Advertisement

ஆறிலிருந்து அறுபது வரை

ஒருவரின் உடலின் கண்ணாடியாக வாய் இருக்கும். உடலுக்கு வரும் உபாதைகளை வாயின் ஆரோக்கியத்தை வைத்தே கண்டு பிடித்துவிட முடியும். பல், ஈறு, வாயை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடலை ஆரோக்கியமாகவும், பல நோய்களை வராமல் சமாளிக்கவும் முடியும்.
நாம் காலையில் எழுந்து செய்யும் முதல் செயல் பல் துலக்குவது. இது நம் முன்னோர் ஏற்படுத்திய இச்செயலை இன்று வரை பின்பற்ற என்ன காரணம்? ஒருவர் நலமுடன் வாழ பல், வாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.ஒருவரின் உடலின் கண்ணாடியாக வாய் இருக்கும். உடலுக்கு வரும் உபாதைகளை வாயின் ஆரோக்கியத்தை வைத்தே கண்டு பிடித்துவிட முடியும். பல், ஈறு, வாயை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடலை ஆரோக்கியமாகவும், பல நோய்களை வராமல் சமாளிக்கவும் முடியும். வாயின் ஆரோக்கியம்தான் உடல் ஆரோக்கியம் என்பதை புரிந்திருப்பதால் இன்றளவும் நாம் பல் துலக்குவதை ஒரு கடமையாகவே செய்து வருகிறோம்.பல் பாதுகாப்பிற்கான வழிமுறைகள் மாறி உள்ளதே தவிர, அதற்கான முக்கியத்துவம் என்றும் குறையவே இல்லை. ஒரு காலத்தில் ஆலங்குச்சியிலும், வேப்பங்குச்சியிலும் பல் துலக்கினார்கள். பின்னர் மண், கரித்துாளை பயன்படுத்தினர். கையால் பல் பொடியை கொண்டு துலக்கினர். இன்று டூத் பிரஷ் மற்றும் பல்வகை பேஸ்ட்களால் துலக்கி வருகிறார்கள். இவை அனைத்திலும் நாம் முக்கியமாக உணர வேண்டியது, முறை எதுவாக இருப்பினும் பல் பாதுகாப்பு தவிர்க்க முடியாத ஒன்று.

குழந்தை பல் பாதுகாப்பு :பிறந்த குழந்தை ஆறுமாதம் ஆனதும், இரண்டு பால் பற்கள் முளைக்கும். அப்போது இருந்தே பற்கள் மீது நாம் அக்கறை காட்ட வேண்டும். பற்கள் முழுவதும் முளைத்தால் பிரஷ் செய்ய வேண்டும் என சிலர் கருதுகின்றனர். ஈறுகள் மற்றும் பற்கள் முளைக்க ஆரம்பித்தவுடன் மிருதுவான பிரஷால், சிறிதளவு பேஸ்ட்டை கொண்டு பல் துலக்க வேண்டும். வாய், கன்னத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.குழந்தைகள் விரும்பும்வகையில் பல வண்ண, சுவை கொண்ட பேஸ்ட்கள் உள்ளன. அதைக்கொண்டு குழந்தைகளை பல் துலக்க செய்யலாம். குழந்தையின் பற்களை பொதுவாக பாதிப்பது பால். காரணம், பால் குடித்துவிட்டு வாயை சரியாக சுத்தம் செய்வது இல்லை. இதை தவிர்க்க, பால் குடித்துவிட்டு, துாங்கும் முன் தண்ணீரால் வாயை நன்கு கழுவ வேண்டும்.மற்றொரு பிரச்னை, குழந்தை விரல் சூப்புவது. சில காலம் வரை சூப்பினால் பிரச்னையில்லை. இரண்டு வயது வரையும் அப்பழக்கம் தொடர்ந்தால் பல் வரிசை சீராக இருப்பது கடினம். தாடை வளர்ச்சி முறையாக இல்லாமல் தெத்து பற்கள் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம். முறையான பழக்கத்தையும், பற்களின் ஆரோக்கியம் குறித்தும் குழந்தைகளுக்கு இப்போதே நாம் கற்றுத்தரவேண்டும்.

சிறுவர்களே கவனம் :பள்ளி செல்லும் குழந்தைகள், 5 முதல் 8 மணி நேரம் பள்ளியில் இருப்பதால், அவர்களின் பற்களின் சுத்தத்தை கண்காணிப்பது கடினம். இவர்களின் பால் பற்கள் சிறியவை. எளிதாக பாதிக்கும் தன்மை உடையவை. அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்பட காரணம், அவர்கள் உண்ணும் உணவு வகைகள். பள்ளிக்கு கொடுத்து அனுப்பும் உணவில், நிறைய காய்கறிகள், பழங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நொறுக்குத்தீனிகளை தவிர்ப்பது நல்லது. இவை பற்களில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையவை. உடனடியாக சுத்தம் செய்யாவிட்டால், அதனாலேயே சொத்தை ஏற்படும்.உணவு உண்டபின், வாயை நன்றாக கழுவ பழக்கப்படுத்த வேண்டும். பல் சொத்தை தவிர, குழந்தைகளுக்கு ஏற்படும் மற்றொரு பாதிப்பு பல்லில் அடிபடுவது. அடிபட்டு ரத்தம் வந்தால் குளிர்ந்த நீரில் வாயை நன்றாக கழுவிவிட்டு, ஐஸ் கட்டி வைக்க வேண்டும். முறையாக பால் பற்களை பராமரிப்பது, பின்னாளில் நிரந்தர பற்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

இளமையில் பாதுகாப்புபற்களின் பாதுகாப்பிற்கு ஒவ்வொருவரும் சிறு முயற்சி எடுத்தாலே போதுமானது. சரியான உணவுப்பழக்கம் மற்றும் முறையான சுத்தம் செய்தல் அவசியம். இதில் மற்றொரு பிரச்னை என்றால், பல் பிரச்னைகளில் பல மரபு வழியாக வருகின்றன. ஒரே வீட்டில் ஒருவருக்கு பல் ஈறு, சொத்தை பிரச்னை இருக்காது. மற்றொருவருக்கு பாதிப்பு இருக்கும். இதில் அவரவர் பற்களின் நிலைக்கு ஏற்ப அதிக கவனத்துடன் பராமரிப்பது அவசியம்.இன்றைய வாழ்க்கையில் இளைஞர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இது உடல் நலத்தை பாதிப்பது மட்டுமில்லாமல் பற்களையும் பாதிக்கும். மனஅழுத்தம் அதிகரிப்பால், துாங்கும்போது பல் கடிக்கும் பழக்கம் வர வாய்ப்பு உள்ளது. இதனால் பற்களின் மேல் அதிக விசை அழுத்தம் உண்டாகி பற்கள் பாதிக்கும்.பற்களை தினமும் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும். பாஸ்ட்புட், குளிர்பானங்களை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். இவை பல்லின் மேல் படலம் அமைத்து, பற்களின் எனாமல் தேய்வதற்கும் சொத்தை வருவதற்கும் காரணமாக அமைகின்றன. சரியான சுத்தம் செய்தலும், உணவுப்பழக்கமுமே இளமையில் பற்களை பாதுகாக்க உதவும்.

முதுமையில் பராமரிப்புமுதுமையில் சில உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் உணவு கட்டுப்பாடு முக்கியம். பற்கள் பலமாக இல்லாதவர்கள் உடலுக்கான உணவைகூட சரியாக சாப்பிட முடியாது. எனவே பற்களை பாதுகாப்பதும் முக்கியம். மேலும் உடல்நல பாதிப்பிற்கேற்ப மருந்து, மாத்திரைகள் எடுக்க வேண்டியிருக்கும். இந்த மருந்துகளால் வாய் உலர்ந்து போக வாய்ப்புண்டு. உலர்ந்து போனால் வாய் எரிச்சல் ஏற்படும். பல் செட் அணிபவர்களுக்கு புண் ஏற்படலாம்.இதை தவிர்க்க, வாயை உலரவிடாமல் தண்ணீர் பருக வேண்டும். வயதானவர்களுக்கு இயற்கையிலேேய நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். பல் சொத்தை, ஈறு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. சரியான முறையில் பற்களை சுத்தம் செய்து, பற்களையும், ஈறுகளையும் முறையாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.சின்ன சின்ன பழக்கங்களும், சிறிது முயற்சியும் இருந்தால் ஆறிலிருந்து அறுபது வயது வரை அனைவரும் ஆரோக்கிய புன்னகை பெறலாம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்மதுரை94441 54551

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Rameeparithi - Bangalore,இந்தியா

    பல்லு போனால் சொல்லு போச்சு...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பற்களை பத்திரமாக பராமரித்தாலேயே 100 ஆண்டுகள் தாராளமாக வாழலாம்... தினமும் இரவில் தூங்குவதற்கு முன் உப்புக்கரைசலை வைத்து வாயை கொப்பளித்தாலே போதும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement