Advertisement

சறுக்குகிறது அ.தி.மு.க.,

என்ன ஆயிற்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ.,க்கு? நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்காக, மற்ற கட்சிகளுக்கு முந்தி, 4ம் தேதியே, 227 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயரை அறிவித்தவர், அடுத்த, 15 நாட்களுக்குள், ஏழு முறை வேட்பாளர்களை மாற்றி விட்டார்.
'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என ஒதுக்கித் தள்ள முடியுமா இதை?
காரணம், பட்டியல் வெளியாவதற்கு முன் நடந்த நேர்காணலின்போது, விண்ணப்பித்தவர்களின் தெளிவின்மை கண்டு, தனக்கு திருப்தி இல்லை எனச் சொன்னவர், தானாகவே ஒரு பட்டியலைத் தயார் செய்து வெளியிட்டார்.
அவர் மனதுப்படி எல்லாம் நடந்திருந்தால், அந்தப் பட்டியலே, இறுதிப் பட்டியலாக இருந்திருக்க வேண்டும் அல்லவா! அப்படி இருக்கவில்லை. சராசரியாக இரண்டு நாளுக்கு ஒரு முறை என்ற வகையில், வேட்பாளர்களை மாற்றி அறிவித்த வகையில் உள்ளார்.
'என்ன தான் நடக்குது உள்ளே?' என விசாரித்தபோது, கட்சியினர் பல தகவல்களை முன்வைக்கின்றனர்.
* அ.தி.மு.க.,வுக்கு எதிராக களமிறங்கக் கூடிய கூட்டணிகள் உருவாகாத போது, உளவுத்
துறை கொடுத்த தகவல், ஆளுங்கட்சிக்கு மட்டும், 160 தொகுதி கிடைக்கும் என்பது. மற்ற கூட்டணிகளுக்கு பலம் ஏற ஏற, இங்கு சரிவு ஏற்படத் துவங்கியது.
* தன்னுடனான கூட்டணிக்காக வாசலில் காத்துக் கிடந்த மற்றும் தானே பேச்சு நடத்திய கட்சிகளுக்கு, தன்னுடைய வழக்கமான பாணியில் நிபந்தனைகள் விதித்து, அவை ஒத்து வராத நிலையில், அக்கட்சிகள் அனைத்தும்வெளியேறி, எதிரணிக்குச் சென்றபோது, தனக்கு லேசாக, 'ஜெர்க்' ஏற்படுவதை மெல்ல உணரத் துவங்கினார் ஜெ.,

* எதிர்க் கூட்டணிகள் பலம் பொருந்திய நிலையில் அமைந்து விட்டன; அக்கட்சியினரில் பலரும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டனர். அவர்களின் பட்டியலைப் பார்த்ததும், அவர்களின் பலம் வாய்ந்த வேட்பாளர்களுக்கு எதிராக தன் கட்சிக்காரர் சிறப்பாக இல்லை என்பதை, மிகத் தாமதமாக உணர்ந்து, வேக வேகமாக மாற்றி வருகிறார் ஜெ.,
* இப்படி வேட்பாளர்களை மாற்றிக் கொண்டிருக்கையிலேயே, அவருக்கு லேசாக பொறி தட்டுகிறது. நேர்காணலின்போது வந்தவர்களில் பலர், தான் தயாரித்த பட்டியலில் இல்லாதவர்கள் என்றால், அதன் பிறகு வந்தவர்கள், பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டுமே? எதிராளி யார் எனத் தெரிந்து, அதற்கேற்றார் போல் பட்டியல் அமைய வேண்டுமே? எதிராளிகளின் பட்டியலை, கட்சி யினர், தனக்கு முன்கூட்டியே தராமல் போனது ஏன்?
இக்கேள்விகள் மனதில் எழுந்ததால், ஜெ., மேலும் ஆடிப் போனார்.
* அதோடு, இந்த முறை தேர்தல் பிரசாரத்திலும், ஜெ., சோபிக்கவில்லை. வழக்கம் போல, கதைகள் பல சொன்னாலும், பேச்சின் பாணி, கேட்பவர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. பேச்சில் வீரியம், எழுச்சி இல்லாமல் போவது, அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.
* எதிர் கூட்டணியில், பல தலைவர்கள், பல இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்கின்றனர். அவர்களின் பேச்சு, ஆக்ரோஷமாக உள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சைக் கேட்பதே, 'காமெடி' தான் என, மக்களின் ரசனை, எதிரணியை நோக்கித் திரும்பி விட்டது.
இதற்கு நேர் மாறாக, ஆளுங்கட்சியின் தொலைக்காட்சியில், ஜெ.,யின் பிரசாரத்தை, புதுப் புதுத் தகவல்களாக வெளியிடாமல், கீறல் விழுந்த ரிக்கார்டு போல, காலை முதல் இரவு வரை, சில காட்சிகளை மட்டும், திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றனர். இது, நெடுநாளைய
ஆதரவாளர்களைக் கூட, சலிப்படைய வைக்கிறது.- இவை தான், ஜெ.,யின் செல்வாக்கைக் கீழிறக்கும் காரணிகளாக அமைந்து விட்டன. இவற்றின் தாக்கம், சமீபத்திய உளவுத் துறையின் தகவல் வாயிலாகவும் தெரிகிறது.

அ.தி.மு.க., கூட்டணிக்கு, 85 முதல் 90 இடங்கள் தான் கிடைக்கும் என்பது தான் அத்தகவல்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (232)

 • P Senthil Kumar - Coimbatore,இந்தியா

  என்ன செஞ்சுட்டா இந்த இரு கட்சிகளும். தமிழகம் கடனில். இவர் கோடியில் புரளுவதை தவிர. மீடியாக்கள் தயவுசெய்து சப்போர்ட் செய்தால் நல்ல மாற்றம் கொண்டு வரலாம்

 • lakshmanaraj - virudhai

  ஈயத்தை பார்த்து இளிச்சதாம் பித்தளைங்கிறது திமுகவுக்கு கன கச்சிதமா பொருந்தறது கண்ணுக்கு தெரியலையா, ஜெயாவைக் காட்டிலும் கருணா வேட்பாளர்களை துரிதகதியில் மாத்தி, தான் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட புளி என்று சொல்வது ஞாயமா. ஊருக்குதான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்கிறாரோ. திமுகவினரின் போராட்டத்தை பாக்கறப்போ வேட்பாளரை மாற்றுவதில் ஜெயாவை பின்னுக்கு தள்ளிவிடுவார் போல.

 • Sahayam - cHENNAI,இந்தியா

  கடைசியாக வந்த வாசனையும் இழந்து விட்டார். காமராஜர் ரெகார்ட் உடைக்கவேண்டும் என தலை கணம் தன்னையே அழித்து விட போகிறது .

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  திமுகவுக்கு 95 அதிமுக 85 தேமுதிக 25 பாஜக 20 மற்றவை எப்படி ரிஸல்ட்

 • Sivaraman AP - bangaluru,இந்தியா

  மைனாரிட்டி அதிமுக அரசு என்கிற செய்தியை தினமும் கலைனர் டிவியில் , சண் டிவியில் செய்தி கேட்க மக்களுக்கு ஆசை ... நிறைவேறுமா?

 • mohan ramachandran - chennai,இந்தியா

  இதுவரை தமிழ் நாடு கண்டிராத சட்ட மன்ற தேர்தல் .சித்திரை வெய்யிலை விட சூடு பறக்குது .தேர்தல் நாள் நெருங்க நெருங்க தகிக்கும் .மாற்றம் வேண்டிய தேர்தல் இது .ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சியும் இது போன்ற தேர்தலை சந்தித்தது இல்லை .உண்மையில் களை கட்டுகிறது .வாழ்க ஜன நாயகம் .

 • Rajesh - aruppukottai,இந்தியா

  தினமலர் மனசாட்சியுடன் எழுதவும் ..ஜெ பிரசாரத்தில் யாரையும் கடுமையாக ஆபாசமாக பேசாமல் தன் ஆட்சியின் நிறையையும் தி மு க வின் குறையையும் தெளிவாக உளறாமல் பேசுகிறார் .. இது உளவு துறை கொடுத்த ரகசிய செய்தியாக இருந்தால் ஒரே மாதிரி ஆச்சி அசலாக எப்படி 4 பத்திரிகைகளில் ஒரே நாளில் செய்தி வெளியாகும்? சபரீசன் கொடுக்கிறான் நீங்கள் எழுதுகிறீர்கள் ..ஒன்று மட்டும் நிச்சயம் ஸ்டாலின் என்ற காமெடியனின் பேச்சு ஒரு போதும் ஓட்டக மாறாது

 • Raj - bangalore,இந்தியா

  தினமலர் கருத்து பிரகாரம் பிஜேபி அமோக வெற்றி பெறும், மோடி தமிழக முதல்வர் ஆவார்

 • Manisekar - Chennai,இந்தியா

  Nanbagathanmi present cm Mela matum than ullathu

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இதுல என்ன தப்பு இருக்கு? நீ எந்த ஆயுதத்தை எடுக்கனுமோன்னு உன்னோட எதிரியே தேர்ந்தெடுக்கிறான். உன்னோட வலிமையை உன்னோட எதிரியே நிர்ணயிக்கிறான்னு சொல்லுவாங்க. அந்தமாறிதான், எதிரியோட ஆட்டத்துக்கு தகுந்த மாறி நாம ஸ்டெப்பை மாத்தி போட்டு ஆடுறதுல ஒன்னும் தப்பு இல்ல. நம்மளோட குறி எதிரி வீழ்ந்தானாங்கிறதுல தான் இருக்கணுமே தவிர, இது போல சிண்டு முடிஞ்சு விட்டு வெளாட கூடாது. அதனால செய்திய மாத்தி போட்டு ஜெவின் சதுரங்க வியூகம். வேட்பாளரை மாற்றி அதிரடி, எதிர்கட்சி கூடாரங்கள் சிதறி ஓட்டம். நிச்சய வெற்றி. அப்படின்னு மக்கள் மனசில விதையுங்க.

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  மக்கள் நலகூட்டணி - 90, தி.மு.க - 90 மற்றும் அ.தி.மு.க - 90 என்று தான் இந்த தேர்தல் முடிவு இருக்கும் அல்லது தி.மு.க அதிக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் இல்லை என்றால் மக்கள் நல கூட்டணி தி.மு.க உதவியுடன் ஆட்சியமைக்கும்

 • Subbu Senthilraj - Chennai,இந்தியா

  அதிமுக சறுக்கலுக்கு அடிப்படை, கட்சி தலைமையின் உடல் நிலை. இதற்கு முந்தைய ஆட்சிகாலங்களில் அவர் நிர்வாகத்திறன் மெச்சும்படியாக இருந்தது. குறிப்பாக சுணாமி, அரசு ஊழியர்கள் போராட்டம், தொண்டர்களை அத்துமீறாமல் பார்த்துக் கொண்டது என பல பாராட்டும் அம்சம் இருந்தது. ஆனால் கடந்த ஐந்தாண்டாக நிர்வாக திறமையின்மையில் விலைவாசி உயர்வு, தொழில்துறை வளர்ச்சியின்மை, அரசு நிர்வாக இயந்திரத்தின் எல்லை மீறிய ஊழல். வெள்ளத்தின் போது ஏற்பட்ட இன்னல்கள், டாஸ்மாக் பிரச்சனையில் ஏதாவது முடிவு எடுத்தால் அது எதிர்கட்சியினர் நிபந்தனையால் எடுத்தது என்றும் அதன் தன் கவுரவம் பாதிக்கும் என்ற சர்வாதிகார மனப்போக்கு. தன் உடல் நிலை பாதிப்பை வெளிப்படையாக மக்கள் முன் உணர்த்தியது. இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறந்த முறையில் ஆட்சி செய்வாரா இல்லை உடல்நிலை காரணமாக பேருக்கு ஆட்சி செய்வாரா என்ற ஐயம் தான் வாக்கு வங்கி குறைய காரணம். இரண்டாவது திமுகவின் வலுவான தேர்தல் அறிக்கை.. அந்த அறிக்கைக்கு போட்டியாக தேர்தல் அறிக்கை வெளியிட ஏற்படும் தாமதம் போன்றவையால் அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்து கொண்டு இருக்கின்றது. இந்த பிழைகளை அவர்கள் சரி செய்ய வேண்டும்.. சர்வ அதிகாரம் படைத்த இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்க வேண்டும். (அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகின்றது). அதிகாரம் ஒரு இடத்தில் குவிந்திருக்கின்றது.. அப்படி குவிக்கப்பட்ட அதிகாரம் கொண்டவர்.. தன் உடல்நிலை காரணமாக சரியாக செயல்படாத சூழலில் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.

 • Lt Col M Sundaram ( Retd ) - Thoothukudi,இந்தியா

  Now people will realize and their franchise accordingly.

 • Ramudu - Chennai,இந்தியா

  இனிமே தான இருக்கு எல்லாம்...இன்னும் ஒரு மாசம் இருக்கு..அம்மா பட்டய கிளப்புவாங்க பாருங்க..

 • siva - chennai

  அஇஅதிமுக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்

 • VEERAPAN - SE DU,மலேஷியா

  அதிமுக கட்சிக்காரர்களின் தலைகணத்திற்கு மிகப்பெரிய தோல்வி காத்திருக்கிறது

 • ravi - coimbatore,இந்தியா

  இந்த அம்மையார் மாதிரி ஒரு முட்ட பிச பார்க்க முடியாது ... இவரிடம் வெறுக்க தக்க அரசியல் உள்ளதே தவிர .... சுமூக அரசியல் கிடையாது ... m g r உள்ளவரை சுமூக அரசியல் இருந்தது...ஆனால் இவரிடம் கொடூரம் மட்டுமே உள்ளது .. நல்லா பொய் பேச தெரிந்தவர் ... இவர் எப்படி தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வார்...

 • ravi - coimbatore,இந்தியா

  இந்த ஆளும் கட்சியின் ஆட்சி எண்ணப்படுகிறது ..... இந்த அம்மையார் செய்த சித்து வேலைகள் தெருவுக்கு வந்து விட்டது ... மக்கள் இந்த 5 ஆண்டுகள் ஆட்சியின் கொடுமையை பார்த்து , சிந்தித்து செயல் படுங்கள் ....

 • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

  சென்ற முறை திமுக - தேமுதிக வாங்கிய இடங்கள் இந்தமுறை ...... தேமுதிக அதிமுக வாங்கும் அதாவது 23-29...... இன்றைய கள நிலவரம் இது தான்

 • sakthitharan - madurai,இந்தியா

  தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடம். பிறகு எதற்கு மீண்டும் இந்த ஆட்சி ? இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளவா?

 • GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா

  அண்ணா திமுக தான் ஆட்சி அமைக்கும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை . ஆனால் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை வீணாக தவறவிட்டு விட்டார் தமிழக முதல்வர் என்பது தான் என் எண்ணம் . தமிழக வாழ்வுரிமை கட்சி முதலில் 15 , 20 தொகுதிகள் கேட்டார்கள் என்று செய்தி வெளியே கசிந்தது, முதலில் அப்படி கேட்ட வேல்முருகன் கடைசியில் ஒரு இலக்கத்துக்கு வந்து விட்டார் எனத்தெரிகின்றது , அவருக்கு 3 தொகுதிகள் வரை கொடுத்து இருக்கலாம், அதேபோல டாக்டர் சேது ராமனுக்கும் ஒரு தொகுதியை கொடுத்து இருந்தால் பேசாமல் வாங்கிக்கொண்டு போயிருப்பார் , அதே போல ஜான் பாண்டியனுக்கும் ஒரு தொகுதியை கொடுத்து இருந்தால் சந்தோசமாக வாங்கிக்கொண்டு தமிழகம் முழுவதும் ஜெயலலிதா புகழ் பாடி இருப்பார். மேற்கண்ட 3 கட்சிகளுக்கும் 5 தொகுதிகளை ஒதுக்குவதன் மூலம் குறைந்தது தமிழகத்தில் ஒரு 100 தொகுதிகளில் 3 சதவிகித ஓட்டுக்களை கூடுதலாக பெற்று இருக்க முடியும். தமாக வாசன் முதலில் 25, 30 என்றெல்லாம் கேட்டாலும் கடைசியில் 8 தொகுதிகளுக்கு சம்மதித்தார் என்று தான் செய்திகள் வந்தன , அவருக்கு அந்த 8 தொகுதிகளை ஒதுக்குவதன் மூலம் குறைந்தது 2 டு 3 சதவிகித ஓட்டுக்களை பெற்று இருக்கலாம் , ஆகமொத்தத்தில் மேற்கண்ட 4 கட்சிகளுக்கும் 13 , 14 தொகுதிகளை ஒதுக்குவதன் மூலமாக இப்போது பெறுவதைவிட 5 சதவிகித வோட்டுக்களை கூடுதலாக பெற்று இருக்கலாம் . 13 , 14 தொகுதிகளை விட்டுக்கொடுத்தாலும் அதனால் பெறவிருக்கும் 5 சதவிகித வோட்டுக்கள் சுமார் 40, 50 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் நிலைமையில் இருந்து இருக்கும் . எப்படி இந்த கணக்கை முதல்வர் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரியவில்லை . அதுமட்டுமல்லாமல் இந்த 5 கட்சியினரும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டு இருப்பார்கள், எனவே பாதியில் வெளியே ஓடவும் வாய்ப்பு இல்லை , எனவே விரும்பி , நாடி வந்தவர்களை விட்டுவிட்டது தவறாகத்தான் படுகிறது . இதையெல்லாம் மீறி அண்ணா தி மு க 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் , முதல்வரின் நலத்திட்டங்கள் தான் முழுமையான காரணமாக இருக்க முடியும் .

 • டந.செல்வசேகரன். - தேனி

  என்ன சறுக்குகின்றது அதிமுக என்று எழுதுகின்றீர்கள் !ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அறிவித்து விட்டாலும் மற்ற கட்சிகள் இப்போது தான் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள்!சூழ்நிலைக்கு ஏற்ப வேட்பாளர்களுடைய தகுதியை பொறுத்து வெயிட்டான வேட்பாளர்களை மாற்றுவது எப்படி சறுக்கின்றது என்ற புரியவில்லை! திமுக மாதிரி 60%ஏன் 75 சதவீதம் பழைய குருடிகளையே எம்எல்ஏ சீட்டு போட்டு போராட்டம் நடத்தும் கட்சியல்ல அதிமுக!தலைமைக்கு எதுசரியோ அதை தொண்டர்களும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் ஏற்றுக்கொள்வார்கள்!

 • palaniappan - adurai

  இன்றிலிருந்து சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக...அதாவது 2011 ஜனவரியில்.... இதே தமிழகத்தில்....1 லிட்டர் பால் விலை ரூ 16/- ( இன்றைக்கு 46/- )1 கிலோ பருப்பு ரூ 68/- ( இன்றைக்கு 180/- )பேருந்து கட்டணம் ரூ 10/- ( இன்றைக்கு 23/- )மின்சார கட்டணம் ரூ 500/- ( இன்றைக்கு 1400/- )புது வாட் வரியால்..மாத சாமான்கள் ரூ. 2000/- ( இன்றைக்கு 2800 )மணல் 1 லோடு ரூ 3500/- ( இன்றைக்கு 7200/- )5 பேர் உள்ள குடும்பத்தின் மாத பட்ஜெட்...ரூ 6000/- ( இன்றைக்கு 14000/- )தமிழக கடன் 98 ஆயிரம் கோடி ( இன்றைக்கு 2 லட்சத்தி பத்தாயிரம் கோடி )சிந்திப்பீர்....சுறுக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவும் 120 சதவிகிதம் அதாவது ஒரு மடங்குக்கும் அதிகமாக கூடியுள்ளது....அதே சமயம் தமிழகத்தின் கடன் சுமையும் இரு மடங்காகியுள்ளது..!இத்தனைக்கும் சாலைகள், பாலங்கள், மெட்ரோ ரயில் போன்றவைகள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், புது மின் உற்பத்தி திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புதிய தொழிற் பேட்டைகள்.... என்று எதுவுமே இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் உருவாக்கப்படவேயில்லை...!!விலை வாசியும் மக்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது..., புதுத் திட்டங்களும் இல்லை... ஆனாலும் கடனும் அதற்கான கூடுதல் வட்டியும் மட்டும் இரு மடங்காகியிருக்கிறது...!!இதற்கு எது காரணம்? யார் காரணம்?விலைவாசி குறையும் என்று தானே வாக்களித்தோம்...?உட்கட்டமைப்புவசதிகள் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என்று தானே வாக்களித்தோம்...?சாலைகளின் தரம் இன்னும் மேம்படுத்தப்படும் என்று தானே நம்பி வாக்களித்தோம்...?தமிழக கடன் குறையும் என்று தானே வாக்களித்தோம்..?தொழில் வாய்ப்புக்களும், புதுப்புது வேலைகளும் இன்னும் கூடுதலாக கிடைக்கும் என்று நம்பித்தானே வாக்களித்தோம்...?செயின் திருட்டு பல மடங்கு அதிகரித்திருக்கிறது, வன்முறை கலவரங்கள் வெடித்திருக்கின்றன, ஜாதிக் கலவரங்கள் உச்சம் தொட்டிருக்கின்றன, ஜாதிச் சண்டைகளால் கொலைகள் பல அரங்கேறியிருக்கின்றன, அனைத்து துறையிலுல் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது,கூடங்குளம் தடுத்து நிறுத்தப்பட்டதா? தனி ஈழம் மலர்ந்ததா? கடைசியாக... ஜல்லிக்கட்டு நடந்ததா? காவிரியில் தண்ணீர் வந்ததா?வழக்கமான கொத்துச் சாவுகள்... குறிப்பாக செம்பரம்பாக்கச்சாவுகள் தான் நடந்தேறியிருக்கின்றன....!சிந்தியுங்கள் தமிழக வாக்காளர்களே....ஐந்து வருடத்திற்கு முந்திய நமது வாழ்க்கைத் தரம் அந்த நிலையில் இருந்து முன்னேறி கூட இருக்க வேண்டாம்... ஏன்? அதே நிலையிலேயே தொடர்ந்து கூட இருக்க வேண்டாம்....!ஆனால் ஐந்தாண்டுகள் பின் தங்கிப் போயிருக்கின்றோமே... இதை நீங்கள் உணர்கின்றீர்கள்தானே?!கடந்த தேர்தலில் வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஒவ்வொன்றையும் சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்...இனி நீங்கள் போடும் ஓட்டுக்கு ஒரு நியாயமான மரியாதைஇருக்க வேண்டும்.இருந்தால் வாழ்க்கை வசப்படும். அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள் நண்பர்களே.

 • சேக்கர் டோஹா - Chennai ,இந்தியா

  இந்த முறை அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை ரர க்களுக்கே இல்லை, வேதனைதான்.

 • PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா

  சேகரன் கள் தி மு க சொம்புகள் ... எல்லாருக்கும் தான் ... இப்போதுள்ள நிலவரப்படி யாருக்கு எத்தனை என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது என்பதே உண்மை ..

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  சென்ற நாடாளுமன்ற தேர்தலிலும் இப்படிதான் அண்ணா தி மு க ஆரம்ப கட்டத்தில் 28 தொகுதிகள் சொல்லி தேர்தல் சமயத்தில் 21 இடம்தான் கிடைக்கும் என்று ஆளாளுக்கு கருது கணிப்பும் ,,,பத்திரிக்கைகள் இஷ்டத்துக்கும் கொளுத்தி போட்டது ...இது உண்மையா பொய்யா?.... அதேதான் இப்பவும் செய்கிறார்கள் ..........மிக பலம் வாய்ந்த கூட்டணி இலவச டி வி எல்லாம் அறிவித்தும் தி மு க அப்போது தண்ணி குடித்துதான் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 96 இடம் பிடித்து மைனாரிட்டி ஆட்சி அமைத்தது .....இப்பொழுது 5 முனை போட்டிகள் ...பலம் குறையாத அண்ணா தி மு கவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடுவோம் என்ற கனவு நிறைவேறாது .........அந்த நம்பிக்கை இல்லாததால் தான் போறவன் வரவன் எல்லோரையும் கூப்பிட்டு சீட் கொடுக்க காரணம் ....சென்ற மக்களவை தேர்தலிலும் தொலபதியை மட்டும் நம்பினார்கள் இப்பவும் அதேதான் ...அஞ்சா நெஞ்சன் ஏற்கனவே சொன்னது போல் தான் நடக்கும்

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  நீங்க நினைக்கும் ஆசைபடும் கருத்துக்கள் எல்லாமே பதிவிடுங்க ....தேர்தல் முடிந்து ஒட்டு எண்ணிக்கை அன்று மட்டும் எல்லோரும் வந்துடுங்க ,,,,,,,ஒவ்வொரு தேர்தலிலும் தி மு கவின் அலம்பளையும் எழுச்சியையும் பார்த்து பழகிட்டோம் ...சமயத்தில் எங்களுக்கே பயம் வந்துடும் இவனுவ செய்ற அலம்பல பார்த்து ..உண்மையாவே ஜெயித்து விடுவார்களோ என்று ,,,ஒட்டு பெட்டி திறந்ததும் தான் எங்களுக்கு மூச்சே வரும் ...மக்கள் எப்பவுமே தெளிவுதான் .....200 பிளஸ் அண்ணா தி மு க வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கும் என்பதில் எங்களுக்கு நிறையவே நம்பிக்கை உள்ளது ...பார்ப்போம் இன்னும் ஒரே மாதம் .....

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  நிலை இல்லாத வேட்பாளர்கள், திட்டமிடாத பிரச்சாரம், செயலற்ற ஆட்கள், இன்னும் வேட்பாளர் தேர்வே முடியவில்லை. மிக பெரிய கட்சி ஆனால் முன் திட்டமே இல்லை. எடுத்தார், கவிழ்த்தார், என்று தலைமை மட்டுமே செயலாற்றும் அவலம். உள்குத்து, வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் ரெடி, ஆனால் யார் கொடுப்பது என்பதே முடிவாகவில்லை. யாரை நம்புவது என்பதையும் கட்சி தலைமை முடிவெடுக்கவில்லை. அடுத்த தலைவர்கள் யார் யார் என்ன என்ன பொறுப்பு என்பதும் தீர்மானம் ஆகவில்லை. ஆக மொத்தம் இன்னும் அடுப்புமூட்டவே ஆரம்பிக்கவில்லை இனி எப்போது சமைத்து எப்போது பரிமாறுவது. விருந்துக்கு வந்தவர்களின் நிலை அவ்வளவுதானா ?

 • Ramaswamy Sundaram - Mysore,இந்தியா

  ஹூம்....இப்படி எல்லாம் எதையாவது கிளப்பி விடுவதே என் மதிப்புக்குரிய தினமலரின் வழக்கம் ஆகிவிட்டது...என்ன செய்ய? எதிர்கட்சிகள் ஆளுக்கு ஒன்றாக எதிர்தரப்பு ஓட்டை பிரிக்கும் நிலையில் அம்மா வின் ஒட்டு வங்கி அப்படியே விழுந்தாலே போதும்...அம்மா அமோக வெற்றி பெறுவார்...இந்த சாதாரண கணக்கை தமிழ்நாட்டின் பாமரனும் சொல்வானே? பிறகு மூஞ்சியில் அசடு வழிய நிற்கவேண்டுமே? இது தேவையா உண்மையின் உரைகல்லே?

 • Prakash JP - Chennai,இந்தியா

  ஐம்பது ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளரவில்லையா?? திராவிட கட்சிகளால் தமிழ்நாடு வளரவில்லை என்று சொல்பவர்களை ஒரே மாதம் வட மாநிலங்களில் வாழ சொல்லவேண்டும்... துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடி வந்துவிடுவார்கள்... எல்லா சமூக அளவீடுகளிலும், மனிதவள வளர்ச்சி குறியீடுகளிலும் (கல்வி, சுகாதாரம், மருத்துவம்) இந்திய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் உள்ளது... பொருளாதார மொத்த உற்பத்தி குறியீட்டில் (GSDP) - இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம், Per Capita Income - இந்தியாவில் மூன்றாம் இடம், Growth Rate - இந்தியாவின் சராசரியை விட அதிகம்.. குஜராத் போன்ற பிஜேபி ஆளும் பல வட மாநிலங்கள், கம்யூனிஸ்ட்கள் ஆண்ட மேற்கு வங்கம் மற்றும் கர்நாடக, ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் எல்லாம் தமிழகத்துக்கு கீழே தான் உள்ளன... அதே நேரத்தில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தி.மு.க. ஆட்சிக் காலங்களில் 15%, 13% சதவீதம் என்று இருந்தது. ஆனால், இப்போது அ.தி.மு.க. ஜெயா ஆட்சிக் காலத்தில் 7% சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது அதாவது தி.மு.க ஆட்சியை விட தற்போது வளர்ச்சி பாதியாக குறைந்துள்ளது. எனவே திமுகவால் மட்டுமே, இப்போது தேங்கியுள்ள தமிழகத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும்... அனைத்து தரப்பும் ஒருங்கிணைத்து வளர்ச்சியடையும் (Inclisive Growth), சமூக நீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி அளிக்கும் திராவிட மாடலே சிறந்தது...

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் நான் விரும்பி பார்ப்பது அம்மையாரின் தேர்தல் பிரச்சாரம்தான்..பார்க்க ஆரம்பித்ததும் கொஞ்சம் கண் மூடிவிடும் கொஞ்ச நேரம் பேச்சுமட்டும் காதில் விழுவது போல் இருக்கும் அப்புறம் என்ன செம குறட்டை விட்டு தூக்கம்தான். நீங்களும் வேணும்னா ட்ரை பண்ணி பாருங்களேன்..

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  தினமலர் ஓவரா தொளபதிக்கு சொம்பு அடிப்பது அப்பட்டமா தெரியுது .................எல்லாம் முழு பக்க விளம்பரம் செய்யும் மாயம் தான் ...காசேதான் கடவுளடா ?

 • Jai Kumar - pollachi,இந்தியா

  ஆரம்பம் முதலே 2016 தேர்தலில் ஜெ..சருக்கிகொண்டுதான் வருகிறார்.... அளவுகடந்த பிதறல். யாரையும் நம்பாமல் இருத்தல்....முக்கிய அமைச்சர்களையே வீட்டுச்சிறையில் வைத்து டம்மி ஆக்கியது.. தன் மேடையிலயே வேட்பாளர்கள் தூங்கும் அளவிற்கும் உற்சாகம் இழந்திருப்பது இவை எல்லாம் சறுக்களின் அடையாளங்கள்....இதுபோக கோடையில் வரவிற்கும் மின்வெட்டும்..தண்ணீர் பஞ்சமும்...அம்மாவுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும்...இன்னமும் சொத்துக்குவிப்பு தீர்ப்பு வேற டென்ஷன் ஏற்படுத்தும்.....தொடர்த்ந்து சர்வாதிகாரமாக ...எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்கும் ஒத்துழைக்காமல் இருந்தது....விதி 110 ன் கீழ் வெறும் அறிவிப்பு செய்து ..மேஜயை மட்டுமே..தட்டிக்கொண்டு இருந்தது சென்னை ,திருவள்ளூர்,கடலூர் ,காஞ்சிபுரம்,விழுப்புரம் மாவட்ட மக்களை மழை வெள்ளத்தின் போது போய் பார்க்காமல் ஓடி ஒழிந்தது...முறையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்காமல்..தான் என்ற ஆணவத்தோடு வாழ்ந்தது....இவை அனைத்துமே ஜெ வுக்கு சருக்களைதான் தரும்....

 • Snake Babu - Salem,இந்தியா

  எதோ ஒட்டு சிதறுவதால் வென்று விடலாம் என்றிருந்த ஆயாவுக்கு இப்படி ஒரு ஆப்ப்பா? நண்பர்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள், ஆட்சி கையில் இருக்கும் போது ஒன்றும் செய்யவில்லை. திட்டம் ஏதும் இல்லை, நடக்கிற வேலைக்கும் 45% கமிசன். இதுல கமிசன் சரியா வரலன்னு முக்கிய அமைச்சர்களா பீஸ் பிடுங்கினது........ மக்களையும் சந்திக்க வில்லை, பத்திர்க்கைகளையும் சந்திக்கவில்லை. இப்படி ஒன்றுமே செய்யாமல் இருந்து விட்டு வரபோகும் அடுத்து ஐந்து வருடம் என்ன செய்ய போறிங்க...... ஏற்கனவே நாட்டையே அடிமைகள் நாடாக மாற்றி இருக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் ஆயாவை போய் கேட்டு செய்ய வேண்டும். ஏதாவது சொல்றீங்கலானு பார்த்தா அதுவும் கிடையாது. இப்படி அமைதியா இருந்தே வெள்ளத்தில் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட வச்சிங்க......... மக்கள் மறதிய பயன்படுத்தி ஓட்டபெற்றிடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். இன்னும் எவ்வளவு காலத்துக்கு தி மு க குறை கூறி கொண்டு ஒட்டுகேட்க போகிறீர்கள். செய்த சாதனைகளை கூறுங்கள்.அப்படி ஏதாவது இருந்தால் thane. மது விலக்கு படிப்படியாக குறைபதாக கூறுகிறீர்கள். அதை ஆட்சியில் இருக்கு போதே செய்திருக்கலாமே. சசிகுமார் மரணம், நீதிமன்ற ஆணை எதையும் பொருட்படுத்தாமல் தொடர விட்டுட்டு.இப்ப படிப்படியா குறைப்பேன் சொல்ற்றீங்க. தமிழக மக்கள் மீது அதித நம்பிக்கை. எப்படியும் ஒட்டுபோடுவார்கள் என்று. கண்டிப்பாக மக்கள் யோசித்து ஒட்டு போடுவார்கள். இந்த தடவை திமுக அதிமுக இரண்டும் ஒழியனும். அப்போது தான் ஆயாவுக்கும் தாத்தாவுக்கு ஒரு பயம் வரும். இதேபோல கட்டுரைகள் நிறைய வரவேண்டும் நன்றி வாழ்க வளமுடன்.

 • ramesh - chennai,இந்தியா

  பழனிஐயர் அவர்களே, தமிழ் நாடில் குடியிருபவர்களுக்கு மட்டுமே இந்த ஆட்சியின் குறை பாடுகளும் மக்களின் மன மாற்றமும் தெரியும். ஆஸ்திரேலியாவில் குடியிருப்பவருக்கு நேரில் பார்த்தால் மட்டுமே புரியும்.மே 19 பிறகு அம்மா வுக்கு நிரந்தர ஓய்வு தான் கவலை படாதீர்கள்.

 • Indian - Shelton,யூ.எஸ்.ஏ

  இந்தமுறை ஜே சொந்த தொகுதியிலேயே தோற்க போவதாக வந்த செய்தியை அடுத்து அவரே விலகி சசிக்கு இடம் கொடுக்கலாம் என்பாதாக ஒரு உளவுத்துறை ரிபோர்ட் வருகிறதே ??

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///அ.தி.மு.க., கூட்டணிக்கு, 85 முதல் 90 இடங்கள் தான் கிடைக்கும் என்பது தான் அத்தகவல்.//// என்னாது 90 இடமா? இதெல்லாம் ரொம்பவே ஓவரு எதுவுமே செய்யாமல், மாநிலத்தை கடனில் மூழ்கவைத்துவிட்டு, மழைகாலத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக செய்யாமல், வெள்ளத்தின் போது உல்லாச ஓய்வில் இருந்துவிட்டு, நேரம்கெட்ட நேரத்தில் நீரை திறந்து விட்டு மக்களின் சாகடித்து, நடுத்தெருவில் நிற்கவைத்து வேடிக்கை பார்க்கும் நிலையிலும் இவ்வளவு இடமென்றால் மக்கள் ரொம்பவே நல்லவங்க சார், ரொம்ப நல்லவங்க. பச்சாதாபம் பார்த்து வாக்குபோடுறாங்க.. ம்.,ம்..ம் இன்னமும் முழுவதுமாக ஜெயித்து தனித்து ஆட்சி அமைத்தால் அவ்வளவுதான், மக்கள் அத்துனை பெரும் நடுவீதியில் தான், பூகம்பம் வந்தவைகள் போல நிரந்தமாக நடுத்தெருவில் தான். மக்களே உஷார்.

 • velavan - Grenoble,பிரான்ஸ்

  தினமலர் ஆசிரியர் அவர்களே, நீங்கள் விஜயகாந்தை காமெடியன் ன்னு சொல்லறீங்க. ஆனா .... நீங்க எழுதுற கட்டுரை எல்லாம் மக்கள் காமடிக்கு தான் படிக்கறாங்க என்று எப்போ உங்கள்ளுக்கு புரியும் என்று புரியவில்லை

 • உண்மை விளம்பி - சிங்கப்பூர்,சிங்கப்பூர்

  கியூப் லா படி, எனது கணிப்பு: அதிமுக 121, திமுக + 102, மநகூ 8, பாமக 2, பாஜக 1.

 • M. Ashokkumar - Hyderabad,இந்தியா

  அது என்ன ஜெயலலிதா திருவண்ணாமலை வேட்பாளரை காஞ்சிபுரத்தில் அறிமுகம் செய்து வைப்பது?. பத்து வேட்பாளரை ஓரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தால் என்ன அர்த்தம்.? மற்ற ஊர்களுக்க் செல்ல முடியவில்லை என்று அர்த்தம். அப்படி சாலை வழியாக பயணிக்க முடியாதவரை, மக்களை சந்திக்க முடியாதவரை எப்படி முக்கியமான பொறுப்பில் தமிழக மக்கள் உட்கார வைப்பர்?. ஜெயாவிற்கு கிடைக்கும் ஒட்டு எல்லாம் தி. மு.க வின் அதிர்பு ஓட்டுக்கள்தான். தி.மு.க வை அடக்கும் ஒரே சக்தி யாக அவர் விளங்குகிறார். ஆனால் இப்படி நடந்து கொண்டால் தி. மு. கவிற்கு எதிரான வாக்குகள் சிதறும். அதை தக்க வைத்து கொள்ள ஜெயா பொறுப்பாக செயல் படவேண்டும்.

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  அரசு நிர்வாகத்தில் மலிந்துள்ள ஊழல்கள் மற்றும் அரசின் திறமையற்ற செயல்பாடுகள் ஆகியன, ஆளும் கட்சி மீது பொது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.எதிர்கட்சிகள் பிளவுபட்டு பலமுனைப் போட்டியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,தனது வெற்றி எளிதாக இருக்கும் என மனக் கோட்டை கட்டிய ஆளும் கட்சிக்கு,இந்த தேர்தலில் வெற்றி பாராளுமன்ற தேர்தல் போல் எளிதாக இருக்காது என்பதே உண்மை .

 • இளங்கோ - chennai,இந்தியா

  இதை எல்லா கட்சிகளும் ( முக்கியமாக சிறிய கட்சிகள் ) உணர்ந்திருப்பதால் தான், இரண்டு திராவிட கட்சிகளை அண்டி நிற்காமல் தனித்தோ அல்லது சிறு அணிகள் அமைத்தோ போட்டியிட தைரியம் பெற்றிருக்கின்றன,

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  சபரீசன் கும்பலின் பத்திரிக்கை முயற்சி .இதவும் வாழைபழம் மாதிரி தோல்வி பெரும் தினமலர் மட்டுமல்ல இதே copy paste எல்லா பத்திரிகைகளிலும் எப்படி வரும்

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  நேற்று பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.. திமுக வினருக்கே நன்றாக தெரியும் துரைமுருகன் பொன்முடி, நேரு போன்றோர் குவித்த சொத்துக்களை பற்றி 39 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அவர் சொத்து குவித்ததை நிருபித்தும் ஆதாரமில்லை என்று நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார். அதுவும் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது. தருமபுரி பஸ் எரித்த வழக்கில் அதிமுகவினருக்கு தூக்குத்தண்டனை, நாளிதழ் அலுவலகம் எரித்த வழக்கில் திமுகவினர் விடுதலை, தா. கிருட்டிணன் கொலை வழக்கில் கொலையாளிகள் யார் என்று மக்களுக்கு தெரிந்தும் அனைவரும் விடுதலை .இதே சொத்துகுவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் அம்மாவிற்கு வேறு மாநில நீதிபதி மூலம் தண்டனை , அதே மாநில உயர்நீதிமன்றம் மூலம் விடுதலை , இப்போது வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்கள் அறியும் பாடம் என்னவெனில் ஒருவன் எவ்வளவு கொள்ளை அடித்தாலும், ஊழல் செய்தாலும் நீதிமன்றங்களை கவனித்துக்கொண்டால் தப்பித்துவிட முடியும் .அதில் கருணா கை தேர்ந்தவர். அம்மா பலவீனமானவர். இந்த விசயத்தில் வேண்டுமெனில் அதிமுக சறுக்குகிறது என சொல்லலாம். மார்க்கண்டேய கட்ஜு கூறியது போல் கருணா நீதிபதிகளை வளைப்பதில் திறமையானவர். மத்திய காங்கிரஸ் அரசில் -திமுக அங்கம் வகித்த பொது 2ஜி வழக்கில் ,திமுக மத்திய அமைச்சர் ,கொள்கை பரப்பாளர், ஆ. ராஜா ,மற்றும் கருணாவின் மகள் கனிமொழி 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால் பிஜேபி அரசு பதவிக்கு வந்ததும் அமலாக்க பிரிவு சட்டவிரோதமான பண பரிவர்த்தனை ரூ. 214 கோடி கலைஞர் டி.வி.க்கு வந்தது என்று குற்றபத்திரிகை தாக்கல் செய்கிறது .கனிமொழி மீண்டும் கைதாவார் என்று ஊடகங்கள், நாளிதழ்கள் கட்டியம் கூறிக்கொண்டிருந்த வேளையில், தமிழக நலனுக்காக ரயில்வே திட்டங்களை கனிமொழி ,சதானந்த கவுடாவிடம் சமர்ப்பிக்கும் புகைப்படம் பத்திரிகைகள் ,ஊடகங்களில் வருகிறது .அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் கிடைக்கிறது. அதே சமயம் தமிழக முதல்வர் அம்மா சொத்துகுவிப்பு வழக்கு பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை திடீர் என சூடு பிடிக்கிறது. நீதிபதி பாலகிருஷ்ணா ஒய்வு பெற்று ,சில நீதிபதிகள் கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டு ,பின் மாற்றப்பட்டு, கர்நாடக உய்ரநீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு விஜிலன்ஸ் ரிஜிஸ்ட்ரார் ஆக இருந்த குன்ஹா விசேச நீதிபதியாக் அமர்த்தப்பட்டு அவர் விசாரணையில் திடீர் கடுமை காட்டுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் உடனே அவர் முன் ஆஜாராக வேண்டும் என்றெல்லாம் கர்ஜிக்கிறார். அப்போது சந்திரயான் செயற்கை கோள் விசயமாக மோடி ,அமீத்ஷா போன்றோர் பெங்களுரு வருகின்றனர். .பின் பெங்களுரு விசேச நீதிமன்றம் தீர்ப்பு கூறும் நாள் பிரதமர் மோடி இந்தியாவில் இல்லாமல் வெளிநாடு சென்றுவிடுகின்றார். அம்மாவிற்கு எதிராக தீர்ப்பு வருகின்றது. இது இறுதி தீர்ப்பல்ல , இவர் இப்போது தமிழக முதல் அமைச்சர் ,மேல்முறையீடு செய்யும்வரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டாம் என்று அம்மாவின் வக்கீல்கள் நீதிபதியிடம் முறையிடுகின்றனர். ஆனால் நீதிபதி குன்ஹாவோ அதை மறுதலித்து அம்மாவை உடனே சிறையில் அடைக்க சொல்லி உத்தரவிடுகிறார். .இப்போது சொல்லுங்கள் நீதியை வெல்வதில் யார் முதல்வர் என்று .மாக்களிடம் செல்வாக்கு இன்றி திமுக செல்லாக்காசாய் போன திமுக அவர்களிடம் இருக்கும் செல்லும் காசுகளை செலுத்தவேண்டிய இடத்தில் செலுத்தி பெறவேண்டியதை பெரும் வல்லமை பெற்றவர்கள் .39 தொகுதிகளில் மக்களின் அபரிதமான செல்வாக்கு பெற்று வெற்றி பெற்று பிரதமர் மோடியையே சவாலுக்கு இழுத்த அம்மாவிற்கு கிடைத்த பரிசுதான் பெங்களுரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இப்போதைய பிஜேபியை விட சோனியா காங்கிரஸ் பரவாயில்லை என்று அதிமுக ஒரு நாள் உணரும்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அதிமுக, திமுக இரண்டுமே கூட்டுக் களவாணிகள் .... வெற்றியை விட்டுக் கொடுக்கவே ஜே -யின் பிரச்சாரம் பலவீனமாகக் காட்சி அளிக்கிறது .... இந்த முறை இது வெளிப்படையாகவே தெரிகிறது .... ஆம், ரொம்பவும் கஷ்டப்பட்டு ஆழ்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை ....

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  குமாரசாமி என்ற ஒற்றை மனிதனின் பணத்தாசையால் விளைந்த கொடுமைதான் ஜெயாவின் ஊழல் புரையோடிய அராஜக கொடுங்கோல் மக்கள் விரோத ஆட்சியின் முழு ஆயுள்காலம். இல்லை என்றால் இந்நேரம் பாட்டியும் நிரந்தர ஓய்வில் இருந்திருப்பார், கூன்பாண்டிகளை மட்டும் வைத்து நிர்வாகம் செய்யத்தெரியாத படுமோசமான ஆட்சியும் தீர்ப்பு வந்ததில் இருந்து மீதம் உள்ள மாதங்களில் மக்களிடம் மேலும் அதிக வெறுப்பை உண்டாக்கி இருக்கும். இருந்தால் கோட்டை அல்லது கொடநாடு என்று மட்டுமே இருக்க தெரிந்த பாட்டிக்கு பதவியை இழந்த சொத்துக்குவிப்பு ஊழல் குற்றவாளி என்ற அவப்பெயரை வைத்துக்கொண்டு எப்படி நிம்மதியாக இருந்திருக்க முடியும்??? மொத்தத்தில் அடிமைகள் கட்சி இந்நேரம் சிதறி சின்னாபின்னமாக போயிருக்கும். பாட்டி அதிகாரத்திலும் கட்சி தலைவியாகவும் இருக்கும்போதே அவரை கவிழ்த்துவிட்டு கட்சியை கைப்பற்ற எண்ணியது ஐவர் அணி என்றால், பாட்டி இவை இரண்டிலும் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நிலையில் இருந்திருக்கும். மன்னார்குடி கும்பலிடம் கொஞ்சம், ஐவர் அணியிடம் கொஞ்சம் என்று உடைந்து போயிருக்கும். ஆனால் ஒரு சிறு கணக்கு தவறால்தானே 5 ஆண்டுகாலம் முழுதும் தமிழகம் சீரழிந்தது. ஆனால் இந்த தேர்தலில் மக்களின் மனநிலை ஏற்றம் கண்டிருப்பது புலப்படுகிறது. ஜெயாவின் புகழ் பாடும் வேன்களை யாரும் கண்டுகொள்வதில்லை, அதிமுக வேட்பாளர்களுக்கு பல இடங்களில் கடும் மக்கள் எதிர்ப்பு, அமைச்சர்கள் என்றும் பாராமல் மக்கள் 5 ஆண்டுகள் எங்கே போனீர்கள் என்று கேள்வி கேட்டு ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர். காசு கொடுத்து கூப்பிட்டாலும் கூட்டம் சேராத ஜெயாவின் பரப்புரை கூட்டங்கள் என்று அடிமைகள் கட்சிக்கு பல அதிர்ச்சிகளை தமிழக வாக்காளர்கள் தண்டனையாக இப்போதே அளிக்க துவங்கிவிட்டனர். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பரப்புரை செய்ய இந்த ஊழல் ஆட்சியின் அவலங்கள், அராஜகங்கள் என்று பல விவரங்கள் உள்ளன. ஆனால் செயல்படாமல் கொள்ளை அடிப்பதில் மட்டுமே குறியாக இருந்த அடிமைகள் என்ன பொய்யை சொல்லி பரப்புரை செய்தாலும் அதை யாரும் நம்ப மாட்டார்கள். மதுவிலக்கு சாத்தியம் இல்லவே இல்லை என்று சபையில் முழங்கிவிட்டு, இப்போது தோல்வி பயத்தில் படிப்படியாக மதுவிலக்கு என்று பச்சோந்தி நாடகத்தை நடத்தினால் அதை நம்பி ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை. வெள்ளம் வந்தபோது ஸ்டிக்கர் ஓட்டுவது முதல் நிவாரண பொருட்களை அடித்து பிடுங்கியது வரை அடிமைகள் ஆடிய கோர வெறியாட்டமோ மக்கள் மனதில் என்றும் ஆறாத வடுவாக இருக்கும். இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது மலர் சொன்ன இந்த செய்திதான் உண்மையிலும் உண்மை. முதுகெலும்பில்லாத தேர்தல் ஆணையமோ நடுநிலையாக இல்லாமல் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ள கட்சி போல, தேர்தல் விதிமுறை மீறல்களை கண்டும் காணாமல் உள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் மீறி மக்கள் அளிக்கும் தீர்ப்பு பாட்டியின் அராஜக ஆட்சிக்கு கிடைக்கப்போகும் தக்க தண்டனை.

 • Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா

  அதிமுகவின் 2011 தேர்தல் அறிக்கையில் தான் அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியதை தெளிவாக ஆதாரபூர்வமாக பேசிய பின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்காத பல மக்கள் நல திட்டங்களையும் தன ஆட்சி நிறைவேற்றுவதையும் தெளிவாக,ஆதாரங்களோடு,புள்ளிவிவரத்தோடு கூறுகிறார். பின் திமுகவின் 2006 தேர்தல் அறிக்கை ,2016 தர்தல் அறிக்கையில் மறுபடியும் இடம் பெற்றிருக்கும் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் முன் கிழித்தெறிந்து ,2006ல் திமுக அறிவித்த திட்டங்களை அவர்கள் நிறைவேற்றவில்லை என்பது 2016 தேர்தல் அறிக்கையில் ஒப்புதல் வாக்குமூலம் போல் திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் முன் புட்டு புட்டு வைக்கிறார். மதுவிலக்கு பற்றி திமுக உட்பட மற்ற எதிர்கட்சிகள் கடந்த ஒரு வருடங்களாக எழுப்பி வருவதை குறிப்பிட்டு ,மதுவிலக்கு பற்றி பேச கருணா ,மற்றும் திமுகவினருக்கே அருகதை இல்லை ,2G (இரண்டு தலைமுறை ) மதுவை மறந்து இருந்த சமயம் மதுவிலக்கை ரத்து செய்தது திமுகதான் என்ற உண்மையை விளக்குகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இல்லை என்பதையும், அவர்கள் ஆஅட்சிக்கு வந்தால் மதுவிலக்கை ரத்து செய்ய தனிச்சட்டம் கொண்டுவருவோம், அரசு மதுவை விற்பதில் இருந்து விலகி கொள்ளும் ,தனியார், மற்றும் 5 ஸ்டார் க்ளப்புகளில் மதுவிற்பனை தொடரும் என்ற திமுகவின் தீய எண்ணத்தை விளக்குகிறார். தமிழக நலனுக்கு எதிராக திமுக செய்த துரோகங்களை பட்டியல் இடுகிறார். குடும்ப ஆட்சியில் உச்சத்தில் இருந்த ஊழல்களை, நிலா அபகரிப்புகளை , அனைத்து துறைகளும் திமுக குடும்பத்தால் கபளீகரம் செய்யப்பட்டதை, திமுக ஆட்சியின் வேதனைகளை ,அதிமுகவின் சாதனைகளை ஒப்பிட்டு மக்களை வாக்களிக்க சொல்கிறார். பின் அந்தந்த மாவட்டங்களில் ,அந்தத்தந்த தொகுதியில் அதிமுக அரசு நிறைவேற்றிய ,நிறைவேற்றிக்கொண்டிருக்கும் திட்டங்களை எல்லாம் புள்ளிவிவரங்களுடன், ஆதாரபூர்வமாக கூறி வருகிறார். நிறைவேற்ற படப்போகும் திட்டம் மற்றும் இன்னும் பல நலத்திட்டங்கள் அதிமுக செய்யும் என்று அவர் வாக்குறுதி தருகிறார். மதுவிலக்கு ஒரே நாளில் நிறைவேற்றமுடியாத ஓன்று ,படிப்படியாய் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எட்டப்படும். குடி நோயாளிகளுக்கு மறுவாழ்வு சிகிச்சை நிலையம் அமைத்து அவர்களை குணப்படுத்த ஆவன செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கிறார். இது அந்த உரையை கேட்கும் மக்களுக்கும், அதிமுக மக்கள் நல திட்டங்களால் பயனடைந்தவர்களுக்கும் எந்தவித அலுப்பையும், சோர்வையும், எரிச்சலையும் தரும் பேச்சாக தெரியவில்லை. அதிமுக அரசின் அளப்பரிய மக்கள் நல திட்டங்களை சொல்ல நாட்கள் போதாது என்பதால் குறிப்[பிட்ட திட்டங்களை மட்டுமே நேரம் கருதி அவர் கூறி வருகிறார். இந்த பேச்சால் எரிச்சலும், கோபமும்,சோர்வும் ,அலுப்பும் அடைபவர்கள் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள்தான் மக்கள் அல்ல. இன்றைய நிலையில், மக்கள் முன் உள்ள கேள்வி 1 ஜெயலலிதாவா 2 கருணாநிதியா ? 3 ஸ்டாலினா ? 4. விஜயகாந்தா ? 5. அன்புமணி ராமதாசா ? என்பதுதான் . மக்களின் பதில் ஜெயலலிதாதான் என்பது மே 19 ல் தெரியவரும். அதுவரை சாத்தான்கள் கத்திகொண்டிருக்கட்டும், கோட்டான்கள் கூவிகொண்டிருக்கட்டும் , ஆந்தைகள் அலறிகொண்டிருக்கட்ட்டும், வவ்வால்கள் பறந்து கொண்டிருக்கட்டும். ஓநாய்கள் ஓலைமிட்டுகொண்டிருக்கட்டும் ,குள்ளநரிகள ஊளையிட்டுகொண்டிருக்கட்டும், கழுதைகள் கத்திகொண்டிருக்கட்டும். நாளை நமதே திமுகவுக்கு மக்கள் போடும் நாமமும் நமதே. எதிர்கட்சிகளின் முடிவு காலம் கண்ணில் தெரிகிறது.

 • manivannan - chennai,இந்தியா

  தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவிற்கு எத்தனையோ திறமை இருந்தாலும் அவர் வெற்றி கேள்வி குறியாகி போனதற்கு யார் காரணம்? வேற யார் அவரி சுற்றி உள்ள கும்பல் தான்... தன நேர்காணலில் வந்தவர்களில் பலர் தான் தயாரித்த பட்டியலில் இடம் பெறாதவர்கள் என்றால் அதற்குப்பின் வந்தவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டுமே, எதிராளி யார் என்று தெரிந்து அதற்கேர்ரற்போல் பட்டியல் அமைய வேண்டுமே , எதிராளிகள் பட்டியலை கட்சியினர் தனக்கு முன் கூட்டியே தராமல் போனது ஏன்?என்று யோசிக்கிறார் என்றால் கட்சியினரா இவருக்கு எல்லாம் சொல்லுகிறார்கள்? யார் தந்து இருக்க வேண்டும்? இவரை சுற்றி யார் இருக்கிரார்கள்? ஜெயலலிதா மிகவும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுதான்..

 • s.f.edison - chennai,இந்தியா

  இவர்கள் 5 வருடம் மக்களை ஏமாற்றியவர்கள் இப்போது வேட்பாளர்களை மாற்றுவது என்ன பெரிய விந்தை. சட்டசபை கட்டடத்தை ஆஸ்பத்திரியாக மாற்றினார்கள். நுலகத்தை கல்யாண மண்டபமாக மாற்ற முயற்சித்தார்கள் . மற்றவவர்கள் கொண்டுவந்த நிவாரண பொருட்களை தனதாக ஸ்டிக்கர் ஒட்டி மாற்றினார்கர்கள்.நமது ஒழுக்கத்தை மாற்றி கோர்ட்டாரிடம் அபராதம் கட்டினார்கள். கோர்ட்டாரிடம் அரசுக்கு இருந்த மதிப்பை மாற்றினார்கள் .மக்களுக்கு இவர்கள் மீது இருந்த நம்பிக்கையை மாற்றினார்கள். சாதாரண மனிதனின் அசாதாரண வோட்டு சக்தியை கேவலமான பணம் மாற்றும் என்று இருந்தார்கள். இப்போது மக்கள் சக்தி தனக்கு எதிராக மாறும் என்று நினைக்கும் போது நிக்கமுடியாது தவிக்கிறார்கள். நான் நினைக்கின்றேன் உடல் நிலை காரணம் காட்டி ஜெயலலிதா வேட்பாளராக களம் இறங்க மாட்டார் என்று .

 • Mohan - Trichy,இந்தியா

  கூட்டணி இல்லாததே செல்வி ஜெயலலிதா அவர்களின் பலவீனம். கண்டிப்பாக அவரை நாடி வந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்து இருக்கலாம். கூட்டணி பலமின்மையால் கண்டிப்பாக அதிமுக தோற்கும்.

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  எந்த சருக்கலும் இல்லை ...தினமலர் நிருபர்தான் சறுக்கி கொண்டு திசை திருப்புகிறார் ....வேட்பாளர்களை மாற்றுவது ஒன்றும் பெரிய விசயமே இல்லை ....ஏற்கனவே அறிவித்தவர்களை தான் அறிவிக்கனும் மாற்றம் செய்யக்கூடாது என்று விதண்டா வாதம் தேவை இல்லாதது ...வெற்றி ஒன்றே பிரதானம் ..அதற்கு தகுந்த மாற்றம் செய்யப்படுகிறது .......மன்னார்குடி வேட்பாளராக முன்பு அறிவிக்கப்பட்ட சுதா என்ற வேட்பாளர் அறிவிக்க பட்ட போதும் கட்சியில் எந்த எதிர்ப்பும் சலசலப்பும் எழவில்லை அவரை மாற்றி காமராஜ் அவர்களை அறிவித்த போதும் எந்த சலப்பும் எழவில்லை ,,,இன்றுள்ள நிலவரம் காமராஜ் அவர்களை நிறுத்தியதால் மன்னார்குடி தொகுதியில் டி ஆர் பாலு வட்டாரத்தில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது என்பது இன்குள்ளவர்களுக்குதான் தெரியும் ....அதைபோன்று மற்ற தொகுதியிலும் வேட்ப்பாளர்கள் மாற்றம் நடந்திருக்கலாம் .....

 • Raji - chennai,இந்தியா

  தினமலர் ஆசிரியர் வாசகர்களின் மன நிலையை ஆராய்வதற்காக கவே இப்படி ஒரு செய்தியை வெளியிடுகின்றனர். வெறும் டிவி விளம்பரங்கள் தொண்டை கிழியும் மேடை பேச்சை வைத்து மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது .

 • murugaiyan.r. _ Pudukkottai - pudukkottai,இந்தியா

  அ தி மு க கண்டிப்பாக 220 சீட்ஸ் வெற்றி. இதுதான் 19-05-16 ல் முடிவு

 • Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ

  தாக்கம் என்னவோ குறைவாகவே இருக்கும் போலத் தோன்றுகிறது.. ஜெயலலிதாவின் பலவீனமே வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் சும்மா மாற்றிக்கொண்டே இருப்பது... இதை அவர் சரிசெய்வது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது...

 • specialvoice65 - Coimbatore,இந்தியா

  தமிழகம் தலை நிமிர வேண்டுமானால் அவர்கள் கண்டிப்பாக சறுக்கித்தானாக வேண்டும். சறுக்கி சறுக்கி ஒன்றுமில்லாமல் போக எங்கள் வாழ்த்துக்கள்

 • தாழ்ந்த தமிழகமே - Chennai,இந்தியா

  //// நேர்காணலின் போது வந்தவர்களில் பலர், தான் தயாரித்த பட்டியலில் இல்லாதவர்கள் என்றால்,/// அப்படி என்றால் தான் தயாரித்த பட்டியலில் உள்ளவர்களை நேர்காணலில் அழைக்காமல் யார் பட்டியல் அது ?? இவர் தான் நிர்வாக புலி சாட்டை எடுப்பார்???? ஒன்றும் தெரியாத ஒருவர் அனைத்தும் அறிந்த மாதிரி ஒரு இரும்பு திரை அமைத்து கொண்டு மக்களையும் நாட்டையும் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  திராவிட முன்னேற்ற கழகம் 175 அல்லது அதுக்கு மேல் கிடைக்கும் . இது உறுதி

 • Rakesh Kumar - Tirunelveli,இந்தியா

  அங்க ஒருத்தர் தமிழ் தமிழ் நு கத்துனாலும், அவரோட தேர்தல் அறிக்கை நியாயமா படுது. கொஞ்சம் அவர் பக்கமும் மக்கள் பாக்கலாம்.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  வரவர அதிமுகவின் பிரசார உத்திகள் மாறும்... திமுக ஆட்சியின் வேதனைகளை ஜெ இனி எடுத்துசொல்லி வெற்றி பெறுவார்... இதுவரை ஜெ 140 தொகுதிகளை வெல்வார் என்று எழுதி வந்தேன்...ஆனால் தேமுதிக கூட்டணியின் பிரச்சாரம் டல்லடிப்பதால், அதிமுக 180 தொகுதிகளில் வெற்றி பெரும்... திமுக அமைத்துள்ள கூட்டணி எல்லாம் ஒரு கூட்டணியா?... தேமுதிக இந்த கூட்டணியில் இணைந்திருந்தால், ஒருவேளை திமுக கூட்டணி 120 இடங்களை பெற்றிருக்கலாம்... ஆனால் தேமுதிக இல்லாத திமுக கூட்டணி, அட்டர் பிளாப் .. காங்கிரஸ் கட்சியெல்லாம் ஒரு கட்சியா?.. ஜெ கடசியா இலங்கை பிரச்சினை ஐ களம் இறக்கி காங்கிரஸ் திமுக கூட்டணியை திணறடிப்பார்..சென்ற பாராளும்னற்ற தேர்தலிலும் ஒரு குழப்பம் இருந்தது...ஆனால் கடைசியல் மக்கள் தெளிவாக வாக்களித்தார்கள்.. மக்களுக்கு தேவை நிலையான ஆட்சி தான்... நிச்சயம் தொங்கு சட்டமன்றம் வராது... அதிமுக 140 -180 பெரும்.. இது உறுதி...

 • Sampath Kumar - chennai,இந்தியா

  நிச்சயம் மம்மி டம்மி ஆவது உறுதி தமிழ் நாட்டில் இனி தொங்கு சட்ட சபை தான் எழுதி வைத்து கொள்ளுங்கள்

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  இப்படி ஒரு கட்டுரையை எதிர் பார்க்கவில்லை... சரி அதிமுகவிற்கு 95 இடம் என்றால் யார் வெற்றி பெறுவார் என்றும் சொல்லியிருக்கலாம் அல்லவா?.. கருணா கட்சிக்கு எவ்வளவு கிடைக்கும்?..அதிமுகவில் பலம் பொருந்திய வேட்பாளர்களை போட்டவுடன் ஜெயிக்க போறார்கள் என்று ஜெ வேட்பாளர்களை மாற்றுகிறார் என்பது இந்த வருடத்தின் சிறந்த நகைசுவை... வேட்பாளர்களை பார்த்து பொதுமக்கள் ஓட்டுபோடுவது கிடையாது.. ஜெ க்காக தான் ஒட்டு போடுகிறார்கள்....மேலும் அதிமுக தேர்தல் அறிக்கை இன்னும் வரவில்லை..கடைசி நிமிடத்தில் வரும்.. அது தான் வெற்றியை நிர்ணயிக்கும்...

 • sankaranarayanan - tirunelveli,இந்தியா

  மலருக்குள் இருக்கும் ஏதோ ஒரு எட்டப்ப நண்டு செய்யும் வேலை இது - மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் - இலை அலை எங்கும் தெரிகிறது

 • Rajamani Shanmugavelu - Male,மாலத்தீவு

  "அதோடு, இந்த முறை தேர்தல் பிரசாரத்திலும், ஜெ., சோபிக்கவில்லை. வழக்கம் போல, கதைகள் பல சொன்னாலும், பேச்சின் பாணி, கேட்பவர்களுக்கு சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. பேச்சில் வீரியம், எழுச்சி இல்லாமல் போவது, அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது"...உருப்படியா நாட்டுக் நல்லது செய்திருந்தால் ??? மக்கள் ஓட்டு போடுவார்கள்...

 • Karuppaiah68 - Kovilpatti,இந்தியா

  அதிமுக கோவில்பட்டி வேட்பாளர் கடம்பூர் ராஜு சுத்த வேஸ்ட்... தொகுதிக்கு ஒன்னுமே பண்ணவில்லை. அவருக்கு மொட்டை பெட்டிசன் போடுவதே வேலை... கடம்பூர் ராஜுநாயுடு சமுகம் ... ஆனால் நாயுடு சமுகம் ஓட்டு வைகோ வுக்கு மாட்டும் தான்..திமுக தேவர் சமுதாயத்து வேட்ப்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். புதிய தமிழக ஓட்டுக்கள் வேறு திமுகவுக்கு பலம் சேர்க்கும். ..கடம்பூர் ராஜு தேறுவது கஷ்டம் ...வேறு ஜாதி வேட்பாளர் நிறுத்தினால்தான் கோவில்பட்டியில் அதிமுக தேறமுடியும் ...

 • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

  இரட்டை இல்லை 210 இடங்களில் வெற்றி பெரும்.. ஆட்டம் பார்த்து அரசியலில் காய் நகர்த்துவதில் அம்மா கைதேர்ந்தவர். சிலசமயம் தினமலர் தடுமாறுவது தெரிகிறது. கோவில்பட்டியில் வைகோ நிற்பதால் பலமான வேட்பாளரை மாற்றியது அவசியமே. அதேபோல் எல்லா கட்சியிலும் நடக்கும்.

 • Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா

  பிரச்சாரம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் ஜெயா'வின் பிரச்சாரம் மற்ற கட்சிகளை விட நன்றாகவே இருக்கிறது. விஜயகாந்த் பேசுவது புரியவில்லை. ஸ்டாலின் பேசுவதில் தெளிவில்லை. கருணாநிதி களத்தில் இறங்கிய பிறகுதான் ஏதாவது மாற்றத்திற்கு வாய்ப்பு. இல்லை என்றால் ஜெயா'வின் பிரச்சாரம் தான் அழுத்தமாக இருக்கும். வேட்பாளர் மாற்றத்தை பொறுத்த வரை அதிமுக மீதுதான் எல்லோரும் பார்கிறார்கள். திமுக'விலும் மாற்றம் நடக்கிறது. அது மட்டும் அல்ல. அதிமுக'வில் தொண்டர்களின் எதிர்ப்பு கம்மி'தான். அதை மீறி, வெற்றி வாய்ப்பை அதிக படுத்ததான் வேட்பாளர் மாற்றம் நடக்கிறது. ஆனால் திமுகவில் இன்னும் தொண்டர்களிடமே பிரச்சனை தீர்ந்த மாதிரி தெரியவில்லை. 3-4 முறை தேர்ந்து எடுக்க பட்ட மைதீன் கான் போன்றவர்களுக்கே இன்னும் திமுக'வினர் தண்ணி காட்டுகிறார்கள். அடுத்த கோமாளித்தனமாக சீட் கொடுக்கப்பட்டவர்கள் நிற்க முடியாது என்று பின் வாங்குகிறார்கள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது நிச்சயம் அதிமுக முன்னிலையில்தான் இருக்கிறது. என்னுடைய வேறொரு பதிவில் சொன்னது போல் அதிமுக - 160, திமுக கூட்டணி - 65, மற்ற கட்சிகள்/கூட்டணிகள் - 10 இடங்கள். வாக்கு விகிதத்தின் படி - அதிமுக - 40% திமுக கூட்டணி - 35% தேமுதிக - மக்கள் நல கூட்டணி - 15%. பிஜேபி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி - 10%. இப்படித்தான் இருக்கும் தேர்தல் முடிவு.

 • nallavan - chennai,இந்தியா

  காஞ்சியில் ஜெயலலிதாவின் பேச்சி கடந்த சில நாட்களாக அ.தி.மு.க வினரிடம் இருந்த சோர்வையும், தமிழக தேர்தல் களத்தில் ஏற்பட்டு இருந்த குழப்பதையும் நீக்கிவிட்டது, உண்மையில் காஞ்சியில் ஜெயலலிதாவின் பேச்சி 90/100 மதிப்பெண், தற்போதைய நிலை அ.தி.மு.க 190 - 200 தொகுதிகள், வாங்க தி.மு.க சரியான போட்டி கொடுங்கள். தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி விட்டது, தினமலர் நியூஸ்7 இணைந்து நடத்தும் கருத்துகணிபிலாவது உண்மையான கள நிலவரத்தை சொல்லுங்கள்

 • kandakumar - Fahaheel,குவைத்

  அதிமுக படு தோல்வி அடையும் என்பதே களநிலவரம். திமுக வெற்றி பெரும் என்பது நம்பிக்கை.

 • Senthilnathan Rajendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அது என்ன தி.மு.க கூட்டணி 150 முதல் 160 சீட்டு வெற்றி பெறும் , மிச்சத்தையும் சொல்லிட வேண்டியது தானே. ஒரே காமெடி தான் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்லுவது.

 • GOPI - Kongu Manilam,இந்தியா

  இந்த முறை ஜெயிக்க ஜெயலலிதாவே பெரிதாக விரும்பவில்லை என்றே தோன்றுகிறது ..அவரிடம் இருந்த ஆக்ரோஷ பிரச்சாரம் எல்லாம் இந்த முறை இல்லை .. அவருக்கு ஓய்வு தேவை ... உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது ... அப்படியே அவர் ஜெயித்தாலும் கடந்த 2 ஆண்டுகளை போல் தமிழகம் தேங்கியே நிற்கும் .... இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெரும் நேரம் நெருங்கி விட்டது .....அடுத்த கட்ட நல்ல நேர்மையான தலைவர்களை நாம் தேர்ந்துடுபது முக்கியம் ...

 • M U R A L I - chennai,இந்தியா

  பாஜக வை கூட்டணியில் சேர்க்காதது ஜெயலலிதாவின் தீர்க்கதரிசன குறைபாடு. பாஜக தனித்து நின்று அதிமுகவின் ஓட்டுக்களை பிரிப்பதன் மூலம் அதிமுக கிட்டத்தட்ட 50முதல் 60 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பை இழக்கும்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  இந்த தரம் நெறைய மைனஸ் ஆத்தா ஆச்சிலே முதல்லேயே நான் சொல்லிட்டேன் நோ ADMK .நோ திமுக ALSO MNK அல்லது பிஜேபி வரும்

 • sudhapriyan - riyadh,சவுதி அரேபியா

  அதெல்லாம் சறுக்கி அதள பாதாளத்துக்கு போயிடுச்சு .. இன்னும் சில ஊடகங்கள்தான் தூக்கி பிடிச்சிக்கிட்டு இருக்கு

 • Raju - Auckland,நியூ சிலாந்து

  காலையில் தினமலர் படிக்காமல் என் வேலைகளை துவக்க மாட்டேன், இப்போது தினமலர் செய்திகள் திமுக ஆதரவு என்பது மிக வெளிப்படையாக தெரிகிறது, நீங்கள் பணத்துக்கு விலை போனதால் மக்களும் அப்படி போக மாட்டார்கள், இறுதியில் தினமலர் தனது மதிப்பை இழப்பதுதான் மிச்சமாகும்

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  சாட்டையடி, பிரம்படி, அதிரடி எல்லாம் எங்கே சென்று ஒளிந்து கொண்டனவென்று தெரியவில்லை. உளவுத்துறையே கைவிட்ட பிறகு ஓரங்கட்டப்பட்டவர்கள், உதை வாங்கியவர்களுக்கெல்லாம் ராஜ மரியாதை கிடைக்கிறது.

 • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

  இந்த தேர்தல்ல யாரு கம்மியா சருக்கராங்களோ அவுக தான் பாஸ் மார்க்.

 • சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா

  உண்மையை உரக்க சொன்ன நிருபரின் இந்த உறுதியான தகவலுக்கு பாராட்டுக்கள் ....இதை படித்தவுடன் கூனி கும்பிடு போடும் அதிமுக அடிமைகளுக்கு கிலி ..இப்படியே தொடர்ந்து 1 வாரம் பதிவு செய்வீர்களானால் ....மக்களிடமிருந்து கொள்ளையடித்த அனைத்தையும் இத்தேர்தலில் செலவு செய்ய நேரிடும் ..

 • dubukku - sydney,ஆஸ்திரேலியா

  மக்கள் என்ன நினைக்கிறார்கள் என எழுதுவதை விட மக்களை என்ன நினக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியை காட்டுகிறது இந்த ஓரவஞ்சனை கட்டுரை. சொம்பு மலர் கட்டுமரத்தை "டைடானிக்" ரேஞ்சுக்கு கொண்டுபோக வேண்டும்னு ஆசைப்படுவது தெரிகிறது , ஆனால் கட்டுமரம் கரை சேராது. தவறு மேல் தவர் செய்து கொண்டு இருக்கிறார். கட்டுமரம் எந்த ஒரு செயலையும் 100% ( தனக்கு மட்டும் ) ஆதாயம் இல்லாமல் செய்ய மாட்டார். உதாரணத்துக்கு தனது இடத்தை பாதுகாக்க தெவைஎல்லத பாலம் , அதே போல அடுத்தவன் இடத்தை எடைக்க அங்கே பாலம். இப்படி பல உதாரணகள் சொல்லலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டிற்கு பிடித்த சனி இந்த தேர்தலில் மூலம் தேய்பிறையை காணப்போகிறது. கடந்த 5 வருட அதிமுக ஆட்சி மிக சிறந்த ஆட்சி என கூற நான் அடிமை கூட்டத்தில் ஒருவன் இல்லை , அதே வேளையில் திமுக - ரௌடி அராஜக ஆட்சியைவிட பலமடங்கு மேல். இரண்டு திராவிட கழகங்களும் தமிழ்நாடிற்கு பிடித்த சனி , அது ஒழியவேண்டும் , அதிலும் முதலில் "போகி" கொண்டாட தயாராக இருப்பது "ஊழல் கரையான்" அரித்த கட்டுமரம். அடுத்த ஹிட் இந்த மகாராணிதான். எனவே இந்தமுறை அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்பதில் 1% கூட சந்தேகம் வேண்டாம். எனவே மக்கள் மனதை ப்ரிதிபலித்து நல்ல பெயரும் வியாபாரமும் பெருக்க தினமலர் முன்வரவும். சனிப்பொணம் தனியாகப் போகாது என்பர் எனவா தினமலர் சற்றே கவனமாக இருக்கவும்.

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  சில நாட்களுக்கு முன்பு வாசகர்கள் தினமலரை "ஜெயா மலர்" என்று விமர்சனம் செய்தார்கள். இப்ப என்ன சொல்கிறீர்கள். என்னை பொருத்தவரை நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஒரு தினசரி பத்திரிகை என்றால் அது தினமலர்தான். ஒரு ஆட்சி சரி இல்லை என்றால் அதை கவிழ்ப்பதில் தினமலருக்கு இணை தினமலரே.

 • dharma - chennai,இந்தியா

  யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் தப்பி தவறி 110 நாயகி, காணொளி நாயகி, சாராய கடைகளை அதிகம் திறந்த ஜெயலலிதாவுக்கு மட்டும் வோட்டு போட்டுறாதீங்க

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  தினமலர் ஜெய எதோ அதி புத்திசாலி, அரசியல் நிலைகளை துள்ளியமாக ஆராய்வது போல் எழுதி உள்ளது...இதெல்லாம் ஒன்றும் இல்லை...அரசியல்வாதி என்பவர் மக்களோடு மக்களாக வாழ வேண்டும்...அபோது தான் மக்களின் 'பல்ஸ்' தெரியும்..இந்த அம்மா வாழ்க்கையை காணொளி, குளு குளு எ.சி வீடு, கார், யாரிடமும் கை குலுக்குவது கிடையாது,. இதெல்லாவற்றையும் விட யாரிடமும் - சசியைதவிர - பேசுவது கிடையாது. யாரும் இவரை இவர் அழைப்பு இல்லாமல் பார்க்க முடியாது..அரசியல் என்பது ஜெய என்றவரின் ஆணைக்கு கட்டு பட்டது நடப்பது இல்லை..இயற்க்கை சீற்றங்க்கள், மாற்றங்கள் ...எந்த ஒருவரின் ஆணைக்கு உட்பட்டு நடப்பது இல்லை..இவைகளை தனி மனிதன் யாரும் கணித்து செயல்கள் செய்யமுடியாது..இதனால் தான் ஆட்சி செய்பவர் பல கருத்து உள்ளவர்களின் ஆலோசனை கேட்டு ஆட்சி செய்வார்கள்.. இப்படி பல, பலம் ,ஆளுமை, புத்தி உள்ளவர்கள் யாரும் ஜெயாவுடன் சேர்ந்து செயல் பட மாட்டார்கள்..அதனால் தான் தமிழகத்தில் சென்னை வெள்ள பேரிடர் வந்தது..அப்படி வந்தும் தமிழக அரசு ஒரு வாரம் தூங்கியது..மாற்றாக போனவாரம் கேரளாவின் கோவில் விபத்தில் கேரளா காங்கிரசரசு எவ்வளவு துரிதமாக, மத்திய அரசுடன் ஒற்றுமையுடன் செயல் பட்டது..பி.எம் மோடியியே டக்டர் குழுவுடன் விபத்து நடந்தவுடன் இடத்திற்கு வந்தார்.இதற்கும் பாதிக்க பட்டவர்கள் ஆயிரத்திற்கு மேலிருக மாட்டார்கள்..ஆனால் 16 லட்சம் பேர் பாதிக்க பட்ட சென்னை வெள்ள பேரழிவிற்கு பி.எம் ஒரு வாரம் கழித்துதான் வந்தார்..ஜெய..வரவே இல்லை..இப்படி ஆட்சி செய்யலாமா...?.தமிழகத்தில் ஆளுமையில் உள்ள அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் இவர்களின் ஆளுமையை திறமையை பாருங்கள்..எல்லோரும் எடுபிடி வேலைக்கும் லாயக்கு இல்லை..தலைமை செயலர் ஞானதேசிகனின செயல்கள் சென்னை வெள்ள பெருக்கின் பொது மெச்ச தகுந்தது போல் இல்லை..ஜெய இப்படி பட்ட அமைப்பைவைத்து நாட்டிற்கு என்ன செய்யமுடியும்..?.ஜெய அரசியலில் உள்ளார் முகவால்..முக ஊழல், குடும்ப ஆட்சி, தார்மீகம் இல்ல ஆட்சியால் மக்கள்ஜெயாவை தேர்ந்து எடுத்தார்கள் இந்த முறை ஜெயாவிற்கு மாற்று அரசியல் வந்து உள்ளது..ஜெயா எப்போதும் உண்மை நிலை தெரியாமல் ஆட்சி செய்பவர்..அதே போல் தேர்தலிலும் உண்மை நிலை தெரியாமல் போட்டி இடுகிறார்...போயஸ் கார்டனின் கேட்டை மூடி ஐந்து வருடம் கும்ப கர்ணன் துக்கம் போடுபவர் நாட்டை பற்றி சிந்திக்கிறார் என்று தின மலர் எதற்கு சொல்கிறது..?.தமிழர்கள்ஜெயவிர்க்கு இந்த தடவை நல்ல படிப்பினை கொடுப்பார்கள்..பார்ப்போம் தேர்தல் முடிவு வருகிறது என்று...எப்படி

 • Paran Nathan - Edmonton,கனடா

  எல்லோருக்கும் கனவு காணும் உரிமை உண்டு. ஜெயாவுக்கு கட்சியை எப்படி நடத்த வேண்டும், வேட்பாளாரை எப்படி தெரிவுசெய்ய வேண்டும், பிரச்சாரத்தில் எப்படிப் பேசவேண்டும் என்பது நன்றாகவே தெரியும். அவரின் அரசியல் முற்றிலும் வித்தியாசமானது. யாராலும் கணிப்பிட முடியாதது. மிகப்பெரும்பான்மையான கட்சித்தொண்டர்களையும், தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்ற ஒரு அதிசயமான தலைவர் ஜெயா. பெண்கள், குறிப்பாக கல்லூரி மண்விகள் ஜெயாவை தமது Role model ஆக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 100% வெற்றியை நோக்கிய ஜெயாவின் பயணம் அதனையும் தாண்டி இந்திய பேரரசை ஆளும் வல்லமையைக் கொடுக்கும்.

 • T.Palani - Panruti,இந்தியா

  நிருபர் சொல்வதில் உடன்பாடில்லை..//பேச்சில் வீரியம் எழுச்சி இல்லாமல் போவது //...என்ன வீரியம் வேண்டும், எதற்கு எழுச்சி வேண்டும்?..இங்கு என்ன போருக்கா போகிறார்கள்..? சுத்த பேத்தல்.. இந்த ஜனங்கள் இதயத்தால் கணிக்கிறார்கள்.. இதயம் சொல்கிறது முன்னைக்கு இப்போ எவ்வளவோ பரவாஇல்லை என்று...ஒரு மாற்றம் வேண்டும் என்றால் குரங்குக்கு பதில் கோட்டான் என்று அர்த்தமல்ல ...'குரங்கு மனிதனாகஆவது'.. அதுதான் உண்மையான மாற்றம்.. அம்மாவின் முந்தைய ஆட்சிக்கும் இப்போதைய ஆட்சிக்கும் வேறுபாடு உள்ளது..இப்போதைய ஆட்சி மிகச் சரியான லைனில் பயணிக்கும் ஆட்சியாகும்.. எதிர் முகாம்காரர்கள்..குதிக்கத்தான் செய்வார்கள்..அது அவர்களது பொழப்பு.. ( IMMATURED ATTITUDE ) ஆனால் நடு நிலையோடு சிந்திப்பவர்களின் கையில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது.. இந்த ஆட்சி நிர்வாகத்தில் பெஸ்ட் ஐ யும் .. ஊழல் இல்லாத சூழலையும் உருவாக்கியுள்ளது.. ஒழலின் ஊற்றுக்கண் ,ஊழல் மகா சமுத்திரமான தி மு க வும் ...இதற்கு முன்னர் ஊழல் மகா சமுதிரமான தி மு க வோடும்... தனி ஒருவராக-,இந்த துரோகிகளை நம்பி இடம் கொடுத்து துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டஅம்மாவின் அ தி மு க வோடும் பயணித்த மந கூ வை சேர்ந்தவர்களும் கழட்டியதைவிட இப்போதிருக்கும் ஆட்சி ( ADMK ஆட்சி) எவ்வளவோ தேவலாம் ...

 • abu lukmaan - trichy,இந்தியா

  அரசியல் தலைவர்கள் செஸ் விளையாடுகின்றனர் . அப்படி தான் புரிந்து கொள்ள வேண்டும் .

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இரு கட்சிகளும் பிரசாரத்தையோ கூட்டத்தையோ நம்பவில்லை ஆளுக்கு 2000 விநியோகத்தைதான் பெரிதும் நம்புகின்றனர் அது சரியான நேரத்தில் சரியான ஆட்களுக்குப் போய்ச்சேர்ந்தாலே போதுமே

 • subhashini - chennai,இந்தியா

  திமுக கூட மாற்றம் செய்தனரே..மேலும் தேர்தல் ஆணையம் 22 தேதி வரை மாற்றலாம் என்று சொல்லியிருப்பதால் இது ஒன்றும் பெரிய சறுக்கல் என்று தோன்றவில்லை ..

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பிஜேபி பத்தி எந்த உண்மையும் சொல்லமாட்டேங்குராரே நமது நிரூபர்? வாய்ப்பூட்டா? இல்லை கை கட்டா?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  நிரூபரின் காமெடி ரொம்ப தூக்கலா இரிக்கி..

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  பாஜக , அண்ணா திமுக வோடு கூட்டணி சேரனும் என்று தினமலர் கூட தலையால் தண்ணி குடித்து பார்த்தது....நல்ல வேளை, அந்த கொடுமை நடக்கவில்லை....இல்லை என்றால், இந்த அம்மாவின் கையாலாகாத அரசின் செயல்பாட்டை மதவாதம், முடக்குவாதம் என்று பாஜக மேல் பழிபோட்டு தப்பிக்க நினைத்திருப்பார்கள்.......பாஜக கிரேட் எஸ்கேப்.....

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  கட்சிக்காரர்களை அடிமையாக நினைத்தே பழகிப்போன அம்மே, இப்போதெல்லாம் பொது மக்களையும் அடிமையாக நினைக்கத் துவங்கியதே ஜெயாவின் சறுக்கலுக்கு முதலும், முக்கிய காரணமும்.......அடுத்து,இட்லி சட்னி தவிர வேறு எதுவும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை....மின்வெட்டு இப்போது பெரிய அளவில் இல்லை என்பது மட்டுமே ஒரே சாதனை... ஆனால், அதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதால் அதிலும் சறுக்கல்...

 • Kanal - Chennai,இந்தியா

  அதிமுகவிற்கு 85 - 90 என்பதெல்லாம் அதிகம். வாய்ப்பு இல்லை. 40 - 50 வரை எதிர்பார்க்கலாம். திமுக கூட்டணி 150 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்புள்ளது. பாமக 3 இடங்களிலும், வைகோ, விஜயகாந்த் அணிக்கு இந்த தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது என்பதே களநிலவரம். 19ந்தேதி பார்ப்போம்.

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  வேட்ப்பாளர்களை மாற்றுவது அவர் இஷ்டம். அதிமுக அபார வெற்றி பெறும்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கப்பம் கட்டுவதில் தொய்வு இருந்தாலும் கூட பழைய அடிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.....

 • அறிவாளி - நெல்சன் ,கனடா

  தமிழ் நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி.

 • Rajesh - aruppukottai,இந்தியா

  இப்படி தான் 2014 தேர்தலில் உளவு படை முதலில் பாதிக்கு பாதி என்றும் கடைசி வாரத்தில் இரட்டை இலக்கத்தில் கிடைத்தால் போதும் என முதல்வர் விரும்புவதாகவும் செய்தி போட்டார் உமது சிறப்பு நிருபர் ..நடந்தது வேறு .. தற்போதைய உளவு துரையின் அறிக்கை முதலில் 200 க்கு மேல் வெற்றி தற்போது 160 .. 80 எல்லாம் தி மு க உளவு படை கொடுத்த நம்பர்

 • tamilan - Madurai,இந்தியா

  80-90 ? அது எல்லாம் சாத்தியம் இல்லை அதிமுக விற்கு .... இந்த முறை திமுக வின் தேர்தல் அறிக்கையே வெற்றி தேடி தரும். ...எல்லாரும் ஏற்று கொள்ள தக்க வகையில் உள்ளது ... கண்டிப்பாக 130-150 தொகுதி இல் வெற்றி பெரும் ....

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  ஹிஹி, நான் தான் ஏற்கனவே சொன்னேனே....மக்கள் நல கூட்டடணி உருவாவதால் ஜெயலலிதா அலட்சியமாக இருப்பார் ..எதிர்ப்பு ஓட்டுக்கள் திமுகவுக்கு போகாது அதனால் தான் எளிதாக ஜெயித்து விடலாம் என்று கணக்கு போடுவார் மற்றும் அதற்கு தகுந்த மாதிரி அரசியல் விமர்சகர்கள் என்று பீத்தி கொள்பவர்கள் தங்களது அதிமேதாவி தனத்தை சொல்லி அவரை குழப்பி விட்டு இருப்பார்கள்......இதனால் தான் தம.கவை அலட்சிய படுத்தியதையும் சரத்குமாரை வலிந்து கூப்பிட்டதும்....இது அப்போசிட்டா போயிடும்...ஜெயாவுக்கு புரியவில்லை சிறிய கட்சிகள் ஆனாலும் வலுவான கூட்டணியாக இருந்தால் மக்கள் அதனை தான் ஆதரிப்பார்கள்...விஜயகாந்த் சேர்ந்த பிறகு மக்கள் நல கூட்டணியின் பலம் மற்றும் நம்பிக்கை அதிகமானது....அப்போதும் ஜெயா ஓவர் கான்பிடன்ஸ் கொண்டு இருந்தார்...தா.ம.கவும் இந்த கூட்டணியில் இணைந்த பிறகு மக்கள் முழுதாக இது ஒரு மாற்று கூட்டணி என்று பார்க்க தொடங்கி விட்டார்கள்...இப்போது பாதி மக்கள் தேமுதிக-மக்கள் நல கூட்டணியை தான் நம்பிக்கையாக பார்க்க தொடங்கி உள்ளார்கள்....ஜெயலலிதா 5 வருட அரசை ஒழுங்கா நடத்தாமல் சொதப்பியும் அதீத நம்பிக்கையில் கூட்டணியை கோட்டை விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்......இது தான் அவரது தலை கனத்தை உடைக்கும் தேர்தலாக இருக்கும்....நான் பந்தயம் கட்டி சொல்கிறேன் தேமுதிக-MNK-TMC கூட்டணி 110 இடங்களில் வெல்லும்....செய்தியில் சொல்லி உள்ளபடி அதிமுக 80-90 இடங்களில் தான் வெல்லும்..எதிர்கட்சியாக வரும்.......

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  ஒரு தலைமையின் பேச்சு என்பது முதலில் மக்களிடையே தனது அரசாங்கம் என்னென்ன செய்தது அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் என்பதைத்தான் சொல்வார்கள்..அப்போது அங்கே கூடியுள்ள பொதுமக்களுக்கும் புரியும்..அதிலும் இறுதியாக சொன்னீர்கள் பாருங்கள்....அடேங்கப்பா என்னே தீர்க்க தரிசனம்..கருத்து கணிப்பு என்கிற பெயரில் திமுக செய்த கருத்து திணிப்பு போலவே இருந்தது..நேற்றைய காஞ்சீபுரம் கூட்டத்தின் எண்ணிக்கையை கண்டீர்களா? இதற்கு பின்னரும் எப்படி இப்படி ஓர் கருத்தினை கூற முயன்றீர்கள்..எனக்கு புரிகின்றது..அம்மாவின் பேச்சில் கருணா அண்ட் குடும்பத்தை பற்றி தீ பறக்க பேசுவதை கேட்க ஆசைப்படுகின்றீர்..மிகவும் பக்குவப்பட்ட அரசியல்வாதி அம்மா அவர்கள்..நாலாந்தரமாக பேசுகின்ற தத்தி ஸ்டாலினோ..அல்லது கணவனை கழற்றிவிட்டு பதவியை பிடிக்க துடிக்கும் பிரேமாவை போன்றே..அல்லது மேடை..அதன் முன்னே நாலுபேர்..மைக் என்று இருந்தாலே போதும்...காட்டுகத்து கத்தும் பக்குவப்படாத வைகோ போன்றோ..அல்லது திருமா போன்றே பேசமாட்டார்..அவருகுக் தெரியும் இப்படிப்பேசியவர்களுக்கு மக்களிடயே உள்ள மதிப்பு என்னென்று..சிறு கதைகளை சொல்லி பெரிய விஷயத்தை பக்குவமாக புரியவைப்பார் அம்மா அவர்கள்..நாலாந்தர பேச்சாளர் போன்று பேசமாட்டார்..அப்படி சில்லித்தனமான பேச்சு வேண்டுமென்றால்..ஸ்டாலின் பிரேமா கருணா வைகோ திருமா போன்றவர்களின் கூட்டத்துக்கு செல்லலாம்..ஆனால் ஒவ்வோர் கூட்டத்திலும் மக்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டீர்கள் என்றால்..அம்மாவின் வெற்றியானது அசுரத்தனமான வெற்றியாவே இருக்கும் என்பதிலே ஐயமில்லை..கேனதனமாய்..அசிங்கம் அசிங்கமாய் பேசினால்தான் தொகுதி வெற்றி எண்ணிக்கை கூடும் என்கிற சிறுபிள்ளைத்தனமான செய்தியாகவே தெரிகின்றது. நாகரீக, சற்றும் குறையாத புள்ளிவிவரமும்..எதிர்கட்சிகள் குறை சொல்ல இயலாத மறுக்க முடியாத புள்ளிவிவரங்களை சொல்கின்றாரே..இப்போது அந்த தொகுதிக்கு சென்று சொல்ல சொல்லுங்களேன்..பொய்யாக சொல்லி திரியும் இந்த கும்பல்களை..ஒன்றை மிக தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்..சுமார் இரண்டு கோடி உறுப்பினர்கள்..அம்மாவின் ஆட்சியில் பலனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடிபேர்..(விலையில்லா பொருட்கள் பெற்றவர்கள்..பெண்கள்..இன்னபிற அம்மா உணவகம்..அம்மா சிமெண்ட் அம்மா உப்பு..இப்படி பலவற்றை அடைந்த பயனாளிகள்) என்று கணக்கிட்டாலே போதும்..பல இடங்களில் எதிர்கட்சிகளின் டெப்பாசிட் தொகையை இழக்கப்போவது உறுதி என்பதால்..கவலையே வேண்டாம் நமது நிருபரே..அம்மா ஜெயிப்பார்..உங்களின் கவலை புரிகின்றது..ஆனாலும் உங்களுக்கு இன்னமும் பக்குவப்பட வேண்டி இருக்கின்றது..கணிக்கும் ஆற்றலும் குறைவே..எனது கணிப்புகள் என்றுமே எப்போதுமே மாறாது..அதனால் சொல்கின்றேன்..நிச்சயம் 200 தொகுதிகளில் வெற்றி என்பது ஷ்யூர்..

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  நான் அப்பவே சொன்னேன் ...ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு எதிராக எவ்வளவு சாதனை செய்தாலும் , ஆனால் இவர்கள் செய்ய வில்லை அது வேறு , ஒரு எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்...அது முன்பு , இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்தாலும் வாஜ்பாய் அரசு தோற்றதற்கு காரணம் அதுதான்...அனால் அந்த அதிமுக விசுவாசிகள் ஜென்ம எதிராளியான கலைஞர் திமுகாவுக்கு ஒட்டு போடா மாட்டார்கள் ..அனால் இப்போ அவர்களுக்கு மக்கள் கூட்டணி என்ற ஒரு சாக்கு கிடைத்து விட்டது மாத்தி குத்த...எனவே தான் திமுக ஒட்டு பிரியும் என்று மக்கள் கூட்டணி உருவாக அட்சாரமிட்டு சொந்த காசில் சூனியம் வைத்து கொண்டார் என்று...தேமுதிக பிரேமலதா ஜெயா ஆட்சியை விமரிசிக்கும் பொது ஜெயா அவர்கள் திமுக எதிர்ப்பை மட்டுமே பற்றி பேசுகிறார்..திமுக மீது எதிர்ப்பு என்பது 2011 இல் முடிந்து விட்டது... இப்போ அங்கு தலைமையையும் மாறி ஸ்டாலின் பழைய தவறுகள் நடக்காது என்று சொல்லுகிறார்.....இப்போ இன்னும் கட்ச தீவு முல்லை பெரியார் என்று பழைய மாவையே அரைத்து கொண்டுள்ளார்... மேலும் திமுக காலத்தில் இருந்த பண வரவோ , தொழில் வளர்ச்சியோ ,வியாபர வளர்ச்சியோ இல்லை ...திமுக காலத்தில் ஆட்களுக்கு வேலை தேவை என்ற போர்ட் அதிக மாக இருந்தது ..வேலை ஆள்கள் கிடைக்காமல் பிகாரில் இருந்து ஆட்கள் வந்தார்கள் ...ஏலேக்ட்ரிசியன் , தச்சு வேலை செய்பவர்கள் என்று வேலைக்கு ஆள் கிடைப்பது சிரமமாக இருந்தது ..தினமும் பிசியாக இருந்த இவர்கள் எல்லாம் இப்போ வேலை இல்லா நாட்களுடன் காலத்தை தள்ளுகின்றனர்...பண செழிப்பு இல்லாததால் வீடு கட்டும் தொழில் நலிந்து கிடக்கிறது...மேலும் தொழில் வளர்ச்சியும் திமுக காலம் போல இல்லை ...தொழில் வளர்ச்சியில் 3 வது இடத்தில் இருந்த தமிழகம் இப்போ 12 இடத்துக்கு தள்ள பட்டுள்ளது ... வேலைக்கு ஆள் கிடைக்க வில்லை என்ற நிலை மாறி 85 லட்சம் இளைங்கர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.. இருக்கிற வேலை இல் இருப்பவர்களும் பல தொழில்கள் கல் மற்ற மாநிலங்களுக்கு மாறுவதால் வேலை நிரந்டிரமிலா நிலையை உணர்கிறார்கள் ...பல பேர் வீடு கடன்களை அடைக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்...விவசாயம் மழை பொழிவால் நன்றாக இருந்தாலும் அதற்க்கான விலை கிடைக்காமல் நஷ்டத்தில் இருக்கிறார்கள் ..அதனால் சுமார் 2400 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் ...இவையெல்லாம் கண்டிப்பாக அட்கிமுக்காவுக்கு சருக்கல் கள் தான் ...

 • kumar - madurai

  Better vote for BJP.

 • Pravin - Chennai,இந்தியா

  இந்த முறை கேப்டன் அவர்கள் சிந்தித்து எடுத்த தீர்கமான முடிவு தான், கேப்டன் விஜயகாந்த் கூட்டணியை ஆட்சி அமைக்க வைக்க இருக்கிறது. ஒன்றரை கோடி இளைநர்கள் முன் ஜெ சாயம் வெளுத்து விட்டது. நான் களத்தில் இருந்து பார்க்கிறேன், இளைஞர்களின் கனவு நாயகன் கேப்டன் அவர்கள் தான், எப்போது அவர் பத்திரிகையின் செயல்பாடுகளை கண்டித்து தூ என்றாரோ, அப்போது முதல் இளைஞ்சர்களின் பேராதரவு கேப்டனுக்கு கிடைத்து வருகிறது. மேலும் கேப்டன் அவர்களின் தேர்தல் அறிக்கை அணைத்து மக்களையும் சுண்டி இழுக்கிறது. மேலும் உலகமே வியக்கும் தேர்தல் அறிக்கை... பெட்ரோல் 45 ருபாய் , டீஸல் 35 ருபாய் , வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் வந்துவிடும், L&T நிறுவனம் மூலம் வீடுகட்டி தரப்படும், Info, hcl , TCS மூலம் வேலைவாய்பு வாங்கி தரப்படும் ( படித்த + படிக்காத ), pothys, chennai silks, GRT போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் தொடங்கப்படும், முறுக்கு , தின்பண்டங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்டு அணைத்து நாடுகளுக்கும் அரசே ஏறுமதி செய்யும். ஒவ்வொரு ஊரிலும் ( 450 ) அரசே மல்டிப்ளெக்ஸ் மால் கட்டும், அதில் 4-5 சினிமா தியேட்டர் அரசாங்கம் கட்டும், 4 மாதத்தில் 1 கோடி பேருக்கு வேலை. டோல்கட் தேசியமயமாக்கப்படும், டோல்கட் விலையை குறைக்கு மத்திய அரசுக்கு ஆணையிடப்படும்..அணைத்து சிறு பள்ளிகளும் மாலை நேர கல்லூரிகளாக மாற்றப்படும், அணைத்து மாணவர்களும் வெளிநாட்டு சுற்றுலா அழைத்து செல்லபடுவர், விவசாயிகளுக்கு இன்ப சுற்றுலா, அனைவர்க்கும் பென்சன், பிரபல தனியாருடன் இணைந்து அரசே அணைத்து தொழில்களையும் தொடங்கும், இதன் மூலம் மொத்தம் 1 கோடி பேருக்கு இலவச வேலை ( படித்த + படிக்காத ). மேலும் கேப்டன் அவர்கள் நேற்று சொன்னார், அவர் நடிகர் சங்க தலைவராக இருந்த போது நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி 1 கோடி ருபாய் கடனை அடித்தார், அதே போல் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் 4.5 லட்சம் கடனை அடைப்பார்.

 • K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா

  இன்னும் நாள் இருக்குது தினமலரே. 85 - 90 அல்ல . டெல்லி யில் அரவிந்த் கேஜரிவால் வென்றது போன்று , தமிழகத்தில் மக்கள் நல கூட்டனி வெல்லவேண்டும். வெல்லும். மக்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வேண்டும்.50 ஆண்டுகால அராஜக தி மு க , அ தி மு க ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்.

 • Pravin - Chennai,இந்தியா

  இப்போது தான் தினமலர் உண்மையை ஒப்புகொண்டிருகிறது. உளவுத்துறையின் அறிக்கை சரியானது தான். கேப்டன் விஜயகாந்த் கூட்டணி உருவானதில் உருந்தே சொல்லி வருகிறேன், டாக்டர் கேப்டன் கூட்டணி 140-145 தொகுதிகள், ADMK 75-85, பிஜேபி- 4, பாமக -4, மற்றவை - 4, தி.மு.க -2 இடங்களை பெரும் என்பதே உண்மை. அ.தி.மு.க வை வீழ்த்தியதை விட, சாணக்கியர் போல செயல்பட்டு, இந்திய அரசியலே உற்று கவனித்த மாபெரும் சக்தியான கேப்டன் அவர்களை தம் பக்கம் இழுத்து சரித்திரம் சொல்லும் கூட்டணியை கட்டமைத்தார் வைகோ அவர்கள். வைகோ அவர்கள் முதன் முதலில் கேப்டன் அவர்கள் சீரிய தலைமையில் ஆட்சி கட்டிலில் அமரப்போகிறார்.

 • unmai nanban - Chennai,இந்தியா

  சூப்பர் காமெடி நிருபர் தகவல்கள் அம்மா சும்மா இல்லேப்பா சூரியனே ஆடிப்போய் வேட்ப்பாளர மாற்ற வைத்துட்டார் அப்புரம் அங்கேயே அம்மாவ பாராட்ட வைத்துட்டார்கள் ஏன்ன என்னதான் கட்ச்சிக்கு உழைத்தாலும் காசு துட்டு இருந்தா மட்டுமே அங்கே சீட் ஆனா அம்மாகிட்டே எல்லோருக்கும் சீட் கிடைக்கும் அதுவே உண்மையான கட்ச்சின்னு பேச்சு எப்போதும் இல்லாமல் புரட்ச்சி அங்கே வ்வ்டிக்க செய்துள்ளார் அம்மா அதுவே கில்லாடி மூவ் இதெல்லாம் உரைக்கல்லுக்கு தெரியாது உண்மை உறங்கி போய் ரொம்ப நாளாச்சே 85 முன்னாலே 1 போட மறந்துட்டார்கள் ஈஸியா 185 தொகுதியில் அதிமுக ஜெயிக்கும் அறுதியிட்டு இறுதியாக சொல்குகிரார்கள் மக்கள்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இட்லிகடை வச்சேன், உப்பு பொட்டலம் போட்டேன், ஆடு மாடு கிரைண்டர் எல்லாம் தந்தேன்னு சொல்லி ஓட்டுகேட்டா எப்படி ? இதுவெல்லாம் ஒரு அரசின் வேலையா ன்னு கேட்க மாட்டாங்க ? இதையும் விட்டால் வேறு என்னாத்த சொல்லி கேட்பார் ? பொருளாதார முன்னேற்றத்திற்கு எதையாவது செய்தாரா ?. விரைவில் பல லட்ச மாணவர்கள் படிப்பு முடித்து வேலைதேடி வருவார்கள், 5 வருடங்களில் அவர்களுக்கு திட்டங்கள் ஏதாவது செய்தாரா ? இதெல்லாம் வீட்டை, சொத்தை விற்று படிக்கவைத்த பெற்றோருக்குத் தெரியாதா ? ஒரு தொலைநோக்குதிட்டத்தை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். விஷன் 23 என்று வாய்ப்பேச்சுக்கு சொன்னால் போதுமா ? தலைவி (தி) 110 தில் அறிவித்ததெல்லாம் கானல் நீர் என்று தினமலர் தினமும் வலிக்கின்ற காலை வாருகின்றதே... இதுவெல்லாம் மக்களுக்குத் புரியாதா ?

 • JEEVITHAN - SALEM,இந்தியா

  உங்களுடைய தி மு க அனுதாபம் நன்றாக தெரிகிறது, என் இதற்கு முன்னால் அ தி மு க இது போன்ற வேட்பாளரை நிறுத்தி வென்றதில்லை உங்கள் pathirikkaiku புலனாய்வு செய்ய தெரியவில்லை, அ தி மு க நிச்சயமாக 160 இடதிற்குமேல் பெரும் மாற்று கருத்திற்கு இடமே இல்லை.,

 • Senthil Kumar - Jersey,யூ.எஸ்.ஏ

  படித்ததில் பிடித்தது. அதிகாலை 3.30 அளவில் அந்த விபத்து நடக்கிறது. அது விபத்து என அறிவதற்கே சில நேரம் பிடிக்க. அதற்குள்ளாக பல உயிர்கள் போய் விட்டன. உடனடியாக முதலமைச்சர் உம்மன்சாண்டிக்கு விபரம் தெரிவிக்கப்பட , அவர் சூழ்நிலையை விபரீதத்தை உணர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்துக்கும், உள் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிற்கும் தனிப்பட்ட முறையில் பேசி உதவிகள் உடனடி தேவை என கோரிக்கை விடுக்கிறார் அவர்கள் தூங்கும் நேரமாயினும். அவர்கள் போர் கால அடிப்படையில் விடியும் வேளையிலேயே ஹெலிகாப்டர், நாட்டிலேயே சிறந்த தீப்புண் மருத்துவக்குழு எல்லாம் மத்திய அரசின் சார்பில் அனுப்புகின்றனர். சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே அந்த காலை நேரத்தில் முதல்வர் உம்மன் சாண்டி நேரில் வந்து பார்வை இடுகிறார். கூடுதல் உதவிகளுக்கு உண்டான அவசியங்களை சொல்லிவிட, பிரதமர் மோடி இறப்பு எண்ணிக்கையை கேள்வியுற்று உடனடியாக இரங்கல் தெரிவித்து உடனடியாக கிளம்பி வருகிறார். மத்திய மீட்புக்குழு முழு அளவில் இறங்கி மீட்புகளை மாலைக்குள் முடித்து விடுகிறது. இவை அனைத்தும் சாத்தியமாக காரணம். முதலைமைச்சர் என்பவர் அவசர கால சூழல்களில் உடனடியாக களத்தில் இறங்கியதே. அப்படி இறங்கினால் தான் மேல் சொன்ன அனைத்துமே சாத்தியம் ஆகிறது. அது கடமையும் கூட. விபத்தின் வீரியத்தை உடனடியாக சொல்லும் அளவு அணுகுமுறை, அதற்கு அடுத்து உதவிகள் தேவை என்பதை எங்கே தனக்கு கிரெடிட் கிடைக்காமல் போகுமோ என்று நோக்காமல் உதவி கேட்கும் முனைப்பு எல்லாமே மக்களை நோக்கியதாகவே இருக்கவேண்டும். இவ்வளவுக்கும் அந்த மத்திய மாநில அரசுகள் எதிர் (கிட்ட தட்ட எதிரி கட்சிகளான காங்கிரஸ் சும் பாஜகவும்) கட்சிகள். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடந்தது?? வெள்ளம் வந்து ஒரு வாரம் ஆகியும் களத்தில் ஆளே இல்லை. முதல்வரை காணவே இல்லை. அங்கே விபத்து நடந்த மூன்று மணி நேரத்தில் வரும் மத்திய மீட்புக்குழு, இங்கு வெள்ளம் வந்து மூன்று நாள் கழித்து வருகிறது இதற்கு காரணம் யார்? நிச்சயம் மத்திய அரசு அல்ல. ஒரு விபத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் மத்திய அரசு, வெள்ளத்திற்கு தரவில்லை என நினைக்கவில்லை. பிறகு இனி அரசை நம்பி பயனில்லை என்று இளையோர்கள் களத்தில் இறங்கினார்கள் அதையாவது ஒழுங்காக செய்ய விட்டார்களே. நெஞ்சு பொறுக்காமல் பொருட்களை பெங்களூரில் இருந்து கொண்டு வந்தவர்களை ஸ்டிக்கர் ஓட்டவில்லை என்று கட்டைகளை வைத்து தாக்குகிறார்கள் நம் முதலமைச்சரின் கட்சிகாரர்கள். மிரட்டினார்கள், உயிரை காக்கும் பொருட்களை தண்ணீரில் எறிந்தார்கள் ஸ்டிக்கர் ஓட்ட வில்லை என்பதற்காக. முதல் வெள்ளம் முடிந்த பின் ஒருவாரம் கழித்து வந்து வாக்காள பெருங்குடி மக்களே என்று வருகிறார் நம் முதல்வர். பெருவெள்ளத்தில் மூழ்கி கிடந்த போதும் மக்களை பற்றி கவலைபடாமல் ஒரு வாரம் தூங்கிவிட்டு வாட்சப்பில் மெசேஜ் கொடுக்கிறார் நம் முதல்வர். ஐயோ தமிழா, உலகுக்கே நல்லாட்சி சூத்திரம் சொன்ன நீ என்ன பாவம் செய்தாய்.

 • Sicario - La Jolla,யூ.எஸ்.ஏ

  85-90 இடங்கள் அ.தி.மு.க ஒகே. தி.மு.க எவ்வளவு? அ.தி.மு.க 90 இடங்கள் தான் வெல்லும் எனில் வைகோ அணியினர் 30-40 சீட்களை வெல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் தொங்கு சட்டசபை தான்.

 • Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்

  உண்மை ,அதே சமயம் தற்போதுள்ள தேர்தல் கூட்டணி கட்சிகள் பல முரண்பட்ட கருத்துடையவர்கள் , இப்போ கூட்டாக சேர்ந்து கோவிந்தா போடுகிறார்கள் , தனியாக யாரும் சோபிக்க முடியாது என நன்றாக தெரியும் , ப ம க எத்தனை பேர்தான் தனக்கு ஆதரவு தருவார்கள் என்ற பரிசோதனையில் இறங்கி உள்ளது , அதுபோல் மற்ற கட்சிகளும் இறங்கி இருந்தால் பலரின் சாயம் வெளுத்துவிடும் ,,,தேர்தல் கமிசன் ஒரு எம் பி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென்றால் தன பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடவேண்டும் , ஒரு நபர் ஒரு தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் பல கொள்கை உடைய கட்சிகள் கூட்டாக தேர்தலை சந்திக்காமல் தனி தனியாக தான் போட்டி இட வேண்டும் , இரண்டு சதவீத வாக்கு இல்லாத கட்சிகள் குறைந்தது பத்து வருடங்கள் போட்டி இட முடியாது , தேர்தல் அறிக்கை , இலவச அறிவிப்பு , கட் -அவுட் , போஸ்டர் , மாநாடு ,என நடப்பதை தடை செய்து , ஊடகங்களில் மட்டும் சில மணி நேர வாக்கு சேகரிப்பு ,, என நிபந்தனை விதித்தால் பல சாக்கடைகள் அரசியலில் கலக்காது ...

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  இந்த செய்திய ஓராயிரம் முறை படிக்கலாம் ஒவ்வொரு முறையும் மனசுக்கு நிறைவா சந்தோசமும் முழு திருப்த்தியும் தரும். இதுக்கு பேர்தான் வாய்மையே வெல்லும்குறது

 • Krishnamoorthy Perumal - tamilnadu,இந்தியா

  எதுவும் கிடைக்காது ,, கிடைக்காமல் போகட்டும் ...... அதிகார ஆட்சி ஒழியட்டும் .....கொள்ளை கூட்டம் ஒழியட்டும்

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஜெயாவிற்கு செல்வாக்கு எப்படி கிடைத்தது? அவரின் பேச்சின் திறமையாலா? ஒருபோதும் இல்லை. ஒவ்வொரு ஊரிலும் அதிமுக மற்றும் திமுகவின் ஆட்கள் எதிர் எதிர் அணியில் இருந்தனர். ஒருத்தருக்கு ஒருத்தர் பகையாளிகளாக இருந்தனர். அப்படிதான் கலைஞரும் எம்ஜியாரும் இருந்தார்கள். என்னென்னவோ கதைகள் சொல்லலாம். ஆனால் இது தான் உண்மை. ஊரில் உள்ள ஒருத்தருக்கு ஒருத்தர் பகையாளிகளும் எதிர் எதிர் அணியில் சேர்ந்தனர். அந்தந்த கட்சிக்காக பணியாற்றினார். எம்ஜியார் இன் கட்சியை திறம்பட கைப்பற்றிய ஜெயா, அதிமுகவின் தலைவி ஆனார். அதற்கு பின், ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், அவரின் சர்வாதிகாரமாக பணியாற்ற தொடங்கினார். எம்ஜியார் கூட இப்படியெல்லாம் நடந்தது இல்லை. கால்களில் விழ வைப்பது, மேடைக்கு மேல் மேடை போட்டு, ஏதோ ஒரு மகாராணி போன்று மன்னராட்சி நடப்பது போன்று, ஜனநாயக நாட்டில் நடக்கிறார். அது மட்டுமின்றி, முன்னூறு ரூபாய்க்காக கொண்டு வரப்பட்ட கூட்டத்திற்கு தண்ணீர் கூட கொடுக்காமல், சுடும் வெயிலில் கொஞ்சம் கூட மக்களை நினைத்து பார்க்காமல், 12 ஏர் கண்டிஷனர் சூழ, போர் அடிக்கும் இவரின் பொய் புரளிகளை கட்டவிழ்த்து விடுகிறார். ஜெயாவின் பேச்சை ரசிக்கும் அளவிற்கு தமிழர்களின் ரசனை குட்டிசுவர் ஆகவில்லை. மூன்றாம் அணி என்று இதுநாள் வரை இல்லாமல் இருந்தது, ஜெயாவின் ஆதிக்கத்திற்கு வடிகோலியது. அதான், இப்போது மூன்றாம் அணி வந்துவிட்டதே....பாருங்கள் தேர்தலுக்கு பின்னர், ஜெயாவின் ஆளும் கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும்.

 • amicos - Bali,இந்தோனேசியா

  ஹி ஹி ஹி ஹி ஹி ஹி அடுத்த மாதம் 19

 • sankar - trichy,இந்தியா

  நிருபர் தன கனவில் கண்டதை மற்றும் தினமலர் விரும்புவதை எல்லாம் எழுதி உள்ளார். தினசொலி பின்னுறீங்க. என்ன முட்டு கொடுத்தாலும் திமுக அசைய மாட்டேங்குதே

 • mnathumitha - CA,யூ.எஸ்.ஏ

  என்ன தினமலர் இப்பொழுதெல்லாம் பல்டி அடிக்கிறது திமுக ஒட்டுமொத்த பத்திரிக்கைகளையும் பேரம் பேசி விட்டதா? 2014 தேர்தலில் கூட இப்படித்தான் எழுதினீர்கள். கடைசி கட்டத்தில் திமுக 10 முத்த 15 தொகுதிகள் பெரும் என்றீர்கள். ஆனால் என்னவானது? இப்படி மற்ற பத்திரிக்கைபோல் புரளிகளை அள்ளி தெளித்தால் தினமலர் மீதான நம்பிக்கை சிதையும். அதிமுக முந்தய தேர்தலில் பெற்ற 44.6 % வாக்கு பெற்றாலே 217 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். 2014 தேர்தலைவிட இந்த தேர்தலில் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் மேலும் சிதைவடைகின்றன என்பது நிதர்சனாமாக இருக்கும் பொழுது எப்படி அதிமுக 80 டு 90 தொகுதிகள்தான் பெரும் என்று பொய் சொல்கிறீர்கள்?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  சொல்லுவது செம கடுப்பா இருந்தாலும், உண்மைய ஒத்து கொள்ளுவதை தவிர வேறு வழி இல்லை. அந்த பழைய ஒரு இது இல்ல. என்ன சொல்றது, ஒரு கில்பாஞ்சி இல்ல அம்மாஜியோட தேர்தல் பிரச்சாரத்தில. நான் செஞ்சதெல்லாம் சொல்றேன்னு சொல்லி அம்மாஜி தன் தலைல தானே மண் அள்ளி போட்டுக்கிது. தமிழக மக்களிடம் வெற்றி பெறுவதற்கு வழக்கமான ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. கண்டிப்பா கட்டுமரத்தோட அட்டூழியங்களை மக்களுக்கு நியாபகபடுத்தியே ஆக வேண்டும். ரவுடி ராஜ்ஜியம் வேண்டுமா, வேண்டுமா, உங்கள நில பட்டாக்கள் பத்திரங்கள் அடித்து புடுங்கப்பட வேண்டுமா, வேண்டாமான்னு ஒவ்வொரு கூட்டதிளையும் ஒவ்வொரு அட்டூழியத்தை நியாபகபடுத்தியே ஆக வேண்டும். கட்டு மேல இருக்கிற பயத்தை நல்லா அறுவடை பண்ணலாம் இன்னும் 10 வருசத்துக்கு. கட்டுன்னு சொன்ன உடனே நின்ன இடத்தில மூச்சா போற அளவுக்கு மக்கள் பயந்து போயி இருக்காங்க. அந்த பயத்தை கெளப்பி விட்டாலே போதும், எல்லாவனும் அடிச்சு புடிச்சு ஓடிவந்து ஓட்டை போட்டுட்டு போவானுக. அத விட்டுட்டு நான் அத பண்ணினேன் இத பண்ணினேன்னு சொன்னா எல்லாம் நம்ம பசங்க கிட்ட எடுபடாது. யேனா எதாச்சும் செஞ்சு இருந்தாதான் அவனே வந்து ஓட்டு போட்டுட்டு போய்டுவானே. நம்ம ஆளுங்க கிட்ட நல்லதெல்லாம் சொன்ன எடுபடாது, இதே இது, டேய் அவன் வந்து புடுங்கிட்டு போக வரான் ஓடுன்னு சொல்லி பாருங்க, பின்னாங்கால் பொடனில பட ஓடுவான்.

 • Dynamo - Den Haag,நெதர்லாந்து

  ஆலை இல்லாத ஊருக்கு இல்லுப்பம் பூ சர்கரையாம்.... இருக்கற எல்லா அரசியல்வாதிகளிலும் (திருடர்களிலும் என்று படிக்கவும்) இந்த அம்மா பரவாயில்லை என்று எண்ணித்தான் மக்கள் இரட்டை இல்லைக்கு வாக்களிகின்றனர். ஆனாலும் இந்த அம்மா ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்யாது என்பது வேறுவிஷயம். ஊழல் அதிகம் செய்வதாகவும், ஒன்றும் இல்லாமல் வெறுங்கையுடன் சென்னைக்கு வந்து சேர்ந்து, இன்று கட்டுக்கடங்காத சொத்தும், ஆலமரம் போன்ற குடும்மபுமும் கொண்டு, முடி இல்லாவிட்டாலும் முடி சூடிய மன்னர் போல் காட்சிதருவதால் (பொறமை என்று படிக்ககவும், எனக்கும் தான்) மு. கருணாநிதியை மக்கள் வெறுக்கின்றனர் என்று எனக்கு தோன்றுகிறது. அதிமுக, திமுக ஆட்சிகளை வளர்ச்சி விகிதம் கொண்டு ஒப்பிட்டால், திமுக பரவாஇல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து....

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  இன்று நமது நிருபர் சிங்கப்பூர் அடிமையும் ரொம்பவும் வாங்கி கட்டி கொள்ள போகிறார் உண்மை சொன்னதற்காக.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement