரசாங்கம் இதற்காக செலவிடும் தொகை ஒரு வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் . அதாவது சமஸ்க்ருதத்தில் ஆராய்ச்சி என்றிர பெயரில் ஒரு சிலரை சந்தோஷபடுத்த இந்த முடிவு .. இதை எதிர்பவர்களை தமிழ் வெறியன் இந்துக்களின் எதிரி என்று முத்திரை குத்த முயறச்சிகள் நடக்கின்றன. நீங்கள் இதை பற்றி கேள்வி கேட்டால் நீங்க என்ன தமிழ் வெறியனா என்று நம்மை கேட்கும் கூட்டத்தை பார்த்து நான் திகைத்து நிற்கிறேன். மேலும் THIS IS JUST AN ELECTIVE SUBJECT என்கிற பொய்க்கு மகுடிக்கு மயங்கிய பாம்பு போல ஆடும் ஏன் சக இந்தியர்களுக்கு ..உண்மை என்னவென்றால் ஒவொரு பள்ளிக்கூடத்திலும் எல்லா விருப்பபாடங்களும் போதிப்பதே கிடையாது .. மாறாக மைய அரசு கொடுக்கும் பணத்திற்காக வட மொழி ஆசிரியாரி வேலைக்கு அமர்த்தி ஒரே பாடத்திட்டத்தை அனைவருக்கும் போதிக்கவே இந்த திட்டம் . இதை எதிர்த்து யாராவது கேள்வி கேட்டால் எங்களுக்கு பண வசதி இல்லை உங்கள் மனக்னோ மகளோ தான் இந்த மொழி படிக்க விருப்பம் இல்லை என்கிறார்கள் மற்ற அனைவரும் ஒத்து கொண்டு விட்டார்கள் என்று கதை விடுவார்கள் .. அப்பா தெரியும் உங்களுக்கு சேதி. மத்திய அரசு ஜோசியத்திர்க்கு கூட பட்ட படிப்பு வழங்கி அதில் அறிவியல் இருக்கிறது என்று சொல்லி மக்களை மூளை சலவை செய்து வருவது வெட்ககேடு.

 • RAJ - dammam,சவுதி அரேபியா

  Kannan try to understand the reality, learn language as much as you can. Sanskrit is our property as an Indian. What is the problem to learn it? It is almost dieing. Why should we lose it? This language must be transferred to upcoming generation.sorry to say this like you people are cancer to India.

 • Proud Indian - kumari2kashmir,இந்தியா

  அய்யா ஆமா அய்யா, ஓட ஓட விரட்டனும். எதை என்று தான் தோண வில்லை. உம்மையா? உங்கள் கொள்கைகளையா? எனக்குப் பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது, ஜெர்மனியில் உள்ள சமஸ்கிருத நூலகம். ஜெர்மன் காரன் உலகில் மிகப் பெரிய சம்ஸ்கிருத நூலகத்தை ஏற்படுத்தி உள்ளான். அதனால் என்ன பலன்? தொழில் நுட்பத்தில், புதிய ஆராய்ச்சியில் அதன் பலனை காண்கிறான் ஹிந்தியை ஒழித்து தமிழர்களைக் கிணற்றுத் தவளை ஆக்கிவிட்டீர் நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக மாணாக்கர்கள் எல்லோரையும் நுழைவு தேர்வு என்றாலே காதத் தூரம் ஓட விட்டுள்ளீர் ஹிந்தி, மற்றும் நுழைவு தேர்வு மூலம் மத்திய வேலை வாய்ப்புகளில் தமிழகத்தின் பங்களிப்பு இப்போது எவ்வளவு? எந்த விதத்திலும் தமிழகம் முன்னேற்றம் அடைய விடமால் தடுப்பது தான் உங்கள் குறிக்கோள் ஆக்கி விட்டீரோ? உம்மை இனி மக்கள் கவனித்து கொள்வர்

 • sankar - trichy,இந்தியா

  சமஸ்க்ருதத்தை ஓட ஓட விரடோவோம் தெலுங்கர் கருணாநிதி . அறிக்கை

 • Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ

  சும்மா இருப்பவங்க , சீரியல் பார்த்து கெட்டு போறவங்க , பகல்ல பார்க்ல படுத்து தூங்குபவர்கள் அதுக்கு பதிலா டைம் பாசுக்கு சமஸ்க்ரதம் படிச்சிட்டு போறாங்க ... உங்களுக்கு என்ன நோகுது பெரியவரே ??

 • Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா

  தம்பி கீழ வச்ச வடைய காணோம், நீ பாத்த?

 • Ratan K - Chennai,இந்தியா

  அவர்கள் சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக யாரையும் கற்கச் சொல்லவில்லை.. சமஸ்கிருதத்தைப் பரப்புவதே பாவம் என்பது சுத்த உளறல்.. இதே அரசாங்கம் உருது மொழியைச் சொல்லிக் கொடுத்தால் முதல் ஆளாக மாலையுடன் போய் நிற்பார்.. 20 ஆண்டுகளாக உங்கள் கட்சி 100 சீட்களைத் தாண்ட முடியவில்லை.. இதற்கு உங்கள் உளறல்களும் இந்துமத துவேஷமுமே காரணம்.. புரிந்துகொள்ளுங்கள்...

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  சமஸ்கிருத எதிர்ப்பு கிளர்ச்சி எல்லாம் தேவை இல்லை மன்னா, தமிழர்கள் தமிழையே ஒழுங்காக படிப்பது இல்லை, ஆங்கிலம் கேட்கவே வேண்டாம், டப்பா டான்ஸ் ஆடுகிறது, ஹிந்தி என்றால் ஏதோ "இதர் ஆவோ" வடிவேலு காமடி என்று நினைக்கிறான் தமிழன். அவனா சமஸ்கிருதம் படித்து கிழித்துவிட போகிறான்? கூல்டௌன் மன்னா.... மொழி அரசியல், டாஸ்மாக் மற்றும் ஊழல் அரசியல் எல்லாம் மக்களிடம் இனி எடுபடாது, அதிவும் இந்த வார்த்தைகள் எல்லாம் உங்களிடம் இருந்து வந்தால் மிகவும் "டென்ஷன்" ஆகிவிடுகிறான் நம் தமிழ்நாட்டு தமிழன்..

 • Veenaponavan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவர் இனிமேலும் நம்மை பிழைக்க விடமாட்டார் போல.

 • Raj Rsr - Hockessin, DE,யூ.எஸ்.ஏ

  தமிழ் மொழி மேல் இவ்வளவு பற்றுள்ள ஒருவர், தம் குடும்பம் குழந்தை பேரக் குழந்தைகள் எல்லாம் தமிழ் தவிர எதையும் கற்றுக்கொள்ள கூடாதென நிறுத்தி இருக்க வேண்டியது தானே? இந்த மொழி அரசியலை விட்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்யலாம் என யோசித்தால் நல்லது

 • இரா கண்ணன் - மன்னார்குடி,இந்தியா

  இப்போது எல்லாரும் கலைஞரை வசை பாடுவார்கள். கருணாநிதி என்ன தமிழ்ச்சொல்லா என்று கேட்பார்கள். கருணாநிதி குடும்பத்தினர் இந்தி கற்கவில்லையா என கேட்பார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி மூன்று தலைமுறைகளை நாசமாக்கி விட்டார் என்பார்கள். மத்திய அரசு வேலை வாங்க முடியவில்லை என்பார்கள். இங்கு வரும் வட இந்திய கூலித் தொழிலாளர்களிடம் பேச முடியவில்லை வேலை வாங்க முடியவில்லை என புலம்புவார்கள். ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது விருப்பப்பாடத்திற்கு பேச்சு வழக்கில் இல்லாத மொழியான வடமொழியுடன் அந்த அந்த மாநில மொழியை ஏன் சேர்க்ககூடாது என்று வினவமட்டர்கள். ஏன் எனில் அவர்கள் கலைஞரின் கருத்தியலை எதிர்க்கவில்லை மாறாக கலைஞரை எதிர்க்கிறார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement