Advertisement

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கில், வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது, சுப்ரீம் கோர்ட்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர்களுக்கு, தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து, சிறப்பு கோர்ட் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, 2014 செப்., 27ம் தேதி, தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி, சிறப்பு கோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்ததுடன், நால்வரையும் விடுதலை செய்து, 2015, மே11ம் தேதி, தீர்ப்பு அளித்தார்.இந்த தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த ஆண்டு, ஜன., 8ம் தேதி முதல், தொடர்ந்து இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நேற்று நிறைவடைந்தன. அதை தொடர்ந்து, தீர்ப்பைஒத்திவைப்பதாக, நீதிபதிகள், பினாகி
சந்திர கோஸ், அமிதவ் ராய் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, நேற்று அறிவித்தது.அனைத்து தரப்பினரும், தங்கள் வாதங்களை, வரும் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும், அமர்வு உத்தரவிட்டது. கோடை விடுமுறைக்கு பின், கோர்ட் திறக்கப்பட்டதும், தீர்ப்பு தேதி வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பரபரப்பு'தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான இந்த வழக்கில், தீர்ப்பு எப்படி இருக்கும்' என, தமிழக கட்சிகள் இடையே, மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (237)

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  66 கோடி ஊழல். அதை விசாரிக்க 600 கோடி செலவு. இதுதான் ஜனநாயகம். ஆயிரம் லக்ஷம் கோடிகளில் ஊழல் செய்தவநேல்லாம் சுதந்திரமாக சுற்றி வருகிறான். நான்கு வருடத்தில் ஒரு கவுன்சிலர் இரண்டு மனைவி மூன்று வீடு நான்கு கார் கோடிகளில் பணம் சம்பாதித்தது விடுகிறான். எவன் மீதாவது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? அரசியல் காரணங்களுக்காகவே இத்தகைய வழக்குகள் போடப்படுகின்றன.

 • Panneer - Puduchery,இந்தியா

  தீர்ப்பு தெரிந்தது தான்.சசிகலா,& கோ எப்படி குறுகிய காலத்தில் சொத்து சேர்த்தார்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியாயப்படுத்துவார்களா? சட்டத்தில் உள்ள ஓட்டைகளை சுட்டிகாட்டி வழக்கை தள்ளுபடி செய்து மழுப்பலான தீர்ப்பு தான் வரும்.. முற்றிலும் மாறுபட்ட இரண்டு தீர்ப்புகளில் குறிப்பிட்ட அடிப்படைகள் சரியா தவறா என்பதை இறுதி தீர்ப்பில் விளக்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு இல்லாமல் போனால் ஜனநாயகம் ,மற்றும் அரசமைப்பு சட்டம் மீது நம்பிக்கை போய்விடுமே

 • ravi - thiruvananthapuram,இந்தியா

  அமரர் கல்கி அவர்கள் ,அனந்த விகடனில் ,1928 வருடம் ,சட்டம் ஒரு கழுதை என்று ஓர் கட்டுரை எழுதி இருந்தார் .அதில் நீதி மன்றங்களில் வழங்க படும் தீர்ப்புகளில் உள்ள குறைகள் ,நீதி வேறு ,சட்டம் வேறு என்று அழகாக எடுத்து காட்டி இருந்தார் .வக்கீல்களின் பேராசை, நீதிபதிகளின் முட்டாள்தனங்களும் சிறப்பாக எடுத்து உரைக்கப்பட்டிருந்தது .

 • KNR - Torronto,கனடா

  இனிமே கணித மேதை ராமனுஜம் கணக்கை தொடர்பவர்கள் இனிமேல் கொமாரசாமியின் கணக்கை தொடரலாம் என்கிற வகையில் ஒரு சூப்பரான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திடம் இருந்து வரபோகுது... அனைத்து கல்விநிலையங்களிலும் கணித துறையில் கொமரசாமி படம் வைக்கப்படும்...இனிமேல் அகர்வால் எழுதிய வருமானவரி சட்டங்கள் புத்தகம் ஒழிக்கப்பட்டு உச்சநீதிமன்றம் இயற்ற போகும் வருமானவரி சட்டம் புத்தகம் மற்றும் அருண் ஜெட்லி கைடு நடைமுறைக்கு வரும்... இவ்விரண்டு புத்தககளுக்கும் டீ கடைக்காரரின் முன்னுரை கட்டாயம் பிரசுரம் ஆகும்...ஹா ஹா ஹா... வெள்ளையா இருக்கிறவங்களும், கான்வென்ட்டில் ஆங்கிலம் படித்தவர்களும் பொய் சொல்லமாட்டார்கள் என்கிற மாபா பாண்டியன் எழுதிய நீதி போதனை புத்தகமும் இனிமேல் நன்னெறி பாடமாக வைக்கப்படும்..

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இந்த வழக்கு தள்ளுபடி ஆகிவிடும் .ஏனென்றால் கர்நாடக அரசுக்கு "லோக்கல் ஸ்டாண்டி" இல்லை.அவர்களுக்கு அப்பீல் செய்யும் அதிகாரம் கிடையாது.அவர்கள் தமிழ்நாட்டில் வழக்கை நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை நிறைவேற்றவே.அதற்குமேல் அந்த அரசு appeal செய்தது சட்டப்படி செல்லாது.

 • KNR - Torronto,கனடா

  பணம் பத்தும் seiyum

 • Anbarasan Muthaiah - THENI,இந்தியா

  நீதி தேவதை செத்து பல வருடமாச்சு

 • Cool Krish - Karur,இந்தியா

  நாமெல்லாம் மிகவும் சாமானியர்கள்... தீர்ப்பு எப்பிடி வந்தாலும் ஏற்றுகொள்ள வேண்டும்...நம் இந்தியாவில் மட்டும் தான் ஒரு குற்றத்திக்கு 2 தீர்ப்பு கிடைக்கும்...மிக கேவலமான ஒரு அரசியல் அமைப்பு..... ஆரம்பம் முதலே இந்த வழக்கு திசை மாறி தான் போகின்றது...நடுவர் குழுவில் இருப்பார்கள் இடையில் மாற்றப்பட்டது அனைவரும் மறக்க முடியாது......570 கோடி, குமாரசாமி, தேர்தல் முடிவு....... கூட்டி கழித்து பார்த்தால் நம் போன்ற சாதாரண மக்களுக்கு பட்டை நாமம் தான் மிஞ்சும்..... ஜெயலலிதாவை பொறுத்தவரை இந்த ஒரு தீர்ப்பு கடைசி நிபந்தனையாக இருக்கும்....ஆமாம் நாம் எப்பொழுது நல்ல தலைவர்களை தேர்ந்து எடுப்போம்???

 • C Suresh - Charlotte,இந்தியா

  பொழப்பத்த கிறுக்கன்கள எவ்வளவு நாள் தான் தமிழக மக்களுக்கு டென்ஷன் கொடுப்பார்கள். உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து கண்டனமும் தெரிவிக்க வேண்டும்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இன்டெர்னெட்டில் தான் பாட்டி, தாத்தாக்கள் பெயரில் லட்சம் கோடிகள் இருப்பது தெளிவாக இருக்கின்றதே. ஆமா எனக்கு ஒன்று புரியவில்லை. பெரியபெரியபாட்டி பெயரில் 52 லட்சம் கோடி, நம்மபாட்டி பெயரில் 1.5 லட்சம் கோடி, தாத்தா1 பெயரில் 1.5 லட்சம் கோடி தாத்தா2 பெயரில் வெறும் 0.55 லட்சம் கோடி? ஆமா இதை வச்சி இவங்க என்ன செய்யப் போகின்றார்கள் செத்தபின்பு. பாவமாக இருக்கின்றது இவர்கள் வாழ்க்கைச்சகடம்.

 • lakshmanaraj - virudai

  இந்த முறை ஆட்சியை தாத்தாகிட்ட கொடுத்திருந்தா தமிழ் காக்கும் தாத்தா குடும்பத்தை தவிர மீதி எல்லோரும் குசேலர்களாக மாறியிருக்கலாம்.வாய்ப்பு நழுவிடுச்சி.

 • T Jayaprakash - Tirupur,இந்தியா

  மற்ற வழக்குகளிலிருந்து வெளிவந்தது போல ஜெ. விடுதலை ஆவார்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அநீதிமன்ற தீர்ப்பு தான் பட்டவர்த்தனமாக, தெளிவாக தெரிகின்றது ( ராஜ்ய சபாவில் பி.ஜெ.பிக்கு ஆதரவு தருகின்றது பாட்டிகள் கழகம் தமிழ்னாடு முதல்-வங்காளம் வரை ) மோடியின் உத்தரவின் பிரகாரம் விடுதலை, கொஞ்சம் கெஞ்சலோடு, இனிமேல் நீங்க இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று. ட்ரம்ப் படம் போட்ட டிஸ்யு பேப்பர் கொண்டு துடைத்து போட்டுவிடவேண்டியது தான்.

 • rmr - chennai,இந்தியா

  பணம் இருந்தா என்ன வேணாலும் பண்ணலாம்னு சொல்லுறாங்க

 • murumaha - madurai,இந்தியா

  கோக்கு மாக்கான வழக்குக்கு என்றும் சரியான தீர்ப்பு வந்தது கிடையாது. லஞ்சம் எப்படி வந்ததுன்னு தெரியாதாம், யார் கொடுத்ததுன்னு தெரியாதாம். நேரிடை சாட்சி யாரும் கிடையாதாம். கூட்டி பார்த்தலுல சொத்து கூடியிருக்காம். பணம் வங்கியில் போட்டதுக்கு சாட்சி இருக்காம், பணத்த வங்கில போடாம எங்க போடுவாங்க? சொத்து வாங்கினதுக்கு சாட்சி இருக்காம். சொத்து பத்திரமே சாட்சி தான? சாட்சி இல்லாம யார் பத்திரம் பதிய முடியும். இப்படி யாரெல்லாம் அவங்களுக்கு வேலை செஞ்சாங்களோ அவங்கெல்லாம் சாட்சியாம். ஆனால் ஒன்னு மட்டும் நீங்க சொல்லல, 1991-1996ல் முதலமைச்சரா தமிழ் நாட்டில் இருந்ததால, நாட்டில உள்ள எல்லா கம்பெனி, மக்களோட வருமானத்த அந்த அம்மா வருமானம்னு சொல்லல, அதெயும் கொஞ்சம் சொல்லிருந்திங்கனா வழக்கு இன்னும் கொஞ்சம் விளங்கியிருக்கும்.................ஒரு பெண்ணை வளரவிட கூடாது என்பதற்கு இந்த மட பய வழக்கே சாட்சி.................இந்த வழக்க 18 வருடம் இழுத்ததுக்கு காரணம் அந்த அம்மா இல்ல, கணக்கு புரியாம வழக்க நடத்தினது தான்.............நான் சொன்ன கணக்க யோசிங்க, உங்களுக்கே தெரியும் தீர்ப்பு என்ன வரும் என்று..............அம்மாவுக்கு விடுதலை என்று தீர்ப்பு வரும்....... அம்மாவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..............உங்கள் மக்கள் சேவை மீண்டும் துரிதமாக வாழ்த்துக்கள்.

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  வாய்தா வாங்கியே 18 வருடம் பறந்திருச்சு இனி ஒத்தி வைத்தே 9 வருடம் கழிப்பார்கள் அப்புறம் தீர்ப்புக்கு திருவோடு தான். ஜைஹிந்த்...

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  19 வருடம் வழக்கு . இன்னும் முடியவில்லை . தேசத்தின் நீதி , நீதிபதிகள் எல்லாம் குமார சாமி மாதிரி தான் . 4 + 3 = 2 . கேட்க நாதி இல்லை . இது இப்படின்னா 2000, 3000, 4000, 10000 பிம்ளிக்காபிம்பா .. 2000, 3000, 4000, 10000 பிம்ளிக்காபிம்பா என்று திரும்ப திருப்ப சொல்கிறது உச்சநீதிமன்றம்

 • venkatesh - coimbatore,இந்தியா

  நம்ம நாட்ல ரெண்டு துறைகள் ரொம்போ ரொம்போ சுத்தமாம் ஒன்னு வருமான வரித்துறை இன்னொன்னு நீதி துறை அதுல பாருங்க வருமான வரித்துறை சொல்வதை நீதி மன்றம் வேதா வாக்கா எடுத்துக்குமாம் நீதிமன்றம் சொல்வதை மக்கள் வேத வாக்கா எடுக்கணுமாம் எப்படி 25 லட்சம் குடுக்க வந்தாங்க என்று ஒரு நீதிபதி கேசு வேண்டாம் என்றார் எத்தனை பேர் வாங்கி வாங்கி பெட்டியில போட்டங்களோ மக்கள் எல்லாம் இழிச்சவாயர்கள் நீதித்துறையை கட்டி வைத்திருப்பது நிதி துறை.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இதுக்கு நடுவால, முதலமைச்சரா பதவி ஏத்துக் கிட்டாத காரணம் காட்டி பாட்டி டெல்லிக்கு 2,3 கன்டைனரோட ஒரு டூர் அடிக்கும். சு சாமியே மனுவைத் திருப்பப் பெற்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

 • kalai - Madurai,இந்தியா

  இன்னுமா கட்டுமரத்த நம்புரானுங்க

 • Narayana Moorthi - sytney,ஆஸ்திரேலியா

  பி.ஜே.பி க்கு அ.தி.மு.க தயவு தேவைப்படுகிறது, எனவே தீர்ப்பு சாதகமாகவே வரும். சட்டம் தூங்கி கோமா நிலைக்கு போய் விட்டது.

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  தீர்ப்பை பற்றியெல்லாம் கூட கவலை இல்லை எனக்கு .நீதிபதியின் மனத்தினூட சட்டம் பொருந்தி தீர்ப்பு இருக்கும். கணக்கு பிழையை எப்படி இந்த இரண்டு பரம்பரை நீதிபதிகள் எடுத்து கொள்ள போகிறார்கள் என்பதே என் கவலை . ஒருவேளை குமாரசாமியை குற்றம் குறை கூறினால் அவர்கள் முகத்தில் அவர்கள் உமிழ்வது போன்றல்லவா இருக்கும்.

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  இந்த வழக்கில் ஜெயா மற்றும் மூவர் குற்றவாளிகள்தான் என்பது எப்போது உறுதியாகி விட்டது. சட்டத்தில் உள்ள ஓட்டைகள், பணபலம், அதிகார பலம் மற்றும் சாட்சிகளை கலைத்தல் மற்றும் அழித்தல் போன்ற பல அயோக்கியதனங்களால்தான் இவ்வளவு ஆண்டுகள் பாட்டியால் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிக்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல் குமாரசாமியின் குருட்டுத்தனமான தீர்ப்பால் தப்பிக்கவும் முடிந்தது. குன்ஹாவின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. கருணை அடிப்படையில் சில லட்சங்களை சேர்க்காமல் விட்டதுதான் குன்ஹா தீர்ப்பில் உள்ள ஒரே பிழை. அது தவிர வேறு எந்த பிழையும் இல்லை. ஆனால் குமாரசாமியின் தீர்ப்போ சர்ச்சைகளில் மொத்த உருவம். தான் மனம் போன போக்கிலோ அல்லது பணம் வாங்கிய போக்கிலோ அவர் எழுதிய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சேர்ந்த தீர்ப்புதான் அவரின் தவறான தீர்ப்பு. என்னதான் அடிமைகள் குமாரசாமியின் தீர்ப்பை புகழ்ந்து சொல்லி, அதுவே சரியான தீர்ப்பு என்று உரக்க கத்தி உண்மையை மறைக்க முயன்றாலும், அவர்களால் ஒன்றை மட்டும் எதிர்க்கொள்ள முடியாது. அதுதான் குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள கணக்குப்பிழை. அப்படியே குமாரசாமி காசுக்கோ அல்லது அதிகார பலத்திற்கோ வளைந்து கொடுக்காமல் நேர்மையாக சொத்துக்களை மதிப்பிட்டு தீர்ப்பு சொன்னார், என்று ஒரு விவாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் கணக்கில் ஏன் அப்படி தெரிந்தே பிழை செய்தார்??? ஏன் அடிமைகள் கட்சியினர் அதைப்பற்றி மூச்சு விடுவதில்லை??? மற்றவற்றை எல்லாம் விட்டுவிட்டு அந்த கணக்கு பிழையை மட்டும் சரி செய்தாலே, குற்றம் உறுதியாகுமே. நால்வரும் கம்பி எண்ண வேண்டுமே. ஆகவே நீதி என்பது இந்தியாவில் அரசியல் அதிகாரத்திற்கும் பணத்திற்கும் வளைந்து போகும் அளவுக்கு வலுவில்லாதது. கண்டைனர் பணம் எங்கே போனது? தாமரையின் தலையீடு இந்த வழக்கில் உள்ளதா??? நாடாளுமன்றத்தில் அடிமைகள் கட்சியின் ஆதரவு எந்த அளவுக்கு தேவை? போன்ற பல கேள்விகளுக்கான பதிலை பொறுத்துதான், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு தெரியும். ஆனால் குற்றம் செய்த இந்த நாள்வரை ஏற்கனவே நீதி கொஞ்சமாவது தண்டித்து விட்டது என்பது, நேர்மையை நம்பும் மக்களுக்கு சற்று ஆறுதல்.

 • Snake Babu - Salem,இந்தியா

  உண்மைதான் அய்யா Ganesan - Bangalore,இந்தியா அவர்களே. இதுபோன்ற காரணங்களால் தான் நக்சலைட்டுகள் உருவாகிறார்கள். உங்களை போன்றோர் எண்ணம் தற்போது கருத்தாக வெளி வருகிறது. அது செயலில் வருவதற்கு இன்னும் கொஞ்ச நாள் பிடிக்கும். மேலும் நண்பர்கள் கருத்தை பார்க்கும் பொது கொஞ்ச பேர் கொந்தளிப்புடனும் கொஞ்ச பேர் எறிவது தன்வீடு என்று தெரியாமல் இதற்கு JAY மீது சப்போர்ட் செய்து கருத்து போடுகிறார்கள். இவங்கள் எதோ விதத்தில் இந்த கொள்ளை பணத்தில் பங்கு கொள்கிறார்களா என்ற சந்தேகம் வேறு வருகிறது. ஆனால் நீதித்துறை இப்படி சென்று கொண்டிருப்பது ஆரோக்கியமானது அல்ல.நன்றி வாழ்க வளமுடன்.

 • KNR - Torronto,கனடா

  இனிமே கணித மேதை ராமனுஜம் கணக்கை தொடர்பவர்கள் இனிமேல் கொமாரசாமியின் கணக்கை தொடரலாம் என்கிற வகையில் ஒரு சூப்பரான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திடம் இருந்து வரபோகுது... அனைத்து கல்விநிலையங்களிலும் கணித துறையில் கொமரசாமி படம் வைக்கப்படும்...இனிமேல் அகர்வால் எழுதிய வருமானவரி சட்டங்கள் புத்தகம் ஒழிக்கப்பட்டு உச்சநீதிமன்றம் இயற்ற போகும் வருமானவரி சட்டம் புத்தகம் மற்றும் அருண் ஜெட்லி கைடு நடைமுறைக்கு வரும்... இவ்விரண்டு புத்தககளுக்கும் டீ கடைக்காரரின் முன்னுரை கட்டாயம் பிரசுரம் ஆகும்...ஹா ஹா ஹா... வெள்ளையா இருக்கிறவங்களும், கான்வென்ட்டில் ஆங்கிலம் படித்தவர்களும் பொய் சொல்லமாட்டார்கள் என்கிற மாபா பாண்டியன் எழுதிய நீதி போதனை புத்தகமும் இனிமேல் நன்னெறி பாடமாக வைக்கப்படும்..

 • Balaji - Khaithan,குவைத்

  மீண்டும் தமிழகம் தலைகுனிய வேண்டிய கட்டாயம் வருமா என்று தெரியவில்லை.... நீதி இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதாக தீர்ப்பு இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்..... ஆனால் என்ன அதன் பிறகு நடக்கும் கொடுமைகளைத்தான் தாங்க முடியாமல் இருக்கும்...... தீர்ப்பு எப்படி அமையவிருக்கிறது என்பது பற்றி ஏற்கனவே நீதிபதிகள் சில கருத்துக்களின் மூலம் உணர்த்தியுள்ளதால் நீதி கிடைக்குமா என்பது வேறு விஷயம்...... பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று..

 • g.s,rajan - chennai ,இந்தியா

  அம்மா இந்த போலி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கட்டாயம் வெளி வருவார் என்பது உறுதி .

 • Malaichaaral - Ooty,இந்தியா

  திமுகவின் பழிவாங்கும் படலத்தில் ஜெயா சிக்கி விட்டார்.. இதற்க்கு ஆச்சார்யா, குன்ஹா, சு.சாமி ஆகியோர் உடந்தை.. கட்டுமரத்திடம் இல்லாத சொத்தா?

 • Parthiban V - Tamilnadu,இந்தியா

  அபராத தொகையுடன் விடுதலை செய்யப்படுவார் அம்மையார் ஜெ.ஜெ.

 • $$$$ - $$$$,இந்தியா

  என்னய்யா...இது...ஜவ்வா இழுக்குது? ....இதை 20 வருஷம் முன்னமே சொல்ல வேண்டியது தான? இப்ப வந்து எழுதி குடுன்னு அந்த அம்மணி "எனக்கு வழக்கு விபரங்கள் அனைத்தும் தமிழில் வேண்டும்" ன்னு கேட்ட மாதரியே இருக்கே?

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  இது தான் செல்வி ஜே ஜே வின் வெற்றி, தீர்ப்பு சொல்ல முடியாமல் திணறும் நிலை. இது தான் செல்வி ஜே ஜெயலலிதாவின் வெற்றி. இந்த தீர்ப்பு எவ்வளவு காலம் ஒத்தி வைக்கிறார்களோ அவ்வளவுக்கு மு கருணாநிதி, மற்ற எதிர் கட்சிகள் செல்வி ஜே ஜே வின் மக்கள் ஆதரவை கண்டு பயபடுகிறார்கள்.

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  சட்ட நீதி துறை உழியர்கள் - அரசு சம்பளம் வாங்கும் உழியார்கள் தான் இவர்கள் அரசியல் செய்வது தான்................. உண்மையில் நீதி அரசர்கள் என்றால் இந்த ஒத்த ரூபாய் சொத்து வழக்கு என்றோ தள்ளுபடி செஇயபட்டுஇருக்கும். நான் சொல்கிறேன் - இது செல்வி ஜே ஜே விற்கு எதிராக, இந்த ஆண், கோழை, மக்கள் ஆதரவு இல்லாத அரசியல் வாதிகள் கையில் வைத்திருக்கும் அரசியல் அஸ்திரம் அவ்வளுவ் தான் செல்வி ஜே ஜே வின் இந்த வழக்கின் தீர்ப்பை இவர்கள் யாரும் வெளியே வர விடமாடார்கள் - தீர்ப்பு செல்வி ஜே ஜே விற்கே, சாதகமோ, பாதகமோ செல்வி ஜே ஜே வின் அரசியல் ஆற்றல், மக்கள் ஆதரவு வளரும், பெருகும் அதில் எந்த ஐயமும் இல்லை. அகவே தான் இந்த கோழைகள் இதை - வைத்து பூச்சாண்டி காட்டிகொண்டு மக்களை ஏமாற்றி ஏதாவது சீட்டு, ஓட்டு தேறுமா என்று பார்கிறார்கள் நல்ல சட்ட நீதி துறை அரசு ஊழியர்கள் அரசியல் செய்யகூடாது என்று சட்டம் இருக்கிறது அதை முதலில் இந்த நீதிபதிகள், நீதியரசர்கள் என்று அழைக்கும் இந்த அரசு சம்பளம் வாங்கும் சட்ட, நீதித்துறை உழியர்கள் முதலில் கடைபிடிக்கட்டும். தீர்ப்பு வரும் பொது வரட்டும் இந்த பூச்சாண்டி வேலையை நிருந்துகள் செல்வி ஜே ஜே வின் மக்கள் ஆதரவு, செல்வி ஜே ஜே வின் ஊழல் அற்ற ஆட்சி, மக்கள் நலன் ஆட்சி அது தான் உண்மை. மற்றதெல்லாம் அரசியல் - மு.கருனைதியின் வன்கொடுமை, அரசியல் திவிரவாதின் தீயசக்தியின் அழிவு வேலை அழிந்துவிட்டது மு. கருணாநிதி தான் என்று இன்னும் தெரியாமல் இது ஏதோ பிதற்றிக்கொண்டு இருக்கிறது

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  அரசியல்வாதிகள் நடிகர்கள் இந்த இருவருக்கும் நம் இந்திய நாட்டில் தனி அந்தஸ்த்து இருக்கிறது. இந்த அடிப்படையில் தான் கடந்த கால முக்கிய நபர்களின் தீர்ப்புகள் அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. இவர்கள் எது வேண்டுமானாலும் பண்ணலாம் என்று இந்த தீர்ப்பின் மூலம் மீண்டும் மக்களுக்கு தெரியப்படுத்தும்.

 • Mahendran TC - Lusaka,ஜாம்பியா

  தீர்ப்பைத் தான் போன வாரமே நீதிபதிகள் சொல்லி விட்டார்களே ?

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  குமாரசாமி சொன்ன தீர்ப்பு சரியா இல்லையா அதுக்குதான் மேல் முறையீடு. சரின்னு சொல்ல முடியாது அது எல்லாத்துக்குமே தெரிந்த விசயம்தான். ஆனால் இதை எப்படி சூதகமாக அம்மையாருக்கு சாதகமாக தீர்ப்பு சொல்வார்கள் என்றுதான் தெரியவில்லை.

 • uma - chennai

  ஜால்ரா கணேசன் அவர்களே மக்கள் உன்னைப் போல் நினைத்திருந்தால் மாற்றும் ஏற்பட்டிருக்கும்

 • SSP - Ramnad,இந்தியா

  ஜேஜே வருமானத்துக்கு அதிகமாக சம்பாதித்தது அவருக்கே தெரியும். அதே நேரம் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது கருணாநிதிக்கும், இந்த உலகத்திற்கும் தெரியும். நீதிபதிகளுக்கு மட்டும் இந்த விசயம் தெரியமலா இருக்கப் போகிறது?

 • இளவல் கார்த்திக் - மதுக்கூர் ,ஐக்கிய அரபு நாடுகள்

  மீண்டும் அந்த மண் சோறு திங்கும் நிகழ்ச்சியை காண போகிறோமே என்று தான் வருத்தம் ..

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  குற்றவாளி என்று எல்லோருக்கும் தெரிந்தும் வெளியே வந்து விட்டால், உலகம் அழியப்போகிறது என்பதன் அறிகுறியே இந்த அவலங்கள்.

 • Arsath Ali - Malaysia,மலேஷியா

  மோடி ஜெயலலிதா வுக்கு வாழ்த்து.. தீர்ப்பு ஜெயா விற்கு சாதகமாக இருக்க வாய்ப்பு அதிகம்...

 • R KALIAPERUMAL - Thiruvarur,இந்தியா

  ஜெயா என்ன பெரிய சுதந்திர போரட்ட தியாகியா, அதுக்கு போய் இத்தனை விமர்சனமா, உப்பை தின்னவன் தண்ணி குடித்து தான் ஆகணும்

 • Dhanraj Jayachandren - Madurai,இந்தியா

  மீண்டும் வந்த மகராசி...வழி விட்ரா பரதேசி.....

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  குற்றமும் அதற்கான தண்டனையும் இன்று கேள்விகுறியாகி உள்ளது . சட்ட திட்டங்களை சற்றே மாற்றி அமைக்க வேண்டும் தற்காலத்திற்கு ஏற்றார் போல்.

 • Vijay - Coimbatore,இந்தியா

  நிறைய கருத்துக்களில் 570 கோடி ரூபாய் பற்றிய பதிவு இருப்பதை பார்த்தேன். அதற்குத்தான் SBI தகுந்த ஆதாரத்துடன் வழக்கமான பரிவர்த்தனை என்று சொல்லி விட்டதே? RBI ம் இதனை அப்ரூவ் செய்துவிட்டதே? இவர்கள் நாளேடுகளை சரியாக படிப்பதில்லை என்பதையே காட்டுகிறது. பிடிபட்ட 4 நாட்கள் கழித்து, ஏன் இன்பர்மேஷன் வந்தது என்பதுதான் இவர்களின் கேள்வியாக இருப்பின், பிடிபட்ட அன்றே தேவையான ஆவணங்களை வாகன ஓட்டுனர்கள் காட்டியும், 570 கோடி என்பதால் தேர்தல் அலுவலர்களுக்கு (தேர்தல் நேரத்தில்) சரியாக விசாரிக்காமல் அனுப்பக்கூடாது என்பதால்தான் லாரிகளை சிறைபிடித்தனர். இதுபோன்ற பரிவர்த்தனைகள் செய்யும் லாரிகளின் ஓட்டுனர்களுக்கே உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரிவிக்கப்படுவதில்லை. யாராவது செக்போஸ்டில் மறித்து கேட்டால் இந்த ஆவணங்களை காட்டுங்கள் என்பதுதான் அவர்களுக்கு கொடுக்கப்படும் மெசேஜ். அனைத்து ஆவணங்களும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். வாகன ஓட்டுனர்களும் நன்கு தேர்ந்த (அந்த ஆவணங்களை படித்து புரிந்துகொள்ளும் அளவிற்கு) கல்வியறிவு பெறாதவர்களாக தான் வைத்திருப்பார்கள். இதெல்லாம் இவ்வளவு பணம் ஏதாவது வழியில் களவு போய்விடக்கூடாது என்பதால்தான். ஒவ்வொரு லாரிக்கும் ஒரு போலீஸ் போட்டால்கூட செல்லும் வழியில் நோட்டமிட்டு திருடுவது ஒன்றும் பெரிய வேலையல்ல(ATM காவலாளியே லட்சங்களுக்காக கொலை செய்யப்படுகிறார், இது கோடி). கோவையில் இருந்து விஷாகப்பட்டினம் செல்ல 3 (தேசிய நெடுஞ்சாலையில்) நாட்கள் ஆகும். உள்ளே இவ்வளவு பணம் இருப்பது தெரிந்தால் இந்த 3 நாட்களில் ஓய்வெடுக்கும் இடங்களில் அவ்வளவு பாதுகாப்பு கிடையாது. இது ஓர்வகை அரசாங்க ரகசிய காப்பு நடவடிக்கைகளில் ஒன்று என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதுபோல இன்னும் பல பரிவர்த்தனைகள் நாடு முழுதும் தினத்தோறும் நடக்கிறது. பொக்ரான் அணு ஆயுதம் டிராம்பேயில் (மகாராஸ்ட்ராவில்) இருந்து ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் வரை ஒரு கண்டெய்னர் லாரியில் தான் கொண்டு செல்லப்பட்டது. அதுவும் இதே கதைதான், லாரி ஓட்டுனருக்கு உள்ளே என்ன என்பது தெரியாது, போலீஸ்/ராணுவம் பாதுகாப்பு கிடையாது (அரச ரகசியம் எல்லாம் எதிரி நாடுகள் கண்காணித்து வருவதால், அது சாதாரண நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக), ஆங்கில ஆவணங்கள் கொடுக்கபட்டன, வேகம் 40 km /h தான் இருக்கவேண்டும் (அணு ஆயுதம் சிதையாமல் இருக்க மற்றும் விபத்தினை தடுக்க) போன்ற உத்தரவுகள் கொடுக்கப்பட்டு வெற்றிகரமாக சேர்க்கப்பட்டது. இத்தனை நாட்கள் நாசிக் ல் இருந்து நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் எந்த வழியில் பணம் அனுப்பப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் தெரியும்? அப்படி அது வெளியில் தெரியும் வகையில் இருந்தால் இதுவரை அது பல சமயங்களில் வரும் வழியிலேயே கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஒரு செய்தியும் கிடையாது. இன்னும் ஏராளமான வங்கி மற்றும் தங்கம் பரிவர்த்தனைகள் இப்படித்தான் சிறிது சந்தேகங்களை கூட ஏற்படுத்தாமல் நடந்து வருகிறது அன்பர்களே. ஆனால் 2800 கோடிக்கான விடைதான் இன்னும் கிடைக்கவில்லை. கூடிய சீக்கிரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை.

 • Prakash JP - Chennai,இந்தியா

  சிறுதாவூர், கொடநாடு, பையனூர்… எஸ்டேட்டுகள் என அத்தனை சொத்துக்களும் சசிகலா பெயரிலும் அவரது உறவினர்கள் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது...இது போக, கீழே உள்ள நிறுவனங்களின் பதிவு முகவரி, ஜெயாவின் போயஸ்கார்டன் வீட்டின் முகவரியாக இருந்தது... 1. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், சென்னை 2. ஜே. பார்ம் ஹவுசஸ், சென்னை 3. ஜெயா கான்ட்ராக்டர் அண்ட் பில்டர்ஸ், சென்னை 4. கிரீன் பார்ம் ஹவுசஸ், சென்னை 5. ஜே.ஜே லீசிங், சென்னை 6. ஜே.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், சென்னை 7. ஏபி அட்வர்டைசிங், சென்னை 8. ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், சென்னை 9. ரிவர்வே அக்ரோ ப்ரோடக்ஷன், நீலாங்கரை 10. சூப்பர் டூப்பர் டி.வி, சென்னை 11. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை 12. மாஸ்டர் ஜே விவேக்ஸ், போயஸ் கார்டன், சென்னை 13. மெடோ அக்ரோ பார்ம்ஸ் சென்னை 14. சினோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், சென்னை 15. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சென்னை 16. விக்னேஸ்வரா பில்டர்ஸ், சென்னை 17. லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன், சென்னை 18. கோபால் ப்ரமோட்டர்ஸ், சென்னை 19, சக்தி கன்ட்ஸ்ரக்ஷன்ஸ், சென்னை 20. நமச்சிவாயா ஹவுஸ்சிங், சென்னை 21. அய்யப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை 22. ஸீ என்கிளேவ், சென்னை 23. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ், சென்னை 24. ஓசியாணிக் கன்ஸ்டரக்ஷன், சென்னை 25. ஜே ரியல் எஸ்டேட், சென்னை 26. கிரீன் கார்டன் அபார்மெண்ட், சென்னை 27 கொடநாடு டீ எஸ்டேட், உதகை 28. மார்பிள் அண்ட் மார்வெல்ஸ், சென்னை 29. பேக்ஸ் யுனிவர்சல், சென்னை 30. வினோத் வீடியோ விஷன் சென்னை 31. இண்டோ டோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்ம்சுடிக்கல்ஸ், சென்னை 32. மெட்டல் கிங், சென்னை 33. ஜெயா பப்ளிகேஷன்ஸ், சென்னை 34. சசி எண்டர்பிரைசஸ்,

 • Prakash JP - Chennai,இந்தியா

  ஜெயா & சசிகலா குவித்த சொத்துக்களின் இப்போதைய மதிப்பு... இதுவரை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரால் சாட்சியங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்ட சொத்துக்கள் சிலவற்றின் இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? வாலாஜாபாத்தில் ஜெ. தரப்பு வாங்கிப் போட்டிருப்பது 600 ஏக்கர் நிலம். இங்கு ஒரு ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் வேல்யூ 40 லட்ச ரூபாய். மார்க்கெட் வேல்யூவோ 50 லட்சம். ஆக வாங்கிபோடப்பட்ட 600 ஏக்கரின் அரசு வேல்யூ 240 கோடி. மார்க்கெட்வேல்யூ 300 கோடி ரூபாய். சிறுதாவூரில் ஒரு ஏக்கர் நிலம் அரசு வேல்யூ வில் 1.7 கோடி ரூபாய். மார்கெட் வேல்யூவோ 2 கோடி ரூபாய். ஆக அங்கு வாங்கிப்போடப்பட்டிருக்கும் 25.4 ஏக்கர் நிலத்தின் அரசு வேல்யூ 42.5 கோடி ரூபாய். மார்க்கெட் வேல்யூ 50 கோடி ரூபாய். நீலாங்கரையில், ஒரு ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் வேல்யூ 35 கோடி ரூபாய். மார்க்கெட் வேல்யூ 50 கோடி ரூபாய். ஆக அங்கி ருக்கும் 2 ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் மதிப்பு. 70 கோடி ரூபாய். மார்க்கெட் வேல்யூ 100 கோடி ரூபாய். காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் கவர் மெண்ட் வேல்யூ 30 லட்ச ரூபாய். மார்க்கெட் வேல்யூவோ 50 லட்சரூபாய். ஆக அங்கு ஜெ.’தரப்பு வாங்கிப்போட்ட 200 ஏக்கர் நிலத்தின். கவர்மெண்ட் வேல்யூ. 60 கோடி ரூபாய், மார்க்கெட் வேல்யூவோ 100 கோடி ரூபாய். தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட்வேல்யூ 15 லட்ச ரூபாய். மார்கெட் மதிப்போ 25 லட்ச ரூபாய். ஆக அங்கு வாங்கிப் போடப்பட்டிருக்கும் 1,167 ஏக்க ரின் கவர்மெண்ட் வேல்யூ 175 கோடி. மார்கெட் வேல்யூவோ 292 கோடி ரூபாய்.., பையனூரில் ஒரு ஏக்கர் நிலம். அரசு மதிப்பீட்டில் 2 கோடி ரூபாய். மார்க்கெட் மதிப்பு 3 கோடி ரூபாய். பையனூரில் வாங்கிப் போடப்பட்டிருக்கும் 5 ஏக்கர் நிலத்தின் அரசு வேல்யூ 10 கோடி ரூபாய். மார்க்கெட் வேல்யூ 15 கோடி ரூபாய். கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் வேல்யூ 3 கோடி ரூபாய். மார்க்கெட் மதிப்போ 5 கோடி ரூபாய். ஆக அங்கு ஜெ.’ வாங்கிப்போட்டிருக்கும் 800 ஏக்கர் நிலத்தின் கவர்மெண்ட் வேல்யூ .2,400 கோடி ரூபாய். மார்க்கெட் மதிப்போ 4 ஆயிரம் கோடி ரூபாய். ஆக 91-96 கால கட்டத்தில் ஜெ. முதல்வராக இருந்தபோது இந்தத் தரப்பு வாங்கிப்போட்ட சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய மதிப்பு கவர்மெண்ட் வேல்யூவில் 2,947 கோடியே 50 லட்ச ரூபாய் ஆகிறது. மார்க்கெட் மதிப்போ 4,757 கோடி ரூபாய். ஆகிறது. இதுவும் ஒரு பகுதி நிலத்தின் மதிப்பு மட்டும் தான். மிச்சமுள்ள நிலத்தின் மதிப்போடு நகை, வைரம், கம்பெனி முதலீடுகள், அசையும் சொத்துக்கள் கணக்கில் சேர்த்தால் ஐயாயிரம் கோடியைத் தாண்டும்.

 • Prakash JP - Chennai,இந்தியா

  ஒரு ரூபாய் சம்பளத்தில் ஜெயா சேர்த்த சொத்துக்கள் பட்டியல்.. (வாட்சப்பில் வந்தது) சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர் நிலம், சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கொட நாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களா. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரி பகுதியில் 190 ஏக்கர், தூத் துக்குடி மாவட்டத்தில் 200 ஏக்கர், 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள், ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தில் நவீன பங்களா. கொடநாடு தேயிலைத் தோட்டம் : ஊட்டியில் 800 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கொடநாடு தேயிலைத் தோட்டம் ஆங்கிலேயரான கிரேக் ஜோன்ஸ் என்பவருக்கு சொந்தமானதாக இருந்தது.. அவர் அதை விற்பனை செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதை வாங்க ‘அடிசன்ஸ்’, ‘எஸ்ஸார்’ ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. அந்தத் தகவல் கிடைத்ததும் கும்பல் ஒன்று தேயிலை தோட்ட உரிமையாளரை, நம்பர் பிளேட் இல்லாத காரில் மிரட்டி அழைத்துச் சென்றதோடு, அந்தக் கொடநாடு தேயிலைத் தோட்டத்தை ராமச்சந்திர உடையார் குடும்பத்திற்குத்தான் விற்கவேண்டும் என்று மிரட்டியது. இது தொடர்பாக கிரேக் ஜோன்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க, அதையும் மிரட்டி திரும்ப வாங்கச் செய்தனர். ரூ 10 கோடி மதிப்பிலான அந்த தேயிலைத் தோட்டத்தை ரூ. 7.5 கோடிக்கு மிரட்டி உடையார் குடும்பத்தின் பெயரில் பதிவுசெய்தனர். இரண்டொரு மாதங்களில் கொடநாடு தேயிலைத் தோட்டம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டது. மொத்தத்தில், ஜெயா ஆட்சிக்கு வரும் முன், 1.7.1991 தேதி வரை இருந்த சொத்துக்கள் :- 2 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 953 ஐந்து வருடம் கழித்து ஆட்சி முடியும்போது 30.4.1996 அன்று ஜெயாவின் சொத்து மதிப்பு 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 616 இந்த மதிப்பீடுகள் எல்லாம், 1996-97 ஆண்டு அடிப்படையிலானது...அதன் இப்போதைய மதிப்பு பல்லாயிரம் கோடிகளை தாண்டும்... அந்த காலகட்டத்தில் ஜெயாவின் வருமானம் மாதம் ஒரு ரூபாய் என்பது குறிப்பிடத்தகுந்தது.....

 • Ganesan - Bangalore,இந்தியா

  மக்களே, ஒரே ஒரு கேள்வி... ஒரே ஒரு பதில் தேவை. கலைஞரையும், ஜெயாவையும் அரசியலில் இருந்து விலக்கலாமா? வேண்டாமா?

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  பொய் சொல்லி சொல்லியே சுமார் 20 வருஷம் ஓட்டுன வக்கீல்கள் தானே இப்போதைய நீதிபதிகள் ..

 • Pandiyan - Chennai,இந்தியா

  அய்யா இதுக்கே இந்த குதி குதிச்சி கருத்து எழுதறீங்களே ...இது அண்ணாச்சி பழம் அரசனுக்கு கொடுத்த கதைபோல பின்னாடி ஒருவர் வரிசையில் பலாபழம் வச்சிட்டு நிற்கிறாரே ஒரு பழம் பெரும் தலைவர் அவர் குடும்ப உறுப்பினர் நினைக்கும் பொழுது தான் ..கற்பனை பண்ணி பார்க்க முடியாமல் சிரிப்பு வருது ..

 • Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்

  திமுக அதிமுக ரெண்டை விட்டா வேறு கதியே இல்லேன்னு தெளிவா வோட்டு போட்டு தமிழன்களே தம்மை முழு முட்டாள் என்று நிருபிச்சுட்டாங்க, தேவைகள் எல்லாம் கை காசு சிலவாகாமல் ஓசிலே வாங்கனும் என்ற பேராசை பிடிச்ச கேவலங்களே தாம் தான் ஒத்துண்டாச்சே . இனி நீதியாவது நியாயமாவது ஒரு மண்ணும் நடக்காது அடுத்து 10 வருஷங்களுக்கு இவர் ஆட்டம் தான் அனுபவிச்சு சாவுங்க

 • அஞ்சாசிங்கம் மருதுபாண்டி - இராமநாதபுரம்,இந்தியா

  புரட்சிதலைவி பொன்மனசெல்வி 2001 இல் கட்டுமரத்தை நள்ளிரவில் அடாவடியாக கைது செய்யாமல் இருந்திருந்தால் , கட்டுமரமே , இந்த சொத்துக் குவிப்பு வழக்கை புரட்சிதலைவி பொன்மனசெல்வி ஊத்தி மூடுவதை கண்டு கொள்ளாமல் இருந்திருப்பார் . வழக்கு ஊத்தி மூடப்படும் கடைசி நேரத்தில் தான் கட்டுமர கட்சி இந்த வழக்கை கருனாடக நீதிமன்றத்திற்கு மாற்ற வைத்தது . ஆனால் , இந்த வழக்கு இப்பொழுது உச்ச நீதிமன்றம் வரை சென்று விட்டது .இனி யார் நினைத்தாலும் , இந்த வழக்கை ஒன்றும் செய்ய முடியாது . ஆக , யாரும் இந்த வழக்கை "ஊழல் எதிர்ப்பு"க்காக செய்யவில்லை . தங்கள் அரசியல் பகையாலும் , பழி வாங்கும் நடவடிக்கையாலும் தான் இந்த வழக்கு இவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளது ... இதுதான் உண்மை உண்மை உண்மை ..

 • Veerasekar - Tokyo,ஜப்பான்

  புரட்சி தலைவி அம்மா அவர்களை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சாமி மற்றும் திமுக தலைமை வழக்கு தொடுத்தது. அம்மாவின் மீதுள்ள அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தால் முறையாக விசாரிக்கப்பட்டு, முகாந்திரம் இல்லாததால் எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இப்பொழுது உள்ள வழக்கும் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்படும். ஆச்சாரி, சுவாமி மற்றும் அன்பழகன் போன்றோர் ஓநாய்கள், இவர்கள் ஒன்றும் சிங்கத்தை எதிர்த்து நின்று வெல்ல முடியாது. மக்களின் அமோக ஆதரவு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு உண்டு, கடவுளின் ஆசியும் என்றென்றும் அம்மாவிற்கு உண்டு. எதிர்பவர்கள் வலுவிழந்து ஏமாற்றம் அடைவர்.

 • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

  நீதி கிடைக்கவில்லை என்றால், இந்தியா வாழ தகுதியற்ற நாடாகி விடும். ... வேறு நாட்டுக்கு குடியேறுவதை பற்றி யோசிக்க வேண்டியது தான்..

 • Ganesan - Bangalore,இந்தியா

  ஒத்திவைப்பு என்பதே, பேரம் பேசத்தான். இப்படித்தான் குமாரசாமி ஒத்தி வைத்தார், அதன் பலன் குழப்ப கூட்டல் கணக்கு. இப்போது ஒத்திவைப்பு, எத்தனை கோடிக்கு பேரம் படியும் என்பது தான். மற்றபடி நீதி, நியாயம், சட்டம் எல்லாம் புதை குழியில் அடக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்றைய தேதியில், பணக்காரர்கள் என்றால், ஒன்று மது ஆலை வைத்து டாஸ்மாக் வைத்திருப்பவன் அல்லது மாண்புமிகு 'நீதிபதி' கள். எப்படியோ குப்பனும் சுப்பனும் ஒன்றுமில்லாத வழிப்பறி கேசில் காசு கொடுக்க வழியில்லாமல் சில மாதங்கள் 'சிறை தண்டனை' என்ற பெயரில் நீதியை ஓரளவுக்காக உயிரோடு வைத்திருக்கிறார்கள்.

 • Thiyagarajan Murugesan - chennai,இந்தியா

  containerae ஒரு சாட்சி தான்... ஆனா இன்னும் விசாரிக்கிறாங்கபா ... இதுல சிபிஐ விசாரிகினாமா... யார் விசாரிச்சாலும் தீர்ப்பு கொடுத்திடுவாங்களா இந்த இந்தியாவுல... மாநில அரசு தப்பு செஞ்சா மத்திய அரசு கமிஷன் கேட்கும்... மத்திய அரசு தப்பு செஞ்சா மாநில அரசு கமிஷன் கேட்கும்... இது தான் இப்ப நடக்குது...

 • Thiyagarajan Murugesan - chennai,இந்தியா

  இன்னும் டீல் முடியலையா.. இல்ல கவுன்ட் பண்ண முடியலியா,,,

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  நீதிக்காக. உழைத்த குன்ஹா வாழ்க, ஆச்சார்யா வாழ்க.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இரண்டு நீதிபதிகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தீர்ப்புக்களை சொல்ல புல் பெஞ்சுக்கு வழக்கு போக அதிக வாய்ப்புள்ளது

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அவசரப் படாதீங்க ஹாஃப பெஞ்ச் ஃபுல் பெஞ்ச் அப்பீல்கள் பாக்கியுள்ளன அவை முடிவதற்கு இன்னும் இரண்டு தலைமுறை ஆகும்

 • ravi - coimbatore,இந்தியா

  கடந்த வாரமே தீர்ப்பு வெளியாகி விட்டதே .... இனிமே என்ன தீர்ப்பு சொல்ல வேண்டி இருக்கு விடுதலை விடுதலை ...... 570 கோடி ...சும்மாவா .........

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இப்ப என்ன அவசரம் தீர்ப்புக்கு? இன்னும் ஒரு 10 வருசமோ 15 வருசமோ அப்புறம் தீர்ப்பு சொல்ல கூட தேவை படாது இல்லை நீங்கள் தூக்கு தண்டனையோ கொடுத்தா கூட பிரயோசனம் இருக்காது.............கடந்த 18 வருசமா சொல்ல முடியாத அப்படி என்ன பெரிய தீர்ப்பை இப்ப சொல்ல போறீங்க?

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  ஆதாரங்களை சமர்ப்பிக்காமலேயே இவ்வளவு காலங்களையும் கடத்தி வந்துள்ளனர் இந்த ஆச்சார்யா குரூப். குற்றச்சாட்டினை மறுத்து அம்மா தரப்பில் கொடுத்த மறுப்பு ஆவணங்களை வைத்துகொண்டு அதிலே குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணிக்கொண்டு வழக்கை நடத்தி வந்துள்ளார்கள். பினாமி என்கிற சொல்லுக்கு அர்த்தமே தெரியாமலேயே வாய் சவடாலில் திமுக தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். குமாரசாமி அவர்கள் சொன்னபடி..ஒரு சதுர அடி மார்பில் கல் பதிக்க அந்த காலகட்டத்தில் வெறும் 169 ரூபாய் என்பதை இவர்கள் சகட்டுமேனிக்கு 20000 ரூபாய் என்று கணக்கிட்டு தொகையை அதிகரிக்க செய்து கணக்கு காட்டியுள்ளனர்..மேலும் மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு நிறுவனத்தின் லேட்டேர்பேடை உபயோகித்து அவர்கள் வீட்டு பராமரிப்புக்காக கொட்டேஷன் கொடுத்ததாக பொய்யான மோசடித்தனமான செயலை செய்துள்ளார்கள் இந்த ஆச்சார்யா குரூப்பினர்..அதுமட்டுமா அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் தங்களது சாட்ச்சியத்தில் எங்கள் நிறுவனம் எவருக்கும் இங்கே தமிழ்நாட்டில் பராமரிப்பிற்கு என்றோ..அல்லது வேறு வகையிலோ பிசினஸ் செய்யவே இல்லை என்றும்..அந்த லேட்டேர்பேடு எண்களின் நிறுவனத்தை சார்ந்ததே கிடையாது என்று சாட்சி சொல்லி எதிர் அணியினரை மோசடி முகத்தை தோலுரித்து காட்டிவிட்டார்களே..இது ஒன்று போதாதா இவர்களின் பொய் வழுக்கு என்பதற்கு..காஞ்சீபுரத்தில் வாங்கிய நிலங்கள் அனைத்துமே அம்மா அவர்களுக்கே சொந்தம் என்று சொன்ன வாய்..அதற்கு நீதிபதிகளின் கேள்வியில் கலகலத்து போயினர்..அம்மா அவர்கள் வாங்கினார் என்றால்..அவர்தான் அதனை வாங்க பணம் கொடுத்தார் என்பதற்கு சாட்சி உண்டோ என்று வினவ ...தலை குனிந்து நின்றார்கள் பொய் வழக்கு தொடுத்தவர்கள்..இவ்வளவு காலம் குமாரசாமி அவர்கள் தப்பாக கணக்கிட்டார் என்று புலம்பி வந்தார்களே..அந்த தப்பான கணக்கை பற்றி இந்த மேல்முறையீட்டில் இவர்களால் ஏதாச்சும் சொன்னார்களா என்றால்..நஹீ என்று சொல்லலாம்..இது எனது வழக்கறிஞர் தொழிலில் ஓர் இறுதி கட்டம்..கணம் கோர்ட்டார் அவர்கள் கருணை கூர்ந்து ஏதாச்சும் எனக்கு நன்மை பயக்கும் விதமாக தீர்ப்பு சொல்லணும்..என்று தலைவணங்கி கெஞ்சி கேட்டாரே..அப்பவே தெரிந்தது இவர்களின் ஆர்குமெண்ட் லட்சணம். குன்ஹா செய்த தவறான ஓர் முன்னுதாரணம் இங்கே உள்ள ஒரு பேராயரின் சிபாரிசில் வந்ததாக சொன்னது அத்தனையுமே உண்மைதான்..உச்சநீதிமன்றமும் அதனை உணர்ந்தே உள்ளது..தீர்ப்பில் நிச்சயம் இப்படித்தான் சொல்லப்போகிறார்கள்...இந்த மாதரியான பொய் வழக்குகள் போட்டு அரசியல் விளையாட்டினை பழிவாங்குதலை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறத்தான் போகிறார்கள்..குன்ஹாவின் தீர்ப்பை கண்டிக்கும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வருக்கு சட்டப்படியான கர்நாடக அரசாங்கம் இழப்பீட்டினை வழங்கவேண்டும் என்று கூராத்தான் போகிறார்கள்..ஆச்சார்யா போன்றோரும்..கர்நாடக அரசும் இதிலே தேவையற்ற ஆர்வம் காட்டியவிதம் சரியல்ல...இதுபோன்ற வழக்குகள் பதிவோரை இனி கண்டிப்பாக உச்சநீதிமன்றம் கண்டிக்க செய்யும்..அதனால் திரு குமாரசாமி அவர்கள் வழங்கிய தீர்ப்பையே இந்த உச்சநீதிமன்றம் உறுதி செய்கின்றது..இதுவே தீர்ப்பாகவே இருக்கப்போகிறது..பொறுத்திருங்கள்..

 • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

  இந்த இரண்டு பேரும் செல்ல வேண்டிய இடம் திஹார் ஜெயில் தான்.ஆனால் இவர்களை காப்பாற்றுவது அவர்கள் இருவரிடமும் பணம் வாங்கிகொண்டு, பணத்துக்காக செய்திகளை வெளியிடும் ஊழல் ஊடகங்கள் தான்.வெளியே ஊழலை எதிர்ப்பதாக வேஷம் போடும் ஊடகங்கள்/பத்திரிகைகள் உண்மையிலே ஊழலும், அரசியல் ஒழுங்கீனங்களும் தொடர வேண்டும் என விரும்புகின்றன.அதனால் தான் இல்லாத பொய் செய்திகளை இந்த கருணா, ஜெயாவை எதிர்ப்போர் மீது வெளியிடு கின்றன.

 • Velu Karuppiah - Chennai,இந்தியா

  எத்தனை ஆண்டுகள் நீதிபதி உத்தியோகம் பார்த்தாலும் கிடைக்காத நிதி கிடைக்க போவதை யார் தான் விட்டு கொடுக்க மனம் இருக்கும். அதனால் உங்களுக்கான நீதி (நிதி) க்கு தக்க தண்டனை வழங்கும்படி வேண்டுகிறேன்

 • P Sundaramurthy - Chennai,இந்தியா

  It was reported that three possibilities of judgement could be there. But, fourth possibility is that each judge gives different judgement and the case will be referred to three judge bench. There is ample time for everything.

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  அமைச்சர் பன்னீர்செல்வத்தின் நீண்ட நாள் கனவுகள் மறுபடியும் நினைவாகின்றன

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  குற்றவாளி எவ்வளவு பெரிய அடியாட்பலமும், அடிமைப்பட்டாளமும், ஆதிக்க சக்திகளின் மனாட்சியாகவும் சட்ட மேதைகளை தன கைப்பைக்குள் வைத்துக் கொண்டிருந்தாலும் நீதி நிலை பெற வேண்டும் என்பதே நல்லோர் விருப்பம். அதுவே அறமாகும், நாட்டின் மீதான நம்பிக்கைக்கு உரமாகும்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  இது போலி வழக்கு என்று ஊர்ஜிதமானால், இந்த வழக்கை போட்டவர்களுக்கு கோர்ட் நேரத்தை வீணாக்கியதற்கு என்ன தண்டனை / அபராதம். இதில் தி மு க பங்குதாரர் ( மேல் வழக்கு போட்டவருக்கு ) என்ன நிலையோ. இவர் ஒரு பலி ஆடோ என்று தோன்றுகிறது - ஏன் தலைவர் மற்றும் மற்றவர்கள் இதில் சம்பந்தப்படவில்லை. இவரை முன்னிருத்துகிறார்கள் - அப்பாவி, வாயில்லா பூச்சி என்பதாலா.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  நீண்ட காலத்துக்கு பிறகு உத்தரகாண்ட் விவகாரத்தில் ஒரு நல்ல தீர்ப்பு வந்தது. அடை மழுங்கடிக்கிற விடத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு சொதப்பல் திலகமாக அமையும் என்பதே டிரைலராக வந்திருக்கிரது. பார்க்கலாம்,,,,,நீதிதேவனின் மயக்கம் நிரந்தமானதா என்று.

 • Periyasamy - DC,யூ.எஸ்.ஏ

  I heard Kunha's family is re-migrting back to Brazil after surrendering Indian Citizenship.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மற்ற தரப்பு வாதங்களை சமர்ப்பிக்கவே அவகாசம்....

 • Pandian - Boston,யூ.எஸ்.ஏ

  Nalla entertainment aa iruku Vidunga enjoy pannuvom.

 • adiseshan - Guntur,இந்தியா

  லட்சம் கோடி ஊழல் கேசெல்லாம் வெளியே ஜாலியாக அறிக்கை விட்டு கொண்டு இருக்கும் போது அம்மா நிச்சயம் இந்த ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கை வென்று மீள்வார். இதை எந்த தீய சக்திகளாலும் தடுக்க முடியாது.

 • Samir - Trichy,இந்தியா

  அட போங்கடா....தீர்ப்பாவது...புண்ணாக்காவது....10-20 னு குப்பனும் சுப்பனும் திருடினாதான் முட்டிக்கு முட்டி. கோடிகளாக திருடினால் நம் நாட்டில் அதுக்குள்ள அந்தசே வேறு.

 • mnathumitha - CA,யூ.எஸ்.ஏ

  ஜெயலலிதா மீது 13 பொய் வழக்குகளை போட்டு அவரை ஒழிக்க பார்த்தார் கருணாநிதி. இந்த வழக்கில் அவரை சிறைக்கு அனுப்பி அவரின் உடல் நலம் பாதிக்கப்பட காரணமாய் இருந்தார். ஓராண்டுகாலம் நீதிமன்றத்தை மதித்து ஜெயலலிதா வீட்டில் சிறைவாசம் கண்டார் அவரின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்தது இன்னும் அந்த பாதிப்பில் இருந்து அவர் மீள வில்லை இருந்தாலும் எதையும் வெளியில் காட்டிக்கொண்டு அனுதாபம் தேடாமல் அமைதியாய் இருந்தார் 2016 தேர்தலில் வென்றார் தமிழக மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு ஜெயலலிதாதான் இவர் இல்லை என்றால் திமுக ரவுடிகளை அடக்க ஆளே இல்லாமல் போய்விடும் ஆகவே இந்த வழக்கிலும் விடுபட்டு தமிழக மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அவர் விளங்க இறைவன் அருள் புரியட்டும்

 • Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ

  பொய் வழக்கு போட்டு இந்த அளவைக்கு ஜெயாவை மன உளைச்சலுக்கும், உடல் நல குறைவுக்கும் ஆளாக்கிய திருடர்கள் கழக தலைவரை .தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர்களுக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அவர்களை மோடி அவர்கள் விடுதலை செய்கின்றார். அதை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமோதிதித்து வழக்கை தள்ளுபடி செய்கின்றனர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் தவறில்லை மற்றும் சொத்து குவியல் கணக்கில் தவறு உள்ளது கர்நாடக அரசு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோர் வீணாக குற்றம் சாட்டியதில் அவர்களுக்கு அவர்களுக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கோர்ட் அவர்களை கடைசி எச்சரிக்கை விடுத்து அவர்களுக்கு மன்னிப்பு அளிகின்றது

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  அடிமைங்க பால் காவடி,பன்னீர் ஆவடி,தலையில தேங்காய் உடைக்கறது, நாக்கை வெட்டிக்கறது,வெரலை வெட்டிக்கறதுன்னு நேர்த்திகடங்களை ஆரம்பிக்கலாம்...

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஏற்கனவே உச்ச நீதிமன்றம் சொத்து குவிக்கறது சட்ட விரோதம் இல்லைன்னு சொல்லிடாங்க...சட்ட விரோதமா சொத்து குவிக்கறது தான் சட்ட விரோதமாம்...ஆகையால தீர்ப்பு அவிங்களுக்கு ஆதரவா வர நிறைய வாய்ப்பு இருக்கி...ஆங்...

 • Vivek Lingesan - Chennai,இந்தியா

  வெல்லபோவது நிதியே, நீதி அல்ல.

 • Aravind Kumar - Essex,யுனைடெட் கிங்டம்

  நானும் பல பாமர மக்களை கேட்டு விட்டேன்...என்னப்பா இவிங்க ரெண்டு பேருல யாரு ரெம்ப மோசம்னு? 99% பேர் சொன்னது இது தான்..."இந்தம்மா பரவால்ல இது ஒன்னு தான், ஆனா அவன் ஏகப்பட்ட fraud வேல பண்ணி இருக்கானாமே" ...இந்த கிராம மக்களுக்கு inner detail கள் தெரியாவிட்டாலும், அவர்களுக்கு தெரிந்த பாஷையில் நச்சென்று சுருக்கமாக புரிந்து வைத்து இருக்கிறார்கள்...

 • Aravind Kumar - Essex,யுனைடெட் கிங்டம்

  ஜெயா வசதியான குடும்பத்தில் பிறந்தவர்...அன்ன காவடிகளாகவும், பஞ்ச பரதேசிகளாகவும் வந்த குடும்பம் இன்று உலக பணக்காரர்கள்....எப்படி வந்தது அந்த பணம்...10 channel களை துவங்க பணம் எங்கிருந்து வந்தது...hummer கார் வாங்கவும், 100, 200 கோடி budget படம் எடுக்கவும் பணம் எங்கிருந்து வந்தது...2 லட்சம் கோடி 2 G யில் கொள்ளை அடித்து, ஊழல் புரிந்து இந்தியாவின் மானத்தை உலக அளவில் நார வைத்தது யார்...

 • Raja - Doha-Qatar,இந்தியா

  தீர்ப்புதான் தெரிந்து விட்டதே ....வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் தவறில்லை என்றுதான் நீதி தேவன் சொல்லிவிட்டாரே ,,,,அதற்கு பிறகு என்ன தீர்ப்பு வேண்டி கிடக்கிறது,,,,,,ஊரை ஏமாற்றி உலையில் போடுவதற்கு ஒரு கட்சி அதை தட்டி கேட்டு வழக்கு போடுவதற்கு ஒரு கட்சி அந்த வழக்கை நடத்துவதற்கு ஒரு நீதி மன்றம் அதில் தண்டனை கொடுப்பதற்கு ஒரு நீதி மன்றம் தண்டனையிலிருந்து தப்பிபதற்கு ஒரு நீதி மன்றம் ......எல்லாம் மாயை.....நீதிமன்றம் எல்லாம் கேலிக்கூத்தாகி விட்டது ,,,,,

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  வருமானத்துக்கு அதிகமா சொத்து செத்தீருந்தா வருமான வரியும் வருமானத்துக்கு அதிகமாத்தானே கட்டி இருப்பார் ? இந்த ஒரு காரணத்துக்காகவே சுப்ரீம் கோர்ட் விடுதலை செஞ்சுரும் அடிமைகள் காவடி தூக்கி மண் சோறு சாப்புட வேண்டியதில்லை

 • Aravind Kumar - Essex,யுனைடெட் கிங்டம்

  அம்மா இதில் விடுதலையாகி வந்தார்களே ஆனால் அவ்ளோ தான் "கொல்றாங்கப்பா part 2" நடத்தாமல் விடமாட்டார்....பெண் என்றும் பார்க்காமல் அவர் மீது பொய் வழக்கு போட்டு இந்த அளவைக்கு ஜெயாவை மன உளைச்சலுக்கும், உடல் நல குறைவுக்கும் ஆளாக்கிய திருடர்கள் கழக தலைவரை உண்டு இல்லை பண்ணாமல் விடமாட்டார்....கடவுளே அந்த கண் கொள்ளா காட்சியை காண கோடி கண்கள் வேண்டும்....இன்னும் இரண்டு மாதத்தில் அது நடக்கும் என்று இறைவனை பிரார்த்திப்போம்...

 • Aravind Kumar - Essex,யுனைடெட் கிங்டம்

  திமுக நம்பிக்கொண்டு இருக்கும் ஒரே ஆயுதம் இந்த தீர்ப்பு.....இதுவும் மொக்கையாகி போச்சுனா ...அவ்ளோ தான் கட்டுமரம் ,,,, வேகாது

 • Aravind Kumar - Essex,யுனைடெட் கிங்டம்

  நீதிபதிகள் கேட்ட கிடுக்குபிடி கேள்விகளுக்கு psycho ஆச்சார்யா பதில் சொல்ல முடியாமல் பம்மும்போதே தெரிந்து விட்டது இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று அவர்களுக்கு ... இதுக்கு மேல தீர்ப்பு என்ன வரும்னு சின்ன குழந்தைய கேட்டா கூட சொல்லிடும்...

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அட என்னையா இது, ஒரே ரோதனையா போச்சு. அம்மாஜி மேல ஒரு கடுகளவும் கூட தவறு இல்லவே இல்லை. இனிமேலும் இதை பற்றி வழக்கு போட்டாலோ அல்லது மேல் முறையீடு செய்தாலோ அவர்களுக்கு ஆயுள்தண்டனை தரப்படும்ன்னு தீர்ப்பு கொடுத்துட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான. மேலும், சதி செய்து தீர்ப்பு கொடுத்த குன்ஹா குடும்பம் முழுதும் இந்திய குடியுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்த படுகிறார்கள். குன்ஹா தான் செய்த சதிக்கு வேறு ஏதாவது நாட்டில் போய் சிக்கி சின்னா பின்னப்பட்டு சீரழிந்து போவதே மிக சரியான தண்டனைன்னு தீர்ப்பு கொடுங்க.

 • Ratan K - Chennai,இந்தியா

  முதன்முறையாக ஒரு குற்றவாளி விடுதலையாகவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்..

 • Aravind Kumar - Essex,யுனைடெட் கிங்டம்

  மலை முழுங்கிகள் வெளியே உலாவி கொண்டு இருக்கும் இந்த அம்மா மட்டும் ஏன் உள்ளே போக வேண்டும்...விடுதலை செய்யுங்கள்...மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை நீதிமன்றம் தண்டிப்பதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்...இது திருட்டுமுக வால் ஜோடிக்கப்பட்ட வழக்கு...ஜெயிலில் போடுவது என்றால் திருடர்கள் கழக தலைவர் குடும்பம் ஒன்றாக சேர்த்து உள்ளே தள்ளுங்கள்...அப்பொழுது மக்களுக்கு நீதி கிடைக்கும்...

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  கண்டைனர் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது எனவே .....

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  அவர் தவறு செய்திருந்தால் கண்டித்து விட்டுவிடலாம். சில தொகுதிகளுக்கே இதைவிட பல மடங்கு சிலவு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். தண்டித்தால் பல மடங்கு நஷ்டம் முன்பு அடைந்தோம். இடைக்கால மந்திரி சபை பதவி ஏற்று அந்த கண்ராவியை கண்டால் நம் மாநிலத்திற்கு தான் அவமானம்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  தீர்ப்பு வரும் ஆனா வராது

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  இது போலிகளால் போடப்பட்ட போலியாக உள்ளதால் போலிகளுக்கு பொதி சுமக்கும் தண்டனை அளிக்கபடுகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement