Advertisement

ஜெ., தீர்ப்பை எதிர்த்த அப்பீல் வழக்கில் விசாரணை ஆரம்பம்; நீதிபதி குமாரசாமி உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடகா வாதம்

புதுடில்லி : தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான, 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று துவங்கியது. 'கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்' என, கர்நாடக அரசு வாதிட்டது.சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ஆகியோர் சார்பில்,
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கின் இறுதி வாதம், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்றுதுவங்கியது.

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தன் வாதத்தை துவங்கினார்.

அவர் வாதிட்டதாவது: வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்க முயற்சி நடக்கிறது. 1996ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை, தன் அதிகாரத்தின் மூலம், 20 ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்துள்ளனர். இது, நீதித் துறையை அழிக்க முயலும் முயற்சி; இதை அனுமதிக்கக் கூடாது. தினசரி, விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

கர்நாடக அரசின் சார்பில், தன் வாதத்தை எடுத்துரைக்க, மூன்று நாள்அவகாசம் கோரினார் வழக்கறிஞர் தவே; அதற்கு, அமர்வு அனுமதி அளித்தது.

ஒருதலைபட்சமானது:வாதத்தின் போது, கர்நாடக வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியதாவது: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பு, சட்டவிரோதமானது; ஒருதலைபட்சமானது. அதில், வெளிப்படையாக தெரியும் அளவுக்கு கணக்கு குளறுபடிகள் உள்ளன. அதனால், அந்த தீர்ப்பை ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக, 8.12 சதவீதம் அளவுக்கே சொத்துகள் சேர்த்ததால், விடுதலை செய்வதாக கர்நாடக ஐகோர்ட் நீதிபதி தன் தீர்ப்பில் கூறி உள்ளார். ஆனால், முறையாக கணக்கிட்டால், வருமானத்தை விட, 168 சதவீதம் அதிக சொத்தை சேர்த்துள்ளனர். இவ்வாறு தவே வாதிட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (243)

 • Balaji - Khaithan,குவைத்

  தேர்தலுக்கு முன்பே தீர்ப்பு சொல்லிடுவாங்களா தெரியலை......

 • Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்

  அந்தம்மா எது செய்யலேன்னாலும் பரவாயில்ல....அவங்க செஞ்ச மூணு விஷயம் நம்ம எல்லாரையும் எதிர்கால சவ குழியில இருந்து காப்பாத்தி இருக்கு. 1. காவேரி உரிமையை நிலை நாட்டி காவேரி தண்ணீர் பெற்று தந்தது. 2. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வுக்கு போராடி அதனை பெற்று தந்தது. 3. மீதேன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது. 4. கெயில் குழாய் பதிப்பால் விவசாயம் பாதிக்கப்படகூடாது என்று இன்றும் போராடுவது. 5. வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் உள்ளே புகுந்து நம் பொருளாதாரம் சீர்குலையாமல் காப்பற்றியது. திமுகவுக்கு சொம்படிக்கும் நண்பர்கள் கூட மனசாட்சி இருந்தால் இதனை ஏற்றுகொள்வார்... கட்டுமரம் மட்டும் இந்த முறை பதவிக்கு வந்திருந்தால் இவை அனைத்தும் நடந்து தமிழகம் இந்நேரம் பாதி சுடுகாடாக மாறி இருக்கும்....டெல்டா தஞ்சை இந்நேரம் காய்ந்திருக்கும்... முக குடும்பம் ஒரு அமௌண்ட் கையில் பார்த்திருக்கும்...

 • Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்

  எல்லாரும் இங்கே அந்தம்மா உள்ள போகணும்... அதிமுக தோக்கணும்னு சொல்றீங்க...ஆனா அந்தம்மா உள்ள போனாலும் ஜெயிக்கும்(அனுதாப அலை) உள்ள போகலைன்னாலும் ஜெயிக்கும்...(பிரச்சாரம்)....

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  சபாஷ் மீண்டும் டிவி விவாதங்களுக்கு பொறி பறக்கும் செய்தி கிடைத்தது முடிந்தது மீண்டும் துவங்கியது, மீண்டும் முடிவுற்று பின் துவங்கி முடிவுற்று மீண்டும் எழுகிறதே சாக வரம் பெற்றது இந்த கேஸ் முடிஞ்சதுன்னா முடியல. சிந்து பாத் கதை போல நீண்டு கொண்டே போகிறதே

 • sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பிஜேபி யோடு கூட்டணிக்கு சம்மதித்தால் இன்னொரு நீதிபதி தவறாக கணக்கு சொல்வார்.... இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.......

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும்.. குற்றம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. ஆனால் இமாலய அளவுக்கு வெற்று மாயை நிழல்களை வைத்து மறைத்தார்கள், விளைவு கபடம் கால் நொடி என்றாகி இன்று மாயை விலகி குற்றம் சந்திரனின் ஒளியாகி விட்டது.. ஜெயா அவர்கள் தண்டனை பெற்றே ஆகவேண்டும்.. அவர் தண்டனை பெற்று சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டால் மட்டுமே ஊழல் ஒழிய முன்வரும்.. மற்ற ஊழல் வாதிகள் தானாக தங்களின் சொத்துக்களை அரசுடைமை ஆக்க முன் வருவார்கள்.. ஊழல் வாதிகள் குறைந்து ஊழலில் ஈடு பட்டவர்கள் அனைவரும் கம்பி எண்ண ஒரே வழி நமது முதல்வர் முதலாவதாக முன்னோடியாக தண்டனை முதல்வர் என்ற பட்டத்துடன் தண்டிக்கபட வேண்டும்.. வாழ்க தமிழ்.. வெல்க நீதி.. ஒழிக ஊழல்..

 • Ramanathan Viswanathan - chennai,இந்தியா

  பிறந்த நாளில் கோர்ட் மணி திகாரா பறப்பன ஹள்ளி யா என்பது தான் டவுட் சபாஷ் சரியான சகுனம்

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  இந்த வழக்கை நான்கு வாரத்தில் முடித்து, தேர்தல் மனு தாக்கல் செய்வதற்கு முன்பே தீர்ப்பாமே, மனு தாக்கல் செய்ய முடியுமா? தேர்தலின் போது பிரச்சாரம் செய்ய வருவாரா? வர முடியுமா? எல்லாம் அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நோய்நீங்கி நீடுழி வாழ பிரார்த்தனைகள்.

 • மோகன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்

  நீதி தன் கடமையை காசுக்காக நன்றாகவே செய்கிறது... வாழ்க பாரதம்..

 • Rakesh Kumar - Tirunelveli,இந்தியா

  எனக்கு ஒரு சந்தேகம் ஜெயலலிதா குற்றவான்ளினு தீர்ப்பு வந்தா குமாரசாமியும் குற்றவாளிதானே, அப்போ அவர என்ன பண்ணுவாங்க ?

 • Rakesh Kumar - Tirunelveli,இந்தியா

  ஜெயலலிதா கெட்டவங்கதான் ஆனா குடிகார விஜயகாந்த் மற்றும் கேடு கேட்ட கருணாநிதி முன்னாடி நல்லவங்களா ஆயிடுராங்களே. என் வோட்டே இன்னைய நிலவரப்படி ஜெயலலிதாவுக்குதான்.

 • Rakesh Kumar - Tirunelveli,இந்தியா

  இதனால இந்த தீர்ப்பு வரபோற நாள் மற்றும் தீர்ப்பில் இருந்து நம் இந்திய திருநாட்டின் நீதிதுறை எப்படி உள்ளது என்று தெள்ள தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

 • SUNA PAANA - Chennai,இந்தியா

  சீக்கிரம் வழக்கை முடித்து அந்த அம்மாவையும் அவரது உடன் பிறவா சகோதரி மற்றும் அவர்களது குடும்பத்தையும் உள்ளே தள்ளுங்க, வெளில வரமுடியாத அளவுக்கு. கூட நம்ம கருணாவின் மொத்த குடும்பத்தையும் திகார் ஜெயில் ல போடுங்க. கொள்ளை அடித்த மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்யுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்.

 • RAHU RAJ - MADURAI,இந்தியா

  அதிமுக அரசு கடந்த 2011ம் ஆண்டு முதலாகவே செயல்படாத அரசாகத்தான் இருந்து வந்தது. குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு கடந்த ஆண்டு வந்ததற்கு பிறகு, ஒரு பொம்மை அரசாங்கமாகத்தான் செயல்பட்டது. நாஞ்சில் சம்பத் சொல்வது போல, அனைத்து திட்டங்களும், “அம்மா வருகைக்காகவே காத்திருந்தன”. நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் வளைத்து, விலைக்கு வாங்கி, ஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்பதில், அதிமுக அடிமைகளுக்கு அப்படியொரு அபார நம்பிக்கை. கணிதமேதை குமாரசாமி அளித்த தீர்ப்பினால் ஜெயலலிதா விடுதலை ஆன பிறகும் தமிழக அரசு செயல்படாத மந்த அரசாகவே இருந்து வந்தது.“அம்மா உத்தரவுக்கிணங்க” என்ற லாவணிகள், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலங்கள் அனைத்திலும் இருந்தே வந்தன. புதிது கிடையாது. ஆனால், வெள்ள நிவாரணப் பணிகளின் போது, பாடப்பட்ட அம்மா லாவணிகள்தான் பொதுமக்கள் இடையே, குறிப்பாக இளைஞர்கள் இடையே கடும் கோபத்தை எழுப்பின. அதுவரை, ஜெயலலிதாவை பெரிதும் கண்டுகொள்ளாமல் இருந்த இளைஞர்கள் வெள்ள பாதிப்புகளை அதிமுக அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பதை ஊன்றி கவனிக்கத் தொடங்கினார்கள். அதிமுக அடிமைகளின் அம்மா புகழ் லாவணி, அனைத்து தரப்பினரையும் எரிச்சலடைய வைத்தது.விஜயகாந்த் துப்பியது ஊடகங்களின் மீது அல்ல. அவரையும் உள்ளடக்கிய இந்த சமூகத்தின் மீது. தமிழகத்தில் ஊடகங்களின் நிலை அவ்வளவு மோசமாக இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஜெயலலிதாவை தங்கக் கரங்கள் கொண்டு ஊடகங்கள் தாங்கி வருகின்றன. இது குறித்த கோபத்தையே விஜயகாந்த் துப்பி வெளியிட்டிருக்கிறார்.இந்த துப்பல் விவகாரத்தால், அதிகப்பயனடைந்தது ஸ்டிக்கர் சுந்தரியே. வெள்ள பாதிப்புகளை அரசு கையாண்ட விதத்தின் மீதான கோபம் மெள்ள மெள்ள உருமாறி, இன்று விஜயகாந்த் துப்பியதில் வந்து நிற்கிறது. விஜயகாந்தின் பழைய வீடியோக்களை ஜெயா டிவி மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டுகிறது. ஜெயலலிதாவை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சிகள், துப்புவது போன்ற அற்ப விஷயங்களை விவாதப்பொருளாக்கி ஸ்டிக்கர் சுந்தரியின் கரங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.ஆட்சியில் இருக்கும் கட்சிதான் அயோக்கியத்தனமாக கட்சி என்றால், நமக்கு வாய்த்திருக்கும் எதிர்க்கட்சிகள் அதை விட மோசமாக இருக்கின்றன. தமிழகத்தின் தலையெழுத்து, இப்படிப்பட்ட கட்சிகளையெல்லாம் நம்ப வேண்டியுள்ளது. எதிர்காலம் இன்னும் எப்படிப்பட்ட வேடிக்கைகளை எல்லாம் நமக்காக வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

 • MAKARAM - Coimabatore,இந்தியா

  இந்த வழக்கில் கர்நாடக அரசு தலையிடுவதே சரியல்ல. கர்நாடக அரசின் வேலை இந்த வழக்கை தனது மாநிலத்தில் நடத்துவது மட்டுமே. இந்த வழக்கில் கர்நாடக அரசு வாதியும் அல்ல, பிரதிவாதியும் அல்ல. இந்த வழக்கில் முதலில் ஒரு தீர்ப்பு வருகிறது. பாதிக்கப்பட்டவர் நிவாரணம் நாடி மேல் முறையீடு செய்தார். அதில் ஒரு தீர்ப்பு வருகிறது. அதனை பரிசீலிக்க வேண்டுமென்றால் அவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர் உரிமை கோரலாம். கர்நாடகத்துக்கு இந்த வழக்கில் என்ன தொடர்பு இருக்கிறது?

 • Rajavin Parvaiel........ - 600015,இந்தியா

  என்று திருந்தும் இந்த நாடு??? தெரியவில்லை ... இங்கு கருத்து கூறுபவர்கள் ஒன்று ADMK அல்லது DMK. அதனால் தங்களிடம் இதற்கு மேல எதிர்பார்க்க முடியாது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்குது. அதை விட்டு இதற்கு இவ்வளோ கருத்து. 1. தமிழ் நாட்டில் வேலை இல்லாதவர்கள் வேலை பார்க்க விருப்பம் இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகம் ஆனது காரணம் இலவசம்

 • Malaichaaral - Ooty,இந்தியா

  ஆரம்பம் முதல் கர்நாடகாவை மூக்கை நுழைக்க வைத்தது சரியல்ல.. அண்டை மாநில ஊழல் வழக்குகளில் தமிழகம் தலையிட முடியுமா? கட்டுமரம் தான் வாழ நாட்டையே அடகு வைப்பார். சு.சாமி கட்டுமரம் மேல் வழக்கு போட என்ன தயக்கம்? அந்த குடும்பத்திடம் இல்லாத சொத்தா?

 • சத்தியநாராயணன் (சத்தி) - Bangalore,இந்தியா

  குமாரசாமி குளறுபடியால் தப்பிக்க வழியேதும் இல்லை. உச்சநீதிமன்றம் சரியான முறையில் ஜெயலலிதாவுக்கு தண்டனையை அறிவிக்கும் என நம்புவோம்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தங்க தட்டுக்கு என்னிக்குமே தீட்டு கிடையாது. அம்மா புடம் போட்ட தங்கம். பட்டொளி வீசி பதவியில் அமர்ந்து தமிழகத்தை ஆளப்போகிறார்கள். கருணா கும்பல் எத்தனையோ வழக்குகளை போட்டு தோற்றதுபோல இந்த வழக்கிலும் மண்ணை கவ்வப்போகிறார்கள். இது திண்ணம்......

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  காஞ்சி சங்கரராமன் எப்படி தனக்குத்தானே வெட்டிக்கொண்டு இறந்து போனது கொலையாகாதோ அதைப்போல தனக்குத்தானே செல்வம் சேர்ப்பது சொத்து குவிப்பு ஆகாது ஆகவே கேஸ் டிஸ்மிஸ்டு...

 • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

  கனம் கோட்டார் அவர்களே, தமிழ் நாட்டில் இந்த வழக்கு நடந்தால் சரியாகாது என்று கருநாடகதிற்கு மாற்றினார்கள். மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி தான் மாநில அரசால் நியமிக்க பட்ட கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அந்த மாநிலமே மேல் முறையீடு செய்வது எப்படி ஏற்புடையது ஆகும். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் என்பதை மறுக்க முடியாது

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  கலைஞர் குடும்ப சொத்துக்கள் அறிய ஜெயா தொலைகாட்சியையும், அம்மாஜி, சசி சொத்துக்கள் அறிய கலைஞர் டிவி யையும் பார்க்கவும். நீண்ட பட்டியல் வரும். விண்ணை முட்டும். இன்னுமா மக்கள் உங்களை நம்புகிறார்கள் ?????

 • SIVAKUMAR NEYVELI - Abu halifa,குவைத்

  இந்தியாவில் ஊழல் மற்றும் லஞ்சம் ,கொலை போன்ற செயல்களை ஒரு தனி மனிதன் செய்தால் ஒருதண்டனை. அதே தவறுகளை ஒரு அரசியல்வாதி அல்லது ஒரு நடிகன் செய்தால் விடுதலை. நீதிபதியின் பார்வை குற்றம் சுமத்தபட்டவர்களை ஒரு சாதாரண மனிதனாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர அவரை ஒரு நடிகனாக ,அரசியல்வாதியாக,அல்லது ஒரு முக்கிய பிரமுகராக பார்க்க கூடாது. சாதாரண இந்திய குடிமகனின் நம்பிக்கை என்பது நீதிமன்றமே, அதுவும் supreme கோர்ட் என்பது மிகப்பெரிய நம்பிக்கைக்குரியது. பார்ப்போம் .supreme கோர்ட் அதை பூர்த்தி செய்யுமா ?அல்லது தவிடுபொடியாக்குமா??

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  இந்தியா வல்லரசு என்று அறிவிப்பதற்கு முன் தீர்ப்பு வந்திடுமா??

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  இந்த வழக்கின் மூலம் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்திற்கு நல்லது நிறைய செய்து உள்ளார் . தமிழகத்தில் உள்ள உருப்படாத அரைவேக்காடு கட்சிகள் பல இருக்கும் இடம் தெரியாமல் போய் விடும். காங்கிரஸ் கட்சிக்கு சத்தியமூர்த்தி பவனில் சமாதி கட்டப்பட்டு அதை திறக்க ராகுல், சிதம்பரம் , மஞ்ச துண்டு , செல்வார்கள் . இதை ஒன்றை வைத்தே அவல ஆட்சி செய்த மஞ்ச துண்டின் கட்சிக்கும் இதன் மூலம் முடிவுக்கு வந்து விடும் . இரண்டு முக்கிய எதிரி கட்சிகள் இதன் மூலம் தமிழகத்தில் இருந்து ஒழிந்தது

 • ravi - chennai,இந்தியா

  அம்மையார் முதல்வர் என்பதை மறந்து பேசுங்கள் - 66 கோடி அதிகப்படியான சொத்து என்றால் - குடும்பக்கட்சி இரண்டு தலைவர்களின் சொத்துக்கள் குறைந்தது 20000 கோடிக்கு மேல் என்று பலமுறை பத்திரிக்கைகளில் வந்துவிட்டன. பத்திரிகை துறையில் கதை கவிதை நாடகம் எழுதிக்கொண்டு முதல்வராய் 20 வருடம் பணிபுரிந்து ஒருவர் 20000 கோடி சேர்க்க முடியுமா - இதை கேட்க வருமானதுறைக்கும் சட்டத்துறைக்கும் ஒரு துப்பும் இல்லை - எல்லாம் அரசியல் வாதி என்றால் பயந்து ஒதுங்குகிறார்கள் - வெட்கம் மானம் சூடு சொரணை இருக்கும் வொவ்வொரு மனிதனும் வேற்றுமை பார்க்காமல் இந்த குடும்ப கட்சி அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களை ஏன் மறைக்க பார்க்கிறார்கள் - மேலும் சட்டம் ஒழுங்கை பற்றி பேசும் இவர்கள் - தமிழ் இனத்துக்கு செய்த துரோகம் எவ்வளவு - இலங்கை தமிழர்கள் ஒரு லட்சம் பேரை கண்மூடித்தனமாய் கொல்வதற்கு துணை புரிந்த தமிழக ராஜபக்சே டெல்லி ராணிபக்செவையும் மக்கள் மறக்கலாமா - அதை தவிர எத்தனை கொலைகள் கொள்ளைகள் அபகரிப்பு - இவ்வளவையும் சட்டப்படி தண்டிக்கமுடியவில்லை என்றால் அந்த சட்டபுத்தகங்கள் இருந்தென்ன இல்லாமால் போனால் என்ன - சட்டத்தை தங்கள் இஷ்டம்போல் வளைத்து வொவ்வொரு மாவட்டத்திலும் ஏக்கர் கணக்கில் வளைத்துப்போட்டு சாலை பாலம் கட்டுவதில் கொள்ளை அடித்து வாழ்பவர்களை சட்டம் என்ன கிழித்தது - ஒரு நல்ல நேர்மையான நாட்டின் மீது பற்று கொண்ட ஒரு வக்கீல் கூட இல்லையா - இந்த ஒழிங்கீனங்கள் சரியாகும் நேரத்தில் இந்த அம்மையாரை தண்டிக்கலாம் - வொவ்வொரு தெருவிலும் வரிக்கட்டாமால் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்துக்கொண்டு - வருமான வரித்துறை அமைதியாக லஞ்சம் வாங்கிக்கொண்டு போகிறார்களா - அவை எல்லாம் 66 கோடிக்கு மேல் போகும் வோவ்வுவரிடமும் - இந்த அக்கிரமங்கள் சரியாகட்டும் - பிறகு அம்மையாரை தண்டிக்கலாம் - யானை எறும்பை பார்த்து கொஞ்சம் வெயிட்டை குறை என்பது போல் இருக்கு - இங்கு இருக்கும் சில அரசியல் திருடர்களின் பேச்சும் வெறித்தனமான பேச்சும் - எல்லாவற்றுக்கும் தேர்தல் ஒரே ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது - நேரம் சரியில்லை என்றால் நாம் எழுதும் வசனமே நமக்கு எதிராகும் - விடியட்டும் தமிழகம் முடியட்டும் இரண்டு குடும்பகட்சிகள் ஆர்பாட்டம் - ஜெய் ஹிந்த்

 • Mugavai Anandan - Port Blair,இந்தியா

  இறந்தவனை பொதைத்தவனும் இறந்துட்டான் ,அத இருப்பவனும் எண்ணி பாக்க மறந்திட்டான் .என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.இந்த மனிதப் பதருகளை நினைக்கையில்.

 • Divaharan - Tirunelveli,இந்தியா

  அரசியல் கட்சிகள் நீதிமன்றங்களை கேவலபடுதக்கூடாது

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சுப்ரீம் கோர்ட் முன்பு இந்த கேஸ் "நிக்காது". நான் அடிச்சு சொல்றேன்..... "என் அம்மா நிரபராதி"னு தீர்ப்பு வரப்போவுது. அப்ப வெச்சுக்கறேன் ஒங்க எல்லாரையும்.....

 • sundar raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஜெயா காவேரி பிரச்சினையில் கிண்டி கிளங்க எடுத்தார் கர்நாடக காரர்களை. அந்த கடுப்புல முடிஞ்சா அளவு தொந்தரவு கொடுக்குறாங்க. அப்போவே கேரளா , கர்நாடகா தவிர வேற மாநிலத்துக்கு மாற்ற சொல்லி இருக்க வேண்டும்.

 • kailawsh - Pollachi,இந்தியா

  மாநில முதல்வராக இருந்தும் மகாமகம் நீராட முடியாமல் போனது ஒரு நல்ல சகுனம் இல்லை.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  கர்நாடாகாவிற்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என்றனர், வாதத்தை ஆரம்பித்து வைத்து பிரித்து மேய்கிறார்கள். திமுகாவிற்கு சம்பந்தமில்லை என்றானர் அடுத்து அவர்கள் ஆரம்பிக்க இருக்கின்றனர், அப்புறம் சூ சாமி, இறுதியில் அம்மேயின் வழக்குரைஞர்கள், அப்புறம் நீதிமான்கள் குன்காவின் தீர்ப்பை உறுதி செய்வார்கள், தமிழக அரசியல்களம் விறுவிறுப்பாகும்.

 • ravi - coimbatore,இந்தியா

  Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர் .... நீ போயே தீர்ப்பு சொல்லாமே' இல்லை என்றால் திருப்ப மாத்தி சொல்ல போறாங்க.... சேகரா உன்னை எல்லாம் என்னவென்று சொல்லுவது சொல்லு

 • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

  பிஜேபி கூட ஒப்பந்தம் ஆகிட்ட விசாரணையும் தீர்ப்பும் ஒத்திவைப்புன்னு சேதி வரும்....அது வரை இந்த மாதிரி நாடகம் நடக்கும்...அதை மக்களாகிய நாமும் வேடிக்கை பார்க்க வேண்டும்

 • Amma_Priyan - Bangalore,இந்தியா

  பிறந்தநாளில் பிரதமர் personal ஆக தொலை பேசியில் வாழ்த்தியுள்ளார்... நாமும் வாழ்த்துவோம்...வாழ்க தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எங்கள் லட்சிய புரட்சி அம்மா...

 • Jagadeesan V - chennai,இந்தியா

  எல்லோரும் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்களே, கட்டு மரமும் காங்கிரசும் அஞ்சு வருஷம் கூட்டு களவாணிகளாக ஆண்டாங்களே, அப்பவே இந்த கேசை முடிச்சிருக்க வேண்டியதுதானே. வாய்தாவெல்லாம் கிடையாது என்று சொல்லி அந்த சிங்கத்த உள்ளே தள்ளிவிட்டு இருக்க வேண்டியதுதானே. கட்டு மரத்திருக்கு ஆதரவு தருபவர்கள் கொஞ்சம் யோசியுங்கள்.

 • Nannisigamani Baskaran - Chennai,இந்தியா

  தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு தீர்ப்பை சொல்லுங்கள் ?

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  இந்த வழக்கே மஞ்ச துண்டின் சதியில், சிதம்பரம், சோனியா என்ற மூவரும் சேர்ந்து கொண்டு ஒரு அரசியல் எதிரியை நேருக்கு நேர் சந்திக்க முடியாத வெறியில் புனையப்பட்ட வழக்கு. இதற்கு தமிழக ஊடகங்களை கையில் வைத்து கொண்டு மஞ்சதுண்டு ஆடிய கோர ஆட்டம் தான். இது முழுக்க முழுக்க ஜெயலலிதா அவர்களை பழி வாங்க மும்மூர்த்திகள் செய்த சதி.இதில் 18 வருட வழக்கு முடிவுக்கு வந்த பிறகும் கூட, கர்நாடக அரசுக்கு இதில் எந்த விதத்தில் இழப்பு என்று தெரியவில்லை. சோனியா மற்றும் தமிழகத்தில் உள்ள அரை வேக்காட்டு உருப்படாத எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் மறுபடியும் மேல்முறையீடு செய்து உள்ளனர். தேவை இல்லாமல் மஞ்ச துண்டு , சிதம்பரம், சோனியா மூவரும் இந்த வழக்கை இரு மாநில பிரச்சனையாக மாற்றி விட்டனர். விரைவில் இரு மாநில பிரச்சனை பெரிய அளவில் உருவாகும் அளவுக்கு செய்தது இந்த மஞ்ச துண்டும், சோனியா காந்தியும். இதன் பலனை விரைவில் அனுபவிப்பார்கள்.இந்திய, பாகிஸ்தான் உறவு எப்படி உள்ளதோ அந்த அளவிற்கு இரு மாநில பிரச்சனை பெரிதாக கலவரம் வெடிக்கும் அளவுக்கு செல்ல போகிறது.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  ஆரம்பிப்பது மட்டும் முக்கியமல்ல, கணக்கில் பிழை என்றால் சிறப்பு நீதிமன்ற அளித்த தீர்ப்பை உடனே நிறைவேற்ற வேண்டும். மேலும் தவறாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். சாமான்ய மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தாம். அதை புரிந்து கொண்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு.

 • Panchu Mani - chennai,இந்தியா

  அன்பு, நேசம், பாசம், கடமை, அரவணைப்பு, அமைதி,அக்கறை எல்லாவற்றையும் ஒருங்கே கொண்ட வாழும் கடவுள் அம்மா. பிறந்த நாள் வாழ்த்துகள். நூறாண்டு நலமுடன் வாழ இறைவனை வணங்குவோம்.

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  பாஜக, அதிமுகவின் கூட்டணிக்கு அதீத ஆசைபடுகிறது.....காங்கிரஸ் வழக்கம்போல திமுகவின் முதுகில் ஏறிவிட்டது..... தேசிய கட்சிகள் நாட்டை முன்னேற்ற வழியை பார்க்காமல், மாநில கட்சிகளை அடக்குவதிலேயே குறியாய் உள்ளது... திமுக காங்கிரஸ் காலில் சரண்டர்....அதிமுக வும் பாஜக காலில் சரண்டர் ஆக வேண்டும் என்ற உயரிய கொள்ளகையில் பாஜக டபுள் கேம் ஆடுகிறது... ஜெயலலிதாவை ஆட்டிபடைக்க பாஜக விரும்புகிறது... இதற்க்கு கர்நாடக காங்கிரஸ் மூளையாக செயல்பட, திமுக வழக்கம்போல தவில் வாசிக்கிறது... இவர்களின் தப்பாட்டம் தமிழக மக்களுக்கு புரியும்... காவேரி, முல்லைபெரியாறு, மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினையில் அதிரடியாக இருக்கும் ஜெ க்கு இனி ஜெயம் தான்...

 • A shanmugam - VELLORE,இந்தியா

  20 வருடமாக இழுத்தடித்த ஜெயா கேஸ் தீர்ப்பு தத்தளிக்கும் நிலையில் நான்காவது முறையில் "முதல்வர் ஆகபோய்கிறார். ஆகவே ஜெயா கேஸ் = 20 வருடம், therefore 2G அலைகற்றழை உழல் கேஸ் முடிக்க 200 வருடம் ஆகும் அல்லவா?

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  ஜெயலலிதா க்கு இன்று பிறந்த நாள்...வாழ்த்த மனம் இல்லை என்றாலும் தூற்றாமலாவது இருக்கலாமே,...

 • JAY JAY - CHENNAI,இந்தியா

  காவேரி பிரச்சினையில், கர்நாடகா அரசுக்கு எதிராக, ஜெ யின் அதிரடியில் எரிச்சலுற்ற கர்நாடகா காங்கிரஸ் அரசு தமிழக பிரச்சினையில் மூக்கை நுழைப்பானேன்?.. உன்னை கேசை நடத்த தான் சொன்னார்கள்...நடத்தினாய்.... தீர்ப்பு கூறப்பட்டது... உனது மாநில உயர்நீதி மன்றமும் தீர்ப்பு கூறிவிட்டது...அத்தோடு, உனது பிரச்சினை முடிந்தது,.... தமிழகத்தில் எது நடந்தால் உனக்கென்ன?.. உச்ச நீதிமன்றத்தில் வாதாட நீ யார்?... காங்கிரசம், ராஜபக்ஷே, கருணாநிதி, சு சாமி ஆகியோரின் கூட்டு சதி தான் ஜெ மீது போடப்பட்ட வழக்குகள்... ஜெ , இலங்கை தமிழருக்கு ஆதரவானவர்... இது சு சாமிக்கு பிடிக்காது... ராஜ பக்ஷேக்கும் பிடிக்காது....ராஜபக்ஷே க்கு பிடிக்காதது காங் குக்கும் பிடிக்காது...காங் க்கு பிடிக்காதது கருணாநிதிக்கும் பிடிக்காது..... இந்த சுழற்சி வடிவிலான துரோகத்தில் ஜெ ஐ மாட்டி விட்டுள்ளார்கள்... இலங்கை தமிழர் பால் உண்மையான அக்கறை இல்லாதவர்களுக்கும் , , நமது தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தில் உண்மையான அக்கறை இல்லாதவர்களுக்கும் , ஜெ ஒரு சிம்ம சொப்பனம்... ஜெயலலிதா என்றாலே காவேரி பிரச்சினையில் கர்நாடக அரசும், முல்லைபெரியாறு பிரச்சினையில் கேரளா அரசும் மூக்குடை பட்டது.... அதுபோல ராஜபக்ஷே அரசுக்கும் சிம்மசொப்பனம் ஜெ தான்... இந்த தமிழகத்தை சுற்றி உள்ள, முக்கோண கூட்டணியில் , கருணாநிதி இவர்கள் மூவருக்கும் பல்லக்கு தூக்கி தமிழகத்தை வஞ்சிக்கிறார்,... இதில் மீண்டு ஜெ வருவார்... குமாரசாமி சொன்ன தீர்ப்பு தீர்ப்பு தான்.. குங்கா தீர்ப்பை ஏற்றுகொள்பவர்கள், குமாரசாமி தீர்ப்பையும் என்று கொண்டே ஆகவேண்டும்.... இது காலத்தின் கட்டாயம்...[ இந்தியாவில் இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளில் , ஊழல் செய்யாத ஒரு அரசியல்வாதியை கை காட்டுங்கள்... ஜெ செயததாக சொல்லப்படும் ஊழலையும் நாம் நியாபடுத்தலாம். இல்லையேல் கருணா குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஊழல் குற்றசாட்டுகளில் உள்ளே தூக்கி போடுங்கள் ..ஜெ தவறு செய்ததாக ஒத்துக்கொள்ளலாம்... தயா - கலா மீது இன்னும் குற்றபத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை.... தேசிய கட்சிகளுடன் சேர்ந்து, தமிழருக்கு எதிராக கருணா கொட்டமடிப்பதை தமிழக மக்கள் பொருத்துகொண்டிருக்க்க மாட்டார்கள்... ஜெ க்கு இன்று பிறந்த நாள்... இந்த வருடத்தில் அவர் மாபெரும் வெற்றி பெறுவார் ]

 • sankaranarayanan - tirunelveli,இந்தியா

  வழக்குக்காகாக அம்மா அவர்கள் வளைந்து கொடுக்கவில்லை - ஆனால் இந்த கபோதி கரு விழாத கால்கள் இல்லை - இந்த உண்மை எல்லா தமிழனுக்கும் தெரியும்

 • RRavichandran - Doha,கத்தார்

  நீதிபதி ஒரு நாட்டு மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.சத்திய பிரமாணம் எடுக்கும் போது சரியான தீர்ப்பு சொல்லுவேன் என்று. அந்த சரியான தீர்ப்பு நமது நாட்டில் கிடைத்தால் சாதாரண நல்ல மக்களின் பிரச்சினை தீரும். தயவு செய்து நேர்மையாக நடக்க முயற்சி எடுத்தால் நாடு நலம் பெரும்.

 • Panchu Mani - chennai,இந்தியா

  சுப்ரீம் கோர்ட் பசவராஜ் & அணில் கேஸ் சில் மிக தெளிவாக கர்நாடக ஹை கோர்ட் கொடுத்த ஆர்டர்ஐ உறுதி செய்திருக்கிறது. (case appeal 6974 - year 2013 citation 2013- 14 scc 811) இந்த கேஸ் தவறான கணக்கு மற்றும் கர்நாடக ஹை கோர்ட் இந்த கேஸ் ஐ நடத்திய கால தாமதத்தின் அடிப்படையில் கர்நாடக ஹை கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் இல் அப்பீல் செய்யப்பட்டது. (order dated 10.6.2011 - ஹை கோர்ட் ஒப் கர்நாடகா at Gulbarga in MFA Nos.10765 and 10766 - Page 2) Section 5 of the Limitation Act, 1963 - கோர்ட் நடவடிக்கைகள் படி கேஸ் நடத்தும் கால தாமதத்தை உறுதி செய்கிறது. Article 14 of the constitution தவறான கணக்கு மற்றும் கால தாமதம் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மீண்டும் உருவாக்கம் செய்யும் போது இன்னொரு தவறான தீர்ப்பு வழங்கப்பட கூடாது என்கிறது. தீர்ப்பு தவறு என்று மேற்கோள் காட்டும்போது 'postive aspect" இருக்க வேண்டும் என்கிறது. 'நெகடிவ் equality' இருக்க கூடாது என்று தெளிவாக சொல்கிறது. Thus, if some other similarly situated persons have been granted some relief/ benefit inadvertently or by mistake, such an order does not confer any legal right on others to get the same relief as well.If a wrong is committed in an earlier case, it cannot be perpetuated. Equality is a trite, which cannot be claimed in illegality and therefore,cannot be enforced by a citizen or court in a negative manner. If an illegality and irregularity has been committed in favour of an individual or a group of individuals or a wrong order has been passed by a Judicial forum, others cannot invoke the jurisdiction of the higheror superior court for repeating or multiplying the same irregularity or illegality or for passing a similarly wrong order. A wrongorder/decision in favour of any particular party does not entitle any other party to claim benefits on the basis of the wrong decision. Even otherwise, Article 14 cannot be stretched too far for otherwise it would make functioning of administration impossible . ( Vide: Chandigarh Administration & Anr. v. Jagjit Singh & Anr., AIR 1995 SC 705, M/s. Anand Button Ltd. v. State of Haryana & Ors., AIR 2005 SC 565 K.K. Bhalla v. State of M.P. & Ors., AIR 2006 SC 898 and Fuljit Kaur v. State of Punjab, AIR 2010 SC 1937). Manindra Land and Building Corporation Ltd. v. Bhootnath Banerjee & Ors., AIR 1964 SC 1336 Lala Matadin v. கேஸ் லும் கணக்கு என்பது தீர்ப்பை வழங்குவதற்கான ஒரு கருவி என்றும், தீர்ப்பை பார்க்க வேண்டுமே தவிர உத்தியை அல்ல என்றும் மிக தெளிவாக சொல்லி இருக்கிறது. No court could be justified in condoning such an inordinate delay by imposing any condition whatsoever (A. Narayanan, AIR 1970 SC 1953 Parimal v.Veena @ Bharti AIR 2011 SC 1150 and Maniben Devraj Shah v. MunicipalCorporation of Brihan Mumbai AIR 2012 SC 1629.) - சுப்ரீம் கோர்ட் ( BS சௌஹான், போதி ) மிக தெளிவாக இதை சொல்லி ஹை கோர்ட் களுக்கு தீர்ப்புகளுக்கு எதிரான கேஸ் ஐ தள்ளுபடி செய்திருக்கிறது. மேற் கண்ட கேஸ் களின் அடிப்படையில் இந்த கேஸ் தீர்ப்பும் அம்மாவுக்கு சாதகமாகத்தான் முடியும்.

 • Veerasekar - Tokyo,ஜப்பான்

  இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல் செய்துகொண்டு தான் பதவியில் இருக்கின்றனர். அரசியல்வாதிகள் ஊழல் செய்தது உறுதியானால் அவர்கள் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை அரசாங்கம் கையகபடுத்தவேண்டும். அவர்களை சிறையினில் அடைப்பதினால் எவ்வித பயனும் இல்லை. நமது நாட்டில் தான் பல்வேறு புலனாய்வு நிறுவனங்களை அரசாங்கம் அமைத்து உள்ளதே, அவர்கள் தான் ஊழல் செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜெயலலிதா மீது குற்றம் சுமத்தி உள்ளவர் அப்பழுக்கற்ற கைக்கு சொந்தக்காரரான திமுக தலைவர். இதில் இருந்து இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பது தெள்ளதெளிவாகிறது. அதிமுக தலைவியை சிறையில் அடித்தால் திமுகா என்ற திமிங்கலம் தமிழகத்தை அபகரித்து விடும்.நீதிபதிகள் தான் தமிழக நிலை கருதி ஜெயலலிதா அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்யவேண்டும். ஜெயலலிதா அவர்கள் ஊழல் செய்தால் அந்த சொத்துக்களை பறிமுதல் செய்துகொண்டு அவரை விடுதலை செய்யவேண்டும்.

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  இன்று அவரது பிறந்த நாள். பிறந்த நாள் வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே (தப்பிதேண்டா சாமி)

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  தீர்ப்பு எப்படி வந்தாலும் ஜெ-க்கு கொஞ்சம் கௌரவ வெற்றி கிடைக்கும்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்னடா இது நமக்கு வந்த சோதனை, போற போக்கை பாத்தா ரெண்டு ஊதுவத்தி மிசினு, ரெண்டு கொசுவத்தி மிசினு, ரெண்டு தைய மிசினுன்னு, மிசின் மிசினா வாங்கி அனுப்ப வேண்டி வந்துடும் போலயே. சரி, அப்புடியே அம்மாஜி உள்ள போனாலும் அத வேற எவனாச்சும் சொல்லட்டும். இந்த கர்நாடகாகாரண மூடிகிட்டு பொத்திகிட்டு இருக்க சொல்லுங்க. அங்க என்னமோ வாழுறா மாறி ஆட்டிக்கிட்டு வந்துட்டானுக நம்ம ஊர்ல நாட்டாமை பண்ண. நான் நினைக்கிறேன் கரநாடகா தண்ணிய வாங்கி கொடுத்ததுல செம வெறி ஏறி திரியிராணுக போல. பேசாம நாமளும் ஒரு சர்வக்னர் சிலை வெச்சு இருக்கலாமோ?

 • kailawsh - Pollachi,இந்தியா

  மொத்தமாக 25 கோடி செலவில் 21 சொகுசு மாளிகைகள் கட்டப்பட்டதாக சொன்னதை குமாரசாமி 5 கோடிகள்தான் என்று கணக்கிட்டுள்ளார். எது எப்படியோ, நான் தனியானவள், எனக்கு பிள்ளையா, குட்டியா, மேற்கு வங்கத்தையே நான்தான் சுமக்கிறேன் என்று சொல்லும் மம்தாவுக்கு ஒரு ஓட்டு வீடு தான் சொந்தமாம்.

 • kailawsh - Pollachi,இந்தியா

  தேர்தலுக்கு முன் தீர்ப்பு வந்துவிடும்...தனி விமானம் தயாராக இருக்க வேண்டும்.

 • Barakathulla - Singapore,சிங்கப்பூர்

  இந்த மாதம் அம்மா ?...அடுத்த மாதம் கனி ......தூக்கி உள்ள போடுங்கப்பா ?. அம்மாவும் கட்டுமரமும் கூட இந்த விஸ்கிகாந்தும் தொலைந்தால் தமிழகம் உருப்படும் ...ஆண்டவா தமிழ்நாட்டை காப்பாத்து

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  சேர்ந்தே இருப்பது கழகமும் ஊழலும்....பிரியாதது அம்மாவும் தண்டனையும்....

 • அம்பை சுதர்சனன் - கொடைக்கானல் ,இந்தியா

  இன்னும் எத்தனை தடவை தான் ஜே தரப்பு கோர்ட்டுகளுக்கு போகுமோ? நீதி வழங்குங்கள் பகவான்களே

 • K.Sugavanam - Salem,இந்தியா

  கச்சேரி ஆரம்பம்..பல அபஸ்வரங்களையும்,தப்பு தாளங்களையும்,கீச்சு குரல்களையும் கேட்கலாம்..ஜாலிலோ ஜிம்கானா..

 • Rama Subbu - thiruvarur,இந்தியா

  அதிரடி என்ற தலைப்புக்கும் செய்திக்கும் என்ன சம்பந்தம் ,,,,,,,,,,,,,,புரியலையே ?

 • Yen Yem - Singapore

  எந்த ஒரு அரசியல் தலைவரும் இப்படி ஒரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வரலாறுகள் இல்லை...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  சுப்ரீம் கோர்ட் தானே........என்ன தான் வாதம் பண்ணினாலும் வாதாடுபவர்களுக்கு வாதம் வரும் வகையில் தீர்ப்பு மேலானோர் மனசாட்சிப்படி தான் வரும். தற்கால அதிரடிகளை கண்டு சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான். மக்கள் தான் தங்கள் அடிமைத்தனத்தை விட்டு சரியான தீர்ப்பை தர வேண்டும்.

 • Nava Mayam - New Delhi,இந்தியா

  உள்ளே வெளியே நேரம் வந்து விட்டது...உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ளே ...ஜனநாயக மக்கள் மன்ற தீர்ப்பில் ஆட்சியை விட்டு வெளியே...

 • தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்

  பச்சையம்மா திருடியதும்...கொமாரசாமி வைத்து தீர்ப்பு வாங்கப்பட்டதும்.... அனைவரும் தெரிந்த ஒன்று....அதில் வாதம் ஒன்றும் இல்லை....தற்போதைய ஒரே கேள்வி...தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி கொமாரசாமியா அல்லது குன்ஹவா .....பொருளுக்கு விலை போபவரா அல்லது நேர்மைக்கு துணை போபவரா ? இந்த இரண்டில் எது என்பதை பொறுத்தே தீர்ப்பு அமையும்....அந்த தீர்ப்பை பொறுத்தே நீதிபதி யார் என்பது தெரியும்

 • aravind - chennai,இந்தியா

  தீர்ப்பு எப்பொழுது வரும்?

 • Tamilan - Tamil Nadu

  இந்த நேரத்தில் பாஐக அதிமுக வுடன் பேரம்பேசி பாதி இடங்களை பெற்று தேர்தலில் போட்டியிட்டால் உறுதியாக மாபெரும் வெற்றி கிடைக்கும். அதிமுக அடிமை சட்டமன்ற உறுபபினர்களை பாஐக பதவிகொடுத்து கட்சி தாவ வைத்து பாஐக ஆட்சியை கைபற்றலாம். ஐந்தாண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து பாஐக நல்ல பெயரெடுத்தால் தமிழகத்தில் பாஐக செல்வாக்கு பெரும்.

 • குரு. சிவசுப்பிரமணியன் - Chennai

  எப்படி இருந்தரலும் அம்மா கட்சி அல்லது அப்பா கட்சிதான் நமக்கு. மாற்றமில்லை

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இந்த 66 கோடிக்கே இப்படியா? கொடநாடு எஸ்டேட் வாங்க பணம் எப்படி வந்தது? இதன் மீது யார் வழக்கு தொடுப்பது? திமுக தேமுதிக உட்பட யாருக்கும் தைரியம் இல்லையா இதனை கேட்க? எப்படி இருந்தாலும் திமுக கேட்காது..ஏன்னா அவங்க மறைமுக கூட்டாளிகள்.......மக்கள் நல கூட்டணி ஜெயிச்சு வந்தா ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்னு வைகோ சவடால் விடறார்....அவர் கொடநாட்டின் மீது கை வைப்பாரா?

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  உச்சநீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்துவிட்டால் என்னாகும்?..

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  நான் நேற்றைக்கு தான் சொன்னேன்..கனிமொழி ஜெயா ரெண்டு பேரும் ஒரே விமானத்துல டெல்லிக்கு பரப்பாங்கன்னு...வந்துட்டா சேதி? இப்போ தெரியுதா ஏன் எல்லா கட்சியிலயும் தேர்தல் வேலை பரபரப்பா போயிகிட்டு இருக்கும்போது அம்மா அமுக்கி வாசிக்கிராங்கன்னு? நேற்றைக்கு ஒரு ஆளு சொன்னாரு ஸ்டிக்கர் அம்மா 5 வருடமா மக்கள் மனசுல இருக்காங்களாம் தேர்தல் வேலை பார்க்க தேவையில்லையாம், படுத்துகிட்டே ஜெயிப்பான்கலாம்.............உங்கம்மா தேர்தல் வர்றப்போ ஜெயில்ல படுத்துகிட்டே தோப்பாங்க........எப்படி விஜயகாந்த் கிங்கா வருவாருன்னு கேட்டிங்கள்ள? இப்ப தெரியுதா எப்படின்னு..............கனிமொழி ஜெயலலிதா இருவரும் அறை தோழிகளாக இருப்பார்கள்......

 • Panchu Mani - chennai,இந்தியா

  குமாரசாமியின் கணக்கில் பிழை உள்ளது என்று கர்நாடக அரசு கருதினால் அது கேஸ் போட வேண்டியது calculator மீதும், மற்றும் அதனை வழங்கிய கர்நாடக அரசு துறை மீதும். தீர்ப்பின் மீது அல்ல. இதைதான் சுப்ரீம் கோர்ட் முந்தைய தீர்ப்புகள் தெள்ள தெளிவாக வழங்கி இருக்கின்றன. இதில் வெறும் மனுதாரர்கள் (karnataka arasu) தீர்ப்பினை மாற்ற வேண்டும் என்ற நெகடிவ் எண்ணப்படி (negative aspect) வழக்கை நடத்துவதால் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் இல் தோற்று போகும்.

 • Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்

  கர்நாடக அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. இது அரசியலில் பழிதீர்க்கும் முயற்சியே. சிறப்பு நீதிமன்றம் அமைக்க அன்றைய திமுக அரசும் காங்கிரசும் சேர்ந்து நடத்திய நாடகமே இது. அதிலும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கொடுத்த தீர்ப்பு என்பது உலக மகா கேவலம். பேச்சுக்கு அம்மா அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும்..பிகார் லாலு 1000 கோடி ஊழல் செய்ததில் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை 3 ஆண்டுகளும் 25 லட்ச ரூபாய் அபராதமும் ஆகும்..அதனை ஒப்பீடு செய்தால் இங்கே குற்றமாக ஜோடிக்கப்பட்ட 66 கோடி ரூபாய்க்கு 100 கோடி அபராதமாம்..4 வருட தண்டனையாம்..இது இங்கே ஒரு பேராயரை சந்தித்து சென்றபின்னர்..கொடுக்கப்பட்ட ஸ்கெட்ச் படியே நடந்துகொண்டார் என்கிற சந்தேமானது சில தினங்களுக்கு முன்னர் நிரூபணமானது. அதாவது அந்த குன்ஹா மீதான மோசடி செயல்கள் வெட்டவேளிச்ச்சமாயின..அவர் மீது தற்போது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஒன்றே போதுமானது சிறப்பு நீதிமன்றம் சிரிப்பாய் தீர்ப்பு கொடுத்துள்ளது என்பதை அறிந்துகொள்ள. குமாரசாமி அவர்களின் கணக்கு தவறாக இருக்கலாம்..ஆனால் அவரது தீர்ப்பில் பல்வேறு அம்சங்களில் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அவர் நிரூபித்துள்ளார்..உதாரணத்திற்கு வீட்டை நிர்மாநித்ததில் ..அங்கே பதிக்கப்பட்ட தரையில் பதிக்கும் கல்லின் விலை சதுர அடிக்கு 112 என்று அன்றைய மார்கெட் நிலவரத்தை இந்த திமுக அரசு செய்த தகிடுதித்தோம் மூலம் ஓர் சதுர அடிக்கு 20000 ரூபாய் என்று கணக்கிட்டுள்ளனர். அதாவது சொத்து மதிப்பு கூட்டி காட்டிட செய்திட்ட சதி இது போல பல நூறு சதிகள்..அதனால் சிறப்பு நீதிமன்றம் அமைத்ததே அரசியல் பழிவாங்குதல் என்பது நிரூபணம் ஆகிறது. கர்நாடக காங்கிரசின் முதலமைச்சர் மீதே பல்வேறு புகார்கள் என்று உள்ள நிலையில் அடுத்த மாநில முதல்வர் மீது புகார் வாசிக்க வந்துவிட்டார் இந்த வழக்குரைஞர்..வீண் விதண்டாவாதமாகவே புரிகின்றது..அதிரடி என்று சொல்ல என்ன இருக்கின்றது இந்த செய்தியிலே? அதிரடி பொய் ஆரம்பம் என்றே போட்டிருக்கலாம்..

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  இந்த CASE ஒரு பக்கம் இவர்களை இழுத்து கொண்டு இருக்கிறது இப்படி, இதில் இருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்பது ஒரு பக்கம்???...., மறு பக்கமோ அங்கே மீண்டும் வர வேண்டும் எப்படியாவது என்று ஒரு இடத்தில பச்சை குத்துவதும், பல இடத்தில் கோமாதா பூசை என்று செய்வதுவும்???.... ஆம், கடவுளை வணக்கும் ஆன்மிகவாதிகள் முதல் கடவுளை மறுக்கும் நாத்திகவாதிகள் வரை, தொண்டர்களும் அதற்கு போட்டியாக குண்டர்களும் கோமாதாவுக்கு பூசை செய்து கொண்டு இருக்கிறார்கள் எப்படியாவது வரவேண்டும் என்று???... ஆனால் இன்று எந்த கோவிலில் இருக்கிறதாம் இந்த கோமாதா எங்கள் குலமாதா என்று சொல்லுகின்ற உண்மையான பசு மாடுகள்.... சிவனின் முன் இருக்கும் நந்தி முதல் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு காளை வரை இருக்கும் நாட்டு மாடுகளுக்குதான் திமில் என்று ஒன்று இருக்கும். இன்று பால் நிறைய வேண்டும் என்று, தின்னு கொளுத்த ஒரு உயிரின் ஜீனை எடுத்து அந்த பன்னாட்டு மாடுகளுக்கு செலுத்தி, அந்த கலப்பட பன்னாட்டு ப.....களை இறக்குமதி செய்துவிட்டு அதனை கோவிலில் பசு மாடத்திலே கட்டிவிட்டு அதுதான் இது என்று அந்த பன்னாட்டு ப.....களை நமது குலமாதாவாக வணக்கியது மட்டுமல்லாமல், அதனின் பாலை சிவனுக்கும் பார்வதிக்கும் என்று பூஜை செய்தார்களோ அன்றே சிவன் பார்வதியை கூட்டிகொண்டு அந்த விண்ணுலகத்துக்கு ஓடி விட்டார், நீங்கள் என்று சரியாக பூஜையை செய்கிறீர்களோ அன்றுதான் நான் இந்த பூலோகத்துக்கு திரும்புவேன் என்று சொல்லிவிட்டு போனவர் போனவர்தான்???... இன்று வரை நாமும் திருந்தவில்லை, அவரும் திரும்பவில்லை???... சரி அவர் போனால் போகட்டும், வந்தால் வரட்டும்???... அப்புறம் பார்த்து கொள்ளலாம்???... அவர் வந்தால் என்ன, வரா விட்டால் என்ன, கோவிலுக்கு வர வேண்டியது வந்தால் போதும் என்று விட்டு விட்டார்கள் இன்று???... அதற்கு முன்பு ஒரு உண்மையை சொல்லி விடலாம்???... இந்து சாஸ்திரப்படி ஒரு மனிதனுக்கு ஆயுட்காலம் என்பது 120 ஆண்டுகள். அதாவது ஒரு மனிதனை இந்த 9 கோள்களும் ஆட்சி செய்யும் மொத்த காலம்தான் இந்த 120 ஆண்டுகள். அதாவது சூரியன் - 6 ஆண்டுகள், சந்திரன் - 10 ஆண்டுகள், செவ்வாய் - 7 ஆண்டுகள், ராகு - 18 ஆண்டுகள், குரு - 16 ஆண்டுகள், சனி - 19 ஆண்டுகள், புதன் - 17 ஆண்டுகள், கேது - 7 ஆண்டுகள், சுக்கிரன் - 20 ஆண்டுகள். ஆக இந்த 9 கிரகங்களும் முழுவதுமாக நம்மை சுற்ற வேண்டும். ஆக, இதனை கூட்டினால் மொத்தம் 120 ஆண்டுகள். இந்த ஒவ்வொரு கிரகங்களும் நம்மை ஆட்கொள்வதுதான் திசை என்று சொல்லுகிறோம். இதில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள், மற்ற எழும் நிஜ கிரகங்கள். அப்படி என்றால் இதை தவிர வேறு கோள்கள் இல்லையா என்றால் இருக்கிறது. அப்படி என்றால் அதனை நமது முன்னோர்கள் ஏன் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இந்த சனி கோள் வரை மட்டும்தான் இந்த சூரிய ஒளியானது பட்டு மீண்டும் பூமிக்கு பிரதி பலிக்கிறது. அதனால்தான் இந்த கோள் வரை உள்ளதுவரை மட்டும்தான் தனி மனித வாழ்க்கையின் சுப, அசுப மாற்றத்தில் பங்கு கொள்கிறது என்பதினால்???.... ஆகா இதை வைத்துதான் இவனுக்கு சனி திசை, அவனுக்கு சுக்கிர திசை என்று சொல்லுவதும் இப்படிதான் . இதில் இருந்து புத்தி, அந்தரம், சூட்சுமம் என்று உள்ளே அழமாக பிரிக்கிறோம் அது ஒரு கடல். ஆக, இந்து மதத்தில் ஆன்மிகம் என்பதும், இன்றைய உலகத்தில் இதனை அறிவியல் என்பதுவும் ஒன்றே???.... ஆக இப்படிதான் வாழ்ந்து 100 வயதில் கல்யாணம் செய்தார்கள், இன்று அதனை 80 வயதாக குறைத்து விட்டார்கள், ஏன் என்றால் இன்று 60-ல் கொண்டாடினாலே பெரிய விசயம்தான்???.... சரி இப்படி 120 ஆண்டுகள் வரை வாழ வேண்டுமானால் நமது முன்னோர்கள் குடித்த அந்த நாட்டு பசும் பாலை சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே காலை எழுந்தவுடன் அரை லிட்டர் மாலை அரை லிட்டர் தினமும் குடித்து வந்து இருந்தால் எந்த நோய் நொடியும் இல்லம் வாழ்ந்து இருக்க முடியும் அவ்வளவு ஆண்டுகள். அதாவது அந்த மாடுகள் இந்த மாட்டு தீவனந்தையும், தீவன புல்லையும் சாப்பிடக் கூடாது அவ்வளவுதான். ஏன் என்றால் இந்த இரண்டிலையும் GROWTH HORMONE அதிகமாக இருக்கிறது என்பதுதான். இது என்ன செய்யும் என்றால் உதரணத்துக்கு GROWTH HORMONE - செலுத்தப்பட்ட ஒரு மாமிசத்தை சாப்பிட்டால் என்ன ஆகும் என்றால் அது CELL GROWTH-ஐ அதிக படுத்தி விடும். அதாவது வளர்சிதை மாற்றதிலேயே (METABOLISM) தலை இட்டு CELL - வளர்ச்சியை அதிகப்படுத்தி விடும். எல்லா விதமான வளர்சிதை மாற்றத்தினையும் ஒரு ஒழுங்கு அமைப்பின்றி உடம்பில் மாற்றி அமைத்து விடும்???... அதாவது ஒரு உதரணத்துக்கு இரத்தத்தில் இரத்த வெள்ளை அணுக்கள் ஒன்று இறந்து இன்னொரு வெள்ளை அணுக்கள் பிறக்க வேண்டும். இதன் ஆயுக்காலம் என்பது ஒரு 10-20 நாட்கள் என்று வைத்து கொள்ளுங்கள். ஆனால் இந்த 10-20 நாள் நாட்களுக்குள் இறக்க வேண்டிய செல்லானது என்பது 30, 50, 100 நாட்கள் என்று அதிகம் ஆகி விடும் இறப்பதற்கு, மேலும் அந்த நாட்களுக்கும் பிறக்க வேண்டிய CELL - லும் செல் உற்பத்தி அதிகம் ஆகி விடும். இப்பொழுது BLOOD COUNT அதிகம் ஆகத்தான் இருக்கும். இதைத்தான் BLOOD CANCER என்று சொல்லுகிறோம். இப்படித்தான் புதுசு கண்ணா புதுசுன்னு தினம் தினம் எதாவது புதுசு புதுசா வருது, நமக்கு அழியா விருந்தாலிய வருது தாலி அறுக்க???... இப்பொழுது இவர் அல்ப ஆயூசில் போய்விட்டார். இதற்கு கிரகங்கள்தான் என்ன செய்ய முடியும்???.... இல்லை கடவுள்தான் என்ன செய்ய முடியும்???.... சொந்த காசில் சூனியம் வைத்து விட்டு யார்தான் என்ன செய்ய முடியும்???... இப்படிதான் நமது நாட்டிலேயே விளையும் எண்ணையை உபயோகிக்காமல் எங்கையோ விளையும் KACHA எண்ணெயின் எச்சத்தை வடிகட்டி கிடைக்கும் செயற்கை எண்ணையை யாரோ சொன்னார்கள் நல்லது என்று சொன்னதை கேட்டு குடித்து விட்டு இப்ப இதயத்த வலிக்குது, இடுப்ப வலிக்குது என்று புலம்புவதும், HEART ATTACK -ல் போவதும் ???... இப்படி எத்தனையோ சொல்லலாம் உதரணமாக.... சரி இப்பொழுது விசயத்துக்கு வருகிறேன் நான். இங்கு நோய் இல்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்வது எப்படி என்பது அல்ல பிரச்சனை???... இவ்வளவும் எல்லோருமே செய்கிறார்களே பூஜை, ஹோமங்கள் என்று இந்த பன்னாட்டு ப.....களை வைத்து கோமாதா பூஜை என்று, அப்புறம் நினைத்தது நடக்கவில்லை என்று சொல்லி ஒரு கூட்டம் தெய்வக் குத்தம் என்று சொல்லும், ஒரு கூட்டம் தெய்வமே இல்லை என்று தெய்வத்தை குத்தம் சொல்லும்????.... சரி, ஒருவேளை இந்த கேஸ்க்கும் இந்த பன்னாட்டு ப.....களை வைத்து ஒரு பரிகாரம் செய்யுங்க எல்லாமே சரியாகி விடு(அம்)மா என்று பார்க்கலாம்????... ஏன்னா அது கூட அம்மா-ன்னுதான் சொல்லுது????....

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இன்றைய சொத்துக்களை கணக்கில் கொண்டால் தோழியின் சொத்துக்கள் மட்டுமே 1 லட்சம் கோடியை தாண்ட அதிக வாய்ப்பு இருக்கிறது... மானங்கெட்ட அடிமைகளுக்கு ஊழல் பிரச்சினை அல்ல...

 • $$$$ - $$$$,இந்தியா

  நீதிபதி தவறிழைத்திருந்தால் ?...அதுவும் வேண்டுமென்று தெரிந்தே ...இந்த தவறு செய்ததாக கருத வேண்டியுள்ளது.....அதுக்கு என்ன தண்டனை? .எம் ஜி ஆர் , கருணாநிதி ஆகியவர்களால் இன்று வரை தமிழ் நாடு தள்ளாடுகிறது...விதி...

 • sam - Malaysia

  நீதிபதி குமாரசாமி, அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் மூலமாக ஜெயலலிதாவிடமிருந்து சூட்கேசுகளை வாங்கிக்கொண்டு கூட்டுப்புள்ளியில் தவரவிட்டதுபோல் நாடகமாடி ஒரு தப்பான தீர்ப்பைக்கொடுத்து நீதிதுறைக்கு ஒரு நீங்காத கரையை ஏற்படுத்தி விட்டதாக நடுநிலையாளர்களின் கணிப்பு. பத்தோன்து ஆண்டுகளாக வாய்தா வாங்கியது போதாது எனறு இன்னும் வாய்தா கேட்உக கொண்டிருக்கறார் இந்த வெட்கமில்லா குற்றம் சாட்டபபட்டவர்

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  கனம் நீதிபதி அவர்களே உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை. அதில் எந்த சட்டம் நல்ல சட்டமோ அந்த சட்டத்தின் படி தண்டனை கொடுத்து இந்தமுறை அந்தமான் தீவில் கொண்டு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

 • C Suresh - Charlotte,இந்தியா

  தமிழர்களுக்கு பயனில்லாத இந்த வழக்கை, வேலையிலாமல் ஆஜராகும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வழக்கை நீதி மன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதில் கர்நாடக மக்களுக்கும் அரசுக்கும் என்ன லாபம் அல்லது நஷ்டம் இருக்கிறது.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பாட்டிக்கு நல்ல நேரம் வருது...

 • கைப்புள்ள - nj,இந்தியா

  குமாரசாமி தீர்ப்புதான் மிகவும் சரியானது.

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  நண்பர் கைபுள்ள அவர்களே, உங்கள் கருத்தை மிகவும் ரசித்து படிப்பேன். உங்களின் இந்த கருத்து மிகவும் அருமை.

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  இதில் என்ன அதிரடி இருக்கிறது என்றே தெரியவில்லை. எதிர் கட்சி வக்கீல்கள் இப்படி தான் வாதாடுவார்கள். இன்னும் ஒரு வாரத்தில் ஜெயா வழக்கறிஞர்களின் வாதம் தொடங்கிவிடும். எதிர் கட்சிகளின் வாதத்தில் கூறியதையே தான் கூறுகிறார்களே தவிர ஆதாரத்தை சமர்ப்பிபதில்லை. பெட்ரோல் பேட்டா அன்பழகன் கூட குமாரசாமியிடம் சமர்பித்த வாதத்தில் குன்ஹா கொடுத்த தீர்ப்பை உறுதி செய்யவேண்டும் என்று தான் கூறினாரே தவிர, அதை உறுதி படுத்த எந்த வித ஆதரங்களையும் சமரபிக்கவில்லை. மேலும் எதோ குமாரசாமி கணக்கு பிழையை மட்டுமே வைத்து விடுதலை செய்ததாக இவர்கள் நினைக்கிறார்கள். கணக்கு பிழை வெறும் 10 சதவிகிதம் தான், மீதி 90 சதவிகிதம் வேறு காரணங்கள் இருக்கிறது, அது இதோ. 1. இவர்களின் வாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி எப்படி இத்தனை சொத்துக்கள் சேர்த்தார் என்பதே, அதற்கு குமாரசாமி, அவர் ஜெயா அவர் வாழ்ந்த இது நாள் வரை வெறும் ஒரு ரூபாய் சம்பளம் மட்டும் தான் வாங்கினாரா என்று கேள்வி எழுப்பினார், அதற்குக் ஜெயா வக்கீல், அரசியலுக்கு வந்த பிறகு, முரசொலி மாறனை காப்பாற்ற ஒரு ரூபாய் மட்டும் பெற்று கொண்டு நடித்து கொடுத்து அவர் இழந்த சொத்தை மீட்டு கொடுத்தார். மேலும் அவர் நேராக அரசியில் நுழைந்து சொத்துக்கள் சேர்க்கவில்லை, அரசியலுக்கு வருவதற்கு முன்பே சுமார் 200 படங்கள் நடித்துள்ளார். இப்போது வெளிவரும் படங்கள் ஹிட் ஆனால், அதில் நடித்த நடிகர்கள் பல கோடி சொத்து சேர்த்துவிடுகிறார்கள், அப்படி இருக்கையில் MGR உடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார், அந்த படம் 300 நாட்களுக்கு மேல் ஓடியது, அந்த படத்தில் அவர் 2 லட்சம் சம்பளம் 1960 களில் வாங்கினார், இப்போது அதன் மதிப்பு 3 கோடிக்கு மேல் இருக்கும், அதே போல சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன், SSR , போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், அப்போது 2 லட்சம் கூட வேண்டாம், ஒரு படத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் என்று வைத்து கொண்டாலும் 200 படங்களுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார், இன்று அதன் மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும். மேலும் 1960 களில் அவர் நடித்து சம்பாதித்த பணத்தில் சென்னையில் 3000 சதுர அடி வீட்டு மனை 5000 கொடுத்து வாங்கினார் என்றால் இன்று அதன் மதிப்பு எத்தனை கோடி இருக்கும், அது போல பல சொத்துக்கள் அவர் நடித்து சம்பாதித்து வாங்கியது, அதை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, பொத்தாம் பொதுவாக ஒரு ரூபாய் சம்பளம் என்றால், அவர் நடித்து சம்பாதித்த பணம் எங்கே சென்றது என்று நீங்கள் யோசிக்கவேண்டும் யுவர் ஆனர் என்று வாதிட்டார். மேலும் ஜெயாவின் அம்மா சந்தியா சாரதா என்கிற பிரபல படங்களை போல பல படங்கள் நடித்துள்ளார், அப்படி என்றால் 66 கோடி ரூபாய் சொத்து சம்பாதிக்க முடியாதா? 2. பொதுவாக வீட்டை சோதனை செய்யவேண்டும் என்றால் வீட்டின் உரிமையாளரை வைத்து கொண்டு தான் சோதனை செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் ஜெயாவை ஜெயிலில் வைத்துவிட்டு சோதனை நடத்தினார்கள் அது ஏன்? இதுவே முதல் தவறு. 3. போயஸ் கார்டன் jurisdiction இல் காவல் நிலையத்தில் தான் FIR போட முடியும் ஆனால் நல்லம நாய்டு சம்பந்தம் இல்லாத அவர் சார்ந்த காவல் நிலையத்தில் FIR பதிந்துள்ளார், அதனால் நல்லம நாய்டுவிற்கு SP பதவி உயர்வு கட்டுமரதால் வழங்கப்பட்டது. இது இரண்டாம் தவறு. FIR தவறு என்றால், அடிப்படையே தவறு 4. ஜெயா மட்டுமே அரசு பதவி வகித்தவர், மீதம் உள்ள மூன்று பேர் எந்த அரசு பதவியும் வகிக்காதவர்கள், அப்படி இருக்கையில் ஊழல் தடுப்பு சட்டம் ஜெயாவுக்கு மட்டுமே பொருந்தும், மீதம் மூன்று பேர் பினாமி சட்டத்தில் அல்லவா வழக்கு பதிந்திருக்க வேண்டும், ஏன் அப்படி செய்யவில்லை? இது அரசியல் காழ்புணர்ச்சி தான். 5. ஒன்றாக வாழ்ந்தாலே கூட்டு சதி என்று எடுத்து கொள்ளலாலமா? அப்படி என்றால் 2G கதாநாயகி கனியுடன் ஒரே வீட்டில் வாழும் கட்டுமரம் மற்றும் ராஜாதி அம்மாள் கூட கூட்டு சதி என்று எடுத்து கொள்ளலலாமா? 6. மார்பில் விலை ஒரு சதுர அடி 50 ரூபாய் கூட போகாத கால கட்டத்தில் 5000 என்று கணக்கிட்டுள்ளார்கள், இன்றைய காலத்தில் கூட இவ்வளவு ஆகாது, அணைத்து சொத்துக்களையும் தாறு மாறாக ஏற்றி மதிப்பிட்டு கணக்கு காண்பித்துள்ளனர், இது மிகவும் தவறு. இது போன்று பல புள்ளி விவரங்கள் வைத்து ஜெயா வக்கீல்கள் வாதாடினார்கள், அதற்கு நீதிபதி குமாரசாமி, பவானி சிங் மற்றும் பெட்ரோல் பேட்டா அன்பழகனை பார்த்து கேள்விகள் கேட்டார். 1. சிவாஜி கணேசன் யாரு என்று கேள்வியை முதல் கேட்டு, ஜெயா ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார் என்று கூறுகிறீர்களே, அது அவர் அரசியலுக்கு வந்த பிறகா அல்லது வரும் முன்னா? அதற்கு பவனி சிங், வந்ததற்கு பின், அதற்கு நீதிபதி, அப்படி என்றால் அவர் நடித்து சம்பாதித்த பணத்தை ஏன் நீங்கள் கணக்கில் எடுத்துகொள்ள வில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இரண்டு பேரும் பேந்த பேந்த முழித்தனர். ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் 1964 ல் வருமானம் கிடைத்தது, அதற்கு வருமான வரி கூட கட்டி உள்ளார், ஏன் நீங்கள் அந்த வருமானத்தை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு இரு தரப்பில் இருந்தும் பதில் இல்லை. 2. ஜெயாவை தவிர சசி, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று போரையும் ஏன் பினாமி தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியவில்லை? பினாமி சட்டம் தான் இந்த மூவருக்கும் பொருந்தும் என்ற கேள்விக்கு எதிர் தரப்பில் இருந்து பதில் இல்லை. 3. வழக்கு பதிந்த நல்லம்மா நாய்டு இருக்கிறாரா என்று கேட்டு, இருக்கிறார் என்றதும், நல்லம்மா நாய்டுவை அழைத்து வாருங்கள் என்று கூறியும் அழைத்து வரவில்லை, என்று கண்டனம் தெரிவித்தார். 4. ஜெயா வீட்டில் இல்லாத நேரத்தில் எப்படி நீங்கள் ரைடு நடத்தலாம்? யாரிடம் அனுமதி வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு, ஜெயாவில் உறவினர் ஒருவர் இருந்தார், அவரிடம் வாங்கினோம், அதன் பிறகு சிறையில் இருக்கும் ஜெயாவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது என்று சொல்ல, நீதிபதி கடுப்பாகி, இது மிகவும் தவறு, குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரின் அனுமதி இல்லாமல் வீட்டில் நுழைந்ததே தவறு, அவர் வந்த பிறகு ரைடு நடத்தி இருக்கலாமே என்ற கேள்விக்கு இரண்டு பேரும் முழித்தனர். 5. நீங்கள் சொத்துக்களை தாறு மாறாக கணக்க்கிட்டுல்லீர்கள். ஒரு சதுர அடி மார்பில் பதிக்க 1990 களில் 5000 ஆனதா? 50 ரூபாய் கூடாத ஆகி இருக்காதே, நான் கூட வீடு கட்டி இருக்கிறேன், எனக்கு தெரியும், நீங்கள் கணக்கிட்ட விலைக்கு ஒரு பெரிய நிலமே வாங்கி இருக்கலாமே, ஒரு கான்ட்ராக்டர் கிட்ட கேட்டிருந்தால் கூட கூறி இருப்பார்களே, யார் இந்த சொத்துக்களை மதிப்பீடு செய்தது, பவானி சிங், லஞ்ச ஒழிப்பு துறை, அதற்கு நீதிபதி, நல்ல லஞ்ச ஒழிப்பு துறை. நீங்கள் இதற்கு பதில் கூறவேண்டும் இல்லை என்றால் நானே இறங்கி மதிப்பீடு செய்யவேண்டியது வரும், இது அரசியல் காழ்புணர்ச்சி என்று சாடினார். 6. நீங்கள் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்துள்ளீர்கள், இது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, ஊழல் வழக்கு அல்ல, ஜெயா எதாவது ஒப்பந்தம் போட்டு ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி பிடிபட்டாரா? இல்லை சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் சொத்துக்களை வாங்கி குவிதுள்ளாரா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் வந்தது. பிறகு ஏன் ஊழல் தடுப்பு சட்டத்தில் பதிந்துள்ளீர்கள்? 7. சுதாகரன் திருமண செலவை திருமணம் ஆகி பல மாதங்கள் கழித்து அங்கு சென்று மதிப்பிட்டுள்ளார்கள் என்று ஜெயா வக்கீல் வாதாடினார், அதற்கு நீங்கள் எதை வைத்து திருமணம் முடிந்த பல மாதங்கள் கழித்து திருமணம் நடந்த இடத்திற்கு சென்று மதிப்பீடு செய்தீர்கள் என்ற கேள்விக்கு மவுனம் தான் பதில். 8. எதை வைத்து அவர்கள் கூட்டு சதி செய்தார்கள் என்று கூறுகிறார்கள், ஒன்றாக வாழந்தார்கள் என்பதால் கூறுகிறீர்களா? ஒன்றாக வாழ்ந்தாலே கூட்டு சதி என்று அர்த்தமா? இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்தார், பவனி சிங், அன்பழகன் வக்கீலை பார்த்து நீங்கள் முக்கியமான கேள்விகளுக்கு பதில் கூறவில்லை, அதனால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து விடுதலை செய்யும் நிலைமை வரும் என்று எச்சரித்தார். அதனால் கணித பிழையை மட்டுமே வைத்து தீர்பளிக்கவில்லை, அவருடைய தீர்ப்பை நன்றாக படித்து பாருங்கள், மேலும் தீர்ப்பில் பிழை எதுவும் இல்லை. குற்றம் சுமத்துவது மிகவும் எளிது, ஆனால் அதை ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டும், அப்படி நிரூபிக்காமல் வெறும் என்றே அவர் ஊழல் செய்தார், குன்ஹா கொடுத்த தீர்ப்பு சரியே, அதை உறுதி செய்யவேண்டும் என்று ஆதாரங்களை கொடுக்காமல் வாய் மொழியாகவும், எழுத்து பூர்வமாகவும் கொடுத்தால் அதை யார் ஏற்றுகொள்வார்கள், அவ்வாறு செய்யாமல் விடுதலையை விமர்சித்தால் என்ன ஞாயம்? மேலும் தீர்ப்பு வந்ததோடு கர்நாடகாவின் வேலை முடிந்துவிட்டது, அடுத்த மாநிலத்தில் கர்நடக ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? எடியூரப்பா, சீதாரம்மையா மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால் அவர்கள் ஏற்று கொள்வார்களா? ஜெயா வழக்கில் அவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? தமிழ்நாடு நீதிமன்றகள் மீது நம்பிக்கை இல்லாமல் தான் கர்நடக சென்றார்கள், இப்போது கர்நடக அரசே குமாரசாமி தீர்ப்பை விமர்சிக்கிறார்கள், கணித பிழை என்கிறார்கள், அப்படி என்றால் கர்நாடக நீதிமன்றங்கள் சரி இல்லை என்று கர்நடக அரசே ஒப்பு கொள்கிறதா? ஜெயாவை தண்டித்தால் நீதி வென்றது, விடுதலை செய்தால் கணித பிழையா? இது எந்த விதத்தில் நியாயம்? இந்த வழக்கை பொறுத்தவரை 163 section படி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு மட்டுமே லோகஸ் standi இருக்கிறது, வேறு யாருக்கும் உரிமை இல்லை. ஜெயாவின் வாதம் ஆரம்பித்தால் சுவாரசியம் அதிகம் இருக்கும்.

 • Yesveeorr - chennai ,இந்தியா

  2G வழக்கு துரிதமாக நடைபெறும் இந்த வேளையில் சொத்து குவிப்பு வழக்கு கிணற்றில் கல்லு போட்டது போல இருக்கிறதே என்ற கவலையில் கலைஞர் கொடுத்த அழுத்தம் காரணமாக காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசு ஜெ. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்திருக்கிறது. இது ஒரு விதத்தில் ஜெ.வுக்கு நல்லதுதான். தேர்தலுக்கு முன் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தால் அவருடைய வெற்றி மேலும் எளிதாக்கப்படும். தீர்ப்பு பாதகமாக வந்து குன்ஹா தீர்ப்பே வழங்கப்பட்டால் அனுதாப அலை அவர் கட்சி வென்றிட உதவும்.

 • nalavirumbi - SGP,சிங்கப்பூர்

  தூக்கி உள்ளுக்குள்ள வைங்க போதும் முதல்வரா இருந்தது போதும் ...இல்லேன்னா போயி கோடை நாடு ல போயி ஓய்வு எடுக்க சொல்லவூம் ...

 • $$$$ - $$$$,இந்தியா

  போடுங்கம்மா ஒட்டு......ரெட்டயிலைய பார்த்து........திருந்துங்க தமிழ் மக்களே.. ஒரு கட்சியும் உருப்படி இல்லை...ஒங்க தொகுதியில இருக்குற வேட்பாளர்களிலே நல்லவரை பார்த்து ஒட்டு போடுங்க.... ஜாதி மதம் பணம் பார்த்து இன்னும் நீங்க ஒட்டு போடீங்கன்னா...நாம் எல்லோரும் எதையோ திங்கிறதுக்கு சமம்....

 • மண்ணாந்தை - Raichur,இந்தியா

  கணக்கில் பிழை என்று வெட்ட வெளிச்சமா பாயிண்டை போட்டு ஆரம்பிச்சுட்டார். இனி கஷ்டம் தான்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அண்டை மாநிலத்துக்கு தீராத தலைவலியாய் இருக்கும் கர்னாடக அரசை டிஸ்மிஸ் செய்து, கர்நாடகாவை இந்தியா விட்டு வெளியெற்ற வேண்டும். கர்நாடகாகாரன் தொல்லைக்கு இன்றே ஒரு முடிவு கட்ட வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement