Advertisement

விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த மோடி

புதுடில்லி : தனக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க செய்துள்ளது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க உரை. மோடி நிகழ்த்திய உரைக்கு அவருக்கு மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
5 நாடுகள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். பயங்கரவாதம், பாதுகாப்பு, பொருளாதார நட்புறவு உள்ளிட்டவைகள் குறித்து 45 நிமிடங்கள் அவர் நிகழ்த்திய உரைக்கு 64 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் கைதட்டு அடங்குவதற்கு 4 நிமிடங்களுக்கு மேல் ஆனது. இதில் 9 முறை அனைவரும் எழுந்து நின்று மோடிக்கு மரியாதை தெரிவித்தனர். மோடி தனது உரையின் போது 13 முறை நட்புறவு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.
2000ம் ஆண்டு இந்திய பார்லி.,யில் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் நிகழ்த்திய உரையை கேட்டு, இந்திய எம்.பி.,க்கள் அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கினர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி நிகழ்த்திய உரையை கேட்ட உறுப்பினர்கள் அனைவரும் மோடியை தேடி வந்து கைகுலுக்கி பாராட்டியதுடன், ஆட்டோகிராபும் வாங்கிச் சென்றனர். உண்மையில் இது இந்திய பிரதமர் ஒருவருக்கு கிடைத்த பாராட்டாக பார்க்கப்படவில்லை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கிடைத்த பாராட்டாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்தியர் ஒருவருக்கு இந்த அளவிற்கு பாராட்டு கிடைத்துள்ளது விவேகாந்தருக்கு (சிகாகோ மாநாட்டு உரையின் போது) பிறகு பிரதமர் மோடிக்கு தான்.
மோடியின் உரை குறித்து இந்தியா டுடே பத்திரிக்கையில் கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோடியை பேட்டி எடுக்க சென்ற போது அவரை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு மறுத்த மோடி, இந்தியிலேயே பேட்டி அளித்தார். பின்னர் அவர் என்னிடம், இன்று வேண்டுமானால் நான் இந்தியில் பேசலாம். ஆனால் ஒருநாள் உங்களை விட நன்றாக ஆங்கிலத்தில் பேசுவேன் என்றார். தற்போது அமெரிக்கா நாடாளுமன்றத்தில் மோடி நிகழ்த்திய உரையை கேட்ட பிறகு அன்று அவர் கூறியதை உண்மை என ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
இந்திய, அமெரிக்க பத்திரிக்கைகளில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும், சமூக வலைதளங்களிலும் மோடிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் பிறந்ததற்காகவும், இந்தியன் என்று சொல்லிக் கொள்வதிலும் பெருமிதம் கொள்வதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர். உலகின் தலைவிதியையே நிர்ணயிக்கும் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் மோடியிடம் கையெழுத்து வாங்க முண்டியடிச் சென்றது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த பெருமை என கூறப்படுகிறது.
மோடி உரை பற்றி சிஸ்கோ தலைவர் கூறுகையில், அடுத்த அமெரிக்க ஜனாதிபதி நரேந்திர மோடியை போல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகளையும், இன்ஜினியர்களையும் மட்டுமல்ல சிறந்த தலைவரையும் உலகிற்கு அளிக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்பதை இன்று அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (196)

 • M Rajendran - Delhi,இந்தியா

  மோடி அவர்கள் நன்றாக பேசுவார் என்பது 2014 ஆம் ஆண்டு தேர்தலிலேயே தெரிந்த ஒன்று. அதற்கான பலனை இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம். அமெரிக்க நாடாளுமன்றம் கைதட்டிவிட்டது. சரி. அதன் பலன் என்ன என்பதை பொறுத்தே பார்க்கவேண்டும்.

 • subhashini - chennai,இந்தியா

  மோடியின் உரை மிக நன்றாக இருந்தது..அமெரிக்கா ஒரு காலத்தில் தனக்கு அனாவசியமாக பிரச்சினை எழுப்பி விசா தர மறுத்து இருந்தாலும் ..இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற வள்ளுவரின் திருக்குறளின் வழி நடந்து தனக்கு தகாததை செய்த அமெரிக்கா வுக்கும் தொடர்ந்து நேசக்கரம் நீட்டி பிரதமர் அளவுக்கு உயர்ந்து பின்னாளில் அவர்களே தன்னை இன்று தன்னை வியந்து வணங்கி பாராட்டும் படி செய்தது நிச்சயம் மோடியின் மிகபெரிய சாதனை தான்..

 • SRIVIRAJA - SRVILLIPUTTUR,இந்தியா

  நம்ம கழக மொழியில் இந்தியன் என்று சொல்லடா இறுமாப்புடன் வாழடா மோடி என்று சொன்னால் மூவூலகமும் இந்தியனின் இந்தியாவின் புகழ் பாடும் இந்தியன் என்று சொன்னால் எல்லா இரும்பு கோட்டையும் தவிடு பொடியாகும் நரேந்திர மோடி என்று சொன்னால் நாடெல்லாம் செழிக்கும் நரேந்திர மோடி என்று சொன்னால் நரிகூட்டம் நடுங்கும் ஊழை இடும் நான்கு மறை நாயகனே நீர் நீடுடி வாழ்க மும்மத கடவுள்கள்களின் ஆசி என்றென்றும் உம்மை காக்கும்

 • senniappan.N - coimbatore,இந்தியா

  கிரேட். தலை வணங்குகிறேன் ஹாப்பி. ஜெய் ஹிந்த்

 • nallavan - tiruchy,இந்தியா

  2002 ல் இருந்து 2014 வரை மோடிக்கு விசா கொடுக்க மறுத்த அமெரிக்காகாரன் இந்தியாவிடம் அல்லது மோடி இடமாவது மன்னிப்பு கேட்டானா.. குறைந்த பட்சம் வருத்தத்தமாவது வெளிகாட்டினானா ?அவன் பல லட்சம் கோடிக்கு வியாபாரம் முடித்து விட்டோம் என்ற பெருமையில் எழுந்து நின்றும் கை தட்டுவான்.குட்டிக்கரணம் போட்டும் தன் மகிழ்ச்சியை வெளிகாட்டுவான்.இதுலே நாம் பெருமை அடைய என்ன இருக்கிறது? நம் இந்திய பிரதமரை கேவலப்படுத்தியதற்கு அமேரிக்கா காரன் முதலில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.அதன் பிறகுதான் இந்தியன் என்ற முறையில் நான் பெருமை கொள்ள முடியும்.

 • Kalyan Ganapathy - trichy,இந்தியா

  plus or minus, we've to care full on american balancing . Hat's uo to PM

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  மோடிஜிகிட்ட பிடிச்ச இன்னொரு விஷயம் எப்போல்லாம் வெளி நாடு போறாரோ அப்போல்லாம் நம் நாட்டில் இருந்து அந்நாட்டால் களவாடப்பட்ட சுவாமி சிலைகளை மீட்டு நம் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கிறார்...இதற்காகவே ஒரு குழு வேலை செய்கிறது.... அமெரிக்காவில் இருந்து 200 சிலைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார்...

 • CJS - cbe,இந்தியா

  அருமையான பேச்சு. பாராட்ட பட வேண்டிய விஷயம். ஆனால் இந்த மாதிரி நம் பிரச்சனைகளை ஏன் நம் பாராளுமன்றத்தில் பேச மாட்டேன்கிறார் என்று தெரிவில்லை. நம் நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் பேசாமல் மவுனமாக இருப்பது நல்லதல்லவே. பார்க்கலாம் இந்த முறை.

 • jjnanthu,thailand. - Bangkok,தாய்லாந்து

  வாழ்க மோடிஜி.. நமது இந்திய பிரதமரின் வெற்றி பயணம், அவருக்கு மட்டுமல்ல நம் தேசத்திற்கு கிடைத்த வெற்றி மற்றும் அங்கீகாரம். "கூன் விழுந்த காங்கிரஸ்காரனை இன்னும் நம்பி நாசமாகும், மூடர்கள் நம் இந்திய தேசத்தில் வாழ தகுதியற்ற ஜடங்கள். உண்மை என்னவென்றால், அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கொள்ளையில்,கூட்டு களவாணிகள் ...

 • annaidhesam - karur,இந்தியா

  இந்த மாதிரி சின்ன விசயங்களுக்கெல்லாம் பில்ட் அப் கொடுப்பதினால் தான். உண்மையான விசயங்களை விட்டு விடுகிறோம் ..இதே நாள் செய்தியில்தான் ஒரு நாளைக்கு 400 பேர் விபத்தில் இறக்கிறார்கள் என்றும் ..இதற்கு முன் 2234 பேர் சுத்திகரிக்கபடாத ரத்தத்தினால் aids பாதிக்கப்பட்டதும் படித்தேன்..ஜால்ரா அடிப்பதை நிறுத்தி என்று உண்மையான பத்திரிகைகளாக நம் நாட்டு ஊடகங்கள் மாறுமோ..

 • murugu - paris,பிரான்ஸ்

  அமெரிக்கா ஒருவருக்கு கை தட்டி ஆரவாரம் செய்தால்,அதன் உண்மை காரணம்,அமெரிக்காவுக்கு நாம் அடிமை சாசன பத்திரத்தில் கையொப்பம் இட்டு விட்டோம் என்று அர்த்தம். இதுதான் உண்மை. இதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ?

 • Indian - Chennai,இந்தியா

  மோடிஜி உங்களால் நாங்கள் பெருமை பெறுகிறோம்.எந்த இந்தியனும் நெருங்க முடியாது.கட்சிக்கு அப்பாற்ப்பட்டு எல்லோருமே பெருமை கொள்ளலாம்.

 • Gnanam - Nagercoil,இந்தியா

  "முற்றத்து முல்லைக்கு மணமில்லை என்பார்கள்" . மோடியின் அருமை பெருமைகளை மற்றவர்கள் கூறும்போதுதான் நம்மில் பலரும் உண்மையை உணருகிறோம். இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருமை தேடித்தரும் மோடி நமக்கு கிடைத்த ஒரு அரிய முத்து. மெல்ல மெல்ல ஜாதி, மத பேதமின்றி, மோடி இந்திய மக்களின் நன்மதிப்பை பெற்று மனிதருள் மாணிக்கமாக திகழ்வார். இந்தியா மட்டுமின்றி, உலக சமாதானத்திற்கு அவர் மேற்கொள்ளும் முயற்ச்சிகள் அவரை புகழ்மணக்கசெய்யும்.

 • Raman Subramanian - Little Elm,யூ.எஸ்.ஏ

  சபாஷ் மோடி அவர்களே,ஒரு பிரதமர் வாய் திறந்து பேசமாட்டாரா என்று இருந்த நிலைமையை மாற்றி உலக அளவில் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த மோடி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு காலத்தில் விசா மறுக்கப்பட்ட மோடி அவர்களுக்கு தற்போதைய பெருமை அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு.வாழ்க பாரதம்

 • Kokula Krishna Hari K - Pondicherry,இந்தியா

  மோடி அவர்கள் செய்து காட்டினர். . .

 • vidhuran - Hastinapur,இந்தியா

  6 அணுஉலைகளை 2.8 லட்சம் கோடி கொடுத்து வாங்க மனிதர் ஒப்புக் கொண்டிருக்கிறார். விபத்து ஏற்பட்டால், நமது பொதுத் துறை நிறுவனங்களே பொறுப்பு ஏற்கும் என்று என்று கண்ணா பின்னா என்று நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டால் எல்லா வியாபாரிகளுமே எழுந்தென்ன? தலைகீழாக நின்று கூட கைதட்டுவார்கள். துத் தூ, இந்தக் காலத்திலும் போய்...அவன் கையெழுத்து வாங்கினான், இவன் கை தட்டினான் என்று விளம்பரப்படுத்தித் திரிவது சொம்புகளுக்கு வேண்டுமானால் பெருமையாகத் தெரியலாம், இந்திய தேசியவாதிகளுக்கு கேவலமாகத் தானிருக்கிறது.

 • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

  வாழ்த்துகள் மோடி அவர்களே............................. இந்தியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம் ............விவசாயத்திற்கும் நல்லதொரு கொள்கையை வகுத்து நமது சந்ததினர்களுக்கு வழிகாட்டுங்கள் ................... ஜெய்ஹிந்த் .............வாழ்க பாரதம் ...................

 • Sivaramkumar - Bangalore,இந்தியா

  என்று ஒழியும் இந்த தனி மனித புராணம்????

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  நல்ல பாராட்டுக்கள்.

 • ezhumalaiyaan - Chennai,இந்தியா

  நாராயணசாமி..?

 • makkal neethi - sel,இந்தியா

  அமெரிக்கன் எழுந்தான் நின்றான் என்றால் நாம்தான் உசாராக வேண்டும். ஏன் என்றால் இந்திய பொருளாதாரமான விவசாயத்தில் இன்று அமெரிக்க கார்போரேட் களின் ஆதிக்கம் தலைதூக்கி விவசாயம் நசுக்கப்பட்டு விவசாயிகள் கார்போரேட் களின் கூலியாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை அழித்து நம்மை அடிமையாக்கி நமது பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது. எங்கும் எதிலும் கார்போரேட் களின் ஆதிக்கம் எனவே அவன் எழுந்தான் நின்றான் என்றால் நம்மை எங்கேயோ குட்ட போகிறான் என்றுதான் நினைக்க தோன்றுகிறது இன்று வாழ்த்தும் இவர்கள் வெகு விரைவில் இந்த அமெரிக்கனை புரிந்து கொள்வார்கள்

 • எஸ்.பொன்னப்பன் - Tambaram,இந்தியா

  இன்னும் 20 ஆண்டுகள் என் தலைவன் ஆட்சி செய்தால் என் தேசமும்-தர்மமும் காக்கப்படும். ஆம் இவரே <<என் தலைவன்.. >>மரணிக்கும் வரை இவரை நேசிக்க வேண்டும்.. இவரைப் போல தியாகங்கள் செய்ய வேண்டும்.. =இவர் செய்த மக்கள் பணியில் கடுகளவாவது வாழ்நாளில் செய்தே தீர வேண்டும்.. ‪‎பாரத்மாதா_கீ_ஜெய்‬.... -

 • Snake Babu - Salem,இந்தியா

  நன்றாக உரை நிகழ்த்தினார்.. பாராட்டுக்கள்.. நன்றி வாழ்க வளமுடன்

 • Vijay - Bangalore,இந்தியா

  சான்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு...

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  பிரதமர் மோடி மட்டும் அல்ல இந்தியர் யாராக இருந்தாலும் 67 ஆண்டு பாரம்பரிய மன்னர் பரம்பரை யாரை சுட்டிக்கட்டுகிறதோ அவர்கள்தான் இந்தியர்களாக இருந்தார்கள், மற்றவர்கள் மனிதர்களாகவே மதிக்கப்பட்டது இல்லை, அப்படி இருக்க ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போன்று நமது பிரதமர் இந்தியர்களின் சார்பாக சென்று நாங்கள்தான் இந்தியார்கள் என்று பறைசாற்றி வந்துள்ளார், இதுதான் உண்மையான சுதந்திரம், வந்தே மாதரம்

 • Suresh Yesubalan - coimbatore,இந்தியா

  பிரதமரின் அளவுகோல் பேச்சு அல்ல. இந்த இரண்டு வருடத்தில் ,அவர் பேசிய வார்த்தைகள் எல்லாம் காற்றில் கரைந்து போயிற்று .பிரதமரின் பேச்சு உளியால் செதுக்கப்பட்ட வார்த்தைகளாய் இருக்க வேண்டும்.அதற்கு தேவை அளவான பேச்சு.மக்கள் நினைவில் நிற்க பேச்சு போதும்.பிரதமர் பதவி நிலைத்து நிற்க பேச்சு போதாது.பேச்சுக்குள் வெற்றி என்ற வார்த்தை மட்டும் இல்லை, தோல்வியும் ஒளிந்து இருக்கிறது .துதி பாடும் மனிதர்களால் தன்னிலை மறக்கவேண்டாம் .ஆதலால் அமெரிக்கர்கள் குனிந்தார்கள் ,முட்டி போட்டார்கள் என்பது செய்தி ,வெற்றி அல்ல .

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அப்படியே ஒரு ஓரத்திலிருந்து நம்ம இத்தாலி முஸ்லிம் காங்கிரஸ் அடிமைகள் 2002 குஜராத், குல்பர்கா என்று இப்போ தூக்கி விடுவாங்க பார்க்கலாம். இவர் புகழ் குலைய வயித்தெரிச்சலில்.

 • Valliappan - Chennai,இந்தியா

  மோடி மற்றும் ஒபாமா இருவருக்கும் நல்ல ஒரு நட்புறவு உண்டு. இவ்வளவு பயணம் எப்படி அவரால் முடிகிறதோ. வாழ்த்துக்கள்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அன்பு வாசக நண்பர்களே - அவர் டிஜிட்டல் ப்ராம்ப்டர் உபயோகித்தார். அதாவது, பேச வேண்டியதை எழுதி ப்ராம்ப்டரில் அப்லோட் செய்துவிட்டால் அந்த திரை போடியம் மீது வரும், வாசகங்கள் ஓடும், பார்வையாளர்களுக்கு தெரியாது. சும்மா பேசுவது போல இருக்கும். எனவே எக்ஸ்டெம்போராக - அதாவது - சுயமாக பேசினார் என்று எழுதாதீர்கள், விவரம் அறிந்தவர்கள் ஏளனம் செய்வார்கள். அப்புறம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாசகங்கள் அமெரிக்கரின் புகழ் பாடியதால் அமெரிக்கர்கள் கை தட்டியதில் வியப்பில்லை. ஆனால் இந்தப் பேச்சின் சாராம்சம் யதார்த்தம் ஆக வேண்டும். ஆனால் நிஜம்மாவே நல்லது தான். மேலும் கடைசியாக ஒன்று - இப்படி பல நாடுகளில் பல ஒப்பந்தங்கள் கைஎழுத்திடுகிறார். ஒரே ஒரு முறை இலங்கை சென்று அந்த அரசுடன், நம் மீனவர்களுக்கு தொந்தரவில்லாத வாழ்க்கை அமைய ஒரு சின்ன ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டால் மிகவும் கடமைப்பட்ட்டுள்ளவராகலாம்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் பிரதமரே. ஒரு இந்தியனாக பெருமைபடுகிறேன்.

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  சபாஷ் மோடிஜி சபாஷ்,உலக அரங்கில இந்தியாவ தலை நிமிர்ந்து பார்க்க வச்சிட்டிங்க.நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

 • Jaya Ram - madurai,இந்தியா

  பெருமைபடுகிறேன் நான் இந்தியன் என்பதற்கு மோடியால்

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  மோடி பேச்சில் வல்லவர் என்று அனைவருக்கும் தெரியும். அதற்காக அமெரிக்காகாரன் கை தட்டியதால் இந்தியாவிற்கு பெருமை என்று சொல்லுவது அபத்தம். சதிகாரன் திருந்தினால் சந்தோசம் தான்.

 • Raja Shanmugam - coimbatore,இந்தியா

  மோடி அவர்களுக்கு அன்று விசா கொடுக்க மறுத்த அமெரிக்கா.. இன்று எழுந்து நின்று கை தட்டி வரவேற்கிறது.. இந்தியா என்றாலே உலக நாடுகள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கி உள்ளார். மோடி.

 • Vinod K - London,யுனைடெட் கிங்டம்

  மிக சிறந்த நாட்டு பற்றாளர், மிக சிறந்த உரை. மனமார்ந்த பாராட்டுக்கள். என் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் என்று கூறுவது மிக கர்வமாக இருக்கிறது. ஆண்டவன் எல்லா நன்மைகளையும் ஆரோக்கியங்களையும் இவருக்கு என்றும் அருள வேண்டும்.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நன்றாக உரை நிகழ்த்தினார்.. பாராட்டுக்கள்..

 • vijay - chennai,இந்தியா

  சூப்பர் மோடி ஜி..... வெரி ஹாப்பி.....ப்ரிலிஎண்ட் அண்ட் powerful ஸ்பீச் ....

 • Silver Star Shilpa Kumar - London,யுனைடெட் கிங்டம்

  இது நல்ல விஷயம் தான், மோடி யின் பேச்சு நன்றாகவே இருந்தது ..ஆனால் எழுந்து நின்று கைதட்டியது ஒரு வியத்தகு விஷயம் அல்ல...அமெரிக்கர்களுக்கு எழுந்து நின்று பாராட்டுவது மரபு. அமெரிக்க பாராளுமன்றத்தில் யார் உரை நிகழ்த்தினாலும் இவ்வாறு நடைபெறும். சென்ற முறை மாண்புமிகு பொம்மை பிரதமர் பேச்சு நடத்திய போதும் இதே நிகழ்வு தான் நடந்தது. அவரிடமும் ஆட்டோகிராப் வாங்கினர். இதை ஒரு முக்கிய செய்தியாக நாம் கருதுவது முட்டாள் தனம்

 • Ramudu - Chennai,இந்தியா

  இதுக்கு போட்டியா நம்ம கேசரிவால் பாகிஸ்தான் ல போய் பேச போராறமே.....

 • Sathiya Arunachalam - Tirunelveli,இந்தியா

  வாழ்த்துக்கள் அய்யா.......

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  சில பொறமை பிடித்த வாசகர்கள் மோடி அவர்களை நிந்திப்பது தெரிகிறது ஆனாலும், மோடி தன் வெற்றியை ஆண்டாண்டுக்கு நிலை நாட்டவர். வாழ்க பாரதம்

 • Senthil murugan - Madurai,இந்தியா

  இதை பார்க்கும் பொது எனக்கு அதிக மகிழ்ச்சியாக இருந்தது....உலகில் உள்ள மட்டற்ற நாடுகளின் தலைவர்களுக்கு கிடைக்காத மரியாதை இவருக்கு கிடைத்து இருக்கிறது....ஜெய் ஹிந்த்.

 • இளங்கோ - chennai,இந்தியா

  வேண்டாதவர்கள் ஆயிரம் சொன்னாலும், மோடியின் திறமைக்கும் கடின உழைப்புக்கும் புகழ் தானே வந்து சேரும்.தேச விரோதிகள் சிலர் எழுதிய கடிதத்தை நம்பி ஒரு இந்திய மாநில முதல்வருக்கு இழைக்க பட்ட அநீதிக்கு, அமெரிக்க நாடாளுமன்ற அவையில் பேச அழைப்பு விடுத்தது ஒரு பிராயச்சித்தமே. அந்த அழைப்புக்கு தான் தகுதி உள்ளவர் தான் என்பதையும் தன் பேச்சின் மூலம் நிரூபித்து விட்டார்.

 • Senthil murugan - Madurai,இந்தியா

  உண்மையில் நீ சிறந்த தலைவன்...... Great modi ji...We love u

 • M.Kannan - Chennai,இந்தியா

  உண்மையில் இதை படிக்கும்போது கண்களில் ஈரம் கசிகிறது.. ஒரு தலைவனுக்கு உரிய தகுதி நம் பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் அடைந்து விட்டார்.. ஜெய் ஹிந்த்..

 • குரங்கு குப்பன் - chennai,இந்தியா

  இந்த செய்தியை படித்து விட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியாவில் பிழைப்பு நடத்திக்கொண்டு இந்தியாவை எதிர்க்கும், விமசிற்கும் தீவிரவாதிகளின் வாயிற்று எரிச்சல் நன்றாக தெரியும் மற்றவர்களுக்கு. வாழ்க மோடி ஜி வளர்க இந்திய

 • Sathish - Coimbatore ,இந்தியா

  என்ன அருமையான உரை. நிச்சயம் ஒவ்வொருவரும் கேட்கவேண்டும். இவரை இழிவாக பேசுபவர்கள் இந்தியர்களாக வாழ தகுதியற்றவர்கள். தயவு செய்து இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள்.

 • spr - chennai,இந்தியா

  "உண்மையில் இது இந்திய பிரதமர் ஒருவருக்கு கிடைத்த பாராட்டாக பார்க்கப்படவில்லை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கிடைத்த பாராட்டாகவே பார்க்கப்படுகிறது. "- பார்க்கப்பட வேண்டும் திரு மோடி பன்னாட்டு உறவினை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவும் ஒரு வல்லரசாக முடியும் என்ற எண்ணத்தில் அதனைச் செவ்வனே செய்திருக்கிறார் ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்குவதில் சிறப்பான ஒரு நிலையை உண்டாக்கியிருக்கிறார் பிறநாட்டு முதலீடு மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வருவதில் இது முதல் படி ஆனால் அதனைப் பயன்படுத்திக் கொள்ள அவர் இங்கே ஏற்ற சூழலை இன்னமும் உருவாக்கவில்லை என்பதே உண்மை அவர் வெளினாட்டு உறவினை மேம்படுத்தும் பொழுது இங்கே உள்நாட்டில் அதனை பயன்பாட்டிற்குக் கொண்டுவர பாடுபட ஒரு நல்ல தலைமை இல்லை என்பதுவும் உண்மை இதனால் உண்டாகும் காலதாமதம், உடனடி ஆதாயம் வேண்டுமென (எதிர்க்கட்சிகள் மற்றும்எ ஊடகங்களால்) எதிர்பார்க்கக் கட்டாயப்படுத்தப்படும் மக்கள் நாட்டின் மேம்பாடு உற்பத்தித்திறன் குறித்த கவலை இல்லாத தொழிற் சங்கங்களால் வழிநடத்தப்படும் தொழிலாளர்கள் இவர்களை எல்லாம் சமாளிக்க ஒருமித்த கருத்தை உருவாக்கும் தலைவர் இல்லாத பொழுது இதுவரை திரு மோடி செய்த செயல்கள், இந்த பாராட்டுகள் எல்லாம் பலனில்லாமற் போக வாய்ப்பிருக்கிறது. உடனடி ஆதாயம் தேடும் மக்கள் இலவசங்களையும் தர மறுக்கும், அவருக்கு அடுத்த ஐந்தாண்டுகளைத் தருவார்களா? நாட்டின் முன்னேற்றத்தை விரும்பும் என்னைப் போன்ற பலருக்கும் "வெண்ணை திரண்டு வரும் பொழுது தாழி உடையாமலிருக்க வேண்டுமே" என்ற இந்த ஐயம் இன்னமும் இருக்கிறது கவலையாகவும் இருக்கிறது

 • HSR - Chennai,இந்தியா

  மோடிகிட்ட மோதி எவனும் ஜெயித்ததில்லை... அமேரிக்கா மட்டும் விதிவிலக்கா என்ன ? கொஞ்சம் பொறுங்கள் சீனாவையும் வழிக்கு கொண்டுவருவார்...

 • Sridhar S - Chennai,இந்தியா

  மோடிக்கு அப்பொழுது விசா மறுக்கப்பட்டதற்கு வேறு காரணங்கள் இருந்தன ... ஆனால் இப்பொழுது மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு அமெரிக்க வில் கிடைக்கிறது ... இதற்கு முக்கிய காரணம் மோடி அவரது உழைப்பே .. உழைப்பின் பயனை மோடி இப்பொழுது அனுபவிக்கிறார் .. மேலும் பல சிகரங்களை அவர் தொடுவார்

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  மிகச்சிறந்த உரை....5 நாட்கள் , 6 நாடுகளின் 50,000 கிலோ மீட்டர் பயணம், விமானத்திலேயே தூக்கம்,பின் சந்திப்பு ....இது மோடிஜியால் மட்டுமே முடியும்..

 • SSP - Ramnad,இந்தியா

  நம் பிரதமர் மோடியினால் இந்தியர்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய மரியாதை இது. மோடியின் பின்னால் இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்வதைத்தான் இது காட்டுகிறது.

 • nallavan - tiruchy,இந்தியா

  இந்தியன் என்ற முறையில் நம் நாட்டு பிரதமருக்கு கிடைத்த வரவேற்புக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.2002 ல் இவரால் இந்தியாவிற்கு கிடைத்த இழிபெயருக்கு இது ஈடாகுமா ?

 • m selvakumar - Tirupur,இந்தியா

  சுவாமி விவேகானந்தாவிற்கு பிறகு அமெரிககாவில் எழுச்சியான உரை நிகழ்த்திய நமது பிரதமருக்கு நன்றி. இந்திய மக்கள் அனைவருக்கும் பெருமை.

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  என்ன இருந்தாலும் எங்க அம்மாவுக்கு கை தட்டுற( மேசை } அளவுக்கு இல்லை .

 • Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "ஈன்றபொழுதின்பெரிதுவக்கும்தன்மகனைச் சான்றோன்எனக்கேட்டதாய்" மற்றும் "தந்தைமகற்காற்றுநன்றிஅவையத்து முந்திஇருப்பச்செயல்" என்னும் வள்ளுவப்பெருந்தகையின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் "மகன்தந்தைக்குஆற்றும்உதவிஇவன்தந்தை என்நோற்றான்கொல்எனும்சொல்" என்று கைமாறாக தன்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கு மட்டும் பெருமை சேர்க்காமல் "மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கங்கு மாலைகள் விழவேண்டும் , ஒரு மாற்று குறையாத மன்னவனிவனென்று போற்றி புகழ வேண்டும் " என்ற கவியரசு கண்ணதாசனின் கூற்றிற்கு இணங்க பாரதத்தின்பெருமைகளை பாருலகம் பாராட்டும்படி பாங்காக பறைசாற்றி, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்திய உலகமே வியக்கும்வண்ணம் பாரதம் போற்றும் பெருமகன் மோடி அவர்களின் மாண்பினை பாராட்டுவதற்கு வார்த்தைகள் ஏது?

 • Senthil - Kanyakumari,இந்தியா

  இந்தியன் என்பதில் பெருமை படுகிறேன்

 • Indian Tamilan - Trichy,இந்தியா

  பேச்சு ...பேச்சாக மட்டும் இல்லாமல் ..செயல் வடிவில் இருக்க வேண்டும் ஊர் சுற்றுவதில் மட்டுமல்லாமல் ...சொந்த ஊரில் செயல் பட வேண்டும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தூற்றுவார் தூற்றட்டும்.... போற்றுவார் போற்றட்டும்.... இந்தியா முன்னேற இடைவிடாது உழைக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள்....

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  உலகத்திற்கே தலைமை ஏற்று நடத்தும் ஒரு நாட்டின் இரு கூட்டு அவைகளின் அமர்வில், அறிஞர்களின் அவையில் அனைவரும் வியக்கும் வகையில், அனைத்து இந்தியர்களும் இதுவரை இல்லாத அளவிற்கு கர்வத்தோடு பெருமைப்படும் விதத்தில் எழுதி வைத்து படிக்காமல், சர்வதேச ராஜதந்திர உறவுகளை பற்றியும் அம்பேத்கார், காந்தி, வாஜ்பாய், ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர் கிங், ஆகியோர்களின் மேற்கோள்களை காட்டி சொல்லி பேசியதை பாருங்கள். அதை பார்த்தால் ஏன் எந்த ஒரு உலக தலைவருக்கும் இதுவரை கிடைக்காத மரியாதையை மோடி பெற்றிருக்கிறார் என்பதை உணர்வீர்கள். " அமெரிகாவையையே தன் வசப்படுத்தி விட்டார், இந்திய பிரதமர்" என்று அமெரிக்க பத்திரிகைகளும், மக்களும் வியந்து பாராட்டுகிறார்கள். ஆனால் பாருங்கள் துரதிஷ்டம், இந்தியாவில் இருந்து கொண்டே இதற்கும் எதிர்ப்பு பதிவு செய்கிறார்கள். இந்தியாவிற்கும் உலகமக்கள் எண்ணத்திற்கும் எதிராக போகும் இந்த மானிடர்களை எந்த வகையில் அழைக்கலாம்?

 • Chitra - Chennai,இந்தியா

  மோடியைப்போல மிக சிறந்த நாட்டுப்பற்றும், விரைந்து முடிவெடுத்து செயலாற்றும் திறனும், தொலை நோக்கும் கொண்ட பிரதமரை இந்தியா இது வரை கண்டதில்லை என்பது உலகறிந்த உண்மை. அமெரிக்க செனட்டர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரையின் போது அனைவரும் பல முறை எழுந்து கை தட்டி பாராட்டியதும், பிரதமரிடம் க்யூவில் நின்று ஆட்டோகிராப் வாங்கியதும் முன்பு எப்போதும் நடக்காத அதிசயம். இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலையை கொண்டு வந்த மோடியின் நல்லாட்சி நெடு நாள் தொடர வேண்டும். ஜெய் ஹிந்த்

 • Nizam Mydeen - Kuala Lumpur,மலேஷியா

  Total Talk = 45 min Claps = 64 x 4 = 256 min So Total Speach = 301 min (Which is 5 Hr he spoke in America)

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்திய அரசியல்வாதிகளுக்கு பேசவா கற்று கொடுக்க வேண்டும்? அதற்காக அமெரிக்கா எழுந்து வணங்கியது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தினமலர். இந்தியா பணக்கார நாடு. இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். முதலில் அவர்களை கவனியுங்கள் என்று யாராவது திருப்பி கேட்டால் இந்தியாவின் புகழ் பாடும் மோடி முகத்தை எங்கே வைத்துக்கொள்வார். பேசிக்கொண்டே இருக்காமல் உங்கள் விருப்பங்களை செயலில் காட்டுங்கள் மோடி ஜி.

 • Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா

  Visa was denied to Modi because the UPA Government at that time and its paid media projected him in bad light. The public opinion in US was molded by the paid media of UPA Government. Only after his resounding victory, his conduct and diplomacy with world leaders, his selfless work for the advancement of the country etc. have totally changed their perception. When hue speaks it not mere oratory, he speaks substance and Americans appreciate substance and not rehetoric

 • Susainathan - Bangalore

  this is called arrogant dinamalar doesn't have knowledge read the topic if any American read this headline he/she hate India

 • Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா

  Let Rajdeep Sardesai and Burkha Dutt realise that Modi does not need to give sops to Media and its personnel like his predecessor ( giving free ride in VIP Air Craft during Foreign travel, free booze, board and lodge and gifts galore), giving briefing and interviews on board with reporters for live tele to project his image. In spite of blacking out his major achievements by his diplomacy ( release of prisoners from Qatar for example during this trip) , the paid media berates him as NRI PM, Visiting PM etc.

 • Selvaraj Kalasubramanian - Muscat,ஓமன்

  பாரத் மாதா ஜி கி ஜே.....

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  சோழியன் குடுமி சும்மா ஆடாது. எங்களுடைய நினைவுகள் அமெரிக்காவின் நினைவுகள் அல்ல.

 • parthiban - coimbatore,இந்தியா

  வாழ்த்துக்கள்

 • govind - KL,மலேஷியா

  மோடி G .. கலக்குறிங்க . வாழ்க அண்ணா நாமம்

 • Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்

  india great... best of luck PM sir...

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  நெருப்பு டா

 • sun flower - tirupur,இந்தியா

  எதிர்மறையாக பேசுபவர்களுக்கு பதில் சொல்வது சொற்களால் அல்ல செயல்களினால் ....நிதானம், தெளிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஒயாத உழைப்பு, அர்பணிப்பு, நாட்டுப்பற்று. வெறுப்பை அன்பால் வெல்வதும், இன்னா செய்தாரை அவர் நானா நன்னயம் செய்தல். இந்தியாவிலிருந்து உலகத்திற்கு ஒரு தலைவர். வாழ்த்துக்கள்.

 • Ambika. K - bangalore,இந்தியா

  உலகம் முழுவதும் பாராட்டினால் என்ன எங்க தானை இ வி கே எஸ் மற்றும் யெச்சுரி போன்ற அகில உலக தலைவர்கள் பாராட்டினால் தான் ஒப்புகொள்வோம்.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  அமெரிக்காவில் இந்தியர் ஒருவருக்கு இந்த அளவிற்கு பாராட்டு கிடைத்துள்ளது விவேகாந்தருக்கு (சிகாகோ மாநாட்டு உரையின் போது) பிறகு பிரதமர் மோடிக்கு தான்.சூப்பர். வாழ்த்துக்கள் மொடிஜி.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  நல்ல மனிதற்கு /மனதுக்கு கிடைத்த பரிசு இது. கிரேட் மொடிஜி. வாழ்த்துக்கள்

 • nln2000 - madurai,இந்தியா

  i PROUD TO BE AN INDIAN

 • SRIVIRAJA - SRVILLIPUTTUR,இந்தியா

  இது அப்பழுக்கற்ற கருத்து. இந்தியா அமைதி சமாதானம் சமரசப்போரில் வல்லரசாகும் நாள் அருகில் உள்ளது. வந்தே மாதரம் என்போம் இந்தியனாக பெருமை கொள்வோம்

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  வாழ்த்துக்கள் மோடி அவர்கட்கு , அங்கு இந்தியாவை பெருமை பெறச்செய்தார் . இங்கு வந்து இந்தியர் வாழ்வை வளமாக்க வேண்டும்

 • Vijay - Bangalore,இந்தியா

  நான் மோடி ரசிகன் .. உண்மையிலேயே மிக பெரிய விஷயம். ஆனால் 45 நிமிடங்கள் அவர் நிகழ்த்திய உரைக்கு 64 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் கைதட்டு அடங்குவதற்கு 4 நிமிடங்களுக்கு மேல் ஆனது. அப்படியானால் மொத்தமாக 63 X 4 = 252 நிமிடங்கள் கை தட்டியுள்ளனர். அவரது உரையே 45 நிமிடங்கள் தான். ஆனால் 252 நிமிடங்கள் கை தட்டினார்களா ? உரை முழுவதும் கை தட்டியிருந்தாலும் 45 நிமிடங்கள் தானே கை தட்ட முடியும்.

 • Rajesh - Bangalore,இந்தியா

  இது இந்திய பிரதமர் ஒருவருக்கு கிடைத்த பாராட்டாக பார்க்கப்படவில்லை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் கிடைத்த பாராட்டாகவே பார்க்கப்படுகிறது. ஜெய் ஹிந்த்

 • Lakshmanan Iyengar - MADURAI,இந்தியா

  சாதிக்கப்பிறந்த இந்திய தேசியவாதி

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  I am absolutely salute mr. Modi Jiiii

 • கார்த்திக் சித்தன் - சிவலோகம் ,இந்தியா

  இந்தியனின் பெருமையை உலகில் உயரச்செய்த மோடி அவர்களே, நீங்கள் பல்லாண்டு வாழ்க

 • S.Govindarajan. - chennai ,இந்தியா

  மலைபோலே வரும் சோதனையாவும் பனி போல் நீங்கிவிடும். நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலை வணங்கிட வைத்துவிடும். இந்த பாடல் வரிகள் இப்போது மோடி விஷயத்தில் உண்மையாகி விட்டது. அமேரிக்கா தலைகுனிந்து வணங்கி விட்டது,

 • பெருவை பாலா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்

  மோடி ஒரு காய் நகர்த்தினால் அதில் எதனை நன்மை பாருங்கள் .........நேற்று சீனா மோடி அமெரிக்காவில் இவ்வளவு வரேவேர்ப்பு கிடைத்தற்கு எரிச்சல் அடைந்து அதற்கு எதிராக கட்டுரை எழுதி உள்ளது என்று செய்தி வந்து உள்ளது ............மோடி சீனாவையே கவலை கொள்ள செய்து விட்டார் என்று இதை புரிந்து கொள்ள முடிகிறது ,எதிரிகளை கலக்கம் கொள்ள வைப்பது தான் ஒரு சிறந்த ராஜாதந்திரி ...........சீனாவே இவ்வளவு கலங்குகிறது என்றால் pakistan நிலை என்னவாக இருக்கும் என்று யூகித்து கொள்ளலாம் ........மோடி மிக சரியான பாதையில் இந்த அமெரிக்க பயணம் அமைந்து உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்

 • abu lukmaan - trichy,இந்தியா

  மோடி ஜி கு பாராட்டு .அதே நேரத்தில் அமெரிக்கா வின் வியாபார நரி தந்திரம் புரிகிறது . நேற்று ஒரு டிவி யில் அமெரிக்கா இந்தியாவில் 6000 MW அணு மின் சக்தி அமைக்க போகிறது .அதற்கு இந்தியா 2,85, 000 கோடி கொடுக்க வேண்டும் . இதே ரஷ்ய தயாரிப்புக்கு 45,000 கோடி போதும் . ஒன்னும் புரிய வில்லை .யாரும் பதில் சொல்ல வில்லை .

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  எழுதி கொடுத்ததை நன்றாக மனப்பாடம் செய்து நன்றாக நடித்தால் படம் நன்றாக ஓடும் . ரசிகர்கள் விசில் அடித்து கும்பி அடிப்பார்கள் . படம் 100 நாள் ஓடும். செயல் படுதபடவேண்டும். இங்கு நாடு மோடிய பார்த்து இந்தியர்கள் ,வரட்சியில் வெடித்து நிற்கும் பூமி, வறுமை மதவாதம் , ஊழல் எல்லாம் கூடி கைகொட்டி சிரிக்கிறது . இன்பசுற்றுலா முடிந்ததும் கவனிப்பாரா . இல்லை முழக்கம் தானா

 • rmr - chennai,இந்தியா

  இது போதாது நாங்க அதுக்கு மேல எதிர்பார்கிறோம் . எங்கள் அம்மா சேயுற மாதுரி அவுங்கள குனிகி வணக்கம் சொல்ல வைக்க முடியுமா இல்ல காலுல விழ வைக்க தான் முடியுமா , அனா அம்மா நினைச்சா இதெலாம் முடியும் , இதெலாம் எப்படின்னு கேக்காதிங்க இதெலாம் அம்மாவின் சினிமா அரசியல் தந்திரம் . வாழ்க மோடி வளர்க இந்தியா

 • Siva - Chennai,இந்தியா

  இந்தியர் அனைவருக்கும் இது ஒரு பெருமிதமான தருணம். பாரத் மாதா கீ ஜே

 • பெருவை பாலா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்

  மோடி அவர்களின் சுற்றுப்பயண பயனை அறுவடை செய்ய இன்னும் 5 முதல் 7 வருடங்கள் காத்திருக்க வேண்டும் .அதுவரை அவரை நாம் பிரதமராக வைத்து இருந்தால் ,நாம் வல்லரசாக மாறுவதை எந்த அந்நிய சக்தியாலும் தடுக்க முடியாது.

 • Damu - Coimbatore

  லைவாக பல சேனல்கள் ஒளிபரப்பின ஒரு சிறிய குறிப்புகூட இல்லாமல் கோர்வையாக ஆங்கிலத்தில் இந்திய உணர்வுகளை வார்தைகளில் சிற்பங்களாக செதுக்கி வைத்தார் ஒரு முக்கால் மணி நேரத்திலேயே பாரதத்தை பலாயிரம் அடிகள் உயர்திவிட்டார் உல்லாச பிரயாணம் செல்கிறார் ஊதாரித்தனமாக செலவு செய்கிறார் என்பவர்களுக்கு நல்ல பதில்

 • Unmayaana veeran - tanjore,இந்தியா

  இப்பவும் எவனாவது மோடி ஊர் சுத்துராருனு கம்மன்ட் போடட்டும் ......அவ்வளுதான்

 • Subramaniam Ramesh - madurai,இந்தியா

  மன்னிக்கவும் தினமலரே, அவர் வணங்க வைக்கவில்லை, 100 கோடி இந்திய மக்கள் அவருக்கு வாக்களித்து, பிரதமராக அழகு பார்த்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தோம், இல்லையெனில் அவருக்கு நீங்கள் சொன்ன அதே விசா கிடைக்காமலே போய் இருக்கும், இந்த பெருமை எங்களைத்தான் சேரும்.....

 • Velu Karuppiah - Chennai,இந்தியா

  அப்போது அவருக்கு விசா மறுத்தது மத வெறிக்கு துணை போன மனிதருக்கு. இப்போது அவரை மதிப்பது இந்தியாவின் பிரதமராக . இதில் என்ன பெரிய வரலாறு காணாத புகழ் கிடைத்து விட்டது குப்பனும் சுப்பனும் பிரதமராக போனால் கிடைக்கும் மரியாதைதான். காரியம் வெற்றி பெற முடியுமா என்று பாருங்கள்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இந்த ஊடகங்கள் தான் மோடியை விடாமல் அவர் நின்றாலும் அசைந்தாலும் உட்கார்ந்தாலும் பாராட்டியே தீருவதுன்னு கங்கணம் கட்டிகொண்டு இருக்கிறாங்க, எல்லாம் சரி நமக்கு என்ன நன்மை, லண்டன் நாடாளுமன்றத்தில் கலாம் பேசி பூங்குன்றனார் பாடல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி அதற்க்கு விளக்கம் சொல்லி அசத்தினார், ஆனால் யார் பாராட்டுவார்கள், மோடியாக இருந்தால் எல்லாமே கிடைக்கும்

 • ALENA - Thanikkottam,இந்தியா

  This is not a new one to Shri. Modi Ji.

 • ST - Brooklyn , NY

  I don't understand aboutc. this news i am living in New York I never ever see Modi in any news channel I think to much for indian media all the time published about vacation PM

 • kumar - Coimbatore

  modi j great!!!

 • Veerasekar - Tokyo,ஜப்பான்

  மடை திறந்த வெள்ளம் போல மோடி அவர்களின் பேச்சு இருந்தது. பொதுவாக இந்திய பிரதமர்கள் குறிப்பு எழுதி அதை படிப்பார்கள். ஆனால் நமது பிரதமர் அவர்கள், எவ்வித குறிப்புகளும் அன்றி மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார். வாழ்த்துக்கள்

 • srinivasan - thanjavur

  modi ji is always ultimate

 • Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ

  இந்திய மக்களே... நம்மை பெருமைபடுத்த, நம்மை வாழ்விக்க ஒரு இந்தியர் பிறந்துவந்துள்ளார். அனைவரும் அவர்க்கு ஆதரவு அழித்துவிடும் நம்மை பெருமை படுத்திக்கொள்வோம். ஒரு 10 ஆண்டுகள் இந்த நாட்டின் ஆட்சியை அவரிடம் கொடுப்போம் என்று சங்கல்பம் செய்துகொள்ளுங்கள். நம்மை நிச்சயம் நல வாழ்வு வாழ அமைத்து கொடுப்பார். வாழ்க மோடி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement