Advertisement

சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி ; கருணாநிதி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில் குறிப்பிட்டார்.

திமுக மருத்துவ அணி செயலாளர் பூங்கோதை இல்ல திருமண விழாவில் பங்கேற்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்தி பேசியதாவது : தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும்

தமிழ் சிறந்த மொழியாக இருக்கும் போது பிற மொழிகளை திணிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர். தமிழகத்தில் வட மொழியை திணிக்க நினைத்தால் தமிழர்கள் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்து கிளர்ந்து எழ வேண்டும். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கிளர்ச்சி எழுந்ததோ அது போல் எழ சமஸ்கிருதம் இருந்த விட கூடாது. கிளர்ச்சி உருவாக யாரும் காரணமாக இருந்து விடக்கூடாது.

ஆளும் கட்சியின் ஆசியோடு சமஸ்கிருதம் பரப்ப முயற்சி நடக்கிறது. இழித்துரைக்கப்பட்ட இந்த மொழிக்கு தமிழகத்தில் ஆதிக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கள் மொழியை காப்பாற்ற, இந்த முயற்சியை நிறுத்த வேண்டும். வட மொழி ஆதிக்கம் இருந்தால் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (218)

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  காளிதாசன் போற ஒப்பற்ற கவிஞன் சமஸ்க்ரிதத்திலே அளித்த படைப்புகளையே ரசிக்கத்தெரியாத கலைஞன் எப்படி டாக்டர் கலைஞன் ஆக முடியும்?

 • Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ

  இடையனூரில் வாழும் இரக்கச் செல்வம் அவர்களின் உறவினர்கள் சிலர் பெயர்களை உங்கள் முன் வைக்கிறேன்.... , ஆறுமுக அழகம்மையார், தாமரைச்செல்வி, அறத்தாய், வள்ளல் அன்னை, எழுச்சிச்செல்வம், கலைச்செல்வம், கொற்கை, ஆதவன் ... அது வேறு யாருமில்ல சார் கோபாலபுரத்தில் வாழும் கருணாநிதி யின் உறவினர்களான ஷண்முக சுந்தராம்பாள், பத்மாவதி, தர்மாம்பாள், தயாளு, உதய நிதி, கலாநிதி, துர்கா, ஆதித்யா.. போன்ற சம்ஸ்கிருத பெயர்களின் தமிழாக்கம்... உலகிலேயே, மண் பாரத நாட்டில் மட்டுமே, இப்படி ஒரு புராதன மொழிக்கு அரசியல்(வியா)திகளின் வெறுப்பு, வெறி..

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  இங்கு பலர் எப்படி சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து .. வாங்குவது தமிழை இழிப்பது,குறை கூறுவது போன்றல்லவா .

 • Rathinakumar KN - Madurai,இந்தியா

  இப்படி பேசி பேசி இரண்டு தலைமுறை தமிழக மக்களின் அறிவு வளர்சிகளை அழித்தது போதாதா ? உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் முழுக்க முழுக்க தமிழ் வழியில் மட்டும் கல்வி கற்றவர்களின் பட்டியல் போட்டு கூற முடியுமா? இந்த திணிப்புக்கு உங்கள் உயிரை கூட விட அஞ்ச மாட்டிர்கள் என தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் . குறை கூறட்டும் .தமிழுக்கும் தமிழ் மண்ணிற்கும் மற்ற இந்திய மொழிகளை காட்டிலும் மற்ற மாநிலத்தவரிடம் கேட்டுபாருங்கள் தமிழின் தரத்தை இன்னும் எப்படி உங்களால் கட்டுகோப்பாக காப்பாற்ற முடிகின்றது என்று பிரமிகின்றனர் . இருந்தும் ஹிந்தி தெரியவில்லை என்ற கவலை இருக்கத்தான் செய்கின்றது அதனால் நாம் அவமானம் படுவது உண்மைதான் .இங்கு இருபவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்கின்றேன் .நாம் எவ்வளவு அவமானப்பட்டாலும் நம் தாய் மொழியையும் அதன்மண்ணையும் காப்பாற்றும் கடமை இருக்கிறது என்பதை ஒத்துகொள்ள வேண்டும் .வேண்டும் என்றால் அரசியல் சட்டம் இயற்றாமல் படித்து விட்டு போகட்டும் தேவை படுவோர் .திராவிட மொழிகளில் நமக்குதான் முதன்மை என்பதை அனிவரும் அறிவர் .

Advertisement