Advertisement

தேர்தலுக்கு முன் ஜெ., சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு ?

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மே 16 ம் தேதி நடக்கும் தேர்தலின் போது அதிமுக.,விற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கும் என கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் முதலில் கர்நாடக தரப்பு வாதம் நடைபெற்றது. ஆச்சாரியா, தாவே போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கர்நாடக தரப்பு வாதத்தை முன் வைத்தனர். இதையடுத்து ஜெயலலிதா தரப்பில் நாகேஷ்வரராவ் வாதம் செய்தார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், நேற்று சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் சேகர் நாப்தே தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, அரசு தரப்பு கூறியதை போல, சசிகலா, ஜெயலலிதாவின் அதிகார மையமாக இருந்தது கிடையாது. சசிகலா யாருடைய பினாமியாகவும் செயல்படவில்லை. ஜெயலலிதா-சசிகலா இடையே பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கு ஆதாரம் இல்லை என்று ஐகோர்ட் தெளிவாக கூறிவிட்டது. ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதற்காக சொத்து குவித்தார்கள் என்று கூற முடியாது என வாதிட்டார்.
ஏப்ரல் 21 (நாளை) இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் இவர் தனது வாதத்தை முடிக்க உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து, கர்நாடக தரப்பு மீண்டும், பதில் வாதம் செய்ய நீதிபதி அவகாசம் தருவார். இந்த பதில் வாதத்தை, ஏப்ரல் 22 அல்லது சில நாட்களில் கர்நாடக அரசு முன்வைக்கும். இந்த வாதம், எழுத்துப்பூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் வாதிடவும் குறுகிய கால அளவில் வாய்ப்பு தரப்படலாம் எனவும், தெரிகிறது. இதன்பிறகு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும். அநேகமாக அடுத்த வாரத்தில், தீர்ப்பு தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழக தேர்தல் களத்தில் அதிமுக., அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு நேற்று கைவிரித்துள்ளது அதிமுக.,விற்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த சமயத்தில் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பும் தேர்தலுக்கு முன்னரே வெளியாகும் என கூறப்படுவதால் அதிமுக.,விற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (220)

 • siva - tirunelveli,இந்தியா

  மண்ணெண்ன வேப்பன்ன வெளக்கென்ன யாரு ஜெயிலுக்கு போனா எனக்கென்ன

 • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

  லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்ததாக ஒரு இடத்திலும் யாரு கொடுத்தார்கள் என்ற சாட்சியும் இல்லை. மேலும் இவர்அரசு சொத்து இழப்பிடு செய்து சொத்து சேர்த்தார் என்று எந்த ஒரு சாட்சியும் கிடையாது இது திமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போட பட்ட வழக்கு இந்த மேல் முறை ஈட்டிலும் விடுதலை ஆகி வருவார்

 • aravind - chennai,இந்தியா

  இந்த தீர்ப்பு ஜெயவிருக்கு எதிராக வர வாய்ப்புள்ளது, அப்பொழுது தான் ஜெயா பெயரும் அதிமுக கட்சியையும் வலு இழக்க செய்ய முடியும், பிறகு 2ஜி தீர்ப்பு அதுவும் திமுகவுக்கு எதிராக வரும், திமுகவும் வலு இழக்கும், இரண்டு கட்சிகளும் பலம் குறையும். விரைவில்....

 • spr - chennai,இந்தியா

  "ஒரு ரூபாய் வருமானம் மட்டுமே போதும். வருமானமே இல்லாமல் ஆளுகிறேன்" என இனி எவரேனும் சொல்வார்களா? பொதுவாக விதிக்கப்பட்ட முதலமைச்சர் வருமானத்தை மட்டும் இவர் ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த வழக்கே இருக்க வாய்ப்பில்லையே. ஆனாலும் பொன்முடி வழக்குத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக இருக்குமோ

 • Saminathan Kayarohanam - Trichy,இந்தியா

  பாரதி கண்ட புதுமை பெண் ... என்ன கொஞ்சம் ஓவர் புதுமை அவளவுதான் ... இனிமே யாராவது வந்து காலில் விழுறதுக்கு விடுதலை கேட்டு பாட்டு எழுதினாதான் உண்டு .....

 • Saminathan Kayarohanam - Trichy,இந்தியா

  இந்த தடவையாவது நல்ல கால்குலேட்டர் பயன் படுத்துங்க ... அப்புறம் கால்குலேட்டர் பட்டன் சரி இல்ல, கம்பெனி சரி இல்லன்னு சோல்திங்க ... அசிங்க மா இருக்கு ...

 • Saminathan Kayarohanam - Trichy,இந்தியா

  இந்த கோர்ட்ல குமாரசாமி மாதிரி யாரும் இல்லையா ?

 • Saminathan Kayarohanam - Trichy,இந்தியா

  மக்களுக்காக நான் சொல்றவங்க ஏன் கோர்ட்டுக்கு நடைய நடக்குறாங்க? கால் வலிக்க போகுது ?

 • K,kittu.MA. - Anna Nagar,இந்தியா

  நீதி வெல்லும். மறு தேர்தல் வரும் மக்களே மீண்டும் சாராய பாட்டில் பிரியாணி கிடைக்கும் கவலை படவேண்டாம்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  நடக்காது (தமிழ் நாட்டில்) நடக்கும் என்று கொண்டால் - பி ஜே பி அறுதி பெரும்பான்மையுடன் ஜெயித்தால்??????

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல கோடி ஊழல்களுக்கு ( இன்றும் நிலுவையில் உள்ள கேஸ்கள் ) முன் இது என்ன இமாலய சொத்தா அதுவும் திரை உலகத்தில் நடிகர்களாக இருந்தவர்கள், இருப்பவர்களுக்கு கோடிகள் சாதாரண விஷயம். இந்த தீர்ப்பினால் மற்ற தீர்ப்புகள் பாதிக்கப்படாது.

 • Ramalingam Gurusamy - Toronto ,கனடா

  வாழ்வுதனை சூது கவ்வும் சத்தியம் மறுபடியும் வெல்லும் இதுவே உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பாக எதிர்பார்க்கலாம்

 • மணிமேகலை - paris ,பிரான்ஸ்

  முடிவான தீர்ப்புக்கு எதுக்கு இந்த முஸ்தீபு குமாரசாமியின் தீர்ப்பை நகல் எடுப்பது மட்டுமே பாக்கி .

 • mohan ramachandran - chennai,இந்தியா

  எஸ் யுவர் ஹானர் ஆகவே இ பி கோ சட்ட பிரிவு ....சட்ட பிரிவு .....சட்ட பிரிவு .....சட்ட பிரிவு ....உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை .ஆகவே தக்க தக தக்க தண்டனை வழங்கும் படி கேட்டு கொள்கிறேன் யுவர் ஹானர். ஆஅம்ம்ம் வண்டு முருகன் .

 • subhashini - chennai,இந்தியா

  தீர்ப்பு வர வாய்ப்பில்லை ..அப்படி வந்தாலும் ஜெ கட்டாயம் விடுவிக்க படுவார்....ஒரு பேச்சுக்காக தீர்ப்பு வேறுவிதமாக தேர்தலுக்கு முன் வருவதாக எடுத்து கொண்டாலும் தி மு கவின் 2 லட்சம் 2G ஊழல் / தி மு க ரவுடிகள் அராஜகம் /இப்படி பல வேதனைகள் மக்களின் மனதில் மிக மிக ஆழமாக பதிந்து விட்டன .எனவே ..2 லட்சம் கோடி முன் 60 கோடி சும்மா ஜுஜுபி ..என நினைத்து அதிமுகவிற்கே வாக்களிப்பர். எனவே எப்படி இருந்தாலும் ஊழல் கூட்டாளி காங்கிரசுடன் ...தி மு க கட்டுமரம் ஆழமாக மூழ்கி காணாமல் போகப்போவது உறுதி ...என்று பரவலாக எண்ணுகின்றனர் .

 • mannaiselvam - chennai,இந்தியா

  தீர்ப்பா அட போங்கப்பா தப்பே செய்யலைனா 18 வருஷம் ஏன் இந்த வழக்கு நடந்தது? அப்படி ஊழல் செய்ததது உண்மை என்றால் கொடுத்த தண்டனை correct .. அப்படி ஏதும் ஜெ. குற்றம் செய்யவில்லை என்று குமாரசாமி சொன்னது உண்மை என்றால் தவறான தீர்ப்பு கொடுத்த நீதிபதியையும் வழக்கு போட்டவர்களையும் ஏன் சிறைலே அடைக்க கூடாது... அப்படி இல்லன்னா சுப்ரீம் கோர்ட்டு தண்டனை உறுதி அப்டின்னு சொன்னா தவறான தீர்ப்பு சொன்ன குமாரசாமி தூக்கி உள்ள போடுவாங்களா????????????? அட போங்க சார் பைக்ல ஹெல்மெட் போடாம போனா ஓடிவந்து பிடிச்சு பைன் போட்டு சட்டத்த காப்பாத்திடுவாங்க சார்....

 • K.Sugavanam - Salem,இந்தியா

  இன்னிக்கி ஹிந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தா ரேஷன் கார்டுக்கு ஒரு கோடி ரூ கடன் கொடுப்பதா வாக்குறுதி அளிச்சி இருக்காங்க...

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  ஆத்தா செய்த அநீதி தமிழகம் தட்டு ஏந்தி நிற்கிறது . எதாவது நடந்து தமிழகம் மீண்டால் சரி . கணக்கு தெரிந்த நீதி அரசர்கள் தீர்ப்பு வழங்க வேண்டும் .

 • Bharathi - Erode,இந்தியா

  சல்மான் கான், சஞ்சய் தத், ஜெயலலிதா

 • krishnan - Kuwait,குவைத்

  என் கணிப்பில் தீர்ப்பு இவ்வாறு வரலாம். 2 நீதிபதிகளில் ஒரு நீதிபதியின் தீர்ப்பு ஜெயாவிற்கு சாதகமாகவும், ஒரு நீதிபதியின் தீர்ப்பு ஜெயாவிற்கு பாதகமாகவும் வழங்கும். இதனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 5 நீதிபதிகளின் பெஞ்சுக்கு மாற்றுவார்கள். விடை காண முடியாத வழக்காக என்றும் ஜெயாவின் தலைக்கு மேல் இந்த வழக்கு கத்தியாக இருக்கவே காங்கிரஸ் மற்றும் பிஜேபி விரும்பும்.

 • Kumar - Thoothukudi,இந்தியா

  காவல் நிலையத்திற்கு தீ வைப்பு 17 comments ஆனா தேர்தலுக்கு முன் ஜே விற்கு தீர்ப்பு இதில் 155 comments . இப்போது தெரிகிறது நம் மக்களுக்கு எதில் நாட்டம் இருக்கிறது என்று. அரசியல் ஒரு சாக்கடை என்று சொன்ன பலர் இன்று அரசியல் மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்/ அதற்க்கு இதுவே சாட்சி.

 • Shanu - Mumbai,இந்தியா

  ஜெயலலிதாவை தான் மக்களுக்கு பிடித்துள்ளது. அவர் தான் அடுத்த முதல்வர். தீர்ப்பு அவருக்கு சாதகமாக தான் இருக்கும்.

 • Sambasivam Ganesan - pondicherry,இந்தியா

  கொஞ்சமாவது சட்டம் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் இந்த வழக்கின் தீர்ப்பு எதிராக வர வாய்ப்பே இல்லை என்று

 • Indian - chennai,இந்தியா

  வாசகர்களே ... இப்போதே ஒன்றை விளக்க வேண்டும் ....உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் சொல்லும் தீர்ப்பு நடு நிலையாக இருக்குமா...? இல்லை ஒரு பிரிவை சார்ந்து இருக்குமா...? ஒரு சார்பாக தீர்ப்பு இருக்குமானால் இப்போதே சொல்லி விடுங்கள்..... என்னுடைய கருத்து எந்த தீர்ப்பு வந்தாலும் அது நடுநிலையாக இருக்கும் .....ஆனால் தீர்ப்பை வைத்து நடுநிலையா/ஒரு சார்பா என்பதை தீர்ப்பு வந்த பிறகு விமர்சித்தால் அவர்கள் 100% அடிமைகள் தான் என்பது நிருபனமாகும்..... இப்போதே கருத்து சொல்லுங்கள் பாப்போம்.

 • Ramvi - Salem,இந்தியா

  அடடா.... அப்ப சில வருஷத்துக்கு இந்த முதுகெலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களுக்ககெல்லாம் வருமானம் கொறஞ்சு போயிடுமே....

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அப்போ மே 16 காலை 11.50க்கு வெளியாகும் தீர்ப்பு. தீர்ப்பு “அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உண்மை என்ற போதிலும், அவர் இவ்வாறு செய்தது மன்னிக்க முடியாத குற்றமாயிடினும் அவர் மூப்பின் காரணத்தினாலும், அவர் வகித்துள்ள பதவியின் பிரகாரமும் அவரை இந்த கோர்ட் தன்னைத் தானே உணர்ந்து இனிமேல் செயல்படவேண்டுமென்று (உள்குத்து – நீதிபதிகளாகிய நாங்கள் அனைவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதால் இது பெரிய குற்றமில்லை) விடுதலை அளிக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள இதற்கு மேல் முறையீடு செய்யலாம் என்று கோர்ட் தீர்ப்பளிக்கின்றது”. இப்படி கூமூட்டைதனமா தீர்ப்பு இருக்கும்.

 • K.R.Sekar - Chennai,இந்தியா

  தீர்ப்பு சாதகமாக வந்தால் அதுதான் தேர்தல் தீர்ப்பும். வெற்றி 100% உறுதி.

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  சாதகமா வந்தாலும் பைசா பிரயோஜனமில்லை.. இந்த ஐந்து வருடத்தில் அடிச்ச கொள்ளை பல லட்சம் கோடிகள்.. ஓடிப் போன தொழில்வளம், கொள்ளையடிக்கப்பட்ட இயற்கைவளம், எங்கும் எதிலும் 45% கமிஷன், மவுலிவாக்கம், செம்பரம்பாக்கம்ன்னு ஊழலினால் ஏற்பட்ட பல நூறு உயரிழப்புகள்.. பதுக்கப்பட்ட 1 லட்சம் கோடி கிரானைட் ஊழல் கோப்பு,. அறநிலையத் துறையில் பல silaikaL திருட்டு, நிலம் ஸ்வாஹா, நகை கொள்ளை, சசி அண்ட் கோ பினாமி கம்பெனிகள் கொட்டம், 1100 கோடி ஜாஸ் சினிமா கம்பெனி ஊழல், சமச்சீர் கல்வி சொதப்பல், அண்ணா நூலகம், லஞ்சம் வாங்க சொல்லி அழுத்தம் தந்ததால் அதிகாரிகள் தற்கொலைகள்.. மக்கள் மறக்கல்லை.. மறக்கக் கூடாது..

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  குமாரசாமியின் தீர்ப்புக்கு பிறகு இந்த அம்மா அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும், எப்படியும் ஜெயாவுக்கு பிறகு அதிமுக அழியத்தான் போகிறது. வீம்புக்காக மீண்டும் முதலமைச்சராக முடிசூட்டிக்கொண்டு தன் தலையில் தானே மண் வாரி போட்டுக்கொண்டார்.

 • Balaji - Khaithan,குவைத்

  தீர்ப்பு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.... ஆனால் நீதி நியாயம் இன்னும் உள்ளது என்பது போல இருந்தால் நல்லது.... தேர்தலுக்கு மூன்னர் தீர்ப்பு ஜெ வுக்கு பாதகமாக வெளிவந்தால் ஒரே சமயத்தில் இரண்டு பெரிய கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வாய்ப்பாக அமையும்....

 • Ramanathan Viswanathan - chennai,இந்தியா

  மீண்டும் ஒரு முறை ஒ பி எஸ் இக்கு அதிர்ஷ்டம் இருக்கும் போல தெரியுது அழுதுண்டே பதவி எதுக்கலாம் அது முதல்வரகவா அல்லது எதிர்க்கட்சி தலைவராகவா? என்பதுதான் கேள்வி ?

 • subhashini - chennai,இந்தியா

  தீர்ப்பு தேர்தலுக்குள் வருவதற்கு கட்டாயம் வாய்ப்பில்லை .. எனினும் எப்போது என்றாலும் ஜெயலலிதா விடுவிக்க படுவார்... திமுக ஊழலில் இமயமலை என்றால் மிகையாகாது .சும்மாவா ?2G ஸ்பெக்ட்ரம் 1,76,000 லட்சம் கோடி ? அதை ஒப்பிட்டால் திமுக ஜெயை வேண்டுமென்றே மாட்ட வைப்பதற்காக குறிப்பிட்டுள்ள 60 கோடி மிக மிக சிறிய தொகையே .. திமுக தான் மிக நேர்மையானவர் மிக எளிமையானவர் போல் நடிக்கும் போது ஜெ அவர்கள் அப்படி ஒன்றும் பெரிய தவறு செய்ததாக தோன்றவில்லை . .ஜெ ..திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர்....ஒரே சமயத்தில் பல மொழிகளில் பெரிய ஹீரோக்களுடன் பல வெற்றி படங்களில் நடித்தவர்... குறிப்பாக அப்போது நிறைய தொகை வாங்கிய திரு MGR / சிவாஜி /NTR /நாகேஸ்வர ராவ் போன்றோருடன் நடித்தவர் .அதனால் நல்ல சம்பளம் வாங்கியிருக்க வாய்ப்பு மிக மிக அதிகம் ... மேலும் MGR அவர்கள் ஹீரோயின்களுக்கு மிக அதிக சம்பளம் தருதல் /சலுகை விலையில் நில புலன்களை வாங்கி தருவது ./அவர்களுக்கு கடன் என்றால் அவற்றை அடைத்து தருவது என்று தன்னுடன் பல படங்களில் நடித்த நடிகைகளுக்கு பெருமளவில் உதவி இருக்கிறார் என்று பலரும் கூறியுள்ளனர் MGR அவர்களுடன் மிக அதிக படங்களில் நடித்தவர் ஜெ அவர்கள் தான் எனவே MGR ஜெக்கு மிக நல்ல சம்பளம் குறைந்த விலையில் சொத்துக்கள் வாங்கி கொடுத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அப்போது வாங்கிய சொத்துக்களின் மதிப்பு இப்போது எங்கேயோ உச்சத்தை தொடும் என்பது அனைவரும் அறிந்ததே . ஆனால் கருணாநிதி குடும்பத்தினர் .?எங்கிருந்து அவர்களுக்கு பணம் வந்தது ?எல்லோர் மனத்திலும் இந்த கேள்வி உள்ளது செய்திதாள்கள் மீடியாக்கள் பத்திரிக்கைகள் இதுபற்றி எழுதி இருப்பது கீழ்கண்டவாறு ..தயாளு அம்மாள் தொடங்கி ஸ்டாலின்/ கனிமொழி / அழகிரி /ஏன் உதயநிதி ஸ்டாலின் கூட எந்த ஒரு வேலையும் தொடர்ந்து பல ஆண்டுகள் செய்ததாக தகவல் இல்லை .கருணாநிதி /ஸ்டாலின் அழகிரி கனிமொழி அரசு பதவியில் சம்பாதித்தனரா என்ற கேள்வி உள்ளது ... ஏனெனில் .கதை வசன கர்த்தாக்களுக்கு நடிக நடிகையர் அளவு சம்பளம் எள்ளளவும் கிடையாது அவர்கள் சம்பளம் குறைந்ததே..என்று அனைவரும் அறிவோம் கருணாநிதி யின் பூம்புகார் பட நிறவனம் ஒன்றும் ஏகப்பட்ட வெற்றிப்படங்களை தயாரிக்கவில்லை . ..பின் அவர்களுக்கு எப்படி கோடி கோடியாக சொத்து வந்தது ? கோபாலபுரம் வீடு எந்த பணத்தில் எப்படி வாங்கினார் ? கலைஞர் மூன்றாவது துணைவி ராஜாத்தி அவர்களுக்கு ஒலிவர் ரோட்டில் வீடு /ஸ்டாலின் வேளச்சேரி பங்களா /உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட்மூவீஸ் என்ற பட நிறுவனம் /அழகிரிக்கு சொத்துக்கள் இப்படி பற்பல சொத்துக்கள் /கார்கள் /அடுக்கி கொண்டே போகலாம் . ஏன் அவர்கள் நெருங்கிய சொந்தம் சன் டிவிஸ்பைஸ் ஜெட் விமானத்தை கூட நடத்தியது. விமான சேவையை நடத்துவது பெரும் பணக்காரர்கள் மட்டுமே.. இத்தனைக்கும் கலாநிதி தந்தை முரசொலி மாறன் ஒன்றும் பரம்பரை பணக்காரர் அல்ல . ..சாதரணமானவர் .. பின் எப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் ? vகனிமொழியிடம் கோடி கோடியாக சொத்து ..எப்படி என்று கேட்டால் சன் டிவி/கலைஞர் டிவி ஷேர் என்றுபதில் சன் டிவி கனிமொழிக்கு ஏன் ஷேர் தர வேண்டும் ? கனிமொழியிடம் கிட்டத்தட்ட இன்று அதிகாரபூர்வமாக 100 கோடியாவது இருக்கும் இவர்கள் அனைவரின் பினாமி சொத்துக்கள் எத்தனையோ தெரியவில்லை கலைஞர் டிவி சேனல் 26 ச்பெக்ட்ரும் ஊழல் தொகையிலிருந்து 200 கோடியை எடுத்து தொடங்கப்பட்டிருக்கலாம் என்றுரம் திமுகவில் இவர்கள் மட்டுமல்ல இன்னும் பல எம் எல் ஏக்கள் /எம் பி க்கள் /மந்திரிகள் ஏகப்பட்ட சொத்துக்கள் என்று அப்போது செய்திதாள்கள் எழுதின . இவர்கள் தன் உண்மையில் மிக பெரும் சொத்து குவித்துள்ளவர்கள் ...ஜெ அல்ல ... ஜெயின் அரசியல் வாழ்வை முடித்தால் இவர்களை இப்படி துணிச்சலாக கேள்வி கேட்க ஆள் இல்லை என்று ....ஜெயை இவர்கள் வேண்டுமென்றே மாட்டிஉள்ளனர் என்றே மக்களுக்கு தோன்றுகிறது மக்கள் ஜெ ..யின் பக்கம் உள்ள நியாயத்தை நன்கு உணர்ந்துள்ளனர் . ஏன் திமுக மேல் எந்த நடவடிக்கையும் இதுவரை சரிவர iஎடுக்கப்படவில்லை . என்று அவர்களுக்குள் ஒரு கேள்வி உள்ளது

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  இத்தோடு ஒழியட்டும் இந்த அடிமைக்கூட்டம் உறுதியாக தேர்தலின் முன்பே தீர்ப்பு வரப்போகிறது அதனால்தான் உச்சநீதி மன்றம் சற்றே விரைவாக இந்த வழக்கை நடத்துகிறது. நீதிதுறைமேல் படிந்த அழுக்கினைத் துடைக்கவும், நீதி என்பது அதிகாரவரம்பில் அராஜகம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என்பதை நிலைநிறுத்தவும் தீர்ப்பு ஜெயாவிற்கு எதிராக வரக்கூடும் என்பது நிதர்சனம்

 • Poochandi - Mumbai,இந்தியா

  நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது. அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  என்னையா இது புது சோதனையா இருக்கு, பதவி ஏத்துகிட்டு நிம்மதியா ஓய்வு எடுக்கலாம் என்றால் இவர்கள் நம்மை ஊதுபத்தி உருட்ட வைக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறதே?

 • C Suresh - Charlotte,இந்தியா

  முன் நாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் முன் நாள் அமெரிக்க ஜனாதிபதி ரீகன் திரைபடத்தில் நடித்து ஒற்றுமை. தமிழக ஜெயலலிதா அமெரிக்க டொனல்ட் Trump வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் என்றாலும் அவர்களை குறுக்கு வழியில் தடுத்திட ஒரு கூட்டமே போராடு கிறது.

 • raji@ - Tiruvannamalai,இந்தியா

  அதெல்லாம் சரிதான்... இந்த ரெண்டு G வழக்கு பற்றி யாரும் பேசமட்டேன்குறாங்க

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  ஹூம்....இப்படியே ஆரூடம் சொல்லிக்கொண்டே இருங்கள்....ஒரே ஒரு கேள்வியில் இந்த ஜோடிக்கப்பட்ட வழக்கு பனால் ஆகும்....அம்மாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததில் கர்நாடக அரசுக்கோ.... சு.சாமிக்கோ என்ன பாதிப்பு? என் இந்த வழக்கில் அப்பீல் செய்யப்பட்டது என்று ஒரு கேள்வியை கேட்டு....அம்மாவை மரியாதையுடன் விடுதலை செய்யபோகிறது உச்ச நீதிமன்றம்....எல்லாரும் வாயில் விரலை வைத்துகொள்ள வேண்டியதுதான் தர்மம் எந்தகாலத்தில் ஐயா தோற்று இருக்கிறது?

 • Jaya Ram - madurai,இந்தியா

  அதாவது நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை தீர்ப்புகள் எப்படி வேண்டுமென்றாலும் வரட்டும் அதை பற்றி கவலையில்லை என்று கூறுபவர்கள் யாரும் இல்லை ஏனென்றால் இவர்கள் எல்லோரும் இயேசு பிரான் கூறியது போல் குற்றம் செய்யாதவன் எவனோ அவன் முதலில் கல்லெறியட்டும் ஆனால் இவர்களோ உத்தமர் கள் போல் அல்லவே நடந்து கொள்கிறார்கள், வலுவில்லவன் பாக்கியசாலி என்ற நிலையில் இன்றைய பாரதீய ஜனதா செயல் படுகிறது நீதிமன்றகளும், அவர்களுக்கு அடிவருடுகின்றன நேர்மையான செயல் பாடுகளை இனி என்று காண்போமோ?

 • suresu - kallagam

  அம்மா அவர்கள் தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக நடித்து சம்பாதித்தார்கள் அதுவும் இல்லாமல் அவரது தாய் ஓரு நடனநாயகி மற்றும் அவரது முன்னோர்கள் ஓரளவு வசதியாக வாழ்ந்தவர்கள் வீட்டு வாடகை கொடுக்க வழியற்று திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து உப்புமா கம்பெனியி திரைக்கதை வசனம் எழுதி இன்று ஆசியா கணடத்தில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் இவர்களது குடும்பமும் ஓன்று திறமையாக ஊழல் செய்தவர்கள் நல்லவர்கள்

 • mindum vasantham - madurai,இந்தியா

  தீர்ப்பு எதிராக வர அதிகம் வாய்ப்புள்ளது , அதே போல் 2 g இல் ஷஹிட் பவ்லாவிர்க்கும் , ஸ்டாலின் சமந்தம் இல்லை என்று கூறுவதும் , கட்டுக்கும் இதில் எதுவும் தெளிவு இல்லை என்று கூறுவது அபத்தம்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  திமுக போட்ட வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பதிவாளர் குன்ஹா வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்து, கர்நாடக மாநிலத்தின் உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும் உச்ச நிதிமன்றத்துக்கு மேல்முறையீடுக்கு செல்லும் என்று தெரிந்து ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு. அதுவும் இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு என்றும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்திரவிட்ட தீர்ப்பு அது. அனேகமாக உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர்நிதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்யும்.அது சரி தீர்ப்பு வெளியான பிறகு ஜெயலலிதா முழுதாக வெளிவந்துவிட்டால் கருணாநிதி குடும்பம் இனி வாரிசு சாக்கடை அரசியல் செய்ய முடியாது. பொழப்புக்கு என்ன செய்வார்கள். அல்லக்கைகள் எல்லாம் அந்த பக்கம் பாய்ந்துவிடும். அடுத்த ஐந்து வருடங்களுக்கு அந்தம்மா வெரட்டி வெரட்டி அடிக்குமே. இதுல ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம்கோடி ரூபாய் வழக்கு, ஊழல் பணத்தை குடும்ப கம்பெனிக்கு பல நூறு கோடிகளை கொண்டு வந்து குவித்த கேஸ். ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, பி.எஸ்.என்.எல் வழக்கு என்று எந்த வழக்கும் ஜெயலலிதா போட்ட வழக்கு அல்ல. எல்லாம் ஆதாரபூர்வமாக விசாரித்து மத்திய கணக்காயம் மத்திய அரசு போட்ட வழக்கு தப்புவதற்கு வாய்ப்பே இல்லை.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  உத்தமராக தீர்ப்பு வந்தால் அவர்தான் ஜெயிப்பார். தண்டனைப் பெற்றால், அனுதாப ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுவார். தீர்ப்பு தேர்தலுக்குப் பின்னால் வந்தாலே நடுநிலையானதாக இருக்கும்.

 • anvar - london,யுனைடெட் கிங்டம்

  திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்கிறது எனில்...அது அவர்களின் வாக்கு வங்கியை கொண்டு அல்ல.... நடுநிலையாளர்களின் வாக்குகளை கொண்டே அந்த நடுநிலையாளர்களே கதாநாயகர்கள்....அவர்களே வெற்றியை தீர்மானிப்பவர்கள்....அவர்களே சுழலுக்கு ஏற்றார் போல் வாக்குகளை செலுத்துபவர்கள்...கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திமுக தோற்க வேண்டும் என எண்ணிய நான் அதிமுகவை ஆதரித்தேன்...தற்போது தமிழகம் உள்ள நிலையில் மீண்டும் அதிமுக எனில்...பேயை கண்டு தூக்கத்தில் இருந்து விழிப்பதை போன்று உணர்கிறேன்....மீண்டும் தமிழகம் உயிர் பெற திமுகவே தற்போதையே தேவை...இந்த நிலை மாற....நிச்சயம் தற்போது தமிழகத்தில் மாற்று சக்தி இல்லை...ம.ந.கூ....பாமக....பாஜக....இவைகளால்...இன்றைய தமிழக அரசியலில் ஒரு போதும் மாற்றாக முடியாது ....அவைகளுக்கு கட்சி கொடி நிறத்தில் மாற்றமே தவிரே...வட்டம் ..மாவட்டம்...ஊராட்சி...நகராட்சி...கட்சி மாநாடு...வசூல்..வேட்பாளர் தேர்வு என அனைத்திலும்...துல்லியமாக திமுக அதிமுக பின்பற்றுவதையே அவர்களும் பின்பற்றுகின்றனர்....அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும்...தற்போதையே நிலையே தொடரும்...நான் மறுபடியும் மறுபடியும் சொல்லி வருவது...இந்த மாற்றம் என்பது 2021 தேர்தலில் வர வாய்ப்பு உண்டு...அது கூட வாய்ப்பு தான்...காரணம்...அந்த நேரத்தில்...கருணாநிதி அல்லது ஜெயலலிதா யாரோ ஒருவர் தேர்தல் களத்தில் இல்லாமல் போவார்கள்....திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று நாம் தமிழர் கட்சி என்பது எனது தனிப்பட்ட கருத்து....அதுவும் தற்போதைய சூழலுக்கே...திமுக அதிமுகவை எதிர்பவர்கள்...நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கலாம்...

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பிஜேபி யின் ஈனத்தனமான அரசியல்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  மறுபடியும் ஊது பத்தி உருட்டணுமா?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பிஜேபிக்கு தேர்தலுக்கு முன்பு தீர்ப்பு வந்தால் டிபாசிட்டாவது தேறும்னு இருக்கு போல...

 • v.subramanian - madurai,இந்தியா

  இந்த ஊழல் பெருசா அந்த ஊழல் பெருசா என்று ஊழலை அங்கிகரிக்கும் அளவுக்கு வந்துவிட்டோம் வாழ்க இந்தியா

 • SUNA PAANA - Chennai,இந்தியா

  அப்படியே 2 ஜி முறைகேட்டு வழக்கிலும் தீர்ப்பு வந்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டுக்கு நல்ல விடிவு கிடைக்கும்.

 • murumaha - madurai,இந்தியா

  விடுதலை என்றே தீர்ப்பு வரும். காரணம் பல. நேரிடை சாட்சிகள் யாரும் கிடையாது. சொத்தின் மதிப்பு பல மடங்கு பெருக்கி காட்டப்பட்டுள்ளது. லஞ்சம் நேரிடையாக கொடுத்தாக ஆதாரம் இல்லை. வருமான வரி படி சொத்தின் மதிப்பு குற்றம் சாட்டப்பட்டதை விட கூடுதலாக உள்ளது. ஜெயலலிதா-சசிகலா இடையே பணப்பரிமாற்றம் நடந்ததாக எந்த ஆதாரமும் கிடையாது. 1991-1996 சொத்து கணக்கை வைத்து ஒருவர் குற்றம் புரிந்தவர் என்று கணக்கில் எடுத்து கொள்ள முடியாது. இப்படி நடந்ததால், அப்படி நடந்திருக்கும் என்று அனுமானமாக குற்றம் என்று தீர்ப்பு கொடுக்க முடியாது.அவர் ஏற்கனவே சம்பாதித்த சொத்து கணக்கையும் சேர்த்து பார்த்தால் இந்த வழக்கு பழி வாங்கும் செயலாக தெரிகிறது.............அதனால் அம்மா விடுதலை உறுதி.... உறுதி.... ..

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  ஆளும் கட்சி அனுதாபிகள் வழக்கம் போல் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நிர்பந்தித்து அம்மேவுக்கு எதிரா தீர்ப்பு வழங்க வைப்பாங்கன்னு நா கூசாமல் சொல்லுவாங்க..... உச்ச நீதிமன்றத்தை அப்படி வளைக்க முடியுமா ? அவிங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான்...

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  ஒரு 300 கோடி குமாரசாமிக்கு குடுத்தாச்சு .. 1500 கோடி பி டீமுக்கு .. மிச்சம் இருக்குறதுல ஒரு 5000 கோடி சுப்ரீம் கோர்டுக்கு பார்சல் ...

 • Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ

  ஜெயாவிற்கு அஷ்டமத்தில் சனி (சசிகலாவை சொல்லவில்லை) தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தெரிந்த விஷயம் பாலாஜி Los Angeles USA

 • Subramaniam Ramesh - madurai,இந்தியா

  தமிழகம் வளம் பெற: 1.தமிழகத்தின் வாகனங்களின் எண்ணிக்கை 2016 நிலவரப்படி 1.25 கோடி வாகனங்கள், அதற்க்கு வருடம் ஒரு முறை இரு சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு சாலை உபயோகதிருக்கு உண்டான தொகையாக ரூபாய் 400 வீதம் செலுத்துவதற்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும் அதன் மூலம் வரும் தொகையில் சாலை அமைத்திட வேண்டும். இதற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை. 2) தமிழ் நாட்டில் உள்ள பட்டா நிலங்களில் இருக்கும் கருவேல மரங்களை அந்த அந்த பட்டா தாரரே 2 மாத காலங்களில் அழித்திட வேண்டும் அப்படி இல்லையெனில் அந்த சம்பந்த பட்ட பட்டா இடத்தில் உள்ள கருவேல மரங்களை அரசாங்கமே அழித்து அதற்குண்டான தொகையை வரவாக்கிட அந்த பட்டாவில் தமிழ்நாடு அரசின் பெயரையும் Endorsement செய்யப்பட வேண்டும். பட்டா தாரர் அந்த தொகையை செலுத்திய வுடன் அந்த Endorsement cancel செய்யப்பட வேண்டும். 3) சிகிரட்டுக்கு உண்டான வரியினை எவ்வாறு மத்திய அரசு 150% சதம் வரம் வசூளிகின்றதோ அதேபோல தமிழக அரசு ஒரு சிகரெட்டுக்கு 2 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட வேண்டும். 4) அதே போல மதுபான விலையினையும் 2 மடங்காக உயர்த்த வேண்டும். 5) அரசு உழியர்களின் சம்பளத்தில் வருடம் ரூபாய் 5,000/- வீதம் பிடித்தம் செய்து அதனை வாழ்வாதாரத்தில் கீழ் உள்ளவர்களின் வாழ்வு மேம்பட ஒரு வாரியம் ஏற்பாடு செய்து அதில் செலவு செய்திட வேண்டும். 6)விவசாய்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்பட வேண்டும், 7)பதிவு துறையில் நிலத்தின் அரசாங்க மதிப்பினை 3 மடங்காக உயர்த்தப்பட வேண்டும், அதே போல தற்போது உள்ள பத்திர மதிப்பினை 7 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்க வேண்டும். 8)மின்சார தொகையினை வருடம் 5% உயர்வு படுத்த வேண்டும் 9)அணைத்த அரசு பேருந்துகளிலும் wifi இன்டர்நெட் சேவை ஏற்படுத்த வேண்டும். பயண தொகையினை குறைத்தும் பயணிகளை அதிகபடுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி முடியவில்லை எனில் போக்குவரத்து துறையினை தனியாரிடம் விட்டு விட்டு டிக்கெட்டுக்கு 10சதம் வரை வரியாக தனியாருடன் பெற வேண்டும். 10)பன்னாட்டு நிறுவனங்களிடம் தமிழக அரசு 50% பங்கீட்டுடன் தொழில் துடங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். for Ex. samsung, lenova, TCS, TATA, reliance, அதற்குண்டான இடம் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 11) சாலை அமைக்க ஒப்பந்ததாரரிடம் குறைந்தது 10 வருட உத்திரவாதம் பெறப்பட வேண்டும், அப்படி 10 வருடம் உத்திரவாதம் இல்லையெனில் அவரின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் 12) லாரி மூலம் தண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு குழாய் வழியே தண்ணீர் விடப்பட வேண்டும், 2 நாள் ஒரு முறை 15 நிமிடம் என கால வரையறை செய்யப்பட வேண்டும், அதே போல உப்பு தண்ணீருக்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும், அப்பொழுதுதான் குளிப்பதற்கு நல்ல தண்ணீர் எடுக்கும் போக்கு மாற்றப்படும். 13) அரசாங்கத்தால் பாது காக்கப்படும் மரம் செடிகளுக்கு உண்டான தண்ணீரினை கழிவு நீரினை மறு சுழற்சி முறையில் சுத்தப்படுத்தி அந்த நீரினை பயன்படுத்தப்பட வேண்டும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தீர்ப்பு தள்ளி வைக்கப் படும். வழக்கமான நடை முறை.

 • Uthiran - chennai,இந்தியா

  சில அதிமுக சொம்புகள் இந்த விஷயத்தை பாஜகவின் சதி திட்டம் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.. அந்த சொம்புகள் "மக்களுக்கு ஊத்தி கொடுக்கும் தாய்" வாஜ்பாய் அரசை ஒரு ஓட்டில் கவிழ்த்ததை வசதியாக மறந்து விட்டார்கள்.. எனவே "மக்களுக்கு ஊத்தி கொடுக்கும் தாய்" க்கு எதிராக பாஜக சதி திட்டமே தீட்டி வலுவாக தண்டனை வாங்கி கொடுத்தாலும் தப்பில்லை..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  \\\\ சொத்துக்குவிப்பு வழக்கு: துரைமுருகன் ஆஜராகவில்லை //// இந்தச் செய்திக்கு இதுவரைக்கும் ஒரு பய கருத்துப் போடல ..... அடிமைகளே .... எந்தக் கட்சிக்காரன் நம்மைச் சுரண்டினாலும் இழப்பு இழப்புதான் .... அது மக்கள் பணம்தான் ....

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  தேர்தலின் போது ஜெ கம்பி எண்ணிக்கொண்டு இருக்கவேண்டும்

 • Paran Nathan - Edmonton,கனடா

  இப்படியான செய்திகளை போட்டு தேர்தல் வரை வண்டியை ஓட்டவேண்டியதுதான். தமிழக மக்களால் ஜெயா ஏற்கனவே ஏகோபித்த முதல்வராக ஆகிவிட்டார். ஜெயாவின் மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டையும் கூறமுடியாது. எல்லா வழக்குகளிலும் அவருக்கு விடுதலை. தற்போது இருப்பது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பதுதான். இது கலைஞரால் போடப்பட்ட வழக்கு. உலகமே அறியும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர் யார் என்று வழக்கின் தன்மை தேர்தலை பாதிக்காது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு தமிழக பெண்களே குறிப்பாக மாணவிகளே இப்போது தெரிகின்றதா நீங்கள் கடக்கவேண்டிய பாதை எவ்வளவு கடினமானது என்று உங்களின் Role model அதனைத்தான் இன்று செய்துகொண்டிருக்கின்றார். வெற்றி தமிழக பெண்களுக்கே

 • சேக்கர் டோஹா - Chennai ,இந்தியா

  தீர்ப்பு தேர்தலுக்கு முன் வர வாய்ப்பில்லை.

 • kc.ravindran - bangalore,இந்தியா

  ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு "பாவம் செய்யாதவன் முதலில் கல் எறியட்டும் என்று சொன்னார் ஏசுபிரான்" கேட்பதற்கே மெய் சிலிர்க்கிறது. இது "எல்லா மதத்திற்கும் பொருத்தமானது". ஊழல் பட்டியல்களை படிக்கும்போது தலையே சுற்றுகிறது. கோவணம்கட்டி நிலத்தில் பாடு படுபவனுக்கு கோடிகள் எதற்கு? எனவே அவன் நிலத்தை சுருட்டு சேர்த்து வைக்கும் பணத்தை சுருட்டு. படிப்பறிவில்லாத மிருகத்திற்கும் கீழான குணமுடைய நீச மனிதர்களையும் கூட தலைவர் என்று போற்றும் வாடா மல்லிகள் பூத்து குலுங்கும் தோட்டமிது. கோவணம் கட்டியவனிடம் கேட்டுப்பார். என்பணத்தையா எடுத்தான் ஊரு பணத்தைத்தான் எடுத்தான் எக்கேடோ கேட்டு போறான் என்பான். இது இந்நாட்டின் பொதுவான குரல். எனவே தான் ஊழல் என்ற பெருச்சாளி யானை போல் வளர்ந்து குழாமிடுகிறது. அதிக வருமானம் இல்லாத குடும்பம் குழந்தைகளை படிக்க வைக்கவே முடியவில்லை . அதிக வசதியும் வருமானமும் இருந்தும் டியுஷன் என்ற பேரில் பணம் பறித்து வரபோகின்ற கேள்விகளை முன்கூட்டியே சொல்லிகொடுத்து பாவம் செய்யும் வாத்தியர்கள் உள்ளவரை பெரும் பூகம்பத்தை தடுக்க முடியாது. இந்நாட்டில் ஊழல் பெருகி வரக்காரணம் மக்களின் மனபோக்கே அப்படித்தான். அடுத்தவன் சொத்து பறிபோனால் முற்றத்தில் வண்ண க்கொலமிடுவான். தண்டனைக்காலம் வெகு தூரத்தில் இல்லை.

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  தீர்ப்பு வரும் நாள் பொது விடுமுறை விடவேண்டும் என பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

 • periasamy - Doha,கத்தார்

  இந்த 2011-2016 பல லட்சம் Kodikal தமிழக வளங்களை சுரண்டி கொள்ளையடிதுள்ளார்கள் அதற்கும் Sethu தண்டிக்கப்பட vum

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  ஆமாம் ,எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.முக மேலே ஏன் ஒருத்தரும் சொத்து குவிப்பு வழக்கு போடவில்லை?ஏதாவது ஒரு அதிமுக பிரமுகரே போடலாமே.

 • ajay - Chennai

  jail conform

 • Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்

  பி.ஜே.பி யுடன் கை கோர்த்து சட்டமன்ற தேர்தலை சந்திக்காத காரணத்தினால் மத்தியில் ஆளும் அரசு இந்த தீர்ப்பை விரைவில் அறிவிக்க அனைத்து முயற்சிகளையும் முடிக்கி விட்டுள்ளது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தீர்ப்பு வரும் நாளில் ரோட்டில் பட்டாசு வெடிப்பார்கள்- என்ன தீர்பானாலும் பட்டாசு உறுதி, வெடிப்பது யா ரென்பது தான் கேள்வி. கார் பஸ் ஓடாது, கடைகள் க்ளோஸ் ஆகிடும். ஊருக்கு போறவங்க முன்னாடியே கிளம்பிடுங்க.

 • குரங்கு குப்பன் - chennai,இந்தியா

  புடிச்சு உள்ள போடுங்க சார்,

 • Amirtha Rangarajan - chennai,இந்தியா

  யாராக இருந்தாலும் ஆண்டவனிடமிருந்து தப்ப முடியாது. தவறு செய்தவர் தண்டனை பெற்றால் தான் நீதி நிலைக்கும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நீதியை நிதி வெல்லுமா என்பது இப்பொழுதைய மில்லியன் டாலர் கேள்வி...

 • mvsrinivasan srinivasan - chennai,இந்தியா

  தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இப்போது வழங்காது எலக்ஷ்ன் முடிந்த பிறகே அறிவிப்பார்கள்

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  காசு பணம் துட்டு மணி மணி .............

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  இந்த தீர்ப்பை வைத்துதான் நாட்டில் இன்னும் சட்டமும் நீதியும் உயிரோடதான் இருக்கிறதான் என்று அறிந்து கொள்ள முடியும். உலகமே அறிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் நீதித்துறையின் மேல் உள்ள நம்பிக்கை போய் விடும். அப்படி போய் விட்டால் இனி நாட்டில் ஜனநாயகம் என்பது கேள்விக்குறிதான். ஜெய் ஹிந்த்.

 • mullai mahendran - chennai,இந்தியா

  ஜெ அரசியலில் இருப்பதே அசிங்கம்.அதுவும் தேர்தலில் போட்டி போடுவது மகா கேவலம். தமிழ்நாட்டையே கொள்ளை அடிக்க நினைக்கும் ஜெ -சசி குடும்பத்தை தமிழ் நாட்டை விட்டே துரத்த வேண்டும்.

 • MOHAMED ANSAR ALI - karur,இந்தியா

  விரைவில் நடக்கப்போவது இதுதான்....பொறுத்து இருங்கள்...கோர்ட்டும் நமதே, தீர்ப்பும் நமதே?. அதிமுகவிற்கு தற்போதுள்ள சூழ்நிலை மோசமாக உள்ளது. தேர்தலில் வெற்றி என்பது கேள்விகுறிதான். இதை சரி கட்ட ஒரே வழி, சொத்து குவிப்பு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அதை வைத்து தேர்தலில் வெற்றி பெற நிறைய வாய்ப்புக்கள். ஆகையால் இறுதியாக வெற்றி பெற கையில் எடுக்கப்பட்ட ஆயுதம் தனக்கு சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  நீங்க தான் ரொம்ப ஆவலா இருக்கிற மாதிரி தெரியுது

 • Saffron Dalit - Coimbatore,இந்தியா

  வருங்கால தமிழக முதல்வர் மா பா பாண்டியன் / சி ஆர் சரஸ்வதி .

 • Raja Manakavalan - Coimbatore,இந்தியா

  திருட்டு ரயில் ஏறி வந்த ஒரு கூட்டம் இன்று 33000 கோடிக்கு அதிபதி. இந்த அம்மா சம்பாதித்த 65 கோடி ஒரு பெரிய விஷயமே இல்லை. சுமார் 15 வருட காலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக முன்னணி நடிகர்களுடன் நடித்த ஜெயலலிதா அப்பொழுதே பெரும் சம்பளம் வாங்கியவர். அன்றைய காலகட்டத்தில் சரோஜாதேவி படவுலகை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிய நேரம் அது. தமிழ் திரையுலகில் சரோஜாதேவியின் இடத்தை, ஜெயலலிதா கைப்பற்றிகொண்டார் . எம்,ஜி,ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோர் படங்களில் கதாநாயகி இவர்தான். 1964 முதல் 1980 வரை முன்னணி கதாநாயகி இவர்தான். ஒரு வசனகர்த்தா கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கும் போது ஒரு முன்னணி கதாநாயகியால் சம்பாதிக்க முடியாதா? ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு உண்மையாகவே அரசியல் பழி வாங்கல்தான்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒரு வருடம் முன்பே ஒரு வார இதழில் சொல்லப்பட்டது : ஜெயலலிதாவுக்கு தண்டனை என்று தீர்ப்பு வந்தாளும் அனுதாப அலை வீசும், ஒருபெண்மணியை அரசியல் பழி வாங்குகிறார்கள் என்பார்கள். ஜெயலலிதா சொத்தே சேர்க்கவில்லை, பாவம், ஏழை, கஞ்சிக்கே லாட்டரி அடிக்கிறார் என்று தீர்ப்பு வந்தாலும், வெற்றி வெற்றி என்று முழங்கி அதிமுக ஜெயிக்கும்" என்று எழுதப்பட்டது.

 • அம்பை சுதர்சனன் - கொடைக்கானல் ,இந்தியா

  நடப்பதை யார் தடுக்க முடியும்?.எது நடந்தாலும் மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும்

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  மத்திய அரசு கைவிரித்தாலும் .. தீர்ப்பு பாதகமாக வந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் அம்மையாரிடம் உண்டு. தீர்ப்பை விட மக்களிக்க போகும் தீர்ப்பு தான் மகத்தானது.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  காங்கிரசை விட பாஜக அபாயகரமான கட்சி என்பதால் தான் பாஜகவை தள்ளி வைத்துள்ளார் ஜெ... அன்று சோனியாவுக்கு ஜால்ரா அடித்து இருந்தால், என்றோ இந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெ வெளியே வந்திருப்பார்... ஆனால் லட்சம் இலங்கை தமிழ் மக்களை காக்க ஜெ , சோனியாவுக்கு ஜால்ரா அடிக்க வில்லை...அதன் பலனை தான் ஜெ இன்று நீதிமன்றம் மூலம் அனுபவித்து கொண்டு உள்ளார்.. தேசிய கட்சிகள் தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன... கர்நாடகாவை , ஜெ துணிந்து எதிர்த்து, காவேரி உரிமையை நிலை நாட்டினார்... முல்லை பெரியாறு பிரச்சினையில், கேரளாவை எதிர்த்து முல்லை பெரியாறு நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தினார் ஜெ... இதெல்லாம் பொறுக்கமாட்டாத, கேரள காங்கிரஸ், மற்றும் கர்நாடக காங்கிர , பாஜக ஆகிய கட்சிகள் மறைமுக கூட்டணியுடன் ஜெ யை வீழ்த்த துடிக்கிறது... இலங்கை தமிழர்க்காக ஜெ குரல் கொடுத்ததால், ராஜபக்ஷே ஆசியுடன் சு சாமி , சொத்து குவிப்பு வழக்கிற்கு கடிவாளம் போட்டு, இறுக்கி தீர்ப்பை வரவைத்தார்... இதுல காங்கிரஸ் நேரடியாக நெஞ்சில் குத்தியது... ஆனால் பாஜக மறைமுகமாக முதுகில் குத்த எத்தனிக்கிறது... பாஜகவிற்கு தமிழகத்தில் கட்சியை வளர்க்க அதிமுகவை அழிக்க வேண்டும்... ஏனென்றால் அதிமுகவில் தான் வாரிசு இல்லை.. அதனால் தான் பாஜக ஆசியுடன் இந்த கேஸ் விரைவாக நடத்தபடுகிறது... உச்சநீதி மன்றத்தில் எத்தனையோ கேசுகள் பெண்டிங்கில் உள்ளது..எடியுரப்பா கேஸ், என்ன ஆனது?.. லல்லு கேஸ் என்ன ஆனது?.. 2 G கேஸ் என்ன ஆனது?..கலா - தயா மேலே ஒரு குற்ற பத்திரிக்கை கூட தாக்கல் பண்ணப்படவில்லை... இவர்கள் திமுகவினர் ..ஆனால் பாஜக அரசு இவர்களை கண்டு கொள்ளவில்லை.. அதுபோல சோனியா, ராகுல் மேலே போடப்பட்ட பத்திரிக்கை சொத்து அபகரிப்பு வழக்கும் கூட கிணற்றில் போடப்பட்டுவிட்டது... இவர்கள் எல்லாவற்றிற்கு ஜெ யின் இந்த 69 கோடி வழக்கு மட்டும் தான் கண்ணை உறுத்தி கொண்டுள்ளது... தவறு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டும்...அதில் மாற்று கருத்து இல்லை.. ஆனால் முதலில் பல்லாயிரம் , பல லட்சம் கோடி கொள்ளை அடித்தவர்களை கைது பண்ணிவிட்டு ஜெ பற்றி பேசுங்கள்.. .. பல லட்சம் கொள்ளை அடித்தவர்கள் முன்பு ஜெ நிரபராதி... ஜெ தனது பேரில் சொத்து வைத்தது தான் குற்றம்... ஆனால் லட்சம் கோடி அளவுக்கு பினாமிகள் பேரில் , அல்லது சுவிஸ் வங்கியில் வைத்திருந்தால் குற்றம் இல்லை.. இந்திய சட்டம் அவர்களை ஒன்னும் செய்யாது... இது தானே உங்கள் கேடு கெட்ட சட்டம்?.. மக்கள் பாஜக, காங்கிரஸ் மற்றும் திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்பார்கள்... அதிமுக மீது கை நீட்டி குற்றம் சொல்ல ம.ந.கூ தேமுதிக கூட்டணி தவிர வேறெந்த கொம்பனுக்கும் தகுதி கிடையாது....

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  தீர்ப்பு எப்பாடிஇருக்கும் என்று அம்மாவுக்குத் தெரிந்திருக்கும். சற்றும் அலட்டிக்கொள்ளாமல் பரப்புரைகளுக்குச் செல்லும்போதே தெரியைல்லையா ?

 • Murugan - Dubai,இந்தியா

  அம்மா ரிலீஸ் ஆவார்.... அதிர்ச்சி கட்டுமர கூட்டத்திற்குதான்..

 • Subbiah Ayyanar - Chennai,இந்தியா

  இப்பவாவது ஒரு நல்ல புது கால்குலடோர் வாங்கி கொடுங்க..

 • Indian - chennai,இந்தியா

  தீர்ப்பு ஜெயாவுக்கு எதிராக வந்தால் நீதிபதி "குற்றவாளியாக" அடிமைகளால் சித்தரிக்க படுவார்.... சாதகமாக வந்தால் "நீதி அரசர் "என்ற பட்டம் அடிமைகளால் கிடைக்கும்....நடுநிலையான வாக்காளனுக்கு இந்த வழக்கு கடந்து வந்த வரலாறு தெரியும் ...இங்கு இப்போது வாய்தாவுக்கு இடமில்லை... ஒருவேளை ஜெயா தேர்தல் வருவதால் தீர்ப்பை தள்ளி வைக்கவும் மனு போடுவார் ... அதுவும் நடக்காது... ஊழல் ,மன்னர் ஆட்சி, அக்கிரமம், தலைகனம்,கர்வம் ,பித்தம் எல்லாம் தமிழ்நாட்டை விட்டு ஓட போகிறது...அடுத்து வரும் திமுக விற்கு இது ஒரு பாடமாகவும் மக்களுக்கு ஒரு திருப்பு முனையாகவும் இருக்கும்......ஆண்டவன் கொடுக்கும் 100 வயதில் 80 வயது வரை கட்டுபாடுடன் வாழ்ந்தால் சந்தோசமாக ஆயுளை முடிக்கலாம்.... ஆனால் ஆயுள் முழுவதும் கஷ்டம் தெரியாமல் மனதிற்கு பிடித்தது போல் வாழ்ந்தால் 40 வருடம் இஷ்டம்போல் வாழ்ந்து விட்டு மீத நாட்கள் ஆயுள் முழுவதும் கஷ்ட பட்டு வாழ்கையை முடிக்க வேண்டியதுதான்....அது ஒருவருக்கு ஆரம்பம்... அம்மா பரிகாரம் தேட போகிறார் ....அடிமைகள் இனி தங்கள் புழைப்பை பார்க்க போய் விடுவார்கள் ...

 • sachin - madurai,இந்தியா

  என்ன நெருக்கடி வர போகுது ஐயா " விடுதலை விடுதலை விடுதலை " என்று நீதிபதி சாமிகள் சொல்லி விடுவிக்கும் .......நீதிபதி பினாகி சந்திரகொஷ் ஐயா இது வரை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக ஒரு தீர்ப்பையும் சொல்ல வில்லையாம் இவர் வாழ் நாளில் இன்று வரை ......யோசித்து கொள்ளுங்கள் இவர் தான் சீனியர் நீதிபதி இந்த பெஞ்சில் ........" நீதபதி அமிதவராய் எதையும் நன்கு ஆராய்ந்து முடிவு எடுப்பாராம் யாருக்கும் தலை வணங்க மாட்டாராம் தப்பு என்றால் தப்பு என்று தீர்ப்பு சொல்லுவாராம் ...........ஒருத்தர் அப்படி ஒருத்தர் இப்படி இந்த பெஞ்சில் இருகிறார்கள் ......பார்க்கலாம் இரண்டு பெரும் ஒரே தீர்ப்பு சொல்லுவார்களா அல்லது மாறி மாறி சொன்னால் மீண்டும் அடுத்த 3 பெஞ்சிக்கு போகும் ஆக ...........மறுபடியும் ஒரு 18 வருடம் தான் .........

 • Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா

  பணம் பந்தியிலே, பணத்தால் இந்தியாவில் நீதியை வாங்கமுடியும்

 • Nannisigamani Baskaran - Chennai,இந்தியா

  தீர்ப்பு சொல்வார்களா ? வெயில் தாங்க முடியவில்லை என்று நீதிபதி டார்ஜிலிங், சிம்லா என ஓயுவு எடுக்க போய் விட்டால் ?

 • Indian - chennai,இந்தியா

  உள்ளே போகும்போது அனுதாபத்தை வைத்து ஜெயா வெற்றி பெற பார்ப்பார்....ஆனால் வெற்றி பெற்று அவருக்கு பயன் இருக்காது.....நல்ல வாயன் தேடி நார வாயன் கொண்டு போன கதை ஆகிவிடும்...

 • Indian - chennai,இந்தியா

  தேர்தல் வரைக்கும் தேர் போகாதோ...?

 • Thiyagu Ganesh - Pudukkottai,இந்தியா

  அதிமுக வுக்கு நெருக்கடியோ இல்லையோ தினமலருக்கு கடும் நெருக்கடி போல.... :-)

 • Sanjisanji - Chennai,இந்தியா

  தண்டனை தீர்ப்பு வர வாழ்த்துக்கள் .. குறைந்தபட்சம் ஒரு கழகதிடமிருந்தாவது தமிழ்நாடு காப்பாத்தப்படும் ....

 • ramesh - chennai,இந்தியா

  தீர்ப்பை ஏற்கனவே விலைக்கு வாங்கி இருப்பார்கள் ,மேல் முறையீடு விசாரணை எல்லாம் கண்துடைப்பாகவே இருக்கும்.மேலும் 2 குமார சாமிகள் தீர்ப்பு வழங்க போகிறார்கள்.மத்திய பிஜேபி எவளவு அவமான பட்டாலும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே வெட்கமிலாமல் இருந்து வருகிறார்கள்.பிறகென்ன

 • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

  என்னது பிஜேபி- அதிமுக கூட்டணி அமையவில்லைன்னு அதிமுக வுக்கு சுப்ரீம் கோர்ட் மூலமா நெருக்கடி தரபடுகிறதா..

 • Rameeparithi - Bangalore,இந்தியா

  நல்ல தீர்ப்பை சொல்லுங்க கனம் கோர்ட்டார் அவர்களே... இந்த நாட்டின் அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்

 • Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) - KUALA LUMPUR,மலேஷியா

  என்னது தேர்தலுக்கு முன்பே சூட் கேஸ் சுப்ரீம் கோர்டுக்கு போய்டுமா.

 • sairam - muscat,ஓமன்

  இந்த ஊழல் பெரிசாளிகளின் அத்தியாயம் இதோடு முடியட்டும் நம் தாய் தமிழ் நாட்டில் .. திமுகா ஆதிமுக இரண்டும் அழிக்க பட வேண்டிய சக்திகள் .. தேமுதிக தலைமை நம்மால் ஏற்க முடியாது .. நான் எந்த ஒரு கட்சிக்கோ சமூகத்திற்கோ ஆதரவாக பேச வில்லை.. நமது நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும்.. புதிய சிந்தனயூடு வருகின்ற இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் .. அது சீமான் அல்லது அன்புமணி யாராக இருந்தாலும் சரி தான் .. MAATTAM ஒன்றே மாறாதது ... இந்த கொள்ளை கும்பலிடம் இருந்து ஒரு மாருதல்க்காக நாம் அனைவரும் ஒன்று படுவோம்... 2 சதவிகிதம் நினைத்து எதுவும் ஆகிவிடாது .. நமது நாடு நல்வழி அடைய வேண்டி அனைவரும் பாடு பட வேண்டும் .. நடிகர்கள் நடத்திய கிரிக்கட் ஆட்டத்தை புறக்கணித்து அவர்களுக்கு சாட்டையடி கொடுத்த நாம் .. மீண்டும் இணைவோம் நமது தாய் நாடும் நாட்டு மக்களும் காக்க பட ....

 • subhashini - chennai,இந்தியா

  தினமலர் திமுகவுக்கு பயங்கர ஜால்ரா போட ஆரம்பித்து விட்டது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஜெ மற்றும் அதிமுக வுக்கு எதிரான செய்திகளே பெரும்பாலும் உள்ளன..எங்கோ பேருக்கு திமுகவை எதிர்த்து சொல்லப்படும் விஷயங்கள் ஒன்றும் இரண்டுமாக உள்ளன..இனி தினமலர் நாடு நிலை நாளேடு அல்ல .

 • Maddy - bangalore,இந்தியா

  அரசியல் நோக்கோடு தொடரப்பட்ட வழக்கு என்பதாலும் ஒரு பொது சேவை செய்பவரை பழிவாங்கும் நடவடிக்கை என்று கருதப்பட்டாலும் அனைத்து தீர்ப்புகளிலுமே தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன... இந்த மாத்திரியான சிக்கலான வழக்கை மிகவும் கூர்ந்து நோக்கி ஆராய்ந்து ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக்கூடாது என்ற நீதியை கருதி குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா விடுதலை செய்யப்படுகிறார் அவருடன் கூட்டு நடவடிக்கை என்ற நோக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சசிகலாவிற்கு தனியாக ஒரு வழக்கை கொண்டுவந்து விசாரிக்க இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. கர்நாடக நீதிமன்றம் இந்த வழக்கை தமிழக ஊழல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்து கர்நாடக நீதிமன்றம் ஒதுங்கவும் இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.... விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா இவ்வாறு காலம் தாழ்த்தாமல் தன் தற்போதைய சொத்து குறித்த ஆவணங்களை income டாக்ஸ் அலுவலகத்தில் சமர்பித்து வருமான வரி ரசீதை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவும் இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது... போங்க டா போய் தேர்தல் நடவடிக்கையை பாருங்க... அ.தி.மு.க வின் வெற்றியை பாதுகாக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்ங்க...

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  வழக்கு தீர்ப்பு எல்லாம் ஒரு பக்கம், பிஜேபி யின் இந்த எண்ணம் நீதி துறையில் அரசின் தலையீடு இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

 • Sandru - Chennai,இந்தியா

  அம்மா சிறை செல்வது தமிழகத்திற்கு உத்தமம்

 • Aaroor Rang - Chennai

  தீர்ப்பு இப்போது வர வாய்ப்பில்லை என திமுகவினர் கூட கருதுகிறார்கள். ஆனால் தீர்ப்பு இப்போதே வந்துவிடும் என நம்பித்தான் BJP முழு வீசசில் தேர்தலை சந்திக்கிறது. ஆளுக்கொரு ஆசை

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  கஷ்ட காலம் மைசூரு செல்விக்கு

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

 • Pattabiraman V - Chennai

  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கூற்றுக்கு உச்ச நீதிமன்றமே அப்படியில்லை என்று உறுதி செய்வது போலத்தோன்றுகிறதல்லவா..இதற்குமுன் அப்பீல் செய்த எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதுவும் பல முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த சொத்துக்குவிப்பு வழக்கு மிகவும் முக்கியம் அதன் தீர்ப்பு நாட்டிற்கு மிக அவசரம் என்று நாட்டுநலன் கருதி உச்ச நீதிமன்றம் வழங்குகிறது என்பதை பழிவாங்கும் நடவடிக்கைக்கு துணைபோகும் செயலாகவே ஒரு சாதாரண தமிழனுக்கு அதாவது இந்தியனுக்குத்தெரிவதாக தெளிவாகப்புரிகிறது வேறு என்ன இதில் கூறயிருக்கிறது நீதித்துறை நண்பர்களே

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் வர போகுது

 • Sampath Kumar - chennai,இந்தியா

  நிச்சயம் இந்த தீர்ப்பு அம்மாவிற்கு சாதகமாக இருக்காது. இதன் மூலம் தேர்தல் சீர் குலைக்கபடலாம். தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும். எதிர்கட்சிகள் ரகசிய பேரத்தில் இறங்கும்.ஆக தமிழ் நாடு ஒரு போர் களமாக மாறும்

 • Rajesh - aruppukottai,இந்தியா

  என்ன நெருக்கடி .. கர்நாடகா ஒன்றையும் நிருபிக்கவில்லை. உப்பு சப்பு இல்லாத வாதம். ஜெயா விடுதலை தான் தீர்ப்பு .. அது சிக்கல் இல்லை பெரிய வெற்றிக்கு தான் வழி வகுக்கும்

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  என்னது ?? ஆர் கே நகர் வேட்பாளர் மாத்த போறாங்களா ?

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  சோதனை மேல் சோதனை.... போதுமடா சாமீ.... டொய்ன்.டொய்ன்.டொய்ன்.டொய்ன்.

 • J-Gun - chennai,இந்தியா

  ஒரு நெருக்கடியும் இல்லை. தீர்ப்பு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை ஒட்டு வேட்டைக்கு எப்படி பயன் படுத்தனும் என்று அரசியல்வாதிகளுக்கு தெரியும். பாதகத்தை விட சாதகமாக அதிக வாய்ப்புகள் உண்டு என்பதால், தீர்ப்பு தள்ளிப்போகவே சாத்திய கூறுகள் அதிகம்.

 • sankaranarayanan - tirunelveli,இந்தியா

  டோன்ட் வொர்ரி - தீர்ப்பு அம்மாவுக்கு சாதகமாகவே இருக்கும் - திமுக செயலிழக்கும்

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  அதிமுகவிற்கு எந்த நெருக்கடியும் இல்லை... மக்களுக்கு நன்கு தெரியும் ...யார் ஊழல்வாதிகள் என்று,...மலை விழுங்கி திமுக மற்றும் காங்கிரஸ் ஆளுங்க சொகுசா வெளியே இருக்குபோது, அதிமுக தலைவர் ஜெ மீது ஒரு துரும்பு பட்டாலும் மக்கள் கொதித்து எழுவார்கள்... ஜெ க்கு எதிரா தீர்ப்பு வந்தாலும் வராவிட்டாலும் ஜெ தான் வெற்றி பெறுவார்... லட்சம் கோடி கொள்ளை அடித்தவர்கள் வெளியே சொகுசாக அலையும்போது, 69 கோடி வழக்கில் ஜெ க்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கட்டம் கட்டுகிறது,...காரணம் அதிமுகவை அழித்து விடலாம் என்ற நப்பாசை... ஜெ க்கு யார் இருக்கிறார் என்ற நினைப்பு ...ஆனால் மக்கள் சக்தி ஜெ பக்கத்தில் தான் இருக்கிறது.... தமிழகத்தில் வெற்றிடத்தை உருவாக்க காங்கிரஸ், திமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டு சதி செய்கின்றன... முதலில் இந்த கட்சிகள் கண்ணாடி முன்னால் நின்று தனது யோக்கியதையை பார்த்துக்கொள்ளட்டும்...

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  அதிர்ச்சி கட்டுமர கூட்டத்திற்குதான்....

 • Vijay Gopi - chennai,இந்தியா

  கடவுளே இந்த முறை எந்த கணக்கு பிழை, எழுத்து பிழை, அதிகார பிழை, பணம், நீதி தவறுதல் என எதுவும் நடக்காமல்...குறைந்தது 5 ஆண்டு வெளியே வர முடியாத சிறை தண்டனை கிடைக்கணும், தவறு பண்ணுகிறவர்கள் தண்டிக்க படுவார் என அனைவரும் அறிந்து கொள்ளனும்...

 • R.Srinivasan - Theni,இந்தியா

  ஜெ வை வீழ்த்த பி.ஜெ.பி. க்கு வேறு வழியே கிடையாது.....தீர்ப்பின் மூலம் ஜெ. உள்ளே போவதும்....ரஜினியின் ஆதரவைப் பெறுவதுமே அமித் ஷா வின் மாஸ்டர் பிளான். தமிழக பி.ஜெ.பி. யின் அளவு கடந்த தன்னம்பிக்கையின் பொருளும் அதுதான்......

 • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

  யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.. இங்கே சங்கு வருது முன்னே..

 • தமிழன் - தமிழகம் அல்ல,இந்தியா

  தி.மு.கா ஆட்சியை பிடிக்கும், சீமான் 2ஆம் இடம் பிடிப்பார். இந்த தீர்ப்புக்காகவே தனியே சென்ற வி.காந்து வுக்கு 3 ஆம் இடம்.

 • RRavichandran - Doha,கத்தார்

  தேர்தலுக்கு முன் ஜெ., சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு ?. நடப்பவை எல்லாம் மக்கள் நன்மைக்கே. கடவுள் அணு கிரகத்தால் தமிழக மக்கள் நலமுடம் வாழவேண்டும். வரும் சட்டசபை தேர்தலுக்கு முடிவுக்கு பின்பு.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  தெரிந்த முடிவுதான்..தீர்ப்பு எதிராக வரும் என்று எதிர்கட்சிகள் கூட நினைக்கவில்லை...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement