Advertisement

தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்திற்கு கருணாநிதி...தயார்! 93 வயதிலும் வேன் மூலம் 23ம் தேதி முதல் சுற்றுப்பயணம்

தமிழக சட்டசபை தேர்தலுக்காக, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட தி.மு.க., தலைவர் கருணாநிதி தயாராகி உள்ளார்.
93 வயதிலும் அசராமல் வேன் மூலம் பிரசாரம் செய்யப் போவதாக அவர் அறிவித்து இருப்பது, கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் 23ல் சைதாப்பேட்டையில் துவங்கும் அவரது பிரசார பயணம் மே 14ல் சென்னையிலேயே நிறைவுஅடைகிறது. மொத்தம்
15 நாட்கள் பிரசாரத்தில் 38 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.அ.தி.மு.க., பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா இம்மாதம் 9ல் சென்னையில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். 15 இடங்களில் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்யும் வகையில் அவரது பயண திட்டம்
வகுக்கப்பட்டு உள்ளது.அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் விருத்தாசலம் சென்ற ஜெயலலிதா அங்கு பேசினார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து அவர் வெளியூர் செல்வது போல
திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு
வரும் 23ல் சைதாப்பேட்டையில் நடக்கும் துவக்க கூட்டத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணிகட்டமாக வேனில் சென்று பிரசாரம் செய்ய தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டமிட்டு உள்ளார். அதற்காகவே அவர் பயணம் செய்யும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வேன் தயாரிக்கப்பட்டு உள்ளது.

முதல் கட்டம்
கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பேசுகிறார். அன்று மாலை மரக்காணத்திலும், இரவு புதுச்சேரியிலும் பிரசாரம் செய்கிறார்.
அடுத்த நாள் 24ல் கடலுார், மயிலாடுதுறை; 25ல் திருவாரூர்; 26ல் தஞ்சாவூர்; 27ல் திருச்சி; 28ல் பெரம்பலுார், உளுந்துார்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு தொகுதிகளில் பேசுகிறார். அத்துடன் முதற்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்து அன்று இரவே சென்னை திரும்புகிறார்.இரண்டாவது கட்டமாக மே 1 இரவு 8:10 மணிக்கு ரயிலில் திருநெல்வேலி செல்கிறார். அங்கிருந்து 2ம் தேதி பிரசாரத்தை துவக்கும் அவர் ஆலங்குளம், கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம் தொகுதிகளில் பேசுகிறார். 3ல் ஸ்ரீவில்லி புத்துார், விருதுநகர், அருப்புக் கோட்டை, மதுரை பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
அங்கிருந்து சென்னை திரும்பும் அவர் மூன்றாவது கட்டமாக மே 5ல் சென்னையில்பிரசாரம் செய்கிறார். 7ல் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, காட்பாடி, வேலுாரில் பேசுகிறார். 8-ல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்; 9ல் ஈரோடு, திருப்பூர், கோவையில் பிரசாரம் முடித்ததும், அன்று இரவே சென்னை திரும்புகிறார்.இதன்பின் நான்காவது கட்டமாக மே 12ல் திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாக பிரசாரம் செய்கிறார். 14ல் சென்னையில் பிரசாரத்தை முடிக்கிறார்.

திருவாரூரில்25ல் மனு தாக்கல்தி.மு.க., தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். லோக்சபா தேர்தலில் திருவாரூர் சட்டசபை தொகுதியில் மற்ற கட்சிகளை விட தி.மு.க., கூடுதல் ஓட்டுகள் பெற்றது.இந்த தேர்தலில் அவர் தொகுதி மாறுவார் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால், தி.மு.க., தலைமை நேற்று வெளியிட்டுள்ள
அறிக்கையில், 'திருவாரூர் தொகுதியில், கருணாநிதி போட்டியிடுகிறார். வரும் 25ல் வேட்பு மனு தாக்கல் செய்வார்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதும் சென்று கருணாநிதி தொடர்ச்சியாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அவரது குடும்பத்தினர் இம்முறையும் திருவாரூருக்கு சென்று அவருக்காக ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (301)

 • babu - Nellai,இந்தியா

  ஏற்கனவே நீங்கள் மதுரையில் ஆடிய ஆட்டம், செய்த கொலைகள் இன்னும் எங்களால் மறக்க முடியவில்லை..... மறுபடியும் நீங்கள் வந்தால் நாங்கள் ஊரை காலி பண்ணி வேறு மாநிலத்திற்கு சென்று நிம்மதியாக பிச்சை எடுத்து தான் சாப்பிடனும் குடும்பத்துடன்............

 • rmr - chennai,இந்தியா

  50 வருடம் மாறி மறி மக்களை எமாத்துறாங்க. திரும்பவும் இவனுங்களுக்கு வாய்ப்பு குடுக்க கூடாது

 • rmr - chennai,இந்தியா

  ஊழல் வாதிகள்

 • rmr - chennai,இந்தியா

  பதவி வெறி பிடித்த ஊழல் வாதி இவர் . தமிழகத்தின் சாப கேடு இந்த கழகங்கள்

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  இந்த வயதில் MLA / CM ஆசையில் தள்ளுவண்டியில் போக வேண்டுமா? வென்றாலும் சட்டசபைக்கு செல்லாமல் சம்பளம் மாத்திரம் வாங்கலாமா? ஒரு வேளை வேனுக்குள் டாக்டர் திரிப்பும் போடுகிறாரோ என்னவோ? எது எப்படியிருந்தாலும் இவ்வாறு செய்வது தமிழக வாக்காளர்களை அவமானப்படுத்துவதுவே. எல்க்சன் கமிஷன் இதை தடை செய்தால் நல்லது. தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டசபைக்கு செல்வேன் என்று வேட்பு மனுவில் உறுதி மொழி வாங்கவேண்டும்.

" "
Advertisement