Advertisement

மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் : தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள்

சென்னை : மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக., 124 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், மக்கள் நல கூட்டணி கட்சிகள் 110 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் அறிக்கப்பட்டுள்ளது.மக்கள் நல கூட்டணியைச் சேர்ந்த வைகோ, ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டில் மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தேமுதிக உடனான தொகுதி பங்கீடு குறித்து இன்று முடிவு செய்யப்படும் எனவும், முடிவு செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறினார்.விஜயகாந்துடனான சந்திப்பிற்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 110 இடங்களில் மக்கள் நல கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.தேமுதிக.,வுடன் கூட்டணி அமைத்தாலும் மக்கள் நல கூட்டணியின் பெயர் மாற்றப்படாது எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணி குறித்து தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (365)

  • rmr - chennai,இந்தியா

    தமிழ்நாட்ட எப்போ தமிழன ஆள விட போறீங்க ? சிந்தியுங்கள் போதும் சினிமா அரசியல் .வேற எந்த மாநிலத்திலையும் இப்படி நடக்காது .தேவை மாற்றம் முன்னேற்றம்

  • Saminathan Kayarohanam - Trichy,இந்தியா

    அரசியல் கூட்டணி என்றாலே அது அந்த எலக்சனுக்கு மட்டும்தான். இல்லனா இவரும் கட்சிய கலைசுகிட்டு ஒரே கட்சியா ஆகிடலாமே ? இதுக்கு முண்டி ADMK DMK ஆட்சியல் அதிகார பகிர்வு இல்லை... ஆனால் இதில் இருக்கிறது... அதுவே மகள் நல கூட்டனிக்கு வெற்றி தான்? ADMK DMK VOTE போடும்போது இந்த அளவு யோசனை செய்து இருந்தால் இந்த தளவை இல்லை...

  • parivallal.B - Mayiladuthurai,இந்தியா

    சிங்கம் களத்துல இரங்கிட்டு இனி ஆட்டத்த மட்டும் பாரு....

  • VSK - CARY,யூ.எஸ்.ஏ

    இரு கழகங்களுக்கும் மாற்று இல்லாததால்தான் மாறி மாறி ஓட்டளித்தோம் என தமிழகம் இனி சொல்லமுடியாது. சரியான வலுவான மாற்றுக் கூட்டணி இது. மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கழகங்கள் இரண்டையும் விரட்டியடிக்கிறார்களா அல்லது, மீண்டும் அவதிப்படத்தான் போகிறார்களா எனப் பார்க்கலாம்

  • K Sridharan - Chennai,இந்தியா

    வைகோவை பொறுத்தவரை, யார் வேண்டுமானாலும் வெற்றிபெறட்டும், ஆனால் yaar முதல்வர் ஆககூடாது என்பதில் தெளிவாக இறுக்கிறார். அதற்காக அவர் எடுத்த அனைத்து முயற்சியும் இதுவரை வெற்றியே. இவரது விடாமுயற்சியின் பலனை, அனுபவிக்க வேண்டிய இருவர் உணரும் நேரம் இது. செய்யவேண்டியதை மிக சரியான நேரத்தில் செய்துவிட்டார். இதுவே வைக்கோவின் வெற்றிதான்

Advertisement