Advertisement

கம்பராமாயணம் போல அழியாத காவியம்- நடிகர் ராஜேஷின் ஆசை

வந்தார்... சென்றார்... என்ற வரிசையில் இடம் பிடிக்காமல்... ஹீரோ, குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் தனக்கென தனிமுத்திரை பதித்து... தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்து மூன்றாம் தலைமுறை நடிகர்களுடன் தனது நடிப்பால் அசத்தி வருபவர் நடிகர் ராஜேஷ். சொந்த ஊர் புதுக்கோட்டை. பெற்றோர் தேனி மாவட்டம் சின்னமனுாரில் பணி புரிந்ததால், இங்குள்ள கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் 1963--64ல் பத்தாம் வகுப்பு படித்தார். தனது பால்ய நண்பர்களின் நட்பை இன்றும் தொடரும் ராஜேஷ், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளிக்கு வந்தார். உடன் படித்த தோழர்களுடன் அவர் நடத்திய 'அரட்டை கச்சேரி'சுவாரஸ்யமாக இருந்தது.சுவார்ட் சாமுவேல்... நடிகர் ராஜேஷாக மாறியது முதல், இலக்கியம், சமூகம், தமிழனின் பாரம்பரியம், சினிமா கலைஞர்களின் வாழ்க்கை குறித்து நண்பர்களுடன் நடந்த சுவையான உரையாடல்களில் சில...காட்டிற்கு ராஜாவாக இருந்தாலும் வயது முதிர்ந்த சிங்கத்தை, புலி அடித்து கொன்று விடும். இது தான்வாழ்க்கையின் தத்துவம். உடல் வலு, துணிவான உள்ளம், சமூக அங்கீகாரம், பையில் கொஞ்சம் காசு உள்ளவரை மட்டுமேமனிதனுக்கு மதிப்பிருக்கும் என்று தத்துவார்த்தமாக ஆரம்பித்தார்.''வால்மீகி எழுதிய ராமாயணத்தை 'டப்பிங்' செய்து 'கம்பராமாயணம்' படைத்து, 1,650ஆண்டுகளுக்கும் மேலாக புகழுடன் கம்பன் உள்ளார். இதே போல அழியாத காவியம் ஒன்றை படைக்க வேண்டும் என்று ஆசை உள்ளது.தமிழர்களின் 42 வகையான வீர விளையாட்டுகளும் அறிவியல் சார்ந்தவை. இதற்கான பயிற்சிமேற்கொண்டு உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். பேரன்கள் ஆசைப்பட்டதற்காக வெளிநாட்டிலிருந்து 'ஏர் கன்' வாங்கி வந்த முன்னாள் பிரதமர் நேரு, இவற்றிற்கான ஆயத்தீர்வையை முறையாக செலுத்தினார்.அவரது பேரன் ராஜிவ், பீரங்கி பேர ஊழலில் சிக்கியது குறித்து 'முரண் சுவை' என்ற நாவலில் எழுதியுள்ளேன். ஒருவரிடம் உள்ள 'மிரர் சென்ஸ்' அவர்கள் வாழ்க்கையின் வெற்றியைதீர்மானிக்கிறது. சிறு குழந்தைகள் கீழே கிடக்கும் பொருட்களை, தங்கள் தாத்தாவை போல பாவனையுடன் குனிந்து எடுப்பது தான் 'மிரர் சென்ஸ்'. என்னிடம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.எந்த தருணத்திலும் எனது வாசிப்பு பழக்கம் தடைபடக் கூடாது என்பதற்காக வீட்டில் தனி நுாலகம் அமைத்துள்ளேன். நண்பர்களின் கோரிக்கையை ஏற்று என் வாழ்க்கைக்கு பின், எனது புத்தகங்கள் முழுவதையும், கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி நுாலகத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளேன் என ராஜேஷ் பேச்சு சுவாரஸ்யமாக நகன்றது... இரண்டு மணி நேரம் கரைந்தது தெரியவில்லை.நேரம் போவது தெரியாமல் பயனுள்ளதாக பேசுவது குறித்து கேட்டதற்கு... “ஒருமுறை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, திரைத்துறை நண்பர்கள் சிலருடன் ஜாலியாக மாலை 5 மணிக்கு பேசத் துவங்கினார். அவரது சுவாரஸ்யமான பேச்சு மறுநாள் காலை 6 மணிக்கு தான் முடிந்ததாம்,” என்றார் ராஜேஷ். தொடர்புக்கு rajesh.cineartistegmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

    திரைப்பட மாயையில் சிக்கித் தவிக்கும் இன்னாளில் இப்படியொரு எண்ணம் தோன்றுவதே பாராட்டுக்குரியதுதான். என் போன்ற பலர் கூட உதவத் தயாராக இருக்கிறோம்.

  • Shruti Devi - cbe,இந்தியா

    நல்ல மனிதர்.. நல்ல நடிகர் வாழ்க வளமுடன்

  • மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

    நல்ல பண்பட்ட மனிதர்.. நல்ல பண்பட்ட நடிகர்.. எனக்கு பிடித்த நபர்களுள் இவரும் ஒருவர்.

Advertisement